2002 ஆம் ஆண்டு ‘தலித் முரசு‘ இதழில் எழுதியது ஏற்கனவே நமது பதில் பதிபித்திருக்கிறோம். இப்போதுபெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து விவாதம் தீவிரமாக பேசப்படுவதால் மீண்டும் இதை பதிப்பிக்கிறேன்.
கனவில் அவள் வந்தாள்
கனவிலும்
தூங்கிக் கொண்டிருந்த
என்னைத் தட்டியெழுப்பி
எனக்கொரு
பிரச்சினை என்றாள்.
.
நான்கு கைகளோடு நின்ற
அவளைக் கண்டு மிரண்டு,
யார் நீங்கள்?என்றேன்.
என் பெயர் காமாட்சி
ஊர் காஞ்சிபுரம் என்றாள்.
.
அய்யோ கடவுளா!
கடவுளுக்கே பிரச்சினையா?
ஆச்சரியத்தோடு
கணவனாலா என்றேன்.
கணவனால்
பிரச்சினை இல்லை
பிரச்சினைகளைப்
புரிந்து கொள்ளாமல்
கல்போல் நிற்பவன்
கணவனா என்றாள்.
.
புரியவில்லையே என்றேன்.
தினம் தினம்
நான் அவமானத்தால்
செத்துப் பிழைக்கிறேன்
என் பெண்மை
கேவலப்படுத்தப்படுகிறது
என்று உடைந்தாள்.
நான் பதட்டமாகிப் போனேன்
அய்யோ உங்களையா?
யார் அவன்?என்றேன்.
கோயில் குருக்கள் என்றாள்.
குருக்களா!
என்ன செய்தார் அவர்?
அதிர்ச்சியாகக் கேட்டேன்.
.
தினம் தினம்
கருவறையின் கதவுகளை
உட்பக்கமாக சாத்திக்கொண்டு
என்னை நிர்வாணப்படுத்தி அபிஷேகம்…
என்று சொல்லிக்
கொண்டிருக்கும்போதே
அவமானத்தால் கதறி விட்டாள்.
.
பின் நிதானித்து
குருக்கள் வாயில்
மந்திரம் இருக்கலாம்
மரியாதை இருக்கலாம்
ஆனால்
இதை
பெண்ணின் மனநிலையில்
புரிந்து கொள்
அவமானம் புரியும் என்றாள்.
.
சரிதான்,ஆனால்
இதற்கு என்ன செய்ய முடியும்
என்றேன்-மிகுந்த வருத்தத்தோடு.
ச்சீ… இப்படிக் கேட்க
உனக்கு வெட்கமாக இல்லை?
உக்கிரமாகிப் போனாள் காமாட்சி.
கோபத்தோட தொடர்ந்தாள்
எல்லாத் துறைகளிலும்
பெண்களுக்கு உரிமையும்
ஒதுக்கீடும் வேண்டும் என்று
கேட்கிறீர்களே
கோயில் கருவறைக்குள்
குருக்களாக
அர்ச்சகர்களாக
பெண்களை அனுமதித்தால்
உங்கள் புனிதம் என்ன
நாறி விடுமோ?என்று
காறித் துப்புவது போல் கேட்டு
நிலம் நடுங்க
சலங்கை உடைய
தீயைப் போல் போனாள்
காஞ்சி காமாட்சி.
.
***
2002 ல் தலித் முரசு இதழில் வெளியான கவிதை.
சமீபத்தில் சபரிமலை அய்யப்பன் பெண்களுக்கு எதிராக எடுத்த அவதாரத்தை முன்னிட்டு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.
”கர்ப்பக் கிரகத்திற்குள் பெண்கள் நுழைந்து விட்டார்கள்’என்பதை ஏதோ சிலைத் திருடன் நுழைந்து விட்டான் என்பதை விடவும்,கேவலமாக விவாதிக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டார்கள்,பெண்கள்.
(பெரியார் இதற்காகத்தான் சாமியை செருப்பாலடித்தார்)
நாடாளுமன்றத்தில் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு 33% இட ஒதுக்கீடும் கிடைக்க இருக்கிறது. இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் கூட உள் ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கையைத்தான் பெயரளவிலாவது முன் வைக்கிறார்கள்.
உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் `இதுல ஜாதியெல்லாம் பார்க்கக் கூடாது. முதலில் அமலாகட்டும்`என பெண்களுக்குள் ஜாதி வேறுபாடு இல்லாதது போல் பேசுகிறார்கள்.
ஒரு பெண் பிரதமராக முடிகிறது. அர்ச்சகராக முடிவதில்லை.உள் ஒதுக்கீடு கூட வேண்டாம். அர்ச்சகராவதற்கு முழுக்க முழுக்க அய்யர்,அய்யங்கார் பெண்களை மட்டுமாவது அனுமதிப்பார்களா? நாடாள முடிகின்ற பெண்ணால்- கேவலம் அர்ச்சகராக முடியாதா?
சட்டம் சந்து பொந்துகளில் நுழைகிறது. சிலர் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து விடுகிறார்கள். ஆனால் கர்ப்பக் கிரகம் என்ற சந்துக்குள் எந்தச் சட்டம் நுழைய முடிகிறது?
பரந்து விரிந்த அந்த நாடாளுமன்றம் சின்ன கர்ப்பக் கிரகத்திற்கு முன் மண்டியிடுவது,பக்தியினால் அல்ல.
சுதந்திர இந்தியாவின் நவீன சட்டங்கள்,மனுவின் சட்டங்களுக்கு முன் மண்டியிடுவதைப் போல.நாடாளுமன்ற உறுப்பினர் என்பது அதிகாரம்.
கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைவது சுயமரியாதை.
அதிகாரத்தை விடவும்,சுயமரியாதை முக்கியம் அல்லவா?
`தீட்டு`என்று காரணம் சொல்லி பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றனர். தந்தை பெரியார் கேட்டார்:
‘வே. மதிமாறன் என்ற கம்மநாட்டிக்கு` என்கிற தலைப்பில் பார்ப்பன ‘ஒழுக்கத்தோடு` கட்டுரை எழுதிய ஒரு நபர், (mrcritic.wordpress.com) திரு. விஜய் கோபால்சாமிக்கு, என்னை கண்டித்தும், wordpress.com மை விட்டு என்னை வெளியேற்ற வேண்டும், என்எழுத்துக்களை படிக்கக் கூடாது என்றும் பின்னூட்டம் அனுப்பியதையும், அதற்கு விஜய் கோபால்சாமிஅவர்கள் அளித்த பதிலையும், எனக்கு எழுதிய கடிதத்தையும்நான் அவருக்கு எழுதிய கடிதமும்இங்கே..பிரசுரித்திருக்கிறேன்.
மதிமாறன்அவர்களுக்கு,
கிருட்டிக்அவர்களுடனான எனது விவாதத்தில் நான் கூறிய ஒரு தகவலை (தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மூலமாகக் கூறப்பட்ட தகவல்) தனது பின்னூட்டத்தில் பயன்படுத்தி வருகிறார். தங்களைக் குறித்த ஒரு அனுக்கமான தகவல் தங்களுடைய அனுமதியில்லாமல் வெளிவருவதற்கு நானும் ஒரு வகையில் காரணமாக இருந்துள்ளேன் என்பதால் முதலில் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்
என் வழியாக அறிந்த ஒரு தகவலை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் முன் என்னிடம் அனுமதி கேட்டிருக்கவேண்டும் அல்லது ஒரு தகவலாவது சொல்லியிருக்கவேண்டும். கிருட்டிக் இதில் எதையும் செய்யவில்லை.
முதல் அடியை வாங்குகிற வரைக்கும் அடிக்கக்கூடாது என்பது என்னுடைய யுத்த நாகரிகம். இப்போது முதல் அடியும் விழுந்து விட்டது. இதற்கு எதிர்வினை காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்
நான் நினைத்திருந்தால் அவருக்குத் தெரியாமல் என்னுடைய பதில் மடலை உங்களுக்கு அனுப்பியிருக்க முடியும். அதனை கண்ணியக் குறைவான ஒரு செயலாகக் கருதியதால், அந்த மடலின் நகல் தங்களுக்கும் அனுப்பப்படுகிறது என்ற தகவலை அவருக்கும் தெரிவித்திருந்தேன். அதற்கான பதில் மடலில், பதில்களைத் தனக்கு மட்டுமே அனுப்புமாறு கேட்டிருந்தார்.
ஏற்கெனவே நான் பதில் சொல்லிய விஷயங்களை மீண்டும் மீண்டும் வேறுவேறு வடிவில் கேள்விப்படுத்தி இருந்ததால் அவரது கடைசி மடலுக்கு பதிலளிக்க விரும்பாமல் அப்படியே வைத்திருந்தேன். இந்த நிலையில் தான் நான் கூறிய ஒரு தகவலை அவர் தனது பின்னூட்டங்களில் பயன்படுத்தி வருகிறார்
ஆகவே, இந்த மடலின் வாயிலாக எங்களுக்கு இடையே நடந்த விவாதத்தை தங்களது தளத்தில் பதிப்பிக்க முழுஉரிமை அளிக்கிறேன், ஒரு வேண்டுகோளுடன் (வேண்டுகோள் பின்குறிப்பில்).
நன்றியுடன்
விஜய்கோபால்சாமி
பின்குறிப்பு: இம்மடலின் நகல் கிருட்டிக் அவர்களுக்கு அனுப்பப்படவில்லை. தங்களது தளத்தில் பதிப்பிக்கப்பட்ட பிறகு படித்துத் தெரிந்து கொள்ளட்டும், நான் தெரிந்து கொண்டதைப் போல. நாகரிகம் கருதி இம்மடலில் இருக்கும் கிருட்டிக் அவர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஐ.பி. முகவரியைப் பதிப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
mrcritic:
இந்த பதிவிற்கும் நான் எழுதபோவதற்கும் சம்மந்தமில்லை. வெருஎங்கும் எழுத முடியாததால் இங்கு எழுதுகிறேன்
.
மதிமாறன் என்ற வலைப்பூ மிகவும் கீழ்த்தனமான பதிவுகளை கொண்டது. பாரதியபத்தி பேசரது எனககு எந்த ஆட்சயபனையுமில்லை. மக்கள் தொலைக்காட்சியில் கேட்க்கும் கேள்விக்கு எதிரில் இருந்தவர் ஒரேவரியில் பதில்சொன்னார். வீடியோவை மீண்டும் பார்க்கவும். ஆனால் வலைப்பூவின் உள்நோக்கம் முழுக்க முழுக்க பிராமண எதிர்ப்புதான்.
அக்கினிகுஞ்சு என்ற பத்திரிக்கைய தொடங்கி, தலித்முரசு பொன்ற ஒன்றையனா பத்திரக்கைக்கு எழுதினா அவன் சொல்லுரத எழுதரத படிக்கனுமா?
ரஜினியால் தமிழிக்கு இழிக்குனு ஒரு தலைப்பு. அப்படி எழுதும் போது நமக்கு என்ன தகுதினு யோசிக்க வேண்டாமா? தலைப்பு அப்படி எழுதி உள்ள ஒரு விஷயமுமில்ல. ரஜினியின் உழைப்பை பற்றி பாடபுத்தகத்தில் இந்த வருடம் வரபோகிறது, அது
தெரியுமா? ரீமிக்ஸ் பாடல்கள் இத பற்றி ஒரு விமர்சனம். ரீமிக்ஸுக்கும் பிரமணணுக்கும் என்ன சம்மந்தம்? படிச்சுபாருங்க அந்த பதிவ. இளையராஜாவ துறத்த ஏ. ஆர். ரகுமானை கொண்டு வந்தார்கள் பிராமணர்கள் என்று சாதிசாயம் பூசுரார். இளையராஜாவே நான் இனி எந்த முண்ணனி இயக்குனர்களுடன் வேளை செய்யமாட்டேன் சொல்லபோய் தான் பிறரை தேடி செல்ல நேர்ந்தது.
இன்றும் மணிரத்தினம் இளையராஜாவின் இசையில் மயங்குபவர்தான். அதுமட்டுமல்ல யுவன் செய்யும் ரீமிக்ஸ் எல்லாம் இவர் கண்ணுக்கு படலை. வைரமுத்து ஏன் விலகினார்? பாரதிராஜாவுடன் ஏன் இசையமைபதில்லை? அதுவும் பிராமண சதியா? போங்கய்யா
இப்படி சம்மந்தமே இல்லாம தலைப்புகளக் கொடுத்து ஒரு சீப்பான பத்திரிக்கையின் தோற்றத்தைத்தான் ஏற்படுத்துகிறார். புத்தியும் சீப்தான்.
ஞானஸனாம் என்று பதிவில் தன்வலைப்பூவின் நோக்கைதானே அடித்து நோருக்கி விட்டார். பிராமணர்கள் மட்டும்தான் சாதிபார்கிறார்களா? இல்லை அப்படி இருக்க ஏன் இந்த பாரபட்சம் பதிவுகளில்? சாதிமத எதிர்ப்பு எல்லாம் பெரிய விஷயங்கள்.. சமுதாயம் சீர்பட சேற்றை மட்டும் வாரியிறைத்தால் போதாது! ஒருவேண்டுகோள் தயவு செய்த அந்த பதிவுகளை படிக்க வேண்டாம் – it is sadistic!
இப்போ நான் அவசரசிக்கிச்சைக்கு போகவேண்டியவனா? இல்லை அந்த ஆள் மனநலகாப்பகத்திற்கு போகவேண்டியவனா?
-mrcritic
விஜய்கோபால்சாமி:
வணக்கம்நண்பரே,
எதனடிப்படையில் நீங்கள் மதிமாறனின் பதிவுகள் கீழ்த்தரமானவை என்று சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை. அவரது வலைப்பூவின் ஒரேநோக்கம் பிராமண எதிர்ப்பு என்றுதான் நீங்களும்சொல்கிறீர்கள். இதை மதிமாறனிடம் கேட்டால் அவரும் ஆமாம் என்றுதான் சொல்லுவார். ஏனெனில் எதிர்ப்பதில் தவறில்லை, துவேஷம் காட்டுவதுதான் தவறு. மதிமாறன் செய்து வருவது பிராமண எதிர்ப்புதானே ஒழிய பிராமண துவேஷம் கிடையாது.
அதற்கு ஒரு உதாரணமும் என்னால் காட்ட முடியும். வே. மதிமாறன் பதில்கள் என்கிற அவருடைய கேள்வி பதில் நூலைப் படித்திருந்தால் இது உங்களுக்கே தெரிந்திருக்கும். அதில் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் என்கிற பிராமணரைக் குறித்து அவருக்கிருக்கிற மிக உயர்வான அபிப்ராயத்தை அதில் குறிப்பிட்டிருப்பார். அந்தகேள்வியையும் பதிலையும் இம்மடலின் பின் குறிப்பில் எழுதுகிறேன்.
தலித்முரசை ஒன்றரை அணா பத்திரிகை என்று சொல்லுவது உங்களுடையசு தந்திரம். உங்கள் பார்வையில் ஒன்றரைஅணா பத்திரிகையான தலித்முரசுக்கும் கொஞ்சம் வாசகர்கள் இருப்பார்கள் அல்லவா, அவர்கள் அதனை ஒன்றரைஅணா பத்திரிகையாகக் கருதுவதில்லை. உங்களுக்குக் கசக்கிற மதிமாறனின் எழுத்துக்கள் அவர்களுக்குக் கசப்பதில்லை.
உங்களது பதிவின் இறுதியில் “வெளியேறு” (மதிமாறன்) என்று பின்னூட்டம் எழுதச் சொல்லியிருந்தீர்கள். வேர்ட்பிரஸ்சில் பதிவு ஆரம்பிக்க உங்களுக்கும் எனக்கும் உரிமை இருக்கிறதென்றால் அதேஉரிமை மதிமாறனுக்கும் இருக்கிறது.
ஒரு வாதத்துக்கு நீங்கள் சொல்வதையே எடுத்துக் கொள்வோம், மதிமாறன் இதே விஷயங்களை ப்ளாகரில் எழுதினால் பரவாயில்லையா? அப்போது எதிர்வினை காட்டாமல் சும்மா இருந்து விடுவீர்களா?
என்னுடைய பதிவில் தடித்த வார்த்தைகள் இருக்கும், விருப்பமில்லாதவர்கள் படிக்கத்தேவையில்லை என்ற பொருள்பட எழுதியிருந்தீர்கள். உங்களுடைய பார்வையில் மதிமாறனின் எழுத்துக்கள் பிராமணக்காழ்ப்புடன் கூடியவை என்றால் அதை புறக்கணித்து விட்டு உங்கள் வேலைகளைப் பார்த்திருக்கலாமே? எதற்காக தனியாக ஒருபதிவை எழுதுகிறீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம் மதிமாறனுக்கு ஒருநியாயமா சொல்லுங்கள்?
மதிமாறனின் எழுத்துமொத்தமும் பிராமணர்கள் மீதான காழ்ப்பு என்று சொல்லுகிறீர்கள், அப்படியானால் உங்களுடைய அந்தப் பதிவு மொத்தமும் மதிமாறன் என்ற தனிமனிதர் மீதான காழ்ப்பு என்றும் சொல்லலாம் அல்லவா?
மதிமாறன் ஆரம்பம் முதலே ஒன்றைத் தெளிவுபடுத்தி வருகிறார். பலர் அதைப் புரிந்து கொள்வதில்லை. பாரதியை, பாரதியின்மக்கள் (பிராமணர்கள்) கொண்டாடுவதில் அவருக்கு எந்த வெறுப்பும் கிடையாது. ஆனால் பாரதியை முற்போக்கின் முகமாகக் காட்டுகிற, ஒரு புனித பிம்பமாகதூக்கிப் பிடிக்கிற, வாழ்வின் இறுதிநாள் வரை பாரதி எந்த மக்களை இழிவாகக்கருதியிருந்தாரோ, அவர்களைக் கொண்டே பாரதியைக் கொண்டாட வைக்கிற சூழ்ச்சியைத்தான் அவர் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். இதை மதிமாறன் அவர்களின் தளத்தில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். நிற்க.
ரஜினியால் தமிழுக்கு இழுக்கு என்று அவர் எழுதியதைக் குறிப்பிட்டிருந்தீர்கள். பாரதியைபாரதியாகப்பார்க்காமல்விட்டதைப்போலவேரஜினியையும்மக்கள் ரஜினியாக மட்டும் பார்ப்பதில்லை. வருங்கால முதலமைச்சராக, பிரதமராக, ஜனாதிபதியாகப் பார்க்கிற, இன்னும் சொல்லப் போனால் கடவுளாகவே பார்க்கிற பாமரத்தனம் மக்களிடம் விரவிக் கிடக்கிறது. ஆக ரஜினியைக் குறித்த விமர்சனங்களும் இங்கே தேவையாகிறது. பாடத் திட்டத்தில் ரஜினியைக் குறிப்பிடுகிறார்கள் என்றால் அதுகண்டக்டராக இருந்து புகழ் பெற்ற நடிகராக உயர்ந்த அவரது உழைப்பைக் குறித்துத்தான். அத்தகைய உழைப்பைக் குறித்து மதிமாறன் எந்த இடத்திலும் தவறாக எழுதவும் இல்லை. அதைக் குறித்து அவருக்கு எந்த காழ்ப்பும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.
சத்துக் குறைவான உணவை உண்டு வருகிற பலலட்சம் ஏழைக் குழந்தைகள் தமிழ்நாட்டில் இருக்கும்போது ஒரு நடிகனின் கட்டவுட்டுக்கு ஒரு லாரி பாலால் அபிஷேகம் செய்வது அவசியமா? வயது முதிர்ந்த பெற்றோரைக் கவனிக்காமல் ஒரு நடிகரின் புதுப்படத்துக்கு போஸ்டர் ஒட்டுவது அவசியமா? இவ்வாறான குற்றங்களை மௌனமாக அங்கீகரிக்கிற எந்த நடிகரும் விமர்சனத்துக்கு உரியவர்தான். அதில் ரஜினிக்கு மட்டுமல்ல வேறு எந்த நடிகருக்கும் எவ்விதமான விதிவிலக்கும் கிடையாது.
உங்களுடைய பார்வைக்கு மதிமாறனுடைய தளம் சீப்பாகத் தோண்றுகிறது என்றால் அதை நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. மதிமாறனின் புத்தியும் சீப் என்று எதைவைத்துச் சொல்கிறீர்கள். அவருடன் பழகிப் பார்த்திருக்கிறீர்களா, அல்லது எழுத்துக்களையாவது முழுவதுமாகப் படித்திருக்கிறீர்களா? ஆக உங்களுடைய இந்தக் கருத்திலும் என்னால் முழுமையாக உடன்பட முடியவில்லை.
திரைஇசையில் ரசிகன் என்றவகையில் ஈடுபாடு உண்டு. ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவங்களைக் குறித்து முழுவதுமாகத் தெரியாது. மதிமாறன் தினகரன் நாளிதழில் பணிபுரிந்தவர். ஒரு பத்திரிகையாளர் என்ற வகையில் அவர் இதுகுறித்த பல்வேறு தகவல்களை அறிந்திருக்கலாம். ஆகவே திரை இசைக் கலைஞர்கள் தொடர்புடைய கேள்விகளை நீங்கள் அவரிடமே நேரிலே கேட்கலாம்.
ஞானஸ்னானம் என்ற வார்த்தைப் பிரயோகத்தைக் கொண்டு மதிமாறன் கிறிஸ்துவசார்புடையவர் என்று கருதிவிட வேண்டாம். இந்துமதத்தை எந்தஅளவுக்கு விமர்சிக்கிறாரோ அதே அளவுக்கு மற்றமதங்களையும் விமர்சித்திருக்கிறார். அவருடைய பதிவுகளையும் நூல்களையும் முழுமையாக வாசித்தால் புரியும்.
மதிமாறன் சமுதாயம் பொருளாதாரம் என்ற இரண்டுதளங்களிலும் இருந்து வருகிற பிற்போக்கை தனது எழுத்தின் மூலம் கண்டித்தே வருகிறார். இதில் அவருக்கு எந்தமதத்தைக் குறித்தும் சமரசம்கிடையாது.
சமுதாய சீர்த்திருத்தத்துக்கு வெறுமே சேற்றைவாரி இறைப்பது மட்டும்போதாது என்கிறீர்கள், உங்களது இந்தக்கருத்தில்நானும் உடன்படுகிறேன். மிகப்பணிவாக உங்களைக் கேட்கிறேன், உங்களது இந்தப் பதிவில்நீங்கள் செய்திருப்பது என்ன?
யார் அவசர சிகிச்சைக்கு அல்லது மனநலகாப்பகத்துக்குச் செல்லவேண்டும் என்று நீங்களே ஒருமுன் முடிவை வைத்திருக்கும் நிலையில், அதைக் குறித்தும் நான் எதுவும் சொல்வதற்கில்லை.
நீங்கள் நேர்மையினுடைய பதிவைப் படிக்கக்கூடாது என்று நான் சொன்னால் அது எத்தகைய சாடிசமோ அத்தகையதுதான் என்னையும் மற்றவர்களையும் மதிமாறனின் பதிவைப் படிக்கக்கூடாது என்று நீங்கள் வேண்டுகோள் விடுப்பதும். மாற்றுக் கருத்துடையவர்களைக்களத்தை விட்டே நீக்கவேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?
நீங்கள் எனக்கு அனுப்பிய பின்னூட்ட மடலில் முடிந்த அளவுக்கு கண்ணியமான வார்த்தைகளையே பயன்படுத்தியுள்ளீர்கள். இதையே அந்த பதிவை எழுதும் போதும் கடைபிடித்திருக்கலாம் என்பதுதான்என்னுடைய விருப்பம்.
பதிவுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டம் என்பதால் இதனை என்னுடைய பதிவில் பதிப்பிக்கவில்லை. இது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களை மின்னஞ்சல் வாயிலாகவே தொடரலாம். இந்த கருத்தோட்டத் தின்மையப்புள்ளி மதிமாறன் என்பதால் நம்முடைய இந்தகருத்துப் பரிமாற்றம் குறித்து மதிமாறன் அவர்களுக்கும் தெரிவிப்பதுதான் நாகரிகம் என்று கருதுகிறேன். எனவே இம்மடலை சிசி ஆக மதிமாறனுக்கும் அனுப்புகிறேன்.
நன்றியுடன்
விஜய்கோபால்சாமி
பின்குறிப்பு:
கேள்வி: நிறைய சர்ச்சை ஆகியிருக்கிறதே, நீதிபதிகளுக்கு என்னஆயிற்று? (வி.பாண்டியன், கோவில்பட்டி)
வே. மதிமாறன்: ஒரு சிறந்த நீதிபதி, சட்டத்தின்படி மட்டும் இயங்கமாட்டார். ஏனென்றால் சில நேரங்களில் சட்டத்தின்படி சரியாக இருப்பது நியாயத்தின்படி, நீதியின்படி தவறாக இருக்கும்.
சட்டத்தின்படி இயங்குபவர் தீர்ப்பு வழங்குபவராக மட்டும்தான் இருப்பார். நீதி வழங்குபவராக இருக்கமாட்டார்.
சட்டத்தின் துணையொடு நியாயப்படி, நீதியின்படி பரிவோடு, துணிவோடு தீர்ப்பு வழங்குபவருக்குப் பெயர்தான் நீதிபதி. (கவனிக்க, இத்துடன் முடித்திருந்தாலும் இந்தக் கேள்விக்கு வேண்டிய பதில் கிடைத்திருக்கும், ஆனாலும் தொடர்ந்து அவர் என்ன சொல்லுகிறார் என்பதையும் படிக்கவும்) சுருங்கச் சொன்னால் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மாதிரி.
ரயில்வேயில் பதவி உயர்வுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று தொடுக்கப்பட்ட வழக்கில், இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகமரியாதைக்குரிய கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்புவரலாற்றுச் சிறப்புமிக்கது. “சச்ராமாயன்” என்று இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட பெரியாரின் “ராமாயணக்குறிப்புகள்” நூலை உத்திரப்பிரதேச அரசுதடை செய்தபோது அந்தத்தடையை உச்சநீதிமன்றம் மூலமாக தள்ளுபடி செய்த நேர்மையாளர், கண்ணியத்திற்குரியவி. ஆர்.கிருஷ்ணய்யர். ஓய்வு பெற்றபிறகும் 90 வயதைத் தாண்டி நீதிக்காக ஓய்வில்லாமல் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார் இந்த நீதிமான்.
mrcritic:
வணக்கம்
விஜய்,
எதிர்க்கலாம் துவெஷம் தான் காட்டக்கூடாது. எப்படி விஜய் இப்படி பாகுபடுத்தி பாக்க தோணுது? இல்லை இதுக்கு பேருதான் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதா? The line has been crossed. நீங்கள் குறிப்பிட்ட பின் குறிப்பு அந்த வலைப்பதிவில் காட்டமுடியுமா? நான் ஏன் விஜய் யாரோ எழுதுன நூல படிக்கனும்? அது கண்டிப்பா என் வாழ்க்கையில் நடக்காது.
வெர்ட்பெரஸை நான் ஒரு ரோஜா தோட்டமாகத்தான் கருதுகிறேன். ப்ளாகரில் இது நடந்தால் அந்த விஷப்பதிவுகள் கண்டிப்பா முன்பதிவா 24/7 நம்ம கண்ணுக்குபடாது. அது மட்டுமில்ல வலை தேடல்களில் வரவே வராது, எழுதித்தரேன்
நான் செய்வது மிகவும் personal attack தான். என் பதிவின் நோக்கமும் அது மட்டுமே. நாகரீகம் என்பது வார்த்தை யளவில் மட்டுமிருந்தால் பொதுமா? சொல்லும் கருத்துக்கள்(?) அல்ல அவதூருகள் பற்றிகவலையேயில்லாமல் எழுதும் போது என்ன செய்ய? அந்த இடத்தில் நாகரீகம் காற்றில் பரக்கவிட்டு வசையில் வார்த்தைகளை தைக்கும் போது போய் சேரவேண்டிய இடத்தில் உடனே சேரும். இது அந்த வலைப்பதிவிலிருந்து கத்துக்கிட்டதுதான்.
நீங்க அடிக்கடி வரும் பூங்காவில் நாராசமா எப்பப்பார்த்தாலும் யாரையாவது இழிவுப்படுத்திக்கிட்டு அவதூர பரப்பிக்கிட்டிருந்தா நீங்க என்ன செய்வீங்க? அதுமட்டுமல்ல அங்கு இருக்கும் வழிப்போக்கர்களின் மீதும் சேற்றைவாரியிரைக்கும் இருகைக்கூலிகளை வெச்சுக்கிட்டு ஆட்டம் போட்டஎன்செய்ய? இவர்கள் பரப்பும் துவேஷமும் நான்எழுதிய வார்த்தைகளையும் ஒருதாரசில்வைத்தால் அவர்களின் துவேஷம்தரையத்தொடும்!
ரஜினி ரசிகர்களால் இழுக்குஎ ன்பது சரியான தலைப்பா இல்ல ரஜினியால் இழுக்கா? இப்படி சம்மந்தமில்லாம துணுக்கு மூட்டை மாதிரி தலைப்பு வெச்சா அதுசீப்தான். ஒருதுணுக்குமூட்டையின் அளவில் எழுதுபரின் புத்தியும் சீப்தான். அதவிடகேவலம்தசாவதாரம்பதிவு. வாய்ப்பு கிடச்சாலும் இப்படி ஒருவரோட பழகவே மாட்டேன்
ஞானஸனாம் என்ற குறிப்பு சொன்னத நீங்கதப்பா விளக்கறீங்க. அந்தபதிவு கிருஸ்துவ ஆதரவல்ல. அந்தபதிவ சரியாபடிச்சா இதுதமிழக மக்களின் மனநிலை என்பது விளங்கும். இந்துகளுக்கு மட்டும் சொந்த மில்லைவரணத்தால் பாகுபடித்துவது. இது தமிழ்முஸ்லிம்களிடமும் உள்ளது. அப்படியிருக்கதொடர்ந்து ஒரேவகுப்பினரைத்தாக்குவுது துவேஷம்தான்எதிர்ப்பல்ல!
என்வேண்டுகோளின்காரணம்:
சேற்றைவாரி இறைக்கும் இவர்களின் பதிவுகள நீங்க 3மாதங்கள் படியுங்க. பிறகு உங்கள் வேலை நிமித்தமா வெளியுருக்கு போங்க. பின்புதான் தெரியும் மனிதனை மனிதனா பார்ப்பதுனாஎன்னவென்று. அன்புக்காக எழுதுங்ககால்ல விழுந்து கும்பிடரோம். சாதிங்கரராட்சன ஒழிக்க எழுதுங்க தோளுக்கு தோள் நிக்கரோம். முற்போக்கு சிந்தனைகள இன்று நடக்கும் விஷயங்களோடு அவதூருலில்லாமல் எழுதுங்க அதபரப்ப 6கோடிபேரும்கூடவரோம்.
நீங்க என்ன விளக்கினாலும் உங்கள் உள் மனம் என்னஎன்று என்னால் பார்க்க முடிகிறது. விஜய் விவரமானஆளு. நான் சொல்ல வேண்டியதே இல்லை. அந்தபதிவு ஒரு முன்னால் தினகரன் பத்திரிக்கையாளருடையது என்பது தெரிந்தது நல்லவிஷயம். பத்திரிக்கைக்காரர்களைவிட விஷமிகள் யாருமிருக்க முடியுமா?
நேரமெடுத்துக்கொண்டு எழுதியதிற்கு நன்றி. இதனைபற்றிபதில் எழுத நினைத்தால் எனக்கு மட்டும் எழுதுங்கள்.
நன்றி!
mrcritic
வே. மதிமாறன்:
திரு. விஜய் கோபால்சாமி,
என்னை பத்திரிகையாளன் என்று நீங்கள் mrcritic க்கிடம் சொன்ன தகவலில் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. அது நான் பார்த்த வேலைதானே.
பாரதியை நான் விமர்சிக்கிறேன், என்ற காரணத்திற்காக, என்னை கொலை செய்துவிடும் அளவிற்கு கோபத்தை நெஞ்சில் வைத்துக் கொண்டு, (செஞ்சாலும் செய்வாங்க. ஜெயேந்திரன் ஆளுங்கதானே) எந்த அரசியல் விளக்கங்களும் அற்று, ஆபாசமான வெற்று வார்த்தைகளால் என்னை திட்டி ஆறுதல் அடைகிறார்கள், பிரம்மாவின் நெற்றியில் பிறந்த ‘நாகரீகமான மேன்மக்கள்`.
நான் பத்திரிகையானாக இருந்தவன் என்று கேள்விப்பட்டவுன், என்னை திட்டவேண்டும் என்ற ஆத்திரத்தில், பத்திரிகையாளர்கள் பற்றி மிகவும் மோசமான கருத்தை தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருக்கிறார், பாரதியை பாதுகாக்க வந்த குட்டி பாரதியான இந்த mrcritic.அவர்களின் பாரதி கடைசிவரை பத்திரிகையாளராக இருந்தவர் என்பதையும் மறந்து. அவ்வளவு ஆத்திரம்.
WordPress யை விட்டு என்னை வெளியேற்ற வேண்டும் என்ற அவர்களின் செயல் வெற்றி பெறாமல் போனால், என் வலை பதிவை அழித்துவிடுகிற வேலையையும் செய்வார்கள். அது ஒன்றும் அவர்களுக்கு புதியதில்லையே.
வரலாறு நெடுக தன்னை கேள்வி கேட்டவர்களை, அவர்கள் எழுதிய நூல்களோடு சேர்த்து எரிப்பது அவர்களுக்கு வழக்கமான ஒன்றுதானே. சமண, பவுத்தர்களின் இலக்கியங்களும், தத்துவங்களும் மட்டுமா தீக்கரையாயின? அவர்களும்தான்.
உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்? சிவாஜியை சில விஷயங்களுக்குப் பிடிக்கும். ஜெமினியை, கமலை பிடிக்கும். பாலையா,எம்.ஆர். ராதாவைபிடிக்கும், என்றெல்லாம் பட்டியல் சொல்லக் கூடாது. மிக சிறப்பாக, குட் பெர்பாமன்ஸ்தரக்கூடிய ஒரே ஒரு நடிகரைத்தான் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் யாரை சொல்வீர்கள்?
பெண் கல்வி,பெண் உரிமை, ஜாதிய ஒற்றுமை(ஜாதி ஒழிப்பல்ல) பற்றி தீவிரமாக கவிதைகளிலும், கட்டுரைகளிலும் எழுதித் தள்ளிய சுப்பிரமணிய பாரதி, படித்த பெண்கள், இந்து மதத்தைத் தவிர்த்து, கிறித்துவ மதத்தில் நாட்டம் கொள்ளும்போது அல்லது கிருஸ்துவைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கும்போது,
கிறித்துவ பள்ளிகளில் பாதிரிகள் கிருஸ்துவைப் பற்றி போதிக்கும்போதும், ஜாதிய ஏற்றத் தாழ்வுகளுக்குப் பார்ப்பனர்கள்தான் காரணம் என்று சொல்லும்போதும்,
இந்தப் பெண்ணுரிமை சிந்தனையாளர், ஜாதிய ஒற்றுமையாளர்– ஒரு வைதீகப் பார்ப்பனருக்குரிய வெறியோடு பாய்ந்து கிழிக்கிறார்,
நாம் குழந்தைப் பருவத்திலே ஒரு கிறிஸ்துவப் பாடசாலை உபாத்தியருடன் பேசிக் கொண்டிருந்தபோது, வியாஸபகவானைப்பற்றி விவரிக்க நேரிட்டது. அப்போது அந்த உபாத்தியாயர் நம்மை நோக்கி“நோக்கி உனக்குத் தெரிந்த விஷயங்கள் கூடவியாஸருக்குக் தெரியாதே! பூமி தட்டையாக ஒரு பாம்பின் தலைமீது நிற்கிறதென்று வியாஸன் நினைத்து வந்தான். உங்கள் முன்னோர்கள் எல்லாம் அநாகரிக ஜனங்கள்” என்று கூறினார்.
அவர் தெய்வ அவதாரமென்றுதொழும் கிறிஸ்துவும் மஹானிகளென்று கருதும் ஸெயின்ட்பால் முதலிய நூற்றுக்கணக்கான மனிதர்களும் அதே மாதிரிதான் என்பதை அந்த உபாத்தியாயர் மறந்துவிட்டார். இப்படி பட்ட உபாத்தியாயர் கீழ் நமது குழந்தைகளிருக்குமானால், எத்தனை தீமை உண்டாக்க மாட்டது? உபநிஷத்துகளைப் பற்றிப் பாதிரிகள் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களும் நமது இளைஞர்களின் மூளையிலே ஏறும்படி விட்டுவிடுவோமேயானல், நமது நாட்டிற்கு நாமே பரம சத்துருக்களாக முடிவோம்.
கிருஸ்துவப் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்பி சிவாஜியைக்கொலையாளியென்றும், வியாசரை அறிவிலியென்றும், ஸ்ரீ கிருஷ்ண பகவானைத் தூர்த்தனென்றும் அவ்விளைஞர்களைக கற்கும்படி செய்கிற ஒவ்வொரு தந்தையும் புத்திர துரோகியாகிறான். இளைஞர்கள் அவ்வாறே நினைப்புக் கொண்டவர்களாக்கி தமது ஒழுக்கத்திற்கும், அபிவிருத்திக்கும், ஊக்கத்திற்கும் யாரையும் திருஷ்டாந்தமாகச் சொல்ல வன்மையாற்றவர்களாகி, அதுகாரணமாக ஒழுக்கம் முலியவற்றிலே தாழ்வடைந்து போய் விடுவார்களாதலால்மேற்கண்டவாறு தமது புத்திரர்களை மிஷன் பாடசாலைகளுக்கு அனுப்பும் தந்தையர்தேசத் துரோகிகளுமாகிறார்கள். கிருஸ்துமார்க்கத்திலே நாம் அவனாவஸ்யமான விரோதம் கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம்
ஆரியத தன்மையைப் பெரும்பாலுமிழந்து அஞ்ஞானம், மூட நம்பிக்கையென்னும்சேறுகளிலே அமிழ்த்திக் கிடக்ககும் நம்மவர், கிருஸ்துவப் பாதரிகள் நமது முன்னோரைப் பற்றிக் கூறுவதே மெய்யாக இருக்கலாமென்று கிரஹித்துக் கொள்கிறார்கள்.
அறியாமை மிகுந்தஅன்னியர்கள் எழுதி வைத்திருக்கும் வாய் சரித்திரங்கைளக்கழற்றியெறிந்துவிட்டு நமது நாட்டின் தேச பக்தியும் நவீன அறிவும் கலந்துமேலோர்கள் சரியானபடி ஆராய்ச்சிகள் புரிந்து உண்மயான சரித்திரங்களெழுந்தத்தலைப்பட வேண்டும்.
அதற்கிடையே இளைஞர்களின் அறிவையெல்லாம் பாதிரிகள் விஷமாக்கிவிடாதவாறு அவர்களின் பாடசாலைகளை விலக்கி வைக்க முயல வேண்டும். பொதுமானபடி பணம்குவித்து வைத்திருக்கும் மனிதர்கள் பச்சைப்பன் காலேஜ் போன்ற சுதேசியகாலேஜிகளையும் ஸ்கூல்களையும் பலப்படுத்தி பாதரிகளின் பள்ளிக்கூடங்களுக்குநிகராக்க வேண்டும்.
பாரதி பற்றி நாகார்ஜுனனுக்கும் ஏகலைவனுக்கும் நடந்த விவாதம், மிகவும் முக்கியத்துவம் நிறைந்ததாக இருக்கிறது.
பாரதி பற்றிய நம்முடைய கேள்விகளுக்கு முற்போக்கு முகாமை சேர்ந்த பாரதி அபிமானம் கொண்ட அறிவுஜீவிகள், தங்கள் மவுனங்களையே பதில்களாக தருகின்றனர்.
நெருக்கிப் பிடித்துக் கேட்டால், குணா கமல்போல், ‘அபிராமி, அபிராமி’ என்ற பாணியில் ‘காலக்கட்டம், கவிதை` ‘கவிதை, காலக்கட்டம்`என்று சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்கிறார்கள்.
எதையும் விளக்கு விளக்கு என்று விளக்குகிற Intellectuals நம் கேள்விகளுக்கு எந்த விளக்கமும் சொல்லாமல், ஒரு பொதுபுத்தியில் இருந்தே பதில் அளிக்கின்றனர்.
***
ஏகலைவனின் கேள்விகளுக்கு நாகார்ஜுனின் பதில்கள் ஒரு தனிநபரின் பதில்கள் அல்ல. ஒட்டுமொத்த அறிவுஜீவிகளின் அபயக் குரலாகவே நாம் அதை பார்க்கிறோம்.
சில மாதங்களுக்கு முன் எஸ்.வி. ராஜதுரையை ஒரு மேடையில், பாரதி பற்றிய விவாதத்தின் போது, தோழர்கள் கேட்ட கேள்விகளுக்கு, குணா கமல் போல், ‘தெளிவாக` பதில் அளித்திருக்கிறார் ராஜதுரை.
மற்ற அறிவுஜீவிகளைப் போல் பதுங்கி கொள்ளாமல், பாரதி பற்றிய விவாதங்களில் கலந்து கொண்டதற்கும் ஏகலைவனின் பின்னூட்டங்களை பதிப்பித்தமைக்கும் நாகார்ஜுனனுக்கு நம் நன்றிகளை சொல்லிக் கொள்கிறோம்.
நாகர்ஜுனனுக்கும் ஏகலைவனுக்கும் நடந்த விவாதத்தின் முக்கியத்துவம் கருதி http://nagarjunan.blogspot.com/2008/04/blog-post_09.htmlபின்னூட்டங்களை இங்கே தனிபதிவாக வெளியிடுகிறேன்.‘என்னஒருவீரியமிக்கஆண்மை?` -Intellectual approach
அதில் இடம் பெற்ற பின்னூட்டங்களையும் சேர்த்தே வெளியிடுகிறேன்.
-வே. மதிமாறன்
பொய்யன் said…
bharathiyai kelvikkutpaduthi ve. mathimaran enbavar thodarnthu eluthi varugirar. bharathiya janata party endra oru puthakathayum ithu thodarpa eluthi irukkirar. paarthulleerkala, padithulleerkala? ithu patri thangal karuthai ariya avvalai irukkiren
09-Apr-2008 09:02:00
நாகார்ஜுனன் said…
பொய்யன்,
கருத்துக்கள் தமிழில் எழுதினால்தான் இனி வெளியிடப்படும். தமிழில் என்றால் எழுத்து வடிவமும்தான். மற்றவர்களுக்கு ஒரு நீதி, உங்களுக்கு ஒன்று என்பதில்லை.
பாரதியிடம் மட்டுமல்ல, அந்தக்காலகட்டத்தின் எல்லாக்கலைஞர்களிடமும்
சமுதாயத்தின் பழைமையும் புதுமையும் முட்டிமோதுவதில் ஆச்சர்யமில்லை. உதாரணம் – தமிழின் முதல் நாவல் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
வே. மதிமாறன் கட்டுரையை வாசித்திருக்கிறேன். கட்டுரையில் கறாரான அரசியல்-சமுதாயக் கண்ணோட்டம். கருத்துக்களை மாத்திரம் அணுகுகிறது. கவிதையை அணுகும்போது வடிவவியல்-நோக்கு இல்லை. இத்தனை பழைமைநோக்குள்ள பாரதி எப்படி செய்யுளை உடைத்து வசன கவிதை எழுதப்போனார் என்ற கேள்வியைக் கேட்டிருந்தால் வேறு மாதிரி யோசித்திருக்கலாம்.
மேலும் இன்றைய காலகட்டத்தில் எல்லாத்தரப்பு தேசியவாதம், தன்-அடையாள அரசியல் எல்லாமே
சிந்தனை-அமைப்பில் ரொம்பப் பழையதாகிவருகின்றன என்பதையும்
கட்டுரை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
அன்புடன்
நாகார்ஜுனன
09-Apr-2008 11:30:00
Vijay said…
பாரதி குறித்த வே.மதிமாறனின் ஆய்வை முழுமையாக படித்து விட்டு எழுதவும். அரைகுறை அறிவோடு எழுத வேண்டாமே நீர்.
[b]பணக்காரர்களிடமும் பண்டிதர்களிடமும் அடைப்பட்டுக் கிடந்த தமிழ்க் கவிதையை எளிய மக்களிடம் கொண்டு சென்றவன் பாரதி என்கிறார்களோ?[/b]
பொய். பாரதிக்கு முன்பே சித்தர்கள் மக்கள் மொழியில்தான் பாடல்கள் பாடியிருக்கிறார்கள். சித்தர்கள் மொழி மட்டும் எளிமையல்ல அவர்களின் வாழ்க்கையே எளிமையானதுதான். காரணம் அவர்களே எளிய தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்கள்தான்.
பாரதிக்கு முந்தைய நூற்றாண்டில் வாழ்ந்த ராமலிங்க அடிகளின் குரல் ஒரு கலகக் குரல்.
“இராமலிங்க சுவாமிகள் “களங்கமறப் பொது நடனங் கண்டு கொண்ட தருணம்” என்ற பாட்டைத் திரித்துப் பாடியது,
“தாயுமானவர் ஆனந்த களிப்பு மெட்டு, காவடிச் சிந்தில் ஆறுமுகவடிவேலவனே என்ற வர்ண மெட்டு”
“பெரிய புராணத்தில் வருகிற மாடு தின்னும் புலையா என்ற பாட்டின் மெட்டில் பாடியது” என்று பாரதியே அவர்களின் பாடல்களை பயன்படுத்தி இப்படி குறிப்பிட்டுதான் பாடியிருக்கிறார்.
இவர்களிடம் இருந்து வேறுபடக் காரணம், ஆங்கிலம் தெரிந்த பத்திரிகையாளராக பாரதி இருந்ததால் தொழில் காரணமாக ஆங்கில பத்திரிகைகளை படிக்க வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. கவிஞனாகவும் இருந்ததால் அந்தச் செய்திகளை கவிதையாகவும் பாட முடிந்தது.
இதன் காரணமாகதான் அவர் ரஷ்யா பற்றி, பிஜித் தீவைப் பற்றி இன்னும் பல நாடுகளை பற்றியும், அந்த நாட்டின் போராட்டங்களைப் பற்றியும், ஆங்கில இலக்கியங்களையும் குறிப்பிட்டு எழுத முடிந்தது. ஆங்கில கவிதைகளின் தாக்கத்தினால்தான் அவர் கவிதைகளில் ஒரு நவீன தன்மை இருந்ததது.
கவிதைகளையும், கட்டுரைகளையும் ‘அப்டேட்’ செய்வதற்கு அவருடைய பத்திரிகையாளர் பணி அவருக்கு பெரிதும் உதவியது. இதைதான் மதவாதிகள் ‘பாரதி சரஸ்வதியிடம் வரம் வாங்கியவர்’ என்று திரித்து சொல்கிறார்கள்.
இது போக சமஸ்கிருதம் கலந்து எழுதியதாலும், சமஸ்கிருத ஆதரவாளர்கள் அவரை பெரிதும் “புதுமையானவர், இதுவரை தமிழை இவ்வளவு எளிமையாக யாரும் எழுதியதில்லை” என்று திட்ட மிட்டு பாராட்டினார்கள்.
அந்தக் காலததில் இருந்து இந்த காலம் வரை அவர்களிடம்தானே முக்கியமான பத்திரிகைகள் இருக்கிறது, அல்லது பத்திரிகைகளில் முக்கிய பொறுப்புக்களில் இருக்கிறார்கள்.
ஆக பாரதிதான் எளிய மக்களிடம் கொண்டுசென்றான் என்பது உண்மையல்ல. நீதிகட்சியின் ஆட்சிக்கு பிறகுதான் எளிய மக்கள் எழுத படிக்கவே ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அவர்கள் பாரதி கவிதைகளையும் படித்தார்கள், என்பதுதான் உண்மை.
http://mathimaran.wordpress.com
16-Jun-2008 07:46:00
நாகார்ஜுனன் said…
பொதுவான தமிழ்க்கவிதை – வள்ளலார், தாயுமானவர், சித்தர் மரபில் – என பாரதி தொடர்வது பலர் ஏற்கனவே சுட்டிச்சென்றதுதான்.
பாரதி வசன கவிதை எழுதப்போனது ஏன் என்பதைக் கருத்தளவில், செய்தியளவில் வைத்துப்பார்ப்பது போதாது. பாரதியின் வசன கவிதை பற்றி வடிவ-ஆய்வு, அமைப்பியல்-ஆய்வு செய்துபார்க்க வேண்டும்.
ஆங்கிலக்கவிதைகளின் “தாக்கம்” போன்ற பொதுப்புத்தி வரிகள் போதா.
தவிர கவிதை என்பது எளிமைப்படுத்துவதும் அல்ல. எளிய, சாமானிய மக்களும் கவிதையை எளிமைப்படுத்துவோர் அல்லர்.
நாகார்ஜுனன
16-Jun-2008 10:54:00
ஏகலைவன் said…
///இதற்காக சலபதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!////
நீங்கள் மட்டுமா, நாங்கள் கூட உங்கள் ‘சலபதி’யை பாராட்டியே தீரவேண்டும். காரணம், மதிமாறனுடைய பாரதி குறித்த ஆய்வுகளுக்கும்கூட உங்கள் ‘சலபதி’யின் நூல்களும் உதவியிருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
முக்கியமாக, பாரதி பார்ப்பன சங்க மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய செய்திகள் பற்றிய தரவுகள் ‘சலபதி’ அவர்களின் ஆய்வில்தான் இருக்கின்றன.
இதனாலேயே எஸ்.வி.ராஜதுரை போன்ற அறிவுஜீவி!!!! மேதாவிகள், உங்கள் ‘சலபதி’யை இழிவாக விமர்சித்திருக்கிறார்கள்.
அடுத்து வேதநாயகம்பிள்ளை குறித்து,
வேதநாயகம் பிள்ளை, அவருடைய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தமிழின் முதல் நாவல் எனும் பெருமையைத் தங்கியிருந்ததே அதில், தன்னுடைய சாதிக்காகவோ அல்லது தான்சார்ந்த கிறித்தவ மதத்திற்காகவென்றோ தனிப்பட்டு எழுதியிருக்கிறாரா, நாகார்ஜூனன்??
அப்படி கிறித்துவம் சார்ந்து அவர் எழுதியிருந்தாலும் தவறேயில்லை. ஏனெனில் இந்துத்துவ கோரப் பற்களில் அனைத்து சாதியினரும் சிக்குண்டிருந்த காலம் அது. இந்து என்கிற ஒரு பாசிச மதத்தைத் தவிர வேறெந்த மதமும் சாதாரண உழைக்கும் மக்களை சாதியைச் சொல்லி ஒடுக்கியது கிடையாது.
எனவே, அத்தகைய பாசிச இந்து மதத்தை உயர்த்தி எழுதுவதைவிட வேற்று மதங்களைப் பற்றி உயர்வாக எழுதுபவர்கள் எவரேனும் நம்முடைய சமூகத்தில் இருந்திருப்பார்களேயானால் அவர்களை பாரதி அளவுக்குக் கீழானவர்களாக கருதமுடியாது.
பிரெஞ்சுப் புரட்சியையும் செர்பிய விடுதலையையும் சிலாகித்து எழுதிய பாரதிக்கு தோழர்கள் வைக்கும் கேள்வி மிகமிகச் சாதாரணமானது.
இப்படி எல்லாவற்றையும் பாடிய பாரதி, அவனுடைய சொந்த மண்ணைச் சார்ந்த வீரன் கட்டபொம்மனைப் பற்றி ஏன் பாடவில்லை என்பதுதான் அக்கேள்வி. அப்படி கட்டபொம்மனைப் புறக்கனித்த பாரதி, துரோகி எட்டப்பனின் வரலாற்றை எழுதித்தருவதாக சீட்டுக்கவி எழுதியனுப்பி, அந்த அரன்மணை வாயிலில் காத்துக் கிடந்தாரே, அதன் அர்த்தம் என்ன, நாகார்ஜூனன்??? அதுதான் பாரதி சொன்ன தேசபக்தியோ???????
பெண்ணியம் குறித்து ஆவேசமாக எழுதிய பாரதி, தன்னுடைய சமகாலத்தில் சாதித்த டாக்டர் முத்துலெட்சுமி அம்மையாரைப் பற்றி ஒரு வரியில்கூட வேண்டாம், ஒரு வார்த்தையில்கூட, ஒரு எழுத்தில்கூட குறிப்பிடவில்லையே அது ஏன்?
நீங்கள் மதிமாறனுடைய ஒட்டுமொத்த விவாதங்களுக்குக் கூட பதில் சொல்ல வேண்டாம், அவர் தன்னுடைய கட்டுரைகளில் சிலவற்றை இப்போதும் அவருடைய வலைதளத்தில் சிறு சிறு பதிவுகளாக பதிப்பித்து வருகிறார். அவற்றில் கூட நீங்கள் சென்று விவாதிக்கலாம் நாகார்ஜுனன்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
16-Jun-2008 15:32:00
நாகார்ஜுனன் said…
ஏகலைவன்,
நீங்கள்-நாங்கள் என வேறுபடுத்தும் சொற்கள் ஒரு திரட்டல்-உத்தி பழைய உத்தி. அதை விட்டுவிட்டுப் பேசலாம். தவிர, என் பெயரை மூன்றுமுறை எழுதி நிறைய கேள்விக்குறி போட்டிருக்கிறீர்கள். இவையெல்லாம் தேவையில்லை என நினைக்கிறேன்.
பாரதி அன்றைய காலகட்டத்தில் அரசுப்பதவிகளில் பார்ப்பன ஆதிக்கத்தைச் சமன்செய்ய முற்பட்ட
இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைககு எதிராக உரையாற்றியதை சலபதி வெளிக்கொணர்ந்த ஆய்வுமூலம் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அதேபோல “என் பிறப்புக்கேறற வகையில் கடலூர் சிறையில் தொடர்ந்து இருக்கமுடியாது” என பாரதி சென்னை ஆங்கிலேய அரசுக்கு எழுதிய மன்னிப்புக்கடிதத்தையும்.
இவற்றுக்காக சலபதியை எத்தனை பாராட்டினாலும் தகும்தான். பாரதியின் தந்தை எட்டயபுர சமஸ்தான உதவிபெற்றவர், சீட்டுக்கவி விஷயம் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். பாரதி மீதான ஆசிரிய மிகைப்புனைவு சிதறி, அவரை வரலாற்று மனிதராகப் பார்க்க
இந்தப் புதிய விபரங்கள் உதவுவது உண்மையே.
இதேபோல மதிமாறன் கேட்கும் வரலாற்றுக் கேள்விகளுக்கும் பதில் ஒருநாள் கிட்டலாம். ஆனால் கிடைத்ததை வைத்து பாரதி முற்றிலும் சரி அல்லது தவறு என வாதாடுபவனல்லன் நான். மதிமாறன் அந்தப்பாணி. அந்தக்காலகட்டத்தில் இந்த முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். முரண்பட்ட கருத்துக்கள், வடிவங்கள் முட்டிமோதியவர் என்பதான ஒருவித tension-உடன் பாரதியை, ஏன் எவரையும், வாசிக்க நான் விரும்புவேன்.
வேதநாயகம் பிள்ளை, அக்காலப் பெண்விடுதலையை ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா என்ற குழப்பம் அவர் நாவலில் கடைசிவரை சுவாரசியமாக ஒடும். இதைத்தான் குறிப்பிட்டேனே தவிர கிறித்துவத்தை அல்ல.
என் பதிவு பாரதியின் இலக்கியம், கவிதையாக்கம், குறிப்பாக வசன கவிதையாக்கம் அதற்கான ப்ரெஞ்சு மொழிப்புலமை பற்றி நோக்கும் ஒன்றுய உங்களைப் போன்ற விஜய் என்பவரின் கேள்விக்கான என் பதிலும் அது பற்றியதே.
எதிர்கருத்துக்களை எவ்விதத் தயக்கமுமின்றி பதிப்பிப்பதும், முறையாக பதில் சொல்வதுவும் இதுவரை பாரதி பக்தர்கள் யாருக்கும் இல்லாத ஒரு பழக்கம். எஸ்.வி.ராஜதுரை போன்றவர்களே இதுவரை எந்தப் பதிலும் சொன்னது கிடையாது. உங்களுடைய பதில்களில் எனக்கு மாற்றுக்கருத்து இருப்பினும், பதில் சொல்லவேண்டும் என்கிற உமது நேர்மையை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. அந்த வகையில் உங்களைப் பாராட்ட வேண்டும்.
///பாரதி அன்றைய காலகட்டத்தில் அரசுப்பதவிகளில் பார்ப்பன ஆதிக்கத்தைச் சமன்செய்ய முற்பட்ட
இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைககு எதிராக உரையாற்றியதை சலபதி வெளிக்கொணர்ந்த ஆய்வுமூலம் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அதேபோல “என் பிறப்புக்கேறற வகையில் கடலூர் சிறையில் தொடர்ந்து இருக்கமுடியாது” என பாரதி சென்னை ஆங்கிலேய அரசுக்கு எழுதிய மன்னிப்புக்கடிதத்தையும்.///
‘சலபதி’ அவர்கள் வெளிக்கொண்டுவந்த இக்கருத்துக்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். இருப்பினும் பாரதி சாதி சார்பற்றவன்’ என்றும்
‘தான் சார்ந்த பார்ப்பன சாதிக்கு எதிராகவே வாழ்ந்தவன்’ என்றும் தொடர்ந்து பேசுவீர்கள் சரிதானே?!
சரி போகட்டும்….
///பாரதியின் தந்தை எட்டயபுர சமஸ்தான உதவிபெற்றவர், சீட்டுக்கவி விஷயம் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். பாரதி மீதான ஆசிரிய மிகைப்புனைவு சிதறி, அவரை வரலாற்று மனிதராகப் பார்க்க
இந்தப் புதிய விபரங்கள் உதவுவது உண்மையே. ///
உதவி செய்தவன் எவ்வளவு இழிவான துரோகியாக இருந்தாலும் அவனை உயர்த்திப் பேச முனைந்த பிழைப்புவாத அற்பத்தனத்தைத்தான் நீங்கள், ‘பாரதி மீதான ஆசிரிய மிகைப்புனைவு’ என்று குறிப்பிடுகிறீர்களா? அப்பேர்ப்பட்ட ‘ஆசிரிய மிகைப்புனைவு’ சிதறுண்டுதான் அவரை உங்களுக்கு வரலாற்று மனிதராகக் காட்டுவதாகச் சொல்லுகிறீர்கள். அது சிதறுண்ட ரகசியத்தை மட்டும் எனக்குச் சொல்லுங்களேன்.
///இதேபோல மதிமாறன் கேட்கும் வரலாற்றுக் கேள்விகளுக்கும் பதில் ஒருநாள் கிட்டலாம்.///
இது ஆதிசங்கரனின் அத்வைதத்தோடு ஒத்துப் போகிறது நண்பர் நாகார்ஜூனன் அவர்களே!
காலம் விரைவில் கனியலாம் என்ற ஆருடமோ ஜோசியமோ எனக்குத் தேவையில்லை. ஜோசியம் பார்த்துச் சொல்லத்தான் நம்ம ‘ஞாநி’ இருக்கிறாரே போதாதா!
///ஆனால் கிடைத்ததை வைத்து பாரதி முற்றிலும் சரி அல்லது தவறு என வாதாடுபவனல்லன் நான். மதிமாறன் அந்தப்பாணி.///
அது எப்படி உங்களை என்ன கேள்வி கேட்கவேண்டும் என்று எதிரிக்கு நீங்களே அடியெடுத்துக் கொடுக்கிறீர்கள்?
பாரதியை விமர்சித்து எழுதிய மதிமாறன் கிடைத்ததை வைத்துக் கொண்டு எழுதுகிறார் என்றால், பாரதியைப் வானுயரப் புகழ்ந்து பூரிப்பவரெல்லாம் ஆழ்ந்து ஆய்ந்து எழுதுகிறார்களோ?
பாரதியைப்பற்றிய அவ்வளவு ஆழமான படிப்பினை உங்களுக்கு இருக்குமானால் மதிமாறனுடைய எளிய கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டாமென்று உங்களைப் பிடித்து தடுப்பவர் யார்?
///என் பதிவு பாரதியின் இலக்கியம், கவிதையாக்கம், குறிப்பாக வசன கவிதையாக்கம் அதற்கான ப்ரெஞ்சு மொழிப்புலமை பற்றி நோக்கும் ஒன்றுய உங்களைப் போன்ற விஜய் என்பவரின் கேள்விக்கான என் பதிலும் அது பற்றியதே./////
அய்யா, நான் கேட்பது என்னவென்றால், மேலே நீங்கள் பட்டியலிட்டுள்ள, இலக்கியம், கவிதையாக்கம், பிரெஞ்சு மொழிப்புலமை இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு தான் வாழும் சமூகத்துக்கு எதிராக இயங்குபவனை எப்படி பாராட்ட முடியும்?
தங்கக் கத்தியைக் கொண்டு கண்ணைத் துளைத்துக் கொள்ள முடியுமா நண்பரே?
இந்த தொல்லைக்காகத்தான் எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்ற அறிவு ஜீவிகள் எந்த பதிலும் சொல்லாமல் கமுக்கமாக இருந்து விடுகிறார்கள் போலும். உங்களுடைய இத்தகைய பதிலைவிட ராஜதுரையின் பானியே பரவாயில்லையோ என்றே தோன்றுகிறது.
மன்னிக்கவும்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
17-Jun-2008 09:02:00
நாகார்ஜுனன் said…
ஏகலைவன
உங்கள் பதிலில் அய்யா-வைத் தவிர்க்கலாம். என் நேர்மையைப் பாராட்டுவதாகக் கூறி, எஸ். வி. ராஜதுரை, அ. மார்க்ஸ், ஞாநி ஆகியோர் குறித்தெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். அவை பற்றிய முழுவிபரங்கள் எனக்குத்தெரியாது. தெரிந்துகொள்ள இயலவில்லை.
மீண்டும் – என் பதிவைக் கவனமாக நீங்கள் வாசிக்காமல் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறீர்கள்
எனத்தெரிகிறது. பாரதியின் “சார்புநிலைகள்” குறித்த பிரச்னை என் பதிவின் நோக்கமல்ல. அதைப் பதிவில் தொட்டு மாத்திரம் சென்றிருக்கிறேன்.
“அக்கால பிராமணக்குடும்பத்தில் பிறந்த பாரதியைப் பொறுத்தவரை, ஜாதி-அமைப்பைக் கடந்து வாழ முற்பட்டவர் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு என்றாலும் எந்த அளவு இதைத் தொடர்ந்து செய்தார் என்பதைக் கறாராகக் கேள்விகேட்கும் காலம் இது! இந்தப் பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்களை மேலும் அலச, பாரதியின் ஹிந்து கடிதங்கள், கட்டுரைகள் உதவினால் நல்லது.”
இன்றைய பார்வையில் பின்நோக்கிக் காணும்போது, அந்த நாளைய அரசியல்-தொன்மங்கள், சொல்லாடல்களில் இயங்கியோர் பலர். அவர்களில் பாரதியும் ஒருவர் என்ற பொருளில் காண்கிறேன். இங்குதான், அக்காலப் பிரதிகளிலும் இத்தகைய முரண்பாடுகளை வாசிக்கலாம். வரலாற்று மனிதர் என்ற அளவில் பலங்கள், பலவீனங்களுடன் வாழ்ந்தவர் அவர். இதற்கு இனனும் பல விபரங்கள் தேடினால் கிடைக்கலாம்.
அதேவேளை பாரதி சரி அல்லது தவறு என்று ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்து, அதாவது “தாம் வாழ்கிற சமுதாயத்துக்கு முற்றிலும் எதிராக இயங்குபவர்” என்று உங்களைப் போல வாதாடுவது, அவர் பற்றிய முடிவுக்குத் தேவையான தரவுகளை மாத்திரம் எடுத்துக்கொள்வதில் போய் முடியும். ஒருவிதப் பிரச்சாரத்துக்கு உதவும்.
தவிர, நவீன வசன கவிதை என்பது தமிழில் புதிய ஒரு மொழிக்களம். அதைத் திறந்துவிட்டவர் பாரதி, ஒரு நூற்றாண்டுக்காலக் கவிதை-மொழியைத் தீர்மானித்தது அவர் கவிதைகளே. இதற்குச சான்றும் உண்டு. இது எப்படி நிகழ்ந்திருக்கலாம் என்று புதிதாக அனுமானிப்பதே என் பதிவின் நோக்கம். உங்களுக்கு எழுதிய பதிலின் நோக்கமும் அதுவே.
இதையெல்லாம் கவனிக்காதவரை மேலே என்ன என்ன பேச முடியும்!
நாகார்ஜுனன
17-Jun-2008 11:33:00
ஏகலைவன் said…
நாகார்ஜூனன் என்பவர் ஒரு ’so-called intelectual’ என்று அறியப்பட்டவர். அவரா இப்படி எழுதியிருக்கிறார் என்று ஆச்சர்யத்தோடு ஒரு முதிய தோழர் இப்போதுதான் கேட்டுச் சென்றார்.
முன்னாள் கவர்ச்சி நடிகை ஜெ. ஜெயலலிதா அவர்களின் நடிப்பியல் அழகினைக் கொண்டு அவரை வரலாற்றுப்பெண்மணியாகச் சித்தரிக்கத் துவங்கினார்கள், அவருடைய அரசியலின் துவக்க காலத்தில்.
ஜெயலலிதா வேறெவரையும் விட வானளாவ உயரமுடிந்தது இப்படியான பிரச்சாரங்களால்தான். இப்போது நாம் என்ன செய்யவேண்டுமென்றால் அவருடைய சினிமாவை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தாலே போதுமானது. அதையும் மீறி அவருடைய அரசியல் நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கக்கூடாது. அப்படியே விமர்சித்தாலும் அவற்றில் புகழ்ந்து இட்டுக்கட்டிக் கூறுமளவுக்கு ஏதேனும் கிடைத்தால் புகழலாம். இல்லாவிட்டால் அல்லது அவருக்கு எதிர்வினையான எதையும் நாம் வெளியே பேசுவது தவறு.
அவருடைய அரசியல் களியாட்டத்தில் நானோ என் மக்களோ பாதிக்கப்பட்டிருந்தால் கூட அவருடைய அழகியலை மட்டும் கருத்தில் கொண்டு விட்டுவிடவேண்டும்.
அவ்வாறு மீறி ஏதேனும் பேச எண்ணினால் அவரைப் பற்றிய அனைத்துத்தரவுகளையும் என்னுடைய ஒட்டுமொத்த வாழ்நாளையும் செலவழித்து தேடியலைந்து குப்பைமேடுகளைக் களைந்துதேடி எடுத்துவைத்துக் கொண்டுதான் பேச வேண்டும். அதுதான் நீங்கள் பாரதி விசயத்தில் சொல்ல வரும் நியாயம் போலும்!
என்னை நேரடியாக பாதிக்கும் விசயத்தை நோக்கி நான் கேள்வி கேட்டால், அட என்னுடைய சாதிக்காரனை ‘ஈனப்பறையன்’ என்று எழுதிவைத்துச் சென்றவனை நான் கேள்விகேட்டு அம்பலப்படுத்துவதற்கு, எனக்கு வேறு எந்தத் தரவுகள் வேண்டும்?
உங்கள் பதிவுக்கு சம்பந்தமுள்ள விசயத்தைப் பற்றி மட்டும்தான் அனைவரும் விசாரிக்க வேண்டுமா? அப்படியானால், உமது பதிவு முழுதும் நிறைந்துள்ள பாரதியைப் பற்றி நான் பேசுவது தவறு என்று எனக்குத் தோன்றவில்லை.
பாரதி என்கிற ‘அபினை, கஞ்சாவை, அல்லது மதிமாறன் பாணியில் சொல்வதானால் லாகிரிவஸ்து’வை வரலாற்று மனிதர் என்று சோடனை செய்து கூவிக்கூவி விற்பவர்களிடம், அதனை அம்பலப்படுத்தி கேள்வி கேட்காமல் “எனக்கும் ஒரு பாக்கெட் கொடுங்க” என்று கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டுமா?
தோழமையுடன்,
ஏகலைவன்.
17-Jun-2008 16:36:00
நாகார்ஜுனன் said…
கிடைப்பதை வைத்து தாராளமாகச் செய்யலாம். யாருடைய அனுமதியும் தேவையில்லை. அடுத்தது கிடைக்கும்போது உங்கள் கேள்வியை சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளலாம் நீங்களே.
இங்கே பதிவின் பிரச்னை அரசியலல்ல, புதுக்கவிதையின் தோற்றம் பற்றியது. அவ்வளவே.
இதற்குமேல் என்னிடம் பதிலில்லை.
இந்த ‘அறிவுஜீவி’ நாகார்ஜூனன் தன்னால் இயன்றவரை அனைத்து கேள்விகளையும் பதிப்பித்து விவாதிக்கத்தான் முயன்றார் என்ன செய்வது, மேலும் விவாதத்தைத் தொடர அவருக்குத் தரவுகள் போதவில்லை என்று கருதுகிறேன். தரவுகளுடன் வரட்டும் தொடர்ந்து விவாதிப்போம்.
நான் இறுதியாக அனுப்பிய ஒரு சிறிய பின்னூட்டத்தையும் அவர் பதிப்பிப்பார் என்றுதான் கருதினேன். பதிப்பிக்கவில்லை. அதனையும் இங்கே பதிகிறேன்.
உங்கள் பதிலில் அய்யா-வைத் தவிர்க்கலாம். என் நேர்மையைப் பாராட்டுவதாகக் கூறி, எஸ். வி. ராஜதுரை, அ. மார்க்ஸ், ஞாநி ஆகியோர் குறித்தெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். அவை பற்றிய முழுவிபரங்கள் எனக்குத்தெரியாது. தெரிந்துகொள்ள இயலவில்லை.///
நண்பரே, வயதில் பெரியவர் என்பதனால் மரியாதையின் நிமித்தமாகத்தான் நான் அவ்வாறு அழைத்தேன். நான், நாகார்ஜூனன் அய்யர் என்று குறிப்பிட்டிருந்தால் தான் தவறு. நாகார்ஜூனன் அய்யா என்றுதானே குறிப்பிட்டிருந்தேன்!!!
இதுக்கெல்லாமா விவாதிக்க முடியும்? என்னங்க நீங்க.
ஏகலைவன்.
June 17, 2008 8:58 PM
*******************************************************************************
“அழகியல் என்பது போதை” போன்ற
அதே வாதங்கள்தாம். வசன, புதுக்கவிதை வடிவத்தின் தோற்றம் குறித்து இனி எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த விவாதத்தில் புதிய கருத்துகள் வந்தால் வெளியிடலாம். அதனால் ஏகலைவனின் ஒரு பின்னூட்டத்தை வெளியிடவில்லை. மன்னிக்கவும்.
நாகார்ஜுனன
18-Jun-2008 11:25:00
ஏகலைவன் said…
///இந்த விவாதத்தில் புதிய கருத்துகள் வந்தால் வெளியிடலாம். அதனால் ஏகலைவனின் ஒரு பின்னூட்டத்தை வெளியிடவில்லை. மன்னிக்கவும்.
நாகார்ஜுனன்///
அய்யா, ‘மன்னிக்கவும்’ என்கிற வார்த்தையைத் தவிர்த்திருக்கலாம். இனி திருத்திக் கொள்ளுங்கள். உங்களைப் போன்ற பெரியவர்களிடமிருந்து இத்தகைய வார்த்தைகளைப் பெறும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. எனவே, தயவு செய்து பரிசீலிக்கவும்.
விரைவில் பாரதி குறித்த விரிவான விவாதத்தை முன்னெடுக்கும் வகையில் ஒரு பதிவை நீங்கள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன், காத்திருகிறேன்.
ஆனால், இந்த முறை நடைபெற்ற மேற்கண்ட விவாதங்களில் நீங்கள் முன்வைத்த கருத்துக்கள் முழுமையானவை அல்ல. பாரதி என்ற ஒட்டுமொத்த பிம்பம் குறித்த உமது பதில்கள் வெறும் அழகியலுக்குள் பதுங்கிக் கொண்டது.
இதற்கான சரியான மறுப்புரையை தங்களிடமிருந்து நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
ஆனந்தவிகடனுக்கு எதிராக நீங்கள் ஆதரவளித்த எழுத்தாளர் ஜெயமோகன் போன்றவர்கள் முதல் வளர்மதி இன்னபிற, உங்கள் தளத்தோடு / படைப்புலகத்தோடு தொடர்புடைய எழுத்தாளர்கள் இவ்விவாதத்தில் பங்கெடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், யாரும் வரவில்லை. இதுவும் எனக்கு பெருத்த ஏமாற்றம்தான்.
தொடர்ந்து பேசுவோம், கட்டில்லாமல் விவாதிப்போம். நன்றி!
பாரதியினை நீங்கள் நிராகரிக்கிறீர்கள்.நாகார்ஜுனன் நிராகரிக்கவில்லை.முரண்பாடுகளை புரிந்து கொள்ள
முயல்கிறார்.அவர் கோயில் கட்டி கும்பிடச் சொல்லவில்லை.
நீங்கள் பெரியாரைக் கும்பிடுகிறீர்கள்.பெரியார் மீதும் விமர்சனம்
உண்டு. அவர் சிறுபான்மையினருக்கு எதிராக அறிக்கை விட்டவர்.
கீழ்வெண்மணி படுகொலைக்குப் பின் விட்ட அறிக்கையில் கம்யுனீஸ்ட் கட்சிகளை தடை செய்யவேண்டுமென்றவர்.
1965ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது அவர்
விட்ட அறிக்கைகளை விவாதிக்கலாமா. பெரியாருக்கும்
முன்பு பாரதி முற்போக்கான சிந்தனைகளை வைத்தவன்,
அதே சமயம் அவன் எழுத்துக்களில் பிற்போக்கு சிந்தனைகள்,
மதவாதம் இருந்திருக்குமெனில் அதற்காக விமர்சிக்கலாம்.
பெரியாரை முற்றிலுமாக விமர்சனமின்றி ஏற்போம், பாரதியை
முற்றிலுமாக நிராகரிப்போம் என்பது உங்கள் நிலைபாடு. இதை ஏற்க இயலாது.
மதிமாறன் போன்றோர் பல முறை விளக்கிய பிறகும் இவர்கள் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்களோ தெரியவில்லை. பாரதி என்ற கவிஞனின் மீது இவர்களுக்கு எந்த காழ்ப்பும் கிடையாது. ஆனால் பாரதியை முற்போக்கின் முகமாக சித்தரிக்கிற மோசடியைத்தான் இவர்கள் தோலுரிக்கிறார்கள்.
பாரதிய ஜனதா பார்ட்டி நூலுக்கு திரு. பெரியார்தாசன் அவர்கள் எழுதிய ஏற்புரையில், அந்நூலைப் படித்த பிறகு பாரதியை பாரதியாகப் பார்க்கிற தெளிவைப் பெற்றிருப்பதாக எழுதியிருப்பார். அதுதான் மதிமாறன் போன்றோரின் நோக்கமாக இருக்க முடியும்.
பெரியார் யாருடைய நிலைமையை உயர்த்தப் பாடுபட்டாரோ அவர்கள்தான் இன்று அவரைக் கொண்டாடி வருகின்றனர். அதே போல பாரதி யாரை உயர்வாக நினைத்து எழுதினாரோ அவர்கள் மட்டும் பாரதியைக் கொண்டாடுவதில் யாருக்கும் எந்த வருத்தமும் கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பாரதி வழிபாட்டை வெற்றிகரமாக மற்றவர்கள் மீது திணிக்கவும் செய்தாகிவிட்டது. அந்த பாரதி வழிபாட்டை அனைவருக்கும் பொதுவானதாக திணித்ததைத்தான் இவரைப் போன்றோர் கண்டிக்கின்றனர்.
மதிமாறனைப் பார்த்து ஒருவர், பாரதியைப் போல எதுகை, மோனை, சீர், தளை, ஆகியவை தட்டாமல் எழுத முடியவில்லையே என்ற பொறாமையா என்று கேட்கிறார். வடிவேலுவின் நகைச்சுவையை விட இது பெரிய நகைச்சுவையாக இருக்கிறது. பாரதியை மற்றவர்கள் எழுத்து, அசை, சீர், தளை இவற்றுக்காக மட்டும் படிப்பதோடு நிறுத்திக்கொண்டிருந்தால் பாரதிய ஜனதா பார்ட்டி என்ற நூலை உருவாகிற அவசியம் வந்திருக்குமா?
பெரியார்தாசன் அவர்கள் சொன்னதைப் போல பாரதியை பாரதியாக மட்டுமே பாருங்கள். பாரதியின் பிம்பத்தில் மார்க்ஸையோ, பெரியாரையோ தேடாதீர்கள். நன்றி.
கீழ்கண்ட இந்த பின்னூட்டம், மிஸ்டர்!!! கிருட்டிக் மாமா அவர்களின் தளத்தில் நான் வெளியிட்ட பின்னூட்டம். மாமா தனது பூநூல இத்தளம் வரை விரித்து வலைக்க முயல்வதால், அதனை இங்கேயும் பதிவிடுகிறேன்.
இதப் படிக்கிறவன் நிச்சயமா பாரதியப் பத்தியும், ஒங்க பார்ப்பனீயத்தைப் பற்றியும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துடுவான். மதிமாறன் எழுத்துக்களுக்குக் கூட மசியாதவர்கள், ஒன்னோட இந்த வசைபாட்டைப் படிக்க நேர்ந்தால், பார்ப்பனியத்த காறித்துப்பாம விடமாட்டாங்கடா அம்பிகளா!
நாங்கூட “என்னாடா இந்த மதிமாறன் பாரதிய விட்டுட்டு வேறு பல உருப்படியான சமூக விசயங்களப் பத்தி எழுதுனா நல்லாயிருக்குமே”ன்னெல்லாம் யோசிச்சிக்கிட்டு இருந்தேன். இப்ப உன்னோட இந்த வசைமொழிகளைக் கேட்டபிறகுதான் தெரியுது,அவரு எழுதிவருவது மிகவும் அவசியமானது என்று. ஏனெனில், மதிமாறனால் அறுபடுவது பாரதியின் பூநூல் மட்டுமல்ல, அவன் சார்ந்த ஒட்டுமொத்த பார்ப்பன பூநூல்களும்தான். உண்மையிலேயே இதுதான் பெரியாரின் பாணி.
மதிமாறனுக்கு வசைபாடி இவ்வளவு பெரிய பதிவ எழுத முடிந்த உன்னால, பாரதியின் புகழ் பாடி அல்லது பாரதி களங்கமற்றவன் என்பதனை நிரூபிக்கும் வகையில் எதையும் எழுத முடியாமல் போனது ஏண்டா அம்பி?
அதவிட்டுப்புட்டு, இங்கவந்து இப்படி ‘அது’ அறுந்த பன்றி மாதிரி கத்துறத விட்டுப் புட்டு எதையாவது உருப்படியா எழுதி விவாதிக்க வாங்கடா அம்பிகளா?
எனது தளத்தைப் பார்வையிட்டமைக்கும் பின்னூட்டத் தகவலுக்கும் மிக்க நன்றி!
இவர்கள் இவ்வாறு அவதூறு பேசுவதுதான் மதிமாறன் உழைப்புக்கு கிடைத்த விருதுகள் போன்றது. சற்றே நினைத்துப் பாருங்களேன், பாரதியின் பார்ப்பன சார்புத்தன்மை இன்றுவரை தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்கிறதல்லவா?! இதுபோன்ற அம்பிகளின் வாயால்.
இவர்கள் வாய்திறந்து பேசப் பேச அம்பலமாகி சந்திசிரிப்பது பாரதிதான்.
////பெரியாருக்கும்
முன்பு பாரதி முற்போக்கான சிந்தனைகளை வைத்தவன்,////
பெரியார் வலியுறுத்திய முற்போக்கு சிந்தனைகளைத்தான் பாரதியும் முன்வைத்தான் என்பது உண்மையானால், பெரியார் உங்களால் இகழப்படுவதும் அதே விசயத்திற்காக இயங்கிய பாரதி உங்களால் வானளாவப் புகழப்படுவதும் ஏன்?
பாரதி வைத்த முற்போக்கு என்பது பார்ப்பன கபட நாடகம் என்பதற்கு, உங்களைப் போன்ற அம்பிகளின் அங்கலாய்ப்பே சாட்சியாக அமைகிறது.
////பெரியாரை முற்றிலுமாக விமர்சனமின்றி ஏற்போம், பாரதியை
முற்றிலுமாக நிராகரிப்போம் என்பது உங்கள் நிலைபாடு. இதை ஏற்க இயலாது.////
பெரியாருடைய வெற்றியே அவர் விமர்சனங்களை வெளிப்படையாக எதிர்கொண்டு பகிரங்கமாக பதிலளித்ததில்தான் இருக்கிறது.
பாரதியப் பத்தி கேள்வி கேட்டா, அதனை தக்க முறையில் மறுக்காமல் பெரியாரைக் காட்டுவதுதான் பார்ப்பனீய பாணி.
வெண்மணி சம்பவத்தில், பெரியார் வலியுறுத்திய சாதியக் கண்ணோட்டத்தை மறுதலித்து, வர்க்கப் போராட்டமாக சித்தரித்த போலி கம்யூனிஸ்டுகள், அப்போராட்டங்களில் பலியிட்டது 44 தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் உயிரைத்தான். அங்கு குடிசையில் வைத்து கொளுத்தப்பட்ட 44 பேரில் தாழ்த்தப்படவரல்லாத வேற்று சாதியைச் சேர்ந்தவர் ஒருவர்கூட இல்லாமல் போனது எதனால்?
அது வர்க்கப் போராட்டமாக சொல்லப்ப்பட்டாலும் நடந்தது என்னவோ ஒரு சாதியை மையப்படுத்தித்ய கொடுமைகள்தான். அந்த சம்பவம் நடந்து முடிந்த அன்று கோபக் கொந்தளிப்பில் இருந்த இலட்சக் கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள், ஆதிக்கசாதி வெறியனுக்கு எதிராக ஆயுதமேந்தத் திட்டமிட்டபோது, அவர்களை மட்டுப்படுத்தி, அவர்களது போராட்டத்தை மழுங்கடித்தது யார் தெரியுமா? அப்போராட்டத்தை வர்க்கப் போராட்டமாகச் சித்தரித்து தலைமைதாங்கிய போலி கம்யூனிஸ்டு கட்சியான சிபிஎம். (ஆதாரம்: ‘கீழைத்தீ’ பின்வெண்மணி நாவல் – எழுதியவர் பாட்டாளி)
போலிகளின் இத்தகைய முடிவு ஆதிக்க வெறிபிடித்த 44 பேர்களைக் கொண்ற கொடூர கொலைகாரன் கோபாலகிருஷ்ணநாயுடுவுக்குச் சாதகமான முடிவு. அதனைக் கண்டிக்கும் வகையில்தான் பெரியார் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் வழிக் கல்வி வேண்டும் என்ற கோரிக்கையை ஒவ்வொரு ஆண்டும் கோரிக் கொண்டு இருக்கும் போதே, சமஸ் கிருதத்தில் நிறைய மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி, ஊக்கப் படுத்துகிறார் ஒரு பச்சைத் தமிழர். யார் அந்தப் பச்சை?
ஜெயேந்திர சரஸ்வதி.
பிறகு சமஸ்கிருதத்தின் மேன்மைகளைப் புகழ்ந்து தமிழில் பேசுகிறார். தமிழில் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள்தானே. ஆகவே, அவர் பச்சைத் தமிழராகிறார்.
சரி, அதெப்படி இந்துக்களில், தமிழர்களில் பார்ப்பனர்களுக்கு மட்டும் சமஸ்கிருதம் முக்கிய மொழியாக இருக்கிறது?
ஒரு வேளை இது தமிழர்களுக்கான சிறப்புத் தகுதியோ?
தமிழ்நாடு முழுவதும் இருக்கிற தமிழர்கள், வட்டார வழக்கு பேசுகிறார்கள். குடும்பத்திற்குள் தெலுங்கும், வெளியில் தமிழும் பேசுகிற தமிழர்களும் வட்டார வழக்கைத் தெளிவாகப் பேசுகிறார்கள்.
கோவை, மதுரை, திருநெல்வேலி, நகர்கோவில் என்று தமிழகமெங்கும் பரவலாக வாழுகிற ‘பச்சைத் தமிழர்கள்’ வாயில் மட்டும் வட்டார வழக்கு வர மறுக்கிறதே ஏன்?
சொல்லி வைத்தாற்போல தமிழகம் முழுக்க, எல்லா பச்சைத் தமிழர்களும், ‘ஸ்நானம், ஜலம், ஆத்துக்கு, என்று பேசுகிறார்களே, இந்த ‘நெட்வொர்க்’ அவர்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமாயிற்று? சமஸ்கிருதம் எப்படிப் புனிதமாயிற்று?
‘பேசிய வார்த்தைகளைவிட, பேசாத வார்த்தைகளுக்கே மரியாதை அதிகம். மவுனம் ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லும்’ என்று இலக்கிய வாதிகள் அவிழ்த்து விடுவார்களே, அப்படித்தான் பேசுகிற தமிழைவிட பேசாத சமஸ்கிருதம் உயர்வான மொழியானதா?
இருக்கலாம்.
முற்போக்கு மற்றும் அறிவு ஜீவிகளின் சுப்ரீம் கோர்ட்டான ‘படுபச்சைத் தமிழன்’ மகாகவி பாரதி சொல்கிறார்.
‘‘நமது முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றி நாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்வோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷையென்கிறோம்.’’
பாரதியின் கூற்றுப்படி பார்த்தால், பச்சைத் தமிழன் ஜெயேந்திர சரஸ்வதி சமஸ்கிருதத்திற்கு சிறப்பு செய்தது சரிதானே! சரிதானா?
முற்போக்கு ஆய்வாளர்கள் இதைக் கொஞ்சம் ஆய்ந்து சொல்லட்டும். சொல்வார்களா?
இந்து மதத்திற்குள் ஜாதி இருக்கிறது அல்லது ஜாதிதான் இந்து மதமாக இருக்கிறது. அதற்குள் சூத்திரன், பஞ்சமன் என்ற இழிவுகள் இருக்கின்றன. சூத்திரன் என்ற இழிவை அடையாளப்படுத்திக் காட்ட, ‘இன்னதுதான்’ என்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது.
பார்ப்பன மோகியாகவும், பார்ப்பன சடங்குகளைப் பின்பற்றி நடந்து கொள்வதையும், சுயஜாதி பிரியத்தையும் சூத்திர இழிவாகக் கொள்ளலாம்.
ஆனால், பஞ்சமர் என்று சொல்லுகிற பிரிவுகளைக் கண் திறந்து பார்த்தாலோ, கண்ணை மூடிக் கொண்டு நினைத்தாலோ & தீண்டாமை என்கிற இழிவு தெளிவாகத் தெரியும். புரியும். இப்படி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிற தீண்டாமையை ஒழிக்க முடியாதா?
‘முடியும்’ என்றது கிறிஸ்துவ மதம். ஆனால், ‘எல்லோரையும் கிறிஸ்தவர்களாக மாற்றிவிட வேண்டும்’ என்ற பேராசையால், இந்து மதத்திற்கு ‘ஞானஸ்நானம்’ செய்து கொண்டது கிறிஸ்துவ மதம். அதனாலேயே ஏசுவை கும்பிடும் இந்துக்களாகவே இருக்கிறார்கள் கிறிஸ்துவர்கள்.
விளைவு, ஜாதிவெறி தலைவிரித்தாடுகிறது தீண்டாமை கொடி, திருவிழாக் காலத்து மாதா கோயில் கொடியை விட உயரத்தில் பறக்கிறது. ஆம்.ஜாதி அடையாளம் ஒழிந்தால்தான், ஜாதி இழிவு ஒழியும்.
இன்று, இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் பாரம்பரியமாக உள்ளவர்கள் இரண்டு பிரிவு மக்கள்:
1.தலித் மக்கள் 2. முஸ்லீம்கள்.
குறிப்பாக பிராந்திய மொழி பேசும் முஸ்லிம்கள், இந்து மத எதிர்ப்புணர்வுக்காகவே மதம் மாறியவர்கள். இவர்கள் முஸ்லிம்களாக மதம் மாறிய பின் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு மாறினார்கள் என்று சொல்ல முடியாது. மாட்டிறைச்சி உண்ணும் பழக்க முடையவர்களே முஸ்லிம்களாக மாறியிருக்கிறார்கள். அப்படியானால் யார் அவர்கள்?
தாழ்த்தப்பட்ட மக்கள் தானே!
வெள்ளாள கிறிஸ்துவர், கிறிஸ்துவ உடையார், கிறிஸ்துவ தேவர், நாடார் கிறிஸ்துவர், வன்னிய கிறிஸ்துவர் இவர்களுக்குக் கீழே தலித் கிறிஸ்துவர். இப்படியாக கிறிஸ்துவ மதம். ஜாதியையே தன் உருவமாகக் கொண்டது இந்து மதம்.
இந்த இந்தியச் சூழலில், நேரடியான ஜாதி அடையாளங்கள் அற்று இருக்கிறது இஸ்லாம். எப்படி அவர்களுக்கு மட்டும் இது முடிந்தது?
சுயம்பு சிந்தனையாளர்கள் இது குறித்துச் சிந்திப்பார்களா? சிந்தித்த பிறகு அதை இந்த உலகிற்கு அறிவிப்பார்களா?
‘மடாதிபதிகளே! நாடடுக்கோட்டைச் செட்டிகளே! பணத்தை வாரிச் செலவிடுங்கள். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாகும் கைங்கர்யம்’ என்று வர்ணிக்கிறார்.
ஆனால்,
அதைச் செயலில் செய்த நீதிக்கட்சிக்காரர்களை தேசத் துரோகிகள் என்கிறார். நீதிக்கட்சி அரசு பொறுப்பேற்றவுடன்,
* ஆதிதிராவிடர்களுக்கு என்று மட்டுமான மிகப்பலவான பள்ளிகளை உருவாக்கலும் நடத்தலும்.
* ஆதிதிராவிடர்களுக்கு தொழிற்கல்வி அளிப்பதில் விவசாயத்துறை, கல்வித்துறை இரண்டும் தனியார் துறையில் நல்ல போட்டியுடன் நடைபெறும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதை ஊக்குவித்தல்.
* கூட்டுறவு இயக்கத்தை ஆதிதிராவிடர்களிடையே ஊக்குவித்தல்.
* நீர் வசதியை மேம்படச் செய்தல்.
* நிலங்கள் வழங்குவதை விரைவுபடுத்தல்.
* மதுவிலக்கை ஊக்குவித்தல்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலங்கள்:
* நிலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் அமர்த்தப்படுகிறார்கள். அப்போது தொல்லைகள் ஏற்படுகின்றன. இவற்றை நீக்க லேபர் கமிஷனரால் கூறப்பட்டு ரெவீன்யூ போர்டினால் பரிந்துரைக்கப்பட்டவை இவை:
நிலம் ஒரு கூட்டு அமைப்புக்குக் கொடுக்கப்படவேண்டும். அவ்வமைப்பு மூலதனம் வழங்க வேண்டும். சாதி மக்களிடமிருந்து எழும் எதிர்ப்பைச் சமாளிக்க, ஆதி திராவிடர்களுக்கு உதவ வேண்டும். நிலம் வழங்கப்பட்ட ஒரு உறுப்பினருக்கு நிலத்தின் மீது ஈடுபாடு கொள்ளச் செய்யும்போது, அந்தச் சொத்தை அவர் அடமானம் வைக்க ஒப்புதல் அளிக்கக் கூடாது. அவ்வாறே தாழ்த்தப்பட்டோருக்காகச் செயலாற்றும் மிஷனரிகள், பொது நல அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளுக்கு பி.எஸ்.ஓ. 15படி அவர்களுக்கு நிலங்களை ஒதுக்குவதில் மறுப்பதற்கில்லை என அரசு ஆணை பிறப்பித்தது. இச்செய்திகள், 11.08.1920 நாளிட்ட 1934 ஆம் எண் ஆணையில் காணப் பெறுவன.
* வேளாண்மைக்காக ஏராளமான நிலங்கள் இருக்கும் சிற்றூர்களில் ஆதிதிராவிடர்கள் வேளாண்மை செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட பகுதி நிலங்களை அவர்களுக்காக ஒதுக்குதல்; மற்ற சிற்றூர்களிலும் தேவை என் மாவட்ட ஆட்சியாளர் எண்ணுவாரானால் இவ்வாறு செய்யலாம்.
* எண்ணற்ற புறம்போக்குப் பகுதிகளோ, அளக்கப்படாது உள்ள நிலங்களோ அயனுக்கு மாற்றப்படும்போது, எடுத்துக்காட்டாக ஒதுக்கப்பட்ட காடுகள் அழிக்கப்படும் போது, ஆதிதிராவிடர்களின் இன்றைய தேவைகளும் எதிர்காலத் தேவைகளும் குறித்து ஆராயலாம்.
* இந் நிலங்களைப் பெறுபவர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கன்றி மற்றவர்களுக்கு மாற்றப்படாதவாறு நிலங்கள் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
* நிலத்தைப் பெறுபவர்கள் கட்டணம் செலுத்த முடியாதபடி மிக ஏழையராக இருப்பின், வழங்கப்படும் நிலங்களில் உள்ள மரங்களின் மதிப்பைத் தள்ளுபடி செய்யவோ குறைக்கவோ செய்யலாம். நில அளவைக்கான கட்டணமும் இவ்வாறு செய்யப்படலாம். – இத்தகவல்கள் 16.12.1921 நாளிட்ட 2815 எண் ஆணையில் உள்ளன.
(முனைவர் பு. ராசதுரை எழுதிய ‘நீதிக் கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக’ என்ற நூல்)
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்லாமல் குறவர், மீனவர், கள்ளர் சமுதாய மக்களுக்குமு நறைய திட்டங்கைள உருவாக்கித் தந்திருக்கிறது நீதிக்கட்சி அரசு.
இந்த நீதிக்கட்சிக் காரர்களைத்தான் தேசத் துரோகிகள் என்கிறார் நம் வரகவி. அப்படியானால் பாரதி பார்வையில் தேசாபிமானிகள்?