6 thoughts on “மக்கள் தொலைக்காட்சி – வே.மதிமாறன் பேட்டி

  1. நண்பர் மதிமாறன் அவர்களுக்கு…. அன்பன் செந்தில்குமார் எழுதுவது…
    நான் நலம்… அங்கு தாங்கள் நலம் என மக்கள் தொலைக்காட்சி பேட்டி மூலம் அறிந்து கொண்டேன். 2007 செப்டம்பர் முதல் சத்தமில்லாமல் புரட்சி செய்து கொண்டிருக்கிறீர்களே சார். எனக்கு எப்படி இந்த விஷயம் தெரியாமல் போனது? கடந்த வாரம்தான் தங்களது வலைப்பதிவு எனது கண்ணில் பட்டது. அதன் பின்னர் அவர்தானா இவர் என்று குழப்பம். அப்போது நண்பர் துரையரசுவின் கருத்து கண்ணில் பட்டது. துரையரசுவிடம் தொடர்பு விட்டு பல மாதங்கள் ஆவதால் அவனிடம் பேசி உறுதிபடுத்த முடியவில்லை. இருப்பினும் வெறிநாய் கட்டுரைக்கு கருத்து அனுப்பினேன். எனது மெயிலுக்கு பதில் வந்தால் அது கண்டிப்பாக நம்ம மதிமாறனாகத்தான் இருக்கும் என எதிர்பார்த்தேன். வரவில்லை.
    இன்று தங்களது பேட்டியை பார்த்தேன் (கேட்கவில்லை). இணைய மடல் எழுதுகிறேன். தாங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மீண்டும் தங்களை தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைத்தமையால் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். முன்பொருமுறை நீங்கள் பேசிய வார்த்தைகளை அவ்வப்போது நினைத்துக் கொள்வேன். அதன் பிறகுதான் தங்களுடன் பழக வேண்டும் என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. 10, 12வது படித்தவர்கள் செய்தி எழுதும் தினத்தந்திதான் நம்பர் ஒன் ஆக இருக்கிறது. நிறைய படித்தவர்கள் வேலை பார்க்கும் தினமணியால் இன்னமும் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை – என்ற இந்த வார்த்தைகள்தான் என்னை ஊக்குவித்த வார்த்தைகள். தங்களிடம்கூட இதுவரை நான் இதை சொன்னதில்லை. தங்களை பாராட்டுகிறேன் என்று கோபப்பட வேண்டாம். தங்கள் நினைவு வந்ததன் விளைவாக பழையவற்றை பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்.
    (தங்களது வளர்ச்சியை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் நண்பரே… அதேநேரத்தில் இன்னும் வளர வாழ்த்துகிறேன் நண்பரே..!)
    அடிக்கடி உரையாடுவோம்.

  2. வணக்கம் தோழரே!,

    இப்பதிவிற்கு சற்றும் சம்பந்தமில்லாத மறுமொழியாக இது இருக்கலாம், ஆனால் இது நமக்கு வெகுவாக சம்பந்தப்பட்டதாகவும் இருப்பதனால் இதனை இப்பதிவில் வைக்கிறேன். நீங்கள் இதனை பதிப்பிக்கவேண்டிய அவசியம் இல்லை.

    முன்டாசுக்கவிஞன் என்று உணர்ச்சிப் பெருக்குடன் நம் முன் உருவகப்படுத்தப்பட்ட பாரதியை, அவனது அந்த முன்டாசுக்குள் மூடிவைக்கப்பட்டிருந்த பார்ப்பனக் குடுமியையும், தேசிய விடுதலை பாடல்கள் என்ற போர்வைக்குள் அவன் மறைத்துவைத்திருந்த‌ ஆரிய விடுதலைப் புராணங்களையும் அனைவருக்கும் திறந்துகாட்டியவர் வே.மதிமாறன். இது நடைபெற்று சுமார் 7 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதற்கு இதுவரை சரியான விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கப்படாத மந்தமான சூழ்நிலையே இருக்கிறது.

    ஆனாலும், இன்னும் பாரதியின் துதிபாடல்கள் நின்றபாடில்லை. அது ஏதோ பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலால் நிகழ்த்தப்படுகிறது தொலைந்து போகட்டும் என்று விட்டுவிடவும் முடியவில்லை. ஏனென்றால் அதை நிகழ்ததிக்கொண்டிருப்பது முற்போக்குக் கூடாரம். இரட்டை வேடமே தனது கொள்கையாக வடித்து வைத்துக்கொண்டு போலிக் கம்யூனிசம் பேசித்திரியும் சி.பி.ஐ/எம் கட்சிகளும் அதன் வெகுஜன அமைப்புகளான த.மு.எ.ச. போன்ற அமைப்புகளும் இதனை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கின்றன.

    மதிமாறனுடைய ”பாரதி’ய ஜனதா பார்ட்டி” நூலைப்பற்றிய மதிப்பீடுகளைச் செய்யாமலேயே, அந்நூலுக்கான கண்டனக் கூட்டங்களையும் நடத்தி தன்னுடைய பார்ப்பன சேவகத்தை செவ்வனே செய்துமுடித்தன த.மு.எ.ச.வின் பெருந்தலைகள்.

    இப்போதும் கூட ஒரு நூல் வெளியீட்டுவிழாவில் த.மு.எ.ச.வின் ஆதவன் தீட்சன்யாவிடம் இதுகுறித்தான ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. “பாரதி குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?” என்பதுதான் அந்த கேள்வி. கீற்று என்ற இணையதள நிர்வாகி மிணர்வா என்பவர் இந்தக் கேள்வியை சில நூறுபேர் குழுமியிருந்த அந்தச் சபையில் வைத்தார்.

    அதற்கு அவர் அளித்த பதிலின் சாரம் இதுதான் “நாங்கள் பாரதிதாசனை விமர்சித்து கட்டுரையொன்றை எமது ‘புதுவிசை’யில் வெளியிட்டுவிட்டோம்” என்பது அவருடைய பதில். (இன்னும் நான் முழுமையாக வாசிக்கவில்லை, பிறகு சொல்கிறேன் என்றெல்லாம் நிறைய சப்பைக்கட்டுகளும் அவரது பதிலில் இடம்பிடித்திருந்தன) பாரதியைப்பற்றிக் கேட்டால் பாரதிதாசனைக்காட்டுவதுதான் இவர்களது முற்போக்கா?

    மாபெரும் தலித் எழுத்தாளர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் இந்த முற்போக்கு வேடதாரி, பாரதியை ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா, என்று கூட சொல்லமுடியாத இரட்டைநிலையில் இருந்து கொண்டு சாதியத்திற்கு எதிராக எதைக் கிழித்துவிடமுடியும்? என்பதுதான் நமது கேள்வி.

    சரி அவரது ‘புதுவிசை’யில் இதுகுறித்து எழுதப்பட்டுள்ளதுதான் என்ன? இந்த விவாதம் மீண்டுமொருமுறை தொடங்கப் பட்டுள்ளது என்னுடைய வலைதளத்தில். தாங்களும் இதில் கலந்து கொண்டு விவாதிக்க அழைக்கிறேன்.
    http://yekalaivan.blogspot.com
    நன்றி!
    தோழமையுடன்,
    ஏகலைவன்.

  3. செவ்விக்கு நன்றி. உரையாடல் சீக்கிரமே முடிந்துவிட்டதுபோலத் தோன்றியது. ரத்தத்துக்கு ரத்தம் குறித்து லெனின் எதிர் பாஞ்சாலியைப் போலவே பாரதியின் இன்னொரு உதாரணம் நினைவுக்கு வந்தது. அவரது சிவாஜியைப் பற்றிய ஒரு பாடல் “பாவியர்க் குருதியைப் பருகுவார் இருமின்” முதலான சில வரிகள். அந்தப் பாடல் முழுமையையும் வாசித்துப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் வனசஞ்சார் முகாமுக்குப் போய் வந்த அனுபவம் கிட்டும்!
    இது சரி, இதனெதிர் தவறு என்கின்ற மட்டையடியை அவர் தனக்குச் சாதகமான இடங்களில் பயன்படுத்தியே இருக்கிறார். இது ஒருவரைக் கிளர்ந்தெழச் செய்யப் போதுமானது. அதே நேரத்தில் ஒன்றினை ஆழ்ந்து விசாரிக்கும்போது இது சரியா, தவறா, இல்லை வெறும் கனவா, மாயையா என்றவாறு ஒரு மயக்கத்துக்குள் மெல்லத் தள்ளிவிட்டுப் போய்விடுவார். கட்டுற வைக்கும் அவரது மொழி ஆளுமையைத் தாண்டி, காலத்துக்குத் தக்கவாறுதானே எழுதமுடியும் என்ற புளித்துப்போன சப்பைக் கட்டைத் தாண்டி அவரது கவிதைகளில் பாவியிருக்கும் ‘ஆரிய’ ‘இந்து’ மனோநிலையைக் காண்பது ஒரு சிலருக்கு ஆச்சரியமாகவும், சிலருக்கு அதிர்ச்சியாகவும், வேறு சிலருக்கு வெறுப்புக்குரியதாகவும் இருக்கும். தொடருங்கள்!

Leave a Reply

%d bloggers like this: