பாரதியின் நாலுவர்ண தேச பக்தி

     

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 9

இரண்டாவது அத்தியாயம்

barathi001.jpg

 வேதத்தில் ஜாதிய வேறுபாடு கிடையாது,

‘வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே’

என்றெல்லாம் ஜாதிய எதிர்ப்பாளர் மாதரி, கவிதையளக்கிற சுப்பிரமணிய பாரதி – மனுஸ்மிருதியையோ, நாலு வர்ணத்தையோ-தன் நெருப்புக் கவிதைகளால் ‘தீமூட்ட’ மறுக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் நாலு வர்ணத்துக்கு நல்வாழ்த்து ஒன்று பாடியிருக்கிறார்,

‘வேத மறிந்தவன் பார்ப்பான் – பல
  வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல் – தண்ட
 நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்
  பட்டினி தீர்ப்பவன் செட்டி.

…………………………………………………………………………
…………………………………………………………………………

நாலு வகுப்பும் இங் கொன்றே – இந்த
 நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே – செத்து
 வீழ்ந்திடும் மானிடச் சாதி’

-என்று ராஜகோபால ஆச்சாரியருக்கே குலக்கல்வி திட்டத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறார், இந்த ராஜகுரு.

“அந்தப் பாடலில், பாரதி தனக்கே உரிய முறையில் – ஜாதி ஒற்றுமையை வலியுறுத்துகிறார். ஜாதியக் கல்வியை ஆதரிக்கவில்லை”
-என்று அவரின் பாடலுக்கு ஒட்டுப் போட முயற்சிப்பவர்களை, உருட்டுக் கட்டை எடுத்துக் கொண்டு ஓட, ஒட விரட்டுகிறார்-தன் கட்டுரையில்.

‘அந்நிய-வஸ்து – வர்ஜனம், ஜாதீயக் கல்வி, பஞ்சாய்த்து, சரீரப் பயிற்சி – இந்த நான்குமே சுதேசியம் என்ற புண்ணிய பலத்தைத் தாங்குகின்ற நான்கு தூண்களாகும். இவற்றை ஆதரிப்பது நமது கடமை. இதில் சட்டத்திற்கு எவ்விதமான விரோதமும் கிடையாது. இவற்றை ஆதிக்காமலிருப்பவர்கள் தேசத் துரோகிகள் ஆவார்கள்.’

-என்று தன் நாலுவர்ண தேச பக்தியை வெளிப்படுத்துகிறார்.

-தொடரும்

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி