பார்ப்பன பட்டர் பாரதி

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 8

இரண்டாவது அத்தியாயம்

‘ஈனப் பறையர்களேனும் – அவர்
எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவர் அன்றோ?

என்ற வரியில் ‘எம்முடன்’ என்பது ஆரியர்கள்தான் என்று-

‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்ற வரியில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே தெரிந்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
‘பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்’
என்ற வரிகளுக்கு அறிஞர்கள் புல்லரித்தால், இந்த வரிகளுக்கெல்லாம் என்ன செய்யலாம்?

sivaji.jpg

சிவாஜி-அவுரங்கசீப் சண்டையை உதாரணம் காட்டி முகலாயர்களுக்கு எதிராக, ‘நம் கலாச்சாரத்தையும், நம் புனித மண்ணையும் பாதுகாக்க போர் புரிந்த மாபெரும் இந்து மன்னன் சிவாஜி, என்று நிறுவி, அதை கிறித்துவ வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நாம் புரிந்து கொள்ள வேண்டும்’ –

என்று கடந்த காலவரலாற்றில் இருந்து மிகத் தந்திரமாக பாடம் கற்பிக்கும் பாரதி, அதே சிவாஜி மன்னாகும்போது,

‘நீ சூத்திரன், மன்னனாகக் கூடாது’

என்று ஆகமங்களை அள்ளிப்போட்டு குறுக்கே நின்ற பார்ப்பன பட்டர்களைப் பற்றி, ஆதரித்தோ, எதிர்த்தோ ஒரு வார்த்தைக் கூட பாடவில்லை, பாட்டுக்கார பாரதி.

இஸ்லாமியர்களை விரோதிகளாகச் சித்தரித்து தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களை அடியாட்களாக மாறி, மாறி பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கே குழிபறிக்கும் பார்ப்பனீய இந்து மதச் சிந்தனை இதில் இருக்கிறதா இல்லையா?

-தொடரும்

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி

Leave a Reply

%d bloggers like this: