பார்ப்பனப் பெண்களுக்கு எதிரான சதி….

 

 

`பெண்ணைக் கேவலப்படுத்தியப் பார்ப்பனியம்….என்று சொல்லியிருக்கிறீர்களே, மற்ற ஜாதிக்காரர்கள் எல்லாம் தங்கள் பெண்களை மரியாதையாக நடத்தினார்களா?

கோபிகா

burning_of_a_widow1.jpg

ல்லை. ஆனால் மற்ற ஜாதிக்காரர்களை விட தங்கள் ஜாதி பெண்களை மிக மோசமான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியவர்கள் பார்ப்பனர்கள்.

 சிறுமிகளை அல்லது இளம் பெண்களை வயதான ஆண்களுக்கு முறைப்படி  திருமணம் முடித்துக் கொடுப்பதை சாதாரண நிகழ்வாக கொண்டிருந்த சமூகம் அது.

அந்த பால்ய விவாகத்தின் மிச்ச சொச்ச பழக்கமாகத்தான் இன்றும் அவர்களின் திருமண முறையில் வளர்ந்த பெண்ணை தந்தை தன் மடியில் வைத்து தாரைவார்க்கிறார்‘.

(சிறுமியாக இருக்கும் `மணப்பெண்மணப்பந்தலில் அமராமல் எழுந்து ஓடிவிடும் என்பதால் ஏற்பட்ட பழக்கம் அது)

lk02.jpg

கணவன் இறந்தபிறகு மனைவியை பிணத்தோடு உடன் வைத்து எரிக்கிற பழக்கம், பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டப் பிறகு, கணவனை இழந்த இளம் பெண்கள் அடுத்த ஆண்களின் பார்வைக்கு அசிங்கமாக தெரியவேண்டும் என்பதற்காக- மொட்டை அடித்து, காவிதுணி கொடுத்து, பெண்களை அவமானப்படுத்திய ஒரே சமூகம் பார்ப்பன சமூகம்தான்.

அதற்கு ஒரே ஒரு காரணம், வேறு ஜாதி ஆண்களின் கலப்பு தன் ஜாதிக்குள் நடந்து விடக்கூடாது என்பதுதான்.

இளம் விதவைகளை தன் பாலியல் வக்கிரங்களுக்கு பயன்படுத்திக் கொண்டு, அவர்களை கங்கையில் அமுக்கி கொன்றதும் பார்ப்பன சமூகம்தான்.

அதனால்தான் கங்கையில் போய் (காசி) இறப்பது புனிதம் என்கிற பொய் இன்றுவரை நிலைத்து நிற்கிறது.

கங்கை என்கிற அந்த நதி, இன்னும் வற்றாமல் ஓடிக் கொண்டிருப்பதிற்குக் காரணம், அதில் அமுக்கிக் கொல்லப்பட்ட பார்ப்பன இளம் விதவைகளின் கண்ணீரால்தான் என்றால் அது மிகையாகாது.

hindu1.jpg

அந்தக் கொடுமைகளைதான் வாட்டர்என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க தீபா மேத்தா முயற்சித்திபோது, கடுமையாக கண்டிக்கப்பட்டார்.

அதேபோல்,  வரதட்சணை என்கிற சமூக அவலத்தை, பிற சமூகத்தினர், பார்ப்பனச் சமூகத்திடம் இருந்தே கற்றுக் கொண்டனர்.

பெண் பார்க்கும் படலம்என்பதை ஒரு நிகழ்ச்சியாக, `பெண்ணுக்கு பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா?` என்று இன்றுவரை அந்த அநாகரிகத்தை தீவிரமாக கடைபிடிக்கும் சமூகமும் அதுவே.

இன்றுகூட பார்ப்பன எழுத்தாளர்கள் மூலம் – நாவல், நாடகம், திரைப்படம் வழியாக பெண் பார்க்கும் படலமும், “ஆடத் தெரியுமா, பாடத் தெரியுமா?” `பஜ்ஜி, சொஜ்ஜி`  போன்ற கலாச்சார சீர்கேடுகளும் ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளம் போன்று கற்பிக்கப்பட்டு மற்ற சமூகங்களுக்கும், பெண்களுக்கு எதிரான அந்த சீர்கேடுகள் பரவிக் கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

 

வே. மதிமாறன்

8-12-2007

வே.மதிமாறனிடம் கேளுங்கள்

19 thoughts on “பார்ப்பனப் பெண்களுக்கு எதிரான சதி….

  1. nice //இன்றுகூட பார்ப்பன எழுத்தாளர்கள் மூலம் – நாவல், நாடகம், திரைப்படம் வழியாக பெண் பார்க்கும் படலமும், “ஆடத் தெரியுமா, பாடத் தெரியுமா?” `பஜ்ஜி, சொஜ்ஜி` போன்ற கலாச்சார சீர்கேடுகளும் ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளம் போன்று கற்பிக்கப்பட்டு மற்ற சமூகங்களுக்கும், பெண்களுக்கு எதிரான அந்த சீர்கேடுகள் பரவிக் கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
    // excellent

  2. அனைத்தும் உண்மையே இவர்கள் எப்போது இந்த பழக்கங்களிலிருந்து மாறபோகிறார்கள் என்று தெரியவில்லை

  3. பெண் அடிமைத்தனம் என்பது உலக அளவில் பேசப்படும் விஷயம் என்பதுதான் உண்மை.
    இன்னும் பத்திரிகைகளில் (பல வெளி நாட்டுப் பயணத்தின் போது நான் பத்திரிகைகளில் பார்த்து வியந்திருக்கிறேன்)இதைப்பற்றி நிறைய சர்ச்சைகள் வந்த வண்ணமிருக்கின்றன.இப்போது ஒரு பத்து வருடமாக இந்த பேச்சு மிகவும் அதிகமாகிவிட்டது.
    ஆண்கள் எல்லா ஜாதியினரும்,எல்லா நாட்டினரும் biological காரணங்களால் பொறுக்கிகளாக நடந்து கொன்டதன் விளைவுதான் இந்த பெண் அடிமைத்தனம்.ஆண் வேலி தான்டினால் அது நிகழ்ச்சி,பெண்வேலி தாண்டினால் அது சரித்திரமாயிருந்தது என்னவோ உண்மைதான். ந‌ம் இந்திய நாட்டில் இதன் தாக்கத்தைக் குறைப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட சாத்திரங்கள்தான் பல சடங்குகள்.
    பிராமணர் அல்லாதோர் கணவனை இழந்த பெண்ணை கை வளையலை உடைத்து புண்படுத்துவதை நான் நேற்று ஒரு சினிமாவில் பார்த்து அவள் பிள்ளயைவிட கொஞ்சம் அத்கமாகவே அதிர்ந்தேன்.
    அரபு நாடுகள் இன்னும் கொஞ்ச‌ம்கூட பெண் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வரவில்லை. ந‌ம் தமிழ் நாட்டிலேயே முஸ்லிம்கள் அணியும் உடைகள் அவர்க‌ள் பழக்க வழக்கங்கள் பார்த்திருப்பீர்கள்.
    எனக்குத் தெரிந்து இந்து மதத்தில் எத்தனையோ பால்ய விவாகங்களும் நடந்திருக்கின்றன. விதவை மறுமணங்களும் நடந்திருக்கின்றன. இதெல்லாம் கால மாற்றங்கள். பிராமணர் அல்லாதோர் சிறுமி விவாகம் நடத்தவில்லை என்பதும்,விதவை ஆனவர்கள் மண‌ம் புரிந்து கொள்வதும் வெறும் பேச்சு.எல்லா ஜாதியிலும் எல்லாம் நடக்கிறது.சமுதாய நோக்குடன் அப்போது செய்யப்பட்ட சாத்திரங்கள் இப்போது தனிப்பட்ட முறையில் விமரிசிக்கப்படுகின்றன. இன்னும் பார்த்தால் எதிர்மறை பாதிப்புக்குள்ளாகி விஞ்ஞானமும், சட்டமும் அவர்களுக்குத் துணையாக நிற்பதால்
    இப்போது பெண்கள் பொறுக்கிகளாக அலைகிறார்கள்.
    ஆண்கள் அதை ஏற்றுவாழ வழி தெரியாமல் திணறுகிறார்கள்.நிறைய படிப்பு படித்து நல்லமுறையில் குடும்பத்தைப் பேணிக்காக்கும் பெண்களும்,ஆண்களும் இல்லாமல் போகவில்லை.அதுதான் பகுத்தறிவு.
    நன்றி

    கமலா

  4. கமலா மேடம், நீங்க பிராமண வகுப்பைச் சேர்ந்தவரா?

  5. ஆமாம் நான் பிராமணர்தான்.ஆனால் அதை விட தமிழச்சி என்றும் இந்தியர் என்றும் அழைக்கபடுவதையும் விரும்புகிறேன்.
    அன்புடன்
    (நீங்கள் என்ன ஜாதி என்று கேட்க விரும்பாத)
    கமலா

  6. இன்றுகூட பார்ப்பன எழுத்தாளர்கள் மூலம் – நாவல், நாடகம், திரைப்படம் வழியாக பெண் பார்க்கும் படலமும், “ஆடத் தெரியுமா, பாடத் தெரியுமா?” `பஜ்ஜி, சொஜ்ஜி` போன்ற கலாச்சார சீர்கேடுகளும் ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளம் போன்று கற்பிக்கப்பட்டு மற்ற சமூகங்களுக்கும், பெண்களுக்கு எதிரான அந்த சீர்கேடுகள் பரவிக் கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

    Ayya
    this is better than being forced to put 100poun gold, consider gold prices today!

  7. இது ஒருகாலத்தில் உண்மையாய் நடந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் வர வர இந்த நிலை மாறிவிட்டது. இனி தமிழ்கலாச்சாரத்தில் இப்படிப்பட்ட கலப்படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும். தமிழர்களுக்கு விழிப்புணர்வு வந்தால் போதும்.

  8. வர வர இந்த நிலை மாறிவிட்டது//

    எந்த மாற்றத்தை பார்த்தீர்கள் இன்றும் மடியில் வைத்துதான் தாலிகட்டுகிறார்கள்

  9. அப்பன் மடியில் பெண்ணை வைத்து, கட்டிகொள்கிறவன் தாலி கட்டுகிறான். உன் மடியிலா வைத்துத்தாலி கட்டுகிறான்? வேண்டுமென்றால் கட்டுகிறவனும், கட்டிக்கிறவளும் ஆட்சேபணை தெரிவிக்கட்டுமே?அவர்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை. அதுவும் இந்த காலத்தில் எல்லோரும் உங்களை விட விபரமாயிருக்கிறார்கள்.யாரும் யாரையும் நிர்பந்தமாக எதுவும் செய்து விட முடியாது.
    கமலா

  10. Despite Mathimarans, their ‘father’ Periyar and many other brahmin haters
    brahmins are doing well. Despite 69% reservation they are surviving and
    flourishing. Brahmin girls run companies, manage business, not to speak of their success in so many other fields ranging from science to social service.
    You can see them in Harvard, yale and stanford, and in many European
    universities doing cutting edge research. They are figured in MITs list of
    top 50 innovators, university rank holders. To day brahmin girls are the ones who enjoy most freedom and who are excelling in their pursuits.
    They do not hesitate to travel abroad alone, even on the first day of
    the work. Conservatism among brahmins is an exception. That is
    why despite the odds brahmin girls are doing well. Do you think they care for bigots like Mathimaran or Veeramani. These bigots have nothing better to do than blaming brahmins and licking the feet of the powers that be.

  11. அப்பன் மடியில் பெண்ணை வைத்து, கட்டிகொள்கிறவன் தாலி கட்டுகிறான். //

    அந்த பழக்கம் எப்படி வந்தது இன்னும் இது எப்படி தொடர்கிறது என்பதை தான் சொல்லியிருக்காரு கமலா! மேடம்

    நல்லா ஒரு முறை படிங்க கமலா மேடம்!

  12. Good anamikan!!!

    Despite periar and these so called bigots bramin girls are doing well…i accept it.but why didnt this happen before periar…these bigots…liking the feet of power…what a joke…even the senseless film makers portray feet liking gumastas as bramins.ennamoe bramins…adenna bramins…paapaan,paapathi maatum thann yale padikara madiri matavanga ellam**********************madiri.velaikku pora pengal ellam nadathai kettavan nu sonnanae oru kaavi porukki avan kittae poi sollu un bigot putanathai….avanai edirka thunichal illai vandutteenga kelapeetuu…appuram “ungalai vida ellam vibarama irukkerargal” nu puranam vaera…thoooo vekka ma illai.indru naangal jadi irukirathu endru sonnal neengal illai engireergal.andru naangal illai endrome neengal irukirathu endreergal.”desptite the odds bramin girls are doing well” ethanai bramin girls cuckoos valikirargal? ingu aderkendru oru jadi irukirathu…idhai ellam kaekka thuppu illai.university rank holder am.As some one rightly told….
    “christianity is worst religion with best followers
    Islam is the best religion with worst followers
    hinduis is the only worst religion with worst followers”

  13. mr venkat!
    first off all mind your language!once upon a time you people were conducting rallis to protest against brahminism and now you are using unparlimentary words to do the same.by both of the ways you dont achive what you are intent to.
    you people are refusing to understand things and highly frustated. pls calm down and think twice before facing a reasonable person.
    thangs
    kamala

  14. அந்தக் கொடுமைகளைதான் ‘வாட்டர்‘ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க தீபா மேத்தா முயற்சித்திபோது, கடுமையாக கண்டிக்கப்பட்டார்.//

    உண்மையை சொன்னால் கூட இவர்களின் செயல் இப்படித்தான்….

  15. தீபா மேதா என்ன படம் எடுத்து சமூக சேவை செய்கிறாரக்கும்!இந்தியப்பெண்கள் எல்லொரும் ஒரு குடும்பத்தின் தலைவியாக இருக்கணும்னோ,பிள்ளைக்கு நல்ல அம்மாவாக இருக்கணும்னோ அவருக்கு ரொம்ப பொறுப்பு பாழ் போகிறதாக்கும்.எல்லாம் காசு பண்ணத்தான்.அப்புறம் அதில் எப்படி முழு உண்மை இருக்கும். துளியைப் பெரிது பண்ணுவதுதானே சினிமா!
    அன்புடன்
    கமலா

  16. அப்படியென்ன மேடம் Unparlimentary words பேசிட்டேன்… திருப்பி பேசரேன்… அதுவும் **** போட்டு நாகரிகமாய். அந்த கோபம் கூட நீங்க சொன்ன “Unparlimentary words” பேசிய ஒருவருக்காக. ஏன் நீங்க அவனை கன்டிக்க முன்வரவில்லை? என்ன பாசம்? ……..!!!!!!!!!!
    எங்களுக்கு நாகரிகம் மிக மிக நன்றாகவே தெரியும்.
    எஙளிடம் அது கான்பிக்க படதா பொழுது சில சமயம் இது போல பேச வேன்டியதாகிறது… மேலும் நாங்கள் Frustrate ஆகிவிட்டோம் என்று உங்களுக்கு யார் சொன்னது? நீங்கள் அப்படி நினைத்தால் அது உஙகல் நினைப்பு மட்டுமே… நாங்கள் Frustrate ஆகி எந்த வரலாட்று புரட்டுகலிலும் இறங்கவில்லை… டாஜ் மஹல் ரிஷிகல் கட்டினது என்று புளுகு மூட்டை அவிழ்து விடலை , யாரயும் “Mass Murder” பன்னலை. கக்கூசு என்ற வார்தை உஙகலுக்கு “Unparlimentary” ஆக பட்டல் அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கு இல்லை. இங்கு ஒரு சாதியே அதற்காக இருகிறது என்பதை மிகவும் தெளிவுபடுதவும், மற்றவர்கள் எவ்வளவு “விவரமாக” இருகிறார்கள் என்பதை சொல்லவும் அன்த வார்தைகள். மேலும் நான் உன்மையிலேயே கேட்க நினைப்பதும் கூட…..

    venkat

  17. Arupathu aandu kala Paarppanar allathorin aaramba ezhuchiyaye Avalal poruthukkola mudiyavillaye aayirakkanakkaana aandukalaka adangikkidanthavarkal enna paadu pattirupparkal.Ore oru Periyarai thaanga mudiyavillai ivarkalal.

  18. பழைய முட்டாள் முன்னோர்கள் எழுதிவைத்த சாத்திர குப்பைகளுக்காக நாம் ஏன் நாய் போல சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டும்? இதெல்லாம் வெற்றுப் பேச்சு. நாளைய அறிவியல் வளர்ச்சியைப் பற்றி மட்டும் நாம் எண்ணிப் பார்ப்போம். பேரீச்சம் பழத்துக்குக் கூட விலைபெறாத பழைய மூடர்களின் கதைகளைப் பேசி நம் நேரத்தை வீணடிக்க வேண்டாமே?!

  19. Mr genius21 ,
    I agree with you, but we are still following what முட்டாள் முன்னோர்கள் said long ago… First we need to stop following them… and decide what is best for us and to the fellow human being

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading