“சுயமரியாதையற்ற பெரியார்”
படம் உதவி, சுயமரியாதை இயக்க சுடரொளி காரைக்குடி என்.ஆர். சாமி குடும்பத்தினர்
(9-8-2003ல் எழுதியது)
பெரியார் பற்றிய ‘மதுரை நிஜ நாடகக் குழு’ வினரின் நவீன நாடகம் – ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தின் முயற்சியில் 9.8.03 அன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நாடகத்திற்குப் போகலாமா? வேண்டாமா? என்கிற குழப்பம். குழப்பத்திற்குக் காரணம், நவீன நாடகம் என்றாலே-உள்ளடக்கத்தை விடவும் வடிவத்திற்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதுதான். மாறாக, இந்த நாடகம் எளிமையான, நேர்த்தியான வடிவத்தோடு இருக்கிறது. சுருங்கச் சொன்னால், வடிவத்தையும் தாண்டி உணர்வோடு வெளிப்படுகிறது உள்ளடக்கம்.
…
நாடக ஒத்திகையாகவே நாடகம் ஆரம்பிக்கிறது. ‘என்ன நாடகம் போடுவது’ என்ற விவாதத்தோடே தொடங்கி ‘பெரியார் நாடகம் போடலாம்’ என்று முடிவாகிறது. பெரியாராக நாடக இயக்குநர் மு. ராமசாமியே நடிக்கிறார். கறுப்புச் சட்டையுடன் இருந்த பெரியாரை, சிவப்புச் சட்டையாக மாற்றி இருக்கிறார்கள்.
அதற்கான காரணத்தையும் ராமசாமி விளக்குகிறார்.
“வரலாற்றுப் புகழ் வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இந்திய மொழிகளிலேயே முதன் முதலாகத் தமிழில் வெளியிட்டு அறிமுகப்படுத்தியவர் பெரியார். லெனின் எழுதிய ‘லெனினும் மதமும்’, எங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிசத்தின் கொள்கைகள்’, பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ முதலிய நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கச் செய்து மொதல்ல வெளியிட்டவர் பெரியார். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூணு பேரையும் ஆங்கில அரசு தூக்கிலிட்டபோது, பகத்சிங் கொள்கையே சுயமரியாதைக் கொள்கைன்னு பயப்படாம சொன்னவர் பெரியார்.
சுயமரியாதை சமதருமம் இரண்டையும் இணைச்சி, சுயமரியாதை சமதருமக் கட்சியை 1932ல் தொடங்கியவர் பெரியார். நாத்திகத்தை மார்க்சியத்தின் தொடக்கமாகவும், அறிவியல் வளர்ச்சியின் முதிர்ந்த கோட்பாடாகவும் பெரியார் விளக்கிக் காட்டிய நூல்தான், 1932இல் வெளிவந்த ‘பிரகிருதிவாதம் அல்லது மெட்டீரியலிசம்-இப்ப சொல்லுங்க, சிவப்புச் சட்டைப் போட்டு வந்தா தப்பா?”
பெரியார், ஸ்டாலின் ஆட்சியைப் புகழ்ந்து எழுதியதையும் குறிப்பிட்டிருக்கிலாம். (பெரியார் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிற மார்க்சிய அறிஞர்கள்கூட, அவரின் ஸ்டாலின் ஆதரவை இருட்டடிப்புச் செய்திருக்கிறார்கள்.)
நாடகம், பெரியாரின் பிறப்பு-வளர்ப்பு என்று போகாமல், அவரின் அரசியல், சிந்தனை என்று நேரடியாக விஷயத்திற்கு வந்திருப்பது பாரட்டுக்குரியது. ஒரு மனிதன் பிறப்பதென்ன பிரமிப்புக்குரிய விஷயமா? இல்லை, அது அவனுடைய சாதனையா? பிறப்பில் உயர்வு பார்ப்பதும், மரியாதைக்குரிய மனிதர்களின் பிறப்பை வியந்து போற்றுவதும் மதச் சிந்தனைதானே. கர்த்தர், கண்ணன் பிறப்பு மாதிரி.
நாடகத்தின் பெரும் பகுதி, கேள்வி-பதில் பாணியிலேயே அமைந்திருக்கிறது. கேள்விகளுக்கான பெரியாரின் (மு. ராமசாமி) பதில்களில் அரங்கமே அதிர்கிறது. வசனம் தந்தை பெரியாரே. ஆம். அவரின் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் இருந்தே காட்சி அமைப்பு, வசனம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பார்ப்பன எதிர்ப்பு, தலித் மக்களுக்கான ஆதரவு, கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பு, பெண் விடுதலை என்று அவரின் பன்முகத்தன்மையோடு இருக்கிறது நாடகம்.
‘தலித் மக்களை இந்து மதத்திலிருந்து மதம் மாறச் சொன்ன பெரியாரின் கருத்துகள் சொல்லப்படவில்லை.` என்று நண்பர்கள் சிலர் சொன்னார்கள். உண்மைதான். சில செய்திகள் சொல்லாமல் விடுபட்டுக்கூட போகலாம். ஆனால் சொல்கிற செய்திகள் எதுவும் தவறானவையாக இருந்துவிடக்கூடாது. இந்த நாடகம், பெரியார் குறித்து ஆதரவாகவோ-எதிராகவோ தவறான செய்திகளைச் சொல்லிவிடவில்லை என்பது, இன்றைய ‘அவதூறு அறிஞர்கள்’ சூழலில் கவனத்திற்குரியது.
பெரியார் என்பது ஒரு ஆளுமை, குழப்பமற்ற சிந்தனை என்பதைப் பார்வையாளர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதே நாடகத்தின் நோக்கமாக இருக்கிறது. நாடகத்தின் இடையில் நிஜப் பெரியாரை திரையில் (ஒளி வடிவில்) காட்டியது ஒரு வித்தியாசம்.
…
தமிழ் காட்டுமிராண்டி மொழி x இந்தி எதிர்ப்பு – பெரியாரின் இந்த முரண்பாட்டின் நோக்கம், மொழியை மதத்திலிருந்து விடுதலை செய்தல், ஆதிக்க எதிர்ப்பு.
மதங்கள், கடவுள்களுக்கு செருப்படி x அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும், தலித் மக்கள் கோயில் நுழைவு, இழிவு நீங்க இஸ்லாம் மாறச் சொன்னது – இந்த முரண்பாட்டில், பார்ப்பனரல்லாத, உழைக்கும் மக்களின் சுயமரியாதை.
சாதி ஒழிப்பு x சாதி வாரியான இட ஒதுக்கீடு – இந்த முரண்பாட்டில், பார்ப்பனரல்லாத உழைக்கும் மக்களின் உரிமை.
ஏறக்குறைய இவற்றை விளக்குவதுபோல் நாடகத்தில் ஒரு காட்சி. பெரியார் பேசுகிறார்: “நான் பல விஷயங்களில் அறிவுக் குறைவு உள்ளவனாக இருக்கலாம். பல தவறுகள் செய்திருக்கக் கூடும். இன்றைய கருத்தில் இருந்து நாளை மாறுதல் அடையக்கூடும். பல கருத்துகளை மாற்றியும் இருக்கிறேன். இவைகள் எல்லாம் எனது கண்ணியமான ஆராய்ச்சிகளைக் கொண்டே இருக்குமே தவிர, பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவோ, பெரிய ஆள் ஆகவோ, இழிவை மறைத்துக் கொள்ளவோ கடுகளவுகூட காரணம் கொண்டதாய் இருக்காது.”
…
நாடகத்தில் பெரியார் வரும் முதல் காட்சியே, அவர் செருப்படி வாங்குகிற காட்சிதான். கடவுள் சிலைகளை செருப்பால் அடித்து அவமானப்படுத்திய பெரியார், தனக்கு விழுந்த செருப்படிகளை எப்படி அலட்சியப்படுத்தினார் என்பது நாம் அறிந்ததே. நாடகத்தில் அது சரியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. மக்களின் சுயமரியாதைக்குப் பாடுபடுகிற ஒருவனுக்கு, தன் மரியாதை குறித்து அதாவது சுய மரியாதை குறித்து அக்கறை இருக்காது. இருக்கக் கூடாது என்பதற்கு, பெரியாரின் வாழ்க்கையே பாடம்.
நாடகத்தில் பெரியாரை நோக்கி ஒரு கேள்வி: “கடவுளே இல்லேங்கிறீங்க, ஆனா, உங்க பேர் மட்டும் ராமசாமின்னு இருக்கே?”
பெரியார்: “அறியாத வயசுல எங்க அப்பா, அம்மா வெச்ச பேரு. அந்தப் பேரு மேல வேற எந்த மரியாதையும் எனக்குக் கெடையாது. உங்களுக்கு அந்தப் பேரு புடிக்கிலேன்னா, என்னை ‘மசுரு’னு கூப்பிடுங்க, எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை” இதுதான் பெரியார்.
இப்படியாக பெரியோர் சொன்னதை வைத்து, ‘பெரியாரே தன்னை ‘மசுரு’ என்ற கூப்பிடச் சொல்லியிருக்கிறார். இனி நாங்கள் அவரை ‘மசுரு’ன்னுதான் குறிப்பிடுவோம்’ என்று ‘அவதூறு அறிஞர்’களும், ஆர்.எஸ்.எஸ்காரர்களும் சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அறிவாளிகளிடம் ஏது அறிவு நாணயம்?
…
நாடகம் முடிந்த பிறகு, ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தின் சார்பில் செந்தில்நாதன் பேசினார்: “இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளை கடுமையாக விமர்சித்துப் பெரியார் பேசியது, இந்த நாடகத்தில் இடம் பெற்றது. அதையெல்லாம் தாண்டியும் பெரியரை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை இருக்கிறது” என்றார்.
உண்மைதான். இத்தனை ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும், முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் சுப்பிரமணிய பாரதிக்குத் தந்த முக்கியத்துவத்தை, தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் தந்திருந்தால், அதன் வீச்சு கூடுதலாகவே இருந்திருக்கும். கம்யூனிஸ்டுகள் எதிர்க்க மறுக்கிற ‘இந்துத்துவா’வின் மூலமான இந்து மதத்திற்கும் பார்ப்பனீயத்திற்கும் கெட்ட கனவு- இந்த இருவரைத் தவிர வேறு யார்?
‘மதுரை நிஜ நாடகக் குழு’ ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி
இந்த நாடகம். இந்த 25 ஆண்டுகளில் அநேகமாக அரங்கு நிறைந்த மக்களோடு, ஆரவாரத்திற்கிடையே அவர்கள் நாடகம் போட்டது, இதுவே முதல் முறையாக இருக்கும். (ரூ. 50 கட்டணம்) காரணம், மக்கள் பிரச்சனையை பேசிய ஒரு மக்கள் தலைவன் பற்றிய நாடகம் என்பதினால்தான். இந்த சிறந்த நாடகத்தை அளித்த பேராசிரியர் மு. ராமசாமி தலைமையிலான அனைத்துக் கலைஞர்களுக்கும் நமது நன்றியும் பாராட்டும்.
‘நிஜ நாடகக் குழு’வினர், கடைசியாக நடத்திய இந்த நாடகத்தின் பெயர் – ‘கலகக்காரர் தோழர் பெரியார்’. அவர்களின் அடுத்த நாடகம், அண்ணல் அம்பேத்கர் பற்றியா? எதிர்பார்ப்போம்.
-வே. மதிமாறன்
தலித முரசு 9.8.03
வீடியோ (பகுதியேனும்) பார்க்கக் கிடைக்குமா?
பதிவுக்கு நன்றி!
mekavum nanraka ulthuz.please send perayars stalions work.
அன்புள்ள திரு. மதிமாறன் அவர்களுக்கு வணக்கம்.
நல்ல தகவல். நாங்கள் இங்கு அமெரிக்காவில் வருட வருடம் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். நீங்கள் தரும் தகவல்கள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
மிக்க நன்றி
அன்புடன்
நாஞ்சில் பீற்றர்
ivar oru nalla manithar avaraium avarathu kolgaigalaium niraiya per therinthirukavillai
“சுயமரியாதையற்ற பெரியார்” தலைப்பை கண்டதும் கட்டமாக எதாவது திட்டலாம் என்று தான் படிக்க ஆரம்பித்தேன்
“மக்களின் சுயமரியாதைக்குப் பாடுபடுகிற ஒருவனுக்கு, தன் மரியாதை குறித்து அதாவது சுய மரியாதை குறித்து அக்கறை இருக்காது. இருக்கக் கூடாது”
ஆனால் தங்களின் விளக்கவுரையை கண்டதும் அமைதியானேன் யாரும் இப்படி ஒரு தலைப்பில் இப்படி ஒரு வார்த்தையை போடமாட்டார்கள். ஆனால் தங்கள் உண்மை நிகழ்வை ஊன்றி எழுதி உள்ளமைக்கு எனது பாராட்டுக்கள்.
சோ: கிறிஸ்தவர்களிடையிலோ முஸ்லிம்களிடையிலோ கடவுளை நம்புகிறவர்கள், வணங்குகிறவர்கள் இருக்கும்போது அவர்களும் முட்டாள்கள், காட்டுமிராண்டிகள், அயோக்கியர்கள்தானா?
வீரமணி: மூட்டிவிட வேண்டும் என்பதற்காக நீங்கள் கேட்டாலும் சரி….
சோ: மூட்டிவிடவேண்டும் என்பதற்காக அல்ல, உங்களிடமிருந்து ஒரு ‘கமிட்மெண்ட்’ வேண்டும் என்பதற்காகத்தான்.
வீரமணி: நீங்கள் எதற்காக கேட்டாலும் சரி, தத்துவம் அதுதானே?
சோ: நீங்கள் நேரடியாகச் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்
வீரமணி: நேரடியாகச் சொல்ல நான் தயார். ஆனால் நீங்கள் எதற்காகக் கேட்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு நான் சொல்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?
சோ: இதுகூடவா எனக்குப் புரியாது?
வீரமணி: நீங்கள் கேட்கவேண்டிய அவசியமே இல்லையே…. நாங்கள் சொல்வது தெளிவாக இருக்கிறதே. அதன் அர்த்தமே அதுதானே?
சோ: நீங்கள் ஹிந்துமதத்தைப் பற்றியே அடிக்கடி பேசுவதால் இந்தச் சந்தேகம் வருகிறது. நான் உங்களிடம் மிகவும் வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. ‘முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கடவுளை நம்பினால் பரப்பினால், வணங்கினால் அவர்களும் காட்டு மிராண்டிகளா?, முட்டாள்களா? அயோக்கியர்களா?’ என்பதுதான் என் நேரடியான கேள்வி…
வீரமணி: ‘கடவுளை நம்புகிறவர்கள் யாராக இருந்தாலும்’ என்ற அடிப்படையில் நீங்கள் கேட்டிருக்கலாம், நீங்கள் குறிப்பிட்டுக் கேட்பதன் நோக்கம் என்ன?
சோ: நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லாததுதான் நான் குறிப்பிட்டுக் கேட்பதற்குக் காரணம்.
வீரமணி: நாங்கள்தான் தெளிவாகச் சொல்கிறோமே இதன்மூலம் எங்களுக்கும் அவர்களுக்கும் சண்டையை உண்டாக்கிவிட உங்களால் முடியுமா என்ன? இதில் நாங்கள் ஒன்றும் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. எங்களுக்கு தயவு தாட்சண்யம் கிடையாது. யாராக இருந்தாலும் எங்கள் கருத்து இதுதான். இதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டுதானே அவர்களும் ‘நாத்திகர்கள் என்றால் இப்படிப்பட்டவர்கள், அப்படிபட்டவர்கள்’ என்று சொல்கிறார்கள்.
-பக் 87, 88, 89 இவர்களைத் தெரிந்துகொள்வோம் / சோ / பரந்தாமன் பதிப்பகம்
விடாக்கண்டன் சோ-வின் கேள்விகளுக்கு பிடிகொடுக்காத கி. வீரமணியின் பதில்கள் இவை.
‘கடவுள் இல்லை’ என்று சொல்லவேண்டும். ஆனால் கடைசிவரை முஸ்லிம், கிறிஸ்துவக் கடவுள்களைத் தாக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் வீரமணி.
கி. வீரமணி திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். பத்திரிகைப் பேட்டியில் அவர் குறிப்பிடும் வார்த்தைகள் நிச்சயமாக அந்த இயக்கத்தின் கொள்கையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
கொஞ்சம் மூச்சுவிட்டுக் கொள்ளுங்கள்
திராவிடர் கழகத்தின் நிறுவனரான ஈ. வெ. ரா, இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும், பகுத்தறிவின் பரிச்சைக்குவிட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லிம்கள் இன்று தைரியமாகச் சொல்லுகிறார்கள். அந்தப்படிச் சொல்ல மற்ற மதக்காரர்களுக்கு ஏன் தைரியமில்லை? எனெனில் திரு. முகம்மது நபி கொள்கைகள் அனைத்தும் அநேக விஷயங்களால் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கிதையுடையதாய் இருக்கின்றது.
– குடி அரசு. ஆக. 23, 1931.
ஈ. வெ. ரா இஸ்லாத்தை பகுத்தறிவு மார்கமென்கிறார், அவரது சீடரோ இஸ்லாமியக் கடவுளும் தேவையில்லை என்கிறார்.
இதில் எது கொள்கை? எது சுயமரியாதை? எது பகுத்தறிவு?