பாரதிக்கு முழுக்குப் போட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாராட்டுகள் (சி.பி.ஐ)

c-p-i.png

பார்ப்பன இந்து மனோபாவம் கொண்ட பாரதியை தமிழ்நாட்டில் முற்போக்காளராக அடையாளம் காட்டியதில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரும் பங்கு உண்டு’ என்று நான் 2000 ஆம் ஆண்டு ‘தலித் முரசு’ இதழில், ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ என்ற தலைப்பில் தொடராக எழுதியபோது, கம்யூனிஸ்ட் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன்.

பிறகு ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ புத்தகமாக வந்தபோது கம்யூனிஸ்ட் கட்சிகளின் கலை, இலக்கிய அமைப்புகளான அல்லது அவர்கள் பொறுப்பு வகிக்கிற, ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ ‘கலை இலக்கிய பெருமன்றம்’ இவைகள் எனக்கு எதிராக கண்டன கூட்டங்களையும் நடத்தின.

பாரதி பார்ப்பனர் என்பதாலேயே நான் திட்டமிட்டு, பாரதி மீது பழி சுமத்தியதாக அவர்கள் என்மீது பழி சுமத்தினர்.

பாரதி பார்ப்பனராக பிறந்தார் என்பதல்ல என் குற்றச்சாட்டு.
பாரதி பார்ப்பனராகவே வாழ்ந்தார், என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டல்ல, நிரூபணம்.

நான் நிரூபித்தப் பிறகும் கூட அவர்கள் தங்கள் பாரதி அபிமானத்தையோ, பாரதி விழாக்களையோ மாற்றிக் கொள்ளவுமில்லை, நிறுத்தவுமில்லை.
இவைகள் நடந்து ஆயிற்று ஆண்டுகள் ஏழு.

இந்த ஆண்டு பாரதி பிறந்த நாளான 11-12-2007 அன்று,  தோழர் தா. பாண்டியன் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாரதி விழாவை கொண்டாடவில்லை.
(12-12-2007 நாளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘ஜனசக்தி‘ நாளிதழில் அவர்கள் பாரதி விழா கொண்டாடியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.)

பாரதியார் பற்றிய அவர்களது இந்த மறுபரிசீலனை வரவேற்கத் தக்கது.
அதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்களுக்கு, நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
வே. மதிமாறன்

4 thoughts on “பாரதிக்கு முழுக்குப் போட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாராட்டுகள் (சி.பி.ஐ)”

Leave a Reply