ஈவ்டீசிங்

hindu-women.jpg

ச்சீ..

பொம்பளைங்க

நிம்மதியா வெளியே

போயிட்டு வரமுடியுதா?

குறுக்க வந்த

ஆபாசமா பேசுறான்.

பின்னால வந்து

துணிய புடிச்சு இழுக்கிறான்.

கூட்டத்துல உரசுறான்

ஆம்பிளைக்கு

இதுதான் அழகுன்னு நினைப்புப் போல

ரொம்ப பொறுக்கித்தனமா போச்சு நாடு”

  

பெண்களுக்கு எதிரான

வன்கொடுமைகளைக் கண்டித்து

காலையில் பக்கத்து விட்டு

பாபு அம்மாவிடம்

ஆவேசப்பட்ட

அம்பிகா அத்தைதான்

மாலை வீட்டில்

டீ.வியின் முன்

பவ்யமாக அமர்ந்து

குகி. கூவமின்

ஆன்மீக அருளுரை

கேட்டுக் கொண்டிருந்தாள்

   

என்ன பண்ணார் தெரியுமோ

நம்ம கிருஷ்ணர்,

பெண்கள் குளிச்சிண்டுருந்த

குளத்துக்குப் போய்

அவா துணியெல்லாம்

தூக்கிண்டு ஓடியாந்துட்டார்.

  

அதேபோல் நம்ம கந்தனும்

மாறுவேஷம் போட்டுண்டு

அவா அண்ணா

விநாயகர் உதவியோட

வள்ளியை

ஓட, ஓட

விரட்டி, விரட்டி

காதல் பண்ணார்.

  

நம்ம பகவான்களுக்கு

மானிட பெண்களோடு

விளையாடுறதுல தனி குஷி”

 

கேட்டுக் கொண்டிருந்த

மாதர் சங்க பொறுப்பாளர்

அம்பிகா அத்தை முகத்தில்

பக்தி கலந்த பூரிப்பிருந்தது.

     

வே. மதிமாறன்

2002 ல் தலித் முரசு இதழில் எழுதியது.

4 thoughts on “ஈவ்டீசிங்

 1. Ayya
  Your kavithai implies as if only Tamil Brahmin women(or the community as a whole) in Tamil Nadu are religious Hindus.I do not think this is true.All communities in Tamil Nadu have contributed to Hindu religion and every community follows the religious customs in its own way.You are re-inforcing a (outdated) image that only brahmins are the “protectors of Hinduism”.If you take the case of Allwars and Nayanmars,only few among them are Tamil brahmins.

 2. அப்படித்தான் மதிமாறன் எண்ணிக்கொண்டிருக்கிறார்.அவர் ஆன்மிகத்தையும் ஜாதி,மததையும் மிகவும் குழப்பிக்கொள்கிறார். இன்றைய சூழலில் பிரமணரை விட பிரதோஷதன்று போய் ஒரு சிவன் கொவிலில் பாருங்கள். பிரமணர் அல்லாத நமது மற்ற ஜாதிகளைச்சேர்ந்த இந்துக்கள் நிற்காகூட இடமில்லாமல் கூட்டமாக‌ பிரார்தனை செய்கிறார்கள்.
  இன்னும் சொல்லப்போனால் பிராமணர்கள் அந்த ஆன்மீகத்தை விட்டு விட்டார்கள் .
  நம்ம மதிமாற‌ன் 50 வருடங்களுக்கு முன்னால் நடந்ததைப் பேசிக்கொண்டிருக்கிறார்.
  ஐம்பது வருடங்களுக்கு முன்பு கூட பிரமணர் அல்லாதோரும் கோவில்களில் வழிபாடு செய்வதை நான் அதிகமாகப் பார்த்திருக்கிறேன். மதிமாறனின் எழுத்து புரியவேயில்லை எனக்கு.practical ஆக இல்லை.
  அன்புடன் கமலா

 3. அருமையான கவிதை இந்த கவிதை புரியாதவர்களுக்கு ஒன்று சொல்கிறேன் மதம் மனிதனை மிருகமாக்கும்! சாதி மனிதனை சாக்கடையாக்கும்!

Leave a Reply

%d bloggers like this: