வாடகை விருந்தாளி

coffe.jpg

ஆச்சாரத்தின் அவதாரங்கள்
தொடர்ச்சி -3
 

 -வே. மதிமாறன்

நியாயந்தான். அப்படியானால் என்ன ‘போர்டு’ வைக்க வேண்டும்?
‘வெஜிடேரியன் ஒன்லி’
அப்போ எதுக்கு ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு?இப்போ புரியுது இல்ல, ஆச்சாரத்திற்கான அர்த்தம்.

ப்படி ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு வைத்து, ஆச்சாரத்தைக் காப்பற்றுகிற இவர்கள்தான், இன்னொருபுரம் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடுகிற பார்ப்பனரல்லாதவர்களுக்கு தன் வீட்டில் தங்க இடம் தந்து, அவர்களுக்கு ‘சைவ சாதத்தை’ சமைத்துப் போடுகிறார்கள்.

‘பேயிங் கெஸ்ட்’  ‘வாடகை விருந்தாளி’  என்று விருந்தை வியாபாரமாக்கியப் பெருமை தமிழகத்தில் இந்த ‘ஆச்சாரமானவர்களை’ யே சேரும்.

ஆம், சொந்த ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட , இஸ்லாமிய சிறுபான்மை மக்களை  அவமானப்படுத்துகிற ஆச்சாரமானவர்கள் – சுற்றுலா பயணிகளாகவும், இந்திய கலாச்சாரம் என்றால் அது கர்நாடக சங்கீதம் என்று தவறாக தெரிந்து கொண்டு, இங்கே இசை கற்றுக் கொள்ள வருகிற அமெரிக்க, ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ வெள்ளைக்காரர்களுக்கு, தங்கள் வீட்டிலேயே வாடகை விருந்தாளிகளாக தங்க வைத்து, அவர்களுக்கு ‘சாதம்’ செய்து ‘பரிமாறி’ இசையை கற்றுத்தந்து, திருமண வயதில் பெண்ணிருந்தால் திருமணமும் செய்து அனுப்புகிறார்கள்.

சென்னை பெசன்ட்நகரில் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த  ராமனாதன் என்கிற கர்நாடாக இசை தெரிந்தவரிடம்,  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த ‘பென்னட்’ என்பவர் வீணை கற்றுக் கொள்ள வந்தார்.

அவருக்கு தன் வீட்டில் தங்க இடம் தந்து, ‘சாதமும்’ போட்டு தனது மகள் கீதாவையும் திருமணம் முடித்து வைத்தார்.
அந்தப் பெண்தான் பின்னாட்களில் ‘கீதா பென்னட்’ என்ற பெயரில் கலிபோர்னியாவில் இருந்து தமிழ் பத்திரிகைளில் கதை எழுதிக் கொண்டிருந்தார்.

ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த லதா என்ற பெண், ஒரு பத்திரிகைப் பேட்டியில்,

“எங்க குடும்பம் ரொம்ப ஆச்சாராமான குடும்பம். சினிமா பார்க்கவே எங்க அப்பா, அம்மா எங்களை அனுமதிக்க மாட்டார்கள்.” என்று சொல்லியிருந்தார்.

இப்படி சொன்னவர் யாரை திருமணம் முடித்துக் கொண்டார் தெரியுமா? சிகிரெட், குடி பழக்கமும் நிரம்பிய, காதல் தோல்வியடைந்து பைத்தியம் பிடித்த நிலையில் பொது இடங்களில் சண்டை போட்டதாக சொல்லப்பட்ட ஒரு பார்ப்பனரல்லாதவரை. ஒரு நடிகரை.

அந்தத் திருமணம் காதல் திருமணம் அல்ல. ஆச்சாராமான பெற்றோர்கள் பார்த்து முடித்து வைத்த திருமணம்.
அந்த மாப்பிளையின் பெயர் நடிகர் ரஜினிகாந்த்.

இப்போது புரிகிறதா ஆச்சாரத்தை கைவிடுவதற்கான காரணம்.
   
                                                ***

வீட்டுக்கு வந்து முடிவெட்டும், முகம் மழிக்கும் பழக்கம் இந்திய நகரங்களில் வெள்ளைக்காரகளின் வருகைக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து,  முடிதிறுத்தும் நிலையமாக மேன்மையடந்தது. ‘ஆச்சாரமானவர்கள்’ முடிவெட்டும் கடைக்கு போவது ஆச்சாரக் கேடாக கருதப்பட்டது.

வெறுவழியில்லாததால், முடிவெட்டிய பின்  வீட்டுக்கு பின் பக்கமாக  சுற்றி வந்து தலையில் தண்ணி தெளித்து, சில பரிகாங்களை செய்து  அந்த ‘தீட்டை’ கழித்துவிடுவார்கள். முடிவெட்டும் தோழரை ‘அம்பட்டன்’ என்று அவமரியாதையும் செய்வார்கள். இப்படி மற்றவரை அவமானப்படுத்தி ஆச்சாரத்தைக் காப்பாறினார்கள்.

இப்போது ஆச்சாரத்திற்கான அர்த்தம் இன்னும் தெளிவாக புரிந்து இருக்கும்.

ஆண் முடிவெட்டும் கடைக்குப் போவேதே ஆச்சாரக் கேடு என்றால்,  பெண்போவது?
இன்றைக்கு ஆச்சாரமான குடும்பத்துப் பெண்கள்தான், அழகுபடுத்திக்கொள்ள அதிகமாக பார்பர் ஷாப்புக்கு போகிறார்கள். பார்பர்ஷாப்புக்கு போவதே ஆச்சாரக் கேடு என்றால், ‘பார்பர் ஷாப்வைத்திருப்பது எவ்வளவு பெரிய ஆச்சாரக் கேடு?

ஆம், இன்று பெண்களுக்கான பார்பர்ஷாப்வைத்திருப்பதில் 90 சதவீதம் ஆச்சாரமான குடும்பத்துப் பெண்களே.
அதற்கு அவர்கள் வைத்திருக்கிற பெயர், ‘பியூட்டி பார்லர்.’

நம் தோழர்களை அம்பட்டன்என்று இழிவு செய்த செய்கிற அவர்கள், அதே வேலையை செய்கிற அவர்களுக்கு அவர்களே வைத்துக் கொண்ட பெயர் என்ன தெரியுமா?
பியூட்டிசியன்
எப்படி இருக்கிறது நியாயம்?

ஆச்சாரத்தை கை விடுவதற்கான காரணம் இன்னும் தெளிவாக புரிகிறது இருக்கும்.

இந்த ஆச்சாரமானவர்களின் உள்ளேவெளியேவிளையாட்டை புரிந்து கொள்ளும்போது, இந்த மனோபாவத்தை ஒரே வரியில் விளக்கிய தந்தை பெரியாரின் அந்த மேற்கோள் பிரம்மாண்டமாய் நம் நினைவில் நிற்கிறது. (வார்த்தைகள் என்னுடையது) “பார்ப்பனர்கள் சுத்த சைவம்தான். ஆனால் ஒரு ஊர்ல நண்டு மட்டும்தான் சாப்பிடக் கிடைக்கும் என்றால், நடுவுல இருக்கிறது மட்டும் எனக்கு கொடுங்கன்னு கேப்பாங்க”
   நண்டில் உண்பதற்கான பகுதியே நடுபாகம்தான்.

திராவிடர் கழகத்தின் மாதமிருமுறை இதழான ‘உண்மை’ யில் 2008 ஜனவரி பொங்கல் சிறப்பதழில் எழுதியது.

4 thoughts on “வாடகை விருந்தாளி

  1. vanakkam…
    kalakki ettangi ponga….

    sirappu….

    m.khathiravan
    mumbai-88

  2. மதிமாறன்,

    முரண்பாடுகளின் உருவம் தான் பார்ப்பனீயம். பார்ப்பனீயத்துக்கும், முதலாளித்துவத்திற்குமான நெருக்கமான கூறுகளை எளிதில் புரிய வைக்கும் பதிவு. வாழ்த்துக்கள்!

    திரு

  3. மிகவும் அரிதான உண்மைகளை நீங்கள் எழுதி வருகிறீர்கள் … வாழ்த்துக்கள்

Leave a Reply

%d bloggers like this: