நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு… விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து…

tpem2.jpg

ரலாறை தன் விரும்பம் போல் கற்பனை செய்து சொல்லுகிற மோசடி அறிஞர்கள், தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் ஒரு குறிப்பிடதக்க அறிஞர்தான் இந்த ‘வாயாடி’நெல்லை கண்ணன்.

ஐந்தாம் வகுப்பு பையன் அஞ்சு மார்க்குகாக செய்யுளை மனப்பாடம் பண்ணி மளமளன்னு ஒப்புக்கிறானே, அந்த மாதிரி ‘திறமை’ உள்ளவர்தான் இந்த ஆளு.

இந்த நல்லவரை விஜய் டீ.வி. ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’என்கிற பேச்சுப் போட்டி நிகழ்ச்சிக்கு நடுவராக நியமிச்சிருக்கு.

தமிழ் தொலைக்காட்சிகளில் வருகிற நடன போட்டி, பேச்சுப் போட்டி, பட்டி மன்றம் போன்றவற்றில் ‘ஜட்ஜாக’ வருகிற இந்தக் கோமாளிகள், தங்களை சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜு மாதிரி நினைச்சுக்கிட்டு, சவடால் விடறதும், கண்டிக்கிறதும், தனக்கு முன்பு பங்கேற்பாளர்கள் பணிவாக நடந்துக்கணும், எதிர்த்து பேசக்கூடாதுன்னு ‘பில்டப்’ பண்ணுவதுமாக இருக்கிறார்கள்.

அப்படி ஒரு ‘பில்டப் கட்டப்பஞ்சாயத்து’ பாணி நடுவராதான் இந்த நெல்லை கண்ணன், 9-3-2008அன்று காலை 9மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான, ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சியிலே நடந்துகிட்டாரு.

சரி, வெறும் பில்டப்போடு போயிருந்தா பரவாயில்லை, போய் தொலையட்டும்னு விட்டுருக்கலாம்.ஆனால் வரலாறை கற்பனையாவும், பாரதி கவிதையை திரிச்சி தன் இஷ்டம்போல் பயன்படுத்தி பங்கேற்ற ஒரு பகுத்தறிவாளரான ஒரு இளைஞரை அவமானப்படுத்தியதை பார்த்த பிறகும் நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

பிரசன்னா என்ற ஒரு இளைஞர், ‘வல்லமை தாராயோ,- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?’ என்ற பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டி, “பாரதி வேண்டுமானால் கடவுளை நம்பி பாட்டுப் பாடலாம், ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை”என்ற அர்த்தப்படும்படி தன் பேச்சின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

உடனே நம்ம ‘மெம்மரி பிளஸ்’நெல்லை கண்ணன்,“பிரசன்னா, பாரதி அந்தக் கவிதையை அப்படி பாடவில்லை. மாகாளி பராசக்தி உருசியநாட்டினிற் கடைகண் வைத்தா ளங்கே ஆகவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி, என்று பாடினான். அதில் பாரதி நமக்கு சொல்லுகிற செய்தி என்னவென்றால், இங்கே இருக்கிற பராசக்தி ருஷ்ய நாட்டிற்கு ஏன் கடைகண் திறந்தால் என்றால், முயற்சியோடு வழிபட வேண்டும். ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டு உன் முட்டாள் தனத்தால் வழிபட்டால் பராசக்தி உனக்கு நன்மை செய்யமாட்டாள்…” என்றார்.

அதற்கு பிரசன்னா, “பாரதி ருஷ்ய புரட்சியை பற்றி பாடிக் கொள்ளட்டும் நான் அதை பற்றி சொல்லவில்லை” என்று பேச முயற்சித்தார்.

உடனே, ‘எண் கவனகம்’நெல்லை கண்ணனோ, “பிரசன்னா, நான் இருக்கும் இடத்தில் பாரதியை அவமானப்படுத்தி பேசுவதை அனுமதிக்க முடியாது. நான் முட்டாள் அல்ல.” என்று குதித்தார்.

அருகில் இருந்த அறிவுமதி, “எதிர்த்து பேசக்கூடாது” என்று பிரசன்னாவை எச்சரித்தார்.அந்த இளைஞர் பேச அனுமதியில்லாமல் திருப்பி அனுப்ப்பட்டார்.

இதில் நெல்லை கண்ணன் செய்த மோசடிகளைப் பார்ப்போம்.

மோசடி 1: பிரசன்னா என்கிற அந்த இளைஞர் மேற்கோள் காட்டிய ‘வல்லமை தாராயோ,- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?’ என்ற கவிதை, பக்திப் பாடல்கள் வரிசையில் 49 வது பாடலாக ‘கேட்பன’ என்ற தலைப்பில் பாரதி எழுதிய ‘நல்லதோர் வீணை செய்தே-அதை நலம் கெடப் புழுதியி லெறிவ துண்டோ? சொல்லடி சிவசக்தி!’என்ற பாடலில் வருகிறது.

ஆனால் நெல்லை கண்ணன் குறிப்பிடுகிற பாடல், தேசபக்திப் பாடல்கள் வரிசையில் 52 வது பாடலாக ‘புதிய ருஷியர்-ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி’என்ற தலைப்பில் வருகிறது.

பிரசன்னா சொன்னது சிவசக்தி. நெல்லை கண்ணன் போட்ட முடிச்சோ பராசக்தி.’

`என்னை முட்டாள் என்று நினைத்தீர்களா?’ என்று பிரசன்னாவிடம் ஆவேசப்பட்ட கண்ணன், ஒரு முட்டாளாகத்தான் நடந்திருக்கிறார்.

மோசடி 2:அப்படி முட்டாள் தனமாக மாற்றி மேற்கோள் காட்டிய பாடலையும், திரித்து “ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டு உன் முட்டாள் தனத்தால் வழிபட்டால் பராசக்தி உனக்கு நன்மை செய்யமாட்டாள்…”என்கிறார் இந்த சைவப்பிள்ளை கண்ணன்.

இதுதான் பிள்ளைமார்களும் பார்ப்பனர்களும் சங்கமிக்கிற இடம். அந்த இடத்தில்தான் பாரதியோடு சங்கமிக்கிறார் நெல்லை கண்ணன். சிறு தெய்வ வழிபாட்டு முறையை பார்ப்பன மற்றும் உயர் ஜாதி மயமாக்குதல்.

மோசடி 3:”நான் இருக்கும் இடத்தில் பாரதியை அவமானப்படுத்தி பேசுவதை அனுமதிக்க முடியாது. நான் முட்டாள் அல்ல.”என்று ஒரு அப்பாவி இளைஞனிடம் வீராப்பு காட்டுகிற கண்ணன், பாரதியை அம்பலப்படுத்தி நான் எழுதிய ‘பாரதி’ ய ஜனதா பாரட்டி’என்ற புத்தகத்திற்கு பதில் சொல்ல வக்கற்று, காற்றில் கத்தி சுற்றுகிறார்.

மோசடி 4: “விரைவாக அழிந்து வருகிற மொழிகளில் தமிழும் ஒன்று. என்று கேள்விபட்டவுன் நான் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை”என்று தமிழக்கு ஒரு அவமானம் ஏற்பட்டால், தன்னால் தாங்க முடியாது என்பது போன்ற ‘பெர்பாமன்ஸ்’தருகிறார் கண்ணன்.

உங்க சைவ சமயத்தின் உயிர் மூச்சான தேவாரம், திருவாசக்ததை சிதம்பரம் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி 2-3-2008க்கு முன்னால போய் பாடியிருக்க வேண்டியதுதானே? பாடியிருந்தா, தீட்சிதனுங்க வாயிலேயே குத்தியிருப்பானுங்க.

-வே. மதிமாறன்

 மார்ச்12, 2008 அன்று எழுதியது.

38 thoughts on “நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு… விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து…

 1. நண்பரே,

  “அப்படி ஒரு ‘பில்டப் கட்டப்பஞ்சாயத்து‘ பாணி நடுவராதான் இந்த நெல்லை கண்ணன், 9-3-2008 அன்று காலை 9 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான, ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு‘ என்ற நிகழ்ச்சியிலே நடந்துகிட்டாரு.”

  தென்பொதிகை.

 2. நெல்லைகண்ணன் முட்டாள் என்பதை மீண்டும் ஊர்ஜிதம் செய்த உமக்கு பாராட்டுகள்.

  அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அந்த டீவி ல ஜட்ஜா உட்கார வைக்கிரானுங்க.

  அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் ராமன் நல்லவன், பாரதி நல்லவன்.

  இது மாதிரி ஆளை நடுவரா வச்சா அப்ப பாரதியின் உயர்வுகளையும் கடவுள்களின் பெருமைகளையும் பேசினால் தான் ஜெயிக்க முடியுமா? \

  என்ன கொடும சார் இது.

 3. தொடரட்டும் உங்கள் பணி. மிகச் சரியான ஆய்வுப் பார்வை உள்ளது உங்களிடம்.

 4. enathu nanbar prasanna thaan pesiya peechil pakutharivum, ekathipathiya ethirppum kalanthu pathivu seythirukkirar.. athanaiyum oliparappavillai vijay tv…

  koolikku peesum kannan ponror vaiyai mudik kondu iruppathey nallathu.

 5. dear brother,
  Your review is praiseworthy.

  Judge suppose to speak in the end of the speach with his own remarks on the speach, which will be helpful to the speaker, audiance and the TV .viewers.
  Mr. Kannan from Trinelveli unduly concious, hyper actice and making mere noice pollution.

 6. Judge suppose to speak in the end of the speach with his own remarks on the speach, which will be helpful to the speaker, audiance and the TV .viewers.
  Mr. Kannan from Trinelveli unduly concious, hyper active,restless and making mere noice pollution.

 7. “ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டு உன் முட்டாள் தனத்தால் வழிபட்டால் பராசக்தி உனக்கு நன்மை செய்யமாட்டாள்…”

  இப்படி அவர் உண்மையிலேயே கூறியிருந்தால்…அது இனவாதம் மட்டுமல்ல, மத உணர்வினை புண்படுத்துதல் என்று கூறுகிறார்களே…அதுவுமாகும் என்று அவருக்கு அந்த இளைஞர் எடுத்துச் சொல்லியிருக்கலாம்.

 8. திரு. மதிமாறன்,

  திராவிட இயக்கத்தினர் காவியங்களை ஒரு வரியில் குறுக்கிவிடுவதாக சிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவே, உங்கள் பதிவில் பாரதி மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை சரியென ஏற்கும் முன் context -ஐ புரிந்து கொள்ள குறிப்பிட்ட வரிகளை ஒருமுறை அல்லது முதல்முறை வாசித்து விடுகிறேன். அதுபோல், இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றி நான் முழுமையாக அறிந்து, பேச்சு உரிமையில் சுணக்கம் நிகழ்ந்து விட்டதை கண்ணடித்து அத்தொலைகாட்ச்சிக்கு ஒரு கடிதம் எழுத இருக்கிறேன்.

  நிற்க, உங்கள் பணி மிகத்தேவையனது.
  மோகன் கந்தசாமி

 9. ////ஏற்கும் முன் context -ஐ புரிந்து கொள்ள குறிப்பிட்ட வரிகளை ஒருமுறை /////

  ஏற்கும் முன் context -ஐ புரிந்து கொள்ள குறிப்பிட்ட பகுதிகளை ஒருமுறை

  ////பேச்சு உரிமையில் சுணக்கம் நிகழ்ந்து விட்டதை கண்ணடித்து அத்தொலைகாட்ச்சிக்கு /////

  பேச்சு உரிமையில் சுணக்கம் நிகழ்ந்து விட்டதை கண்டித்து அத்தொலைகாட்ச்சிக்கு

  பிழைகளுக்கு மன்னிக்க.
  மோகன் கந்தசாமி

 10. நெல்லை கண்ணன் என்பவர் பேச்சாளர்கள் பேசுவதற்கு இடைஞ்சலாக தொண தொணவென்று பேசி கடுப்பேற்றுகிறார். தனக்கு தெரிந்ததெல்லாம் பெச்சாளர்களுக்கு தெரியுமா என்று மேதாவித்தனமாக சோதித்து பார்க்கும் இயல்பும் அவரிடம் உள்ளது. இதற்கு நேருக்கு மாறாக, அறிவுமதி அவர்கள் வாயில்லா பூச்சி மாதிரி இருக்கிறார் – நாகூர் இஸ்மாயில்

 11. i read your article about performance nellai kannan. Your critics are true. i saw the programme alternatively. He exploits the tamil youths. i admire your views and critical analysis.

 12. யாருப்பா அது அவரை நடுவராக போட்டது.பாவம் அவரும் பெச ஆசப்படுராறு..சரி ஒரு வாய்ப்புகொடுக்கலாம். அவரும் போட்டியில் கலந்துக்கலாம்.
  நெல்லை கண்ணன் சின்னக் கண்ணன்

 13. athiga prasangiyaagap pesuvathe pechu thiramai endru namakku karpikkap pattullathu. anmayil ithe nigallchiyil oru ilam pen kai, kalgalai aati aati udalai asaithu nadithapadiye pesinaar. enakku aruvaruppu thanga mudiyavillai. judges kangalai kattivittu ivargalai pesa sonnal oruvelai nalla theerpu kidaikalam.

  durai

 14. அவரும் வலைபதிய வந்திருக்கும் வேளையில், இந்த பதிவுக் குறித்து கருத்துச் சொல்லுவாரா நெல்லை கண்ணன்

 15. nellai kannan oru blog arambithu irukkirar. intha chuttiyai angu anuppalam

 16. வணக்கம் நண்பர் மதிமாறன் அவர்களே,

  ஆய்வு நோக்கிலான தங்களது பதிவிற்கு முன் எனது “எங்கே போகிறது தமிழ்ப் பேச்சு” பதிவு குப்பைக்கு சமம் என்று சொன்னாலும் ஒப்புக்கொள்வேன். அது தான் உன்மையும் கூட. திரு. நெல்லை கண்ணன் அவர்கள் எனது குப்பைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட தங்களது இந்த பதிவுக்குத் தரவில்லை. இதிலிருந்தே தெரிகிறது நெல்லை கண்ணன் அவர்கள் எத்தகைய செயல்வீரர் என்று. இத்தனைக்கும் ஒரு இடத்தில் கூட ஏன் அப்படி நடந்துகொண்டார் என்பதற்கான காரணத்தைச் சொல்லவில்லை.

  பிரசன்னாவுக்கு (பதிவெழுதிய போது பாதிக்கப்பட்ட இளைஞரின் பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டேன். குறிப்பிடாமல் இருந்தமைக்கு வருத்தங்கள்) இழைக்கப்பட்ட அநீதிக்காக நாமெல்லாம் குரல்கொடுத்தால், ஜெயகாந்தனையும் அப்துல்ரகுமானையும் கேள்வி கேட்டதைப்பற்றிச் சொல்கிறார். பிரம்மாஸ்திரம் என்று நினைத்து தொடர்ந்து அட்டைக் கத்திகளையே வீசிக்கொண்டு இருக்கிறார்.

  செய்யுளுக்கு செய்யுளால் பதில் சொல்லியும் பார்த்தாகிவிட்டது. மேலே என்னதான் செய்யட்டும்? வழிநடத்துங்களேன்.

 17. thamizh paechu engal uyir moochu nigazhchiyil nellai kannanin adavadiththanam athigamaagaththaan irukkirathu . ungalin ethirvinai avarai sirithavathu ulukki irukkum ena nambalam. evvalavuthan murpokku paesinalum bharathi vimarsanam endru vanthuvittal ivargal iduppil manjal vaettiyaiyum kaiyil vaeppilaiyaiyum vaiththukk kondu naanaththukkum boomikkumai thullik kuthikkiraargal. ivargal bharathi piththargal mattumalla bharathi bothaiyaalargalum kooda !

 18. தமிழ் ஆயுதத்தை கொண்டு மக்களை இழிவு படுத்தும் தமிழ்கடல் கண்ணன் & குழு , நெல்லைக்கண்ணனின் உயர்சாதி திமிர் வெளிப்பாடு, இடஒதுக்கீட்டிற்கு எதிராக பேசும் துரோகம் எல்லாம் இந்த பதிவில் எழுதியிருக்கிறேன்

  http://kuzhali.blogspot.com/2008/08/blog-post_23.html

 19. இந்நிகழ்ச்சியில் பேசுபவர்கள் அனைவரின் பேசும் மிக மிக ரசிக்கத்தக்கதாக உள்ளது.
  நடுவரான நெல்லை கண்ணனை தவிர்த்து;
  இந்த மாதிரி நிகழ்ச்சிகள் அதிகம் வர வேண்டும்.

 20. I have not read what Kannan wrote or spoke. Barathiar was a great poet. But I have heard certain discrepancies about his life style. When he was hiding in Pondicherry, the local public used to be scared of him, because he was always drunk with fiery eyes and holding bottles. This was not a Ghandian way. He wrote “uchi meedu idi villundalum achamillai achamillaiye” Then why did he hide himself in Pondicherry, while others were courting arrests in Tamil Nadu.?
  Bharathy Dasan was a native of Pondicherry and he had to live therre.

 21. அன்புள்ள மதிமாறனுக்கு நன்றி.

  இப்படிபட்ட கேவலமான சம்பவக்களை தோலுரித்து காட்டியதற்கு மிக்க நன்றி.

 22. பேச்சாளர்களை தொடர்ந்து பேச விடாமல் இடைமறித்து கேள்வி கேட்டு இல்லையென்றால் அதற்க்கு ஏதாவது ஒரு விளக்கம் கூறி அவர்கள் பேச வந்த விசயத்தையே மறக்க வைத்து விடுகிறார்.

  இடையிடையே நக்கல் வேறு.

 23. அடேங்கப்பா … நான் மட்டும் தான் என்று நினைத்தேன். நிறைய பேருக்கு இருக்கும் அதே எண்ணம் தான் எனதும். ‘எப்படி இந்த ஆளை எல்லாம் நடுவராகப் போட்டிருக்காங்க’ என்று.

  ‘தமிழ் பேச்சு இவரால் போச்சு’ன்ற அளவிற்கு இடைஞ்சலாகத்தான் இருக்கிறது இவரது பேச்சு, பேச்சாளர்களுக்கும் மற்றும் நமக்கும் ;)))

 24. nellai kannan mathiri niraiya per samugathil irukkirargal avargalukkum ithu oru satyadi. nandrigal pala.

 25. intha ulagil thangal karuthai solvatharkku anaivarukkum urimaiyundu
  karuthai maruppavarukku karuthai koorubavar bathilalikkum kadamaiyundu
  avvaaru nadanthu kollaamal sinamutru pesuvathu arivaanmaiyaagaathu
  pagalavanin oli sellaatha idathilum kaivilakku senru olitara iyalum
  anaithaiyum arinthavargal ivvulagil illai
  athanaal thanakkuthaan ellaam theriyum enru pithatri tirivathu
  ariyaamaiyai velicham pottu kaattum
  againthai kollaamal thanvaathathai porumaiyudan
  ethirppaalar munvaikkiravane vetri perugiraan.
  matravaiellaam vantha vegathileye poividum

 26. மாற்றான் தோட்டத்து
  மல்லிகையும் மணக்குமையா

  மனப்பாடம் செய்து
  ஒப்பிப்பதும் ஒரு திறமை.

  விஷயம் ஒன்றும் இல்லாவிட்டாலும்
  இருக்கின்ற இந்த திறமையைகொண்டு
  வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் ஏராளம்.

  லா சா ராம்மாமிர்தம் என்று
  ஒரு எழுத்தாளர் இருந்தார்
  அவர் சொல்லுவார்.

  ‘பிடிச்சா தின்னு.
  பிடிக்காட்டி முழுங்கு என்பார்.

  உலகம் பலவிதம்.

  அதில் நெல்லை கண்ணன்
  அவர்கள் ஒருவிதம்.

  அவருக்காக உங்கள் BP ஏன் எகிறவேண்டும்
  அமைதி நண்பரே.அமைதி.

 27. he is better manaanada mayilada.half the tamil news reader doesnt pronounce tamil properly.i thi nellai kannan is extremely talented.ita obvious that he will arrogant.

 28. ஞானம் இருந்தால் கர்வம் இருக்கத்தான் செய்யும்.தமிழுக்கு அழகு சேர்க்கும் சிலரில் இவரும் ஒருவர் .அவரையும் விட்டுவைப்பதாக இல்லை.

 29. நெல்லைக் கண்ணன் நொள்ளைக் கண்ணன் உளறல் மன்னன்.
  பிறிதொன்று: பாரதியார் இறுதிக்காலத்தில் பாடியதில் ராமாயணம் மகாபாரதம் கதைகள் என்று தெளிவு படுத்தியிருக்கிறார்.பார்க்க”பாரதியார் கவிதைகள் கங்கை பதிப்பகம் 615-619 ; 19 உயிர்பெற்ற தமிழர்
  சில வரிகள் தங்கள் பார்வைக்கு
  “திறல் வீமனும் கற்பனை…”

  சூத்திரனுக் கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு
  சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்

Leave a Reply

%d bloggers like this: