இரண்டாயிரம் ஆண்டுகளின் விஸ்வரூபம் டாக்டர் அம்பேத்கர்

இந்தியாவின் மிக சிறந்த அறிவு ஜீவி என்று நீங்கள் யாரை சொல்வீர்கள்?

நா.சுந்தரன்,கோவை. 

ambedkar.jpg

டாக்டர் அம்பேத்கரை. இரண்டாயிரம் ஆண்டுகளில் இன்றுவரை இப்படி ஒரு அறிவாளியை இந்தியா கண்டதில்லை.

அவரின் பார்ப்பன எதிர்ப்பு. இந்து மத எதிர்ப்பு இவைகளுக்காக மட்டும் சொல்லவில்லை. விஷயங்களை அவர் அலசி ஆராய்கிற முறை, அந்த தர்க்கம் அலாதியானது. உலகத் தரம் வாய்ந்தது.

விவாதங்களில் எதிரிகளை மிகச் சரியாக கணித்து, மிகச் சிறப்பான தயாரிப்புகளோடு லாவகமான வார்த்தைகளால் அவர்களை தகர்த்தெறிகிற அம்பேத்கரின் முறை அழகோ அழகு.

பார்ப்பனப் பெண்கள் உட்பட இந்தியப் பெண்களுக்கு இன்று இந்துச் சட்டத் திருத்தத்தின் மூலம் கிடைத்திருக்கின்ற குறைந்தபட்ச பாதுகாப்பே அம்பேத்கர் போராடி பெற்று தந்தது தான்.

பெண்களுக்கான சொத்துரிமை, விவாகரத்து, ஜீவனாம்சம், ஒரு தார மணம், வன்கொடுமைகளுக்குத் தண்டனை இவைகளை சட்டமாக்க அவர் பட்ட சிரமமும், அவமானமும் அதிகம்.

அந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்ட பார்ப்பனர்கள், பண்ணையார்கள், பிரபுக்கள், ராஜாக்களிடையே அம்பேத்கர் பாய்ந்தும், பதுங்கியும் நடத்திய விவாதம் ஒரு ராஜ தந்திரம் தான். (நம்ம ஊர்ல இருந்து போன பட்டாபி சீதாராமய்யர், .வி.அளகேசன், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்ற ஜாதி வெறி பிடித்த, பெண்களுக்கு எதிரான கருத்துக் கொண்ட லூசுகளும் அதில் உள்ளடக்கம்.)

ambedkar1.gif

அதேபோல் வட்டமேசை மாநாட்டில் அவர் தனிநபராக இருக்க, காந்தி உட்பட எதிரிகளை அம்பேத்கர் தன் வாதங்களால் தூக்கிப் போட்டு பந்தாடிய முறையை, படிக்க படிக்க பரவசமூட்டும்.

அது ஆயிரம் ஆண்டு கோபம். விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்றானாமே சிவன், அதை விட உயரம், வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரின் விஸ்வரூபம்.

வே. மதிமாறன்

மே 2007 சமூக விழிப்புணர்வு

வே.மதிமாறனிடம் கேளுங்கள்

7 thoughts on “இரண்டாயிரம் ஆண்டுகளின் விஸ்வரூபம் டாக்டர் அம்பேத்கர்

 1. “பார்ப்பனப் பெண்கள் உட்பட இந்தியப் பெண்களுக்கு இன்று இந்துச் சட்டத் திருத்தத்தின் மூலம் ”

  முதலியார், செட்டியார், நாடார் பெண்கள் உட்பட்ட என்று திருத்தி எழுதுங்கள். எல்லாவற்றிலும் ஜாதி பார்க்கிற நீங்கள் அப்படித்தான் எழுத வேண்டும்.இந்தியப்பெண்களில் எல்லா பெண்களும் அடக்கம் என்ற சின்ன விஷயம்கூட மனதில் ஓடாதது உங்கள் ஜாதி வெறியைக் குறிக்கிறது!
  பெண்கள் மிகவும் மூன்னெறி விட்டோம் ,ஆண்கள்தான் தடுமாறுகிறீர்கள்.
  முன்னேறுகிற வழியைப்பாருங்கள்.

 2. நன்றாக சொன்னீர்கள் இன்னும் ஒரு மாபெரும் தலைவரை ஒரு சாதி கட்சி தலைவராக ஆக்கிவிட்டார்கள்,இந்த பாப்பன அரசியல்வாதிகள்

 3. @kalyanakamala
  முன்னேறுகிற வழியைப்பாருங்கள்.//

  அவரின் எழுத்து நடை நல்லமுறையில் தான் இருக்கிறது..

  பெண்கள் மிகவும் மூன்னெறி விட்டோம் ,ஆண்கள்தான் தடுமாறுகிறீர்கள்.//

  அப்படியா!!! அப்ப இந்த 33சதவீதம் சதவீதம்னு சொல்றாங்களே அத வாங்கிட்டீங்களா?

  உங்கள் பார்பன குடிமிகளிடம் சொல்லுங்க இன்னும் எத்தனை வருத்துக்கு 33சதவீதம் இந்த மசோதவ நிறைவேத்துவோம்னு பீளாவிடுவதை நிறுத்த சொல்லுங்க……

 4. நீங்கள் 33%பற்றிப் பேசுகிறீர்கள். இன்றைய நிலையோ 100 பையன்கள் படித்தால் 110 பெண்கள் படித்து விடுகிறார்கள்.ஆண்கள் 60%பாஸ் பண்ணினால் பெண்கள் 70%பாஸ் பண்ணுகிறார்கள். இந்த 33சதவீதக் கணக்கெல்லாம் வர‌போது வரட்டும் இல்லாவிட்டல் போகட்டும் என்று நாங்கள் முயற்சியையே முன்னுக்கு வைத்து நிறைய சாதித்துக்கொன்டுதான் இருக்கிறோம் . 33%எல்லாம் அரசியல் கட்சிகள் ஓட்டு வாங்குவதற்கு
  போடுகிற கணக்குகள் (உங்கள் பாஷையில் பீளா)என்றும், உண்மை கசக்கும் என்பதும் எங்களுக்கும் புரிகிறது. குடுமியும் வேன்டம் ஒண்ணும் வேண்டாம். முயற்சி ஒன்றே போதும்.
  அன்புடன் கமலா

 5. படித்து பாஸ் பன்னா மட்டும் போதாது கமலா மேடம்!!! ஒட்டு மொத்த அதிகாரத்தையும் அரசியல் தான் தீர்மானிக்குது அது தெரியாத உங்களுக்கு!!

  உங்க குடிமிகள் தான் மேடம் பீளாவிடுவாங்க……

 6. அதுதான் கனி மொழி அரசியல்ல வந்துட்டாங்களே!இனிமேல் நீங்க‌ நினைச்சாப்ப்போல பெண்களுக்கு எல்லாம் கிடைத்தால் நல்லதுதான்.குடுமிகள் இல்லாம குடுமிப்பிடி சண்டை யில்லாம அவங்க எல்லாத்தையும் பண்ணட்டும்.
  !அன்புடன் கமலா

 7. “அது ஆயிரம் ஆண்டு கோபம். விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்றானாமே சிவன், அதை விட உயரம், வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரின் விஸ்வரூபம்”

  இந்த வார்த்தைகள் உண்மை! ஒரு வழக்கிற்காக, அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் விவாதங்களை படிக்க நேர்ந்தது…அப்பொழுதுதான், ‘அம்பேத்கரா அரசியலமைப்புச் சட்டத்தையா எழுதினார், அந்தக் குழுவிற்கு தலைவர்தானே’ என்றுதான் அவரைப் பற்றி மற்றவர்கள் பேசக்கேட்டிருந்த எனக்கு…முதன் முறையாக அவரது மேதமை புரிந்தது. அவரது தெளிவான, ஆரவராமற்ற கருத்துகளின் முன்னர் குழுவின் உறுப்பினர்களாயிருந்த எவரும் அருகில் கூட வர இயலாத தூரத்தில் இருந்தது புரியும்.

  இந்தியாவில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள ஒரு மேதை அம்பேத்கர் என்றால் அது சரிதான்!

Leave a Reply

%d