‘பிராமின்ஸ் ஒன்லி’
உள்ளே-வெளியே ஆச்சாரத்தின் அவதாரங்கள்
தொடர்ச்சி –2
-வே. மதிமாறன்
‘அடுத்தவர்களை தாழ்த்துவதின் மூலம் தன்னை உயர்த்திக் கொள்வது’ அதற்கு பெயரே ஆச்சாரம். அதை சில எடுத்துக்காட்டுகள் மூலம் பார்ப்போம்.
குடுமி வைப்பதுதான் ஆச்சாரம். கிராப் வைத்துக் கொண்டார்கள். மீசை இல்லாமல் இருப்பதுதான் ஆச்சாரம். மீசை வைத்துக் கொண்டார்கள். காபி, டீ குடிப்பது ஆச்சாரமில்லை. மாறாக, காபியே இன்று ஆச்சாரமாக அவதாரம் எடுத்துருக்கிறது.
மாதவிலக்கு சமயங்களில் வீட்டின் புழக்கடையில் இருந்து வீட்டிற்குள் வருவதே ஆச்சாரக் கேடு. இன்று வேலைக்கே வருகிறார்கள். மடிசார் கட்டாமல் இருப்பதே ஆச்சாரக் கேடு. இன்று ஜீன்ஸ் பேண்டில் வருகிறார்கள். பெண்கள் சினிமா பார்ப்பதே ஆச்சாரக் கேடு.
ஆனால் அந்தக் காலத்து வசுந்தர அவுங்க பொண்ணு வைஜெயத்தி மாலா, பிறகு ருக்மணி அவுங்க பொண்ணு லட்சுமி, அவுங்க பொண்ணு ஐஸ்வர்யா, சந்தியா அவுங்க பொண்ணு ஜெயலலிதா இதற்கும் நடுவுல சவுகார் ஜானகி அவுங்க பேத்தி வைஷ்ணவி, சச்சு, வெண்ணிராடை நிர்மலா, ஹேமாமாலினி, ஸ்ரீவித்யா, சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், சுகன்யா, திரிஷா, மல்லிகா ஷெராவத், சொர்ணமால்யா, பிரியா மணி, வசுந்தரா… என்று ‘ஆச்சார’ மாக நிறையப் பேர் இருக்கிறார்கள்.
(வேலைக்குப்போவதையும் நடிக்க வந்ததையும் தவறு என்று சொல்லவில்லை. மற்ற ஜாதிக்காரர்களால் ஏற்படும் `ஆச்சாரக்கேட்டிற்காக` அவர்களை அவமானப்படுத்துகிற ஆச்சாரமானவர்கள், இவைகளை கண்டிப்பதில்லை.)
முட்டைகூட இன்று ஆச்சாரமான உணவாக மாறியிருக்கிறது.
விதவைகளை சங்கராச்சாரியார்கள் பார்ப்பதே ஆச்சாரக் கேடாக இருந்தது. ஜெயேந்திரனை போன்ற சங்கராச்சாரி விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கிற அளவுக்கு மாறி இருக்கிறார்கள்.
பார்ப்பனர் கடல்கடந்து வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது. ‘பொண்டாட்டியையே ஒருத்தன் தூக்கிகிட்டு போய்ட்டாக்கூட பாலங்கட்டி போய்தான் திரும்ப கூட்டிட்டு வரணும்’ என்று ராமாயண கதையிலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் இன்றைய நிலை – காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி என்று வாழ்கிறார்கள்.
அப்படியானால் முற்றிலுமாக ஆச்சாரத்தை கைவிட்டுவிட்டார்களா?
தன் ஜாதிக்குள் தன் உறவுக்குள் ஆச்சாரத்தைக் கடைப்பிடிப்பதை விட்டுவிட்டார்கள் அல்லது கைவிடுவது எங்கு லாபமோ, அங்கு விட்டிருக்கிறார்கள்.
ஆச்சாரத்தைக் கடைப்பிடிப்பதினால் எங்கு நஷ்டமில்லையோ, அங்கே ஆச்சாரத்தைக் கடைப்பிடித்து அடுத்த ஜாதிக்காரர்களை, மதக்காரர்களை அவமானப்படுத்தி தன்னை மேன்மைப் படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த நாகரீகமானவர்கள்தான் இன்னமும் ‘பிராமின்ஸ் ஒன்லி’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
நகர்புறங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடு தர மறுக்கிற பிற்படுத்தப்பட்ட ஜாதிவெறியர்களும் இருக்கிறார்கள்.
அவர்களின் இந்தக் கேவலமான ஜாதி வெறியின் அவமானம் ஓர் அளவுக்கு அவர்களுக்கு உறைத்திருப்பதினால்தான் அந்த உணர்வை பகிரங்கப்படுத்திக்கொள்ளாமல் சுற்றி வளைத்து விசாரித்து தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் வீடு தர மறுக்கிறார்கள்.
ஆனால் இது போன்று எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல், ‘எங்கள் ஜாதிக்காரர்களுக்கு மட்டும்தான்’ என்று பகிரங்கமாக போர்டு வைத்திருக்கிற ஒரே ஜாதி, இந்த ‘ஆச்சார’ ஜாதிதான்.
அதற்கு அவர்கள் சொல்லுகிற காரணம் “நாங்கள் ரொம்ப ஆச்சாரமானங்க. சைவம். அசைவம் சாப்பிடுகிறவர்கள் யாராவது அருகில் குடி வந்தால், அது எங்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்”
நியாயந்தான். அப்படியானால் என்ன ‘போர்டு’ வைக்க வேண்டும்?
‘வெஜிடேரியன் ஒன்லி’
அப்போ எதுக்கு ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு?
இப்போ புரியுது இல்ல, ஆச்சாரத்திற்கான அர்த்தம்.
-தொடரும்
anna. konnuteenga.
அசத்தல் சூப்பர்
இவை ஆணித்தரமான கருத்துக்கள் அல்ல. ஆதாரமில்லாத கருத்துக்கள். நாட்டில் அமைதியாக வாழும் பிராமணர்களுக்கு எதிராக துவேஷம் செய்யும் உங்களைப் போன்ற ஆட்களை என்ன செய்வது. எதோ எல்லா வேதங்களையும் படித்து விட்டவர் போல் எல்லா இந்து மத கொள்கைகளும் பிராமணரை உயர்த்தியே சொல்கின்றன என்று தாங்கள் சொல்வது தங்கள் அறிவிலித் தனத்தையே காட்டுகிறது. பிராமணன் வேதம் ஓதுவதை தவிர வேறு எந்த பதவியும் வகிக்க கூடாது என்றே இந்து மத கோட்பாடுகள் சொல்கின்றன. பிறப்பால் எவனும் பிராமணன், சூத்திரன், வைசியன், சத்திரியன் அல்ல என்றும் அனைத்து வேதங்களும், இந்து மத கொள்கைகளும் முழங்குகின்றன.
பிறப்பால் எவனும் பிராமணன் அல்ல. கொள்கைகள், வாழும் முறை மற்றும் தொழிலாலேயே ஒருவன் பிராமணன் எனப் படுகிறான். எனவே, தாங்கள் இங்கே சொல்லியுள்ள யாரும் பிராமணர்கள் அல்லர்.
இது தெரியாமல், யாரோ நாலு பேர் சொன்ன கருத்தக்களை உண்மை என்று நம்பி, உங்கள் பொழுதையும் வீணாக்கி, படிக்கும் அப்பாவிகளின் மனதிலும் பிராமண துவேஷம் என்னும் விஷத்தை ஏற்றிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்ற விஷமிகளை என்ன செய்வது?
sariyaachchonneenga . Thanthi periyarin solmuraiyai ungalidathilum kaangirean
பிறப்பால் எவனும் பிராமணன் அல்ல. கொள்கைகள், வாழும் முறை மற்றும் தொழிலாலேயே ஒருவன் பிராமணன் எனப் படுகிறான் எனும் திரு.லக்ஷ்மிநாராயணன் அவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்வதுடன் மதம் பற்றிய எனது கருத்தை இங்கே பதிவு செய்யவிரும்புகிறேன். இது வேறு ஒரு சுழலில் பதிவுசெய்யப்பட்ட என் கருத்து எனினும் இங்கே பதிவுசெய்வதும் பொருத்தமாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.
சாதிகளாலும் மதங்களாலும் இன்று உலகம்முழுவதும் நடைபெற்றுக்கொண்டுவரும் அவலங்களை நாம் அறிவோம். சாதி மதம் பற்றிய ஒரு அடிப்படை விஷயம் குறித்த என் கருத்தை இங்கே பதிவுசெய்து பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்
ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களை எடுத்துகொள்வோம்.ஆசிரியர் ஒருவரே எனினும் கற்கும் திறன்,கிரகிக்கும் திறன்,நினைவுத்திறன்,கற்றவற்றை வெளிப்படுத்தும் திறன் இவற்றின் அடிப்படையில் மாணவர்களை பல ரகப்படுத்தலாம்.அல்லவா?
சரி.அப்படி பலரகப்படுத்தி சம தரமுடையோரை ஒரு குழுவாக்கி அதன்படி தனி தனி வகுப்புக்களில் அமர்த்தி பாடம் எடுக்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது சிறந்த தரமுடையோர் நடுதரமானவர்கள்,மந்தமானவர்கள் என முன்று விதமான வகுப்புகள் இருப்பதாக கணக்கில்கொள்ளுங்கள்.
இப்படி படித்து இதே தரத்தில் வெளிவந்து அவர்கள் தங்கள் தரப்படி வேலைக்கு செல்வதாக கொள்ளுங்கள்.முதல் தரமானவர்களுக்கு நிர்வாகம் சம்பந்தப்பட்டவேலையும்,மத்திமமானவர்களுக்கு சாரதரண உழியர் வேலையும்,மந்தமானவர்களுக்கு எடுபிடிவேலையும் கிடைப்பதாக கொள்க.இதுவரையில் சரி.
இதன்பிறகு இவர்களுக்கு திருமணமாகி குழந்தை பிறந்து அக்குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முயலுகையில் அந்த குழந்தைகளின் திறனை சோதிக்காமல் அவர்களது தந்தையின் திறனை அடிப்படையாகக்கொண்டு அவர்களது குழந்தைகளுக்கு வகுப்புகளை ஒதுக்கினால் எப்படி இருக்கும்?
அப்படிதான் இன்றைய உலகம் மதத்திற்காகவும், சாதிக்காகவும் அதன் அடிப்படையிலான சலுகைகளுக்காகவும் சண்டைகளால் நிரம்பிவழிகிறது.
மனிதர்கள் அனைவரும் ஒரே சக்தியிலிருந்து பிறந்தவர்கள்தான். நாம் அனைவரும் மீண்டும் அந்த சக்தியிடமே சென்றடைவதைதான் பல மதங்களும் பல வழிகளில் போதிக்கின்றன.அனைத்தின் மேலான நோக்கமும் இதுவே.இப்படி இருக்கையில் அந்த மேலான சக்தி நிலையை அடையும் முயற்சியின் அடிப்படையிலே மதங்களும் அவற்றின் உட்பிரிவுகளாக சாதிகளும் தோன்றின.
அனைவரும் ஆரம்பத்தில் மாமிசம் சாப்பிட்டவர்களே!நாளடைவில் சிலருள் தோன்றிய கருணை அன்பு பிற உயிர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளுதல் எனும் மன மாற்றம் சிலரை வேறுபடுத்தியது.
முதலில் மனம் உணவு வேறுபாட்டை உண்டாக்கியது.இந்த உணவு உணவுப்பழக்க வழக்க மாற்றம் மேலும் பல மன மாற்றத்தை உண்டாகியது.இவ்வாறு மனித இனம் உணவு பழக்கவழக்க அடிப்படையில் வேறுபடதொடங்கியது.சைவம் அசைவம் என பிரிவுபட்டது.
உணவும் மனமும் செய்த விளையாட்டினால் இரு பிரிவினரிடையும் பழக்க வழக்க வேறுபாடுகள் அதிகரித்தன.அசைவத்திலிருந்து. அசைவத்தைவிடுத்து சைவமாவது பெரும் சிரமமாகவே இருந்தது. அந்த சிரமத்தின் காரணமாக அதற்க்கு மதிப்பும் இருந்தது. மேலும் சைவமானவர்களின் தன்மையான குணநலன்களால் அன்றைய சமூகத்தில் அவர்களின் மதிப்பு கூடியது.
இந்நிலையில் உண்ணாமல் இருக்கதொடங்கியோரின் மதிப்பு இன்னமும் பலமடங்கு கூடியது.இப்படி மனித சமுதாயத்தில் உயர்வு தாழ்வு தோன்ற ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் சிலரின் மேலான இயல்புகளால் சமுகத்தின் மரியாதையை இயல்பாக பெற்றுவந்தார்கள்.அவரைபின்பற்றி அவரது குடும்ப உறுப்பினர்களும் அத்தகைய பழக்கவழக்கங்களை கைக்கொண்டதால் அக்குடும்பமே மரியாதைக்குரியதாக இருந்தது. பின்னர் இது தலைமுறை தலைமுறையாக தொடரலாயிற்று.
ஆரம்பத்தில் மனிதர்களது பழக்கவழக்கங்களை ஒட்டியே அவர்களுக்கு சமுதாய மதிப்பு இருந்துவந்தபோதும் குடும்ப உறுப்பினர்களில் திடீரென சிலர் இத்தகைய பழக்க வழக்கங்களை தொடரமுடியாது போனதால் அத்தகையோர் அந்த சிறப்பு மரியாதையை பெறமுடியாமல் போனது.
இத்தகைய சூழலில்தான் மனிதனது சுயநலம் வேலைசெய்ய தொடங்கியது.இதுவரையில் கிடைத்துவந்த மரியாதையை அவன் இழக்கவிரும்பவில்லை.அதே சமயம் அந்த கட்டுப்பாடான வாழ்க்கையையும் விரும்பவில்லை.
யோசித்தான்,நிறைய யோசித்தான்.புதிதாய் வழி கண்டுபிடித்தான். அதுதான் பழக்கவழக்கங்கள் எப்படியாயினும் உயர்ரக குடியில் பிறந்ததாலேயே அவன் அக்குடியின் மதிப்புகளை தொடர்ந்து பெறுவான் எனும் குறுக்குவழியை நடைமுறைப்படுதினான்.
இம்மாற்றதால் தன்மை,பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை விடுத்து ஒருவர் பிறந்த குடியை வைத்து உயர்வு தாழ்வு கருதும்நிலை தோன்றியது.இப்பொழுது நான் முன்னர் சொன்ன பள்ளியில் மாணவர் தரம் பிரித்தல் எடுத்துக்காட்டை ஒப்பிட்டுப்பாருங்கள்.சொல்லவந்தது புரியும்.
சரி .இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு போவோம். நம்மை படைத்த சக்தியை மீண்டும் நாம் சென்றடைவதே மேன்மை என மதங்கள் குறிப்பிடுகின்றன என ஏற்கனவே நான் கூறி இருந்தேன் அல்லவா ?அதன்படி அவரவர் நிலைசார்ந்து பல மதங்கள் தோன்றின.
.உண்ணவும் விடுத்து அனைத்தையும் துறந்து வாழ்ந்துவந்தவர்கள்,உணவு,உறவு,பழக்கவழக்கங்களில் ஒரு நியதியை ஏற்ப்படுதிகொண்டு வாழ்ந்துவந்தவர்கள்,எந்த வித நியதியுமில்லாமல் வாழ்ந்துவந்தவர்கள் என பல வகையினருக்கான பலவிதமான மார்கங்கள் தோன்றின.
கிடைத்தவற்றைஎல்லாம் கொன்று தின்று,நினைத்தபோதெல்லாம் கிடைத்தவர்களுடன் உடலுறவுகொண்டு எந்தவித நியதிமுறைகளும்மில்லாது வாழ்ந்துகொண்டிருந்தவர்களுக்கும் அதற்க்கு நேரெதிராய் வாழ்ந்துகொண்டிருந்தவர்களுக்கும் நிச்சயம் ஒரே மார்க்கம் பயனளிதிருக்க வாய்ப்பில்லை எனும்போது அன்றைய நிலைக்கு தக்கபடி பல மார்கங்கள் உருவாயின.
பிறப்பை விடுத்து தன் நிலைக்கு தக்க மார்க்கத்தை ஒருவரால் சுயமாக தேர்ந்தெடுக்க முடிந்தது. உண்மையை அறியும் பயணத்தில் தகுதியின் அடிப்படையிலேயே ஒரு மார்க்கத்திலிருந்து அடுத்த மேம்பட்ட மார்கத்திற்கு மக்கள் மாறுவது எனும் நடைமுறை இருந்தது.
நாளடைவில் உயர் குடியாக கருதப்பட்டோர் தங்கள் தனித்தன்மையை காத்துக்கொள்ளும் பொருட்டு தங்களது குழுவினுள் வெளிஆட்கள் புதிதாக நுழைவதை தவிர்க்க பிறப்பின் அடிப்படியில் மட்டுமே எனும் கட்டுப்பாட்டை கொண்டுவந்ததுடன் தங்களுக்கான தனி சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் ஏற்ப்படுத்திக்கொண்டனர்.
அன்று சிலரின் சுயலாபதிர்க்காக ஆரம்பிக்கப்பட்ட இத்தகைய பிரிவுகள் இன்றளவும் சுயநலபோக்கர்களால் வளர்த்துக்கொண்டே வரப்பட்டுள்ளது.
இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் உயிர்களின் மேன்மைக்காக உருவான படைப்புகள் எல்லாம் ஒரு சாரரின் பரம்பரை சொத்தாக்கப்பட்டதுதான்.ராமாயணமும்,மகாபாரதமும்,கீதையும், திருக்குறளும்,குரானும்,பைபிளும் இப்படியாகத்தான் ஒரு சாரரின் தனிப்பட்ட சொத்தாக்கிகொள்ளப்பட்டன.உண்மையில் அவை பல நிலைகளிலிருந்த மக்களுக்காக அவர்களை மேம்படுத்த வந்த கைகாட்டிகள்.
ஒரேவகையாக நோயாக இருப்பினும் நோயின் வீரியம்,நோயாளியின் உடல் திறன் இவற்றைபொருத்து மருத்துவமுறைகள் நோயாளிக்கு நோயாளி மாறுபடுவதைப்போல் மனிதர்களின் இயல்புசார்ந்து அவரவர் நிலையிலிருந்து அவர்களை மேம்படுத்த பலவகையான மார்கங்கள் தோன்றின.
பிறப்பினால் தனக்கு ஒத்துவருகிறதோ இல்லையோ தனது இயல்புக்கு ஒத்ததோ இல்லையோ ஒரு மனிதன் தன் பிறந்தகுடிசார்ந்த மார்கத்திலே செல்லவேண்டிய நடைமுறை தான் இன்றுள்ளது. அதைவிடுத்தால் சமூக மரியாதை, பொருளாதார மேம்பாட்டிற்க்காக ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறும் நடைமுறைதான் நம்மிடமுள்ளது.
உண்மையில் தங்களது இயல்புக்கு ஏற்ற மார்கங்களை ஒவ்வொருவரும் சுயமாக ஏற்றுகொள்ளகூடிய அளவிற்கு இன்று நம்மிடையே புரிந்துணர்வும்,சுதந்திரமும் இருக்குமானால் மனித சமுதாயம் இப்போதைக்குள்ள மத சாதி சண்டைகளை விடுத்து சாதி மத சண்டைகளற்ற ,மேம்பட்ட மனிதர்கள் நிறைந்த,புரிந்துணர்வும்,மதிப்பும் நிறைந்த சமுதாயமாக இருக்கும் என்பது உறுதி.
Mathimaranukku thongu sathai viraikkavilli yenral kuda braminthan karanam. Yenna mathi sariya