ஸமஸ்க்ருதமே சிறந்த மொழி

paramacharya1.jpg

இந்தக் கண்ணுலதான் ஒளி தெரியது அருள் வழியிதுன்னு சொன்னாங்க

பாரதிய ஜனதா பார்ட்டி15                         

 நான்காவது அத்தியாயம்

மது முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றி நாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன்பொருட்டே அதைத் தெய்வபாஷை யென்கிறோம்.அந்தப் பாஷையில் தைரியம் என்பதோர் சொல்லுண்டு.

தீரனுடைய இயற்கை, தைரியம், தீரன் என்ற வார்த்தையின் தாதுப் பொருளைக்கவனிப்போமானால் அறிவுடையவன் என்ற அர்த்தமாகும். துணிவுடையவனுக்கும் அந்தப் பாஷையிலே அதுவே பெயராக வழங்கப்படுகிறது.எனவே, ‘தைரியம்என்ற சொல் அறிவுடமையென்றும், துணிவுடைமையென்றும் இருவித அர்த்தங்கள் உடையது. இங்ஙனம் இவ்விரண்டு கருத்துக்களும் ஒரே சொல்லை வழங்குவது, அந்த பாஷையின் பெருமைக்குள்ள சின்னங்களிலே ஒன்றாகும்.

உலகத்தில் வேறு எந்தப் பாஷையிலும் மேற்கூறிய இரண்டு கருத்துக்களையும் சேர்த்துக் குறிப்பிடக்கூடிய ஒரே பதம் கிடையாது. எந்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமாக யதார்த்தங்களைப் பரிசோதனை செய்து பார்த்த மஹான்கள் வழங்கிய பாஷையாதலால், அந்தப் பாஷையிலே இவ்விரண்டு பொருள்களுக்கும் ஒரே பதம் அமைக்கப்பட்டிருக்கிறது…………….……………………………………………………………………………………………………………………………………………………………….இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸமஸ்க்ருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல. அங்ஙகனம் திரிபுகளல்லாததுவும் ஸம்ஸ்கிருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றனவாம்.”

நடுவுல இருக்கிறவன் மாதிரியில்ல; பெரியவர் கொஞ்சம் நல்லவர்என்று நமதுஅசடுகளில் பலர் விமர்சனங்களோடு ஆதரிக்கிற செத்துப்போன காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரன், சமஸ்கிருதம் பற்றி மேலே சொன்னது போல் சொல்லியிருக்கிறார்.

ஆனால், இதைச் சொன்னது,

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்

என்று பாட்டெழுதிய பாரதி.

தொடரும்

6 thoughts on “ஸமஸ்க்ருதமே சிறந்த மொழி”

  1. இல்லீங்களா பின்ன …. அதனால தான இவரு பக்கம் பக்கமா சமஸ்கிருதத்துல கைவித்தையும் கட்டுரையும் எழுதி தள்ளுனாறு… சமஸ்கிருதம் தெய்வ பாசை தெய்வ பாசைனு சொல்லி சொல்லி அந்த தெய்வமே வந்தாலும் காப்பாத்த முடியாத நிலமைல இருக்கு… இன்னமும் இந்த வெட்டி பேச்சுக்கு மட்டும் .. அவா சமஸ்கிருதத்துல நன்னா கடவுள்ட்ட வேண்டட்டும்… மந்திரம் சொல்லட்டும்…. மொத வேண்டுதலா சமஸ்கிருதத்த காப்பாத்த சொல்லுங்கோ… இல்லினா நாங்க எல்லாம் கடவுளுக்கு காது கேக்காதுனு நெனசிட மாட்டோமா …

Leave a Reply