பாரதியின் திராவிட மறைப்பு

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 10

இரண்டாவது அத்தியாயம்

bharathi4.jpg

திக்க வெறி கொண்ட முகலாயர்களும், ஏகாதிபத்திய வெறியர்களான வெள்ளையர்களும் – பல்லாயிரம் மைல் கடந்து வந்து இந்த மிதவாத, தீவிரவாத சுதந்திரப் போராட்ட கோஷ்டிகளைவிடவும் அதிகமாக ரத்தம் சிந்தி – இந்த ‘போங்கு’ மன்னர்களிடம் சண்டையிட்டுத் தியாகம் செய்து – பாடுபட்டு உருவாக்கிய இந்த நாட்டை, கவிராஜன் பாரதி கொஞ்சமும் கூசாமல்,

பாரதம் என்கிறார்

ஆரிய பூமி என்கிறார்

ஆரியர் என்கிறார்

‘இந்தியா’ என்பது கூட ‘இந்து’ என்பதின் திரிபு என்பதில் பெருமை கொள்கிறார்.
சற்றே கீழ் இறங்கி வந்து,

தமிழ் நாடு என்கிறார்,

தமிழர் என்கிறார்.

ஆனால் நிரம்ப ஞாபகத்தோடு திராவிடம் என்பதையே மறந்து போகிறார்.

ஏன்?

ஆரியம்-ஆரியர்-தமிழ் நாடு-தமிழர்-இந்தியா-இந்தியர் இப்படி- எப்படி மாற்றிச் சொன்னாலும் அதனுள் பார்ப்பனரும் அடங்குவர்.

திராவிடம் – திராவிடர் என்று சொன்னால் – அதில் பார்ப்பனர்களை எப்படிச் சேர்ப்பது?

இந்தக் கேள்வி சுப்பிரமணிய பாரதியை புரட்டி எடுத்திருக்கிறது.
அதன் பொருட்டே ‘ஆரிய நாடு – ஆரிய பூமி’ என்று அழுத்தந்திருத்தமாக சாட்சிகளோடு பொய் சொல்கிறார்.
         

                    ***

‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்’

-என்று சூதில் மன்னனான கண்ணன், கீதையில் சொன்னதாக சொல்லப்பட்டதை, சூதாட்ட சகோதரரான அர்ஜுனன் மேற்கோளாகச் சொல்வது போல், ‘பாஞ்சாலி சபதத்தில்’ சொல்கிறார்.
அதையே நாம் பாரதியின் சிந்தனைகளுக்கும் சொல்லி வைப்போம்,

‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்’

-தொடரும்

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி