ஒத்தக்கல்லுக்கு பறக்கும் ஆயிரம் காக்காக்களின் கூட்டம்

Karunanidhi

 

தமிழக அரசு, தமிழ்சினிமாவிற்கும் அதன் நடிகர்களுக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறது.

அபராதம் விதிக்க வேண்டிய படங்களுக்குப் பரிசும், தண்டனை தர வேண்டிய நடிகர்களுக்கு விருதும் தந்து, அவர்களை பெருமைப் படுத்துவதன் மூலமாக தன்னை  மீண்டும் சிறுமைபடுத்திக் கொண்டது தமிழ அரசு.

கோழைகளும், சந்தர்ப்பவாதிகளும், சமூகவிரோதிகளுமாக நிரம்பியிருக்கிற இந்த தமிழ்சினிமாவின் காக்கா கூட்டம், மீண்டும் கலைஞரை ‘காக்கா’ பிடித்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் காக்காகளில் முதன்மை காக்காவான ரஜினிகாந்த் என்கிற கழிசடை காக்கா இந்த நிகழ்ச்சியில் பேசும்போது;

“சேது சமுத்திர திட்டம் பத்தி ரொம்ப சீரியசா இருக்காங்க. அதைப் பத்தி பல விஷயம் சொல்றாங்க. இவ்ளோ ஆழம், அகலம், லாபம், நஷ்டம்னு சொல்றாங்க. சரியா, தப்பான்னு தெரியாது. ஆனா, அதுல ஒரு சென்சிட்டி£வன விஷயத்துக்கு எப்படியோ உயிர் வந்து, உருவெடுத்து பெரிய பூதகரமா வளர்ந்திருக்கு. அதை ஊதி, நெருப்பாக்கி, தீயாக்கி என்னென்னவோ செய்ய, சில வேலை நடக்கு. நமக்கு காரியம் நடக்கணும். தென்னிந்திய அரசியல் தலைவர் கலைஞர். அவருக்கு வட இந்தியத் தலைவர்கள் நண்பர்களா இருக்காங்க. பெரியவங்க உக்காந்து பேசி முடிவெடுத்தா, அது நல்ல முடிவா இருக்கும்னு நம்பறேன் ” இப்படி தமிழ்நாட்டு மேல நிரம்ப அக்கறை கொண்ட நபர் போல பேசிக் கொண்டு வந்து, கலைஞர் பெருமையை எல்லாம் குறிப்பிட்டு, பின்னாடி மெல்ல ஒரு ஊசி ஏத்தியிருக்கு இந்த காரிய பைத்தியம்.

இந்த வரியை மீண்டும் ஒரு முறை உன்னிபா படிச்சு பாருங்க: “தென்னிந்திய அரசியல் தலைவர் கலைஞர். அவருக்கு வட இந்தியத் தலைவர்கள் நண்பர்களா இருக்காங்க. பெரியவங்க உக்காந்து பேசி முடிவெடுத்தா, அது நல்ல முடிவா இருக்கும்னு நம்பறேன்” இந்த வரிதான் அந்த ஊசி. (‘சோ’ வோட ஆலோசனை போலும்)

“சேது பாலம் விவகாரத்தில் பேசுவதற்கு எதுவும் இல்லை. அந்த மண்திட்டை பெயர்த்து தகர்த்துக்கொண்டுதான் திட்டம் நிறைவேறும்” என்று தெளிவாக அறிவித்திருக்கிறார், முதல்வர்.

அதன் பிறகும் அவரை வட இந்திய தலைவர்களோடு உட்கார்ந்து பேசச் சொல்கிறது ரஜினி.

வட இந்திய தலைவர்களில் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் காங்கிரஸ்காரர்களோ, லாலுவோ, முலாயம்சிங்கோ அல்ல.
அப்படியானால் யாரோடு உட்கார்நது பேசுவது?

அத்வானி, வாஜ்பாய், வேதாந்தி இந்த மேதைகளோடு பேசச் சொல்லுகிறது, அந்த மேதை. என்ன கொழுப்பு பாத்தீங்களா?

‘வேதாந்தி’ என்கிறவன் “கருணாநிதியின் தலையை கொண்டு வா” என்று சொன்னதைக் கண்டித்து, எந்த கருத்தையும் சொல்லாத இந்த காக்கா, பெரிய மாமேதை மாதிரி, முதல்வருக்கு அறிவுரை சொல்லுது. எல்லாம் நம்ம கொடுக்கிற இடம்தான்.

“வேலியில போற ஒனாணை வேட்டியில எடுத்து உட்டுகிட்டு- –& –குத்துது, கொடையுதுன்னு சொல்லறதுல என்ன பிரயோஜனம்?” அப்பிடின்னு சொல்லுவாங்களே, அது இதுதான் போலும்?

“தலையை வெட்டிக்கிட்டு வா” என்று சொன்ன வேதாந்தியை கண்டித்து, கமல், ரஜினின்னு சினமாகாரனுங்க யாரும் கண்டிக்கல என்பதுகூட பெரிய விஷயமில்லை. பெரியாரா நடிச்சாரே, புரட்சி தமிழன் சத்தியராஜ், அவருகூட வாயே திறக்கல.

vairamuthu.JPG

இவ்வளவு சந்தர்பவாதிகள் நிறைந்திருக்கிற இந்த சினிமாவில், வேதாந்தியை துணிச்சலுடன் கடுமையாக கண்டித்த – கவிஞர் வைரமுத்துவிற்கும், கவிஞர் அறிவுமதிக்கும், இயக்குநர் சீமானுக்கும் நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பாக இயக்குநர் சீமானை பற்றி சொல்ல வேண்டும்.
தன்னுடைய சொந்த அபிப்பிராயங்களை ஒளித்து வைத்துக் கொண்டு, தனது சந்தர்பவாதத்தை பகிரங்கபடுத்திக் கொள்கிற தன்மை இப்போது பரவலாக எல்லா மட்டங்களிலும் பரவி இருக்கிறது. அதுவும் சினிமாவில்  சொல்லவே வேண்டாம்.

அப்படிப்பட்ட சினிமாத்துறையில் முன்னணி இயக்குநராக இருக்கிற, – மக்களிடம் பிரபலமான ஒருவர் –& பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மத மறுப்பு, இடஒதுக்கீடு ஆதரவு போன்ற பெரியார் கொள்கைகளை மிக துணிச்சலோடு பேசுவது சாதாரணமான விஷயமல்ல. அதற்கு ஒரு தில்லு வேணும். அந்த தில்லோடு திறமையாக பேசுகிறார் சீமான்.

seemaan.jpg

பெரியாரின் போர்வாளாக இருந்த அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி மிக ஆவேசமாக, கோபம் கொப்பளிக்க பேசக் கூடியவர் என்று  படித்திருக்கிறேன். அவர்  எப்படி எல்லாம் பேசியிருப்பார் என்று நான்  உருவாக படித்திருந்தேன்.

13.10.2007 அன்று சென்னையில் சுபவீ  நடத்திய ‘மணல் திட்டும் மதவெறியும்’ என்ற பொதுக்கூட்டத்தில் சீமானின் பேச்சை முதல் முறையாக கேட்டேன். பட்டுக்கோட்டை அழகிரி பற்றிய என்னுடைய உருவகத்துக்கு ஒரு உருவமாக இருந்தது சீமானின் பேச்சு.

திரையுலகில் இருந்து நமக்கு மீண்டும் ஒரு எம்.ஆர்.ராதா கிடைத்திருக்கிறார். வாழ்த்துகள் சீமான்.

11 thoughts on “ஒத்தக்கல்லுக்கு பறக்கும் ஆயிரம் காக்காக்களின் கூட்டம்

 1. ஆம் நானும் அந்த கூட்டத்திற்க்கு சென்று இருந்த்தேன் சீமானின் பேச்சு சிறப்பாக இருந்தது

 2. ஆம் நானும் அந்த கூட்டத்திற்க்கு சென்று இருந்த்தேன் சீமானின் பேச்சு சிறப்பாக இருந்தது

 3. வணக்கம் மதி

  உங்களின் வலைதளத்தை பார்க்கும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது
  மிக்க மகிழ்ச்சி தங்களது பதிவுகள் அனைத்து நன்றாக உள்ளது
  சில விசயங்களை பொதுபார்வையுடன் அனுக முயற்சிக்கலாமே

  ///////
  தலையை வெட்டிக்கிட்டு வா” என்று சொன்ன வேதாந்தியை கண்டித்து, கமல், ரஜினின்னு சினமாகாரனுங்க யாரும் கண்டிக்கல என்பதுகூட பெரிய விஷயமில்லை. பெரியாரா நடிச்சாரே, புரட்சி தமிழன் சத்தியராஜ், அவருகூட வாயே திறக்கல.

  இவ்வளவு சந்தர்பவாதிகள் நிறைந்திருக்கிற இந்த சினிமாவில், வேதாந்தியை துணிச்சலுடன் கடுமையாக கண்டித்த – கவிஞர் வைரமுத்துவிற்கும், கவிஞர் அறிவுமதிக்கும், இயக்குநர் சீமானுக்கும் நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

  குறிப்பாக இயக்குநர் சீமானை பற்றி சொல்ல வேண்டும்.
  தன்னுடைய சொந்த அபிப்பிராயங்களை ஒளித்து வைத்துக் கொண்டு, தனது சந்தர்பவாதத்தை பகிரங்கபடுத்திக் கொள்கிற தன்மை இப்போது பரவலாக எல்லா மட்டங்களிலும் பரவி இருக்கிறது. அதுவும் சினிமாவில் சொல்லவே வேண்டாம்.

  அப்படிப்பட்ட சினிமாத்துறையில் முன்னணி இயக்குநராக இருக்கிற, – மக்களிடம் பிரபலமான ஒருவர் –& பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மத மறுப்பு, இடஒதுக்கீடு ஆதரவு போன்ற பெரியார் கொள்கைகளை மிக துணிச்சலோடு பேசுவது சாதாரணமான விஷயமல்ல. அதற்கு ஒரு தில்லு வேணும். அந்த தில்லோடு திறமையாக பேசுகிறார் /////

  வைரமுத்து குரல்குடுத்தலில் எனக்கு ஆச்சர்யம். சீமான் அண்ணனை பற்றி சொல்லவே வேண்டாம். இன்று 100 ல் 99 பேர் சேகுவாராவை பற்றி தெரிகிறது அந்த பெயர் தெரிந்திருக்கும். அதற்கு காரணம் அண்ணன் சீமான். அவர்களின் மேல் எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு.

  தங்களின் இந்த கட்டுரை படித்தேன்.
  கலைஞர் ஏன் சாமி துடியா துடிக்கனும் உடனே பாலம் கட்டணும் என்று
  அது சரி பாலம் கட்டுர காண்ராக்டில் மதிக்கு எதுவும் பாலு அண்ணா அதான் மத்திய அமைச்சர் ஏதுவும் குடுத்தரா?

  அதஎல்லாம் தோண்டி எழுதுங்க.
  தமிழனை வடமாநிலத்தவன் ஆதிக்கம் செய்தால் குரல் எழுப்ப வேண்டும்.
  அந்த வகையில் உங்களின் கழுத்துக்கு எனது வந்தனம்.
  அதே நேரத்தில் எத்தனை தழிழனை கருணாநிதி வடநாட்டில் கால்வைக்க விடாமல் பண்ணியிருக்கிறார்.
  ரொம்ப எல்லாம் யோசிக்க வேண்டாம்
  கொஞ்சமா யோசிங்க அப்புறம்
  முடிங்சா பாரதி ஜனதா பார்ட்டி மாதிரி திராவிட கழக பார்ட்டிங்க பத்தி ஒரு இல்ல 9 புத்தகம் எழுதலாம்
  முதலில் 1 எழுத முயற்சி பண்ணுங்க

  http://nextoneday.wordpress.com/

  its my blog

  இவன்
  எதுவும் தெரிந்தவன் அல்ல

 4. அன்புள்ள வே. மதிமாறன் அவர்களுக்கு,

  உங்கள் எழுத்துகளை விரும்பி படித்து வருகிறேன். உங்களுக்கு நேரடியாக எழுத உங்கள் மின் அஞ்சலைத் தெரிவியுங்கள்.

  நன்றி!

  அன்புடன்
  அருளடியான்

 5. சினிமாவில் காக்கா கூட்டம் கட்டுரை அருமை! சினிமாவின் காக்காக்கள் கிடக்கட்டும். அவை கோமாளிக்கூட்டம்.

  மேலே (பின்னூட்டத்தில்) ஒரு கிறுக்கனின் உளறலைப் பார்த்தீர்களா?

  (கலைஞர் ஏன் சாமி துடியா துடிக்கனும் உடனே பாலம் கட்டணும் என்று அது சரி பாலம் கட்டுர காண்ராக்டில் மதிக்கு எதுவும் பாலு அண்ணா அதான் மத்திய அமைச்சர் ஏதுவும் குடுத்தரா? )

  நாட்டு நலனுக்காகத் தொடங்கப்படும் திட்டங்களை எல்லாம் கமிஷன் கையூட்டு என்று கூறி திசை திருப்பினால் எந்த திட்டம்தான் உருப்படியாக வரும்?
  இம்மாதிரியான பின்னூட்டங்கள் தரும் மூளையற்ற முண்டங்கள் எப்போது திருந்துமோ?

  (அதே நேரத்தில் எத்தனை தழிழனை கருணாநிதி வடநாட்டில் கால்வைக்க விடாமல் பண்ணியிருக்கிறார்.)

  வடநாடு என்ன எங்கேயாவது போயி எக்கேடாவது கெட்டு போக வேண்டியதுதானே? கலைஞரா உன்னை சென்னை சென்ட்ரல் இரயில் வண்டி நிலையத்தில் நின்று கொண்டு டிக்கெட் எடுக்க விடாமல் தடுத்தார்? திருந்துங்கப்பா!

 6. அரசியல் பேச நான் வரவில்லை.ஆனால் ஒத்தக்கல்லுக்கு பறக்கும் காக்காய்க்கூட்டம் என்கிற வார்த்தைகளை நான் உங்களிடமிருந்து கற்றுக்கொன்டேன்.மிகவும் உபயோகமயிருக்கிறது.

 7. மதிமாறன்
  நீங்கள் இந்தக் கட்டுரை எழுதிய அடுத்த சில நாட்களில்
  சீமானின் இதே புகைப்படத்துடன் ஈத்தழிருக்கு அவர் உதவவில்லை என்பiதாக திரைப்படச் செய்தி இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
  எங்கே எங்கே விழுகிறது முடிச்சு?

 8. //
  மேலே (பின்னூட்டத்தில்) ஒரு கிறுக்கனின் உளறலைப் பார்த்தீர்களா?

  நாட்டு நலனுக்காகத் தொடங்கப்படும் திட்டங்களை எல்லாம் கமிஷன் கையூட்டு என்று கூறி திசை திருப்பினால் எந்த திட்டம்தான் உருப்படியாக வரும்?
  இம்மாதிரியான பின்னூட்டங்கள் தரும் மூளையற்ற முண்டங்கள் எப்போது திருந்துமோ?

  (அதே நேரத்தில் எத்தனை தழிழனை கருணாநிதி வடநாட்டில் கால்வைக்க விடாமல் பண்ணியிருக்கிறார்.)

  வடநாடு என்ன எங்கேயாவது போயி எக்கேடாவது கெட்டு போக வேண்டியதுதானே? கலைஞரா உன்னை சென்னை சென்ட்ரல் இரயில் வண்டி நிலையத்தில் நின்று கொண்டு டிக்கெட் எடுக்க விடாமல் தடுத்தார்? திருந்துங்கப்பா!

  //
  சரியான கருத்து.

 9. சீமானின் ஈழத் தமிழரும் தமிழக அரசியலும் பற்றிய தற்போதைய பேச்சுத்தான் புலம்பெயர் தமிழரிடை சூடு கிழப்பிக்கொண்டிருக்கிறது.
  உங்கள் எழுத்து கூறிய கருத்துக்கள், தற்போதைய அவரது பேச்சு என்பன நான் முன்னர் இட்ட பின்னூட்டத்தில் கூறியவற்றுடன் பொருத்திப்பார்க்கவேண்டும்.
  சீமானை ஈழத்தமிழருக்கு எதிரானவராகக் காட்டவேண்டிய தேவையாருக்கோ இருக்கிறது.
  ஏன்?

 10. மேலே வந்து உளறியவர் யாரோ நாம் அறியோம்.

  ஆனால்,பொருளைப்பற்றி விவாதிக்காமல் எழுதியவரைப்பற்றி அபாண்டமாகக்குற்றம் சாற்றுவது கண்டிக்கத்தக்கது.

  அப்புறம்…உங்க தலைப்பு எனக்கு பழைய நினைவைக்கொண்டுவந்தது.

  20 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க மேடைகளில்
  காகா ராதாகிருட்டிணன் பேசுவார்,

  ”1000 காக்காய்க்கு ஒரு கல் ;ஆனால் 1000 கல் சேர்ந்தாலும் இந்தக்காக்காயை விரட்டமுடியாது”என்று.

 11. அண்ணன் சீமான் பற்றிய தங்களின் கருத்தை அடியேனும் வழிமொழிகிறேன்.

Leave a Reply

%d bloggers like this: