65 thoughts on “மக்கள் தொலைக்காட்சி பேட்டி”

 1. வெளிப்படையாக சொல்வதானால் இன்றளவும் பாரதி எழுத்துக்களில் சில கவிதைகளை மட்டுமே நேரடியாக படித்துள்ளேன். அதிலும் ஆரய்ச்சி ரீதியில் அல்லது ஆழமாக படித்தது கிடையாது. ஆனால் பாரதியை பற்றி பிறர் எழுதியதை படித்ததும், சொன்னதை கேட்டதுமே பாரதி பற்றி என்னுள் முழுமையாக உள்ளது. இந்த செவ்வியில் பாரதி பற்றிய ஒரு விமர்சனத்துக்கு அப்பால் எனக்குள் இருந்த ஒரு குறைபாட்டை புரிந்து கொண்டேன். நல்ல செவ்வி. மிக அருமை. நன்றிகள்.

 2. திரு. மதிமாறன் அவர்கட்கு,
  உங்கள் வலைப்பூவில், இன்று தான் ம.தொ.வில் ஒளிபரப்பான உங்கள் பேட்டியை பார்த்தேன். அதில் மாகாகவிப் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்களைக் கேட்டு அதிர்ச்சியுற்றேன். உங்கள் கருத்துக்களுக்கு ஒரு சில விளக்கம் தர ஆசைப்படுகிறேன். அவை பின்வருமாறு:

  1) “ஜாதிகள் இல்லையடி பாப்பா…” என்று முழங்கியது மட்டுமல்லாமல், அதை செயல்முறைபடுத்திய பெருமையும் மகாகவியைச் சேரும். அவர் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்.
  2) அவருக்கு மகாகவி என்ற பட்டத்தை வழங்கியது ‘பிராமணர்கள்’ அல்லர். அவரை மிகவும் நேசித்த, உங்களுடன் ஒத்தக் கருத்து கொண்ட – ‘பாரதிதாசன்’. அவர் ஏன் பாரதிக்கு அந்த பட்டத்தை வழங்கினார் என்று தெரியுமா? வரலாறு நன்றாக தெரிந்தவர்க்கு தெரிந்திருக்கும்.
  3) “காசி நகர்ப்புலவர் பேசுமுரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்ற வரியை எதிர்த்துள்ளீர்கள். பிரிட்டீஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இல்லை. தயவு செய்து நம் வரலாற்றை ஒருமுறை அலசி பார்க்கவும். நேரு காலத்தில் பைசல் செய்யப்பட்டு ஒரு மன்னரிடமிருந்த காஷ்மீர் 1940களின் முடிவில் தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாருக்கும் காஷ்மீர் இந்தியாவின் எல்லை என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது என் தாழ்மையான கருத்து. இந்தியா ஆப்கானிஸ்தான் வரை பரவி இருந்தது என்று நினைவில் கொள்ளுங்கள். அதே போல், கன்னியாகுமரியும் 1947க்கு முன் ‘திருவாங்கூர்’ சமஸ்தானத்தை சேர்ந்தது. மகாகவி கண்ட இந்தியாவும் சரி, செந்தமிழ் நாடும் சரி வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. கன்னியாகுமரி என்று ஏன் உபயோகபடுத்தவில்லை என்பது தேவையற்றது. “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி எல்லாம் உன்னோட…..” என்பதெல்லாம் வாலி, வைரமுத்து காலம்.
  4) மேலும், மகாகவி நல்ல கவிஞர் மட்டும் இல்லை. அவர் சிறந்த இசை அறிஞர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த கவிதையை அவர் எந்த ராகத்தில் பாடி இருக்கிறார் தெரியுமா? ‘புன்னாகவராளி’. ராகத்திற்கு ஏற்றவாறு தான் வார்த்தைகளை உபயோகபடுத்தியிருக்கிறார் என்பது என் வாதம். அந்த இடத்தில் காஷ்மீர் என்றோ, கன்னியாகுமரி அல்லது திருநெல்வேலி அல்லது காஞ்சிபுரம் என்றோ உபயோகப்படுத்த முடியாது. தவிர, பாடலில் ‘மைசூர்’ அல்லது ‘கன்னடம்’ பற்றி அல்லது இந்த ஊர்களின் பெயர்களை பற்றி சொல்லவில்லயே என்று கோபித்துக் கொள்ளலாமா? அவர் இக்கவிதையில் இந்தியாவை படம் வரைந்து பாகம் குறிக்கவில்லை!
  5) நான் திருச்சியில் பிறந்து வளர்ந்தவன். உலக நாடுகள் சிலவற்றுக்கு பலமுறை பயணம் செய்திருக்கிறேன். எனக்கு உலகத்திலேயே பிடித்து ஊர் எது வென்று ஒருவர் என்னை கேட்பாரேயாயின், அவருக்கு பட்டென்று யோசிக்காமல் ‘திருச்சி’ என்பேன். இது இயற்கை. மகாகவி காசியில் வளர்ந்தவர். எதற்கெடுத்தாலும் காசியின் பெருமையை அவர் பேசுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
  6) மகாபாரத புராணக்கதைப்படி பீமன் துச்சாதனனின் இதயத்தை அறுத்து இரத்தம் குடிப்பேன் என்பதும், பாஞ்சாலி சபதமும் ஊரரிந்ததே! அதை மாற்றி எப்படி எழுத முடியும்? அதற்காக மகாகவியை எப்படி குறைகூற முடியும்? அப்படி மாற்றி எழுதினால் அவரின் புத்திசாலிதனத்திற்கு இழுக்கில்லையா? “அறிவொன்றே தெய்வமுண் டாமெனெல் கேளீரோ?” – “அறிவே தெய்வம்”, “உயிர்களிடத்தில் அன்பு வேணும்’, என கூறியவன் மகாகவி.

  இந்தியாவைப் பொறுத்த வரை மூன்று கவிஞர்கள் தான் ‘மகாகவி’. 1) ‘மகாகவி’ காளிதாசன் 2) ‘மகாகவி’ தாகூர் 3) ‘மகாகவி’ பாரதி.

  “பாரதியார் உலக கவி”, “சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க்கின்ற செம்மை நலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம்”, “புது நெறி காட்டிய புலவன்” – பாவேந்தர்.

  நன்றி!

  பாலா

 3. மேலே நான் கூறிய ‘கன்னடம்’ என்பதை ‘பெங்களூரு’ என்று படிக்கவும்.

 4. Kilpak mental hosiptal contact details .
  26421085 to 26421089

  கில்பாக்கம் மன நல மருத்துவ மனை தொலைபேசி எண்
  26421085 to 26421089

  வியாதி முத்திடுச்சு சிக்கரம் போய் பார்ருங்க ..

 5. நன்றி பாலா

  உலகம் ஒத்து கொண்ட ஒருவரை பற்றி சும்மா எதாவது பேசினா விளம்பரம் கிடைக்கும்

 6. மிக அருமையான நேர்கானல். கண்டதில், கேட்டதில் மகிழ்ச்சி! தங்களின் துணிவும் சிறந்த ஆய்வும் பாராட்டப்பட வேண்டியவை. தமிழன் பார்பனியத்தை எதிர்த்து 1000 ஆண்டுகளுக்கு மேல் தாக்கு பிடித்து இருகின்றான் என்றல் உங்களை போன்ற தமிழன் அவ்வப்பொழுது தோன்றி தமிழன் யார் அவனுடைய எதிரி யார் என்று இனம் காட்டி கொண்டு இருப்பதால் தான். தங்கள் பனிக்கு நன்றி! வளர்க உமது தமிழ் பங்களிப்பு, ஆய்வு!

  மிக்க நன்றி!

 7. ஏன் பாலாவின் மறுமொழிக்கு விளக்கம் தரப்படவில்லை. மதிமாறன் அவர்களின் விளம்பரத்திற்காகவும் புத்தக
  விற்பனைக்காக மட்டுமே இந்த வலைப்பதிவா?

 8. பாரதியார் வந்து தமிழருக்காக ஒரு மண்ணும் பண்ணல .
  கவிதைமட்டுமே முதன்மையா இருந்த என்ன காரணத்துக்கு இந்துத்துவ கொள்கையே சார்ந்து நிற்கிறார் திரு பாலா ?

 9. தமிழால் பாரதிக்குப் பெருமை!!! பாரதியால் தமிழுக்குப் பெருமை!!!

  தமிழின் ஒப்பற்ற கவிஞன் மகாகவி. ஏழைகளும் தமிழ் இலக்கியம் படிக்க வழிவகை செய்தவன் அவன். எளிய மொழியில் கவிதையை அறிமுகப்படுத்தியவன். அது ஒன்று போதுமே! பாரதி கட்டுரையைப் படித்தவருக்கு இதெல்லாம் புரியும்.

  பாரதிதாசன், குவளைக் கண்ணன் என்று பாரதிக்கு நன்கு பழகியவர்களைத் தவிர பாரதியைப் பற்றி பேச எவருக்கும் அருகதை கிடையாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற எல்லாரும் எட்டுக்கட்டித் தான் கூறமுடியும் என்பது எம் வாதம். பாரதியை ஜாதிக் காட்டி ஒதுக்கி வைப்பது முட்டாள்தனம். ஆங்கிலேயன் பற்றவைத்தக் காட்டுத்தீ (பிரித்தாளும் கொள்கை) இன்று இந்து-முஸ்லீம் கலவரத்திற்கும், ஜாதி சண்டைகளுக்கும் காரணம். இதுபுரியாமல் நாம் இதைப் பிடித்துத் தொங்குவது புத்திசாலித்தனமன்று.

  “பாரதியார் உலக கவி”, “சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க்கின்ற செம்மை நலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம்”, “புது நெறி காட்டிய புலவன்” – பாவேந்தர்.

 10. மேலும், ஆங்கிலேய பாதிரிமார்களின் மதமாற்றக் கொள்கைகளை எதிர்த்தான் பாரதி. இதைப் பற்றி தன்னுடைய கட்டுரைகளிலும் கூறியிருக்கிறான் பாரதி. நீங்கள் வெளிநாட்டிற்கு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கே ஒருவன் இந்தியாவைப் பற்றித் தாறுமாறாக கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்ன செய்வீர்கள்? கொதித்து எழுவீர்களா? மாட்டீர்களா? அந்த மாதிரி தான் பாரதி இந்துமதத்தை எதிர்த்தவர்களை எதிர்த்தான். அவன் இந்துமத வெறியன் இல்லை. அப்படி இருந்திருந்தால் எதற்காக யேசு பற்றியும், அல்லா பற்றியும் கவிதை எழுதித் தரவேண்டும். நன்றாக யோசித்துப் பாருங்கள்!!! மேலோட்டமாக வரும் வாதங்களை வைத்து தயவு செய்து முடிவு செய்ய வேண்டாம். சென்னை அண்ணா சாலை மைய நூலகத்தில் பாரதி கட்டுரைகள் குண்டு குண்டு புத்தகங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் படித்துப் பாருங்கள், புரியும். அவன் ஆங்கிலேயர்களைப் பொரிந்துத் தள்ளியதும், நமது மக்களின் அறியாமையைக் கண்டு வெகுண்டு எழுந்ததும் புரியும்.

 11. இந்த மாதிரி தமிழ்பற்றிய வைர வரிகளை எந்தக் கொம்பனும் எழுதியதாகத் தெரியவில்லை.
  தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா!

  பாரதி ஒரு மண்ணும் செய்யவில்லை என்றால் என்ன?
  அவன் பல பண் செய்திருக்கிறான்.
  அதனால் தமிழின் புகழ் விண் வரை சென்றிருக்கிறது.
  இதை புரியாமல் நாம் களிமண் ஆகலாமா?

  தமிழ் பற்றி கூறிகிறான்:
  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்…
  கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்
  கம்பன் பிறந்த தமிழ்நாடு…
  தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும்நின்று
  சால்புறக் கண்டவர் தாய்நாடு

  கீழே வரும் தேசிய ஒற்றுமை வரிகளைக் காணுங்கள். இதை முழங்கிய பாரதியா இந்து வெறியன்?

  தெய்வம் பலபல சொல்லிப் பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்.
  உய்வ தனைத்திலு மொன்றாய் – எங்கும்
  ஓர்பொருளானது தெய்வம்.

  ……

  நிகரென்று கொட்டு முரசே – இந்த
  நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
  தகரென்று கொட்டுமுரசே – பொய்மைச்
  சாதி வகுப்பினை யெல்லாம்.

  இதே வரிசையில் தானே அறிஞர் அண்ணா “ஒன்றே குலமென்று…” என்று கூறினார்.

  கீழே கம்யூனிஸம் பற்றி பேசுகிறான். நன்றாக கவனியுங்கள்.
  உடன் பிறந்தார்களைப் போலே – இவ்வுலகில் மனிதரெல்லாரும்; திடங்கொண்டவர் மெலிந்தோரை – இங்கு தின்று பிழைத்திட லாமோ?

  வயிற்றுக்குச் சோறிடவெண்டும் – இங்கு
  வாழு மனிதருக் கொல்லாம்;

  பாரதியின் கவிதைத் தொகுப்பினையும், கட்டுரைகளையும் முழுவதும் படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமாக பிதற்றுவது நல்லதன்று என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

 12. Anbu Nanberkale,

  Bharathiyai patri therinthukollavendumanal muthalil serikku sendru sathi olippu poratthil edupadungal, appozhu therim bharathiyen marupakkam.
  arasiyal parvai ellamal paditthal unmai puriyathu.

  Anbudan
  P.Selvaraj,Neelangarai,Chennai-600 041

 13. பாரதியின் வைர வரிகளை சரிவர புரிந்து கொண்டால், சேரிக்கு வந்து யாருமே போராட தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

  பிராமணனாய் பிறந்ததால் மற்ற சாதியினர் மகாகவியை சரிவர புரிந்து கொள்ள விரும்புவதில்லை. பிராமணர்களிடமும் பாரதிக்கு நல்ல பெயரில்லை. என்னைப்போல் பாரதி காதலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. அந்த உலகக்கவியைப் புரிந்து கொள்ளும் காலம் தூரத்தில் இல்லை என்பது மட்டும் திண்ணம்.

  இந்த சேரிப் போராட்டத்திற்கும், பாரதியின் மறுபக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குப் புரியவில்லை. தெளிவாகக் கூறினால் நன்றாக இருக்கும்.

 14. பாலா
  ////நல்லவரா? இவர் நல்லவரா? என்பதை விவாதம் தான் தீர்மானிக்க வேண்டும்.///
  நீங்கள் நல்லவர் இல்லை என்பது மட்டும் தெளிவான ஒன்று. நீங்கள் ஜெயமோகனைவிட மோசமானவர். பாரதியை ஆதார்தோடு விமர்சித்தால், அதற்கு எதிர்வினையாக உங்களின் பார்ப்பன சாதி உணர்வை ஒன்றையே பின்னணியாக கொண்டு, மீண்டும் பாரப்பன சாதி வெறியன் பாரதியை ஆதரிக்கிறிர்கள்.

  ///எதையும் 360 கோணப் பார்வையில் விவாதிப்பது சாலச் சிறந்தது.///

  நீங்கள் 3600 கோணல் பார்வையில்தான் விவாதிப்பீர்கள். உங்களிடம் பார்ப்பன சாதி வெறியை தவிர வேறேதும் இல்லை.ஆகையால்தான், பாரதி பற்றிய ஆதாரத்தோடு வந்ததற்கு அவதூறாக விமர்சிக்கிறீர்கள்.

  பெரியாரைப் பற்றி அவதூறாக வந்ததற்கு ஆர்வத்தோடு எடுத்து இங்கே போடுகிறீர்கள். நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்களா?

 15. பாரதியார் மீது பற்றும் பெரியார் மீது வெறுப்பும் கொண்ட பார்ப்பனசாதி வெறியன் பாலா தயவு செய்து விவாதத்திற்கு வரவும். கழிசடை ஜெயமோகன் என்கிற பார்ப்பன தாசனின் பெரியார் அவதூறு குறித்து விவாதிப்போம்.

 16. கண்ணன் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கடந்த மூன்று மாதங்களாக பாரதி பற்றி இந்த வலைப்பூவில் பின்னூட்டம் இட்டு வந்துள்ளேன். அதையெல்லாம் நீங்கள் படிக்கவில்லையா? விவாதத்திற்கு வா என் கிறீர்களே? அதையெல்லாம் படித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள். பார்க்கப்போனால் நான் எப்போதோ விவாதத்திற்கு வந்து விட்டேன். நீங்கள் தான் வர வேண்டும்.

  என்னைப் பற்றி எதுவும் தெரியாத பட்சத்தில் என்னை personal ஆக விமர்சிக்க உங்களுக்கு உரிமை இல்லை என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  பாரதி பற்றிய விமர்சனங்களில் ஆதாரம் சரியானதாக இல்லை என்பதே என் வாதம். எ.கா. அவர் “காசி” யைப் பற்றி இதனால் தான் கூறினார் என்று எட்டுக்கட்டி கூறுவதை எல்லாம் எப்படி அய்யா ஏற்றுக் கொள்ள முடியும். பாரதிதாசனைப் படியுங்கள். பாரதி பற்றி கூறுகிறார். அவரை விடவா ஒருவர் பாரதி பற்றி விமர்சனம் செய்துவிட முடியும்.

 17. இந்தியாவின் பொதுமொழியாக இந்திதான் வரவேண்டும் என்று முதன்முதலில் சொன்னவர் பாரதியே! 1906லேயே இக்கருத்தை இவர் வலியுறுத்தியுள்ளார்.

 18. பாரதியார் சமசுகிருதத்தின் மீது கொண்ட வெறியினால் சப்பானில் சமசுகிருதம் எப்பொழுது எவ்வாறெல்லாம் பரவியது என்பதைத் தன்னுடைய ‘பருந்துப் பார்வை’ என்னும் கட்டுரையில் ஆய்வு செய்து எழுதியுள்ளார். உலகில் சுமேரியா, சப்பான், கொரியா, அங்கேரி, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளின் மொழிகளில் தமிழ்மொழிக் கூறுகள் ஏராளமாகக் கலந்துள்ளன.

  எங்கெல்லாம் தமிழ் பரவியிருக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், சமசுகிருதம் எங்கெல்லாம் பரவியுள்ளது என்பதை ஆய்வு செய்கிறார்.

 19. பாரதி ஒரு சகலகலா வல்லவன். அவன் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறான்.

  இதைவிட அற்புதமாகவா ஒரு கவிஞன் எழுதிவிடமுடியும்?
  “தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா!”

  ஆங்கில கவிஞர் ஷெல்லி பற்றி பக்கம் பக்கமாக எழுதியுள்ளான். அதனால் அவன் நம்மூர் கவிஞர்களை மதிக்கவில்லை என்றாகுமா?

 20. தோழமையோடு முரசு, பாரதியின் தமிழ்ப்புலமை என்பதை கூட நாம் கேள்விக்குட்படுத்துகிறோம். சமகாலத்தில் வாழ்ந்த பாவேந்தரின் தமிழ் ஆளுமையோடு ஒப்பிடும்போது பாரதியிடம் அதிகமான மொழிக்கலப்பு, வடமொழிச்சொற்களை மிக அதிகம் தமிழோடு கலக்கின்றார். பாரதி ஒரு கலப்படவாதியே. ஆனால் பாரதியின் ‘பொயட்டிக்ஸ்’ கவித்துவம் மிகச்சிறப்பான விசயம். பாரதியின் கவி ஆளுமை சர்வதேசத் தரம் வாய்ந்தது. அதனை மறுப்பதற்கில்லை. இந்தக் கவி ஆளுமை என்ற போதயில் மயங்கியே பாரதியினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தும் கூட விமர்சிக்க முடியாமல் பலரும் சிரமப்படுகிறார்கள். பாரதியின் கவி வீச்சு தமிழுக்கு கம்பராமாயணத்திற்குப்பின் கிடைத்த, பாலைவனச் சோலை. அதற்காக கவிபோதையில் மயங்கி அவர் சொல்லும் கருத்துக்களை நாம் ஆராயாமல் விட்டுவிடக்கூடாது. பார்ப்பானைப் பற்றி விமர்சித்தாலும், அறிவே தெய்வம் என்று கடவுளை விமர்சனம் செய்தாலும், பாரதி ஒரு இந்துத்துவா வாதியாகவே இருந்திருக்கின்றார் என்பதற்கு, மதிமாறான் சிறப்பான எடுத்துக்காட்டுகளைக் கொடுத்திருக்கின்றார். சமூக இயங்கியலில், மேற்கத்திய கண்டுபிடிப்புகள், அறிவியல், சமூக எழுச்சி சிந்தனைகள் என்று இந்தியாவில் பகுத்தறிவு வெள்ளமும், சமத்துவ வெள்ளமும் புகப்புக பாரதி தடுமாறியது உண்மையே. அந்தத் தடுமாற்றம் தான் பார்ப்பனர் விமர்சனம், கடவுள் விமர்சனம் எல்லாம். ஆனால் பாரதி பார்ப்பன இந்தியக் கட்டமைப்பின் பக்கமே, தீவிரவாத இந்து இந்தியாவின் பக்கமே தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருப்பது இந்திய விடுதலைக்கான எழுச்சி என்ற போர்வையில் மறைந்திருக்கின்றது. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்ற பாரதியிடம் தமிழ் மொழியின் வளத்தின் மீதான வியப்பு தான் மேலெழுந்து நிற்கிறது, ஏனென்றால் அவரும் ஒரு கவிஞன் அல்லவா? பாரதியின் கவித்துவம் உச்சத்தன்மை வாய்ந்தது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு அவர் பார்ப்பன இந்து இந்தியாவின் கட்டமைப்பின் பக்கம் நின்றார் என்பது உண்மையே. இதனை தொடர்ந்து நீதிக்கட்சி, பெரியார் எல்லோரும் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். பாரதி இந்தியாவை ஆரிய நாடு என்கிறார். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மதிமாறனின் முயற்சி சிறப்பானது. வாழ்த்துக்கள்.

 21. காசி நகர்ப்புலவர் பேசும் உரை, வடமொழியில் தான் இருக்கும். அதனை தமிழகத்தில் வேறு எந்த பாகத்திலும் இருந்து புரிந்துகொள்ள முடியாது, காஞ்சியைத் தவிர. ஏனென்றால் அங்கே தான் வடமொழி பண்டிதர்களாக பார்ப்பனர்கள் இருக்கின்றார்கள். காசியையும் காஞ்சியையும் பாரதி சமஸ்கிருதத்தின் அடிப்படையில் பிண்ணியுள்ளார். சமஸ்கிருத இந்தியாவினை பாரதி கனவுகண்டு உள்ளார். நன்றியுடன் முரசு

 22. பாரதியின் தமிழ் உணர்வு என்பது புலவர்கள் வளர்த்தது. அவர் கற்ற இலக்கியங்கள் தந்தவை. அது அவரை சிறு வயது முதற்கொண்டே ஆளுமை செய்தது. அது தமிழ்மொழியின் இலக்கியத்தின் தன்மை. தமிழ் மொழியினை கற்போர் எல்லோரும் அதன்பால் ஈர்க்கப்பட்டமைக்குக் காரணம் அம்மொழியின் இலக்கியச் செழுமை. பாரதியிடம் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தான் அவரின் தமிழின் மீது ஏற்பட்ட காதல். ஆனால் அவர் பயன்படுத்திய மொழி ஆளுமை என்பது பார்ப்பன மொழி ஆளுமை; மணிமிடைப்பவளம் என்ற கலப்படத்தமிழ். பாரதியின் பெண்ணுரிமை என்பது பாராட்டப்பட வேண்டியது தான். ஆனால் அதிலும் கூட “காதல் ஒருவனைக் கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து” என்று பெண்ணை இரண்டாம் தரமாகவே நிற்பாட்டுகிறார். மதிமாறான் சொன்னது போல ஜீவா போன்றோரின் பெரியாரின் எதிர்ப்பு அரசியலே பாரதியை பெண்ணுரிமை சிற்பி என்று வடிப்பதும். பாரதியின் ஆங்கிலேய எதிர்ப்பும் இந்துதேசிய பார்ப்பன எழுச்சியே, திலகரைப் போல. நிறைய விவாதிக்கவேண்டியது உள்ளது. மேலும் தொடரும். நன்றியுடன் முரசு.

 23. பாரதி காலத்தில் சங்கரமடம் காஞ்சிபுரத்தில் இல்லை. விமர்சனங்கள் எழுதுவதற்கு முன் வரலாற்றை அலசி ஆராய்ந்துப் பார்த்தல் நல்லது.

 24. சாதி ஒழிக ! சாதி ஒழிக ! என்றுக் கத்திக் கொண்டே ஓடினார் ஒருவர், ஆனால் உண்மையில் அவர் நினைத்தது நடந்தது. இதைக் கேட்ட ஒரு சின்னப் பிள்ளை ஒன்று சாதினா என்னம்மா எனக் கேட்க? அம்மா (தன்) சாதியைப் பற்றி பீற்றிக் கொண்டு பாடம் எடுக்கத் தொடங்கினார்.

 25. தோழர் பாலா மீண்டும் வரவேண்டு 1) “ஜாதிகள் இல்லையடி பாப்பா…” என்று முழங்கியது மட்டுமல்லாமல், அதை செயல்முறைபடுத்திய பெருமையும் மகாகவியைச் சேரும். அவர் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பது நீங்கள் கூறியது . எனக்கு ஒரு விளக்கம் கூறுங்கள் ‘ஈனப் பறையர்களேனும் அவர்
  எம்முடன் வாழ்ந்திருப்பவர் அன்றோ?”இதற்கு என்ன அர்த்தம் அவர் கூறிய ஈனம் எதைக்குறிக்கிறது . நீங்கள் எழுதிய அனைத்து pointலும் முரண்பாடு இருக்கிறது ……………..

 26. பாலா
  ////பாரதி காலத்தில் சங்கரமடம் காஞ்சிபுரத்தில் இல்லை. விமர்சனங்கள் எழுதுவதற்கு முன் வரலாற்றை அலசி ஆராய்ந்துப் பார்த்தல் நல்லது.////

  காஞ்சிபுரம் சமஸ்கிருத பணடிதர்கள், கல்லூரிகள் இருந்த ஊர். பல்லவ மன்னர்களை மயக்கி பார்ப்பனர்கள் நன்றாக கொழுத்த ஊர். அது தெரியுமா? அதுபற்றி பேசேன்.

 27. திரு பாலா அவ‌ர்க‌ளே நீங்க‌ள் வ‌ர‌லாறு ப‌டித்துவிட்டு வ‌ந்து விள‌க்க‌ம் த‌ந்தால் ந‌ல்ல‌து என்று நினைக்கின்றேன் ஏன் என்றால் நீங்க‌ள் த‌வ‌றாக‌ எல்லாவ‌ற்றையும் ப‌திவு செய்கிறீர்க‌ள்.
  காஞ்சி 4 ஆதிச‌ங்க‌ர‌ர்க‌ளின் ஒருவ‌ரின் ம‌ட‌ம் என்ப‌து எல்லா ம‌டைய‌ர்க‌ளுக்கும் தெரிகிற‌து ஆனால் உங்க‌ளுக்கு தெரிய‌வில்லை. என‌க்கு 25 வ‌ய‌சு ஆகிற‌து நான் அங்கே இந்து ம‌த‌த்தின் ம‌ட‌ம் இருந்த‌தாக‌த்தான் ப‌டித்து இருக்கின்றேன்.

 28. வந்துட்டான்யா வந்துட்டான்…..

  நிலவன் – எமக்கு கொஞ்சம் வரலாறு தெரியும். 4 சங்கர மடங்களில் ஒன்று காஞ்சிபுரம் கிடையாது. 50-60 வருடங்களாகத் தான் இந்த மடம் காஞ்சிபுரத்தில் உள்ளது. அதற்கு முன்பு தமிழ்நாட்டின் வேறு ஒரு கோயில் நகரத்தில் இருந்தது. எங்கே எங்கே மடம் இருக்கிறது, நிறுவப்பட்டது என்று இணையத்தில் தேடி பார்த்துத் தெரிந்து கொள்ளவும். உங்களுக்காக ஒரு விடயம் – “தெற்கே” சிரிங்கேரி மடம் தான் ஆதி சங்கரர் நிறுவியது.

  நண்பர் கார்மேகம்,
  இதெல்லாம் புகைச்சலில் வரும் வார்த்தைகள் என்பது தவிர வேறு என்ன சொல்ல முடியும்? மாமல்லன் தோல்வியே காணாத ஆறு மன்னர்களில் ஒரு மன்னன் என்று வரலாறு சொல்கிறது. கொஞ்சம் உக்காந்து யோசியுங்களேன் இந்த மாதிரி எல்லாம் சொல்வதற்கு முன்னாடி!

  அன்பு நண்பா செந்தில்,
  மிகவும் நாகரிகமாகவும், உணர்ச்சிவசப்படாமலும் விவாதத்திற்கு அழைத்தமைக்கு மில்லியன் நன்றிகள்!

  ஓர் உதாரணம் கொண்டு உங்களுக்கு விளக்க ஆசைப்படுகிறேன். இன்றைய தேதியில் “தாழ்த்தப்பட்ட மக்கள்” என்ற வார்த்தை உபயோகிக்கப்படுகிறது. ஏன் புரையோடியும் இருக்கிறது. அது என்ன “தாழ்த்தப்பட்ட” என்ற வார்த்தை. எனக்கு அது சரியாக படவில்லை. எல்லோரும் மக்கள் தானே! எதற்காக இந்த வார்த்தையை உபயோகப்படுத்த வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. ஆக, சமுதாயத்தில் வாழையடி வாழையாக வழக்கத்தில் இருப்பதை மக்கள் உபயோகப்படுத்துகிறார்கள். இந்த வார்த்தை இன்னும் 50-100 வருடங்களுக்குப் பிறகு சரியான வார்த்தையாக இல்லாமல் போகலாம். அது போல் அந்த வார்த்தை அந்த காலத்தில் வழக்கத்திலிருந்திருக்கலாம். அதை பாரதி உபயோகப்படுத்தியிருக்கலாம் என்று எண்ணிப் பார்க்கலாமே! பாரதி பிறந்த ஜாதியை காரணமாக வைத்து இப்படி பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பது தேவையா? இந்த மாதிரி சந்தேகங்கள் பெரியார் வாக்கியங்களிலும் அவரை பிடிக்காதவர்கள் தேடி பார்த்து போடுகிறார்கள். கருத்தை, பொருளை விட்டுவிடுகிறார்கள் என்பது தான் எம் வாதம்.

  கவிதையின் பொருள் தான் முக்கியம். ஒவ்வொரு வார்த்தையையும் உடைத்து பார்த்தால், “வேண்டாதவன் பொண்டாட்டி கைப்பட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம்”. நன்றி!

 29. //சமஸ்கிருத இந்தியாவினை பாரதி கனவுகண்டு உள்ளார். //

  நான் சமஸ்கிருதத்தை ஆதரிக்கவில்லை. கேள்விக்கு என் பதிலைத் தருகிறேன்.

  இது எப்படித் தெரியுமா இருக்கிறது. அதாவது சொந்தக்காரன் (சமஸ்கிருதம்) வேண்டாம். ஆனால் பக்கத்துவீட்டுக்காரன் (ஆங்கிலம்) வந்து என் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளட்டும். இது தான் இன்று நமது நாட்டில் நடந்திருக்கிறது. கம்பராமாயணம், திருக்குறளில் கூட சமஸ்கிருத வார்த்தை கலந்திருக்கிறது. தெரியுமா?

 30. //தமிழ் மொழியினை கற்போர் எல்லோரும் அதன்பால் ஈர்க்கப்பட்டமைக்குக் காரணம் அம்மொழியின் இலக்கியச் செழுமை//

  நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு பாரதி. அது மட்டும் தான் மில்லியன் டாலர் (ரூபாய்) கேள்வி.

 31. //பாரதி இந்தியாவை ஆரிய நாடு என்கிறார். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?///

  அய்யா! மீண்டும் சொல்கிறேன். அண்ணாசாலை மைய நூலகத்திற்கு சென்று பாரதி கட்டுரைகளை பொறுமையாக படிக்கவும்.

  அரைவேக்காட்டுத்தனம் வேண்டாமே! (தயவு செய்து)

  “நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது சங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில்முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் – இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆர்ய சம்பத்து. காளி தாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலே துளசிதாசர் செய்திருக்கும் இராமாயணம், கம்ப இராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி – இவையனைத்துக்கும் பொதுப்பெயராவது ஆர்ய சம்பத்து. தஞ்சாவூர்க் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள்,எல்லோராவிலுள்ள குகைக்கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரபசாஸ்திரியின் புல்லாங்குழல் – இவையனைத்துக்கும் பொதுப்பெயர் ஆர்ய சம்பத்து. எனவே ஆர்ய சம்பத்தாவது ஹிந்துஸ்தானத்தின் நாகரிகம்.” (பாரதியார், ‘புனர்ஜென்மம் -1: கட்டுரைகள்-தத்துவம்)

 32. தோழர்களே வணக்கம்,
  ஒரு புதிய வகையான வியாதி இன்று தமிழ் இனாயா வாசகர்களை ஆட்கொண்டு உல்லது.அது யாதெனின்,இட நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும், ஒரு ஹிந்துத்துவ மூலாம் பூசி, அவற்றுக்கு எல்லாம் ‘இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் பார்பைய்ணியம் தான் காரணம் என்று நியாயப்படுத்தி(?!)’,ஒரு தீர்மானம் நிறைவேற்றுவது தான் அந்த வியாதி….ஒரு சிறிய திரைப்பட விமர்சனமாயினும், அதில் உள்ள தேச பக்தி காட்சியினை, ‘மணிரத்தினம் பாணியிலான இந்தப் பார்ப்பன தேசப்பற்றுதான் நம்மை திகிலைடைய வைத்தது.
  ‘ போன்ற அயோகியத்தனமான வாதங்களை முன்னிலை படுத்துவதும்,பெரியாரை,ஒரு பிராமண எதிர்ப்ாளராகவே பாவித்து,பிராமணதுவேஷம் செய்வதும் ஏற்புடையதல்ல.

 33. திரு. மதிமாறன் என்ற முற்போக்குவாதி(!), வண்னிய ஜாதி காட்சியின் தொலைக்காட்சியான மக்கள் தொலைக்காட்சி எனும் முற்போக்கு(!) தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்துள்ள நேர்காணலில் பாரதியை ஜாதி வெறியன் என்று கொச்சை படுத்தி பேசியிருப்பதும், அதற்கான இணைய பின்னூட்தங்களில் அளவுக்கு அதிகமான பார்ப்பன எதிர்ப்பு கொந்தளிப்பதும், இங்கு உலாவுவர்கள் கருணாநிதி குடும்பத்தினரை விட அபாயாமானவர்கள் என்று எடுத்து காட்டுகிறது.
  பாரதியும்,பெரியாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கூறவில்லை. அது சுய லாபத்திற்காகவும்,புத்தக விற்பனைக்காகவும்,சுய விளம்பரதிற்காகவும்
  இருப்பதுவே கண்டனத்தீர்க்கு உரியது. திரு. பாலா அவர்கள் போன்ற இந்த தலைமுறை பிராமணர்களின் மனநிலைய புறந்தள்ளி, அயோக்கியத்தனமான கருத்துக்கள் வெளியிடுவது மிகுந்த ஆட்சேபணைக்கு உரியது.

 34. இப்ப என்ன இந்தியா ஒண்ணா இருக்கா.. பக்கத்து ஊர் காரன் தண்ணி தர மறுக்கிறான்..
  பாகிஸ்தான்ல இந்துக்கல அடிச்சி வெரட்டுறான் அங்க போய் உங்க வீரத்த காட்டுங்களேன் ??
  இவிங்கல்லாம் ஏதோ பாகிஸ்தான் சொந்த நாடு போலவும் இந்தியாவ முன்னேத்த வந்த மாதிரியும் பேசறானுங்க!!
  பொது சிவில் சட்டம் வந்தாதான் உருப்படும் ஆஸ்திரேலியா ல ஆப்பு அடிக்கிறான் படுதா போட்டாலே
  இந்தியா ல இந்து உணர்வோட இல்லாம முஸ்லிம் உணர்வோடவா இருக்கனும் ????
  பொழப்பத்த பொன்னாங்கி

 35. பாரதியாரின் பெண் விடுதலைப் பற்றியும் முற்போக்கு சிந்தனைகளைப் பற்றியும் பேசும் 100 க்கு 99 பேர் பாரதியாரின் கவிதைகளை முழுமையாக படித்து இருக்க மாட்டார்கள் என்பது மிகச் சரி…பாரதியாரைப் பற்றின பொய்ப் பிம்பம் இப்போது என் மனதில் மாறிவிட்டது.தெளிவு படுத்தியமைக்கு நன்றி.

 36. தமிழக அரசியலில் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது: ராமதாஸ்

  சிந்திப்பீர்- மக்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நம் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி ,அப்பா, அம்மா, மனைவி மக்களுடன் நெளியாமல்/ஒப்பாரிவைக்காமல் பார்த்து பயனடைய முடியும். மற்ற திராவிட கட்சிகளின் தொலைகாட்சி சேவை/ கள் எப்படி என்று சொல்லவும் வேண்டுமோ???

 37. ஒரு பாப்பார நாயி ‘பெரியார் நேசன்’ என்ற பெயரில் வந்து, வாந்தி எடுத்துட்டு போகுது.

 38. ரஜினி/தனுஷ்/கங்கை அமரன்/தயாநிதிமாறன்/பாக்யராஜ் – இவங்களுக்கெல்லாம் பெண்ணை கல்யாணம் செய்து வைத்து உயர் ஜாதி அந்தஸ்தை கொடுத்த அவாளை குறை கண்டு பிடிப்பது நம்மை நரகத்தில் தள்ளிவிடும்!!!. ஹி…ஹி…ஹி.. பின்னர் நம்மை ஏன் கோயிலில் ஒன்றாக பணியாற்ற
  அனுமதி மறுக்கிறார்கள்? – கல்யாணம் பண்ணா தான் அனுமதித் தகுதியா??? – பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு!!!

 39. உலகக் கவிதைகளைப் படித்தவர்கள், பாரதியை ஒரு மகாகவி என ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சில அரைகுறை வேக்காடுகள்தான், பாரதியை மகா கவி என பட்டம் போட்டு அழைக்கின்றன.

 40. பாரதி மகா கவியோ மெகா கவியோ… இருந்துட்டு போகட்டும் … அவன் தமிழ் மக்களுக்கு என்னது பண்ணான் கவித எழுதுனத தவிர … பெரியார் உட்காந்துட்டு கட்டுற மட்டும் எழுதிட்டு இல்ல …வீதில எறங்கி போரடனான் ..பெரியார் ஜாதிய எதிர்த்தான் குறிப்பா பார்பன எதிர்த்தான் …ஜாதி அழியனும்னு வீதிள எறங்கி போராடன பெரியாற பத்தி பாலா என்ன சொல்லறாரு ?

 41. பாரதி மகா கவியோ மெகா கவியோ… இருந்துட்டு போகட்டும் … அவன் தமிழ் மக்களுக்கு என்னது பண்ணான் கவித எழுதுனத தவிர … பெரியார் உட்காந்துட்டு கட்டுற மட்டும் எழுதிட்டு இல்ல …வீதில எறங்கி போரடனான் ..பெரியார் ஜாதிய எதிர்த்தான் குறிப்பா பார்பன ஜாதிய எதிர்த்தான் …ஜாதி அழியனும்னு வீதிள எறங்கி போராடன பெரியாற பத்தி பாலா என்ன சொல்லறாரு ?

 42. அட கடவுளே,

  பாலா என்ன இது, எதெதுக்குத்தான் பின்னூட்டம் இடறது, யார் யார் கூடல்லாம் விவாதம் / உரையாடல் நிகழ்த்துறது-ன்னே உங்களுக்கு தெரியாதா ?

  இதையெல்லாம் பாத்து சிரிச்சிட்டே போகணும். போங்க சார், உங்க நேரத்த பயனுள்ள விஷயத்துல செலவு செய்யுங்க. 🙂

 43. பாரதி இப்போ துவைத்துட்டு,அப்புறம் பகத் சிங்கா ?ஏத்தி விட்ட ஏணிய எட்டி உடைத்து நல்லா கல்லா கட்டுங்க .ரொம்ப நல்ல வருவீங்க. பாரதி 39 வயசுல முடிச்ச காரியத்தை விமர்சனம் செய்ய எந்த பெரியவருக்கு தகுதி இருக்குனு எனக்கு தெரியல .அதேபோல இயேசு 34 வயசுல செய்த முடிச்ச புரட்சி பற்றி இன்னும் யாரும் விமர்சனத்தை நிறுத்தல .அதெல்லாம் மின்சாரம் மாதிரி .கொஞ்சம் connection எடுத்து light அடிச்சி கல்லா கட்டலாம்.நல்ல பொழைப்பு .நடத்துங்க .இந்த அன்பு, மனித நேயம் ,சமத்துவம்,ஒழுக்கம்,இதை பற்றி எழுதினா கல்லா கட்ட முடியுமா ?

 44. அப்பு, ராஜாஜி சொன்னது போல் தமிழ்நாட்டுக்கு பெரியாரின் உபயம் ஜாதிவெறி. இந்த அளவு ஜாதிவெறி வேறு எந்த மாநிலத்திலும் இந்தியாவில் இல்லை. அதற்கு காரணம் யார்?

  பெரியாரைப் போல் பாரதி போராடவில்லை. இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்கட்டா? பாரதியைப் போல் பெரியார் சுவையான கவிதைகள் எழுதவில்லையே. இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அம்பேத்கர், நேரு அரசியலுக்கு வந்தார்கள். காந்தி, தாகூர் வரவில்லை. அதனால் என்ன?

 45. கம்பனுக்குப் பிறகு தமிழ் எட்டு நூற்றாண்டுகள் பாரதிக்காகக் காத்திருந்தது. அடடடடட‌டா….அட்டகாசம் கவிப்பேரரசரே!!!

 46. You are a non-entity even to comment the Maha Kavi. Makkal Tholai Katchi wants some contravery to get viewership; so you are allowed to vomit; just because a dog urinates on a marble, it doesn’t loose it shine. The example is only to highlight the greatness of marble and the dog-urination on it is not to compare anyone. Barathi even in his life time didn’t beg any one and surely doesn’t need anybody’s credentials. He lives like the Sun.

 47. My earlier postings about you on Bharathi were written before I read your SO CALLED KAVITHAI. What an audacity that you chose to write about Bharathi? Are you really qualified to pass judgement on him? You chose to comment on Bharathi because you wanted to be notice. You got it. Mathimara, Bharathi was a different person you can never be his equal; I am not taking about his or your origin but only referring to your mental stature.

 48. எட்டையாபுரக் கவிஞன் பாரதி‍ எங்கள்
  எல்லோரின் மனம் நிறைந்த பாரதி
  செழியத் தமிழ் பன்பாட்டின் சாரதி எங்கள்
  அழகுத்தமிழ் அறிஞர் புலவர் பாரதி

  காசிமா நகரில் கல்வி கற்றவர் இந்த‌
  மாசிலா மொழியில் இவர் கொற்றவர்
  பேசுமொழி ஐந்தில் பெரும் வித்தகர் பரத‌
  தேசம் போற்றி பாடல் பாடி வைத்தவர்

  செக்கிழுத்த செம்மலுடன் பழகினார் எங்கள்
  தெக்குதிசை மண்னில்தினம் உலவினார்
  மக்களைத்தன் பாடலாலே எழுப்பினார் கொடும்
  உக்கிரமாய் அச்சம்தனை விலக்கினார்

  பாட்டினிலே பலநீதி சொன்னவர் இந்த‌
  நாட்டிலுள்ள சாதிகளை வெறுப்பவர்
  மனங்கவரும் நூல்கள்பல படைத்தவர் மக்கள்
  மனங்களிலே மறையாமல் நிலைப்பவர்

  வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பாரதி என்றும்
  வாய்மை வெல்ல,வாழ்த்த வந்த பாரதி
  வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பாரதி இந்த‌
  வையம் வரை வார்த்தைகளில் வாழ்க நி.

 49. felt sorry for having visited this site; thought it was a very good discussion forum on richness of tamil; turns out it is only a site for vilification of our own heritage; i am deliberately posting this in english in protest the perverted mindset of people posting on this topic without even understanding the cultural milieu under British India when Bharathiyar lived. History is written and rewritten by victors periodically; it is not always understood in the right perspective by the future generations who try to accommodate the history they read in the context of how they live and how they reconstruct the past in their minds; kudos to the few sane minds who kept the language decent; hats off to bala for persisting with his posts trying to drive some sense and decency into the discussion despite the quite few narcisstic individuals who have posted rather obscene content on him. any decent souls, look for a good and healthy debate elsewhere, this is for people who are not receptive to alternative views and want to thrust their view down your throats

 50. தோழர், இந்த பதிவை நான் பார்க்க விரும்புகிறேன். ஆனால் காணொளி இயங்கவில்லை. வேறு ஏதேனும் தளத்தில் இது உள்ளதா?

 51. வே.மதிமா றன் நடுநிலை தவறியவர் என்பது என் கருத்து 8903613114

 52. மக்கள் தொலைக்காட்சி பேட்டியை இன்னும் முதன்மையில் வைத்திருக்க தேவையில்லை. நீங்கள் உலகளாவிய கவனத்திற்கு சென்றுள்ளதால் முகப்பில் தேவையில்லை.

Leave a Reply

ஜாதி ஒழிப்பே லட்சியம்

%d bloggers like this: