‘பிராமின்ஸ் ஒன்லி’

pod_ramya.jpg

 

உள்ளே-வெளியே ஆச்சாரத்தின் அவதாரங்கள்
தொடர்ச்சி –2

 -வே. மதிமாறன்

  ‘அடுத்தவர்களை தாழ்த்துவதின் மூலம் தன்னை உயர்த்திக் கொள்வது’ அதற்கு பெயரே ஆச்சாரம். அதை சில எடுத்துக்காட்டுகள் மூலம் பார்ப்போம்.

       

குடுமி வைப்பதுதான் ஆச்சாரம். கிராப் வைத்துக் கொண்டார்கள். மீசை இல்லாமல் இருப்பதுதான் ஆச்சாரம். மீசை வைத்துக் கொண்டார்கள். காபி, டீ குடிப்பது ஆச்சாரமில்லை. மாறாக, காபியே இன்று ஆச்சாரமாக அவதாரம் எடுத்துருக்கிறது.

மாதவிலக்கு சமயங்களில் வீட்டின் புழக்கடையில் இருந்து வீட்டிற்குள் வருவதே ஆச்சாரக் கேடு. இன்று வேலைக்கே வருகிறார்கள். மடிசார் கட்டாமல் இருப்பதே ஆச்சாரக் கேடு. இன்று ஜீன்ஸ் பேண்டில் வருகிறார்கள். பெண்கள் சினிமா பார்ப்பதே ஆச்சாரக் கேடு.

ஆனால் அந்தக் காலத்து வசுந்தர அவுங்க பொண்ணு வைஜெயத்தி மாலா, பிறகு ருக்மணி அவுங்க பொண்ணு லட்சுமி, அவுங்க பொண்ணு ஐஸ்வர்யா, சந்தியா அவுங்க பொண்ணு ஜெயலலிதா இதற்கும் நடுவுல சவுகார் ஜானகி அவுங்க பேத்தி வைஷ்ணவி, சச்சு, வெண்ணிராடை நிர்மலா, ஹேமாமாலினி, ஸ்ரீவித்யா,  சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், சுகன்யா, திரிஷா, மல்லிகா ஷெராவத், சொர்ணமால்யா, பிரியா மணி, வசுந்தரா… என்று ‘ஆச்சார’ மாக நிறையப் பேர் இருக்கிறார்கள்.

(வேலைக்குப்போவதையும் நடிக்க வந்ததையும் தவறு என்று சொல்லவில்லை. மற்ற ஜாதிக்காரர்களால் ஏற்படும் `ஆச்சாரக்கேட்டிற்காக` அவர்களை அவமானப்படுத்துகிற ஆச்சாரமானவர்கள், இவைகளை கண்டிப்பதில்லை.)

முட்டைகூட இன்று ஆச்சாரமான உணவாக மாறியிருக்கிறது.

விதவைகளை சங்கராச்சாரியார்கள் பார்ப்பதே ஆச்சாரக் கேடாக இருந்தது. ஜெயேந்திரனை போன்ற சங்கராச்சாரி விதவைகளுக்கு  மறுவாழ்வு கொடுக்கிற அளவுக்கு மாறி இருக்கிறார்கள்.

பார்ப்பனர் கடல்கடந்து வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது. ‘பொண்டாட்டியையே ஒருத்தன் தூக்கிகிட்டு போய்ட்டாக்கூட  பாலங்கட்டி போய்தான் திரும்ப கூட்டிட்டு வரணும்’ என்று ராமாயண கதையிலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இன்றைய நிலை – காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி என்று வாழ்கிறார்கள்.
அப்படியானால் முற்றிலுமாக ஆச்சாரத்தை கைவிட்டுவிட்டார்களா?

தன் ஜாதிக்குள் தன் உறவுக்குள் ஆச்சாரத்தைக் கடைப்பிடிப்பதை விட்டுவிட்டார்கள் அல்லது  கைவிடுவது எங்கு லாபமோ, அங்கு விட்டிருக்கிறார்கள்.
ஆச்சாரத்தைக் கடைப்பிடிப்பதினால் எங்கு நஷ்டமில்லையோ, அங்கே ஆச்சாரத்தைக் கடைப்பிடித்து அடுத்த ஜாதிக்காரர்களை, மதக்காரர்களை அவமானப்படுத்தி தன்னை மேன்மைப் படுத்திக் கொள்கிறார்கள்.

இந்த நாகரீகமானவர்கள்தான் இன்னமும்  ‘பிராமின்ஸ் ஒன்லி’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
நகர்புறங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடு தர மறுக்கிற பிற்படுத்தப்பட்ட ஜாதிவெறியர்களும் இருக்கிறார்கள்.

அவர்களின் இந்தக் கேவலமான ஜாதி வெறியின் அவமானம் ஓர் அளவுக்கு அவர்களுக்கு உறைத்திருப்பதினால்தான் அந்த உணர்வை பகிரங்கப்படுத்திக்கொள்ளாமல் சுற்றி வளைத்து விசாரித்து தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் வீடு தர மறுக்கிறார்கள்.

ஆனால் இது போன்று  எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல், ‘எங்கள் ஜாதிக்காரர்களுக்கு மட்டும்தான்’ என்று பகிரங்கமாக போர்டு வைத்திருக்கிற ஒரே ஜாதி, இந்த ‘ஆச்சார’ ஜாதிதான்.

அதற்கு அவர்கள் சொல்லுகிற காரணம் “நாங்கள் ரொம்ப ஆச்சாரமானங்க. சைவம். அசைவம் சாப்பிடுகிறவர்கள் யாராவது அருகில் குடி வந்தால், அது எங்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்”

நியாயந்தான். அப்படியானால் என்ன ‘போர்டு’ வைக்க வேண்டும்?
‘வெஜிடேரியன் ஒன்லி’
அப்போ எதுக்கு ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு?

இப்போ புரியுது இல்ல, ஆச்சாரத்திற்கான அர்த்தம்.

-தொடரும்
        

உள்ளே-வெளியே ஆச்சாரத்தின் அவதாரங்கள்

natarajan.jpg 

                                                                       -வே. மதிமாறன்

‘ஆச்சாரம்’ அல்லது ‘ஆசாரம்’ என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு, ‘ஒழுக்கம்’ என்று அர்த்தம் சொல்லுகிறார்கள்.

ஆனால் அந்தச் சொல்லை பயன்படுத்துகிறவர்கள்  ‘ஒழக்கம்’ என்ற அர்த்தத்தில் மட்டும் பயன்படுத்துவதில்லை. புரிந்து கொள்பவர்களும் அப்படி மட்டும் அதை புரிந்து கொள்வதுமில்லை.

“எங்க பாட்டிதான் ரொம்ப ஆச்சாரம். நாங்க ஆச்சாரம் எல்லாம் பாக்கிறதில்ல.” என்று ஒரு பெண் சொன்னால்,
“எங்க பாட்டிதான் ரொம்ப ஒழுக்கம். நாங்க ஒழுக்கம் பாக்கறதில்ல” என்று அதை மிக நேரடியாக யாரும் அர்ததப்படுத்திக் கொள்ளமுடியாது.

அப்படி எனில் ‘ஆச்சாரம்’ என்பது சுத்தமா?

ஒரு நாளைக்கு நாற்பது வேளை குளித்தாலும், அசைவ உணவை உண்ணாதவராக இருந்தாலும், மிகத் தீவிரமான பக்திமானாக இருந்தாலும் ஒரு தாழ்த்தப்பட்டவரை ‘ஆச்சாரமானவராக’, ‘பிராமணராக’  சமூகம் கருதாது.

குளிக்காமல் இருந்தாலும், குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடந்தாலும், விபச்சாரிகளோட பொழுதெல்லாம் இருந்தாலும், கொலை செய்தாலும் சுருங்கச் சொன்னால், ஜெயேந்திரனைப் போல் வாழ்ந்தாலும் –

ஒரு பார்ப்பனரை சமூகம் ஆச்சார கேடானவராக கருதி அவர் மீது தீண்டாமையை பிரயோகிக்காது.

‘ஆச்சார உயர்வு’, ‘பார்ப்பன மேன்மை’ என்பதும், ‘தீண்டாமை’ யும் வளர்ப்பில் இல்லை. பிறப்பில் இருக்கிறது என்பதுதான் இந்து மதம். பார்ப்பனியம்.

பிறப்பால் தாழ்த்தப்பட்டவராக இருந்த காரணத்தால்தான் மற்ற நாயன்மார்களை விடவும், ஒழக்கமாக, நேர்மையாக, சிறந்த பக்திமானக இருந்த நந்தனாருக்கு மட்டும், ‘பார்ப்பன அடியாள், களவானி பயல் சிவன்’ காட்சி தரவில்லை.

இந்த ஆச்சாரம் என்பது தன் ‘மேன்மை’யை உயர்த்திக் சொல்வதற்காக மட்டும் உருவானதில்லை. அடுத்தவர்களை தாழ்த்திச் சொல்வதற்காகவே உருவானது.
ஒரே வரியில் எளிதில் விளக்க வேண்டும் என்றால்,
‘அடுத்தவர்களை தாழ்த்துவதின் மூலம் தன்னை உயர்த்திக் கொள்வது’ அதற்கு பெயரே ஆச்சாரம். அதை சில எடுத்துக்காட்டுகள் மூலம் பார்ப்போம்.
             -தொடரும்

         

“கிராமங்கள் ஒழிக”

g66868_u42290_dalit_girl_2.jpg 

                        – வே. மதிமாறன்

தீண்டாமையை கடைப்பிடிப்பதில் பார்ப்பனரல்லாத ஜாதி இந்துக்ககளிடம் பெருமையோடு சுயநலம் சார்ந்த ஒரு ‘தந்திரம்’ இருக்கிறது.

அந்த தந்திரம் சில நேரங்களில் நாயைப் போல் குழைந்து வாலை ஆட்டிக்கொண்டும், பல நேரங்களில் தன்னை விட பலவீனமான விலங்குகளிடம் வீரம் காட்டும் புலியைப் போல் பாய்ந்து குதறவும் செய்கிறது.

ஜாதி இந்துக்கள், ஊரின் பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்டவரை இறங்க அனுமதிப்பதில்லை. ஊர் குளம் என்பது எந்த ஜாதி இந்துக்கும் தனிப்படட சொத்துக் கிடையாது. அது ஊரின் பொதுச் சொத்து.

ஊரின் பொதுச் சொத்தில் தீண்டாமையை தீவிரமாக கடைப்பிடிக்கிற ஜாதி இந்து, தன் தனிசொத்தில் அதை இன்னும் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டுமல்லவா? ஆனால் பெரும்பான்மையாக தன்னுடைய தனிச் சொத்து இடங்களில் அவன் தீண்டாமையை கடைப்பிடிப்பதில்லை.

ஆம், ஊரின் பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இறங்க எதிர்ப்பு தெரிவிக்கிற ஜாதி இந்துதான், தன் சொந்த நிலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இறங்கி வேலை பார்ப்பதற்கு, அவர்களின் வீடு தேடி சென்று அவர்களுக்கு கூலி கொடுத்து அழைத்துவருகிறான்.

தன் வீட்டுத் திண்ணையிலோ அல்லது ஊரின் தேநீர் கடையின் பென்ஞ்சிலோ தாழ்த்தப்பட்டவரை தனக்கு சமமாக உட்கார அனுமதிக்காத ஜாதி இந்து, ஊருக்குள் வரும் பஸ்சில் ஓடிபோய் ஏறி தாழ்த்தப்பட்டவருக்கு அருகில் இடம் பிடித்து அவரை உரசிக் கொண்டு உட்காருகிறான், அதுபோலவே திரையரங்கிலும்.

ஊர் பொதுக்குளத்தில் தூர் வாருவதற்கும், குளம் வெட்டுவதற்கும் தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்திக் கொள்கிற ஜாதி இந்துக்கள், குளத்தில் தண்ணீர் வந்த பிறகு தாழ்த்தப்பட்ட மக்களை இறங்க அனுமதிப்பதில்லை.

ஒரு ஜாதி இந்து தன்னுடைய தேவைகள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் தீண்டாமையை கைவிடுகிறான். தன்னுடைய தேவகைள் எங்கெல்லாம் பாதிக்கப்படுவதில்லையோ, தாழ்த்தப்பட்ட மக்களின் உழைப்பு அல்லது உதவி அவனுக்கு எங்கெல்லாம் கட்டாயமாக தேவையில்லையோ அங்கெல்லாம் அவன் தீண்டாமையை கடைப்பிடிப்பதின் மூலமாக தன்னை பெரிய மனிதனாக, தாழ்த்தப்பட்டவர்களைவிடவும் தகுதி வாய்ந்தவனாக கருதிக் கொள்கிறான்.

எந்தவிதமான பொருளாதாரக் காரணங்களும் இல்லாமல் வெறும் ‘கருத்தே’ ஒரு தனி ஜாதி இந்து, கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை விட ‘உயர்ந்தவன்’ என்கிற உளவியல், அவனுக்கு இலவசமான அதிகார மயக்கத்தைத் தருகிறது. தீண்டாமையை இழப்பது, தன் அதிகாரத்தை இழப்பதாகவே அவன் உணர்கிறான்.

குறிப்பாக – கோயில் திருவிழா, சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் ‘பிற்படுத்தப்பட்ட இந்து ஜாதி திமிர்த்தனத்தின்’ அடையாளங்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வடிவங்கள். அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் ‘கூத்தரப்பாக்கம்’ ‘கண்டதேவி’ போன்ற கோயில்களில் தேர் வடம் பிடிப்பதைக் கூட ஜாதிஇந்துக்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. ‘தன் வழிபாடு கெட்டாலும் பரவாயில்லை, அவர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது’ என்று கோயிலையே இழுத்து மூடுகிறான்.

இந்த அநீதியைக் காப்பாற்ற தன்னுடைய உயிரை ‘தியாகம்’ செய்யக்கூட அவன் தயாராகிறான். இந்த அநீதிக்காக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்துகிற வன்முறையைதான் தன்னுடைய ‘வீரமாக’ அடையாளப்படுத்துகிறான்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது எந்த ஜாதி எல்லாம் நேரடி வன்முறையில் இறங்குகிறதோ, அந்த ஜாதிக்காரர்களைத்தான் “தைரியமானவர்கள், வீரமானவர்கள்” என்று ‘உயர்ஜாதி’க்காரர்கள் ‘ஏத்தி’ விடுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

கோயில்களில் இவ்வளவு திமிர்த்தனமும், ஊரின் ‘டீ’ கடையில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி கிளாசும் வைக்கிற ஜாதி வெறி பிடித்த இந்துக்கள், சாராயக்கடையில் தாழ்த்தப்பட்டவர்கள் குடித்துவிட்டு வைத்த மிச்ச சாராயத்தை நக்கிக் குடிக்கிறார்கள் என்பது நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது.

ஆக, தீண்டாமையை எதிர்த்து தாழ்த்தப்பட்டவர்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு ஒன்றுமில்லை.

முழுமுழுக்க அதில் தண்டணைக்குரியவர்களும், திருந்தவேண்டியவர்களும், மனம் மாற வேண்டியவர்களும் ஜாதி இந்துக்கள்தான்.

                              ***

தீண்டாமைக்கு எதிராக முற்போக்காளர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தாலும், நகரமயமாக்கல்தான் தீண்டாமையை தீவிரமாக விரட்டும்.

ஏனென்றால், கிராம அமைப்பு முறைதான் தீண்டாமையை பேணி காக்கிறது.கிராமங்களில் இருந்து வெளியேறி நகரத்தில் குடியேறிய தாழ்த்தப்பட்ட மக்கள்தான் முன்னேறி இருக்கிறார்கள்.

நகரத்தில் மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ்கிற தாழ்த்தப்பட்ட மக்கள், தங்கள் சொந்த கிராமத்துக்கு செல்லும்போது, எந்த கல்வியறிவும் அற்ற முட்டாள் ஜாதி இந்துவால் கூட அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பது மட்டுமல்ல பல நேரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் அறிவும், சுயமரியாதையும், வசதியும், சமூக அந்தஸ்தும் ஜாதி இந்துவின் ஆத்திரத்திற்கு ஆளாகி அவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறையை ஏவுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த அனுபவம் உலகமே வியந்து பார்த்த டாக்டர் அம்பேத்கருக்கே ஏற்பட்டிருக்கிறது.அதனால்தான் காந்தியார், “கிராமங்கள்தான் இந்தியாவின் உயிர் நாடி, கிராமரஜ்ஜியம் இருந்தால்தான் ராமாராஜ்ஜியம் வரும்” என்றார்.

அதற்காகவேதான் பெரியார், “கிராமங்கள் ஒழிக” என்றார்.

 மார்க்சிய-பெரியாரிய-பொதுவுடமை கட்சியின் ‘சிந்தனையாளன்’ மாத இதழின் 2008 தை பொங்கல் மலரில் எழுதியது.

கலைஞருக்கு எதிராக மாமா மாலுனும் வாஸந்தி மாமியும்

வே. மதிமாறன்  
கலைஞரும் ஸ்ரீரானும் சில இலக்கிய வானரங்களும்

தொடர்ச்சி 2

மாலன் எழுதுறாரு, “பாம்பன் நீரிணையில் நடந்து வரும் அகழ்வு. நம் அரசியல் தலைவர்களின் அடி மனதில் உள்ள அச்சங்களையும் ஆசைகளையும் காழ்ப்புகளையும் கூட வெளிக்கொணர்ந்து விட்டது

அதையே நாம் இப்படி எழுதுவோம், கலைஞரின் ராமன் பற்றிய பேச்சுக்கு பிறகு, நடுநிலையாளர்களாக, மதநல்லிணக்கவாதியாக, சிறுபான்மையினரின் ஆதரவாளராக வேஷம் போட்டுக்கொண்டிருந்த, பார்ப்பன பயங்கரவாதிகள் தங்கள் உண்மை முகத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

அதற்கு ஒரு எடுத்துகாட்டு மாமியின் வெர்ஷனில்இருந்து பார்ப்போம்,

அரசியலில் பதவியும் புகழும் கீர்த்தியும் செல்வாக்கும் இருக்கும் வரை எந்தக் கொம்பனும், கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் சாட்சாத் ராமன் உள்பட, நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற எண்ணம் ஒரு மூத்த அரசியில் தலைவருக்கு வந்துவிட்டால், அது உச்சநீதிமன்றம் வரை போய்விடும். நீதிமன்றத்தில் ராமன் ஆஜர் ஆகப் போவதில்லை. ‘நெற்றிக்கண் திறப்பினும் கோதண்டத்தை எடுத்தாலும் குற்றம் குற்றமே‘! என்று சொல்லும் வாய்ப்பு பகுத்தறிவுவாதிக்குக் கிடைக்காது. ஆனால் மூக்கு உடையலாம். ஆக வயதிற்கு விவேகம் வேண்டாமா என்று நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கேட்கலாம்.”

நமது அரசியல் தலைவர்கள், மூதறிஞர், முத்தமிழ் வித்தகர் என்று கொண்டாடப்படும் மூத்தவர்கள் பதவி தரும் போதையால், உன்மத்தத்தால் எத்தனை கேவலமாக, நாகரிகமற்ற மொழிப் போரில் இறங்குவார்கள்…….”

ராமர் பாலத்தை இடிக்காமல் திடடத்தை நிறைவேற்ற மாற்று வழிகளை மூன்று மாத தவணைக்குள் ஆராய்வதாக உசச் நீதிமன்றத்தில் சொன்னது. (காங்கிரஸ் அரசு) கருணாநிதி இதை சற்றும் எதிர்பார்த்து இருக்கமாட்டார். அருடைய ஏமாற்றம் புரிந்து கொள்ளக் கூடியததான். எந்த காவியத் தலைவனை திராவிட இயக்கம் சளைக்காமல் இடித்து வந்ததோ, அதே ராமனின் பெயரில் அவரது கனவுத் திட்டம் அடிவாங்கிவிடும் என்ற சாத்தியம் அவமானகரமானது. அவரது நாடு தழுவிய கீரத்திக்கும், அரசியல் சக்திக்கும் வயதுக்கும் தோல்வியையும் அவமானத்தையும் தாங்க வேண்டிய அவசியம் இல்லை. தாம் போட்ட கணக்கு தப்பிவிட்டது என்ற ஆத்திரத்தை அடக்க வேண்டும் என்ற பக்குவம் அரசியலில் பழம் தின்று கொட்டையை உமிழ்ந்துவிட்ட கருணாநிதிக்கு அவசியம் என்று படவில்லை.”

எத்தனை வயதானாலும், எத்தனை செல்வாக்கிருந்தாலும் நா காப்பது நல்லது. இல்லையென்றால், வயதானதற்கும் பெற்ற அனுபவங்களுக்கும் அர்த்தமில்லை.” இந்த வரிகளில் முதல்வர் மீது வேதாந்திக்கு இருந்த அதே ஆத்திரம் வாஸந்தியிடமும் தெரிகிறது.

எந்தக் கொம்பனும், கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் சாட்சாத் ராமன், பகுத்தறிவுவாதிக்கு, மூக்கு உடையலாம், வயதிற்கு விவேகம் வேண்டாமா, பதவி தரும் போதையால், உன்மத்தத்தால் எத்தனை கேவலமாக, நாகரிகமற்ற, எந்த காவியத் தலைவனை திராவிட இயக்கம் சளைக்காமல் இடித்து வந்ததோ, ஆத்திரத்தை அடக்க வேண்டும் என்ற பக்குவம் அரசியலில் பழம் தின்று கொட்டையை உமிழ்ந்துவிட்ட கருணாநிதிக்கு, நா காப்பது நல்லது. இல்லையென்றால் இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கிற உளவியல், கலைஞர் மீது வன்முறையை பிரயோகிக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும், ஜென்ம விரோதத்தையும் வெளிபடுத்துகின்றன.

ஆனால் மாலனோ இல.கணேசன் பாணியில், ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்? வரலாற்று ஆதாரம் உண்டா? மது அருந்துபவர், மாமிசம் உண்பவர் என்பது போன்ற கேலிகளும், விவாதத்திற்கு தயாரா? என் சவால்களும் அவரது ஆரம்ப திராவிடக் கழக நாட்களை நினைவூட்டுகின்றன. ஆனால் இதை அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பேசுவதுதான் பொருத்தமானதாக இல்லை.” என்கிறார்.

நரேந்திர மோடி என்கிற ஒருவன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டல்ல, படுத்தக் கொண்டு, திட்டமிட்டு இஸ்லாமிய மக்களை கொலை செய்கிறான். அதை கேட்பதற்கு வக்கற்றவர்கள், அல்லது அந்தக் கொலைகளை விரும்புகிறவர்கள் ஐனநாயக ரீதியாக ஒருவர் கருத்துசொல்வதை கண்டிக்கிறார்கள். (சுப்ரீம் கோர்ட்டுக்கு ஜட்ஜாபோறதுக்கான முழு தகுதியும் உள்ளவர்கள்.)

கம்யூனிசத்திற்கு நேர் எதிர் கருத்து கொண்ட பிற்போக்காளர்கள், மதவாதிகள், கம்யூனிச விரோதிகள் தங்கள் மோசடி கருத்தை நியாயப்படுத்த முயற்சிக்கும்போது மட்டும் மார்க்சியத்தை வெறும் மேற்கோளாக பயன்படுத்துகிற மோசடிவேலையை செய்வார்கள். அப்படிதான் இந்த மோசடி மாலனும்மார்க்சை மேற்கோள் காட்டுகிறார்:

மதம் ஒரு அபின் என்ற கருத்துக்கு நம்மை இட்டுச் செல்லும் முன், அதை விளக்கும் முகமாக, மதம் என்பது ஒடுக்கப்பட்ட ஜந்துக்களின் பெருமூச்சு, இதயம் இல்லாத உலகின் இதயம் என்று சொல்கிறார் மார்க்ஸ்.” இப்படி பிரித்து மார்க்சையே மதவாதியாக சித்தரிக்கிறார்.

சரியாக 150 ஆண்டுகளுக்கு முன், 1847ல் மார்க்ஸ்எங்கல்ஸால் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இப்படி துவங்குகிறது; ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம்கம்யூனிசம் என்னும் பூதம். போப்பாண்டவரும் ஜாரரசனும், மெட்டர்னிகும் கிசோவும், பிரெஞ்சுத் தீவிரவாதிகளும் ஜெர்மன் உளவாளிகளுமாய், பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக் கூட்டு சேர்ந்திருக்கின்றன.”

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதை கடவுள்என்று சொல்வதுதான் உலக வழக்கம்.ஆனால் இவர்களோ, கம்யூனிசத்தை பூதம்என்கிறார்கள். ‘கடவுள்என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தவில்லை. ஏன்?

கம்யூனிசத்துக்கு எதிராக சேர்ந்து இருப்பவர்கள்தான் கடவுள் ஆதரவாளர்கள், போப்பாண்டவர்கள் போன்ற மதவாதிகள். அதனால்தான் அதை புனிதக் கூட்டுஎன்ற ஆன்மீக வார்த்தையால் அடையாளப்படுத்துகிறார்கள். பூதம் என்ற வார்த்தையை கடவுளுக்கு எதிரான, ஆதிக்கத்திற்கு எதிரான சொல்லாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சாத்தான், பூதம், பேய் இவைகளை ஓட்டுவதுதானே மதவாதிகளின் வேலை.

ஒருவேளை மாலன் இன்னொருநாள் கம்யூனிசத்துக்கு எதிரான கருத்துச் சொல்லும்போது, ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே கம்யூனிசத்தை பூதம் என்று சொல்லியிருக்கிறார்கள் மார்க்சும் எங்கல்சும், என்பது கவனிக்கத்தக்கதுஎன்று சொல்வார் போலும்.

இதேபோல் இன்னொரு மோசடி, எதையும் வரலாற்றின் வெளிச்சத்தில் உறுதிப்படுத்திக் கொள்வது என்பது ஒருவகையில் மேற்குலகிலிருந்து நாம் கற்றுக்கொண்ட வழக்கம். கீழ்த்திசை நாடுகளில் வாழ்வை வரலாற்றைவிட இலக்கியத்தில் பதிவு செய்வது என்பதே வழக்கமாக இருந்திருக்கிறது என்பதையும், இலக்கியம் என்பது மக்களைப் பற்றியதாகவும், வாழ்க்கையைப் பற்றியதாகவும் இருந்திருக்கிறது என்பதையும் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.”

வரலாற்றை இருட்டடிப்புச் செய்து அல்லது இலக்கியத்தையே வரலாறாக சித்தரித்ததில் எவ்வளவு மோசடிகள் நியாயப்டுத்தப்பட்டிருக்கின்றன.

சம்பூகனை கொன்ற ராமனை கதாநாயகனாக நியாப்படுத்தகிறதே, அது எது? இலக்கியமா? வரலாறா?

ஆயிரகணக்கான சமணர்களை கொன்ற பிறகும் அன்பே சிவமாக காட்சி தருகிறார்களே சைவ களவானிகள். அது எதனால்? வரலாற்றினாலா? இலக்கியத்தினாலா?

தாழ்த்தப்பட்டவர் என்பதினாலேயே நந்தனைதீயிட்டிக் கொளுத்தி அந்தக் கொலையை புனிதபடுத்தினார்களே, பார்ப்பனர்கள். அது வரலாற்றின் பெயரிலா? இலக்கியத்தின் பெயரிலா?

பார்ப்பான் மேன்மையனவன், சூத்திரன் கீழானவன்என்று சொல்லாத உன் இந்து இலக்கியம் எது? இலக்கியம் முழுவதும் பார்ப்பன நலன், பார்ப்பன உயர்வு, உழைக்கும் மக்களுக்கு எதிரான கருத்துகளாகவே நிரம்பியருக்கிற ஒரு நாட்டில், ‘வரலாற்றைவிடவும் இலக்கியம் மேன்மையானதுஎன்று ஒருவன் சொன்னால், அவன் எப்பேற்பட்ட ஃபிராடாகஇருப்பான்.

இராமாயணத்தில் தண்டிக்கப்பட்டவர்கள் மூவர். வாலி, சூர்ப்பனகை, இராவணன் மூவரும் அடுத்தவர் மனைவிக்கு அல்லது கணவனுக்கு ஆசைப்பட்டவர்கள்.” என்கிறர் இந்த உத்தம புருஷன்மாலன்.

உன் ராமன் சம்பூகனை கொன்னானே, சம்பூகன் என்ன உன் பொண்டாட்டி கையை பிடிச்சா இழுத்தான்?

                                                                                     ***

மாலன் தன் கட்டுரையை இப்படி துவங்குகிறார், ஒரே சொல், ஒரே கணை, ஒரே மனைவி என்று ராமனை வர்ணிக்கும் தியாகராஜரின் கீர்த்தனை ஒன்று உண்டு.” என்று.

அதேபோல் மாமியும்,திருவையாறு போயிருக்கிறீர்களா? தியாகராஜரின் கீர்த்தனைகளை கேட்டிருக்கிறீர்களா? அவரது தெலுங்குப் பாடல்களையும் கேட்டு நெக்குருவி நிற்கும் சாமான்ய தமிழர்களைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கலைஞரை கேட்கிறார். (‘சாமான்ய தமிழர்கள்வார்த்தையை கவனிக்கவும்)

நாமும் அதே தியாகராஜரின் கீரத்தனையை ஒன்றை சொல்லி, ராமனின் பெருமையை உலகுக்கு அறிவிப்போம்.

வனவாசம் புறப்பட்ட ராமன், தன்னுடன் சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லாது சீதையை அயோத்தியிலேயே இருக்கும்படி சொன்னதற்கு, சீதை மொழிந்த மறுமொழி;”ராமா, உன்னிடத்தில் அழகு மாத்திரமே இருக்கிறது. அதைக்கண்டு அனைவரும் மயங்கி விடுகிறார்கள். உனக்கு ஆண்மை என்பது சிறிதும் இல்லை, என் ஒருத்தியைக் காக்க முடியாமல் நிறுத்தி நீ காட்டுக்குப் போனாய் என்று எனது தந்தையார் கேள்விப்படின், “ஹாபுருஷவேஷத்துடன் வந்த ஒரு பெண் பிள்ளை (பேடி)க்கா என் புதல்வியைக் கொடுத்தேன்.” என்று தம்மை நொந்து கொள்வார்.இம் மடவுலகர், ராமனிடம் சூர்யனைப் போன்ற தேஜஸ் ஜொலிக்கின்றது என்று கூறுகின்றனர். இது முழுப் பொய்யான வார்த்தை. மனைவியைப் பிறர்க்கு ஒப்படைத்துப் பிழைக்கும தன்மையான கூத்தாடியைப் போல் நீயாகவே என்னைப் பிறர்க்குக் கொடுக்க விரும்புகின்றனை

(அயோத்தியா காண்டம் 30 ஆவது சர்க்கம்; 229 ஆவது பக்கம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காரச்சாரியார் மொழி பெயர்ப்பு)

திருமதி சீதை தன் கணவன் ராமனை இப்படி கேவலமாக பேசிய இந்த சுட்சுவேஷனுக்குப் பொருத்தமாக ஒரு பாடல் போட வேண்டும் என்றால், தியாகய்யர் ராமனை நினைத்துப் பாடிய எந்துகோராமாஜென்மமு…” என்கிற கீர்த்தனையை இப்படி புரிந்து கொள்ளலாம்,

உனக்கு எதுக்கு ராமா இந்த ஜென்மம்

                                                                                                  ***

மாலனும், வாஸந்தியும் ஏதோ கலைஞர் ராமனைப்பற்றி தன் சொந்தக் கருத்தை தெரிவித்ததைப்போல் கோபப்படுகிறார்கள். ஆனால் அவர் வால்மிகி ராமயணத்தில் இருந்துதான் மேற்கோள் காட்டினார். இவர்களுக்கு குறைந்தபட்ச அறிவு நாணயம் இருந்தால், வால்மிகி ராமயணத்தில் சொல்லப்பட்டிருக்கற மேற்படிஇந்த மாதிரியான செய்திகளுக்கு முறையான விளக்கம் சொல்லிவிட்டு பிறகு பகுத்தறிவாளர்கள் மீது பாயட்டும்.

கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லை என்பதும் நாத்திகவாதி என்பதும் அவரது சொந்த விஷயம்.”

கண்ணாடி அறைக்குள் அமர்ந்து கல்லெறியக்கூடாது. அதுவும் எப்படிப்பட்ட கல்? ஒரே வீச்சில் இந்தியா மொத்ததிலும் உள்ள பெரும்பான்மையான இந்துக்களைப் புண்படுத்தும் ஆயுதமாக.” என்று சீறுகிறார் வாஸந்தி.

ஒரு காலத்தில் கணவன் இறந்தபோது மனைவியை உடன் வைத்துக் கொளுத்திய அநீதியை கண்டித்து, அக்கறை உள்ளவர்கள் எழுந்தபோது, இதேபோல் மதவாதிகள் கோபப்பட்டார்கள். வாஸந்தி கோபப்படறத பார்த்தா உடன் கட்டையைதடை செய்தது இந்துக்களை புண்படுத்தும் செயலாகத்தான் தெரிகிறது.

உடன் கட்டை பழக்கம் தொடர்ந்து இருந்திருந்தால், வாஸந்தியிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரையும் வந்திருக்காது. அதுக்கு பதில் எழுதுற வேலையும் நமக்கு மிச்சமாகி இருக்கும்.

                                                                                               ***

இந்து மதம் பலஆயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் உணர்வுகளில் கலந்தது. அதை எந்த எதிர்ப்பிகளினாலும் அழிக்க முடியாது. அதற்கு ஒரு பாரம்பரியம் உண்டு.’ என்பதே பார்ப்பன அறிவு ஜீவிகளின் ஆவேசம்.

10-1-1947ல் விடுதலை தலையங்கத்தில் தந்தை பெரியார் இப்படி எழுதினார்:

யார் என்ன சொன்னாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் உள்ள இந்து மதத்தை அசைக்க எவராலும் முடியாது. எந்தனையோ எதிர்ப்புகளையும், கஷ்டங்ளையும் சமாளித்துக் கொண்டு உயிரோடிருக்கிறது இந்து மதம்என்று சர். இராதாகிருஷ்ணன் போன்ற மேதைகள் கூறலாம்.

உயிரோடு இருப்பதினால் மட்டுமே ஒரு விஷயம் உயர்வானதாகிவிடுமா?எவ்வளவோ எதிர்ப்புக்களுக்கிடையே எலி, கொசு, தேள், பாம்பு மூட்டைப்பூச்சிகள் கூடத்தான் உயிரோடு இருக்கின்றன. இவைகளெல்லாம் இந்து மதத்தைவிட புனிதமானவைகளா? அதிகப் பலன் தரக்கூடியவையா?”

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாத இதழான ‘புதிய கலாச்சாரம்

ஜனவரி 2008 ல் எழுதியது.

கலைஞரும் – ஸ்ரீராமனும் – சில இலக்கிய வானரங்களும்’

  -வே. மதிமாறன்

shri_hanuman.jpg

 ஒரு சமயம் “காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார்” அவர்கள் திருவாரூர் ‘விஜயம்’ செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை எதிர்ப்பது என்று எங்கள் கட்சியின் (திராவிடர் கழகம்) பெரியவர்கள் திரு. சிங்கராயர், ‘தண்டவாளம்’ ரங்கராஜு ஆகியோர் முடிவு செய்து விட்டார்கள்.………………………………………………………………………

ஒட்டகம், யானை, பதாகை ஏந்திய சிலவீரர்கள், இந்த வரிசைகளுக்குப் பிறகு ஒரு பல்லக்கில் சங்கராச்சாரியார் பவனி வருவது வாடிக்கை! அதே போல பவனி வந்து கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு குரல், “மானங்கெட்ட பசங்களா! இந்த ஆசாமியைத் தூக்க நீங்கதான் கிடைச்சிங்களா? ஏன்! பாப்பான்க தூக்கினாலென்ன?”, என்று கேட்டது. …………………………………………………………………………..

இந்த நிலையில் திடீரெனக் கூச்சல் எழும்பியது மட்டுமல்ல, கட்டையால் அடிப்பது போல ஒரு ஒலி!

 “இறக்கி வைச்சிட்டு எல்லாப் பசங்களும் ஓடுறீங்களா? இல்லே இந்தச் சாட்டையால் வெளுக்கட்டுமா?” என்று ஏதோ ஒரு அடியாட்கள் கும்பலோடு நிற்பது போல ‘தண்டவாளம்’ நினறு கொண்டு ‘பாவ்லா’ காட்டலானார்! அவ்வளவுதான் பல்லக்கை வைத்து விட்டுப் பல்லக்குத் தூக்கிகள் இங்கொருவர் அங்கொருவராகப் பாய்ந்து ஓடிவிட்டனர்

.…………………………………………………………………………..

எங்கள் கூட்டங்களுக்குத் தலைமை வகிப்பது, நன்கொடையெல்லாம் வழங்குவது முதலிய காரியங்களைச் செய்த ‘ஜஸ்டிஸ்’ கட்சிப் பிரமுகர் இராமானுஜ முதலியார் வீட்டில்தான் சங்கராச்சாரியார் “காம்ப்” போட்டிருந்தார். அவரைப் போய்ப் பார்ப்பதென்றால் சட்டை போட்டிருக்கக் கூடாது!

‘தண்டவாளம்’ ஒரு நோட்டீஸ அடித்தார். “சங்கராச்சாரியார் சுவாமிகளைப் பார்க்கச் சட்டை போட்டிருக்கக் கூடாது, ஆண்கள்! ரொம்பச் சரி! பெண்கள் மட்டும் இரவிக்கை போட்டுக் கொண்டு போகலாமா? அதென்ன நியாயம்?” என்கிற வாசகங்களோடு.

யார் எழுதிக் கொடுத்திருப்பார்கள் என்று சொல்லவா வேண்டும்? (கலைஞர்)

திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள், “தமிழ்நாட்டில் பெரியார் என்கிற நச்சாறு ஓடுகிறது” என்று சொல்லிவிட்டார். ………………………………………………………. இந்தச் சமயம் பாரத்துத் திருவாரூர் தியாகாஜப் பெருமாள் கோயிலில் (1-4-44 என்று நினைவு) அவருடைய “உபன்யாசகங்ள்” நடைபெறும் என்று அறிவித்திருந்தார்கள்

. ………………………………………………………………………………….

கருணாநிதி சும்மா இருப்பாரா? அவருடைய கைவண்ணத்தில் “கிருபானந்த வாரியாருக்குச் சில கேள்விகள்” என்கிற தலைப்பில் துண்டு நோட்டீஸ் தயாராகியிருந்தது.

 “அன்பே சிவம் என்கிறீர்களே! 6000 சமணர்களைக் கழுவிலேற்றிச் சித்திரவதை செய்தது உங்கள் சிவ மதமல்லவா?” “முற்றுந்துறந்தவராகக் காட்டிக் கொள்ளும் உமக்கு, கழுத்திலே தங்கம் போட்ட கொட்டை ஏன்? மார்பெல்லாம் ஆபரணாதிகள் ஏன்? காய்ச்சிய பாலும் கற்கண்டும் ஏன்? கார் ஏன்? இரயில் ஏன்?” இப்படிக் கேள்விகள். வாரியார் சுவாமிகள் சுவாரஸ்யமாகப் பேச ஆரம்பித்தார்.

“அன்புதான் சிவம். சிவம்தான் அன்பு. எங்கும் அன்பு தழைக்க வேண்டும் என்பதுதான் எம்பெருமானின் கருணை உள்ளம். பாருங்கள்! என்னென்னவோ உண்டாக்கியிருக்கலாம் அல்லவா எம்பெருமான்? மனிதன் சாப்பிடுவதற்கு எதை உண்டாக்கினார் பாருங்கள்! காய்கறிகளை!! …. கத்தரிக்காய்..வெண்டைக்காய்…”

“அதுசரி, சுவாமிகளே! அதே எம்பெருமான் சிங்கத்திற்காக எந்த உணவை உண்டுபண்ணினார்?”- கணீரென்று கேள்வி எழும்பியது! யாருடைய குரல் என்று கூறவேண்டுமா?(கலைஞர்)

வாரியார் கொஞ்ச நேரம் திகைத்துப் பேச்சை நிறுத்தினார். முன் கூட்டியே ஏற்பாடு செய்தபடி, நாங்கள், “பதில் சொல்! பதில் சொல்!” என்று கத்தலானோம். எங்களை எல்லாம் போலீஸ் துரத்தியது. எங்கள் வேலை முடிந்தது என்று எடுத்தோம் ஓட்டம்! அது முதல் பந்தோபஸ்து இல்லாமல் கோயிலில், உபன்யாசங்கள்’ நடப்பது இல்லை.

(இராம. அரங்கண்ணலின் ‘நினைவுகள்’ என்ற புத்தகத்திலிருந்து….)

இந்த பரம்பரையில் அல்லது இந்த வழியில் வந்த கலைஞர், ‘பேடி ராமனை’ (‘பேடி’ பட்டம் உபயம் திருமதி சீதா ராமன்) பற்றி சொன்ன கருத்துக்கு ‘வேதாந்தி’ என்கிற ஒரு வாந்திபேதி சொன்னான்; “கருணாநிதியின் தலையை கொண்டு வருவோர்க்கு தக்க சன்மானம்” என்று.

அதைக் கேட்டு கோபமுற்ற திமுக தொண்டர்கள், தங்களின் முறையான எதிர்ப்பை பதிவு செய்ததைப் பார்த்து, ‘தங்கள் தலை போய்விடுமோ’ என்று தேவையற்ற பயம் கொண்டு பாஜகவின் எச். ராஜாவும், குமாரவேலும் அலறினார்கள், ஆனான வஸ்தாதுகளே இப்படி அரண்டு போய் கிடக்க, இந்த இலக்கியத் ‘தறுதலைகள்’ சிலது “ஏய், எங்க ராமனை பத்தியே தப்பாவாடா பேசுறீங்க” என்கிற ரீதியில் ரவுண்டு கட்டியிருக்கிறார்கள்.

அதில் குறிப்பிடத்தக்கவர்கள் இலக்கிய உலகின் இல. கணேசனான மாலனும், இலக்கிய உலகின் புரட்சித் தலைவி ஜெயலலிதாவுமான வாஸந்தியும்.

 ‘புதியபார்வை’ என்ற பத்திரிகையில் ரொம்பா புதிய்ய்ய பார்வைய்ய்யா,ராமர் பாலம்; கலைஞர் பேசியது சரிதானா?’ ன்னு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாரு மாலன். வேதாந்தியோட செய்தியையே வேறு வார்த்தைகளில்… இது மாமாவோட வெர்ஷன்.

 ‘தீராநதி’ என்ற பத்திரிகையில் ‘இராமனுக்கான போர்’ என்ற தலைப்பில் ஒரு பொம்பள வேதாந்தியைப் போல், கலைஞரின் முன் கத்தியோடு குதித்திருக்கிறார், வாஸந்தி. இது மாமியோட வெர்ஷன்.

hanuman-and-ramaa.gif 

நமக்கோ, வேதாந்தி என்கிறவன் இப்படி அநாகிரீகமாக, ஒரு மாநில முதல்வரின் தலையை வெட்டிக்கிட்டுவான்னு சொன்னானேன்னு கோபாமா வருது. ஆனால் இவுங்களுக்கு, ‘ராமரை கருணாநிதி திட்டிட்டாரே’ ன்னு ஆத்திரம் வருது.

‘பெருவாரியான இந்துக்களின் உணர்வை….’ என்று திரும்ப திரும்ப ‘செட்டு’ சேர்க்கிறார்கள்.

நம்மதான் நாத்திகர். ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள் எல்லோரும் நாத்திகர்கள் இல்லை. அதில் பெருபான்மையானவர்கள் இந்துக்கள். அவர்களுக்கு ராமனை பற்றி சொன்னால் கோபம் வருவதில்லை. கலைஞரை பற்றி சொன்னால்தான் கோபம் வருகிறது.

ராமர் வழிபாடு என்பது தமிழ்நாட்டில் கிடையாது. பெருமாள் வழிபாடுதான் இருக்கிறது. ஐயங்கார்கள் கூட பெருமாளைத்தான் வழிபடுகிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் ராமனுக்கு குறிப்பிடும்படியாக கோயிலே இல்லை. (தமிழ்நாட்டில் ராமனுக்கு ஆதரவாக ஒரு பத்துபேர் இருப்பாங்க. அதுல இரண்டு பேர இவுங்க.)

-தொடரும்

லெனினை சாட்டையாலடித்துப் பாடம் கற்பிக்கிறார், பாரதி

 

பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 14

vishnu2.jpg

மூன்றாவது அத்தியாயம்

“மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாளங்கே

ஆகா வென்றெழுந்தது பார் யுகப் புரட்சி;
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்”

என்று பாட்டெழுதி ‘கம்யூனிஸ்ட் கட்சிகளின்’ ஆஸ்தான கவிஞரான பாரதி (போட்டியின்றி இன்று வரை பதவியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்)

பேய், பிசாசு, மாகாளி, பராசக்தி, மாரியம்மா இப்படி எல்லா சக்திகளும் ஒன்றாய் கலந்த கொடுங்கோலன் ஜார் மன்னனின் அரசையும், இன்னும் சரஸ்வதி, லட்சுமி, மேரியம்மா, ஏசு போன்ற மென்மையான ‘மென்ஷிவிக்கு’ களையும் – மக்கள் சக்தியென்ற மாபெரும் சக்தியின் துணையோடு தூக்கியெறிந்த – புரட்சித்தலைவன் லெனினை சாட்டையாலடித்துப் பாடம் கற்பிக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கவிஞர் சுப்பிரமணிய பாரதி:

“கொலையாலும் கொள்ளையாலும், அன்பையும், ஸமத்வத்தையும் ஸ்தாபிக்கப்போகிறோம் என்று சொல்வோர்தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன். ‘இதற்கு நாம் என்ன சொய்வோம்! கொலையாளிகளை அழிக்கக் கொலையைத் தானே கைக் கொள்ளும்படி நேருகிறது; அநியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடிக்கும்படி நேரிடுகிறது’ என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே ஒழிய, அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்திப் பண்ணுமேயழிய குறைக்காது. பாவத்தை புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும். பாவத்தை பாவத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை.”

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்த்து, இவ்வளவு வன்முறை கூடாது, ரத்தம் வேண்டாம் என்று அன்போடு ‘பட்டாளி வர்க்க சரணாகதி தத்துவம்’ பேசுகிற இந்த கம்யூனிஸ்ட் கவிஞர்,

பங்காளி தகராறு, சூதாட்டம், பஞ்ச பாண்டவர் – கவுரவர் பொறுக்கித் தனங்களுக்காக நடந்த பாரத சண்டைக்கு பாண்டவர்களின் சார்பாக சங்கெடுத்து ஊதுகிறார் பாஞ்சாலி சபதத்தில்,

வீமன் செய்த சபதம்

நாய்மக னாந்துரி யோதனன் றன்னை
மாணற்ற மன்னர்கண் முன்னே – என்றன்
வண்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே,
தொடையைப் பிளந் துயிர் மாய்ப்பேன் – தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன் – அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்
நடைபெறுங் காண்பி ருலகீர்! – இது
நான் சொல்லும் வார்த்தைகள்என் றெண்ணிடல் வேண்டா
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை – இது
சாதனை செய்க பராசக்தி’ என்றான்

அர்ஜுன் சபதம்

பார்த்த னெழுதந்துரை செய்வான்: – ‘இந்தப்
பாதகன் கர்ணனைப் போரில் மடிப்பேன்
தீர்த்தப் பெரும் புகழ் விஷ்ணு – எங்கள்
சீரிய நண்பன் கண்ணன் கழலாணை:
கார்த்தடங் கண்ணி எந்தேவி – அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை;
போர்தொழில் விந்தைகள் காண்பாய் – ஹே!
பூதலமே! அந்தப் போதினில்! என்றான்

பாஞ்சாலி சபதம்

தேவி திரௌபதி சொல்வாள்; – ஓம்
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவி துச்சாதனன் செந்நீர் – அந்தப்
பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம் ,
மேவி இரண்டுங் கலந்து – குழல்
மீதினற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் – இது
செய்யுமுன்னே முடியே’ என்றுரைத்தாள்.

எப்படி இருக்கிறது பார்த்தீர்களா நியாயம்? இதுதான் பாரதியின் பஞ்சாயத்து.
சுப்பிரமணிய பாரதியின் இந்தச் செயல், குமாரில பட்டரை ஞாபகப் படுத்துகிறது அல்லவா?

சீச்சீ…. சீச்சி… குமாரில பட்டர் எவ்வளவோ பரவாயில்லை.

-தொடரும்

“ஐயோ! பெண் கல்வி வேண்டும் என்று கூச்சலிட்டதெல்லாம் நமது பெண்கள் பைபிள் வாசிக்கவா?”

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 13

calvary.jpg

மூன்றாவது அத்தியாயம்

இந்தியாவை வெளியுலகத்தார் பாமர தேசம் என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது. புறக் கருவிகள் பல. முதலாவது கிறிஸ்துவப் பாதிரி…..

அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் சில கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்து பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்து போய் மஹத்தான் அநாகரீக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மத்ததிலே சேர்த்து மேன்மைபடுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லுகிறார்கள்.

இந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும் ஸ்தீரீகளை (முக்கியமாக, அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல நடத்துகிறார்கள் என்றும் பலவிதமான அபவாதங்கள் சொல்லுகிறார்கள்.

நம்முடைய ஜாதிப்பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.”

இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் தெரு வழியாக நாம் நடந்து வந்த காலத்தில் எதிரே 10 அல்லது 11 வயதுள்ள இரண்டு அழகிய பிராமண கன்னிகைகள் வந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் ஏதோ ஏசுநாதன்‘ ‘கடவுள்என்று பேசிக்கொண்டு வந்தார்கள். இந்தச் சிறிய குழந்தைகள் கடவுளைப் பற்றியென்ன பேசுகின்றன என்பதையறிய ஆவலுற்று அதைச் சிறிது நின்று கவனித்தோம். சில சில வார்த்தைகள் காதில் விழந்தற்கப்பால் அக்கன்னிகைகள் துரிதமாக நடந்து அப்பால் போயிவிட்டார்கள்.

ஐயோ! எத்தனையோ வருஷ்ங்களாக பெண் கல்வி வேண்டும்‘ ‘பெண் கல்வி வேண்டும்என்று கூச்சலிட்டதெல்லாம் நமது பெண்கள் பாதிரிப் பள்ளிக்கூடத்திற்குப் போய் பைபிள்வாசித்துக் கொண்டு வரும்பொருட்டாகத்தானா? வருங்காலத்தில் இந்தப் பெண்கள் தாய்மாராகி நமது ஜாதி (Nation) க்கு காப்புத் தெய்வங்களாக இருக்கப் போகிறார்கள்?

நமது கிருஸ்துவ நண்பர்கள் நாம் சொல்வதிலிருந்து மனஸ்தாபமடைய வேண்டியதில்லை. அவர்களுடைய தெருவுக்கு நடுவிலே நாம் போய் ஒரு பள்ளிக்கூடம் வைத்து சில இந்து சாஸ்திரங்களைப் படித்துக் கொண்டிருந்தால், அந்தப் பள்ளிக் கூடத்துக்கு தமது குமாரத்திகளை அனுப்புவார்களா? அதுபோலவே இந்துக்களும் தமது சகோதரிகளைக் காப்பாற்றிக் கெள்வது இவர்களுடைய கடமையல்லவா

இராம. கோபாலன், தலைவர், ‘இந்து முன்னணி

இதைச் சொன்னது இராம. கோபாலன்தான் என்று நம்பி விட்டீர்கள் அல்லவா? நீங்கள் உண்மையென்று நம்பியது பொய். சொன்னது அவரல்ல,

உண்மை யென்ற சிலுவையிற் கட்டி

உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால்

வன்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து

வானமேனியில் அங்கும் விளங்கும்`

என்று உண்மையான கிறித்துவர் போல் வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் சுப்பிரமணிய பாரதியே அந்த ஆர்.எஸ்.எஸ். வரிகளுக்குச் சொந்தக்காரர்.

பாரதியின் இந்த சிந்தனையும் குமாரில பட்டரை ஞாபகப்படுத்துகிறதல்லவா?

தொடரும்

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி

‘எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா?’ பாரதியின் ஆவேசம்

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 12            

dravidian_1779.jpg

(நீதிக்கட்சியின் முதல் மாநாட்டில் தியாகராயர், நடேசன், மாதவன் நாயர், பனகல் அரசர் இவர்களுடன் நீதிக்கட்சி பிரமுகர்கள்)

மூன்றாவது அத்தியாயம்

“வேதியராயினும் ஒன்றே – அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே”

-இது பார்ப்பனர், பார்ப்பனரல்லாதவர் பிரிவையே குறிக்கிறது.

“வேதம் நிறைந்த தமிழ் நாடு – உயர்

வீரம் செறிந்த தமிழ் நாடு

வேதம் என்பது பார்ப்பனர்கள். வீரம் என்பது பார்ப்பனரல்லாதவர்கள் என்றே இது அர்த்தமாகிறது. இப்படி பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் பிரிவை சாதகமான நேரங்களில் பெருமையோடு நுட்பமாக உணர்த்துகிற பாரதி,நீதிக் கட்சித் தலைவர்கள் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனரல்லாதவரின் உரிமையைப் பேசியபோது – கோபமுற்று கமண்டலத்தில் இருந்து ‘மந்திர ஜலம்’ எடுத்துத் தெளித்து சாபிமிடுகிறார்:

“இந்த ‘பிராமணரல்லாதார் கிளர்ச்சி’ கால கதியில் தானே மங்கி அழிந்துவிடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்களிருக்கின்றன. முதலாவது, இதில் உண்மையில்லை, உண்மையாகவே இந்தியாவில் ஜாதி பேதங்கள் இல்லாமல் செய்துவிட வேண்டுமென்ற அய்க்கிய புத்தியுடையோரில் மிக மிகச் சிலரே இந்தக் கிளர்ச்சியில் சேர்ந்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் சர்க்கார் அதிகாரங்களையும் ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி, சட்டசபை முதலியவற்றில் கவுரவ ஸ்தானங்களையும் தாமே அடைய வேண்டுமென்றே ஆவலுடையவர்களே இக்கிளரச்சியின் தலைவராக வேலை செய்து வருகிறார்கள்.”

1906இல் முனிசிபல் சார்பாக சட்ட மன்றத்துக்குப் போட்டியிட்ட மாதவன் நாயரை ‘இந்தியா’ பத்திரிகை கட்டுரையில், தியாகி, அறிவாளி என்று போற்றிய பாரதி, 1916க்குப் பிறகு ‘பார்ப்பனரல்லாத கிளர்ச்சி’ யில் மாதவன் நாயர் பங்கெடுத்த பின் அவரையும் சேர்த்தே இங்கு திட்டுகிறார்:

“திருஷ்டாந்தமாக, பிராமணருக்கு அநேகமாக அடுத்தபடி தென் இந்தியாவில் பல இடங்களிலே சைவ வேளாளர் என்ற வகுப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த வகுப்புக்குக் கீழே பஞ்சமர் வரை சுமார் இரண்டாயிரம் சாதி வகுப்புக்களிருக்கின்றன. அவர்களுக்கு மேலே பிராமணராகிய ஒரு வகுப்பினரே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நம்முடைய சைவ வேளாளருள்ளே ‘அல்லாதார்’ கிளர்ச்சியைச் சேர்நதிருப்பவருங் கூடத் தமக்கு மேற்படியிலுள்ள பிராமணர் பிரிவுக் குணமுடையோரென்றும், மற்ற வகுப்பினருடன் சேர்ந்துண்டு மணம் புரிந்து வாழ மறுக்கிறாரென்று நிந்திக்கிறார்களேயல்லாது, தமக்குக் கீழேயுள்ள இரண்டாயிரத்துச் சில்லரை ஜாதியர்களுடன் தாம் சேர்ந்துண்டு மணம் புரிந்து வாழுமாறு யாதொரு பிரயத்தனமும் செய்யாதிருக்கிறார்கள்.

‘பிராமணரல்லாதார்’ என்றொரு வகுப்பு இந்தியாவில் கிடையவே கிடையாது.

ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்துகொள்ள வழக்கப்படுத்தாத ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர்.

இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மாத்திரமே சார்ந்ததாகாது.

எல்லா வகுப்பினரையும் சாரும். பிராமணரும் மற்ற வகுப்பினரைப் போலவே இந்த முறைமையால் பந்தப்பட்டிருக்கிறார்கள்.

பிராமணருக்குள்ளேயே பரஸ்பரம், சம்பந்தம், சமபந்தி போஜனம் செய்து கொள்ளாத பல பிரிவுகள் இருக்கின்றன.

‘பிராமணரல்லாதார்’ என்ற வகுப்பே கிடையாது. அதுவே பொய். எனவே, இந்தக் கிளர்ச்சியின் மூலமே பொய்யாக இருப்பது கொண்டு இதனை உண்மையில்லாத கிளர்ச்சி என்கிறேன்.”

-என்று பஞ்சாயத்துப் பேசுகிற மகாகவி,

பார்ப்பனர்கள் தாக்கப்பட்டதாக கேள்விப்பட்டபோது – நானாடவில்லையம்மா…. சதையாடுது…’ என்று பஞ்சகச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு ‘டேய்… எவன்டா அவன் எங்க ஆளுங்கள அடிச்சது’ என்று எகிறிக் குதிக்கிறார்.

“என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே! பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகிறார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா? பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா? எதற்கும் இந்து மதவிரோதிகள் பேச்சைக் கேட்கலாமா?

 நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற இந்துக்கள் கும்பிடவில்லையா?”

இந்த வரிகளைப் பின் தொடர்கிற வரிகள், ஆர்.எஸ்.எஸ். காரன் அம்பேத்கர் விழா கொண்டாடுவது போல, ‘தாழ்த்தப்பட்ட மக்களே உண்மையான இந்துக்கள்; அவர்களைக் கைதூக்கி விட வேண்டும்’ என்ற கதையெல்லாம் வருகிறது.

சுப்பிரமணிய பாரதியின் இந்த சிந்தனை, குமாரில பட்டரை ஞாபகப்படுத்துகிறதல்லவா?

-தொடரும்

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி

பவுத்தத்திற்கு எதிராக பார்ப்பனியத்தின் மாறுவேடம் அதன் பிரதிதான் பாரதி

பாரதிய ஜனதா பார்ட்டி‘ – 11           

kirupa.jpg

மூன்றாவது அத்தியாயம் 

கிருபானந்த வாரியாரை ஸ்வாமிகள் என்று அவரின் ஜாதிக்காரர்கள், இன்னும் பார்ப்பனரல்லாத பக்த கோடிகள் பீற்றிக் கொண்டாலும்,அவரின் வாய் தெய்வத்தின் குரலைசொல்லுகிற வாயல்ல-அது வெறுமனே பிரசங்கம் பண்ணுகிற வாய். அவர் ஒரு பிரசங்கி”என்று அதிகப் பிரசங்கிகளான பார்ப்பனர்கள், வாரியாரின் ஒளிவட்டத்துக்குச் சென்று கொண்டிருந்த மின்சாரத்தின் பீஸ் கேரியரைபிடுங்கி விட்டனர். 

ஆன்மீகப் பிரசங்கம் செய்த அந்த வாயின் வாரிசாக – புது வாய் ஒன்று வந்திருக்கிறது. இந்த வாய்-பார்ப்பன வாயோ, பார்ப்பனரல்லாத வாயோ தெரியவில்லை.அந்த வாய்க்குச் சொந்தக்காரர் சுகி. சிவம்.

அவர் ஒரு கதை சொல்கிறார்;

ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பெரியவர் குமாரில பட்டர் என்பவர், வேத வழி வந்த வைதீகர். வேத அத்யனம் செய்த வேதவித்தகர். அவர் காலத்தில் வேத எதிர்ப்பு இயக்கம் புத்தர்களால் வலுப்பெற ஆரம்பித்தது. யாகங்களில் பலி தருவதை எதிர்த்து-யாகங்களை எதிர்த்து வேத எதிர்ப்பாக பவுத்தம் திசைமாறியது. 

பவுத்தர்களை வீழ்த்த நினைத்த குமாரிலபட்டர், புத்தர்கள் தத்துவத்தைப் பயில விரும்பினார். வேத அந்தணராக நுழைந்தால் விரட்டப்படுவோம் என்பதைப் புரிந்து கொண்டு வேத எதிர்ப்பாளியாகத் தம்மைக் காட்டிக் கொண்டார்.

எதை எதிர்ப்பதானாலும் அதை முழுமையாகத் தெரியாமல் எதிர்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் புத்த மத நூல்களை அவர் படிக்க நினைத்த நேர்மை மரியாதைக்குரியது. 

தனது வைதீக அனுஷ்டானங்களை யாரும் காணாத மறைவில் செய்து கொண்டு பவுத்தராக வாழ ஆரம்பித்தார். உள்ளும், புறமும் வேறு வேறாக வாழ வேண்டிய கட்டாயம் அவருக்கு. பவுத்த குருமார்கள் வேதத்தைப் பழித்தபோது இதயங்க கசங்க கண்ணீர் விடுவார். 

ஏன் அழுகிறீர்கள்?’ என்று குருமார்கள் கேட்டால், “ஆஹா… என்ன கண்ணீர்” என்று சமாளிப்பார். ஆனால் புத்த பிட்சுகள் அவரைப் புரிந்து கொண்டார்கள். 

புத்த விகாரத்தை (மடம்) விட்டு அவரை அனுப்புவதைவிட உலக விவகாரத்தை விட்டே அவரை அனுப்புவது என்று தீர்மானித்தனர். புத்த விகார பிட்சுகளின் மன விகாரம் கொடுமையானது. ஆட்டைக் கூட கொல்லாதே என்ற புத்தர் வழி வந்தவர்கள் ஆளையே கொல்ல முடிவு செய்தனர். புத்த விகாரத்தின் ஏழாம் மாடியில் இருந்து அவரைத் திடீர் என்று காலை வாரி விட்டனர்.”

இதற்கு மேலும் அவர் கதையளக்கிறார். நமக்கு இதுவரை போதும்.இந்தக் கதையை அவர் எங்கிருந்து கிளம்பினார்என்று சொல்லவில்லை.நேரே பார்த்த சாட்சி போலவே சொல்லியிருக்கிறார். ஒரு வேளை போன ஜென்மத்து ஞாபகமோ என்னவோ? 

சரி, இந்தக் கதை நமக்கெதற்கு?

இது நமது கவிதாநாயகனுக்குஅப்படியே பொருந்துகிறது.

இதில் வரும் குமாரிலபட்டர்-நமது மகாகவியையே ஞாபகப்படுத்துகிறார்.

ஆனால், புத்தத் துறவிகளோடு பொறுத்திப் பார்க்கத்தான் யாரும் இல்லை. 

தொடரும்

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி

‘சந்திரபாபுவோடு நடந்த சண்டையும் சமாதானமும்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -6

நேர்காணல்; வே. மதிமாறன்

msvinaction3.jpg

* சந்திரபாபுவோட குரல் தமிழில் வித்தியாசமான, எளிமையான குரல். அந்தக் குரலுக்குப் பொருத்தமா ‘சுலோ ரிதத்தில்’ நிறையப் பாட்டு போட்டு இருக்கீஙக… அவருக்கும் உங்களுக்கும் நல்ல நட்புன்னு…..

அவனை நான் முதல்ல பார்த்தது, 1945 லனு நினைக்கிறேன். அப்போ சென்ட்ரல் ஸ்டூடியோ கோவையில் இருந்தது. அங்க எஸ்.என். சுப்பையா நாயுடுகிட்ட உதவியாளரா இருந்தேன்.

“இவன் ஏதோ பாடுவான்னு சொல்றான், இவன் குரலை கொஞ்சம் டெஸ்ட் பண்ணேன்” னு சொன்னாரு சுப்பையா அண்ணன். பண்ணேன்.

“என்ன நல்லா பாடுனானா?” ன்னு கேட்டாரு.
“இவன் எங்க பாடுனான்? டயலாக்கை அப்படியே பேசுறான்” னு சொன்னேன்.

 என்னை மொறைச்சு பாத்துட்டுப் போனான். கொஞ்சம் வருஷம் கழிச்சு அவன் பெரிய நடிகனா ஆயிட்டான். நான் இசையமைப்பாளரா ஆயிட்டேன்.

டி.ஆர். ராமண்ணாவின் ‘குலேபகாவலி’ படத்துக்கு நான்தான் மியூசிக். அதுல சந்திரபாபவுக்கு ஒரு பாட்டு. நான் டியூனை போட்டுட்டு, ‘எப்படி?’ன்னு கேக்குறேன்.

அவன், “இதெல்லாம் ஒரு டியூனா? இதுக்கு ஆட்டமே வராது, பெரிய மெட்டு போட்டுட்டாரு, வேற போடச் சொல்லுங்கன்னு…” ராமண்ணாக்கிட்ட சொல்றான்.

நான் உடனே என் உதவியாளர்களை அந்த டியூனை இசையோட வாசிக்கச் சொல்லிட்டு, எழுந்து ஆடி காண்பிச்சேன்.
“இதுக்கு மேலே எப்படி ஆடுறதுன்னு சொல்லு”ன்னு கேட்டேன்.

அந்தப் பாட்டு ‘சொக்காப் போட்ட நவாப்பு…’ அதல இருந்து எனக்கும் அவனுக்கும் காதல் பிறந்துடுச்சி. நெருக்கமான நண்பர்களானோம். அவனுக்கு இசையறிவு உண்டு. உணர்வுபூர்வமான கலைஞன்.

* உங்கள் சம்பந்தப்பட்ட ஒரு செய்தி, நீங்கள் இருக்கும் போதே பலரால் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒருத்தரும் இதுவரை உங்களிடம் கேட்டதில்லை. நீங்களும், ‘ஆமாம்-இல்லை’ என்று சொன்னதுமில்லை. வேறு ஒன்றுமில்லை, பாரதியாரை உங்களுக்கு யார் என்றே தெரியாமல், ‘மெட்டுக்கு வார்த்தை இடிக்கிறது, கூப்பிடு அந்தப் பாடலாசிரியரை’ என்று நீங்கள் சொன்னதாகச் சொல்கிறார்களே, உண்மையா?

msvinaction2.jpg

பொய். அதுல பாதிதான் உண்மை.

கே.எஸ். கோபால கிருஷ்ணன் என்னை எப்பவும் ‘சிங்கம்’ னுதான் கூப்பிடுவாரு.

ஒருநாள், “சிங்கம், எழுதிகிட்டே பாட்டு பாடுற மாதிரி ஒரு டியூன் போட்டா எப்படி இருக்கும்?” னு கேட்டாரு.
“போடலாமே” ன்னு ஆர்மோனியத்தை எடுத்தேன்.
“சிங்கம் நான் சொல்றதை எழுது சிங்கம்” னு சொன்னாரு.
“சரி, சொல்லுங்க” ன்னு நான் பேப்பர்ல எழுத ஆரம்பிச்சேன்.

அவர் சொன்னாரு, நான் எழுதிகிட்டே வந்தேன்.
‘சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்ற வரி வந்தப்போ, ‘பாட்டி செத்து’ன்னு இருக்கா மாதிரி இருக்கு கூப்பிடுங்க பாடலாசிரியரை’ ன்னு என்னை மறந்து போய் சொன்னேன்.

தொழில் தீவிரத்துல வந்த வார்த்தை அது. பாரதியாரை தெரியாம சொன்ன வார்த்தையல்ல. அதுக்கு முன்னாடியே அவரோட ‘சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா…’ பாடலைப் போட்டவன் நான்.

* இளையராஜாவின் திருவாசகம் கேட்டீர்களா?

notes2.jpg

எனக்குத்தான் அதை முதலில் போட்டுக் காட்டினான். அதைக்கேட்டுட்டு, அவன் கையை கண்ணில் ஒற்றிக் கொண்டு, கையைப் பிடித்துக் கொண்டே, “நீ வயசுல சின்னவனா இருக்கிறதுனால கையைப் பிடிச்சுகிட்டு சொல்றேன். பெரியவனா இருந்தா…’ என்று சொன்னேன். அவன் நெகிழ்ந்து போனான். அதில் அவனின் உழைப்பு சாதாரணமானது அல்ல.
   (30-10-2005 தினகரன் இணைப்பிதழ் வசந்தத்தில் வெளியான பேட்டி)

alldirectors.jpg

மெல்லிசை மன்னர் வடை விற்ற தியேட்டர்,  சந்திரபாபு குடியரசு தலைவர் ராதகிருஷ்ணன் மடியில் உட்கார்ந்தது, மெல்லிசை மன்னரின் தற்கொலை முயற்சி, சிவாஜியின் தர்ம சங்கடம், எம்.ஜி.ஆரின் வருத்தம்,  சூரிய உதயத்தையே பார்க்காத நடிகரும், சூரிய அஸ்தமனத்தையே பார்க்காத கவிஞரும், சிவாஜி-எம்.ஜி.ஆர் தலைமையில் சோ வின் தொகுப்புரையோடு தன் குருவிற்கு மெல்லிசை மன்னர் நடத்திய பாராட்டு விழா, மூன்றே சுரத்தில் இசையமைத்தப் பாடல், ஒரு மரண வீட்டில் மெல்லிசை மன்னர் இசையமைத்த சோக பாடல்களோடு இறுதி ஊர்வலம் இப்படி ‘வசந்தம்’ இதழில் வெளிவராதா சுவாராஸ்யமான பல தகவல்களோடு, ‘மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனோடு சந்திப்பு – பாகம் இரண்டு’ சில நாட்கள் கழித்து….