பாஜகவிற்கு ஆதரவாக ப. சிதம்பரம்

 

கர்நாடக தேர்தலில் பாஜகவின் வெற்றி, இந்துத்துவத்திற்குக் கிடைத்த வெற்றிதானே?
-ஏ. சுரேஷ்.

ஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நடத்தும், ‘இந்துத்துவ மதவாத அரசியல்’ பெரும்பாலும் இந்திய நகரங்களில் நடக்கிற அரசியல். அல்லது இஸ்லாமியர்கள் இருக்கிற பகுதிகளில் மட்டும் நடக்கிற அரசியல்.

கிராமப்புறங்களில் இந்து அமைப்புகள், மதவாத அரசியலை நடத்துவதில்லை. அது அங்கு எடுபடாது.

பெருவாரியான கிராமங்களில் ‘இந்து மதம்’ என்று ஒன்று இருப்பதாக பல இந்துக்களுக்கு தெரியாது.
கிராமங்களில், “நீங்க யாரு?” என்று மக்களிடம் கேட்டால், அவர்கள் ‘இந்து’ என்று சொல்லமாட்டார்கள். மாறாக, தாங்கள் சாந்திருக்கிற ஜாதி பெயரைத்தான் சொல்லுவார்கள்.

அதனால்தான் பாஜக போன்ற மதவாத அமைப்புகள், கிராமப்புறங்களில் உயர்ஜாதிக்காரர்களோடு, பண்ணையார்களோடு இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலை நடத்துகிறார்கள். (நகரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களைத்தான் இஸ்லாமியர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள்.)

தாழ்த்தப்பட்ட மக்கள் ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்து கோயில்களில் சமஉரிமைக்காகப் போராட முன்வரும்போது, ஜெயேந்திரனில் இருந்து ராமகோபாலன் வரை உள்ள பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதியாகதான் நடந்து கொள்வார்கள். நடந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆக ‘இந்துத்துவம்’ என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அது அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது.

இப்படியிருக்கையில், கர்நாடக தேர்தல் முடிவு இந்துத்துவத்திற்கு மக்கள் அளித்த ஆதரவு என்று அர்த்தம் ஆகாது.

மாறாக அது மத்திய காங்கிரஸ் அரசின் கையாலாகாத ஆட்சியால், ஏற்பட்டிருக்கிற விலைவாசி உயர்வு மற்றும்  மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மதவெறியும், ஜோதிட வெறியும் பிடித்த ஜெயேந்திரனின் அடிமையும் ஆன தேவகவுடா மற்றும் அவர் குடும்பத்தினரின் அதிகார வெறி, இவைகள்தான் பாஜகவின் வெற்றிக்குக் காரணம். கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறியிருக்கிற ஆட்சி மாற்றம்.

விலைவாசியை கட்டுக்கடங்காமல் உயர்த்திவிட்டு, அது ஏன் உயர்ந்திருக்கிறது என்று விளக்கம் கொடுப்பதற்கு மட்டும்தான் பயன்படுகிறது பொருளாதார மேதைகளான பிரதமர், நிதியமைச்சரின் ‘மாபெரும்’ படிப்பறிவு. (இதைதான் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சொல்லிக்கொடுக்கிறான் போல)

வருகிற நாடளுமன்ற தேர்தலில் பாஜகவை  வெற்றி பெற வைத்தே தீருவது என்று தீவிரமாக இயங்குகிறார்கள், அமெரிக்க தாசர்களான ப. சிதம்பரமும், மன்மோகன் சிங்கும்.
(தேர்தல்ல ஓட்டு ‘புஷ்ஷா’ வந்து போடப்போறாரு?)

6 thoughts on “பாஜகவிற்கு ஆதரவாக ப. சிதம்பரம்

  1. உண்மைதான், பா.ஜ.க ஆட்சியில் ஒரு பேரல் கச்சா எண்ணை 35 டாலராம். காங்கிரஸ் ஆட்சியில் அது 135 டாலராகிவிட்டதாம் (செய்தியாளர்களிடம்). செட்டி நாட்டார், ஒரு முடிவோடுதான் இருக்கிறார் போலிருக்கிறது.

  2. “ஆக ‘இந்துத்துவம்’ என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அது அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது”

    “கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறியிருக்கிற ஆட்சி மாற்றம்.”

    நூத்துல ஒரு வார்த்தை

  3. அன்புள்ள அண்ணா,

    நீங்கள் சொல்லும் கருத்தை முற்றிலுமாக ஆதரிக்கிறேன். தாராளமயமாக்கலை அனுமதிக்கும்போது “அந்த நாட்டில் அப்படி வளர்ந்திருக்கிறார்கள், இந்த நாட்டில் இப்படி வளர்ந்துவிட்டார்கள். எனவே உலககமயமாக்கல் ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போடுவது சரிதான் ” என்றார்கள் இந்தப் பொருளாதாரப் புலிகள்.

    அதே புலிகள் இப்போது “அந்த நாட்டில் பணவீக்கம் இப்படி இருக்கிறது, இந்த நாட்டில் இத்தனை சதவீதம். எனவே இது சாதாரண விஷயம்தான்” என்கிறார்கள் நிதியமைச்சரும் பிரதமரும். இது என்ன லாஜிக் என்று அவர்களையே நீங்கள் கேட்கலாம்.
    ரிசர்வ் வங்கி, தன்னிடம் உள்ள வங்கிகளின் ரொக்கக் கையிருப்பை அதிகரித்திருக்கிறது. ஆனால் இது ஒரு அம்சம்தான். இதற்குமேல் எங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது என்கிற ரீதியில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஒய்.வி.ரெட்டி கைவிரித்துவிட்டார்.

    இன்றைய தேதியில் 8.1 விழுக்காடு அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துவிட்டது. உலகிலேயே அதிக அளவு இதுதான். என்னைக் கேட்டால் நிதியமைச்சர் வேறு யாருக்காவது வழி விட்டுவிட்டு ஒதுங்கிவிடுவது நல்லது. அவருக்குப் பல வேலைகள் இருக்கின்றன. குறிப்பாக ரிலையன்ஸ் குழுமத்தில்.

    ரிலையன்ஸ் குழுமத்தில் பங்காளிகள் சண்டை வந்தபோது இவர் என்ன சொன்னார் தெரியுமா? “நீங்கள் இதுபோல சண்டை போட்டுக்கொண்டிருந்தால் உங்கள் மீது உள்ள அனைத்து வழக்குளையும் விரைவுபடுத்திவிடுவேன். அண்ணனும் தம்பியும் ஒற்றுமையாக இருங்கள் என்றார்.”

    கடைசியில் திருபாய் அம்பானியின் மனைவி கோகிலா பென் தனது பிள்ளைகளைச் சமாதானம் செய்துவைத்தார். நமது பஞ்சாயத்து தலைவர் அமைதியாகிவிட்டார்.

    அதற்குப்பின் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்தியச் செயலாளர் ஹரிகிஷன் சிங் சுர்ஜித் ” நிதியமைச்சர் ஏற்கனவே கூறியபடி ரிலையன்ஸ் குழுமத்தின் மீது உள்ள வழக்குகளையும் புகார்களையும் விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். அது செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது.

    கல்விக் கடன் கொடுப்பதற்காகத்தான் வங்கிகளையே இயக்குகிறோம் என்கிறார் நிதியமைச்சர். ஆனால் அதனை ஒரு துண்டுச்சீட்டிலாவது எழுதி வங்கி மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையாக அனுப்பினால் என்ன என்று கேட்கிறார் வங்கி ஊழியர் சங்கம் ஒன்றின் அகில இந்திய பொதுச்செயலாளர் வெங்கடாசலம்.

    டாடா நிறுவனம் கோரஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது உங்களுக்குத் தெரியும். இதற்கு பல கோடி ரூபாய் கடனை அரை மணி நேரத்தில் கொடுத்தது பாரத ஸ்டேட் வங்கி. ஏதாவது கல்விக்கடன் வேண்டுமென்று கேட்டுப்பாருங்கள் உங்கள் உள்ளூர் வங்கியின் கிளையில். அதற்கு அப்புறம் தெரியும் இந்த வெங்காய நியாயமெல்லாம்.

  4. பாஜகவின் வெற்றியை ஏற்க முடியாதவர்களின் வெட்டிப் பேச்சு.
    பாஜகவிற்கு தலித்,பிற்பட்ட சாதிகளிடமும் பெரும் ஆதரவு இருக்கிறது. கிராமப்புறப் பகுதிகளிலும் அது வேர் விட்டிருக்கிறது.
    எத்தனை பொய்ப் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் பாஜகவை
    கர்நாடகத்தில் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். தெற்கிலுள்ள பிற மாநிலங்க்ளிலும் பாஜக காலுன்றியிருக்கிறது.கர்நாடகத்தில் பாஜக
    இந்துவத்தை முன் வைத்து ஒட்டுக் கேட்கவில்லை. நீங்கள் திட்டிக்
    கொண்டே இருங்கள், ஒரு நாள் பெரியார் மண்ணிலும் பாஜக அமைச்சரவையில் இடம் பெறும். அன்றும் கூட பாஜகை திட்டிக்
    கொண்டிருங்கள்.அதுதானே உங்களால் முடியும்.

  5. வந்துட்டாருடா….

    டேய் முதல்ல தண்ணி கொடுக்க சொல்லுடா பன்னாடை !!!

    பெருசா யொசிச்சு பேசுரான் இப்படியெ நல்ல கனவு கானுடா…

    வரும் உங்க அட்சி

    Swarnamalya@jeyendran.om

  6. அன்புமிகு பெரியார் விமர்சகர் அவர்களே,
    இங்கு கருத்துக் கூறியுள்ளவர்கள் பி.ஜே.பி. கட்சியை ஒரு அரசியல் கட்சியாகவோ ஓட்டுக்களாகவோ பார்க்கவில்லை மாறாக, தத்துவமாகத்தான் பார்க்கிறார்கள். பாஜக கட்சியை தலித் மக்கள் ஏற்றுக்கொள்வதாகக் கூறுகிறீர்கள் .உண்மைதான். அவர்களுக்கு உண்மை விளங்கும்போது வெளியே வந்துவிடுவார்கள் என்றுதான் நான் கருதுகிறேன் .செருப்பு தைப்பவன் மகனும் செருப்பு தைப்பவனாகத்தான் இருக்க வேண்டும் என்பது மனுதர்மம் .
    மனு, யாக்ஞவல்கியார் போன்றவர்கள் வகுத்துள்ள தர்மங்களை நீங்கள் கட்டாயம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தி.க.வைச் சேர்ந்த திரு மஞ்சை வசந்தன் எழுதிய அர்த்தமற்ற இந்துமதம் என்ற நூலில் மனு அவர்கள் எழுதிய இந்து தர்மங்கள் உபநிஷத்துகளில் கூறப்பட்டுள்ள சில கருத்துக்களைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
    பிராமணரல்லாதவன் ஒருவன் வேதத்தைப் படித்தால் அவனது நாக்கை அறுக்க வேண்டும் என்று மனு கூறுகிறார். அதேபோல பிராமணரல்லாதவன் ஒருவன் வேதத்தைக் கேட்டால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் கூறுகிறார். இதுதான் இந்து தர்மம் .இதனை பாஜக ஏற்றுக்கொள்கிறது .

    நண்பரே, இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ? மனிதனை சத்ரியன் சூத்திரன் வைசியன் பிராமணன் என்று பிரித்தது இந்து மதம்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். இந்த நான்கு வர்ணங்களிலும் சேராமல் சண்டாளர் என்ற ஒரு பிரிவையும் ஏற்படுத்தி வைத்தார்களே, அது என்ன தர்மம் என்று உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.இன்றைய நிலையிலும் ஒரு பிற்படுத்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவன் உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பிடித்துவிடக்கூடாது என்று சொல்கிறார்களே அந்த பளபள வார்த்தைகளுக்குப்பின்னால் பல்லிளிப்பது மனுதர்மம்தான்.மலம் அள்ளுபவன் தொடர்ந்து மலம் அள்ளியே சாக வேண்டும் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?

    இதுபோன்ற விசயங்களைத்தான் பாஜக முன்னிறுத்துகிறது.முற்போக்காளர்களும் படித்தவர்களும் இதைக் கருத்தியல் ரீதியாக எதிர்க்கிறார்கள்.கண்ணை மூடிக்கொண்டு அல்ல.பாஜக வெற்றியைப் பார்த்து பொறாமைப்பட இந்த வலைப்பூ சுவைஞர்கள் ஒன்றும் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் அல்லது ஜனதா தள அல்லது பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகப்பிரிவு தலைவர்கள் அல்லர் .
    மாறாக மனிதர்கள் மீதும் மனித நேயம் மீதும் அக்கறை கொண்டவர்கள்.நீங்களும் அப்படிப்பட்ட ஒரு நபராகத்தான் இருப்பீர்கள் என்று கணிக்கிறேன்.தயவுசெய்து நடுநிலைமையில் இருந்து நின்று பாருங்கள்

    கடவுள் இல்லை என்று சொன்ன திராவிட இயக்கத்தவர்களோ கம்யூனிஸ்டுகளோ திராவிடர் கழகத்தவரோ சீனாக்காரர்களோ பாபர் மசூதியை இடிக்கவில்லை.எந்நேரமும் ஆன்மீகம் பேசும் சங் பரிவார் மக்கள்தான்.இதை ஒத்துக்கொள்கிறீர்களா?

Leave a Reply

%d bloggers like this: