அப்படி என்ன பொல்லாத பாரதியின் காலம்? – 2
`பாரதி` ய ஜனதா பார்ட்டி – 2
பிரிடடிஷ்காரனின் தாய் மொழி, தந்தை மொழி இரண்டுமே ஆங்கிலம்தான். அதன் பொருட்டேதான் பார்ப்பனர்களுக்கு, `சில்வர் டங்க்` முளைத்தது. இரண்டாம் உலகப் போரின் போது இட்லர் வெற்றி பெற்று விடுவான் என்று நம்பி பார்ப்பனர்கள் ஜெர்மன் படிக்க ஆரம்பித்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
தனது சனாதனதர்மங்களோடே முதலாளித்துவத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட பார்ப்பனர்கள், தனது ஜாதிக்குள் எந்த சீர்திருத்தக் கருத்துகளையும் அறிவிக்காமல், சுற்றிக்கை விடாமல் குடுமியில் இருந்து கிராப்புக்கு மாறினார்கள்; மீசை வளர்த்துக் கொண்டார்கள்; சிரைத்துக் கொண்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, தன் குலப் பெண்களுக்கு கல்வியை தீவிரமாகக் கற்பிக்க ஆரம்பித்தார்கள்.
இப்படியாக ஆண்களூம், பெண்களூம் அரசு உத்தியோகம் பார்க்கத் தயாரானார்கள்.
கணவனை இழந்த பெண்களை மொட்டை அடித்து, முக்காடு போட்டு மூலையில் ‘உக்காத்தி வைச்ச‘ பார்ப்பனியம், உடல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் மாத சுழற்சியை ‘தீட்டு‘ என்று சொல்லி அவளை அந்த மூன்று நாளும் வீட்டுக்கு வெளியே ஒதுக்கி வைத்து, அவள் மீது தீண்டாமையை அனுஷ்டித்து பெண்ணைக் கேவலப்படுத்திய பார்ப்பனியம், எந்த அறிவிப்பும் இன்றி, அந்தக் கொடுமைகளைத் தன் ஜாதிக்குள் முற்றிலுமாக ஒழித்துக் கொண்டது.
இது, முதலாளித்துவ தாக்கத்தால் அன்றி வேறு எதனால்?
இப்படி பார்ப்பன ஜாதிக்குள் கல்வி கட்டாயமக்கப்பட்ட சூழ்நிலையிலேயே பாரதி – சமூக சீர்திருத்தம், பெண்கல்வி குறித்துப் பாடுகிறார்.
இது பாரதியிடம் மட்டும் நிகழ்ந்த மாற்றமல்ல, ஒட்டுமொத்தப் பார்ப்பன சமூகத்திலேயே நிகழ்ந்த மாற்றம்.
தன் நலனில் அக்கறை கொண்டு ஆங்கிலக் கல்வி கற்ற பார்ப்பனியம், வழக்கம்போல் அந்தக் கல்வியையும் அடுத்தவற் கற்காமல் இருப்பதற்கு, அனைத்துத் தடைகளையும் விதித்தது.
(மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வில் சமஸ்கிருதம் ஒரு பாடமாக இருந்தது. பின்னர் வந்த நீதிக்கட்சி அரசு (பனகல் அரசர்) அதை நீக்கியது.)
அதையும் மீறி படித்தவர்களின் புகழை மறைத்தது.
ஆம், இதை முதலாளித்துவ வடிவம் பெற்ற சனாதன தர்மம் எனலாம்.
முதலாளித்துவ வடிவம் பெற்ற இந்த சனாதன பாணி முற்போக்கு, பாரதியிடமும் இருந்தது. பெண் கல்வி குறித்து, வீரவேஷம் கடடிப் பாட்டுப் பாடிய பாரதி, மிகவும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து பல சிரமங்களுக்கிடையே படித்து 1912 ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரைப்பற்றி, ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடவில்லை.
அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் சுயநினைவோடுதான் வாழ்ந்தார் பாரதி.
வேத, புராணக் காலத்துப் பெண்களின் புகழ், வெளிநாட்டு பெண்களின் புகழ் குறித்தெல்லாம் விரல் நுனியில் தகவல் வைத்திருந்த பாரதிக்கு, தான் வாழ்ந்த ஊரிலேயே வாழ்ந்த, ஒரு தமிழச்சியின் சாதனை தெரியாமல் போனது ஏன்? இதுதான் ‘செலக்டிவ் அம்னீஷியாவோ?’
ஆம், முத்துலட்சுமி அம்மையார், பாரதி பரம்பரையினரால் கல்வி மறுக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்.
நிற்க.
தொடர் கட்டுரையாக எழுதும்போது, ‘இந்துத்துவா‘ என்று குறிப்பிட்டிருந்தேன்.
இந்த ‘இந்துத்துவா‘ என்கிற வார்த்தை இந்த மதத்தைப் பாதுகாப்பது போலவும், ‘இந்துத்துவாதான் மோசமானது இந்து மதம் மிகவும் நல்லது‘ என்பது போன்ற அர்த்தத்தைத் தருவதாகவும் எனக்குப்பட்டதால், ‘இந்துத்துவா‘ என்கிற வார்த்தையை ‘இந்து மதம்‘ என்று மாற்றிக் குறிப்பிட்டிருக்கேறன்.
தோழமையுடன்
வே. மதிமாறன்
டிசம்பர் 2002
`பாரதி` ய ஜனதா பார்ட்டி` நூலின் முதல் பதிப்புக்கான முன்னுரையில்
– -தொடரும்
இதன் முந்தைய பகுதியை படிக்க பாரதி` ய ஜனதா பார்ட்டி
கணவனை இழந்த பெண்களை மொட்டை அடித்து, முக்காடு போட்டு மூலையில் ‘உக்காத்தி வைச்ச‘ பார்ப்பனியம், உடல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் மாத சுழற்சியை ‘தீட்டு‘ என்று சொல்லி அவளை அந்த மூன்று நாளும் வீட்டுக்கு வெளியே ஒதுக்கி வைத்து, அவள் மீது தீண்டாமையை அனுஷ்டித்து பெண்ணைக் கேவலப்படுத்திய பார்ப்பனியம், எந்த அறிவிப்பும் இன்றி, அந்தக் கொடுமைகளைத் தன் ஜாதிக்குள் முற்றிலுமாக ஒழித்துக் கொண்டது.
மற்ற ஜாதியினர் மறு மணம் செய்து வைத்தார்களா?மற்ற ஜாதியினர் மூலையில் தீட்டு என்று ஒதுக்கிவைக்காமல் இருந்தார்களா?பார்ப்பனர்கள் மட்டும்தான் செய்கிறார்களா? பேதமையைக்கொஞ்சம் விட்டு வெளியே வாருங்கள் மதிமாறன்.
என்னைப் பொறுத்தவரை எல்லா இனத்தவரும் பின்பற்றிய முறைகள் அவை. காலம் மலையேறி நம்ம பெண்கள்தான் தன்பிள்ளைக்கு அப்பன் யார் என்று தெரியாத நிலைக்கு முன்னேறி விட்டார்களே? நட்டநடு ராத்திரியில் மவுண்டு ரோடில் சுற்றிக்கொன்டிருக்கிறார்களே. நல்ல சீர்திருத்தம்தான் வந்து விட்டதே?மறு கல்யானம் பண்ணிக்கொண்டு அவன் பிள்ளைகளும், அவள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளுடன் விளையாடும் கலாசாரம்தானே நீங்கள் வேன்டியது. கிடைத்து விட்டது நீங்கள் வேன்டிய கலாசாரம்.அதுதான் தமிழ் கலசாரம் என்றால் மனதார ஒத்துக்கொள்கிறொம்.
உங்கள் வயது என் அனுபவமாக இருக்கும். நானும் சீர்திருத்த பெண்ணிய வாதிதான்.
ஆனால் ஆணோ பெண்ணோ குடியைக் கெடுக்கக்கூடாது.
அன்புடன்
கமலா
முத்துலட்சுமி அம்மாளும் உங்களைப்போல் யாரையாவது திட்டிக்கொன்டிராமல் முயற்சி எடுத்துப் படிதார்களே.இல்லாவிட்டால் திட்டிவிட்டு செத்துப்போயிருப்பார் இன்னேரம். நீங்கள் உதாரணம் காட்டக்கூட ஆள் இருந்திருக்காது இன்னேரம். அந்த காலத்திலும் முயற்சி எடுத்து முன்னேறியவர்கள்தான் முன்னுக்கு வந்தார்கள். பிராமணர் உட்பட.மற்றவரைக்குற்றம் சொல்லிக்கொன்டு உட்கார்ந்திருந்த பல பிராமணர்கள் இன்னும் சேரிகளில் வாழ்கிறார்கள்.
அன்புடன்
கமலா
அசத்தல் போங்க….
பல பிராமணர்கள் இன்னும் சேரிகளில் வாழ்கிறார்கள்.
அன்புடன்
கமலா//
அய்யோ அயோ… ஒன்னும் தெரியாத பாப்பானு சொல்லுவாங்க அது நீங்கதான் போல
முத்துலட்சுமி அம்மாளும் உங்களைப்போல் யாரையாவது திட்டிக்கொன்டிராமல் முயற்சி எடுத்துப் படிதார்களே.//
நீங்க நல்லா படிங்க கமலா அம்மா!! அவர் சொன்னது என்னனு
மற்ற ஜாதியினர் மறு மணம் செய்து வைத்தார்களா?மற்ற ஜாதியினர் மூலையில் தீட்டு என்று ஒதுக்கிவைக்காமல் இருந்தார்களா?பார்ப்பனர்கள் மட்டும்தான் செய்கிறார்களா? பேதமையைக்கொஞ்சம் விட்டு வெளியே வாருங்கள் மதிமாறன்.//
நீங்க இன்னும் உங்க பாப்பனத்தில் இருக்காதீங்க கமலா…
வெளிவரவேண்டியது நீங்கதான்…
மாதவன் மற்றும் மதி போன்ற நண்பர்களே
நான் ஒன்றும் தெரியாத பார்பனாகவே இருக்கிறேன்.ஆனால் யாரையும் திட்டி எனக்கு எதுவும் நடக்க வேனண்டாம்.எனக்கு ஜாதி மத பேதமில்லை.னான் என் வாழ்க்கையை என் மனதுக்கு உகந்த மற்றவருக்கு கெடுதல் ஏற்படாத, வழியில் நடத்தியிருக்கிறேன். என்னைப்போன்ற பலருக்கும் உலகம் முழுக்க இந்துக்கள் அல்லாதோர் நண்பர்களாக இரூகிறார்கள்.ஜாதியையும் மதத்தையும் முன் வைத்து நான் எதையும் எடை போடுவதில்லை.
அவரர் வாழ்க்கையை அவரவர் பிடித்த வகையில் வாழும் நாகரிகம் இன்றைய கால கட்டத்தில் வெகுவாக பழக்கமாகி வருகிறது. பிராமணர் அல்லதவர் போல்தான் பிராமணர் இருக்க வேண்டும் என்பது உங்கள் கட்டாயமாக இருக்கிறது.
நான் என் பெண் பிள்ளை இன்னும் சொல்லப்போனால் என் பேத்தியைக்கூட கட்டயப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறேன்.காலமே மாறி விட்டது.
அன்புடன்
கமலா
காலமே மாறி விட்டது.//
எங்க மாறிவிட்டது இந்தியாவ சுற்றிவரவும் எப்படி மாற்றங்க உண்டானதுனு சொன்னா நல்லா இருக்கும்
இன்னும் அந்த பழய கதைதான் நடக்குது கமலா மேடம்…
அன்புள்ள தம்பி(அண்ணன்?) ராம்!இந்தியாவைச்சுற்றி வாருங்கள் .பிறகு பேசுங்கள் என்று சொல்லுகிறீர்கள். உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன் . உலகத்தில் எல்லா நாடுகளிலும் பணக்கார நாடான அமெரிக்காவில்கூட இந்த கருப்பு வெள்ளை பிரச்சினை மிகப் பெரிய கோர தான்டவம் ஆடின நாட்களைப் பற்றி உங்களுக்குத்தெரிந்திருக்கும். நிச்சயமாக.அப்பிரகாம் லின்கனையும் தெரிந்திருக்கும் நிச்சயமாக. இப்படி ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் அவர்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வந்த தலைவர்களும் மிகவும் நிறைய பேர் இருக்கிறார்கள். நெல்சன் மன்டேலாவை தெரியுமிலல்லையா?
ஆஸ்திரேலியாவிலும் அந்த மண்ணுக்கு உரியவர்கள் நம் தமிழர்களைப் போல சற்று பழுப்பு நிறமானவர்கள்தான்.அபாரிகஜினேட்ஸ் என்று அழைக்கப்படுவார்கள்.அவர்கள் மெல்போர்னில் (Erra)நதிக்கரையில் நம்ம ஊரு ஆடிப்பெருக்கு போல படகு விட்டு விழாக்கொண்டாடிக் கொன்டிருந்ததை நான் பார்த்து ரசித்தேன். நம்ம நண்பர் ஒருவர் தமிழர்,” இவர்களும் நம் தமிழர் போலத்தான் இருப்பார்கள். அவர்கள் மொழி நம்ம தமிழை ஒத்திருக்கும்” என்று சொன்னார். வெள்ளையர்கள் அந்த தேசத்தின் வந்தேரிகள்தான்.அவர்கள் ஆஸ்திரேலியாவின் எல்லா தங்கத்தையும் லன்டனில் கொண்டு போய் வைத்து விட்டார்கள். ஆனால் இப்போது ஆட்சி வந்தேரிகள் கையில்தான்.அந்த தேசத்தின் பழங்குடியினரான அந்த அபாரிஜினேட்கள் ஆங்கிலேயரின் நாகரீகத்துக்கு இன்னும் மாறவில்லை.தங்கள் பழக்க வழக்கங்களை பின் பற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் உலகில் எல்லா நாட்டிலும் எல்லா இடத்திலும் இந்த வெற்றுமைகள் இருக்கின்றன அந்த தேசத்தவர் வந்தவர்கள் என்கிற அரசியல். நான் எதையும் நியாயப்படுத்தவில்லை.
இந்த நாட்டைச்சுற்றி வாருங்கள் என்று சொன்னிர்களே, அதற்கு பதில் சொல்லிக்கொன்டு இருக்கிறேன்.அங்கெங்கே என்னென்ன எண்ணங்களோ என்னென்ன வாதங்களோ? இப்பவும் எவ்வளவு பெரிய பதவி ஆனாலும் கருப்பர் வெள்ளையர் அரசியல் இல்லாத ஊரே இல்லை எனலாம்.ஆனாலும் அதைப்பொருட்படுத்தாது நிறைய பேர் கருப்பர்களையும் வெள்ளையர்களையும் பழுப்பு நிறத்தவர்களையும் ஒத்துக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.
நம் இந்திய துணைக்கண்டம் பல மொழிகளைக்கஒன்டது. மிகப்பெரிய சரித்திரத்தைக்கொண்டது. பழமையான நாகரீகத்தைக்கண்டது. நமது நாட்டில் இப்படிப்பட்ட பிரச்சினைகள் நிறையவே இருக்கும்.
மக்கள் தொகையும் அதிகம்.
நம்முடைய உரிமைகளை நாம் அடைய நாம்தான் முயல வேண்டுமே ஒழிய யாரையாவது திட்டிக்கொன்டிருப்பதில் ஒரு உபயோகமும் இல்லை என்பது தெளிவு.
மற்றுமொரு விஷயம். நான் இந்தியாவில் பல இடங்களில் சென்றிருக்கிறேன்.வாழ்க்கை முறைகளைப் பார்த்திருக்கிறேன்.110 கோடி மக்களில் 100 கோடி மக்கள் சோத்துக்கு இல்லாமல் வாழ்கிற நாடு நம்முடையது.இப்போது ஜாதிச்சண்டை ,மொழிச்சண்டை எல்லாம் முக்கியம் இல்லை. சோற்றுச்சண்டைதான் முதலில்.எல்லோரும் முதலில் சாப்பிட வழி செய்வோம். பின் பார்த்துக்கொள்ளலாம் மற்றவைகளை.எல்லோரும் சோறு தின்னுவதே நம்ம நாட்டின் பெரிய சாதனை அதை யோசித்திருக்கிறீர்களா என்றாவது. என்னைப் பொறுத்தவரை கடைசீ பட்சமாக நம் நாட்டினரில் 50 கோடி மக்களாவது நடுத்தர வர்கத்து வரட்டும்.அப்படி வர பிராமணனே இருக்கக்கூடது என்றும் ஒதுக்கிடுகளில் பிராமணர்களுக்கு கக்கூசு கழுவச் சொல்லவெண்டும் என்று சொன்னால் அது என்னதனம் என்று உங்கள் மொழியிலேயே திட்டிக்கொள்ளுங்கள். புள்ளி விவரங்களை வைத்து என்னை திட்டாதீர்கள்(தோராயமானதுதான்). அப்புறம் போடுவோம் பாரதி நல்லவனா கெட்டவனா என்ற சண்டையை.பிராமணரை அடிப்பதா? கடிப்பதா? என்ற விவாதத்தை. இது சத்தியமாக நையாண்டி இல்லை. சிவப்பான உண்மை!
நட்புடன்
கமலா