பாரதிக்கு, இலங்கை சிங்களத் தீவாம்

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ -5
முதல் அத்தியாயம் (3)

bharathiar-image.jpg

‘பாரதம், பரதன் நிலை நாட்டியது, இந்த பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள இந்நாட்டை இவன் ஒன்று சேர்ந்து, அதன் மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்தியபடியால், இந்த நாட்டிற்கு பாரத தேசம் என்று உருவாயிற்று’ என்று புளுகுகிறார் என்றால், அது மகாகவியை கேவலப்படுத்தியதாகும். அதனால் ‘வரலாற்று ஆதாரங்களை அள்ளித்தருகிறார்’ என்று நாம் புளுகி வைப்போம்.

 

பாரத தேசம் என்று சொல்லாத நேரங்களில் – ‘இது ஆரிய நாடு’ எனறு அழுத்தமாகச் சொல்கிறார்.

‘ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொலும் வீரிய வாசகம்’
   (வந்தே மாதரம்)
என சுதந்திர தீ மூட்டி,

‘உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவும் இஃதை எமக்கில்லை ஈடே’
-என்று யாகம் வளர்க்கிறார்.

‘பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்’ என்ற குதூகலிக்கிற பாடலில்,
‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்றார்.

பார்ப்பனர்கள் மூன்றுசதவிதமே உள்ள இந்த இந்திய துணைக் கண்டத்தை ‘ஆரிய பூமி’ என்று துணிச்சலோடு சொல்லும் பாரதி, தமிழர்கள் பெருவாரியாய வாழும் நாட்டை – ‘சிங்களத் தீவு’ என்று சொன்னாலும் அதை மறந்து, ‘அன்றே சொன்னான் பாரதி.

அவன் சொன்னது போல் பாலம் கட்டியிருந்தால், திபு, திபுவென்று பாலத்தின மீதே ஓடி என்னுயிர்த் தமிழர்களின் துயர்துடைக்க உதவி இருக்குமே’ என்று வீரம் பேசவாவது உதவுகிறது. நல்லது!

‘வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’

ஆஹா! அற்புதமான நதிநீர் பங்கீடு.

‘கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
   காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’

‘கங்கை-காவிரி’ன்னு இதுவும்  பொருத்தமாதான் இருக்கு.

‘சிங்க மாராட்டியர் தம் கவிதை கொண்டு
    சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்’

-‘இந்து மத திலகர் பிறந்த பூமி என்பதால் அது சிங்க மராட்டியம் போலும். பரவாயில்லை. யானைகள் அதிகம் நிரம்பிய கேரளாவில் இருந்து தந்தங்களைக் கொடுத்துவிடடு, இளிச்சவாய்த் தனமாக கவிதைகளை வாங்கி வைத்துக் கொள்ளட்டும்.

இப்படி எதைக் கொடுத்து, எதை வாங்குவது என்கிற பொருளாதார கவிதை எல்லாம் சரிதான். ஆனால், இதற்கெல்லாம் சேர்த்து வேட்டு வைப்பது மாதிரி,

‘காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’
என்கிறார்.

இதை ‘காவுக்கு கா’ போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பாரக்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழுங்கவும் முடியாது.

தேசிய கவிஞனாக இருந்தால்,
‘காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்
கன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’

என்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.

சரி, மற்ற ஊர் புலவர்கள் பேசாத அளவுக்கு அப்படி என்ன உலக மகா தத்துவத்தை காசியில் இருக்கிற புலவன் பேசிவிடப் போகிறான்? அப்படியே பேசினாலும் அதை உடனே காஞ்சிபுரததுக்காரன் மட்டும் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன?

‘வேற ஒண்ணுமல்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச ‘பெரியவாளெல்’ லாம், மார்க்கிய அடிப்படையில் புரட்சிகரத் திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜகத்குருக்களிடம் தெரிவித்தால் – ‘ஜகத் குரு’- லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னு சொன்னாலும் சொல்வார்கள்- மார்க்சிய பாரதியவாதிகள்!

-தொடரும்

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி

 இங்கே சொடுக்கவும்

8 thoughts on “பாரதிக்கு, இலங்கை சிங்களத் தீவாம்

 1. இலங்கைச் சிங்களத் தீவுதான்!இதில் என்ன சந்தேகம். சிங்கப்புரிலும், மலேசியாவிலும்

  தமிழ் ஒரு தேசிய மொழியாக இருக்கிறது.அப்பிடீன்னா உடனே அது என்ன தமிழ்நாடா?
  வேலை இல்லைன்ன பாரதிய திட்டிக்கிட்டு இருக்ககீங்க!அங்க இருந்த தமிழர் குடும்பம் எல்லாம் அடிக்கிற அடி தாங்காம குழந்தை குட்டிகளோட வெளியே ஒடி வந்து உலகம்
  முழுக்க மிகவும் அல்லலுற்று எல்லா கண்டத்திலேயும் குடியுரிமை பெற்று எப்ப‌டிப் பொழைக்கிறதுன்னு கஷ்டப்பட்டு முயற்சி செய்து வாழ்க்கையில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் பத்து பேருக்கு நாலு பேரு ஸ்ரீலங்காக்காரங்கதான்.கனடாவிலும் நிலைமை அப்பிடித்தான். இப்போ அமேரிகாவில் குடியேறுகிற நம்ம ஜனக்க அமெரிக்கர்களா என்ன? இந்தியர்கள்தான்.சிடிசன்ஷிப் வாங்கித்தான் வைத்திருக்காங்க!ஒரு நாள் அடிச்சால் ஒடி வர வேன்டியதுதான். நம்ம ஊரில ஒரு சோனியாவ நம்பினோமா? நம்ம ஊரில் மும்பைக்குள் ஒரு சிவசேனா இல்லையா?practical வேறு. சும்மா பேசிட்டு போறது வேறு. ந‌ம்மால ஒரு உபயோகம் இருக்கற வரை எல்லாம் சரிதான். ஏதாவது அளவுக்கு மீறிப்பேசினால் நடக்கிறதே வேற!
  கமலா

 2. ‘சிங்க மாராட்டியர் தம் கவிதை கொண்டு
  சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்’

  யானைகள் அதிகம் நிரம்பிய கேரளாவில் இருந்து தந்தங்களைக் கொடுத்துவிடடு, இளிச்சவாய்த் தனமாக கவிதைகளை வாங்கி வைத்துக் கொள்ளட்டும்.

  ‘கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
  காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’

  Does giving Wheat for betel nut leaves make economic sense for north indians?

  Come on, it is a poem about national integration of India!

 3. சூப்பர் கமலா…

  உங்களுக்கு நல்ல சரித்த்ர அறிவு !!!

  எங்களுக்கு தெரிந்ததெல்லாம் சிங்களர்கள் பிகாரிலிருந்தும் ஒரிசாவிலிருந்தும் சென்று குடியரியவர்கள்.

  ராமயணத்தில் கூட இலங்கையை ஆண்ட மன்னன் ராவணன்.
  அவன் சிங்களன் அல்ல.
  விஜய மன்னனிலிருந்து பேசலாம்.
  ஏன் அதுக்கு முன் கூட பேசலாம்.என்ன நடந்துரும்?

  இந்த WWF மிரட்டல்லாம் எங்களை போன்ற்வர்கள் பார்காததா?

 4. பாரதிமேல் இத்தனை வன்மம் ஏன்? பாரதி எழுதிய காலத்தில் திராவிடம் என்கிற concept எந்த அளவிற்கு நிறுவப்பட்டிருந்தது என்பது கேள்விக்குறி. ‘பார்ப்பனரை ஐயரென்ற காலமும் போச்சே’ என்று சொன்னவன் பாரதி. அவனை இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும், அவன் கவிதைகளின் தாக்கம் தணியப்போவதில்லை. நாட்டைப்பற்றி மொழியைப்பற்றி சமுதாயத்தைப்பற்றி, ஏன் உலகைப்பற்றி தமிழில் பாடிய முதல் கவிஞன், முழுமையான கவிஞன் பாரதி.

  அறுவை சிகிச்சையின் போது ரத்தத்தை மட்டும் பார்க்கிற மாதிரி இருக்கிறது, பாரதியின் கவிதையின் உயிர்நீக்கித் துகிலுறித்து வெறும் வார்த்தைகளை விமர்சிப்பது.

 5. கமலா:

  மதிமாறனின் பாரதி பற்றிய கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அவர் கூறியுள்ளது உண்மைதான். இலங்கை சிங்கள தீவு கிடையாது. அதன் பூர்வ குடிகள் தமிழர்களே என வரலாற்று ஆய்வுகள் பல கூறுகின்றனர்.

  இலங்கைத் தீவானது பூர்வ குடி தமிழர்கள் மட்டுமல்லாது தமிழகத்திலிருந்து இடம் பெயர்ந்த தமிழர்களையும் வட இந்தியாவிலிருந்து இடம் பெயந்த சிங்களர்களையும் கொண்டுள்ளது. பிரிடிஷ் ஆட்சிக்கு முன்னர் அங்கு தமிழ் மற்றும் சிங்கள் அரசுகள் தனித்தனியே இருந்ததாகத்தான் வரலாறு கூறுகின்றது. பின்னர் அவை பிரிடிஷ் காலத்தில் ஒன்றிணைக்கப்பட்டன. அதன் பிறகுதான் இனப் பிரச்சினை ஆரம்பமானது.

  பாரதியின் கருத்துக்களின் மேல் மிகுந்த மதிப்பு கொண்டுள்ளேன் நான். ஆனாலும் அவரது கவிதைகளில் சமஸ்கிருதச் சொற்கள் கலந்திருப்பதும் உண்மைதான். மேலும், அவர் பூணூல் அணிந்திருந்தார். அதனால் அவர் பார்ப்பன வெறியன் என்றும் கூறுகின்றனர். இவற்றிலெல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது.

  என்னைப் பொருத்தவரை பாரதி ஒரு கடவுள் நம்பிக்கையுடைய, அதே நேரத்தில் சாதிகள் கூடாது என்ற கருத்தைக் கொண்டிருந்தார், அதுதான் அவரது பாடல்களிலும் வெளிப்பட்டுள்ளது.

  இலங்கை இனப் பிரச்சினை பற்றிய வரலாறு தெரியாமல் பலரும் அங்கு தமிழர் தமிழகத்திலிருந்து குடியேறியவர்கள் எனக் கூறுவது அபத்தமானது.

  அன்புடன்…
  சக்தி

 6. Dear Mathi,
  What makes you to have srtong aggression towards Bharathiyar Poetry?
  His Brahman status or You feel the poem what are all he wrote is fictious?
  He is the one who gave sacred thread to children whom where considered ‘untouchables’ at that period!
  If your motive is to give critic to poetry take a poet who is alive and shower your criricsm.
  Kindly bear in mind that no one can become so great by speaking or commenting only on “Parpaneeyam” .
  we expect some thing other than these items.
  there are people to concentrate on these issues.
  Pls come out of it.

 7. all poems by Bharathiyaar is Marabu kavithaihal.
  When you write a poem, like that, you will come to know the restrictions, and even you will come to know why he used kaasi instead of kashmir.
  though kaasi and kaashmir both are naer/naer – thaemaa.
  Beauty of introducing another letter and making it sound rhythmitically, is what most poets will like…
  As kannadasan wrote… enn apaarvai unthan paarvai
  idai melinthaal intha paavai…
  Ony after some told, kannadasan himself realised, idai melinthaal paarvai, paavai aahum endru…
  To criticise is simple, if we were there in Bharthis’ position, what would we have done?. thats what really matters.

 8. //பார்ப்பனர்கள் மூன்றுசதவிதமே உள்ள இந்த இந்திய துணைக் கண்டத்தை ‘ஆரிய பூமி’ என்று துணிச்சலோடு சொல்லும் பாரதி, தமிழர்கள் பெருவாரியாய வாழும் நாட்டை – ‘சிங்களத் தீவு’ என்று சொன்னாலும் அதை மறந்து, ‘அன்றே சொன்னான் பாரதி.

  அவன் சொன்னது போல் பாலம் கட்டியிருந்தால், திபு, திபுவென்று பாலத்தின மீதே ஓடி என்னுயிர்த் தமிழர்களின் துயர்துடைக்க உதவி இருக்குமே’ என்று வீரம் பேசவாவது உதவுகிறது. நல்லது!/

  //தேசிய கவிஞனாக இருந்தால்,
  ‘காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்
  கன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’

  என்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.//

  ‘வேற ஒண்ணுமல்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச ‘பெரியவாளெல்’ லாம், மார்க்கிய அடிப்படையில் புரட்சிகரத் திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜகத்குருக்களிடம் தெரிவித்தால் – ‘ஜகத் குரு’- லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னு சொன்னாலும் சொல்வார்கள்- மார்க்சிய பாரதியவாதிகள்!/ அருமை

  பாரதியின் சாதி வெறி, ஆர். எஸ்.எஸ்.ன் பார்ப்பனிய அரசியல் சூழ்ச்சியோடு கவிதைகளாக பயணிக்கிறது. பாரதியை எவ்வளவு அம்பலப்டுத்தினாலும் கம்யூனிஸ்டுகள் பாரதிக்கு வக்காலத்து வங்குவதிலேயே கு(வெ)றியாக இருக்கிறார்கள்.

Leave a Reply

%d bloggers like this: