டிரைலர்

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

நல்லதொடர் வருகுது; நல்லதொடர் வருகுது;

சாதிகள் அதிருது; சண்டைகள் வருகுது

சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ

வேதபுரத் தாருக்கு நல்லபுத்தி சொல்லு.

விரைவில் நமது வலைப் பதிவில் தொடராக வருகிறது,

பாரதியின் புகழுக்கு புள்ளி வைத்த புத்தகம்……

வே.மதிமாறனின் பாரதிய ஜனதா பார்ட்டி

book2.jpg

2000 ஏப்ரல் முதல் 2001 சனவரி வரை, ‘தலித் முரசுஇதழில் தொடராகவும் பிற்பாடு புத்தகமாக முதல் பதிப்பு 2003லும், இரண்டாம் பதிப்பும் 2005லும் வெளியாகி, பாராட்டுக் கூட்டங்களையும், கண்டனக் கூட்டங்களையும் சமமாக சந்தித்த புத்தகம்.

பாரதியோடு தன்னையும் சேர்த்து அடையாப்படுத்திக் கொண்டதால், இந்த புத்தகத்தைப் பற்றி முற்போக்காளர்கள்பலர் முகம் சுளித்தார்கள்.

“‘இவ்வளவு நாள் பாரதியோடு அன்பாக பழகி விட்டு இப்போது திடிர் என்று எப்படி பாரதியை விட்டு விலகுவது?” என்று அறிவுஜீவிகள்தங்கள் இயலாமையை கோபமாக வெளிபடுத்தினார்கள்.

உன்னை குறித்து இப்படி எல்லாம் எழுதுகிறார்களே, அதற்கு நீயும் உடைந்தையாக இருக்கிறாயே? ‘பாரதி, நான் ஏது செய்வேனடா?” என்று பேராசிரியப் பெருமக்கள் புலம்பினார்கள்.

இப்படி பலபேரின் வயித்தெரிச்சலைக கொட்டிக் கொண்ட பாரதியார் குறித்த இந்த ஆய்வு, நமது வலைப் பதவில் தொடராக வர இருக்கிறது.

நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?

பார்ப்போம்.

7 thoughts on “டிரைலர்

  1. மிக்க நன்றி.. இதனை நான் உங்களுக்கு தனிமடலிட்டு கேட்க வேண்டுமென நினைத்திருந்தேன்.

    வாழ்த்துக்கள்!

  2. பாரதியார் குறித்த இந்த ஆய்வு, நமது வலைப் பதவில் தொடராக வர இருக்கிறது.//

    தொடர் வ‌ர வாழ்த்துக்க‌ள்… உண்மை உலகிற்க்கு தெரியட்டும்

  3. Dear Mathimaran,

    The Said book was an excellent effort by you. I am really happy to know that it is coming in the web. Truely speaking, I was an ardant lover of Barathi before reading your book. But when I read that – I was speachless! I expect more such writings from you.

    I know that there was another book which came as a reply from you and Maruthaiyan for the attacks on the “Parppana kudumiyil barathiyin meesai”. If possible, please give that too in the web.

    With Wishes

    Kaargi

  4. உங்கள் பாரதி ஆய்வை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்

    நூலாக படிக்க முயலி்ல்லை.

    அன்புடன்
    ஜமாலன்

Leave a Reply

%d bloggers like this: