குட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே நடிகர்

உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்? சிவாஜியை சில விஷயங்களுக்குப் பிடிக்கும். ஜெமினியை, கமலை பிடிக்கும். பாலையா, எம்.ஆர். ராதாவை பிடிக்கும், என்றெல்லாம் பட்டியல் சொல்லக் கூடாது. மிக சிறப்பாக, குட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே ஒரு நடிகரைத்தான் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் யாரை சொல்வீர்கள்?

-எஸ். சௌமியா.

 

வைகோவை.

 

11 thoughts on “குட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே நடிகர்”

  1. ஹாஹ்ஹா!!!! அருமையான பதில் தோழர்.

    வைகோவுக்கு அவருடைய அணிகள், ‘கலிங்கப்பட்டி கட்டபொம்மனே’ என்று சுவரொட்டி அடிக்கிறார்கள். அவனே இவனே என்று கூப்பாடு போடுகிறார்கள். ஆனால், இந்த கலிங்கப் பட்டி கட்டபொம்மன் செய்வதென்னவோ போயஸ்தோட்டத்தில், எட்டப்பன் வேலையைத்தான்.

    பெரியார் சிலைக்கு மாலை போட்டுவிட்டு, அய்யாவின் சிலையருகேயே நின்றுகொண்டு, ராமர்பாலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அறிக்கை விடுகிறார் இந்த பார்ப்பன அடிமை. இந்த லட்சனத்துல இவனும் ஒரு ‘சேது சமுத்திரத் திட்டத்து நாயகன்’ வேற.

    இவையெல்லாம் வைக்கோவின் நடிப்புத் திறமைக்கு எடுத்துக்காட்டுகள். என்னதான் அவர் ஹீரோ வேடம் கட்டியிருப்பதாக சித்தரிக்கப் பட்டாலும், நம் கண்ணுக்கு அவர் ஒரு கைதேர்ந்த காமெடியனாகத்தான் தெரிகிறார். அதுவும் கவுண்டமணியிடம் அடியும் உதையும் வாங்கும் செந்திலைவிடக் கேவலமான காமெடியந்தான் இந்த வைகோ.

  2. எனக்குப்பிடித்த குட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே நடிகர் அவர்கள் கலைஞர் மு. கருணாநிதி அவர்களே, கருணாநிதியை போன்ற உலகத்தரமான நடிகர் யாருமே கிடையாது, திராவிடக் கொள்கை பேசுவதை மூலதனமாக வைத்து ஏழேழு தலைமுறைக்கும் வேண்டியதை சுருட்டிவிட்டு எதுவுமே தெரியாமல் கொள்கை பேசி தனது குடும்பத்தவர்களைத்தாண்டி மற்றவர்களை வளரவிடாமல் அமுக்கி மற்றவர்களை ஏமாற்றி வரும் வித்தை வேறு யாருக்கும் வராது.

  3. திரு மதிமாறன் அவர்களே, நீங்கள் நல்ல ஒரு கவிஞர் என்று ஒத்துகொள்கிறேன். ஒரே வார்த்தையில் உண்மையான அரசியல் கருத்து.

Leave a Reply