ரஜினியால் இழுக்கு

ஜப்பானிலும் ரஜினிக்கு ரசிகர் மன்றங்களாமே? நமது பிரதமரே ஜப்பான் நாடாளுமன்றத்தில் பெருமையோடு குறிப்பிட்டுப் பேசியிருக்கிறாரே?
டி.குமாரசாமி, கோயம்புத்தூர்

பெரியாரிடம் ஒருவர் வந்து, “அய்யா, ஜப்பான்ல கூட அலகு குத்துறாங்களாம், சாமி ஆடுறாங்களாம். என்னங்கய்யா அந்த நாட்டுல்ல கூட இப்படி” என்று வருத்தப்பட்டாராம்.

அதற்கு பெரியார், “மூடநம்பிக்கையும், காட்டுமிராண்டித்தனமும் ஒட்டு மொத்தமா நம்ம நாட்டுக்கு மட்டும்தான் சொந்தம்னு நினைச்சீங்கிளா?”ன்னு திருப்பிக் கேட்டாராம்.
ஆனாலும் நம்ம பிரதமர் ‘அஞ்சா நெஞ்சன் பாட்சா ரஜினி ரசிகர் மன்ற தலைவர்’ மாதிரி, ரஜினியைக் குறிப்பிட்டு பேசினதை தவிர்த்து இருக்கலாம்.

எங்க நாட்ல இருந்த பெரியம்மையும், காலராவும் இப்போ உங்க நாட்லேயும் வந்திருக்கிறதைப் பார்த்தா ரொம்ப பெருமையா இருக்குன்னு சொல்ல முடியுமா?

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து

தொடர்புக்கு;‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.
பேச; 9444 337384

19 thoughts on “ரஜினியால் இழுக்கு

  1. vanakkam…..
    rajini yal izhukku..kaddurai sirappaka samuka avalangalai kaddukirathu….
    VAZHTHUGAL…

    m.khathiravan
    m:09321454425
    mumbai-88

  2. //எங்க நாட்ல இருந்த பெரியம்மையும், காலராவும்//

    haa..a haa….

  3. //எங்க நாட்ல இருந்த பெரியம்மையும், காலராவும் இப்போ உங்க நாட்லேயும் வந்திருக்கிறதைப் பார்த்தா ரொம்ப பெருமையா இருக்குன்னு சொல்ல முடியுமா?//

    periyar kitta irukkura nakkal ungakittayum….hahhahahha

  4. ஆமாம் ரஜனியால் இந்தியாவுக்கு இழுக்கு.ஆனால் உங்க மாறி வெறி நாய்களால் தான் தமிழ்நாட்டுக்கும்,இந்தியாவுக்கும் பெருமை பாருங்க.போங்கடா, வெறி பிடித்த வெங்காய கருப்பு சட்டை பொறிக்கி நாய்களா.

  5. ரஜினி மன்றத்த வச்சது, ரஜினியா இல்ல ரஜினி ரசிகர்களா. . .?
    அப்படின்னா தலைப்பு ரஜினி ரசிகர்களால் இழுக்குன்னு பதிவுக்கு பெயர் வைக்கனும்.

    எப்படியோ. ரஜினி பெயர தலைப்புல வச்சு நிறைய ஹிட் வாங்கிகிட்டீங்க. . . .
    சந்தோஷம்

  6. ரஜனியை ஜப்பானியர் ரசித்தால் உனக்கு ஏன் வயிறு எரிகிறது. ரசிகர் மன்றம் அமைத்தால் உனக்கென்ன நட்டம். முடிந்தால் அங்கு
    பெரியார் கொள்கைகளைப் பரப்பு. ரஜனி இந்துக்களுக்கு எதிரியல்ல.
    ரஜனி தேசபக்தர்.எனவே உனக்கு அவரைப் பிடிக்காது. பெரியார் வெறியனாக இருப்பதை விட ரஜனி ரசிகனாக இருப்பது நல்லதுதான்.

  7. பெரியார் கிரிடிக் ண்ணு இல்லை தம்பி ண்ணு நீ எப்படி வெனுமுனாலும் பேரை வச்சிடுவாட பார்பன பன்னாடை பொரம்போக்கு நாயே!!!

    எங்களுக்கும் நன்னா பேரு வைக்க தெரியும்…….

    என்னொட ஈ-mail ID பாரு

    swarnamalya@jeyendran.om

    nanna iruka ambi…….

  8. ரஜினியின் ஜப்பான் செல்வாக்குமலைத்த பிரதமர்

    டோக்கியோ: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஜப்பானில் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், ஜப்பான் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின்போது மகிழ்ச்சி தெரிவித்தார்.

    ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் அந்நாட்டு நாடாளுமன்றமான டயட்டின் கூட்டுக் கூட்டத்தில் இன்று உரை நிகழ்த்தினார்.

    தனது உரையின்போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜப்பானில் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சியும், ஆச்சரியமும் வெளியிட்டார்.

    பிரதமர் பேசுகையில், தமிழ் சூப்பர் ரஜினிகாந்த்தின் படங்களுக்கு ஜப்பானில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. அதே சமயம் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

    ஒடோரி மகாராஜா (ரஜினியின் முத்து படம் ஆங்கிலத்தில் தி டான்ஸிங் மகாராஜா, ஜப்பானிய மொழியில் ஒடோரி மகாராஜா என்ற பெயர்களில் வெளியானது) படம் இங்கே வெளியானபோது அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததாக அறிந்து மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். இங்குள்ள இளைஞர்களை அந்தப் படம் வெகுவாக கவர்ந்தது எனக்கு வியப்பாக உள்ளது.

    இரு நாடுகளுக்கிடையிலான உறவு என்று வரும்போது இரு நாட்டு மக்களுக்கிடையே ஏற்படும் உறவும் மிக முக்கியமானது. இதை ஜப்பான் மக்கள் நிரூபித்துள்ளனர்.

    இந்திய ஹோட்டல்களுக்கு ஜப்பானில் நல்ல வரவேற்பு உள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. சமீப காலத்தில் இந்திய ஹோட்டல்கள் இங்கு அதிகரித்துள்ளதாகவும் அறிந்தேன்.

    அதேபோல ஜப்பான் ஹோட்டல் செயின்களான சுஷி, டெம்புரா ஆகியவையும் இந்தியாவில் காலூன்றி வருகின்றன.

    2007ம் ஆண்டு இந்திய, ஜப்பானிய நட்புறவு ஆண்டாகும். அதேபோல இந்திய, ஜப்பானிய சுற்றுலா பரிமாற்ற ஆண்டும் ஆகும். இரு நாடுகளுக்கிடையிலான வான் வழித் தொடர்பும் (விமானப் போக்குவரத்து) அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

    ஜப்பானிய இளைஞர்களும், பெரியவர்களும் இந்தியாவுக்கு அடிக்கடி வர வேண்டும். பாரம்பரிய இந்தியாவையும், நவீன இந்தியாவையும் நீங்கள் பார்த்து மகிழ வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, ஜப்பானிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பெருமைப்படுத்திப் பேசியது ரஜினிக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகுக்கும் மிகப் பெரிய கௌரவம் தான்.

    Source : http://thatstamil.oneindia.in/specials/cinema/cinema-news/rajini_061214.html

    En kelvi, ithil enna thavaru irukirathu?

  9. இணைய தளத்திலும் வலைப் பூக்களிலும் விவாதங்களில் இடம்பெறுவோர் தனிப்பட்ட முறையில் தாக்கிக்கொள்ளுதல், வசைபாடுதலை நிறுத்திக்கொள்வது நல்லது, வலைப்பூ விவாதங்களில் இடம் பெறுவோர் அனைவரும் படித்தவர்கள்.
    விஷய ஞானம் உடையவர்கள்தாம். அண்ணன் மதிமாறன் அவர்கள் கூறிய கருத்துக்களை அவரது பார்வையில் இருந்து பார்த்தால் சில விஷயங்கள் புரியும். அதேபோல நடுநிலைமையில் இருந்து பார்த்தால் இன்னும் தெளிவாக விளங்கும். ரஜினிகாந்த் ரசிகராக இருந்து பார்ப்பதுதான் பிரச்சனை என்று கருதுகிறேன். பரவாயில்லை. அதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது.

    ரஜினிகாந்த் குறித்து எனக்கும் கருத்துக்கள் உண்டு. புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே, ஆறிலிருந்து அறுபது வரை, புதுக்கவிதை, ஜானி, போன்ற மறக்க முடியாத திரைப்படங்களில் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பை யாராவது குறை சொல்ல முடியுமா? இந்தப் படங்களில் உள்ள ரஜினிகாந்த்தின் ரசிகன் நான். அலட்சியமான அவரது நடிப்புதான் முள்ளும் மலரும் திரைப்படத்திற்கே ஒரு உயிரைக் கொடுத்தது.

    அப்படத்தின் கடைசிக் காட்சியில் தனது அண்ணனான ரஜினிகாந்தின் பேச்சை மீறி சரத்பாபுவைத் திருமணம் செய்யப் புறப்பட்டு விடுவார் தங்கையான ஷோபா. ஆனால் அந்த முடிவைக் கைவிட்டுவிட்டு அண்ணனிடம் வந்துவிடுவார். அப்போது “என் வள்ளிடா” என்பார். அற்புதமான நடிப்பு அது.

    நான் இன்றுவரை அதனைத்தான் நடிப்பு என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். அதற்கு மாறாக அவர் சிகரெட்டைத் தூக்கிப் போட்டு பிடிப்பது, வேக வேகமாகத் தமிழ் பேசுவது, ஓடிவரும்போது கைகளை நெஞ்சை நோக்கி வீசுவது ஆகியவற்றை நடிப்பு என்று என்னை யாராவது ஒத்துக்கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துவதுதான் அராஜகம். ரஜினியின் மேனரிசம் அவரது நடிப்பு ஆகாது. படம் வரையும்போது என்னையறியாமல் எனது நாக்கு துருத்திக்கொள்ளும். அது எனது நடிப்பு அல்ல. எனது மேனரிசம்.

    இன்றைய நிலையில் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக உள்ளன. அப்படங்களுக்கு குடும்பத்தோடு நம்பிப் போகலாம் என்ற அளவோடு நான் திருப்தியடைய வேண்டியதாக இருக்கிறது.

    சந்திரமுகி திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் வேட்டையன் மகாராஜா வேடத்தில் சில நிமிடங்கள் வருகிற ரஜினிகாந்த்தைப் பார்த்ததும் எனக்குப் புல்லரித்துவிட்டது. 70களில் புகுந்து விளையாடிய ரஜினியை நான் இன்றைக்குப் பார்த்ததுபோல இருந்தது. சரி, என்னுடைய முள்ளும்மலரும் ரஜினி எங்கே என்று கேட்கிறீர்களா? அவரைத்தான் விசிலடித்தே கொன்றுவிட்டார்களே!

  10. கருப்புச் சட்டைப் பொறுக்கி என்பது விமர்சனம் அல்ல, குமார். நீங்கள் இதனை உங்கள் சொந்த விஷயம் போல கருதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களைப்பொறுத்தவரை ரஜினிகாந்த் ஹீரோ. அப்படியென்றால் பெரியார்தான் வில்லனா? உங்கள் சிந்தனையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
    இன்று நீங்களும் நானும் கோவணம் கட்டிக்கொண்டு, கைகட்டிக்கொண்டு கொட்டாங்கச்சியில் சோறு வாங்கித் தின்னாமல் நாகரீகமாக ஒரு வாழ்க்கை வாழ்கிறோம் என்றால் அது பெரியார் போட்ட பிச்சைதான். ரஜினிகாந்த் போட்டதல்ல, அபிமானம் தேவைதான். அது உங்கள் அறிவை மறைத்துவிடக்கூடாது.

  11. //கருப்புச் சட்டைப் பொறுக்கி என்பது விமர்சனம் அல்ல, குமார். நீங்கள் இதனை உங்கள் சொந்த விஷயம் போல கருதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களைப்பொறுத்தவரை ரஜினிகாந்த் ஹீரோ. அப்படியென்றால் பெரியார்தான் வில்லனா? உங்கள் சிந்தனையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
    இன்று நீங்களும் நானும் கோவணம் கட்டிக்கொண்டு, கைகட்டிக்கொண்டு கொட்டாங்கச்சியில் சோறு வாங்கித் தின்னாமல் நாகரீகமாக ஒரு வாழ்க்கை வாழ்கிறோம் என்றால் அது பெரியார் போட்ட பிச்சைதான். ரஜினிகாந்த் போட்டதல்ல, அபிமானம் தேவைதான். அது உங்கள் அறிவை மறைத்துவிடக்கூடாது.
    //

    Excellent

  12. சமூகத்தில் இத்தனை பிரச்சினை இருக்கும் பொழுது மக்களிடமிருந்து தன்னை தனித்து வைத்திருப்பவனா, தலைவன்?

    மிருகங்கள் தனக்கு தேவையானவற்றை தேடி உழைத்து தின்கின்றன, ஆனால் அவற்றை போற்றி தலைமை பண்புடையதாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

    இதையே செய்யும் மனிதன் உயர்ந்தவன், தலைவன் என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

    சமூகத்திற்காக பாடுபட்ட பெரியார் வில்லனா?

    தங்களை பெரிதாக கருதாமல் சமூகத்திற்காக உழைக்கும் பெரியார் தொண்டர்கள் வில்லனா?

    தமிழர்களை ஏமாற்றும், போதை பொருளைப் போன்ற நடிகர்கள் தலைவனா?

    தோழர்கள் இதை படிக்கவும்

    http://www.keetru.com/thaagam/may07/rajini.php

  13. பெரியார் ஒரு கட்டத்தில் விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தார்.
    சம உரிமை, தீண்டாமை ஒழிப்பு, மதச்சார்பின்மை – இவற்றை முன்வைத்த அரசியல் சட்டத்தை ஏற்க மறுத்தார்.மலையாளிகளுக்கும்,சிறுபான்மையினருக்கும் எதிராக
    எழுதினார்.
    “இன்று நீங்களும் நானும் கோவணம் கட்டிக்கொண்டு, கைகட்டிக்கொண்டு கொட்டாங்கச்சியில் சோறு வாங்கித் தின்னாமல் நாகரீகமாக ஒரு வாழ்க்கை வாழ்கிறோம் என்றால் அது பெரியார் போட்ட பிச்சைதான்”.

    இது பெரியாரோ அல்லது வேறு யாரோ போட்ட பிச்சையல்ல.
    தேச விடுதலைக்குப் பாடுப்பட்டவர்கள் பெற்றுத் தந்த உரிமைகள்.
    இதில் பெரியாரின் பங்கு மிகச் சிறியது.

  14. பெரியார் என்ன செய்தார்? பெரியார் ஆற்றிய தொண்டு சிறிதே, விடுதலை போராட்ட வீர்ர்கள்தான் உரிமை வாங்கி தந்தார்கள் என்றெல்லாம் பிதற்றி தள்ளியிருக்கும்.

    பெரியார் என்ன செய்து கிழித்தார்,என்பதை நாங்கள் சொலவதை விட பார்ப்பன– விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ஜூனியர் விகடனில் வெளிவந்த ஞானியின் கட்டுரையை,
    அல்லது நாயகன் என்று விகடனில் பெரியாரை பற்றி தொடராய் வெளிவந்த கட்டுரையை ஒருமுறை படிக்கவும்

    19.9.2004 ஜூனியர் விகடனில் ஞாநி
    எழுதிய கட்டுரை.
    தீண்டாமை என்ற மிகப் பெரிய சமூகக் கொடுமைக்கு எதிராக இருபதாம்
    நூற்றாண்டில் நடந்த முதல் மாபெரும் போராட்டம்… வைக்கம் போராட்டம்!
    1924-ல் நடந்த அந்தப் போராட்டத்துக்குக் காரணம், மாதவன் என்ற ஈழவ சாதி
    வக்கீலை திருவனந்தபுரம் நீதிமன்றத்துக்குள் பணிக்குச் செல்லவிடாமல்
    தடுத்ததுதான். நீதிமன்றம் அரண்மனை வளாகத்தில் இருந்தது. மகாராஜா பிறந்த
    நாளுக்காக யாகம் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஈழவர் அந்த வளாகத்தில்
    நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று மாதவன் தடுக்கப்பட்டார்.
    கேரளா முழுவதும் கோயில்களை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோர்
    நடக்கக்கூடாது என்ற தடை இருந்தது. இதையெல்லாம் எதிர்த்துதான் வைக்கம்
    கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில், நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டது.
    போராட்டத்தை முன்னெடுத்த 19 முக்கிய தலைவர்களும் கைதானதும், போராட்டம்
    தொய்வடைந்தது. சிறையில் இருந்த தலைவர்கள் ஜார்ஜ் ஜோசப்பும் கேசவ மேனனும்
    அன்றைய சென்னை மாகாண காங்கிரஸ் செயலாளருக்குக் கடிதம் அனுப்பினார்கள்.
    ‘நீங்கள் வந்து தலைமை ஏற்றால்தான் போராட்டம் தொடர முடியும். உடனே
    வாருங்கள்’ என்ற அந்தக் கடிதம் வந்தபோது, பண்ணைபுரத்தில் பொதுக்கூட்டம்
    பேசிவிட்டு, ஈரோடு திரும்பிவந்த காங்கிரஸ் செயலாளர் உடனே வைக்கம்
    சென்றார். அவர் தலைமை ஏற்றபிறகுதான் வைக்கம் போராட்டம் சூடுபிடித்தது.
    அவர்தான் ‘அய்யா’, ‘பெரியார்’, ‘தந்தை பெரியார்’ என்றெல்லாம் அன்புடன்
    பலராலும் அழைக்கப்படுகிற ஈ.வெ.ராமசாமி (1879-1973).
    பெரியார் தன் அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் காரராகத்தான் தொடங்கினார்.
    ஈரோடு நகராட்சித் தலைவராகவும் பெரும் வியாபாரியாகவும் இருந்தவரை
    அரசியலுக்கு அழைத்துவந்தவர்கள் ராஜாஜி, வரதராஜுலு நாயுடு இருவரும்தான்.
    அரசியலுக்கு வந்ததும் அரசாங்கப் பதவிகளைப் பிடிப்பதுதான் பலருக்கும்
    லட்சியம். ஆனால், பெரியார் அரசியலுக்குள் நுழையும்முன்பு, தான்
    வகித்துவந்த பல்வேறு பதவிகளை உதறிவிட்டு வந்தார். வியாபாரிகள் சங்கத்
    தலைவர், தென்னிந்திய வியாபாரிகள் சங்க நிர்வாக சபை உறுப்பினர்,
    இன்கம்டாக்ஸ் டிரிப்யூனல் கமிஷனர், டவுன் ரீடிங் ரூம் செக்ரெட்டரி,
    ஹைஸ்கூல் போர்ட் செக்ரெட்டரி, தாலூகா போர்ட் பிரசிடெண்ட், முனிசிபல்
    சேர்மன், ஜில்லா போர்ட் மெம்பர், வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரெட்டரி,
    ப்ளேக் கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான
    பிரசிடெண்ட், உணவு கண்ட்ரோல் டிஸ்ட்ரிப்யூஷன் ஆபீஸர் உட்பட மொத்தம்
    இருபத்தொன்பது பதவிகளையும் விட்டுவிட்டு அரசியலில் நுழைந்தார். கடைசிவரை
    தேர்தலில் போட்டியிடவில்லை. எந்த அரசுப் பதவியையும் வகிக்கவில்லை. அவர்
    மறைந்தபோது அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார். காந்திய இயக்கம்,
    பொது உடைமை இயக்கம், திராவிட இயக்கம் என்று தமிழ்நாட்டின் மூன்று பெரும்
    இயக்கங்களிலும் தீவிரப் பங்காற்றிய முதல் பெரும் தலைவர் அவர்தான்.
    காங்கிரஸில் காந்தியின் தலைமையை ஏற்று இருந்தபோது, தமிழகம் முழுவதும்
    கதர் துணியைப் பரப்பினார். தன் குடும்பம் முழுவதும் கதர் உடுத்தச்
    செய்தார். மதுவிலக்குப் போராட்டத் துக்காக, தனக்குச் சொந்தமான கள்
    இறக்கும் தென்னைமரங் களையே வெட்டித் தள்ளினார். ஒத்துழையாமை
    இயக்கத்துக்காக நீதிமன்றப் புறக்கணிப்பு செய்து, வழக்குகளின் மூலம்
    தனக்கு வரவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களை இழந்தார்.
    கொள்கையில் உறுதி என்பதை அவர் கடைசிவரை தளர்த்தியதில்லை. ராஜாஜியுடன்
    தனிப்பட்ட முறையில் நெருக்கமான நண்பராக இருந்தார். ஆனால், கொள்கைப்
    போராட்டத்தை விட்டுக்கொடுத்த தில்லை. ராஜாஜி இறந்தபோது தன் நோயையும்
    பொருட்படுத்தாமல், சக்கர நாற்காலியில் சென்று இறுதிச் சடங்கில்
    கலந்துகொண்டார். ‘சுயநலமற்ற வரான ராஜாஜி, இட ஒதுக்கீடு, சாதி ஒழிப்பு
    என்ற இரண்டையும் ஏற்றுக்கொண்டு, காங்கிரஸ் கட்சி மூலமாகவே அதைச்
    செயல்படுத்தியிருந்தால், நான் கடைசிவரை அவர் தொண்டனாகவே மகிழ்ச்சியுடன்
    என் காலத்தைக் கழித்திருப்பேன்’ என்று அப்போது பெரியார் எழுதினார்.
    அநாதை இல்லக் குழந்தைகளுடன்..
    வைக்கம் போராட்டத்திலேயே அவருடைய கொள்கை உறுதியைப் பார்க்கலாம். காந்தி,
    ராஜாஜி, சீனிவாச அய்யங்கார் என்று சக காங்கிரஸ் தலைவர்கள்
    கேட்டுக்கொண்டும்கூட போராட்டத்தை நிறுத்திவிட்டு, சென்னை திரும்ப
    மறுத்தார் பெரியார்.
    இந்தப் போராட்டத்துக்காக கைதான பெரியார், சிறையில் இருந்தபோது, அவருக்கு
    எதிராக சத்ரு சம்ஹார யாகம் ஒன்றை கேரள சனாதனிகள் நடத்தி னர்கள். யாக
    முடிவில் எதிரி (ஈ.வெ.ரா.) சாகவேண்டும் என்பது நோக்கம். ஆனால், யாகத்தின்
    முடிவில் மகாராஜா இறந்துவிட்டார். பெரியாரைக் குறிவைத்து அனுப்பிய யாக
    பூதம் திருப்பிக்கொண்டு ராஜாவையே கொன்றுவிட்டது என்று சிறை வார்டன்
    தன்னிடம் சொன்னபோது, அப்படிச் சொல்வதும் மூட நம்பிக்கைதான் என்றார்
    பெரியார்.
    தீண்டாமை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, வகுப்புவாரி இட ஒதுக்கீடு,
    பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற பெரியாரின் கொள்கைகள் அளவுக்கு
    முக்கியமானவை, அவருடைய பெண்ணுரிமைக் கோட்பாடுகள். தன் மனைவி நாகம்மாள்,
    தங்கை கண்ணம்மாள் இருவரையும் போராட்டங்களுக்குத் தலைமை ஏற்க வைத்தார்.
    சடங்குகள் இல்லாத எளிமையான சுயமரியாதை திருமண முறையை அறிமுகப்படுத்தியவர்
    அவர்தான். 1929-லிருந்து நான்கே ஆண்டுகளில் அப்படிப்பட்ட எட்டாயிரம்
    திருமணங்களை சுயமரியாதை இயக்கம் நடத்தி வைத்தது. திருமணம் செய்யும்
    உரிமை, செய்யாமல் இருக்கும் உரிமை, பிடிக்காத திருமணத்திலிருந்து
    வெளியேறும் உரிமை, திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் உரிமை, குழந்தை
    பெறும் உரிமை, பெறாமல் இருக்கும் உரிமை, இவையெல்லாம் பெண்ணுக்கு உரிய
    உரிமைகள் என்று அவர் முன்னோடியாக பிரசாரம் செய்திருக்கிறார். பெண்களுக்கு
    எல்லா உத்தியோ கங்களிலும் சரி, பாதி இட ஒதுக்கீடு செய்யவேண்டுமென்று 80
    ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் போட்டவர் அவர்.
    இன்று கல்வி நிலையங்களிலும் அரசு வேலைகளிலும் எல்லா சாதியினரும்
    இருப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒருவர் பெரியார். அவர் இதற்காகப்
    போராடத் தொடங்கிய காலத்தில், கல்லூரிப் படிப்பு படித்தவர்களில்
    நூற்றுக்கு 65 பேர் பிராமணர்கள். மீதி 35 பேர்தான் எல்லா சாதியினரும்.
    ஆனால், அன்று மக்கள் தொகையில் நூற்றுக்கு 97 பேர்
    பிராமணரல்லாதவர்கள்தான். அன்று அரசாங்க வேலைகளில் உயர் பதவிகளில்
    நூற்றுக்கு 47 இடங்களில் பிராமண அதிகாரிகள், 30 இடங்களில் ஆங்கிலேயர்கள்,
    23 இடங்கள்தான் மீதி எல்லா சாதியினருக்கும்.
    ஒரு பெரும் சமுதாயத்தின் கல்வி நிலை, வேலை நிலையை மாற்றி அமைத்த
    பெரியார், மூன்றாவது வகுப்புக்கு மேல் படித்தவரல்ல. ஆனால், அவர்
    கொண்டுவந்த மொழிச் சீர்திருத்தத்தைப் பின்பற்றித்தான் இந்தக் கட்டுரைகூட
    எழுதப்படுகிறது. காந்தி, நேரு, போஸ், திலகர், ராஜாஜி என்று மெத்தப்
    படித்தவர்களே பெரும் தலைவர்களாக இருந்த காலகட்டத்தில், பெரியார்தான்
    மூணாங்கிளாஸ் படித்த தலைவர். ஆனால், பெரும் படிப்பு படித்த பலரை அவரது
    இயக்கம் ஈர்த்து, அவருக்குத் தொண்டர்களாகப் பணிபுரியச் செய்தது.
    காங்கிரஸிலிருந்து சுயமரியாதை இயக்கம்வரை பெரியார்கூட நெருக்கமாக இருந்து
    அவர் நடத்திய பத்திரிகைகளில் எழுதிய மற்றும் பொறுப்புவகித்த எஸ். ராம
    நாதன், குத்தூசி குருசாமி, அண்ணா, கி.வீரமணி, ஆனைமுத்து எனப்பலரும்
    முதுநிலைப் பட்டதாரிகள்.
    ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக சாகும்வரை ஓயாமல் பிரசாரம் செய்ததில் அவரை
    மிஞ்ச உலக அளவில் கூட யாரும் இல்லை. வருடத்தில் பாதி நாள் டூர்தான்.
    மீட்டிங்தான்.
    90-வது வயதில் 41 நாள் டூர். 180 கூட்டம்.
    91-வது வயதில் 131 நாள் டூர். 150 கூட்டம்.
    93-வது வயதில் 183 நாள் டூர். 249 கூட்டம்.
    94-வது வயதில் 177 நாள் டூர். 229 கூட்டம்.
    வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 38 நாள் டூர். 42 கூட்டம்.
    இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன். ஹெர்னியா பிரச்னையினால்
    சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச்
    சென்றார். சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு
    குழாய் செருகப்பட்டிருந்தது.
    பெரியாரின் வாழ்க்கை, சுமார் 500 எபிசோடுகளில் ஒரு மெகா சீரியலாக
    எடுப்பதற்கான தகுதியும் தகவல்களும் நிரம்பியது. அதை ஐந்து எபிசோடுகளாக
    எடுக்க பொதிகை சேனல் எனக்கு வாய்ப்பளித்தது. என் மீடியா அனுபவங்களில் இது
    மறக்கமுடியாத செறிவான அனுபவம். பெரியார் பெயரைச் சொல்லி அதிகாரத்தை,
    ஆட்சியைப் பிடித்தவர்கள் நடத்தும் சேனல்கள் எதுவும் இன்றுவரை பெரியார்
    பற்றி அரை மணி நேர நிகழ்ச்சிகூட தயாரித்ததில்லை என்பதும் பெரியார்
    வாழ்க்கையின் விநோதங்களில் ஒன்று. அவர்களுக்கு, பெரியாரின் தேவை முடிந்து
    விட்டிருக்கலாம்… ஆனால், தமிழக மக்களுக்கு இன்றும் பெரியார்
    தேவைப்படுகிறார் என்பதுதான் உண்மை.
    ஓ… அடுத்த ஈ.வெ.ர
    இந்தக் கட்டுரையில் இடம்பெற்றி ருக்கும் படங்களை எடுத்தவர், பத்திரிகைத்
    தொடர்பாளரான ஈ.வெ.ரா. மோகன். பெயரைப் பார்த்ததும், இவர் பெரியாரின்
    சொந்தக்காரர் என்றுதான் பெரும் பாலும் நினைப்பார்கள். ஆனால் இவர், ஈரோடு
    வெங்கடேசனின் மகன் ராம்மோகன். அவர் பெரியாருடனான தன் புகைப்பட
    அனுபவத்தைச் சொல்கிறார்.
    ”பிராமணரான நான் அக்ரஹாரத்தில் பிறந்து வாழ்ந்தாலும் பெரியார்மேல அபார
    ரசிப்பு உள்ளவன். ஒருநாள் ‘பெரியாரையும் படமெடுத்தா என்ன?’னு தோணுச்சு.
    அவர் வீட்டுக்குப் போனேன். உள்ளே கூட்டிட்டுப் போய் என்னை பெரியாரிடம்
    ‘ஈ.வெ.ரா.மோகன்’னு அறிமுகம் செய்து வெச்சாங்க. ‘ஓ… அடுத்த
    ஈ.வெ.ரா-வா?’னு கேட்டவர் என்னைப் பற்றி விசாரிச்சார்.
    நான் ‘என் பூர்வீகம் ஈரோடுதான்’ என்றபடி, என் தாத்தா, அப்பா
    பெயரையெல்லாம் சொன்னேன். பெரியார் ஈரோடு நகர சேர்மனாக இருந்த காலத்தில்
    என் தாத்தா முனிசிபல் கவுன்சிலரா இருந்தவர். அதையெல்லாம் சொன்ன பெரியார்,
    நான் விரும்பினபடியெல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
    படுத்தபடி ஒரு போஸ், புத்தகம் படிக்கும்விதமாக ஒரு போஸ், அவருக்குப்
    பிரியமான நாய்களை வைத்துக்கொண்டு ஒரு போஸ்னு பல கோணங்களில் எடுத்தேன்.
    அதுதான் நான் பெரியாரை முதலும் கடைசியுமாகப் பக்கத்தில் பார்த்தது. ஆனா,
    ‘அவரோடு நின்று ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு தோணாமல் போச்சே’னு இன்றுவரை
    வருத்தப்பட்டுக்கிட்டே இருக்கேன்” என்ற ஈ.வெ.ரா.மோகன்

  15. நண்பர் பெரியார் விமர்சகர் அவர்களே,

    நான் பெரியார் போட்ட பிச்சை என்று சொன்னது அவரது பங்களிப்பை முழுவதுமாக அங்கீகரிக்கும் பொருட்டுத்தான்.
    சமூக விடுதலை வரலாற்றில் பெரியாருக்கு மிகப்பெரிய இடம் உண்டு.
    அதற்காக பெரியார் மட்டும்தான் ஒரே ஒரு போராளி என்று சொல்லவில்லை.
    சுதந்திரம் என்பது காந்தியார் கொடுத்த பரிசு என்று சொன்னால் காந்தி மட்டுமே போராடினார் என்று சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
    அவரது பங்களிப்புக்கு நாம் கொடுக்கிற அங்கீகாரம்தான் அது.
    பெரியாரை அவர் வாழ்ந்த காலத்தோடு பொருத்திப்பார்த்தால் அவரது பிரம்மாண்டம் புரியும்.
    நான் பெரியார் ரசிகர் அல்லன். அதேநேரத்தில் பெரியாரைக் கண்ணை மூடிக்கொண்டு தூற்றுபவனும் அல்லன்.
    பெரியாரிடம் எனக்கு மாற்றுக் கருத்துக்களும் உண்டு. அதற்காக நான் பெரியார் எதிரி என்பதும் பொருளன்று.
    பெரியார் விடுதலைப் போ££ட்டத்தை எதிர்த்தது நியாயமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் எதற்காக அப்படிச் சொன்னார் என்றும் பாருங்கள்.
    சமூக நீதியற்ற ஒரு சமூகத்தில் பெறப்படும் சம்பிரதாய ஆட்சி மாற்றம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்று வெறுத்துப்போய் அவர் அந்த நிலையை எடுத்தார். அவ்வளவு ஏன், அம்பேத்கருக்கும் அதே கருத்து இருந்தது என்பதை நீங்கள் மறுத்துவிடுவீர்களா?
    தேச விடுதலை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு சமூக விடுதலையும் முக்கியம் தானறிந்த விசயங்களை தனக்குத் தெரிந்த வடிவத்தில் எதிர்கொண்டார் பெரியார். அவர் வரைவிலக்கணம் என்று எதையும் வகுக்கவில்லை. அவரும் எந்த வரைவிலக்கணத்தையும் பின்பற்றவில்லை.
    பெரியாரைப் புரிந்துகொள்ள நானும் நீங்களும் இன்னும் பெரியாரைப் படிக்க வேண்டும்.
    அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கங்களைக்குறிப்பிட்டு அதனை எதிர்த்தவர் பெரியார் என்பதால் அவர் நாட்டுக்கே எதிரானவர் என்பது போல ஒரு தோற்றத்தை சித்தரித்துவிடாதீர்கள்.
    அரசியலமைப்புச் சட்டத்தை தயாரித்த பிறகு அம்பேத்கார் என்ன சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியும்தானே?
    அதனைப்பற்றி தங்களின் விவாதக் கருத்துக்களை ஆவலோடு எதிர்நோக்குகிறேன்

  16. Critic Mama,

    Ungaluku moolai nalla velai seyuthu !

    Pathathuku neenga “SCALE” vera vachu nalla alavu edukireenga

    eppadi “Englishkaran” Kitta irundha Theedaamai vandhathu….

    nalla yosichu panchagam paarthu pathil sollungoooooooonaaaa

    jayendranin swarna

Leave a Reply

%d bloggers like this: