`தலித்துகள்’ என்று சொல்வது தவறு

dalit.jpg
தாழ்த்தப்பட்ட மக்களை ‘தலித்’ என்று சொல்வது தவறா?

தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் தலித்என்ற சொல்லை பயன்படுத்தவில்லை.

பெரியார், ‘தாழ்த்தப்பட்டவர்கள், ஆதி திராவிடர்கள்என்ற சொற்களையே பயன்படுதினார்.

 தலித்என்பது தன்னுடைய தாய்மொழி சொல்லாக இருந்தும், டாக்டர். அம்பேத்கர் அதை பயன்படுத்தவில்லை. ஷெடியூல்ட் காஸ்ட், தீண்டப்படாத மக்கள்என்ற சொற்களையே பயன்படுத்தினார்.

தலித்என்ற அந்த மராட்டிய சொல்லுக்கு நொறுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள்என்ற அர்த்தம் சொல்லுகிறார்கள்.

ஒரு வேளை தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் குறிக்கிற தனி சொல்லை மட்டும்தான் பயன்படுத்துவது, வேறு சொற்களை பயன்படுத்தினால் அதில் தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத பிறர் ஊடுறுவ வாய்ப்பு ஏற்படும். அது இடஒதுக்கீடு விஷயத்தில சட்ட சிக்கலை ஏற்படுத்தும், தாழ்த்தப்பட்டவர்களோடு, தீண்டாமைக்கு உள்ளாகாத மற்றவர்களும் ஒதுக்கிட்டில் உரிமைகேட்க வாய்ப்பிருக்கும் என்பதால் பிற சொற்களை பயன்படுத்துவதை டாக்டர். அம்பேத்கர் தவிர்த்திருக்கலாம்.

ஆனால் தலித்என்ற சொல் தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கிற பொதுச் சொல்லாக இன்று அறியப்பட்டிருக்கிறது. தலித்என்று சொல்வது தவறில்லை. தலித்துகள்என்று சொல்வதுதான் தவறு. அது ஆடுகள், மாடுகள் போன்று அஃறிணை போல் பயன்படுத்தப்படுகிறது. அதனால் தலித் மக்கள்என்று சொல்வதே, மரியாதைக்குரியதாக இருக்கும்.

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்தில்

One thought on “`தலித்துகள்’ என்று சொல்வது தவறு

  1. தமிழ்நாட்டில் , ஆதிதிராவிடர் என்றனர் . இந்தியா முழுதும் தலித் என்று குறிப்பிடுகின்றனர் . தமிழர் , ஆதித் தமிழர் என்ற வழக்குச் சொல்லும் உள்ளது . சரியாகப் பயன்படுத்தி சாதியின் கொடுமையை ஒழிப்போம் . நன்றி.

Leave a Reply

%d bloggers like this: