பாரதியின் விஷம் தோய்ந்த வார்த்தை ‘ஈனப் பறையர்’

 ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 6

இரண்டாவது அத்தியாயம்

fuga.jpg

‘பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான்,

-என்று பார்ப்பனர்களையே சாட்டை எடுத்து விளாசி இருக்கிறான் முண்டாசுக் கவி.
அது மட்டுமா-

‘ஒரு கிழச் சாம்பான் என்னிடம் வந்து “முப்போதும் நீரில் முழுகிக் குளித்தால் முனிவர்களாவாரோ? எப்போதும் இன்பத்திலிருப்பவரன்றோ இருபிறப்பாளாவார்? என்ற தத்துவராயர் வாக்கைச் சொல்லிப் பறையென்பது ஹிந்து தர்மத்தில் கோயிற் பேரிகை யென்றும், அதைக் கொட்டுவோன் பறையன் என்றும், பறையென்பது சக்தியின் பெயரென்றும், அவளே ஆதி என்றும், சிவனே பகவன் என்று பிராமண ரூபங்ககொண்டு அவளுடன் வாழ்ந்தானென்றும், பறையர் மேன்மைப் பட்டால் பார்ப்பார், வேளாளர், முதலியார், செட்டியார் முதலிய இதர ஜாதியாரும் மேன்மையடைவார்கள் என்றும் பலவித நீதிகளைச் சொன்னான். அதே கருத்துடையவராய் ஹிந்துக்களுடைய விடுதலையிலும், மேம்பாட்டிலும் மிகுந்த நாட்டத்துடன் உழைத்துவரும் ஸ்ரீ நீதிபதி மணி அய்யரும், வைத்தியர் நஞ்சுண்டராயரும், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்காரும் பறையர் குலத்தைக் கைதூக்கி விடுவதில் தம்மால் இயன்ற வரை உதவி செய்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’

“தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அக்கறையுடன் அழுதிருக்கிறான் பாரதி” என்று புல்லரிக்கும்  அறிஞர்களின் கவனத்திற்கு,

‘ஈனப் பறையர்களேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திருங்கிருப்பவர் அன்றோ?”

‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற இந்த விஷம் தோய்ந்த வார்த்தை அல்லது விஷமாகவே இருக்கிற வார்த்தை எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

எம்முடன் என்பது யாருடன்?

ஆரியர்களா?

அவர்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்களோ?

அவர்கள்தான் மற்றவர்கள் இந்த மண்ணில் வாழ்வதற்கு ‘குடியுரிமைப் பட்டயம்’ அளிப்பவர்களோ?

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வருத்தப்பட்டு பாரம் சுமந்தாக சொல்லப்படும் இந்தக் கவி, தாழ்த்தப்பட்ட மக்களை ஈவு இரக்கமற்ற முறையில் நடத்தும் – இந்து மதத்தின் தலைமை கர்த்தாக்களான – பார்ப்பனர்களை அவர்களின் ‘மனுஸ்மிருதி‘ செய்கையைக் கண்டித்து,

‘ஈனப் பார்ப்பனர்களேனும் – அவர்
எம்முடன் வாழ்ந்திருங்கிருப்பவர் அன்றோ’

-என்று எழுதியிருந்தால்,

“தன் சொந்த ஜாதியை சேர்ந்த பார்ப்பனர்களையே வெளுத்து வாங்கியிருக்கிறான் முண்டாசுக் கவி” என்று அறிஞர்கள் ‘முண்டா’ தட்டுவதில் அர்த்தமிருக்கும்.

-தொடரும்

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி

  

11 thoughts on “பாரதியின் விஷம் தோய்ந்த வார்த்தை ‘ஈனப் பறையர்’

 1. பாரதி பத்தி எழுத எவனுக்கும் அருகதை இல்லை.

 2. ‘பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
  பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான்,

  சக்தி,

  இது உங்களுகாகதான் பாரதி எழுதியிருகிறான் …

  பராசக்தி

 3. ஆக நிறைய பேர் பாரதியை கரைத்துக் குடித்திருக்கிறீர்கள்.அக்கு வேறு ஆணி வேறாக‌
  அலசியிருக்கிறீர்கள். நீங்க இப்போ செய்வதைப் பலரும் பலகாலமாகச்செய்து பின்னர்தான் பாரதியை மகாகவி என்று சொல்கிறார்கள் பராசக்தி அவர்களே!
  நன்றிகள் பல!
  கமலா

 4. கமலா அவர்களுக்கு,

  பாரதி மகாகவி இல்ல

  “மகா காவி….”

  அன்புடன்
  பராசக்தி

 5. பாரதி மகாகவி இல்ல

  மெகா மெகா “ காவி….”

  என்று நிருபித்து இருக்கிறார் மதிமாறன் அவர்கள்…

 6. நீங்கள் எல்லோரும் சேர்ந்து பிராமணனுக்கும் மற்றவருக்குமிடையில் பெரிய பிளவை உண்டு பண்ணி கலகம் பண்ணப்பார்க்கிறீர்களே தவிர‌ தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவும் செய்வதாகத் தெரிய வில்லை. நீங்கள் பாரதியை சாக்காக வைத்து முன்னுக்குப்பின் முரணாகப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
  பார்ப்பானைத் திட்டவில்லையே என்று மதிமாற‌னும்,இதோ திட்டியிருக்கிறானே என்று பராசக்தியும் சொல்லிக்கொண்டு, நாங்கள் பதிலளித்தால் உடனே அதற்கொரு பதிவு புதிதாய்!

  தவறுதலாக கீழ்சாதிக்காரனைத்திட்டி விட்டோமே என்று சரிகட்ட பாரதி பார்பனனைத் திட்டியிருக்கிறான் என்று. ஆங்கிலேயனுக்கே பயப்படாத பாரதி,பாரதிக்கு பயந்து அவன் பாடல்களைத் தடை செய்த ஆங்கிலேயர்கள் இப்படி போகும் கதையை எப்படித் திரிக்கிறிர்கள்.

  தொடருங்கள் உங்கள் செவையை!
  அன்புடன்
  கமலா

 7. தாழ்த்த பட்டோரின் அடையாளமான நாடார் சமூகம் பஞ்சமருக்கு ( பச்சை தமிழருக்கு ) சமூக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவர்களை நாடார் உறவின் முறையாக அறிவிக்க வேண்டும். இதுவே பெருவாரியான நாடார் மக்களின் விருப்பம்.

 8. கள்ளர் பறையர் கனத்த அகம்படியார் மெள்ள மெள்ள இங்கு வந்து வெள்ளாளர் ஆகினர்.

  இன்றைய யாழ்ப்பாண வெள்ளாளர் 100 வருடஙகளுக்குமுன் சாதி மாறியவர்கள். இது வரலாற்றின் அடிப்பைடயில் மிகவும் உண்மையானது. இவர்கள் ஒரு கலப்புச் சாதியினர். மடப்பள்ளி, வடுகர், இடயர், நயினார், வெள்ளாளர், கள்ளர், மறவர், அகம்படியர், செங்குந்தர், சேணியர், தனக்காரர், சாலியர்( நெசவுப்பறையர்), தவஷிகள்ஆகியோரின் கலப்புத்தான் இந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர். இது வரலாற்றினடிப்படையிலும் நடைமுறைச்செய்ற்பாடுகளினடிப்படையிலும் மிக மிகத் தெளிவான உண்மையாகும். இச் சாதி மாற்றங்கள் அன்று கண்டுகொள்ளாமல் அல்லது வெளிக்கொணரப்படாமலிருந்தமைக்கு, வெள்ளாளர் எனும் பெயரின் கீழ் அல்லது அதன் மூலம் ஒருமித்த சாதியப்பெரும்பான்மை தேவையாயிருந்தமையே காரணமாகும். இக்கலப்புப் பெரும்பான்மை பிற்காலங்களில் யாழ்மாவட்டத்தில் ஏனைய சமூகப்பிரிவினர்ககு எதிரானதாக இருந்துவந்துள்ளது. இவைபற்றிய உண்மைகளை பின்வரும் வரலாற்றுத்தரவுகள் மெய்ப்பிக்கின்றன்.அன்று யாழ்மாவட்டத்திலிருந்த சாதிக்குழுக்களின் தரவுகள்( census report of 1830 based on castes of Jaffna), அப்போதைய இலங்கை அரசவர்த்தமானியில் பிரசுரிப்பதற்கென சீமோன்காசிச்செடியினால்1830 ம் ஆண்டு திரட்டப்பட்டது. அவை ௬றுபவை என்ன?

  அன்றிருந்த, அதாவது நூறுவ௫டங்களுக்குமுன்பு இ௫ந்த சாதிகள்:
  Burgher ——-477
  Bramman ——-1935
  Chetty ——— 1807
  Madappally —12995
  Moors —2166
  Paradesy — 1830
  Mallagam — 1501

  Cariar —- 7562
  Brassfounder — 105
  Masons —- 47
  Tuners — 76
  Welper —50
  Cycolas — 1043
  Chandar —- 2173
  Dyers —902
  Chevia — 1593
  Pandaram—- 41
  Parawa — 35
  Tannecaras — 1371
  Silversmith — 899
  Blacksmith — 904
  Carpenters — 1371
  Barbers — 1024
  slave of Burgher — 18
  Washermen — 2152
  Moquah —2532
  Malayalam —210
  Covias — 6401
  Company Nalum — 739
  Pallas —6313
  Parayars — 1621
  Torampas — 197
  Weavers — 272
  Cawere chetty —18
  Tawesy — 437
  Nattowen — 22
  Oil monger — 4
  Tunmilah — 1291
  Pallevely —376
  Simpadawer — 40
  cadia —970
  Nallua — 7559
  Potters — 329
  Ship carpenter — 33
  Marava — 54
  Choyaroot-Digger —408
  Paramber — 362

  Free slaves — 348
  இந்த வரலாற்றின்படி தங்களை அவரவர் சாதிகளின் பெயரால் அழைத்துக்கொள்ளாது, வெள்ளாளர் என அழைத்துக்கொள்கிறார்கள்.இது மிகவும் சிரிப்புக்குரயது.வெள்ளளாளர் என்றால்,வெள்ளத்தை அடக்கிஆள்பவெரன்றும்,மண்ணை உழுது பயிர்த்தொழிலில் ஈடுபடுபவர் என்றே பொ௫ள்படும்.வெள்ளாளர் என்று தங்களை அழைப்பவர்கள் தங்கள் சாதிப்பெயர்களுக்குக்கொஞ்சமேனும் தொடர்பில்லாத தொழில்களையே இன்றுவரை செய்துவ்௫கின்ற்னர்.ஏனென்றால் அவரகளில்பலர் வெள்ளாளர்களே அல்ல என்பதுதான்.இந்த வரலாற்றாதாரங்கள் அதனைமெய்ப்பிக்கும்.
  http://melaikkattu.wordpress.com/

Leave a Reply

%d bloggers like this: