எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது?


community.jpg

இந்தியாவை பொறுத்தவரை எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது. அப்புறம் எதுக்கு தேவையில்லாமல் வர்க்கம்,வர்க்கம் என்று பேசுகிறார்கள்?

-சுந்தர் சார், திருச்சி.

 

திருமணங்களை ஜாதிதான் தீர்மானிக்கிறது.

ஆனால் தனக்கு வர இருக்கிற துணை தன் ஜாதிக்காரராக இருந்தால் மட்டும் போதாதது, தன்னைப் போல் வசதியான அல்லது தன்னை விட வசதியானவராக  இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்களே, அது என்ன ஜாதி உணர்வா?

தன் ஜாதிப் பெண்ணாக தேடி மணம் முடித்துக் கொண்டபின் வரதட்சணை கேட்டு துன்புறுத்தகிறார்களே, அவர்கள் எல்லாம் வேறு ஜாதிக்காரர்களா?

நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூட சொல்றதில்லை.

ஜாதி விட்டு கல்யாணம் பண்ண தயாராக இருக்கிறவர்கள் கூட வர்க்கம் பேதம் கடந்து கல்யாணம் முடிக்க தயாராக இல்லை.

டாக்டருக்குப் படித்திருக்கிற, மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பதிக்கிற, நல்ல அழகான மணமகளுக்கு-நல்ல வேலையில் உள்ள மாதம் 30 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிற வசதியான மணமகன் தேவை. ஜாதி தடையில்லை.

இந்த விளம்பரங்களை நீங்க பாக்கறதில்லையாஜாதி மாறி கல்யாணம் முடிச்சக் கூட, கலெக்டர் கலெக்டராதான் முடிப்பாரு. இல்லைன்னா டாக்டரை முடிப்பாரு.

சுய ஜாதியில் தன் படிப்புக்கும் தன் அந்தஸ்துக்கும பொருத்தமாக பெண் கிடைக்காததால், வேறு ஜாதியில் தகுதி-திறமையானபெண்ணை கட்டிக் கொண்டு, தன் ஜாதி மக்களுக்காக பாடுபடுகிறஜாதிய உணர்வாளர்களும் இருக்கதானே செய்கிறார்கள்.

கிரிமனல்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் பாதுகாப்புத் தருகிற ஜாதி சங்கங்கள், தன் ஜாதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதில்லையே. இவ்வளவு ஏன்?

கொலை செஞ்ச ஜெயேந்திரனுக்கு ஆதரவா போராடுன பிராமணர் சங்கம், கொலை செய்யப்பட்ட சங்கர்ராமன் அய்யருக்கு ஆதரவா வரலையே ஏன்?

அதாங்க வர்க்க பாசம். 

*

திரு. கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழில் நான் எழுதிய பதி்ல்

தொடர்புடையவை:

ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?

தமிழன்; வர்க்க உணர்வும் – ஜாதி உணர்வும் கலந்து செய்த கலவை

10 thoughts on “எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது?

 1. Good one…. In India the blind view of seperating Class and Caste is foolish.

  Because in India Caste is the most widely used production relationship, that is caste predominantly decides the class(the dominance may differ specific to regions depends on advancement in the production method)

  Good one….

 2. chitra sampath

  அழகான, ஆணித்தரமான, அறிவுபூர்வமான, ஆதங்கம் மிகுந்த பதில். தேசம், ஞானம், கல்வி, ஈசன், பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி குதம்பாய், காசு முன் செல்லாதடி என்ற வரிசையில், சாதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

 3. டாக்டருக்குப் படித்திருக்கிற, மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பதிக்கிற, நல்ல அழகான மணமகளுக்கு-நல்ல வேலையில் உள்ள மாதம் 30 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிற வசதியான மணமகன் தேவை. ஜாதி தடையில்லை.’

  உங்கள் கேள்வியிலேயே பதிலை வைத்துக்கொன்டு வேறே பதில் எதிர் பார்க்கிறீர்களே?
  இந்தியா இல்லை எல்லா தேசத்திலும் ஜாதி ஒரு பெரிய விஷயமாக‌ சாதாரணா மக்களுக்கு இல்லை.
  எல்லாம் ஒரு அரசியல்தான்!

  ஜயேந்திர‌ருக்கு ஆதரவாகப்போன பிரமனர் சஙம்கூட சங்கரராமனுக்குப்பொகவில்லயே?
  எப்படிப்போகும். ஜாதிக்காக அடாவடியாகப்போகவெண்டும் என்கிறீர்களா?

 4. எல்லாம் சரி தான்…
  பல கோடிகள் வரதட்சணை குடுத்தாலும் கீழ் சாதி பொண்ணை கல்யாணம் செய்ய மறுக்கும் மனிதர்களை கொண்ட ஊர் தானே நம்ம ஊர்…
  ஆகா ஆண்கள் சாதி மாறி கல்யாணம் செய்யலாம்… பெண்கள் அப்படி செய்ய முடிகிறது இல்லையே..

 5. @கமலா
  ஜயேந்திர‌ருக்கு ஆதரவாகப்போன பிரமனர் சஙம்கூட சங்கரராமனுக்குப்பொகவில்லயே?
  எப்படிப்போகும். ஜாதிக்காக அடாவடியாகப்போகவெண்டும் என்கிறீர்களா//

  உங்க சாதி தான் மக்களுக்கு தீங்க செய்தது இதல வேற பெருமை படுகிறீர்கள்

Leave a Reply

%d bloggers like this: