‘யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை’

லீனா மணிமேகலையை லயோலா கல்லூரியின் ‘ஆண் நிர்வாகம்’ அவமானப்படுத்தியதை விடவும் இந்த ஆண் எழுத்தாளர்கள் அவமானப்படுத்துவது கூடுதலாக இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஷ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த கொலைகாரர்கள்,  முஸ்லிம் பெண்களை பாலியல் வன்முறை செய்து கொலை செய்வதை கண்டித்து கொதித்து எழுகிற இஸ்லாமியரை பார்த்து, “நீ எதுக்கு உன் வீட்டு பெண்களுக்கு பர்தா போட்டு அவமானப்படுத்துன, நீ செஞ்சது தப்புதானே?” என்று ‘நியாயம்’ பேசுகிற ஒரு அநியாக்காரனைபோல் இருக்கிறது, இந்த ‘எழுத்தாளர்’களின் சந்தர்ப்பவாதப் பேச்சு.

‘இந்திய கிராமங்களில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூதாயத்தைச் சேர்ந்த பெண், பிற்படுத்தப்பட்ட ஜாதி வெறியற்களால், பாலியல் வன்கொடுமைக்களுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார்’, என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த அவலம் எதுவும் தன் எழுத்துகளில் பிரதிபலிக்காமல், இந்தப் பெண் கவிஞர்கள், ஏதோ ஒரு உன்னதமான உலகத்தில் வாழ்வதுபோல், கவிதை எழுதி ‘இலக்கியம் வளர்த்து’க் கொண்டிருந்தபோது, அதை கண்டிக்க வக்கற்று பாராட்டிக் கொண்டிருந்தவர்கள்தான் இந்த ‘பிரபலபோதை’ பிடித்த ஜொள்ளு எழுத்தாளர்கள்.

ஒரு எழுத்தாளர், பெண் என்பதற்காகவே நேரடியாக அவமானப்படுத்தப்படும்போது “பெண்கள் மீது நடந்த வன்கொடுமைகளை கண்டிக்காத நீங்கள். உங்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது மட்டும் கண்டிக்கிறீர்களே?” என்று கண்டிக்கிறார்கள்.
(என்னமோ இவுங்க மட்டும் அதை கண்டிச்சு கிழிச்சா மாதிரி)
இதுதான் சந்தர்ப்பவாதத்தின் உச்சம்.

1. லீனா மணிமேகலை சமூகத்தால் தடைசெய்யப்பட்ட உடையோடு கல்லூரிக்குள் நுழையவில்லை. வீட்டிலிருந்து வீதிகளின் வழியாக அதே உடையோடுதான் அவர் கல்லூரிக்குள் நுழைகிறார்.

2. இதே லயோலா கல்லூரிக்கு வருகிற வெளிநாட்டுப் பெண்கள் – டிரவுசரும், உள்ளாடைகள் இல்லாத அரை கை பனியனும் அணிந்து கல்லூரிக்குள் வருவதில்லையா? அப்படி வந்து  கல்லூரியின் தலைமை பொறுப்பாளர்களைப் பார்த்து உரையாடிவிட்டு செல்வது இல்லையா? அவர்களை மட்டும் எப்படி கல்லூரிக்குள் அனுமதிக்கிறார்கள்?

3. இந்த ‘ஆச்சாரமான’ லயோலா கல்லூரி,  ஏ.வி.எம்., ஸ்டுடியோ போல் இயங்கிய நாட்களும் உண்டு. அப்போது கல்லூரிக்குள் வந்த நடிகைகள் என்ன உடைஉடுத்திக் கொண்டு வந்தார்கள்? அங்கே வந்து அவர்கள் போட்ட ஆட்டத்தை (படப்பிடிப்புக்காத்தான்) அனுமதித்த நிர்வாகம், லீனா மணிமேகலையை மட்டும் அவமானப்படுத்தியது ஏன்?

இதை போன்ற கேள்விகளை கேட்க வக்கற்ற இந்த ‘ஆபாச ஆதரவு மற்றும் ஆபாச எதிர்ப்பு’ யோக்கிய ஆண் எழத்தாளர்கள் லீனா மணிமேகலையை கண்டிக்கிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களை குறிப்பதற்காகத்தான் இந்தப்  பழமொழியே உள்ளது போல,

‘யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை’

ஸ்ரீ ராமனால் அருளப்பட்டது

நாத்திகர்கள் இந்து மதத்தையும் நமது நாட்டின் தேசியத்தை குறித்தும் கேலி செய்தாலும், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒழுக்கம் ஸ்ரீராமபிரானால் நமக்கு அருளப்பட்டது. நமது நாட்டிற்கு மட்டுமே அந்த பண்பு சொந்தம்?
-கோபாலன்

imgk7.jpg

ஆச்சரியமாகத்தான் இருக்கு. 60 ஆயிரம் பெண்களுக்கு புருஷனா இருந்த தசரதனுக்கு மகனா பொறந்த ராமன், ஜானகியை மட்டும் தன் மனசுல நிறுத்தி ‘ஒருவனுக்கு ஒருத்தி’ங்ற ‘உன்னத புருஷனா’ வாழ்ந்தான்.

அவன் வாழ்ந்த ‘இந்து தேசம்’ இன்னைக்கு எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கையிலே, உலகத்திலேயே இரண்டாவது இடத்துல இருக்கு.
நம்ம ஆளுங்க, ராமனை பின்பற்றச் சொன்னா, தசரதனை பின் தொடர்கிறார்கள்.

அப்போ, தசரதனுக்கு எய்ட்ஸ் இருந்து இருக்குமோ?
தசரதனுக்கு இருந்திருந்தா அப்போ அந்த 60 ஆயிரம் பெண்களுக்கும் இருந்திருக்கணுமே?

60 ஆயிரம் பெண்களுக்கும் எய்ட்ஸ் இல்லைன்னா, தசரதனுடைய ‘ஆண்மையை’ பற்றி நாத்திகர்கள் ரொம்ப கேவலமா பேசுவாங்களே?

அவுங்களுக்கும் இருந்ததுன்னு ஒத்துகிட்டா, ‘அப்போ ராமனுக்கும் இருந்திருக்கும்’னு ரொம்ப அவதூறு பேசுவாங்களே.

‘இல்லைன்னு’ சொன்னா அப்போ எப்படி ராமன் பொறந்தான்னு? கேப்பாங்க.

‘இருக்குன்னு’ ஒத்துக்கிட்டா, கடவுளுக்கே எய்ட்ஸா?ன்னு கேப்பானுங்க.

எதுக்கு இந்த தொல்லை. இந்த கேள்வியும் வேணா. இந்த பதிலும் வேணா. விட்டுருவோம்.
     

வே. மதிமாறன்

பாரதிக்கு, இலங்கை சிங்களத் தீவாம்

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ -5
முதல் அத்தியாயம் (3)

bharathiar-image.jpg

‘பாரதம், பரதன் நிலை நாட்டியது, இந்த பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இந்நாட்டை இவன் ஒன்று சேர்ந்து, அதன் மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்தியபடியால், இந்த நாட்டிற்கு பாரத தேசம் என்று உருவாயிற்று’ என்று புளுகுகிறார் என்றால், அது மகாகவியை கேவலப்படுத்தியதாகும். அதனால் ‘வரலாற்று ஆதாரங்களை அள்ளித்தருகிறார்’ என்று நாம் புளுகி வைப்போம்.

 

பாரத தேசம் என்று சொல்லாத நேரங்களில் – ‘இது ஆரிய நாடு’ எனறு அழுத்தமாகச் சொல்கிறார்.

‘ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொலும் வீரிய வாசகம்’
   (வந்தே மாதரம்)
என சுதந்திர தீ மூட்டி,

‘உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவும் இஃதை எமக்கில்லை ஈடே’
-என்று யாகம் வளர்க்கிறார்.

‘பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்’ என்ற குதூகலிக்கிற பாடலில்,
‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்றார்.

பார்ப்பனர்கள் மூன்றுசதவிதமே உள்ள இந்த இந்திய துணைக் கண்டத்தை ‘ஆரிய பூமி’ என்று துணிச்சலோடு சொல்லும் பாரதி, தமிழர்கள் பெருவாரியாய வாழும் நாட்டை – ‘சிங்களத் தீவு’ என்று சொன்னாலும் அதை மறந்து, ‘அன்றே சொன்னான் பாரதி.

அவன் சொன்னது போல் பாலம் கட்டியிருந்தால், திபு, திபுவென்று பாலத்தின மீதே ஓடி என்னுயிர்த் தமிழர்களின் துயர்துடைக்க உதவி இருக்குமே’ என்று வீரம் பேசவாவது உதவுகிறது. நல்லது!

‘வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’

ஆஹா! அற்புதமான நதிநீர் பங்கீடு.

‘கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
   காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’

‘கங்கை-காவிரி’ன்னு இதுவும்  பொருத்தமாதான் இருக்கு.

‘சிங்க மாராட்டியர் தம் கவிதை கொண்டு
    சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்’

-‘இந்து மத திலகர் பிறந்த பூமி என்பதால் அது சிங்க மராட்டியம் போலும். பரவாயில்லை. யானைகள் அதிகம் நிரம்பிய கேரளாவில் இருந்து தந்தங்களைக் கொடுத்துவிடடு, இளிச்சவாய்த் தனமாக கவிதைகளை வாங்கி வைத்துக் கொள்ளட்டும்.

இப்படி எதைக் கொடுத்து, எதை வாங்குவது என்கிற பொருளாதார கவிதை எல்லாம் சரிதான். ஆனால், இதற்கெல்லாம் சேர்த்து வேட்டு வைப்பது மாதிரி,

‘காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’
என்கிறார்.

இதை ‘காவுக்கு கா’ போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பாரக்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழுங்கவும் முடியாது.

தேசிய கவிஞனாக இருந்தால்,
‘காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்
கன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’

என்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.

சரி, மற்ற ஊர் புலவர்கள் பேசாத அளவுக்கு அப்படி என்ன உலக மகா தத்துவத்தை காசியில் இருக்கிற புலவன் பேசிவிடப் போகிறான்? அப்படியே பேசினாலும் அதை உடனே காஞ்சிபுரததுக்காரன் மட்டும் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன?

‘வேற ஒண்ணுமல்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச ‘பெரியவாளெல்’ லாம், மார்க்கிய அடிப்படையில் புரட்சிகரத் திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜகத்குருக்களிடம் தெரிவித்தால் – ‘ஜகத் குரு’- லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னு சொன்னாலும் சொல்வார்கள்- மார்க்சிய பாரதியவாதிகள்!

-தொடரும்

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி

 இங்கே சொடுக்கவும்

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

mongo.jpg 

ஒரு படம் வைக்கனுமேன்னு இதை வைச்சுருக்கோம்

  

தேசியத்தை வலியுறுத்துகிறவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களாகவே இருக்கிறார்களே?
ஜான்சன்.

எதை ஒன்றை ஒருவர், எந்த விதமான அரசியல் காரணங்களும் இன்றி, போலியான ‘சப்பைக் கட்டுகளோடு’ தீவிரமாக வலியுறுத்திகிறாரோ, அதில் அவர் தனிப்பட்டமுறையில் லாபம் அடைபவராக இருப்பார். இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். Continue reading ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

‘பொய் சொல்லக் கூடாது’ பாப்பாவுக்கு மட்டும்தானா? பாரதிக்கு இல்லையா?

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ -4

முதல் அத்தியாயம் (2)

bharathi4.jpg

 

2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பெண்களுக்கு எதிராக சிந்தித்து இருக்கிறார்’ என்று கோபப்படுகிற ‘ஞாநி’ கள், 80 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இப்படி முன்னுக்குப் பின் முரணாக இருந்திருக்றாரே என்று சந்தேகிப்பதுகூட இல்லை.
சுப்பிரமணி பாரதிக்கு மட்டும் இலக்கியத்தில் ‘இடஒதுக்கீடு’ போலும்.

 

முரண்பாடுகளின் தொடரச்சியில், காந்தியை – காந்தியத்தை கேலி செய்து,

‘உப்பென்றும் சீனி என்றும் உள்நாடடுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடி! கிளியே; செய்வதறியாரடீ!’

என்று கை கொட்டி சிரித்து கேலி செய்யும் பாரதி – மற்றொரு பாடலில்,

‘வாழ்க நீ; எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க; வாழ்க!’
– என்று வானுயர ‘கட்அவுட்’ வைத்து கைதட்டுகிறார்.

காரணம் – நல்லது கெட்டது என்று நாட்டில் பேசப்படுகிற அனைத்துச் செய்திகளையும் கவிதையாக்கி ரசிப்பது. அதன் பொருட்டே – அல்லாவைப் பற்றி பாடல், ஏசுவைப் பற்றிய பாடல், ரஷ்ய புரட்சி பற்றிய கவிதை, பெண் விடுதலை குறித்த பாடல்கள் இன்னும் குள்ளசாமி, கோவிந்தசாமி, யாழ்ப்பாணசாமி மீது பாடல்கள்.

தன் தேவைகளுக்காக எட்டயபுரம் ராஜா, மகாராஜாக்கள் மீதான சீட்டுக் கவிகள்.

kanadasan.jpg

முரண்பாடுகள் என்பது, ‘கவிதா மனோபாவம்’ போலும்.
‘உலகில் இந்து மத்திற்கு இணையாக ஒரு மதமும் கிடையாது. அதில் எல்லாம் இருக்கிறது.’ – என்று தோள்தட்டி, தொடை தட்டி – பாகம், பாகமாக அர்த்தமுள்ள இந்து மதம், யோக மாலிகா, ராக மாலிக என்று பேப்பர்களை வீணடித்த கண்ணதாசன், சாகும்போது மரண வாக்குமூலம் போல, ‘ஏசு காவியம்’ பாடிவிட்டு செத்துப் போனார்.

கண்ணதாசன் மாதிரி தனக்கென்று தத்துவம், இலக்கு எதுவும் இல்லாத பித்துக்குளி, புகழ் விரும்பி, தேவைகளுக்கு அடிமையானவர் என்று சுப்பிரமணிய பாரதியை நாம் சுருக்கிவிட முடியாது.

பெண் விடுதலை, சுதந்திரம், ரஷ்ய புரட்சி, உலகச் செய்திகள் என்று ‘எனக்கு இதெல்லாம் தெரியும் பார்’ என்ற பந்தா இருந்தாலும், பார்ப்பனியம், ‘இந்து மத’ சிந்தனையில் முரண்பாடுகள் இல்லாத முழு சுப்பிரமணய பாரதியை நாம் ‘தரிசிக்க’ முடிகிறது.

இந்தியாவை ‘பாரதம்’ என்று சொல்வதிலேயே கவனமாக இருந்திருக்கிறார்.

‘இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தியாவில் இல்லையே’

-என்ற ஒரு இடத்தைத் தவிர – தன் கவிதைகள் எல்லாவற்றிலும் ‘பாரத தேசம் என்று தோள் கொட்டுவதி’லேயே குறியாக இருந்திருக்கிறார், ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியர். அதுவும் பாரதத்தில்  வாழ்கிற அனைவரும் ‘ஹிந்துக்கள்’ என்று அடையாள அட்டை வேறு வழங்குகிறார்.

‘பாரதம், பரதன் நிலை நாட்டியது, இந்த பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இந்நாட்டை இவன் ஒன்று சேர்ந்து, அதன் மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்தியபடியால், இந்த நாட்டிற்கு பாரத தேசம் என்று உருவாயிற்று’ என்று புளுகுகிறார் என்றால், அது மகாகவியை கேவலப்படுதியதாகும். அதனால் ‘வரலாற்று ஆதாரங்களை அள்ளித்தருகிறார்’ என்று நாம் புளுகி வைப்போம்.

-தொடரும்

இதன் முந்தைய பகுதிகளைப் படிக்க

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி

பாரதிக்கு முழுக்குப் போட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாராட்டுகள் (சி.பி.ஐ)

c-p-i.png

பார்ப்பன இந்து மனோபாவம் கொண்ட பாரதியை தமிழ்நாட்டில் முற்போக்காளராக அடையாளம் காட்டியதில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரும் பங்கு உண்டு’ என்று நான் 2000 ஆம் ஆண்டு ‘தலித் முரசு’ இதழில், ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ என்ற தலைப்பில் தொடராக எழுதியபோது, கம்யூனிஸ்ட் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன்.

பிறகு ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ புத்தகமாக வந்தபோது கம்யூனிஸ்ட் கட்சிகளின் கலை, இலக்கிய அமைப்புகளான அல்லது அவர்கள் பொறுப்பு வகிக்கிற, ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ ‘கலை இலக்கிய பெருமன்றம்’ இவைகள் எனக்கு எதிராக கண்டன கூட்டங்களையும் நடத்தின.

பாரதி பார்ப்பனர் என்பதாலேயே நான் திட்டமிட்டு, பாரதி மீது பழி சுமத்தியதாக அவர்கள் என்மீது பழி சுமத்தினர்.

பாரதி பார்ப்பனராக பிறந்தார் என்பதல்ல என் குற்றச்சாட்டு.
பாரதி பார்ப்பனராகவே வாழ்ந்தார், என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டல்ல, நிரூபணம்.

நான் நிரூபித்தப் பிறகும் கூட அவர்கள் தங்கள் பாரதி அபிமானத்தையோ, பாரதி விழாக்களையோ மாற்றிக் கொள்ளவுமில்லை, நிறுத்தவுமில்லை.
இவைகள் நடந்து ஆயிற்று ஆண்டுகள் ஏழு.

இந்த ஆண்டு பாரதி பிறந்த நாளான 11-12-2007 அன்று,  தோழர் தா. பாண்டியன் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாரதி விழாவை கொண்டாடவில்லை.
(12-12-2007 நாளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘ஜனசக்தி‘ நாளிதழில் அவர்கள் பாரதி விழா கொண்டாடியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.)

பாரதியார் பற்றிய அவர்களது இந்த மறுபரிசீலனை வரவேற்கத் தக்கது.
அதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்களுக்கு, நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
வே. மதிமாறன்

பாரதியின் பெண் விரோதம்

         -வே. மதிமாறன்

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ -3

book2.jpg 

முதல் அத்தியாயம்

மார்க்சியம் பெண்களுக்காகப் பேசவில்லை’

‘அம்பேத்கர் வெறும் ஜாதித் தலைவர்’

‘பெரியார் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதி’

‘இட்லர் வரிசையில் ஸ்டாலின்’

என்று அறிவுக் கொழுப்பெடுத்து அவதூறு அள்ளி வீசும் அறிஞர்கள்,

முரண்பாடுகளின் தொகுப்பான (‘இந்து மத’ கருத்துகளில் மட்டும் முரண்பாடில்லாத) ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியைப் பற்றி சொல்லும்போது மட்டும் – தன் கருத்துகளை எல்லாம் பாரதி தலையில் சுமத்தி –
‘அவரை இப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்’, ‘அப்படிப் பார்ப்பது பாரதியை புரிந்து கொள்ளாத வறட்டுத் தன்மை’ என்று சுப்பிரமணிய பாரதிக்கு கிரீடம் சூட்ட முயற்சித்து, நம்மைத் தெளிவாக குழப்புவார்கள் – குழப்புவதில் தெளிந்தவர்கள்.

தொடர்ச்சியான முரண்பாடு, அதுவே பாரதியின் தனித்துவம்.
முரண்பாடுக்கான காரணம், தான் சொல்லுகிற செய்தியில் அர்ப்பணிப்பின்மை; நம்பிக்கையின்மை (சமூக சீர்த்திருத்தக் கருத்துகளில் மட்டும்)
பெண்விடுதலை குறித்த தனிப்பாடல்களில், தனிக் கட்டுரைகளில் ஓ…. வென்று சப்தமிடும் சுப்பிரமணிய பாரதி-அதை தொடச்சியாக மற்ற பாடல்களில் கடைப்பிடிப்பதில்லை.

தீவிரவாத(?) இயக்கத்தில் பங்கு கொண்டு மிதவாதிகளின் உப்பு சத்தியாக்கிரகத்தை, அவர்களின் இயக்கத்தை கடுமையாகச் சாட வந்த பாரதி,

‘கண்கள் இரண்டிருந்தும காணுந்திறமையற்ற
பெண்களின் கூட்டமடி! கிளியே!
பேசிப் பயனென்னடி|? –
என்கிறார்,
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தியவர்.

சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்கு வீர உரை ஆற்றுவது போல் பாடல் அதில்,

‘வீரரைப் பெறாத மேன்மை தீர் மங்கையை
ஊரவர் மலடியென்றுரைத்திடு நாடு’
……………………………………………………………………………..
……………………………………………………………………………..

‘ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும்
விணில் இங்கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்’
……………………………………………………………………………..
……………………………………………………………………………..

‘பெண்மை கொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய்’
……………………………………………………………………………..
……………………………………………………………………………..

பெரும்படையுமாம் பெண்மையெங் கெய்தினை?’

-என்று பாரதியின் வாயால் சத்ரபதி சிவாஜி ‘ஆண்மையுரை‘ ஆற்றுகிறார்.

பாஞ்சாலி சபதத்தில், பெண்மைக்கு இழைக்கப்படும் தீங்கைக் கண்டு ‘கோ…’ வென்று கதறிக் கொண்டே வந்து, ‘பொம்பளைங்கள கேவலப்படுத்தறானுங்க பொட்டப்ப பசங்க’ என்கிற ரீதியில் –

நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்கு துணையாகுமோ?’
-என்று
‘சேம்சைடு கோல்’ போடுகிறார் சுப்பிரமணிய பாரதி.

‘2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பெண்களுக்கு எதிராக சிந்தித்து இருக்கிறார்’ என்று கோபப்படுகிற ‘ஞாநி’ கள், 80 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இப்படி முன்னுக்குப் பின் முரணாக இருந்திருக்றாரே என்று சந்தேகிப்பதுகூட இல்லை.
சுப்பிரமணி பாரதிக்கு மட்டும் இலக்கியத்தில் ‘இடஒதுக்கீடு’ போலும்.

 -தொடரும்

இதன் முந்தைய பகுதிகளைப் படிக்க

  பாரதி` ய ஜனதா பார்ட்டி

‘லாகிரி வஸ்து’

bharathi2.jpg

தன்னைப்
படிப்பவனை
வார்த்தைகளால்
வசியப்படுத்தி
அடிமையாக்கி
வைத்துக் கொள்ளும்
பாரதியின்
கவிதை என்னும்
‘லாகிரி வஸ்து’ விற்கு

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’
புத்தகத்தின் முதல் பக்கத்தில் இப்படிதான் எழுதியிருந்தேன்.

வே. மதிமாறன்

பார்ப்பனப் பெண்களுக்கு எதிரான சதி….

 

 

`பெண்ணைக் கேவலப்படுத்தியப் பார்ப்பனியம்….என்று சொல்லியிருக்கிறீர்களே, மற்ற ஜாதிக்காரர்கள் எல்லாம் தங்கள் பெண்களை மரியாதையாக நடத்தினார்களா?

கோபிகா

burning_of_a_widow1.jpg

ல்லை. ஆனால் மற்ற ஜாதிக்காரர்களை விட தங்கள் ஜாதி பெண்களை மிக மோசமான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியவர்கள் பார்ப்பனர்கள்.

 சிறுமிகளை அல்லது இளம் பெண்களை வயதான ஆண்களுக்கு முறைப்படி  திருமணம் முடித்துக் கொடுப்பதை சாதாரண நிகழ்வாக கொண்டிருந்த சமூகம் அது.

அந்த பால்ய விவாகத்தின் மிச்ச சொச்ச பழக்கமாகத்தான் இன்றும் அவர்களின் திருமண முறையில் வளர்ந்த பெண்ணை தந்தை தன் மடியில் வைத்து தாரைவார்க்கிறார்‘.

(சிறுமியாக இருக்கும் `மணப்பெண்மணப்பந்தலில் அமராமல் எழுந்து ஓடிவிடும் என்பதால் ஏற்பட்ட பழக்கம் அது)

lk02.jpg

கணவன் இறந்தபிறகு மனைவியை பிணத்தோடு உடன் வைத்து எரிக்கிற பழக்கம், பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டப் பிறகு, கணவனை இழந்த இளம் பெண்கள் அடுத்த ஆண்களின் பார்வைக்கு அசிங்கமாக தெரியவேண்டும் என்பதற்காக- மொட்டை அடித்து, காவிதுணி கொடுத்து, பெண்களை அவமானப்படுத்திய ஒரே சமூகம் பார்ப்பன சமூகம்தான்.

அதற்கு ஒரே ஒரு காரணம், வேறு ஜாதி ஆண்களின் கலப்பு தன் ஜாதிக்குள் நடந்து விடக்கூடாது என்பதுதான்.

இளம் விதவைகளை தன் பாலியல் வக்கிரங்களுக்கு பயன்படுத்திக் கொண்டு, அவர்களை கங்கையில் அமுக்கி கொன்றதும் பார்ப்பன சமூகம்தான்.

அதனால்தான் கங்கையில் போய் (காசி) இறப்பது புனிதம் என்கிற பொய் இன்றுவரை நிலைத்து நிற்கிறது.

கங்கை என்கிற அந்த நதி, இன்னும் வற்றாமல் ஓடிக் கொண்டிருப்பதிற்குக் காரணம், அதில் அமுக்கிக் கொல்லப்பட்ட பார்ப்பன இளம் விதவைகளின் கண்ணீரால்தான் என்றால் அது மிகையாகாது.

hindu1.jpg

அந்தக் கொடுமைகளைதான் வாட்டர்என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க தீபா மேத்தா முயற்சித்திபோது, கடுமையாக கண்டிக்கப்பட்டார்.

அதேபோல்,  வரதட்சணை என்கிற சமூக அவலத்தை, பிற சமூகத்தினர், பார்ப்பனச் சமூகத்திடம் இருந்தே கற்றுக் கொண்டனர்.

பெண் பார்க்கும் படலம்என்பதை ஒரு நிகழ்ச்சியாக, `பெண்ணுக்கு பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா?` என்று இன்றுவரை அந்த அநாகரிகத்தை தீவிரமாக கடைபிடிக்கும் சமூகமும் அதுவே.

இன்றுகூட பார்ப்பன எழுத்தாளர்கள் மூலம் – நாவல், நாடகம், திரைப்படம் வழியாக பெண் பார்க்கும் படலமும், “ஆடத் தெரியுமா, பாடத் தெரியுமா?” `பஜ்ஜி, சொஜ்ஜி`  போன்ற கலாச்சார சீர்கேடுகளும் ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளம் போன்று கற்பிக்கப்பட்டு மற்ற சமூகங்களுக்கும், பெண்களுக்கு எதிரான அந்த சீர்கேடுகள் பரவிக் கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

 

வே. மதிமாறன்

8-12-2007

வே.மதிமாறனிடம் கேளுங்கள்

அப்படி என்ன பொல்லாத பாரதியின் காலம்? – 2

(பாரதியார் பற்றிய ஆய்வு)

`பாரதி` ய ஜனதா பார்ட்டி2

  bharti-image1.jpg

பிரிடடிஷ்காரனின் தாய் மொழி, தந்தை மொழி இரண்டுமே ஆங்கிலம்தான். அதன் பொருட்டேதான் பார்ப்பனர்களுக்கு, `சில்வர் டங்க்`  முளைத்தது. இரண்டாம் உலகப் போரின் போது இட்லர் வெற்றி பெற்று விடுவான் என்று நம்பி பார்ப்பனர்கள் ஜெர்மன் படிக்க ஆரம்பித்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

னது சனாதனதர்மங்களோடே முதலாளித்துவத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட பார்ப்பனர்கள், தனது ஜாதிக்குள் எந்த சீர்திருத்தக் கருத்துகளையும் அறிவிக்காமல், சுற்றிக்கை விடாமல் குடுமியில் இருந்து கிராப்புக்கு மாறினார்கள்; மீசை வளர்த்துக் கொண்டார்கள்; சிரைத்துக் கொண்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, தன் குலப் பெண்களுக்கு கல்வியை தீவிரமாகக் கற்பிக்க ஆரம்பித்தார்கள்.

இப்படியாக ஆண்களூம், பெண்களூம் அரசு உத்தியோகம் பார்க்கத் தயாரானார்கள்.

கணவனை இழந்த பெண்களை மொட்டை அடித்து, முக்காடு போட்டு மூலையில் உக்காத்தி வைச்ச பார்ப்பனியம், உடல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் மாத சுழற்சியை தீட்டுஎன்று சொல்லி அவளை அந்த மூன்று நாளும் வீட்டுக்கு வெளியே ஒதுக்கி வைத்து, அவள் மீது தீண்டாமையை அனுஷ்டித்து பெண்ணைக் கேவலப்படுத்திய பார்ப்பனியம், எந்த அறிவிப்பும் இன்றி, அந்தக் கொடுமைகளைத் தன் ஜாதிக்குள் முற்றிலுமாக ஒழித்துக் கொண்டது.

இது, முதலாளித்துவ தாக்கத்தால் அன்றி வேறு எதனால்?

இப்படி பார்ப்பன ஜாதிக்குள் கல்வி கட்டாயமக்கப்பட்ட சூழ்நிலையிலேயே பாரதி – சமூக சீர்திருத்தம், பெண்கல்வி குறித்துப் பாடுகிறார்.

இது பாரதியிடம் மட்டும் நிகழ்ந்த மாற்றமல்ல, ஒட்டுமொத்தப் பார்ப்பன சமூகத்திலேயே நிகழ்ந்த மாற்றம்.

தன் நலனில் அக்கறை கொண்டு ஆங்கிலக் கல்வி கற்ற பார்ப்பனியம், வழக்கம்போல் அந்தக் கல்வியையும் அடுத்தவற் கற்காமல் இருப்பதற்கு, அனைத்துத் தடைகளையும் விதித்தது.

(மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வில் சமஸ்கிருதம் ஒரு பாடமாக இருந்தது. பின்னர் வந்த நீதிக்கட்சி அரசு (பனகல் அரசர்) அதை நீக்கியது.)

அதையும் மீறி படித்தவர்களின் புகழை மறைத்தது.

ஆம், இதை முதலாளித்துவ வடிவம் பெற்ற சனாதன தர்மம் எனலாம்.

முதலாளித்துவ வடிவம் பெற்ற இந்த சனாதன பாணி முற்போக்கு, பாரதியிடமும் இருந்தது. பெண் கல்வி குறித்து, வீரவேஷம் கடடிப் பாட்டுப் பாடிய பாரதி, மிகவும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து  பல சிரமங்களுக்கிடையே படித்து 1912 ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைப்பற்றி, ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடவில்லை.

அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் சுயநினைவோடுதான் வாழ்ந்தார் பாரதி.

dr-muthulakshmi_reddi1.jpg

வேத, புராணக் காலத்துப் பெண்களின் புகழ், வெளிநாட்டு பெண்களின் புகழ் குறித்தெல்லாம் விரல் நுனியில் தகவல் வைத்திருந்த பாரதிக்கு, தான் வாழ்ந்த ஊரிலேயே வாழ்ந்த, ஒரு தமிழச்சியின் சாதனை தெரியாமல் போனது ஏன்? இதுதான் செலக்டிவ் அம்னீஷியாவோ?’

ஆம், முத்துலட்சுமி அம்மையார், பாரதி பரம்பரையினரால் கல்வி மறுக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்.

நிற்க.

தொடர் கட்டுரையாக எழுதும்போது, இந்துத்துவா என்று குறிப்பிட்டிருந்தேன்.

இந்த இந்துத்துவா என்கிற வார்த்தை இந்த மதத்தைப் பாதுகாப்பது போலவும், ‘இந்துத்துவாதான் மோசமானது இந்து மதம் மிகவும் நல்லதுஎன்பது போன்ற அர்த்தத்தைத் தருவதாகவும் எனக்குப்பட்டதால், இந்துத்துவா என்கிற வார்த்தையை இந்து மதம் என்று மாற்றிக் குறிப்பிட்டிருக்கேறன்.

                                                                                                                                                                                                              

தோழமையுடன்

                                                                                                                                                                                                                வே. மதிமாறன்

டிசம்பர் 2002

`பாரதி` ய ஜனதா பார்ட்டி` நூலின் முதல் பதிப்புக்கான முன்னுரையில்

                                                                                                                                                                                                                                                                                                                                                            -தொடரும்

இதன் முந்தைய பகுதியை படிக்க         பாரதி` ய ஜனதா பார்ட்டி