யார் வெறி நாய்?

dog-fight.jpg

 

 

 • வெறிபிடித்தத் தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவே இல்லை. இவைகளைக் கொன்றால்தான் என்ன?
  . ரமேஷ், சென்னை.

இந்தத் தொல்லை வெறிநாய்களால் அல்ல. ஜீவ காருண்ய சீலர்களால். ஜாதி இந்துக்கள், சைவ உணவு முறை பழக்கமுள்ள உயர்ஜாதிக்காரர்கள் எப்போதுமே உழைக்கும் மனிதர்களை விட விலங்குகளை மேன்மையானவைகளாக கருதுவார்கள்.

“அம்மா தாயே, சாப்பிட ஏதாவது இருந்த குடும்மா” என்று தன் வீட்டு வாசலில் பிச்சை எடுக்கிற ஒரு குழந்தையை விரட்டி விட்டு, எங்கோ இருக்கிற காக்காவை அழைத்து அதற்கு உணவு வைப்பார்கள்.

தனக்காக உழைக்கிற மனிதனை தொட்டாலே தீட்டு என்றுதீண்டாமையை’ கடைப்பிடிக்கிற இந்தசுத்தமானவர்கள்’ பசுமாட்டின் பின்புறத்தை தொட்டுக் கண்ணில்; ஒத்திக் கொள்வார்கள். பிறகு அதிலிருந்து வழிகிற மூத்திரத்தை பிடித்து தலையில் தெளித்துக் கொண்டு, அதை ஒரு வாய் குடிக்கவும் செய்வார்கள். (மாட்டு மூத்திரத்தைக் குடிப்பவர்கள் உயர்ந்த ஜாதி. மாட்டு கறியை தின்பவர்கள் தாழ்ந்த ஜாதியாம்)

இதன் தொடர்ச்சி தான் இவர்களுக்கு வெறி நாய்கள் மற்றும் தெருநாய்கள் மீது வந்திருக்கிற பாசமும்.

எந்த மக்கள் தங்கள் உணவின் ஒரு பகுதியை கொடுத்து தெருநாய்களை அன்போடு வளர்த்தார்களோஅந்த மக்கள்தான் அதைக் கொல்ல வேண்டும் என்று சொல்லுகிறார்கள். காரணம் அது அவர்களை தொல்லை செய்வதால், அவர்களைக் கடித்துக் கொல்வதால்.

ஆனால், தெரு நாய்கள் உயிர் வாழ்வதற்கு ஒரு ரொட்டியைக் கூட வாங்கி வீசாதஇரக்கமானவர்’கள்தான்அவைகளை கொல்லக் கூடாது’ என்று ஊளையிடுகிறார்கள்.

தெருநாய்களோடு தன் வீட்டுஉயர்வகையான’ நாய்கள்கூட பழகி விடக் கூடாது என்று கயிறு கட்டி வீதியில் நாய் மேய்கிற இவர்கள்தான், தெருநாய்கள் மீதுஅன்பை’ பொழிகிறார்கள்.

இந்த நாய் அபிமானிகள் சொல்லுகிற ஆலோசனை, “தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டு மீண்டும் தெருவிலேயே விட்டு விடவேண்டும்” என்பது.

தான் வளர்க்கிற அன்பு நாய்களுக்கு வயதாகி விட்டாலோ, நோய் வாய் பட்டாலோ தனக்கு தொல்லை தந்தாலோபுளு கிராசில்’ கொண்டு விட்டு விட்டு புது நாய் வாங்கிக் கொள்பவர்கள் தான், மக்களுக்கு தொல்லை தருகிற நாய்களை மீண்டும் தெருவிலேயே விட சொல்லுகிறார்கள்.

தெருநாய்களையும் புளு கிராசில் விட்டால் என்ன?

கும்பலாக வீதியில் சண்டை இட்டு திரிகிற தெருநாய்களோடு வாழ்வது எவ்வளவு துன்பமயமானது, சுகாதாரக் கேடானது என்பது அவர்களுக்கு தெரிய வேண்டுமானால், வெறி பிடித்த நாய்களை கும்பலாக கொண்டு போய் அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வந்துவிடவேண்டும்.

அந்த நாய்கள் ங்காவது ஏடாகூடமான இடத்தில் பிடித்து கடித்து வைத்தால்தான் அந்த மகாஞாநி’களுக்கு புத்தி வரும்.

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து

தொடர்புக்கு;‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.
பேச; 9444 337384

6 thoughts on “யார் வெறி நாய்?

 1. நண்பர் மதிமாறனுக்கு… நான் நலம் நாடுவதும் அதுவே. நான் எஸ்.செந்தில்குமார். இன்றுதான் தங்களது வலைப்பதிவை முதன் முதலாக பார்வையிடுகிறேன். தங்களது முதல் பதிவான புதிய கலாச்சாரத்த‌ை பார்த்த பின்னர்தான் அவரேதான் இவர் என்ற முடிவுக்கு வந்து மறுமொழியிடுகிறேன். விரைவில் உரையாடுவோம். எனது மெயில் முகவரியை குறித்துக் கொள்ளுங்கள்.

  நன்றி…
  அன்பன் எஸ்.செந்தில்குமார்

 2. தோழர். மதிமாறன் அவர்களுக்கு,

  மிகவும் சிறப்பான பதிவு, சுருக்கமாகவும் எளிய நடையிலும் ஒரு விஷயத்தை தாங்கள் சொல்வதோடு தீர்வையும் திண்ணமாக வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

  இத்தோடு இந்தப் பதிவோடு தொடர்பில்லாத ஒரு செய்தியை இங்கே வாசகர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

  இரண்டுவாரங்களுக்கு முன்னால் உங்களுக்கு பதிலலிக்கிறேன் பேர்வழி என்று லெட்சுமிநாராயணன் என்ற குடுமி அம்பி அவதூறுகளையே கொண்ட பிண்ணூட்டங்களை இங்கே வைத்தான். அதற்கு நானும் நண்பர் சின்னமருதுவும் சில பதில்களைச் சொன்னோம். “இங்கே விவாதிக்க வேண்டாம் என்னுடைய வலைதளத்திற்கு (http://nerkondapaarvai.wordpress.com)
  வந்து விவாதிக்க வாருங்கள்” என்று அழைத்தான். அதையும் நம்பி நான் அங்கு சென்று விவாதித்தேன். என்னுடைய பல பிண்ணூட்டங்களை பதிப்பிக்காமல் மறைத்ததோடு, தொடர்ந்து அவனுடைய அவதூறு பதில்களையும் பதிப்பித்து வருகிறான்.

  சாதாரணமாக‌, வலைதளத்திலேயே ஒரு பார்ப்பான் தனது எதிர்கருத்துக்களை இவ்வாறு நிராகரிக்கிறான் என்றால், முழுக்க முழுக்க பார்ப்பனர்களின் மேலான ஆதிக்கத்தில் இருக்கும் தமிழகத்தின் பத்திரிக்கை ஊடகத்துறையைப் பற்றி கேட்கவேதேவையில்லை. குமுதம், ஆனந்தவிகடன் போன்ற ஆபாசக் குப்பைகளையும், துக்ளக், தினமணி, தினமலர் போன்ற பார்ப்பன பயங்கரவாத ஏடுகளையும் தாண்டித்தான் நம்முடைய முற்போக்கு எழுத்தாளர்கள் தமது கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்.

  இது தான் இந்த பார்ப்பன புண்ணியகேடிகளின் அறிவு நாணையம்.

  தொடர்ந்து பேசுவோம்……

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

Leave a Reply

%d bloggers like this: