யார் வெறி நாய்?

dog-fight.jpg

 

 

  • வெறிபிடித்தத் தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவே இல்லை. இவைகளைக் கொன்றால்தான் என்ன?
    . ரமேஷ், சென்னை.

இந்தத் தொல்லை வெறிநாய்களால் அல்ல. ஜீவ காருண்ய சீலர்களால். ஜாதி இந்துக்கள், சைவ உணவு முறை பழக்கமுள்ள உயர்ஜாதிக்காரர்கள் எப்போதுமே உழைக்கும் மனிதர்களை விட விலங்குகளை மேன்மையானவைகளாக கருதுவார்கள்.

“அம்மா தாயே, சாப்பிட ஏதாவது இருந்த குடும்மா” என்று தன் வீட்டு வாசலில் பிச்சை எடுக்கிற ஒரு குழந்தையை விரட்டி விட்டு, எங்கோ இருக்கிற காக்காவை அழைத்து அதற்கு உணவு வைப்பார்கள்.

தனக்காக உழைக்கிற மனிதனை தொட்டாலே தீட்டு என்றுதீண்டாமையை’ கடைப்பிடிக்கிற இந்தசுத்தமானவர்கள்’ பசுமாட்டின் பின்புறத்தை தொட்டுக் கண்ணில்; ஒத்திக் கொள்வார்கள். பிறகு அதிலிருந்து வழிகிற மூத்திரத்தை பிடித்து தலையில் தெளித்துக் கொண்டு, அதை ஒரு வாய் குடிக்கவும் செய்வார்கள். (மாட்டு மூத்திரத்தைக் குடிப்பவர்கள் உயர்ந்த ஜாதி. மாட்டு கறியை தின்பவர்கள் தாழ்ந்த ஜாதியாம்)

இதன் தொடர்ச்சி தான் இவர்களுக்கு வெறி நாய்கள் மற்றும் தெருநாய்கள் மீது வந்திருக்கிற பாசமும்.

எந்த மக்கள் தங்கள் உணவின் ஒரு பகுதியை கொடுத்து தெருநாய்களை அன்போடு வளர்த்தார்களோஅந்த மக்கள்தான் அதைக் கொல்ல வேண்டும் என்று சொல்லுகிறார்கள். காரணம் அது அவர்களை தொல்லை செய்வதால், அவர்களைக் கடித்துக் கொல்வதால்.

ஆனால், தெரு நாய்கள் உயிர் வாழ்வதற்கு ஒரு ரொட்டியைக் கூட வாங்கி வீசாதஇரக்கமானவர்’கள்தான்அவைகளை கொல்லக் கூடாது’ என்று ஊளையிடுகிறார்கள்.

தெருநாய்களோடு தன் வீட்டுஉயர்வகையான’ நாய்கள்கூட பழகி விடக் கூடாது என்று கயிறு கட்டி வீதியில் நாய் மேய்கிற இவர்கள்தான், தெருநாய்கள் மீதுஅன்பை’ பொழிகிறார்கள்.

இந்த நாய் அபிமானிகள் சொல்லுகிற ஆலோசனை, “தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டு மீண்டும் தெருவிலேயே விட்டு விடவேண்டும்” என்பது.

தான் வளர்க்கிற அன்பு நாய்களுக்கு வயதாகி விட்டாலோ, நோய் வாய் பட்டாலோ தனக்கு தொல்லை தந்தாலோபுளு கிராசில்’ கொண்டு விட்டு விட்டு புது நாய் வாங்கிக் கொள்பவர்கள் தான், மக்களுக்கு தொல்லை தருகிற நாய்களை மீண்டும் தெருவிலேயே விட சொல்லுகிறார்கள்.

தெருநாய்களையும் புளு கிராசில் விட்டால் என்ன?

கும்பலாக வீதியில் சண்டை இட்டு திரிகிற தெருநாய்களோடு வாழ்வது எவ்வளவு துன்பமயமானது, சுகாதாரக் கேடானது என்பது அவர்களுக்கு தெரிய வேண்டுமானால், வெறி பிடித்த நாய்களை கும்பலாக கொண்டு போய் அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வந்துவிடவேண்டும்.

அந்த நாய்கள் ங்காவது ஏடாகூடமான இடத்தில் பிடித்து கடித்து வைத்தால்தான் அந்த மகாஞாநி’களுக்கு புத்தி வரும்.

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து

தொடர்புக்கு;‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.
பேச; 9444 337384

இயேசுவின் மூன்றாவது ‘வருகை’

god.jpg

ன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்சந்தை அருகே உள்ள பாளையம் பகுதியில், ஈஸ்டர் பண்டிகையன்று அதாவது இயேசுவின் இரண்டாவது வருகையன்று, (23.3.2008) புனித சந்தியாகப்பர் ஆலயத்தை இடி தாக்கியதால் சர்ச்சின் மேல் ஓடுகளால் ஆன கூறை முற்றிலுமாக நொறுங்கி விழுந்தது.
சர்ச்சுக்குள் அந்த நேரம் யாரும் இல்லாததால், மனிதர்களுக்கு எந்த தீங்கும் நேரவில்லை.

‘ஈஸ்டர்’ அன்று இந்த சேதம் நடந்ததால் ஒரு வேளை இது ஆண்டவரின் வேலையாக இருக்குமோ அதாவது அவரின் மூன்றாவது வருகையாக இருக்குமோ என்று பக்தர்கள் யாரும் கடவள் மீது சந்தேகப்படாதது பாராட்டுக்குரியது.

இதேபோல் சில மாதங்களுக்கு முன்னால் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கோபுர கலசத்தை இடிதாக்கி தூளாக்கியது.

பக்தர்கள் கோயில் கட்டினால் மட்டும் போதாது. கடவுளைப் பாதுகாக்க வேண்டுமானால், கோயிலின் மீது இடிதாங்கியை கட்டாயம் பொருத்த வேண்டும்.
இல்லையென்றால், வானத்திலிருந்து கடவுள் உங்களை ஆசிர்வதிப்பதற்கு முன், இடி கடவுளை ஆசிர்வதித்துவிடும்.

குறிப்பு:

இயேசு இனி பூமிக்கு வரப்போவதாக நம்பப்படுவதைதான் ‘ஆண்டவரின் இரண்டாவது வருகை’ என்று கிறிஸ்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 ஆனால் பைபிளின் கணக்குப்படி இயேசு மனித குமாரனாக பிறந்தது, முதல் வருகை. சிலுவையில் அறையப்பட்டு பின் உயிர்தெழுந்தது (ஈஸ்டர்) இரண்டாவது வருகை. அப்படியானல் இனி வந்தால் அது மூன்றாவது வருகைதானே?!

இந்துவா? அது அவுங்க மட்டும்தாங்க

vinayagar.jpg

ஆடு, மாடுகளை பலியிடுதல் பிடிக்காது பகவானுக்கு, சுத்த சைவம்.

இஸ்லாமியர் ரத்தம் என்றால்… அது தான் ஆனைமுகத்தானுக்கு கிருஷ்ணா ஸ்வீட்..

இந்து மதம் என்பது ஜாதிதான் என்று கூறுகிறீர்கள். அப்படியானால் அங்கே மத உணர்வே கிடையாதா?
-எஸ். விக்னேஸ்வரன்

இஸ்லாமியர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை தூண்டுவதற்கும், அவர்கள் மீது வன்முறையை ஏவுவதற்கும் முழுக்க முழுக்க இந்துமத ‘உணர்வு’ தான் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இந்து உணர்வு பக்தி சார்ந்தோ அல்லது இந்துக்கள் ஜாதி வித்தியாசம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளவோ பயன்படுவதில்லை.
பெரும்பாலும் வணிக நோக்கம் கொண்டதாகவும், அரசியல் காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

மொத்த வியாபாரத்தில் இஸ்லாமியர்களோடு போட்டி போடுகிற இந்து மற்றும் இஸ்லாமியர்கள் அல்லாத மதத்தைச் சேர்ந்த,

குறிப்பாக மகாவீரரை கடவுளாகக் கொண்ட ஜெயின மதத்தைச் சேர்ந்த  மார்வாடி சேட்டுகளும் (சமண சமயம்) சில பகுதிகளில் கிறிஸ்துவ முதலாளிகளும், சில சீக்கிய முதலாளிகளும் – ஆர்.எஸ்.எஸ்.,  இந்து மதவெறி கும்பலுக்கு கணிசமான ‘நன்கொடை’ தருகிறார்கள்.

இன்னொருபுரம், ‘இந்துக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம், இஸ்லாமியர்கள்தான். பாருங்கள் அவர்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள். அரசின் மூலமாக எவ்வளவு சலுகைகளை அனுபவிக்கிறார்கள். ஆனால் நமக்கு ஒன்றுமே இல்லை.’ என்ற பொய் பிரச்சாரத்தின் காரணமாக இந்துக்களின் ஓட்டைப் பெற, இஸ்லாமியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்த அடித்தட்டு மக்களிடம் இந்து என்கிற ‘உணர்வு’ ஊட்டப்படுகிறது.

சூத்திரர்கள், தீண்டத்தகாத மக்கள் என்று  எளிய மக்களை அவமானப்படுத்துகிற அந்த இந்து மேல் ஜாதி உணர்வுதான், இஸ்லாமியர்களுக்கு எதிராக பொய்யான இந்து என்கிற பொது உணர்வில் அணித்திரட்டப்படுகிறார்கள்.

இந்தத் தந்திரத்தை எளிதாக புரிந்துகொள்ள வைக்கிறது உயர்ஜாதிக்காரர்களின் இந்த செயல்பாடு:

தாழ்த்தப்பட்ட ‘இந்துக்கள்’ வாழ்கிற தெரு வழியாக சாமி ஊர்வலத்தையோ, தேரோட்டத்தையோ அனுமதிக்காத அந்த இந்து உயர்ஜாதி வெறிதான், இந்துமதத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத  இஸ்லாமியர்கள் வாழும் தெருவழியாகத்தான் வினாயகர் ஊர்வலத்தை நடத்துகிறார்கள். அரசு தடை விதித்தாலும் தடையை மீறியும் நடத்துகிறார்கள்.

அப்படி நடத்தப்படுகிற அந்த ஊர்வலத்தில் தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை தருகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

மார்ச்21, 2008

‘மூடப் பாதிரிகள்’ பாரதியின் கோபம்

buthaa-b00k.jpg

ஏராளமான புத்த நூல்கள் கொளுத்தப்பட்டன. அதற்கு பெயர்தான் ரிக் வேதப்படி நடத்தப்பட்ட யாகமோ?

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 17

நான்காவது அத்தியாயம்

ன்று (2000 ஏப்ரல்) பாரதிய ஜனதா கட்சியின் எதிர்க் கட்சியாக இருக்கிற அதனாலேயே மதப் பேரினவாத சக்தியின் எதிரியாகக் காட்சி தருகிற, ஜெயலலிதாவின் தயவில் பாரதீய ஜனதாகட்சி ஆட்சி நடத்த முயற்சித்த போது – புதுமையான கல்வித் திட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியில் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டியது.

அந்தக் கூட்டம் ‘சரஸ்வதி வந்தன’ த்துடன் தொடங்கியபோது, அன்றைய பாரதீய ஜனதாவின் எதிர்கட்சிகளின் வரிசையில் இருந்ததால், மதப்பேரினவாதத்தின் எதிரியாகக் காட்சி தந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அப்போதைய கல்வி அமைச்சர் அன்பழகன், சரஸ்வதி வந்தனத்தைக் கண்டித்து அந்தக் கூட்டத்தில் அலறியதாக சொல்லப்பட்டது அறிந்ததே.

சரி, அந்த தேசியக் கல்வித் திட்டத்தில் எல்லா மதத்தினரையும் அரவணைத்துக்கொண்டு வாழைப்பழத்தில் விஷ ஊசியை சொருவதுபோல் பல திட்டங்கள் சொல்லப்பட்டனவாம். என்ன திட்டங்கள் முன்வைக்கப்பட்டன?

இதோ பாரதி சொல்கிறார் அதைப் பற்றி:

“நான்கு வேதங்கள், ஆறு தர்சனங்கள், உப நிஷத்துக்கள், புராணங்கள், இதிகாசங்கள், பகவத்கீதை, பக்தர் பாடல்கள், சித்தர் நூல்கள் – இவற்றை ஆதராமாகக் கொண்டது ஹிந்து மதம்.

ஹிந்து மதத்தில் கிளைகள் இருந்த போதிலும், அக்கிளைகள் சில சயமங்களில் அறியாமையால் ஒன்றையன்று தூஷணை செய்து கொண்ட போதிலும், இந்து மதம் ஒன்றுதான் பிரிக்க முடியாதது.

வெவ்வேறு வ்யாக்யானங்கள் வெவ்வேறு அதிகாரிகளைக் கருதிச் செய்யப்பட்டன. தற்காலத்தில் சில குப்பைகள் நம்முடைய ஞான ஊற்றாகிய புராணங்கள் முதலியவற்றிலே கலந்துவிட்டன. மதத்துவேஷங்கள், அனாவசிய மூட பக்திகள் முதலியனவே அந்தக் குப்பைகளாம். ஆதலால் தேசீயப் பள்ளிக்கூடத்து மாணாக்கர்களுக்கு உபாத்தியார் தத்தம் இஷ்டதெய்வங்களிடம பரமபக்தி செலுத்தி வழிபாடு செய்துவர வேண்டும் என்று கற்பிப்பதுடன், இதர தெய்வங்களைப் பழித்தல், பகைத்தல் என்ற மூடச்செயல்களை கட்டோடு விட்டுவிடும்படி போதிக்க வேண்டும்.

‘ஏகம் ஸ்த்விப்ரா: பஹ§தா வதந்தி’ (கடவுள் ஒருவரே, அவரை ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர்) என்ற ரிக் வேத உண்மையை மாணாக்கரின் உள்ளத்தில் ஆழப்பதியுமாறு செய்ய வேண்டும். மேலும், கண்ணபிரான் ‘எல்லா உடம்புகளிலும் நானே உயிராக நிற்கிறேன்’ என்று கீதையில் கூறியபடி, ஈ, எறும்பு, புழு, பூச்சி, யானை, புலி, கரடி, தேள், பாம்பு, மனிதர்- எல்லா உயிர்களும் பரமாத்மாவின் அம்சங்களே என்பதை நன்கறிந்து, அவற்றை மனமொழி மெய்களால் எவ்வகையிலும் துன்புறுத்தாமல், இயன்ற வழிகளிலெல்லாம் அவற்றிற்கு நன்மையே செய்து வரவேண்டும்’ என்பதே இந்துமத்தின் மூலதர்மம் என்பதை மாணாக்கர்கள் நன்றாக உணர்ந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.மாம்ஸ போஜனம் மனிதன் உடல் இறைச்சியைத் தின்பது போலாகும் என்றும், மற்றவர்களைப் பகைத்தலும் அவர்களைக் கொல்வது போலேயாகும் என்றும் இந்து மதம் கற்பிக்கிறது. ‘எல்லாம் பிரம்மமயம்’, ‘ஸ்ர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்ற வசனங்களால் உலக முழுவதும் கடவுளின் வடிவமே என்று இந்து மதம் போதிக்கிறது.

‘இங்ஙனம் எல்லாம் கடவள் மயம் என்றுணர்ந்தவன் உலகத்தில் எதற்கும் பயப்படமாட்டான். எங்கும் பயப்படமாட்டான்; எக்காலத்திலும் மாறாத ஆனந்தத்துடன் தேவர்களைப் போல் இவ்வுலகில் நீடுழி வாழ்வான்’ என்பது இந்து மதத்தின் கொள்கை. இந்த விஷயங்களில் எல்லாம் மாணக்காருக்குக் தெளிவாக விளங்கும்படி செய்வது உபாத்தியாயர்களின் கடமை. மத விஷயமான போராட்டங்கள் எல்லாம் சாஸ்தர விரோதம்; ஆதலால், பரம மூடத்தனத்துக்கு லக்ஷனம். ஆசாரங்களை எல்லாம் அறிவுடன் அனுஷ்டிக்க வேண்டும். ஆனால், ஸமயக் கொள்கைக்கும் ஆசார நடைக்கும் தீராத ஸம்பந்தம் கிடையாது. ஸமயக் கொள்கை எக்காலத்திலும் மாறாதது. ஆசாரங்கள் காலத்துக்கு காலம் மாறுபடும் இயல்புடையன. ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

………………………………………………………………………………………………………………………………………………………………….

தேசியக் கல்வியில் முஹம்மதியர் எத்தனைக் கெத்தனை சேர்ந்துழைக்கிறார்களோ, அத்தனைக் கத்தனை அம்முயற்சி அதிகப் பயன் அடையும். மத பேதங்களை வ்யாஜமாகக் காட்டி ஹிந்து முஹம்மதியர் ராஜரீக முதலிய பொது விஷயங்களிலும் கூடியுழைக்காமல் தடுக்கவேண்டும் என்று ஆங்கிலோ-இந்தியப் பத்திராதிபர் முதலிய பொதுச் சந்துருக்கள் செய்த தீய முயற்சிகளெல்லாம் விழலாய்விட்டன.

மேலும், இந்தியாவிலுள்ள முஸல்மான்களில் பலர் ஹிந்து ஸந்ததியார். அவர்களுடைய நெஞ்சில் இந்து ரத்தம் புடைக்கிறது. இங்ஙனமில்லாமல் வெறும் பட்டாணிய அராபிய பாரஸீக மொகலாய ஸந்தியாக இருப்போரும் இந்து தேசத்தில் ஆயிர வருஷங்களுக்கு மேலாக வாழ்வதால், இந்து ஜாதியராகவே கருதத்தக்கவர் ஆவர்.

எங்ஙனமெனில், ஜப்பானில் பிறந்தவன் ஜப்பானியன், சீனத்தில் பிறந்தவன் சீனன்; இந்து தேசத்தில் பிறந்தவன் இந்து;

1. இந்தியா, இந்து, ஹிந்து மூன்றும் ஒரே சொல்லின் திரிபுகள். இந்தியாவில் பிறந்தவன் இந்திய ஜாதி அல்லது ஹிந்து ஜாதி.

2. கிறிஸ்தவர்

தேசீயக் கல்வி முயற்சிகளில் சேரக்கூடாதென்று ஒரு சில மூடப் பாதிரிகள் சொல்லக்கூடும். அதை இந்துக் கிறிஸ்தவர் கவனிக்கக் கூடாது. தேசீயக் கல்வியில், ரிக்வேதமும், குரானும், பைபிளும் ஸமானம். கிறிஸ்து, கிருஷ்ணன் என்பன பர்யாய நாமங்கள். வங்காளத்தில் இந்துக்கள் கிருஷ்ண தாஸ பாலன் என்று சொல்வதற்குக் கிறிஸ்தோதாஸ் பால் என்று சொல்கிறார்கள்.

3. மனுஸ்த்தன்மை

ஆங்கிலேயர், பிராமணர், ஆஸ்திரேலியாவில் முந்தி வேட்டைகளில் அழிக்கப்பட்ட புதர்ச்சாதியார் எல்லாரும் பொதுவில் ‘மனிதர்’, ஆதாம் ஏவா வழியில் பிறந்தவர்கள்’ என்றுகூறி, முஹம்மதியக் கிறிஸ்தவ வேதங்கள் ‘மனிதர் எல்லோரும் ஒன்று’ என்பதை உணர்த்துகின்றன. மஹாபாரத்ததில் மனிதர், தேவர், புட்கள், பாம்புகள் எல்லோரும் காச்யப்ர ஜாபதியின் மக்களாதலால் ஒரே குலத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதலால், தேசீயக்கல்வி முயற்சியில் ஜாதிமத வர்ண பேதங்களைக் கவனிக்கக் கூடாதென்று அரவிந்த கோஷ், திலக், அனிபெஸண்ட் முதலியவர்கள சொல்லுவதை இந்த நாட்டில் எந்த ஜாதியாரும், எந்த மதஸ்தரும், எந்த நிறத்தையுடையவரும் மறுக்க மாட்டார்களென்று நம்புகிறேன்”

மகாகவி பாரதியின் இந்த சிந்தனைகளையெல்லாம் நாம் புரிந்து கொள்ளுகிறபோது,

அது மூடநம்பிக்கை நிறைந்த வரிகளாக இருந்தாலும், அவரின் அந்தப் பாடல் வரிகளே நமக்கு ஞாபகம் வருகிறது,

‘படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,

போவான், போவான், ஐயோ எனறு போவான்.’

-தொடரும்

தமிழ் ப்ரதானம் ஆனால்… பாரதியின் மாறுவேடம்

thiru.jpg 

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 16

நான்காவது அத்தியாயம்

“அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முற்றே உலகு”

என்று தொடங்கிய திருவள்ளுவர், தன்னுடைய 1330 குறள்களிலும் கடைசிவரை ஆதிபகவான் யார் என்று சொல்லாமலேயே விட்டுவிட்டார். இது, சுப்பிரமணிய பாரதிக்கு பெரிய தொந்தரவாகவே இருந்திருக்கிறது.
அந்தக் கடுப்பு தாங்காமல், எடுத்திருக்கிறார் எழுதுகேலை-வடித்திருக்கிறார் பாடலை.
ஆதிபகவன் யாரென்றும், தன்னுடைய சிறப்புகள் எதனால் என்றும் தமிழ்த்தாயே ஒப்புதல் வாக்குமூலம் தருவதுபோல் எழுதி அடைத்தார் தமிழர்களின் வாயை.

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக் கணஞ் செய்து கொடுத்தான்.

மூன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்ட நல் லன்பொடு நித்தம் வளர்த்தார்.

ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்”

இதில் மொத்தம் மூன்று ஆப்புகளை தமிழர்களுக்கு அடித்திருக்கிறார் சுப்பிரமணியார்.

1. வள்ளுவர் சொன்ன ஆதிபகவன் சிவன் என்று அறிவிக்கிறார்.
(பார்ப்பனரில் பாரதி அய்யர் பிரிவைச் சேர்ந்தவர். அய்யருக்கு சிவனே எல்லாம்.)

2. தமிழக்கு இலக்கணம் செய்தவர் அகத்தியர் என்று சொல்லப்படுவதைப் பயன்படுத்தி, அகத்தியர் ஒரு பார்ப்பனர் என்று அவருக்குப் பூணூல் அணிவிக்கிறார்.

3. நன்றாக செய்யப்பட்டதாக தன் பெயரிலேயே சொல்லிக் கொள்கிற (`ஸம்` என்றால் நன்றாக, ‘கிருதம்’ என்றால் செய்யப்பட்டது) ஸ்ம்ஸ்கிருதத்திலிருந்தே, தமிழ் தயாரிக்கப்பட்டதாக, ஒட்டு மொத்தமாக சேர்த்து வைத்து ஆணியடிக்கிறார்.

‘கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய
மூத்தமொழி தமிழ் மொழி’

என்று மாறுவேடப் போட்டியில் அரிதாரம் பூசி வசனம் பேசியவர்கள் முகத்தில் கரியைக் குழைத்துப் பூசி விட்டாலும், அவரும் ஒரு மாறு வேடம் போடுகிறார்:

“தமிழ் நாட்டில் தேசீயக் கல்வியெனப்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையை ப்ரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால், அது ‘தேசியம்’ என்ற பதத்தின் பொருளுக்கு முழுவதும் விரோதமாக முடியுமென்பதில் அய்யமில்லை. தேசபாஷை ப்ரதானம என்பது தேசீயக் கல்வயின் ஆதாரக் கொள்கை; இதை மறந்துவிடக்கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானல், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும்”

டாக்டர் நாயரின் ஞாபகம் வந்தவுடன் தான் போட்டிருப்பது மாறுவேடம் என்பதையும் மறந்து கோபத்தில் மேக்கப்பை கலைத்து விட்டு,

“இங்ஙனம் தமிழ் ப்ரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர். நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடம் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி ஆரியபாஷை விரோதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்து விடலாகாது. தமிழ் நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுவதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் அய்க்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயறிசி மேன்மேலும் ஒங்குக. எனினும், தமிழ் நாட்டில் தமிழ் மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக”

பாரதியின் இந்த வார்த்தைகள் மொழி குறித்து தமிழக பாரதீய ஜனதா தலைவர்களின் இப்போதைய கருத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது அல்லவா?

ஆம், தமிழ் மொழி குறித்த இந்த திரைக்கதை, வசனம் ‘பார்ப்பனிய ஜனதாவின்’ பரம்பரையின் தொடர்ச்சி.

-தொடரும்

நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு… விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து…

tpem2.jpg

ரலாறை தன் விரும்பம் போல் கற்பனை செய்து சொல்லுகிற மோசடி அறிஞர்கள், தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் ஒரு குறிப்பிடதக்க அறிஞர்தான் இந்த ‘வாயாடி’நெல்லை கண்ணன்.

ஐந்தாம் வகுப்பு பையன் அஞ்சு மார்க்குகாக செய்யுளை மனப்பாடம் பண்ணி மளமளன்னு ஒப்புக்கிறானே, அந்த மாதிரி ‘திறமை’ உள்ளவர்தான் இந்த ஆளு.

இந்த நல்லவரை விஜய் டீ.வி. ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’என்கிற பேச்சுப் போட்டி நிகழ்ச்சிக்கு நடுவராக நியமிச்சிருக்கு.

தமிழ் தொலைக்காட்சிகளில் வருகிற நடன போட்டி, பேச்சுப் போட்டி, பட்டி மன்றம் போன்றவற்றில் ‘ஜட்ஜாக’ வருகிற இந்தக் கோமாளிகள், தங்களை சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜு மாதிரி நினைச்சுக்கிட்டு, சவடால் விடறதும், கண்டிக்கிறதும், தனக்கு முன்பு பங்கேற்பாளர்கள் பணிவாக நடந்துக்கணும், எதிர்த்து பேசக்கூடாதுன்னு ‘பில்டப்’ பண்ணுவதுமாக இருக்கிறார்கள்.

அப்படி ஒரு ‘பில்டப் கட்டப்பஞ்சாயத்து’ பாணி நடுவராதான் இந்த நெல்லை கண்ணன், 9-3-2008அன்று காலை 9மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான, ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சியிலே நடந்துகிட்டாரு.

சரி, வெறும் பில்டப்போடு போயிருந்தா பரவாயில்லை, போய் தொலையட்டும்னு விட்டுருக்கலாம்.ஆனால் வரலாறை கற்பனையாவும், பாரதி கவிதையை திரிச்சி தன் இஷ்டம்போல் பயன்படுத்தி பங்கேற்ற ஒரு பகுத்தறிவாளரான ஒரு இளைஞரை அவமானப்படுத்தியதை பார்த்த பிறகும் நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

பிரசன்னா என்ற ஒரு இளைஞர், ‘வல்லமை தாராயோ,- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?’ என்ற பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டி, “பாரதி வேண்டுமானால் கடவுளை நம்பி பாட்டுப் பாடலாம், ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை”என்ற அர்த்தப்படும்படி தன் பேச்சின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

உடனே நம்ம ‘மெம்மரி பிளஸ்’நெல்லை கண்ணன்,“பிரசன்னா, பாரதி அந்தக் கவிதையை அப்படி பாடவில்லை. மாகாளி பராசக்தி உருசியநாட்டினிற் கடைகண் வைத்தா ளங்கே ஆகவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி, என்று பாடினான். அதில் பாரதி நமக்கு சொல்லுகிற செய்தி என்னவென்றால், இங்கே இருக்கிற பராசக்தி ருஷ்ய நாட்டிற்கு ஏன் கடைகண் திறந்தால் என்றால், முயற்சியோடு வழிபட வேண்டும். ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டு உன் முட்டாள் தனத்தால் வழிபட்டால் பராசக்தி உனக்கு நன்மை செய்யமாட்டாள்…” என்றார்.

அதற்கு பிரசன்னா, “பாரதி ருஷ்ய புரட்சியை பற்றி பாடிக் கொள்ளட்டும் நான் அதை பற்றி சொல்லவில்லை” என்று பேச முயற்சித்தார்.

உடனே, ‘எண் கவனகம்’நெல்லை கண்ணனோ, “பிரசன்னா, நான் இருக்கும் இடத்தில் பாரதியை அவமானப்படுத்தி பேசுவதை அனுமதிக்க முடியாது. நான் முட்டாள் அல்ல.” என்று குதித்தார்.

அருகில் இருந்த அறிவுமதி, “எதிர்த்து பேசக்கூடாது” என்று பிரசன்னாவை எச்சரித்தார்.அந்த இளைஞர் பேச அனுமதியில்லாமல் திருப்பி அனுப்ப்பட்டார்.

இதில் நெல்லை கண்ணன் செய்த மோசடிகளைப் பார்ப்போம்.

மோசடி 1: பிரசன்னா என்கிற அந்த இளைஞர் மேற்கோள் காட்டிய ‘வல்லமை தாராயோ,- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?’ என்ற கவிதை, பக்திப் பாடல்கள் வரிசையில் 49 வது பாடலாக ‘கேட்பன’ என்ற தலைப்பில் பாரதி எழுதிய ‘நல்லதோர் வீணை செய்தே-அதை நலம் கெடப் புழுதியி லெறிவ துண்டோ? சொல்லடி சிவசக்தி!’என்ற பாடலில் வருகிறது.

ஆனால் நெல்லை கண்ணன் குறிப்பிடுகிற பாடல், தேசபக்திப் பாடல்கள் வரிசையில் 52 வது பாடலாக ‘புதிய ருஷியர்-ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி’என்ற தலைப்பில் வருகிறது.

பிரசன்னா சொன்னது சிவசக்தி. நெல்லை கண்ணன் போட்ட முடிச்சோ பராசக்தி.’

`என்னை முட்டாள் என்று நினைத்தீர்களா?’ என்று பிரசன்னாவிடம் ஆவேசப்பட்ட கண்ணன், ஒரு முட்டாளாகத்தான் நடந்திருக்கிறார்.

மோசடி 2:அப்படி முட்டாள் தனமாக மாற்றி மேற்கோள் காட்டிய பாடலையும், திரித்து “ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டு உன் முட்டாள் தனத்தால் வழிபட்டால் பராசக்தி உனக்கு நன்மை செய்யமாட்டாள்…”என்கிறார் இந்த சைவப்பிள்ளை கண்ணன்.

இதுதான் பிள்ளைமார்களும் பார்ப்பனர்களும் சங்கமிக்கிற இடம். அந்த இடத்தில்தான் பாரதியோடு சங்கமிக்கிறார் நெல்லை கண்ணன். சிறு தெய்வ வழிபாட்டு முறையை பார்ப்பன மற்றும் உயர் ஜாதி மயமாக்குதல்.

மோசடி 3:”நான் இருக்கும் இடத்தில் பாரதியை அவமானப்படுத்தி பேசுவதை அனுமதிக்க முடியாது. நான் முட்டாள் அல்ல.”என்று ஒரு அப்பாவி இளைஞனிடம் வீராப்பு காட்டுகிற கண்ணன், பாரதியை அம்பலப்படுத்தி நான் எழுதிய ‘பாரதி’ ய ஜனதா பாரட்டி’என்ற புத்தகத்திற்கு பதில் சொல்ல வக்கற்று, காற்றில் கத்தி சுற்றுகிறார்.

மோசடி 4: “விரைவாக அழிந்து வருகிற மொழிகளில் தமிழும் ஒன்று. என்று கேள்விபட்டவுன் நான் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை”என்று தமிழக்கு ஒரு அவமானம் ஏற்பட்டால், தன்னால் தாங்க முடியாது என்பது போன்ற ‘பெர்பாமன்ஸ்’தருகிறார் கண்ணன்.

உங்க சைவ சமயத்தின் உயிர் மூச்சான தேவாரம், திருவாசக்ததை சிதம்பரம் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி 2-3-2008க்கு முன்னால போய் பாடியிருக்க வேண்டியதுதானே? பாடியிருந்தா, தீட்சிதனுங்க வாயிலேயே குத்தியிருப்பானுங்க.

-வே. மதிமாறன்

 மார்ச்12, 2008 அன்று எழுதியது.

சிதம்பர ரகசியம் அம்பலமானது

chidambaram.jpg

சிதம்பரம் நடராஜன் கோயிலில் தேவாரம், திருவாசகத்தை தமிழில் பாடக்கூடாது (பின்ன தேவாரத்தை இங்கிலிஷிலயா பாடம் முடியும்?) என்று பல நூற்றாண்டுகளாக தமிழர்களை அவமானப்படுத்திவந்த தீட்சிதர்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்த்து, இன்று (5.3.2008) காலை 10 மணியளவில் மக்கள் கலை இலக்கிய கழக தோழர்கள் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரத்தை பாடியிருக்கிறார்கள்.

தோழர்களின் தொடர்ந்த முயற்சியினால் போலிசுக்குக்கூட பயப்படாத தீட்சிதர்கள், தோழர்களுக்கு மாலை அணிவித்து நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.

இது வரலாற்று சிறப்புமிக்க சம்பவம்.

இந்த வரலாற்றை நிகழ்த்திய சிவனடியார் பெரியவர் ஆறுமுகசாமிக்கும், மக்கள் கலை இலக்கிய கழகத்திற்கும், நண்பர் ராஜு தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கிறிஞர்களுக்கும் நமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தீட்சிதர்களிடம், அடிவாங்கிய காவல் துறை – தீட்சிதர்களை ஒன்று செய்யமுடியாத நிலையில், தேவாரம் பாடச் சென்ற நம் தோழர்களின் மீது வால்டர் தேவவரம்போல் பாய்ந்து தாக்குதல் நடத்திய வன்முறை கண்டிக்கத்தக்கது. (2.3.2008அன்று)                                      

                          ***

“தேவாரம், திருவாசகத்திற்கு அவமானம் ஏற்பட்டால் கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன வந்ததது?” என்ற கேள்வி வருகிறது. அவமானம் தேவாரம், திருவாசகத்திற்கு அல்ல. தமிழக்கு. அதன் வழியாக தமிழர்களுக்கு.ஒரு மொழியை தனியாக அவமானப்படுத்தமுடியாது.

அந்த மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களை அவமானப்படுத்வது அல்லது அந்த மக்களுக்கு என்ன ‘மரியாதை’ இருக்கிறதோ அதுவே அந்த மொழிக்கும் நேரும். அதுதான் தேவாரம், திருவாசகத்திற்கும் நேர்ந்தது.
ஆக நாத்திகர்கள் தேவாரம், திருவாசகத்திற்கு ஆதரவாக வரவில்லை. தமிழர்களுக்கு ஆதரவாக வந்தார்கள்.
“சரி, நாத்திகர்களாக இருக்கிறவர்கள், கோயில் உள்ளே நுழைந்து சிற்றம்பல மேடையில் ஏறி பக்திபாடல்களை பாடறாங்களே, இது என்னங்க நியாயம்?”

பக்தர்கள் போய் பாட வேண்டியதுதானே?

பக்தர்கள் சுயமரியாதை இல்லாமல் இருக்கறதனால அந்த கர்மம் புடிச்ச தேவாரம், திருவாசகத்தை நாத்திகர்கள்தான் பாடி தொலைக்க வேண்டியிருக்கு.

கோயில் நுழைவு போராட்டம், கருவறை நுழைவு போராட்டம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் இப்படி பல நேரங்களில் பக்தர்களின் சுயமரியாதைக்காக நாத்திகர்கள்தான் போராட வேண்டியத இருக்கு.

எப்படி சாமி கும்பிடறதுன்னுகூட நாத்திகர்கள்தான் சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கு.

என்ன பண்றது, அந்த லட்சணத்துல இருக்கு உங்க பக்தி.

-வே. மதிமாறன்

ஸமஸ்க்ருதமே சிறந்த மொழி

paramacharya1.jpg

இந்தக் கண்ணுலதான் ஒளி தெரியது அருள் வழியிதுன்னு சொன்னாங்க

பாரதிய ஜனதா பார்ட்டி15                         

 நான்காவது அத்தியாயம்

மது முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றி நாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன்பொருட்டே அதைத் தெய்வபாஷை யென்கிறோம்.அந்தப் பாஷையில் தைரியம் என்பதோர் சொல்லுண்டு.

தீரனுடைய இயற்கை, தைரியம், தீரன் என்ற வார்த்தையின் தாதுப் பொருளைக்கவனிப்போமானால் அறிவுடையவன் என்ற அர்த்தமாகும். துணிவுடையவனுக்கும் அந்தப் பாஷையிலே அதுவே பெயராக வழங்கப்படுகிறது.எனவே, ‘தைரியம்என்ற சொல் அறிவுடமையென்றும், துணிவுடைமையென்றும் இருவித அர்த்தங்கள் உடையது. இங்ஙனம் இவ்விரண்டு கருத்துக்களும் ஒரே சொல்லை வழங்குவது, அந்த பாஷையின் பெருமைக்குள்ள சின்னங்களிலே ஒன்றாகும்.

உலகத்தில் வேறு எந்தப் பாஷையிலும் மேற்கூறிய இரண்டு கருத்துக்களையும் சேர்த்துக் குறிப்பிடக்கூடிய ஒரே பதம் கிடையாது. எந்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமாக யதார்த்தங்களைப் பரிசோதனை செய்து பார்த்த மஹான்கள் வழங்கிய பாஷையாதலால், அந்தப் பாஷையிலே இவ்விரண்டு பொருள்களுக்கும் ஒரே பதம் அமைக்கப்பட்டிருக்கிறது…………….……………………………………………………………………………………………………………………………………………………………….இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸமஸ்க்ருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல. அங்ஙகனம் திரிபுகளல்லாததுவும் ஸம்ஸ்கிருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றனவாம்.”

நடுவுல இருக்கிறவன் மாதிரியில்ல; பெரியவர் கொஞ்சம் நல்லவர்என்று நமதுஅசடுகளில் பலர் விமர்சனங்களோடு ஆதரிக்கிற செத்துப்போன காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரன், சமஸ்கிருதம் பற்றி மேலே சொன்னது போல் சொல்லியிருக்கிறார்.

ஆனால், இதைச் சொன்னது,

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்

என்று பாட்டெழுதிய பாரதி.

தொடரும்

வாடகை விருந்தாளி

coffe.jpg

ஆச்சாரத்தின் அவதாரங்கள்
தொடர்ச்சி -3
 

 -வே. மதிமாறன்

நியாயந்தான். அப்படியானால் என்ன ‘போர்டு’ வைக்க வேண்டும்?
‘வெஜிடேரியன் ஒன்லி’
அப்போ எதுக்கு ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு?இப்போ புரியுது இல்ல, ஆச்சாரத்திற்கான அர்த்தம்.

ப்படி ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு வைத்து, ஆச்சாரத்தைக் காப்பற்றுகிற இவர்கள்தான், இன்னொருபுரம் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடுகிற பார்ப்பனரல்லாதவர்களுக்கு தன் வீட்டில் தங்க இடம் தந்து, அவர்களுக்கு ‘சைவ சாதத்தை’ சமைத்துப் போடுகிறார்கள்.

‘பேயிங் கெஸ்ட்’  ‘வாடகை விருந்தாளி’  என்று விருந்தை வியாபாரமாக்கியப் பெருமை தமிழகத்தில் இந்த ‘ஆச்சாரமானவர்களை’ யே சேரும்.

ஆம், சொந்த ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட , இஸ்லாமிய சிறுபான்மை மக்களை  அவமானப்படுத்துகிற ஆச்சாரமானவர்கள் – சுற்றுலா பயணிகளாகவும், இந்திய கலாச்சாரம் என்றால் அது கர்நாடக சங்கீதம் என்று தவறாக தெரிந்து கொண்டு, இங்கே இசை கற்றுக் கொள்ள வருகிற அமெரிக்க, ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ வெள்ளைக்காரர்களுக்கு, தங்கள் வீட்டிலேயே வாடகை விருந்தாளிகளாக தங்க வைத்து, அவர்களுக்கு ‘சாதம்’ செய்து ‘பரிமாறி’ இசையை கற்றுத்தந்து, திருமண வயதில் பெண்ணிருந்தால் திருமணமும் செய்து அனுப்புகிறார்கள்.

சென்னை பெசன்ட்நகரில் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த  ராமனாதன் என்கிற கர்நாடாக இசை தெரிந்தவரிடம்,  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த ‘பென்னட்’ என்பவர் வீணை கற்றுக் கொள்ள வந்தார்.

அவருக்கு தன் வீட்டில் தங்க இடம் தந்து, ‘சாதமும்’ போட்டு தனது மகள் கீதாவையும் திருமணம் முடித்து வைத்தார்.
அந்தப் பெண்தான் பின்னாட்களில் ‘கீதா பென்னட்’ என்ற பெயரில் கலிபோர்னியாவில் இருந்து தமிழ் பத்திரிகைளில் கதை எழுதிக் கொண்டிருந்தார்.

ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த லதா என்ற பெண், ஒரு பத்திரிகைப் பேட்டியில்,

“எங்க குடும்பம் ரொம்ப ஆச்சாராமான குடும்பம். சினிமா பார்க்கவே எங்க அப்பா, அம்மா எங்களை அனுமதிக்க மாட்டார்கள்.” என்று சொல்லியிருந்தார்.

இப்படி சொன்னவர் யாரை திருமணம் முடித்துக் கொண்டார் தெரியுமா? சிகிரெட், குடி பழக்கமும் நிரம்பிய, காதல் தோல்வியடைந்து பைத்தியம் பிடித்த நிலையில் பொது இடங்களில் சண்டை போட்டதாக சொல்லப்பட்ட ஒரு பார்ப்பனரல்லாதவரை. ஒரு நடிகரை.

அந்தத் திருமணம் காதல் திருமணம் அல்ல. ஆச்சாராமான பெற்றோர்கள் பார்த்து முடித்து வைத்த திருமணம்.
அந்த மாப்பிளையின் பெயர் நடிகர் ரஜினிகாந்த்.

இப்போது புரிகிறதா ஆச்சாரத்தை கைவிடுவதற்கான காரணம்.
   
                                                ***

வீட்டுக்கு வந்து முடிவெட்டும், முகம் மழிக்கும் பழக்கம் இந்திய நகரங்களில் வெள்ளைக்காரகளின் வருகைக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து,  முடிதிறுத்தும் நிலையமாக மேன்மையடந்தது. ‘ஆச்சாரமானவர்கள்’ முடிவெட்டும் கடைக்கு போவது ஆச்சாரக் கேடாக கருதப்பட்டது.

வெறுவழியில்லாததால், முடிவெட்டிய பின்  வீட்டுக்கு பின் பக்கமாக  சுற்றி வந்து தலையில் தண்ணி தெளித்து, சில பரிகாங்களை செய்து  அந்த ‘தீட்டை’ கழித்துவிடுவார்கள். முடிவெட்டும் தோழரை ‘அம்பட்டன்’ என்று அவமரியாதையும் செய்வார்கள். இப்படி மற்றவரை அவமானப்படுத்தி ஆச்சாரத்தைக் காப்பாறினார்கள்.

இப்போது ஆச்சாரத்திற்கான அர்த்தம் இன்னும் தெளிவாக புரிந்து இருக்கும்.

ஆண் முடிவெட்டும் கடைக்குப் போவேதே ஆச்சாரக் கேடு என்றால்,  பெண்போவது?
இன்றைக்கு ஆச்சாரமான குடும்பத்துப் பெண்கள்தான், அழகுபடுத்திக்கொள்ள அதிகமாக பார்பர் ஷாப்புக்கு போகிறார்கள். பார்பர்ஷாப்புக்கு போவதே ஆச்சாரக் கேடு என்றால், ‘பார்பர் ஷாப்வைத்திருப்பது எவ்வளவு பெரிய ஆச்சாரக் கேடு?

ஆம், இன்று பெண்களுக்கான பார்பர்ஷாப்வைத்திருப்பதில் 90 சதவீதம் ஆச்சாரமான குடும்பத்துப் பெண்களே.
அதற்கு அவர்கள் வைத்திருக்கிற பெயர், ‘பியூட்டி பார்லர்.’

நம் தோழர்களை அம்பட்டன்என்று இழிவு செய்த செய்கிற அவர்கள், அதே வேலையை செய்கிற அவர்களுக்கு அவர்களே வைத்துக் கொண்ட பெயர் என்ன தெரியுமா?
பியூட்டிசியன்
எப்படி இருக்கிறது நியாயம்?

ஆச்சாரத்தை கை விடுவதற்கான காரணம் இன்னும் தெளிவாக புரிகிறது இருக்கும்.

இந்த ஆச்சாரமானவர்களின் உள்ளேவெளியேவிளையாட்டை புரிந்து கொள்ளும்போது, இந்த மனோபாவத்தை ஒரே வரியில் விளக்கிய தந்தை பெரியாரின் அந்த மேற்கோள் பிரம்மாண்டமாய் நம் நினைவில் நிற்கிறது. (வார்த்தைகள் என்னுடையது) “பார்ப்பனர்கள் சுத்த சைவம்தான். ஆனால் ஒரு ஊர்ல நண்டு மட்டும்தான் சாப்பிடக் கிடைக்கும் என்றால், நடுவுல இருக்கிறது மட்டும் எனக்கு கொடுங்கன்னு கேப்பாங்க”
   நண்டில் உண்பதற்கான பகுதியே நடுபாகம்தான்.

திராவிடர் கழகத்தின் மாதமிருமுறை இதழான ‘உண்மை’ யில் 2008 ஜனவரி பொங்கல் சிறப்பதழில் எழுதியது.