`பாரதி` ய ஜனதா பார்ட்டி

(பாரதியார் பற்றியான ஆய்வு)

அப்படியென்ன பொல்லாத பாரதியின் காலம்..?

வே. மதிமாறன்

 

bharathi1.jpg 

 

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த துணைக் கண்டத்தில் இருந்தபோது, நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன.
அதில் முக்கியமான இரண்டு,

1. இந்தியா என்ற ஒரு நாடு உருவானது.

2. இந்த இந்தியச் சமூகம், நிலப்பிரபுத்துத்திலிருந்து முதலாளித்துவ சமூகமாக மாறும் முயற்சியில் இறங்கியது. ஏறக்குறைய மாறியது.

இதில் மிகக் குறிப்பாக இந்தியாவின் நகரங்கள், செழிப்பான பகுதிகள் முதலாளித்துவ முகம் பெறலாயின. இந்த நகரங்களிலும், செழிப்பான பகுதிகளிலும் வாழ்ந்த – இந்திய மன்னர்கள், செல்வந்தர்கள், பார்ப்பனர்கள் இவர்களுக்கு நிலப்பிரபுத்துவ தோல் உறிந்து, முதலாளித்துவ தோல் வளர ஆரம்பித்தது.

மன்னர்களும், செல்வந்தர்களும் கள்ளுப் பானையிலிருந்து – விஸ்கி பாட்டிலுக்கு மாறினார்கள். முதலாளித்துவ `சொகுசு` தன் மீது படரும் வரை பொறுமையாக அமைதி காத்தார்கள்.

ஆனால், பார்ப்பனர்கள் முதலாளித்துவம் தம்மை வந்து அடையும்வரை காத்திருக்க அவர்களுக்குப் பொறுமை இல்லை அல்லது பொறுமையாக இருந்தால், ‘வேலைக்காகாது’ என்ற காரணத்தால், முதலாளித்துவத்தை தன் இரண்டு கைகளையும் நீட்டி அன்போடு, `வருக, வருக` என்று வரவேற்றபடி, அதிவேக வாகனத்தில் ஏறி, முதலாளித்துவத்திடம் முதலில் சென்றடைந்தார்கள்.

மன்னர்களிடம் இருந்த தனது மரியாதைக்குரிய புரோக்கர் பணியை அல்லது ஆலோசனை வழங்கும் பணியை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குத் தானாகவே `பணி மாற்றம்` செய்து கொண்டார்கள்.

ஆம்,

மன்னர்களிடம், மன்னர்களுக்குக் கீழ் ராஜ குருவாக, ஆலோசகராக இருந்த பார்ப்பனர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வருகைக்குப் பிறகு மன்னர்களைவிடவும் அதிக எல்லைகளைக் கொண்ட பகுதிகளை ஆண்டார்கள். மன்னர்கள் மண்ணைக் கவ்வினார்கள்.

ஏகாதிபத்தியம் கொண்டு வந்த முதலாளித்துவத்தை அடைய பார்ப்பனர்கள் ஏறிய அதி வேக வாகனம் எது தெரியுமா?

ஆங்கிலம்.

சமஸ்கிருதம் தெரியாத பார்ப்பனர்களைக் கூட நிறைய பார்க்கலாம். ஆனால், ஆங்கிலம் தெரியாத பார்ப்பனர்களைப் பார்ப்பது அரிது, அரிது பார்ப்பதரிது.

ஆங்கிலத்தின் மீதான இந்த அன்பு, அந்த மொழியின் மீது ஏற்பட்ட காதலா?

ஆம். அவர்கள் அப்படியும் சொல்லிக் கொள்கிறார்கள்.

பிரிடடிஷ்காரனின் தாய் மொழி, தந்தை மொழி இரண்டுமே ஆங்கிலம்தான். அதன் பொருட்டேதான் பார்ப்பனர்களுக்கு, `சில்வர் டங்க்`  முளைத்தது.

இரண்டாம் உலகப் போரின் போது இட்லர் வெற்றி பெற்று விடுவான் என்று நம்பி பார்ப்பனர்கள் ஜெர்மன் படிக்க ஆரம்பித்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

…..தொடரும்

5 thoughts on “`பாரதி` ய ஜனதா பார்ட்டி

 1. தொடரட்டும் பாரதியின் உண்மை முகம் தெரியட்டும்……

 2. மதிமாறன்,

  கடந்த வருடம் விடுமுறைக்கு வந்த போது பாரதி எழுதிய கட்டுரைகள் தொகுப்பில் சிலவற்றை படித்தேன். அது சிறுவயது முதல் அறிந்து வைத்திருந்த பாரதி பற்றிய கேள்வியை எழுப்ப வைத்தது. தோழர் அசுரன் அவர்களது பதிவு வழியாக பாரதி பற்றிய பற்றிய உங்களது புத்தகம் அறிமுகமானது. இன்று தான் சென்னையிலிருந்து வந்த நண்பர் வழியாக உங்களது புத்தகம் வந்து சேர்ந்தது. படித்த பின்னர் கருத்துக்களை பதிவேன்.

  பாரதி பற்றிய ஆய்வை தொடர்ந்து எழுதுங்கள். புத்தகம் கிடைக்காதவர்களுக்கு பாரதி பற்றி அறிய உதவும்.

 3. வேட்டி கட்டிய தமிழ் கும்பலிலிருந்து ஒரு கனிமொழி ஆங்கிலம் பேசமுடியும் என்ற காரணத்திற்காக (அந்த ஒரு காரணத்திற்காக மட்டும்)ஒரு குடும்பத்தின் வாரிசு அரசியலுக்காக டெல்லி போகலாம் ஆனால் சில்வெர் டங்கு ஸ்ரீனிவாசன் உங்களுக்கு கசக்கிறாரக்கும்‌. மனித உரிமைகளையும் , பெண்ணியத்தையும்,சமுதாய ஒருமைபாட்டையும் எப்போதும் வலியுறுத்திய, நாற்பது வயதுக்குள் ஒரு பதவி ஆசையும் இல்லாமல் இறந்து போன பாரதியையே எப்பவும் குற்றம் காணும் நீங்கள் தமிழ் பற்று உள்ளவர் என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.பார்ப்பன வெறுப்புதான் மிஞ்சி நிற்கிறதே தவிர உங்கள் எழுத்துக்களில் கொஞ்சம்கூட தமிழ் பற்றைப் பார்க்க (உணர)முடியவில்லை.
  மிக அதிகமான கொபத்துடன்

  கமலா

 4. பாரதியையே எப்பவும் குற்றம் காணும் நீங்கள் தமிழ் பற்று உள்ளவர் என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.//

  பாரதி அதிக சாதனை பன்னிவிட்டார் வந்துடாங்க…

  சாதிய ஒழிக்க பாடினார் சரி யார்கிட்ட பாடினார்…

  காளி,மாரி அவங்ககிட்ட வரங்களை கேட்டுகொண்டு இருந்தார்!

Leave a Reply

%d bloggers like this: