இந்து மதத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட கிறித்துவம்
இந்து மதத்திற்குள் ஜாதி இருக்கிறது அல்லது ஜாதிதான் இந்து மதமாக இருக்கிறது. அதற்குள் சூத்திரன், பஞ்சமன் என்ற இழிவுகள் இருக்கின்றன. சூத்திரன் என்ற இழிவை அடையாளப்படுத்திக் காட்ட, ‘இன்னதுதான்’ என்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது.
பார்ப்பன மோகியாகவும், பார்ப்பன சடங்குகளைப் பின்பற்றி நடந்து கொள்வதையும், சுயஜாதி பிரியத்தையும் சூத்திர இழிவாகக் கொள்ளலாம்.
ஆனால், பஞ்சமர் என்று சொல்லுகிற பிரிவுகளைக் கண் திறந்து பார்த்தாலோ, கண்ணை மூடிக் கொண்டு நினைத்தாலோ & தீண்டாமை என்கிற இழிவு தெளிவாகத் தெரியும். புரியும்.
இப்படி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிற தீண்டாமையை ஒழிக்க முடியாதா?
‘முடியும்’ என்றது கிறிஸ்துவ மதம்.
ஆனால், ‘எல்லோரையும் கிறிஸ்தவர்களாக மாற்றிவிட வேண்டும்’ என்ற பேராசையால், இந்து மதத்திற்கு ‘ஞானஸ்நானம்’ செய்து கொண்டது கிறிஸ்துவ மதம். அதனாலேயே ஏசுவை கும்பிடும் இந்துக்களாகவே இருக்கிறார்கள் கிறிஸ்துவர்கள்.
விளைவு, ஜாதிவெறி தலைவிரித்தாடுகிறது தீண்டாமை கொடி, திருவிழாக் காலத்து மாதா கோயில் கொடியை விட உயரத்தில் பறக்கிறது.
ஆம்.ஜாதி அடையாளம் ஒழிந்தால்தான், ஜாதி இழிவு ஒழியும்.
இன்று, இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் பாரம்பரியமாக உள்ளவர்கள் இரண்டு பிரிவு மக்கள்:
1.தலித் மக்கள் 2. முஸ்லீம்கள்.
குறிப்பாக பிராந்திய மொழி பேசும் முஸ்லிம்கள், இந்து மத எதிர்ப்புணர்வுக்காகவே மதம் மாறியவர்கள். இவர்கள் முஸ்லிம்களாக மதம் மாறிய பின் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு மாறினார்கள் என்று சொல்ல முடியாது. மாட்டிறைச்சி உண்ணும் பழக்க முடையவர்களே முஸ்லிம்களாக மாறியிருக்கிறார்கள். அப்படியானால் யார் அவர்கள்?
தாழ்த்தப்பட்ட மக்கள் தானே!
வெள்ளாள கிறிஸ்துவர், கிறிஸ்துவ உடையார், கிறிஸ்துவ தேவர், நாடார் கிறிஸ்துவர், வன்னிய கிறிஸ்துவர் இவர்களுக்குக் கீழே தலித் கிறிஸ்துவர். இப்படியாக கிறிஸ்துவ மதம்.
ஜாதியையே தன் உருவமாகக் கொண்டது இந்து மதம்.
இந்த இந்தியச் சூழலில், நேரடியான ஜாதி அடையாளங்கள் அற்று இருக்கிறது இஸ்லாம்.
எப்படி அவர்களுக்கு மட்டும் இது முடிந்தது?
சுயம்பு சிந்தனையாளர்கள் இது குறித்துச் சிந்திப்பார்களா? சிந்தித்த பிறகு அதை இந்த உலகிற்கு அறிவிப்பார்களா?
பார்ப்போம்.
*
எழுச்சி தலித் முரசு ஆகஸ்ட் 2002 ல் எழுதியது.
தொடர்புடையவை:
தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் ஜாதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் வட இந்தியாவில் மற்றும் பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் தற்போதும் ஜாதிப்பிரிவினை உள்ளது. 99% முஸ்லிம்களை கொண்ட பாகிஸ்தானில், இன்றும் அந்தந்த ஜாதியை சேர்ந்தவர்களுக்கிடையில் திருமணம் நடப்பது சர்வசாதாரணம். எப்படியிருந்தாலும் அவர்களும் இந்திய மரபில் வந்தவர்கள் தானே. மேலும் சரித்திர சான்றுகளின் படி, பாகிஸ்தானில் பெரும்பாலான உயர்சாதியினர்(பிராமணர்கள் உட்பட) முஸ்லிமாக மாறியுள்ளனர். அதற்குமாறாக பங்களாதேஷில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் பெருமளவில் இஸ்லாமியராகினர்.
நல்ல கேள்வி தான். ஆனால் இந்தக் கட்டுரையிலேயே கேள்விக்கான பதிலும் உள்ளது. சாதிப் பிரிவுகள் மறைந்து, மக்கள் சமத்துவமாக வாழ முயற்சி செய்யும் நிலையில், சாதி ஆராய்ச்சி என்பது, மனதிற்க்கு நெருடலான விஷயம் ஆகும். ஆனாலும், சாதி ஒழிப்பு என்று ஒரு புறம் பேசிக் கொண்டே, மறுபுறம் சாதி வாக்குவங்கி அரசியலுக்கு ஆக, சாதியை பலப்படுத்தும் செயல் இந்தியா முழுவதும், முழு மூச்சில் நடை பெரும் வேளையில், சாதி அமைப்பு ஒழிக்கப்ப்டுவது வெறும் மேடைப் பேச்சில் மட்டும் தான் என்பதும், அது இந்தியாவில் இன்னும் பலப்படுத்தப் படுமே ஒழிய என்றுமே மறையாதோ என்றும் ஐயப்பாடு உருவாகிறது
சாதி என்பது இந்து மதத்தைப் பின்பற்றிய, இந்திய சமுதாயத்தின் , சமூகப் கட்டமைப்பாக இருந்தது. இந்த சாதிப் பிரிவு எப்படி, என்று தோன்றியது என்பது தெளிவாக குறிப்பிடும் படி இல்லை-ஏனெனில் இந்தியாவில் மக்கள் சமூக அமைப்பு, 10,000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானது. அது மட்டும் இல்லாமல் புதுப் புது சாதிகள் அவ்வப்போது தோன்றியும், மறைந்தும் உள்ளன. புத்த மதம் சாதிப் பிரிவினைக்கு எதிரான மதம். புத்த மதம் பல நூற்றாண்டுகள், இந்தியா முழுவதிலும் பின்பற்றப்பட்ட போதும், அசோகரே பௌத்ததராகி, புத்தம் அரசாங்க மதம் ஆனா போதும், சாதிப் பிரிவுகள் மறையவில்லை. அதாவது இந்து மதத்த்ற்கு எதிராணதாக சித்தறிக்கப்பட்ட பௌத்த மதம் (தத்துவ அடிப்படையில், இந்து,பௌத்த,ஜைன
மதங்கள் அனைத்தும், பிறப்பு, இறப்பு, மறு பிறப்பு, இறப்பு சுழற்ச்சி – உயிரைக் கட்டும் தளை-தளையிலுருந்து விடுபடுதல்- இவற்றில் ஒத்த கருத்து உடையவை) இந்து மதம், கிறித்துவ மதம், பௌத்த மதம் – எந்த மதமும், இந்தியாவின் சாதிக் கட்டுமான சமூக அடிப்படை இல் உள்ள மக்களால் பின்பற்றப் பட்டு வருகின்றன. அதாவது இந்திய சமுதாயம், அடிப்படையில் சாதிக் காட்டுமான சமுதாயம் ஆகும். எனவே அந்த சமுதாயத்தை சேர்ந்தவர், எந்த மதத்தைப் பின்பற்றினாலும், தங்கள் சமூக கட்டமைப்பை விடுவதில்லை. இஸ்லாமிய சமுதாய மக்கள், இந்தியாவில் பல்வேறு கட்டங்களில் தோன்றி உள்ளனர். இஸ்லத்தின் இரண்டு முக்கிய பிரிவுகள் சன்ணி (அரபியார் பின்பற்றூவது),ஷியா (
பாரசீகர் அதாவது இராணியார் பின்பற்றூவது) அவரவர்கள், படையெடுப்பின் போது வெவ்வேறு கால கட்டத்தில், இந்தியாவில் இணைந்தவர்கள். பாரசீகர் மற்றும், அரேபியர் சமூகம் சாதி கட்டமைப்பு உள்ள சமூகம் அல்ல. எனவே அந்த சமூகம், தங்கள் மதத்துடன் இந்தியாவில் இணைந்த போது, சாதி உருவாக வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் நாட்டில் லப்பை, ராவுத்தர், மறாக்காயர், காயலான் என்ற பிரிவுகள் உள்ளன.
இதற்க்கு மேலும் விரிவாக சொல்வகது என்பது, இஸ்லாமியாரை விமர்சிப்பது போல பொருள் கொள்ளக் கூடும். அது நமது நோக்கம் அல்ல!
Nalla pathivu
தோழர் மதிமாறன்,
படமும் கட்டுரையும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
ஏகலைவன்.
//அதனாலேயே ஏசுவை கும்பிடும் இந்துக்களாகவே இருக்கிறார்கள் கிறிஸ்துவர்கள்.//
உண்மை !!! கிறிஸ்தவத்தின் அடிப்படை என்னவென்பதை அறியாத கிறிஸ்தவர்களே இன்று உலகெங்கும் பரவிக் கிடக்கிறார்கள் !
முஹம்மது நபிகளின் போதனைகளுக்கு முந்தைய அரேபியாவில் சிலை வணக்கம் இருந்தது. முஹம்மது நபிகள் சிலை வணக்கத்தை ஒழித்து ஒரே இறைவனை வணங்க வேண்டும் என்று போதித்த போது அவ்வளவு சுலபமாக விட்டு விடவில்லை, தொழுகைக்கு வரும் போது கூட கக்கத்தில் கடவுளின் படத்தை (?) வைத்துக் கொண்டு தான் பள்ளிவாசலுக்கே வந்தார்கள். அதோடு தான் முஹம்மது நபிகள் கைகளை தூக்குங்கள் (தக்பீர் கட்டுவது என்று முஸ்லீம்கள் சொல்வார்கள்) என்றார்கள். அவர்கள் கைகளை (தக்பீர்) தூக்குங்கள் என்ற போது கக்கத்தில் மறைத்து வைத்திருந்த சிலை பொத் என்று கீழே விழுந்தது.
இப்படி பட்ட மக்களை திருத்தி நேர்வழி படுத்துவது ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் கொள்கையின் கொண்டு வருவது என்பது எளிதான காரியமல்ல.
நான் ஏன் இதை இங்கு சொல்கிறேன் என்றால், ஜாதி என்பது ரத்தமாக சதையாக இதயதுடிப்பாக மூளையாக உயிராக (ஆபத்தாக) உள்ளது. மீட்டு கொண்டு வருவது சிரமமான காரியம் என்பதையும் நாம் ஒத்துக் கொளத் தான் வேண்டும்.
அதோடு கிறிஸ்தவ மதத்திலும் சாதியை புகுத்தியது சதியாகவும் இருக்கலாம்.
Thiru. Ve. Madhimaranuku,
ungaludaiya pathippugalai sila kaalamaga padithu varugiren. Samuga matrum cinema vishangalil ungaludaiya padhivugal en manadhai maatri potu irukinrana, aanal kadavul matrum madham sarndha vishayangalil niraiya sandhegam ulladhu, adhodu jadhi patriya vishayamum serthu…
idharku mundhiya oru padhivil naangu varnam enreergal, ingu soothirar, panjamar endru 5 aaga koorugireergal. adhan vetrumai enna? jaadhiyai ozhika ezhudhugira neengal indha kelvi ai thavaraga artham kollalam… indhu madhathil jadhigalai thozhil sambandhama pirithulladhaga kelvi (appadi paartha indraiya kaala kattathil jathi iruka vaaipu illaithaan, teacher – brahmins; army & police – shatriya; business men – vaisiyar nu thaan pirikanum) mathavangaluku adimaiya kooli thozhi senjavangala thaan soothirar sonnanga, but panjamar gal na enna?!… indha kelvi gal aridhikollum oru aarvathinal (curiosity) ketkapatadhu, veru kaaranangal illai…
Nothing to point someone.
PROTECT YOUR FOCUS
1 Peter 4:1-2 – “Therefore, since Christ suffered for us in the flesh, arm yourselves also with the same mind, for he who has suffered in the flesh has ceased from sin, that he no longer should live the rest of his time in the flesh for the lusts of men, but for the will of God.”
You are here because focus was not broken. As a Christian, you are who, where and what you are because Christ’s focus was not broken. He was tortured, dehumanized before He was brutally murdered. He kept His focus. Whatever you have become today is a product of the fact that victory in Christ Jesus is victory assured and the rest is history. Therefore, pay any price to protect your focus. Your focus is your personal decision. If you are going in a wrong direction, take time to stop and change your focus because no one else can do that for you. If you cannot control your circumstances, be sure to control your attitude. What matters to Jesus is your attitude towards Him. Your confession is real faith talking. Positive confession shows that your attitude towards Jesus is positive. So, protect your focus. Stop the vocabulary of the victim and begin to think like an overcomer, talk like an overcomer and laugh like a victor, not a victim.
romba correct sir.matham mattum mari iruku mannitha manam innum mara villai.nan jathi ethirpu thirumanam seithukondaval nan hindu-vanniyakula kshriyar,en kanavar rc-adi dravidar.mrg kaga christiana marinan churchla father lam entha jathiyinaranulum kadavulin pillaikal.nam kiruthuvarkalnu sollraru ana sc christians nu oru sangam arapichu athu thalaivargala poduranga.vaerupadae illanu sollitu othukuranga sc st gala.ithuku ethuku christianity?
chandar sir,soothran nan high jathi aan low jathi pennai katikarathala pirakum pillaikal,pangamna high jathi penn low jathi aan ai katurathala pirakum pillaikal.epdilam yosichu kandu piduchu irkanga parunga.inga low castna sc than