உள்ளே-வெளியே ஆச்சாரத்தின் அவதாரங்கள்

natarajan.jpg 

                                                                       -வே. மதிமாறன்

‘ஆச்சாரம்’ அல்லது ‘ஆசாரம்’ என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு, ‘ஒழுக்கம்’ என்று அர்த்தம் சொல்லுகிறார்கள்.

ஆனால் அந்தச் சொல்லை பயன்படுத்துகிறவர்கள்  ‘ஒழக்கம்’ என்ற அர்த்தத்தில் மட்டும் பயன்படுத்துவதில்லை. புரிந்து கொள்பவர்களும் அப்படி மட்டும் அதை புரிந்து கொள்வதுமில்லை.

“எங்க பாட்டிதான் ரொம்ப ஆச்சாரம். நாங்க ஆச்சாரம் எல்லாம் பாக்கிறதில்ல.” என்று ஒரு பெண் சொன்னால்,
“எங்க பாட்டிதான் ரொம்ப ஒழுக்கம். நாங்க ஒழுக்கம் பாக்கறதில்ல” என்று அதை மிக நேரடியாக யாரும் அர்ததப்படுத்திக் கொள்ளமுடியாது.

அப்படி எனில் ‘ஆச்சாரம்’ என்பது சுத்தமா?

ஒரு நாளைக்கு நாற்பது வேளை குளித்தாலும், அசைவ உணவை உண்ணாதவராக இருந்தாலும், மிகத் தீவிரமான பக்திமானாக இருந்தாலும் ஒரு தாழ்த்தப்பட்டவரை ‘ஆச்சாரமானவராக’, ‘பிராமணராக’  சமூகம் கருதாது.

குளிக்காமல் இருந்தாலும், குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடந்தாலும், விபச்சாரிகளோட பொழுதெல்லாம் இருந்தாலும், கொலை செய்தாலும் சுருங்கச் சொன்னால், ஜெயேந்திரனைப் போல் வாழ்ந்தாலும் –

ஒரு பார்ப்பனரை சமூகம் ஆச்சார கேடானவராக கருதி அவர் மீது தீண்டாமையை பிரயோகிக்காது.

‘ஆச்சார உயர்வு’, ‘பார்ப்பன மேன்மை’ என்பதும், ‘தீண்டாமை’ யும் வளர்ப்பில் இல்லை. பிறப்பில் இருக்கிறது என்பதுதான் இந்து மதம். பார்ப்பனியம்.

பிறப்பால் தாழ்த்தப்பட்டவராக இருந்த காரணத்தால்தான் மற்ற நாயன்மார்களை விடவும், ஒழக்கமாக, நேர்மையாக, சிறந்த பக்திமானக இருந்த நந்தனாருக்கு மட்டும், ‘பார்ப்பன அடியாள், களவானி பயல் சிவன்’ காட்சி தரவில்லை.

இந்த ஆச்சாரம் என்பது தன் ‘மேன்மை’யை உயர்த்திக் சொல்வதற்காக மட்டும் உருவானதில்லை. அடுத்தவர்களை தாழ்த்திச் சொல்வதற்காகவே உருவானது.
ஒரே வரியில் எளிதில் விளக்க வேண்டும் என்றால்,
‘அடுத்தவர்களை தாழ்த்துவதின் மூலம் தன்னை உயர்த்திக் கொள்வது’ அதற்கு பெயரே ஆச்சாரம். அதை சில எடுத்துக்காட்டுகள் மூலம் பார்ப்போம்.
             -தொடரும்

         

5 thoughts on “உள்ளே-வெளியே ஆச்சாரத்தின் அவதாரங்கள்

  1. அன்புள்ள மதிமாறன்
    ஆசாரம் பற்றிய உங்கள் கட்டுரை நன்றாகவே இருந்தது.உணமையான ஆசாரத்தைப் புரிந்து கொண்டால் சரிதான். புரிந்து கொண்டு அதன்படி நடப்பவர்க்கு நல்லதுதானே. புரிந்து கொள்ளாமல் குதர்க்கம் பேசுவதைவிட புரிந்து கொண்டு அதன்படி நடக்கமுடியவில்லை என்று ஒத்துக்கொள்வது உயர்வே.அந்த ஆசாரம் உருவானதன் நோக்கத்தை, நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள முறை தவறு என்று குறிப்பிட விரும்புகிறேன்
    அன்புடன்
    கமலா

  2. தோழர்,

    பார்ப்பனீயத்தை ஒரு சொல்லின் உதவியோடு அழகாக தோலுரித்திருக்கிறீர்கள், பார்ப்பனர்கள் அப்பாவிகள் என்று நம்புகின்ற அப்பாவிகள் இந்த பதிவை படிப்பது பயனுள்ளதாய் அமையும்.,

    தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள் தோழர்!!

    தோழமையுடன்
    ஸ்டாலின்

Leave a Reply

%d bloggers like this: