‘மூடப் பாதிரிகள்’ பாரதியின் கோபம்

buthaa-b00k.jpg

ஏராளமான புத்த நூல்கள் கொளுத்தப்பட்டன. அதற்கு பெயர்தான் ரிக் வேதப்படி நடத்தப்பட்ட யாகமோ?

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 17

நான்காவது அத்தியாயம்

ன்று (2000 ஏப்ரல்) பாரதிய ஜனதா கட்சியின் எதிர்க் கட்சியாக இருக்கிற அதனாலேயே மதப் பேரினவாத சக்தியின் எதிரியாகக் காட்சி தருகிற, ஜெயலலிதாவின் தயவில் பாரதீய ஜனதாகட்சி ஆட்சி நடத்த முயற்சித்த போது – புதுமையான கல்வித் திட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியில் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டியது.

அந்தக் கூட்டம் ‘சரஸ்வதி வந்தன’ த்துடன் தொடங்கியபோது, அன்றைய பாரதீய ஜனதாவின் எதிர்கட்சிகளின் வரிசையில் இருந்ததால், மதப்பேரினவாதத்தின் எதிரியாகக் காட்சி தந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அப்போதைய கல்வி அமைச்சர் அன்பழகன், சரஸ்வதி வந்தனத்தைக் கண்டித்து அந்தக் கூட்டத்தில் அலறியதாக சொல்லப்பட்டது அறிந்ததே.

சரி, அந்த தேசியக் கல்வித் திட்டத்தில் எல்லா மதத்தினரையும் அரவணைத்துக்கொண்டு வாழைப்பழத்தில் விஷ ஊசியை சொருவதுபோல் பல திட்டங்கள் சொல்லப்பட்டனவாம். என்ன திட்டங்கள் முன்வைக்கப்பட்டன?

இதோ பாரதி சொல்கிறார் அதைப் பற்றி:

“நான்கு வேதங்கள், ஆறு தர்சனங்கள், உப நிஷத்துக்கள், புராணங்கள், இதிகாசங்கள், பகவத்கீதை, பக்தர் பாடல்கள், சித்தர் நூல்கள் – இவற்றை ஆதராமாகக் கொண்டது ஹிந்து மதம்.

ஹிந்து மதத்தில் கிளைகள் இருந்த போதிலும், அக்கிளைகள் சில சயமங்களில் அறியாமையால் ஒன்றையன்று தூஷணை செய்து கொண்ட போதிலும், இந்து மதம் ஒன்றுதான் பிரிக்க முடியாதது.

வெவ்வேறு வ்யாக்யானங்கள் வெவ்வேறு அதிகாரிகளைக் கருதிச் செய்யப்பட்டன. தற்காலத்தில் சில குப்பைகள் நம்முடைய ஞான ஊற்றாகிய புராணங்கள் முதலியவற்றிலே கலந்துவிட்டன. மதத்துவேஷங்கள், அனாவசிய மூட பக்திகள் முதலியனவே அந்தக் குப்பைகளாம். ஆதலால் தேசீயப் பள்ளிக்கூடத்து மாணாக்கர்களுக்கு உபாத்தியார் தத்தம் இஷ்டதெய்வங்களிடம பரமபக்தி செலுத்தி வழிபாடு செய்துவர வேண்டும் என்று கற்பிப்பதுடன், இதர தெய்வங்களைப் பழித்தல், பகைத்தல் என்ற மூடச்செயல்களை கட்டோடு விட்டுவிடும்படி போதிக்க வேண்டும்.

‘ஏகம் ஸ்த்விப்ரா: பஹ§தா வதந்தி’ (கடவுள் ஒருவரே, அவரை ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர்) என்ற ரிக் வேத உண்மையை மாணாக்கரின் உள்ளத்தில் ஆழப்பதியுமாறு செய்ய வேண்டும். மேலும், கண்ணபிரான் ‘எல்லா உடம்புகளிலும் நானே உயிராக நிற்கிறேன்’ என்று கீதையில் கூறியபடி, ஈ, எறும்பு, புழு, பூச்சி, யானை, புலி, கரடி, தேள், பாம்பு, மனிதர்- எல்லா உயிர்களும் பரமாத்மாவின் அம்சங்களே என்பதை நன்கறிந்து, அவற்றை மனமொழி மெய்களால் எவ்வகையிலும் துன்புறுத்தாமல், இயன்ற வழிகளிலெல்லாம் அவற்றிற்கு நன்மையே செய்து வரவேண்டும்’ என்பதே இந்துமத்தின் மூலதர்மம் என்பதை மாணாக்கர்கள் நன்றாக உணர்ந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.மாம்ஸ போஜனம் மனிதன் உடல் இறைச்சியைத் தின்பது போலாகும் என்றும், மற்றவர்களைப் பகைத்தலும் அவர்களைக் கொல்வது போலேயாகும் என்றும் இந்து மதம் கற்பிக்கிறது. ‘எல்லாம் பிரம்மமயம்’, ‘ஸ்ர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்ற வசனங்களால் உலக முழுவதும் கடவுளின் வடிவமே என்று இந்து மதம் போதிக்கிறது.

‘இங்ஙனம் எல்லாம் கடவள் மயம் என்றுணர்ந்தவன் உலகத்தில் எதற்கும் பயப்படமாட்டான். எங்கும் பயப்படமாட்டான்; எக்காலத்திலும் மாறாத ஆனந்தத்துடன் தேவர்களைப் போல் இவ்வுலகில் நீடுழி வாழ்வான்’ என்பது இந்து மதத்தின் கொள்கை. இந்த விஷயங்களில் எல்லாம் மாணக்காருக்குக் தெளிவாக விளங்கும்படி செய்வது உபாத்தியாயர்களின் கடமை. மத விஷயமான போராட்டங்கள் எல்லாம் சாஸ்தர விரோதம்; ஆதலால், பரம மூடத்தனத்துக்கு லக்ஷனம். ஆசாரங்களை எல்லாம் அறிவுடன் அனுஷ்டிக்க வேண்டும். ஆனால், ஸமயக் கொள்கைக்கும் ஆசார நடைக்கும் தீராத ஸம்பந்தம் கிடையாது. ஸமயக் கொள்கை எக்காலத்திலும் மாறாதது. ஆசாரங்கள் காலத்துக்கு காலம் மாறுபடும் இயல்புடையன. ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

………………………………………………………………………………………………………………………………………………………………….

தேசியக் கல்வியில் முஹம்மதியர் எத்தனைக் கெத்தனை சேர்ந்துழைக்கிறார்களோ, அத்தனைக் கத்தனை அம்முயற்சி அதிகப் பயன் அடையும். மத பேதங்களை வ்யாஜமாகக் காட்டி ஹிந்து முஹம்மதியர் ராஜரீக முதலிய பொது விஷயங்களிலும் கூடியுழைக்காமல் தடுக்கவேண்டும் என்று ஆங்கிலோ-இந்தியப் பத்திராதிபர் முதலிய பொதுச் சந்துருக்கள் செய்த தீய முயற்சிகளெல்லாம் விழலாய்விட்டன.

மேலும், இந்தியாவிலுள்ள முஸல்மான்களில் பலர் ஹிந்து ஸந்ததியார். அவர்களுடைய நெஞ்சில் இந்து ரத்தம் புடைக்கிறது. இங்ஙனமில்லாமல் வெறும் பட்டாணிய அராபிய பாரஸீக மொகலாய ஸந்தியாக இருப்போரும் இந்து தேசத்தில் ஆயிர வருஷங்களுக்கு மேலாக வாழ்வதால், இந்து ஜாதியராகவே கருதத்தக்கவர் ஆவர்.

எங்ஙனமெனில், ஜப்பானில் பிறந்தவன் ஜப்பானியன், சீனத்தில் பிறந்தவன் சீனன்; இந்து தேசத்தில் பிறந்தவன் இந்து;

1. இந்தியா, இந்து, ஹிந்து மூன்றும் ஒரே சொல்லின் திரிபுகள். இந்தியாவில் பிறந்தவன் இந்திய ஜாதி அல்லது ஹிந்து ஜாதி.

2. கிறிஸ்தவர்

தேசீயக் கல்வி முயற்சிகளில் சேரக்கூடாதென்று ஒரு சில மூடப் பாதிரிகள் சொல்லக்கூடும். அதை இந்துக் கிறிஸ்தவர் கவனிக்கக் கூடாது. தேசீயக் கல்வியில், ரிக்வேதமும், குரானும், பைபிளும் ஸமானம். கிறிஸ்து, கிருஷ்ணன் என்பன பர்யாய நாமங்கள். வங்காளத்தில் இந்துக்கள் கிருஷ்ண தாஸ பாலன் என்று சொல்வதற்குக் கிறிஸ்தோதாஸ் பால் என்று சொல்கிறார்கள்.

3. மனுஸ்த்தன்மை

ஆங்கிலேயர், பிராமணர், ஆஸ்திரேலியாவில் முந்தி வேட்டைகளில் அழிக்கப்பட்ட புதர்ச்சாதியார் எல்லாரும் பொதுவில் ‘மனிதர்’, ஆதாம் ஏவா வழியில் பிறந்தவர்கள்’ என்றுகூறி, முஹம்மதியக் கிறிஸ்தவ வேதங்கள் ‘மனிதர் எல்லோரும் ஒன்று’ என்பதை உணர்த்துகின்றன. மஹாபாரத்ததில் மனிதர், தேவர், புட்கள், பாம்புகள் எல்லோரும் காச்யப்ர ஜாபதியின் மக்களாதலால் ஒரே குலத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதலால், தேசீயக்கல்வி முயற்சியில் ஜாதிமத வர்ண பேதங்களைக் கவனிக்கக் கூடாதென்று அரவிந்த கோஷ், திலக், அனிபெஸண்ட் முதலியவர்கள சொல்லுவதை இந்த நாட்டில் எந்த ஜாதியாரும், எந்த மதஸ்தரும், எந்த நிறத்தையுடையவரும் மறுக்க மாட்டார்களென்று நம்புகிறேன்”

மகாகவி பாரதியின் இந்த சிந்தனைகளையெல்லாம் நாம் புரிந்து கொள்ளுகிறபோது,

அது மூடநம்பிக்கை நிறைந்த வரிகளாக இருந்தாலும், அவரின் அந்தப் பாடல் வரிகளே நமக்கு ஞாபகம் வருகிறது,

‘படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,

போவான், போவான், ஐயோ எனறு போவான்.’

-தொடரும்

One thought on “‘மூடப் பாதிரிகள்’ பாரதியின் கோபம்

  1. //இந்துக்கள் கிருஷ்ண தாஸ பாலன் என்று சொல்வதற்குக் கிறிஸ்தோதாஸ் பால் என்று சொல்கிறார்கள்.//

    பாரதி இவ்ளோ பெரிய காமெடியனா இருப்பான்னு நான் நினைச்சுக் கூட பாக்கல மதி.

Leave a Reply

%d bloggers like this: