‘பத்த வைச்சிட்டியே பரட்ட’ புது புத்தகம்

வே. மதிமாறன் பதில்கள்

qabw1.jpg 

…………………………………………………………………………………
அதற்கு விழிப்புணர்வு ஆசிரியர், காமராஜ், “கேள்வி பதில் பக்கத்தை ஆரம்பிக்கலாம். அதை நீங்களே எழுதுங்கள்” என்றார்.

“நான் எழுதுவதை விட, மிக பிரபலமான எழுத்தாளர்கள் யாரையாவது எழுத வையுங்கள். அது பத்திரிகைக்கு விளம்பரமாகும்” என்றேன். ஆனால் அவர் என்னையே எழுதும்படிக் கட்டாயப்படுத்தினார்.

‘சோ, சுஜாதா, மதன், சுந்தர ராமசாமி, ஞாநி’ இவர்களாலேயே கேள்விகளுக்குப் பதில்கள் எழுதமுடியும்போது, என்னால் முடியாதா என்ன?’ என்று துணிந்து ஒத்துக் கொண்டேன். ‘விழிப்புணர்’வில் ஆரம்பித்து ‘சமூக விழிப்புணர்வு’ வரை மொத்தம் ஆறு இதழ்களில் பதில்கள் எழுதினேன்.

என் பதில்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வரவேற்பைப் பெற்றது.
மாரக்ஸ், பெரியார், அம்பேத்கர் பற்றியும் கலை, இலக்கியம் குறித்தும் ஆழ்ந்த ஞானம் உடையவர்களில் இருந்து இவைகள் பற்றி எதுவும் தெரியாத நபர்கள் வரை பதில்கள் பலரின் கவனத்தைக் கவர்ந்தது.

அந்த கவனம் – பாராட்டுதலாக, கோபமாக, எரிச்சலாக, பொறாமையாக பல்வேறு வடிவங்களில் `அவதாரம்` எடுத்தது.

நமது பதில்களின் தாக்கத்தால், ‘பத்தவைச்சிட்டியே பரட்ட’ என்கிற பாணியில் புதிதாக சில பத்திரிகைகளிளும் ‘கேள்வி பதில்’ பகுதியைத் துவங்கின.
சில எழுத்தாளர்களும் ஆர்வ மிகுதியால் நமது பாணியை பின்பற்றி, கேள்விக்கு பதில்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். வாழ்த்துகள். இப்படி ஒரு அலையை உருவாக்கியதற்காகக் தோழர் கு. காமராஜுக்கு நன்றி சொல்லவேண்டும்.
முன்னுரையில் வே. மதிமாறன்…

பக்கங்கள் 88.  விலை ரூ. 35.

அங்குசம் வெளியீடு

தொடர்புக்கு;

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384


சென்னை புத்தகக் காட்சியில்கீழைக்காற்று, அலைகள், அரும்பு,  விடியல், பாரதி புத்தகாலயம், ஓயாசிஸ், பொன்னி,  புதுப்புணல்,  மித்ரா,  நிவேதிதா கடைகளில் கிடைக்கும்.

book2.jpgw1.jpgbook3.jpgw2.jpgbook2.jpgw1.jpg

மேலும் ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’, ‘பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்’ புத்தகங்களும் இந்தக் கடைகளிலேயே கிடைக்கும்.

4 thoughts on “‘பத்த வைச்சிட்டியே பரட்ட’ புது புத்தகம்”

 1. வர்ணாசிரம அமைப்பு:

  வர்ணாசிரம கொள்கை என்பது, ஒரு மனிதனுக்கு இயற்கையாக என்ன அறிவும் திறமையும் இருக்கிறதோ அதற்கேற்றாற்போல் கடமைகளை வகுத்து கொடுப்பதாம். இதில் மனிதவர்க்கத்தை நான்கு விதமாக பிரிக்கிறார்கள்.
  ௧. பிராமணன் – அறிவாளி வர்க்கத்தை சார்ந்தவனாம். சமூகத்தின் மூளை போன்றவனாம், இவனது மேற்பார்வையில் தான் முழுச்சமூகமும் இயங்குமாம். பிரம்மாவின் தலை பாகத்தில் இருந்து வந்தவனாம்.
  ௨. சத்ரியன் – அரசாங்கம், போது மேலாண்மை, நாட்டின் பாதுகாப்பு போன்றவற்றை கவனித்து கொள்பவனாம். பிரம்மாவின் கைகளிலிருந்து வந்தவனாம்.
  ௩. வைசியன் – விவசாயம், வியாபாரம், விநியோகம் போன்றவற்றை கவனித்து கொள்பவனாம். பிரம்மாவின் வயிற்றுப்பகுதியிலிருந்து வந்தவனாம்.
  ௪. சூத்திரன் – தனித்து இயங்க முடியாதவனாம். அறிவிக்குன்றியவனாம். மேலேக்கூறிய மூன்று வகுப்பினர்க்கு பணிசெய்து பிழைப்பவனாம். பிரம்மாவின் கால் பகுதியிலிருந்து வந்தவனாம்.

  இதற்க்கும் மேலே ஐந்தாவதாக பஞ்சமன் என்றொரு வர்க்கத்தை ஒருவாக்கி சமூகத்தில் மிகவும் கீழ்த்தரமான வேலைகளை செய்ய வைத்துக்கொண்டார்கள்.

  மிக விவரமாக சமூகத்தை பிரித்து எப்பொழுதும் தங்களுக்கு பாதிப்பில்லாதபடி பார்த்து கொண்டார்கள் பிராமணர்கள்.

  ஆகமொத்தத்தில் செருப்பு தைக்கிறவன் செருப்பு மட்டுமே தைப்பான், சாணி வார்றவன் சாணி மட்டுமே வாருவான், சூடம் காற்றவன், சூடம் மட்டுமே காட்டுவான்.

  பெரியார் என்று ஒருவர் இல்லாதிருப்பின் தமிழகமும் சமூக நீதி-இல்லா தரிசாகியிருக்கும். எப்படி நமக்கு அரசியல் விடுதலை-யைப்பற்றி சரியாகப்புரிவதில்லையோ, அது போல சமூக விடுதலையைப்பற்றியும் புரிவதில்லை, பலருக்கு, நான் உட்பட. நாம் பெற்ற சமூக விடுதலை என்ன என்பதை அறியாமலேயே அந்த மரம் தரும் கனிகளை சுவைத்துக்கொண்டிருக்கிறோம்.

  ஆத்திரம் அறிவிற்கு சத்துரு! பகுத்தறியும் பாங்கு அனைவருக்கும் இருந்துவிட்டால் உலகப்பிரச்சனை பலவற்றிற்கு எளிதில் விடை கண்டுவிடலாம்

Leave a Reply