பாரதியின் பெண் விரோதம்

         -வே. மதிமாறன்

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ -3

book2.jpg 

முதல் அத்தியாயம்

மார்க்சியம் பெண்களுக்காகப் பேசவில்லை’

‘அம்பேத்கர் வெறும் ஜாதித் தலைவர்’

‘பெரியார் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதி’

‘இட்லர் வரிசையில் ஸ்டாலின்’

என்று அறிவுக் கொழுப்பெடுத்து அவதூறு அள்ளி வீசும் அறிஞர்கள்,

முரண்பாடுகளின் தொகுப்பான (‘இந்து மத’ கருத்துகளில் மட்டும் முரண்பாடில்லாத) ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியைப் பற்றி சொல்லும்போது மட்டும் – தன் கருத்துகளை எல்லாம் பாரதி தலையில் சுமத்தி –
‘அவரை இப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்’, ‘அப்படிப் பார்ப்பது பாரதியை புரிந்து கொள்ளாத வறட்டுத் தன்மை’ என்று சுப்பிரமணிய பாரதிக்கு கிரீடம் சூட்ட முயற்சித்து, நம்மைத் தெளிவாக குழப்புவார்கள் – குழப்புவதில் தெளிந்தவர்கள்.

தொடர்ச்சியான முரண்பாடு, அதுவே பாரதியின் தனித்துவம்.
முரண்பாடுக்கான காரணம், தான் சொல்லுகிற செய்தியில் அர்ப்பணிப்பின்மை; நம்பிக்கையின்மை (சமூக சீர்த்திருத்தக் கருத்துகளில் மட்டும்)
பெண்விடுதலை குறித்த தனிப்பாடல்களில், தனிக் கட்டுரைகளில் ஓ…. வென்று சப்தமிடும் சுப்பிரமணிய பாரதி-அதை தொடச்சியாக மற்ற பாடல்களில் கடைப்பிடிப்பதில்லை.

தீவிரவாத(?) இயக்கத்தில் பங்கு கொண்டு மிதவாதிகளின் உப்பு சத்தியாக்கிரகத்தை, அவர்களின் இயக்கத்தை கடுமையாகச் சாட வந்த பாரதி,

‘கண்கள் இரண்டிருந்தும காணுந்திறமையற்ற
பெண்களின் கூட்டமடி! கிளியே!
பேசிப் பயனென்னடி|? –
என்கிறார்,
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தியவர்.

சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்கு வீர உரை ஆற்றுவது போல் பாடல் அதில்,

‘வீரரைப் பெறாத மேன்மை தீர் மங்கையை
ஊரவர் மலடியென்றுரைத்திடு நாடு’
……………………………………………………………………………..
……………………………………………………………………………..

‘ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும்
விணில் இங்கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்’
……………………………………………………………………………..
……………………………………………………………………………..

‘பெண்மை கொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய்’
……………………………………………………………………………..
……………………………………………………………………………..

பெரும்படையுமாம் பெண்மையெங் கெய்தினை?’

-என்று பாரதியின் வாயால் சத்ரபதி சிவாஜி ‘ஆண்மையுரை‘ ஆற்றுகிறார்.

பாஞ்சாலி சபதத்தில், பெண்மைக்கு இழைக்கப்படும் தீங்கைக் கண்டு ‘கோ…’ வென்று கதறிக் கொண்டே வந்து, ‘பொம்பளைங்கள கேவலப்படுத்தறானுங்க பொட்டப்ப பசங்க’ என்கிற ரீதியில் –

நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்கு துணையாகுமோ?’
-என்று
‘சேம்சைடு கோல்’ போடுகிறார் சுப்பிரமணிய பாரதி.

‘2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பெண்களுக்கு எதிராக சிந்தித்து இருக்கிறார்’ என்று கோபப்படுகிற ‘ஞாநி’ கள், 80 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இப்படி முன்னுக்குப் பின் முரணாக இருந்திருக்றாரே என்று சந்தேகிப்பதுகூட இல்லை.
சுப்பிரமணி பாரதிக்கு மட்டும் இலக்கியத்தில் ‘இடஒதுக்கீடு’ போலும்.

 -தொடரும்

இதன் முந்தைய பகுதிகளைப் படிக்க

  பாரதி` ய ஜனதா பார்ட்டி

Leave a Reply

%d bloggers like this: