வே. மதிமாறனை விரட்ட வேண்டும்
‘வே. மதிமாறன் என்ற கம்மநாட்டிக்கு` என்கிற தலைப்பில் பார்ப்பன ‘ஒழுக்கத்தோடு` கட்டுரை எழுதிய ஒரு நபர், (mrcritic.wordpress.com) திரு. விஜய் கோபால்சாமிக்கு, என்னை கண்டித்தும், wordpress.com மை விட்டு என்னை வெளியேற்ற வேண்டும், என்எழுத்துக்களை படிக்கக் கூடாது என்றும் பின்னூட்டம் அனுப்பியதையும், அதற்கு விஜய் கோபால்சாமிஅவர்கள் அளித்த பதிலையும், எனக்கு எழுதிய கடிதத்தையும்நான் அவருக்கு எழுதிய கடிதமும்இங்கே..பிரசுரித்திருக்கிறேன்.
மதிமாறன் அவர்களுக்கு,
கிருட்டிக்அவர்களுடனான எனது விவாதத்தில் நான் கூறிய ஒரு தகவலை (தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மூலமாகக் கூறப்பட்ட தகவல்) தனது பின்னூட்டத்தில் பயன்படுத்தி வருகிறார். தங்களைக் குறித்த ஒரு அனுக்கமான தகவல் தங்களுடைய அனுமதியில்லாமல் வெளிவருவதற்கு நானும் ஒரு வகையில் காரணமாக இருந்துள்ளேன் என்பதால் முதலில் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்
என் வழியாக அறிந்த ஒரு தகவலை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் முன் என்னிடம் அனுமதி கேட்டிருக்கவேண்டும் அல்லது ஒரு தகவலாவது சொல்லியிருக்கவேண்டும். கிருட்டிக் இதில் எதையும் செய்யவில்லை.
முதல் அடியை வாங்குகிற வரைக்கும் அடிக்கக்கூடாது என்பது என்னுடைய யுத்த நாகரிகம். இப்போது முதல் அடியும் விழுந்து விட்டது. இதற்கு எதிர்வினை காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்
நான் நினைத்திருந்தால் அவருக்குத் தெரியாமல் என்னுடைய பதில் மடலை உங்களுக்கு அனுப்பியிருக்க முடியும். அதனை கண்ணியக் குறைவான ஒரு செயலாகக் கருதியதால், அந்த மடலின் நகல் தங்களுக்கும் அனுப்பப்படுகிறது என்ற தகவலை அவருக்கும் தெரிவித்திருந்தேன். அதற்கான பதில் மடலில், பதில்களைத் தனக்கு மட்டுமே அனுப்புமாறு கேட்டிருந்தார்.
ஏற்கெனவே நான் பதில் சொல்லிய விஷயங்களை மீண்டும் மீண்டும் வேறுவேறு வடிவில் கேள்விப்படுத்தி இருந்ததால் அவரது கடைசி மடலுக்கு பதிலளிக்க விரும்பாமல் அப்படியே வைத்திருந்தேன். இந்த நிலையில் தான் நான் கூறிய ஒரு தகவலை அவர் தனது பின்னூட்டங்களில் பயன்படுத்தி வருகிறார்
ஆகவே, இந்த மடலின் வாயிலாக எங்களுக்கு இடையே நடந்த விவாதத்தை தங்களது தளத்தில் பதிப்பிக்க முழுஉரிமை அளிக்கிறேன், ஒரு வேண்டுகோளுடன் (வேண்டுகோள் பின்குறிப்பில்).
நன்றியுடன்
விஜய்கோபால்சாமி
பின்குறிப்பு: இம்மடலின் நகல் கிருட்டிக் அவர்களுக்கு அனுப்பப்படவில்லை. தங்களது தளத்தில் பதிப்பிக்கப்பட்ட பிறகு படித்துத் தெரிந்து கொள்ளட்டும், நான் தெரிந்து கொண்டதைப் போல. நாகரிகம் கருதி இம்மடலில் இருக்கும் கிருட்டிக் அவர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஐ.பி. முகவரியைப் பதிப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
mrcritic:
இந்த பதிவிற்கும் நான் எழுதபோவதற்கும் சம்மந்தமில்லை. வெருஎங்கும் எழுத முடியாததால் இங்கு எழுதுகிறேன்
.
மதிமாறன் என்ற வலைப்பூ மிகவும் கீழ்த்தனமான பதிவுகளை கொண்டது. பாரதியபத்தி பேசரது எனககு எந்த ஆட்சயபனையுமில்லை. மக்கள் தொலைக்காட்சியில் கேட்க்கும் கேள்விக்கு எதிரில் இருந்தவர் ஒரேவரியில் பதில்சொன்னார். வீடியோவை மீண்டும் பார்க்கவும். ஆனால் வலைப்பூவின் உள்நோக்கம் முழுக்க முழுக்க பிராமண எதிர்ப்புதான்.
அக்கினிகுஞ்சு என்ற பத்திரிக்கைய தொடங்கி, தலித்முரசு பொன்ற ஒன்றையனா பத்திரக்கைக்கு எழுதினா அவன் சொல்லுரத எழுதரத படிக்கனுமா?
ரஜினியால் தமிழிக்கு இழிக்குனு ஒரு தலைப்பு. அப்படி எழுதும் போது நமக்கு என்ன தகுதினு யோசிக்க வேண்டாமா? தலைப்பு அப்படி எழுதி உள்ள ஒரு விஷயமுமில்ல. ரஜினியின் உழைப்பை பற்றி பாடபுத்தகத்தில் இந்த வருடம் வரபோகிறது, அது
தெரியுமா? ரீமிக்ஸ் பாடல்கள் இத பற்றி ஒரு விமர்சனம். ரீமிக்ஸுக்கும் பிரமணணுக்கும் என்ன சம்மந்தம்? படிச்சுபாருங்க அந்த பதிவ. இளையராஜாவ துறத்த ஏ. ஆர். ரகுமானை கொண்டு வந்தார்கள் பிராமணர்கள் என்று சாதிசாயம் பூசுரார். இளையராஜாவே நான் இனி எந்த முண்ணனி இயக்குனர்களுடன் வேளை செய்யமாட்டேன் சொல்லபோய் தான் பிறரை தேடி செல்ல நேர்ந்தது.
இன்றும் மணிரத்தினம் இளையராஜாவின் இசையில் மயங்குபவர்தான். அதுமட்டுமல்ல யுவன் செய்யும் ரீமிக்ஸ் எல்லாம் இவர் கண்ணுக்கு படலை. வைரமுத்து ஏன் விலகினார்? பாரதிராஜாவுடன் ஏன் இசையமைபதில்லை? அதுவும் பிராமண சதியா? போங்கய்யா
இப்படி சம்மந்தமே இல்லாம தலைப்புகளக் கொடுத்து ஒரு சீப்பான பத்திரிக்கையின் தோற்றத்தைத்தான் ஏற்படுத்துகிறார். புத்தியும் சீப்தான்.
ஞானஸனாம் என்று பதிவில் தன்வலைப்பூவின் நோக்கைதானே அடித்து நோருக்கி விட்டார். பிராமணர்கள் மட்டும்தான் சாதிபார்கிறார்களா? இல்லை அப்படி இருக்க ஏன் இந்த பாரபட்சம் பதிவுகளில்? சாதிமத எதிர்ப்பு எல்லாம் பெரிய விஷயங்கள்.. சமுதாயம் சீர்பட சேற்றை மட்டும் வாரியிறைத்தால் போதாது! ஒருவேண்டுகோள் தயவு செய்த அந்த பதிவுகளை படிக்க வேண்டாம் – it is sadistic!
இப்போ நான் அவசரசிக்கிச்சைக்கு போகவேண்டியவனா? இல்லை அந்த ஆள் மனநலகாப்பகத்திற்கு போகவேண்டியவனா?
-mrcritic
விஜய்கோபால்சாமி:
வணக்கம்நண்பரே,
எதனடிப்படையில் நீங்கள் மதிமாறனின் பதிவுகள் கீழ்த்தரமானவை என்று சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை. அவரது வலைப்பூவின் ஒரேநோக்கம் பிராமண எதிர்ப்பு என்றுதான் நீங்களும்சொல்கிறீர்கள். இதை மதிமாறனிடம் கேட்டால் அவரும் ஆமாம் என்றுதான் சொல்லுவார். ஏனெனில் எதிர்ப்பதில் தவறில்லை, துவேஷம் காட்டுவதுதான் தவறு. மதிமாறன் செய்து வருவது பிராமண எதிர்ப்புதானே ஒழிய பிராமண துவேஷம் கிடையாது.
அதற்கு ஒரு உதாரணமும் என்னால் காட்ட முடியும். வே. மதிமாறன் பதில்கள் என்கிற அவருடைய கேள்வி பதில் நூலைப் படித்திருந்தால் இது உங்களுக்கே தெரிந்திருக்கும். அதில் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் என்கிற பிராமணரைக் குறித்து அவருக்கிருக்கிற மிக உயர்வான அபிப்ராயத்தை அதில் குறிப்பிட்டிருப்பார். அந்தகேள்வியையும் பதிலையும் இம்மடலின் பின் குறிப்பில் எழுதுகிறேன்.
தலித்முரசை ஒன்றரை அணா பத்திரிகை என்று சொல்லுவது உங்களுடையசு தந்திரம். உங்கள் பார்வையில் ஒன்றரைஅணா பத்திரிகையான தலித்முரசுக்கும் கொஞ்சம் வாசகர்கள் இருப்பார்கள் அல்லவா, அவர்கள் அதனை ஒன்றரைஅணா பத்திரிகையாகக் கருதுவதில்லை. உங்களுக்குக் கசக்கிற மதிமாறனின் எழுத்துக்கள் அவர்களுக்குக் கசப்பதில்லை.
உங்களது பதிவின் இறுதியில் “வெளியேறு” (மதிமாறன்) என்று பின்னூட்டம் எழுதச் சொல்லியிருந்தீர்கள். வேர்ட்பிரஸ்சில் பதிவு ஆரம்பிக்க உங்களுக்கும் எனக்கும் உரிமை இருக்கிறதென்றால் அதேஉரிமை மதிமாறனுக்கும் இருக்கிறது.
ஒரு வாதத்துக்கு நீங்கள் சொல்வதையே எடுத்துக் கொள்வோம், மதிமாறன் இதே விஷயங்களை ப்ளாகரில் எழுதினால் பரவாயில்லையா? அப்போது எதிர்வினை காட்டாமல் சும்மா இருந்து விடுவீர்களா?
என்னுடைய பதிவில் தடித்த வார்த்தைகள் இருக்கும், விருப்பமில்லாதவர்கள் படிக்கத்தேவையில்லை என்ற பொருள்பட எழுதியிருந்தீர்கள். உங்களுடைய பார்வையில் மதிமாறனின் எழுத்துக்கள் பிராமணக்காழ்ப்புடன் கூடியவை என்றால் அதை புறக்கணித்து விட்டு உங்கள் வேலைகளைப் பார்த்திருக்கலாமே? எதற்காக தனியாக ஒருபதிவை எழுதுகிறீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம் மதிமாறனுக்கு ஒருநியாயமா சொல்லுங்கள்?
மதிமாறனின் எழுத்துமொத்தமும் பிராமணர்கள் மீதான காழ்ப்பு என்று சொல்லுகிறீர்கள், அப்படியானால் உங்களுடைய அந்தப் பதிவு மொத்தமும் மதிமாறன் என்ற தனிமனிதர் மீதான காழ்ப்பு என்றும் சொல்லலாம் அல்லவா?
மதிமாறன் ஆரம்பம் முதலே ஒன்றைத் தெளிவுபடுத்தி வருகிறார். பலர் அதைப் புரிந்து கொள்வதில்லை. பாரதியை, பாரதியின்மக்கள் (பிராமணர்கள்) கொண்டாடுவதில் அவருக்கு எந்த வெறுப்பும் கிடையாது. ஆனால் பாரதியை முற்போக்கின் முகமாகக் காட்டுகிற, ஒரு புனித பிம்பமாகதூக்கிப் பிடிக்கிற, வாழ்வின் இறுதிநாள் வரை பாரதி எந்த மக்களை இழிவாகக்கருதியிருந்தாரோ, அவர்களைக் கொண்டே பாரதியைக் கொண்டாட வைக்கிற சூழ்ச்சியைத்தான் அவர் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். இதை மதிமாறன் அவர்களின் தளத்தில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். நிற்க.
ரஜினியால் தமிழுக்கு இழுக்கு என்று அவர் எழுதியதைக் குறிப்பிட்டிருந்தீர்கள். பாரதியைபாரதியாகப்பார்க்காமல்விட்டதைப்போலவேரஜினியையும்மக்கள் ரஜினியாக மட்டும் பார்ப்பதில்லை. வருங்கால முதலமைச்சராக, பிரதமராக, ஜனாதிபதியாகப் பார்க்கிற, இன்னும் சொல்லப் போனால் கடவுளாகவே பார்க்கிற பாமரத்தனம் மக்களிடம் விரவிக் கிடக்கிறது. ஆக ரஜினியைக் குறித்த விமர்சனங்களும் இங்கே தேவையாகிறது. பாடத் திட்டத்தில் ரஜினியைக் குறிப்பிடுகிறார்கள் என்றால் அதுகண்டக்டராக இருந்து புகழ் பெற்ற நடிகராக உயர்ந்த அவரது உழைப்பைக் குறித்துத்தான். அத்தகைய உழைப்பைக் குறித்து மதிமாறன் எந்த இடத்திலும் தவறாக எழுதவும் இல்லை. அதைக் குறித்து அவருக்கு எந்த காழ்ப்பும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.
சத்துக் குறைவான உணவை உண்டு வருகிற பலலட்சம் ஏழைக் குழந்தைகள் தமிழ்நாட்டில் இருக்கும்போது ஒரு நடிகனின் கட்டவுட்டுக்கு ஒரு லாரி பாலால் அபிஷேகம் செய்வது அவசியமா? வயது முதிர்ந்த பெற்றோரைக் கவனிக்காமல் ஒரு நடிகரின் புதுப்படத்துக்கு போஸ்டர் ஒட்டுவது அவசியமா? இவ்வாறான குற்றங்களை மௌனமாக அங்கீகரிக்கிற எந்த நடிகரும் விமர்சனத்துக்கு உரியவர்தான். அதில் ரஜினிக்கு மட்டுமல்ல வேறு எந்த நடிகருக்கும் எவ்விதமான விதிவிலக்கும் கிடையாது.
உங்களுடைய பார்வைக்கு மதிமாறனுடைய தளம் சீப்பாகத் தோண்றுகிறது என்றால் அதை நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. மதிமாறனின் புத்தியும் சீப் என்று எதைவைத்துச் சொல்கிறீர்கள். அவருடன் பழகிப் பார்த்திருக்கிறீர்களா, அல்லது எழுத்துக்களையாவது முழுவதுமாகப் படித்திருக்கிறீர்களா? ஆக உங்களுடைய இந்தக் கருத்திலும் என்னால் முழுமையாக உடன்பட முடியவில்லை.
திரைஇசையில் ரசிகன் என்றவகையில் ஈடுபாடு உண்டு. ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவங்களைக் குறித்து முழுவதுமாகத் தெரியாது. மதிமாறன் தினகரன் நாளிதழில் பணிபுரிந்தவர். ஒரு பத்திரிகையாளர் என்ற வகையில் அவர் இதுகுறித்த பல்வேறு தகவல்களை அறிந்திருக்கலாம். ஆகவே திரை இசைக் கலைஞர்கள் தொடர்புடைய கேள்விகளை நீங்கள் அவரிடமே நேரிலே கேட்கலாம்.
ஞானஸ்னானம் என்ற வார்த்தைப் பிரயோகத்தைக் கொண்டு மதிமாறன் கிறிஸ்துவசார்புடையவர் என்று கருதிவிட வேண்டாம். இந்துமதத்தை எந்தஅளவுக்கு விமர்சிக்கிறாரோ அதே அளவுக்கு மற்றமதங்களையும் விமர்சித்திருக்கிறார். அவருடைய பதிவுகளையும் நூல்களையும் முழுமையாக வாசித்தால் புரியும்.
மதிமாறன் சமுதாயம் பொருளாதாரம் என்ற இரண்டுதளங்களிலும் இருந்து வருகிற பிற்போக்கை தனது எழுத்தின் மூலம் கண்டித்தே வருகிறார். இதில் அவருக்கு எந்தமதத்தைக் குறித்தும் சமரசம்கிடையாது.
சமுதாய சீர்த்திருத்தத்துக்கு வெறுமே சேற்றைவாரி இறைப்பது மட்டும்போதாது என்கிறீர்கள், உங்களது இந்தக்கருத்தில்நானும் உடன்படுகிறேன். மிகப்பணிவாக உங்களைக் கேட்கிறேன், உங்களது இந்தப் பதிவில்நீங்கள் செய்திருப்பது என்ன?
யார் அவசர சிகிச்சைக்கு அல்லது மனநலகாப்பகத்துக்குச் செல்லவேண்டும் என்று நீங்களே ஒருமுன் முடிவை வைத்திருக்கும் நிலையில், அதைக் குறித்தும் நான் எதுவும் சொல்வதற்கில்லை.
நீங்கள் நேர்மையினுடைய பதிவைப் படிக்கக்கூடாது என்று நான் சொன்னால் அது எத்தகைய சாடிசமோ அத்தகையதுதான் என்னையும் மற்றவர்களையும் மதிமாறனின் பதிவைப் படிக்கக்கூடாது என்று நீங்கள் வேண்டுகோள் விடுப்பதும். மாற்றுக் கருத்துடையவர்களைக்களத்தை விட்டே நீக்கவேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?
நீங்கள் எனக்கு அனுப்பிய பின்னூட்ட மடலில் முடிந்த அளவுக்கு கண்ணியமான வார்த்தைகளையே பயன்படுத்தியுள்ளீர்கள். இதையே அந்த பதிவை எழுதும் போதும் கடைபிடித்திருக்கலாம் என்பதுதான்என்னுடைய விருப்பம்.
பதிவுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டம் என்பதால் இதனை என்னுடைய பதிவில் பதிப்பிக்கவில்லை. இது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களை மின்னஞ்சல் வாயிலாகவே தொடரலாம். இந்த கருத்தோட்டத் தின்மையப்புள்ளி மதிமாறன் என்பதால் நம்முடைய இந்தகருத்துப் பரிமாற்றம் குறித்து மதிமாறன் அவர்களுக்கும் தெரிவிப்பதுதான் நாகரிகம் என்று கருதுகிறேன். எனவே இம்மடலை சிசி ஆக மதிமாறனுக்கும் அனுப்புகிறேன்.
நன்றியுடன்
விஜய்கோபால்சாமி
பின்குறிப்பு:
கேள்வி: நிறைய சர்ச்சை ஆகியிருக்கிறதே, நீதிபதிகளுக்கு என்னஆயிற்று? (வி.பாண்டியன், கோவில்பட்டி)
வே. மதிமாறன்: ஒரு சிறந்த நீதிபதி, சட்டத்தின்படி மட்டும் இயங்கமாட்டார். ஏனென்றால் சில நேரங்களில் சட்டத்தின்படி சரியாக இருப்பது நியாயத்தின்படி, நீதியின்படி தவறாக இருக்கும்.
சட்டத்தின்படி இயங்குபவர் தீர்ப்பு வழங்குபவராக மட்டும்தான் இருப்பார். நீதி வழங்குபவராக இருக்கமாட்டார்.
சட்டத்தின் துணையொடு நியாயப்படி, நீதியின்படி பரிவோடு, துணிவோடு தீர்ப்பு வழங்குபவருக்குப் பெயர்தான் நீதிபதி. (கவனிக்க, இத்துடன் முடித்திருந்தாலும் இந்தக் கேள்விக்கு வேண்டிய பதில் கிடைத்திருக்கும், ஆனாலும் தொடர்ந்து அவர் என்ன சொல்லுகிறார் என்பதையும் படிக்கவும்) சுருங்கச் சொன்னால் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மாதிரி.
ரயில்வேயில் பதவி உயர்வுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று தொடுக்கப்பட்ட வழக்கில், இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகமரியாதைக்குரிய கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்புவரலாற்றுச் சிறப்புமிக்கது. “சச்ராமாயன்” என்று இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட பெரியாரின் “ராமாயணக்குறிப்புகள்” நூலை உத்திரப்பிரதேச அரசுதடை செய்தபோது அந்தத்தடையை உச்சநீதிமன்றம் மூலமாக தள்ளுபடி செய்த நேர்மையாளர், கண்ணியத்திற்குரியவி. ஆர்.கிருஷ்ணய்யர். ஓய்வு பெற்றபிறகும் 90 வயதைத் தாண்டி நீதிக்காக ஓய்வில்லாமல் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார் இந்த நீதிமான்.
mrcritic:
வணக்கம்
விஜய்,
எதிர்க்கலாம் துவெஷம் தான் காட்டக்கூடாது. எப்படி விஜய் இப்படி பாகுபடுத்தி பாக்க தோணுது? இல்லை இதுக்கு பேருதான் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதா? The line has been crossed. நீங்கள் குறிப்பிட்ட பின் குறிப்பு அந்த வலைப்பதிவில் காட்டமுடியுமா? நான் ஏன் விஜய் யாரோ எழுதுன நூல படிக்கனும்? அது கண்டிப்பா என் வாழ்க்கையில் நடக்காது.
வெர்ட்பெரஸை நான் ஒரு ரோஜா தோட்டமாகத்தான் கருதுகிறேன். ப்ளாகரில் இது நடந்தால் அந்த விஷப்பதிவுகள் கண்டிப்பா முன்பதிவா 24/7 நம்ம கண்ணுக்குபடாது. அது மட்டுமில்ல வலை தேடல்களில் வரவே வராது, எழுதித்தரேன்
நான் செய்வது மிகவும் personal attack தான். என் பதிவின் நோக்கமும் அது மட்டுமே. நாகரீகம் என்பது வார்த்தை யளவில் மட்டுமிருந்தால் பொதுமா? சொல்லும் கருத்துக்கள்(?) அல்ல அவதூருகள் பற்றிகவலையேயில்லாமல் எழுதும் போது என்ன செய்ய? அந்த இடத்தில் நாகரீகம் காற்றில் பரக்கவிட்டு வசையில் வார்த்தைகளை தைக்கும் போது போய் சேரவேண்டிய இடத்தில் உடனே சேரும். இது அந்த வலைப்பதிவிலிருந்து கத்துக்கிட்டதுதான்.
நீங்க அடிக்கடி வரும் பூங்காவில் நாராசமா எப்பப்பார்த்தாலும் யாரையாவது இழிவுப்படுத்திக்கிட்டு அவதூர பரப்பிக்கிட்டிருந்தா நீங்க என்ன செய்வீங்க? அதுமட்டுமல்ல அங்கு இருக்கும் வழிப்போக்கர்களின் மீதும் சேற்றைவாரியிரைக்கும் இருகைக்கூலிகளை வெச்சுக்கிட்டு ஆட்டம் போட்டஎன்செய்ய? இவர்கள் பரப்பும் துவேஷமும் நான்எழுதிய வார்த்தைகளையும் ஒருதாரசில்வைத்தால் அவர்களின் துவேஷம்தரையத்தொடும்!
ரஜினி ரசிகர்களால் இழுக்குஎ ன்பது சரியான தலைப்பா இல்ல ரஜினியால் இழுக்கா? இப்படி சம்மந்தமில்லாம துணுக்கு மூட்டை மாதிரி தலைப்பு வெச்சா அதுசீப்தான். ஒருதுணுக்குமூட்டையின் அளவில் எழுதுபரின் புத்தியும் சீப்தான். அதவிடகேவலம்தசாவதாரம்பதிவு. வாய்ப்பு கிடச்சாலும் இப்படி ஒருவரோட பழகவே மாட்டேன்
ஞானஸனாம் என்ற குறிப்பு சொன்னத நீங்கதப்பா விளக்கறீங்க. அந்தபதிவு கிருஸ்துவ ஆதரவல்ல. அந்தபதிவ சரியாபடிச்சா இதுதமிழக மக்களின் மனநிலை என்பது விளங்கும். இந்துகளுக்கு மட்டும் சொந்த மில்லைவரணத்தால் பாகுபடித்துவது. இது தமிழ்முஸ்லிம்களிடமும் உள்ளது. அப்படியிருக்கதொடர்ந்து ஒரேவகுப்பினரைத்தாக்குவுது துவேஷம்தான்எதிர்ப்பல்ல!
என்வேண்டுகோளின்காரணம்:
சேற்றைவாரி இறைக்கும் இவர்களின் பதிவுகள நீங்க 3மாதங்கள் படியுங்க. பிறகு உங்கள் வேலை நிமித்தமா வெளியுருக்கு போங்க. பின்புதான் தெரியும் மனிதனை மனிதனா பார்ப்பதுனாஎன்னவென்று. அன்புக்காக எழுதுங்ககால்ல விழுந்து கும்பிடரோம். சாதிங்கரராட்சன ஒழிக்க எழுதுங்க தோளுக்கு தோள் நிக்கரோம். முற்போக்கு சிந்தனைகள இன்று நடக்கும் விஷயங்களோடு அவதூருலில்லாமல் எழுதுங்க அதபரப்ப 6கோடிபேரும்கூடவரோம்.
சமுதாயசீர்கேடுகளை சரிசெய்ய வழியச்சொல்லுங்க இல்ல ஏற்கனவே பாகுபட்டுக்கிடக்கும் நாட்ட பொளந்துபார்க்கனுமா? Constructive criticism எங்கே?…நம்மால பத்துபைசாவுக்கு உபயோகமில்லனாலும் உபத்திரம் பண்ணாமலிருக்கலாம்.
நீங்க என்ன விளக்கினாலும் உங்கள் உள் மனம் என்னஎன்று என்னால் பார்க்க முடிகிறது. விஜய் விவரமானஆளு. நான் சொல்ல வேண்டியதே இல்லை. அந்தபதிவு ஒரு முன்னால் தினகரன் பத்திரிக்கையாளருடையது என்பது தெரிந்தது நல்லவிஷயம். பத்திரிக்கைக்காரர்களைவிட விஷமிகள் யாருமிருக்க முடியுமா?
நேரமெடுத்துக்கொண்டு எழுதியதிற்கு நன்றி. இதனைபற்றிபதில் எழுத நினைத்தால் எனக்கு மட்டும் எழுதுங்கள்.
நன்றி!
mrcritic
வே. மதிமாறன்:
திரு. விஜய் கோபால்சாமி,
என்னை பத்திரிகையாளன் என்று நீங்கள் mrcritic க்கிடம் சொன்ன தகவலில் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. அது நான் பார்த்த வேலைதானே.
பாரதியை நான் விமர்சிக்கிறேன், என்ற காரணத்திற்காக, என்னை கொலை செய்துவிடும் அளவிற்கு கோபத்தை நெஞ்சில் வைத்துக் கொண்டு, (செஞ்சாலும் செய்வாங்க. ஜெயேந்திரன் ஆளுங்கதானே) எந்த அரசியல் விளக்கங்களும் அற்று, ஆபாசமான வெற்று வார்த்தைகளால் என்னை திட்டி ஆறுதல் அடைகிறார்கள், பிரம்மாவின் நெற்றியில் பிறந்த ‘நாகரீகமான மேன்மக்கள்`.
நான் பத்திரிகையானாக இருந்தவன் என்று கேள்விப்பட்டவுன், என்னை திட்டவேண்டும் என்ற ஆத்திரத்தில், பத்திரிகையாளர்கள் பற்றி மிகவும் மோசமான கருத்தை தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருக்கிறார், பாரதியை பாதுகாக்க வந்த குட்டி பாரதியான இந்த mrcritic.அவர்களின் பாரதி கடைசிவரை பத்திரிகையாளராக இருந்தவர் என்பதையும் மறந்து. அவ்வளவு ஆத்திரம்.
WordPress யை விட்டு என்னை வெளியேற்ற வேண்டும் என்ற அவர்களின் செயல் வெற்றி பெறாமல் போனால், என் வலை பதிவை அழித்துவிடுகிற வேலையையும் செய்வார்கள். அது ஒன்றும் அவர்களுக்கு புதியதில்லையே.
வரலாறு நெடுக தன்னை கேள்வி கேட்டவர்களை, அவர்கள் எழுதிய நூல்களோடு சேர்த்து எரிப்பது அவர்களுக்கு வழக்கமான ஒன்றுதானே. சமண, பவுத்தர்களின் இலக்கியங்களும், தத்துவங்களும் மட்டுமா தீக்கரையாயின? அவர்களும்தான்.
எதையும் எதிர்கொள்வோம்.
நன்றி.
தோழமையுடன்,
வே. மதிமாறன்.
பின்னால் இவ்ளோ விஷயங்கள் நடக்குதா !!! 🙁
>அக்கினி குஞ்சு என்ற பத்திரிக்கைய தொடங்கி, தலித் முரசு பொன்ற ஒன்றையனா
பத்திரக்கைக்கு எழுதினா அவன் சொல்லுரத எழுதரத படிக்கனுமா?>
பேஷ் பேஷ்.. Mrcritic
நீங்க சொல்றததான் நாங்கள் எல்லாம் படிக்கனும்னு சொல்ற எழுதற அதிகாரத்தை
உங்களுக்கு யார் கொடுத்தார்கள்?
அதே அதிகாரம் மதிமாறனுக்கும் இருக்கிறதுதானே!
உங்களோட வலைப்பூவுக்குப் போய் முழுமையா உங்கள் கடித பரிமாற்றங்களை வாசிக்க
நினைத்தேன். ஆனா அது தேவையில்லை என்பதை உங்களின் மேற்கண்ட வரிகள் காட்டியது.
பாரதி மிகப்பெரிய சகாப்தம், மகாகவிஞன் எல்லாம் சரிதான். அந்த மகாகவிஞனின் கவிதா
மண்டலத்தை ஒரு மதிமாறனின் வலைப்பூ மறைத்துவிடும் அல்லது சரித்துவிடும் என்ற
பயம் உங்களுக்கு வந்திருக்கிறது என்பதைத்தான் உங்களின் மேற்கண்ட எழுத்துகள்
காட்டுகின்றன.
I too respect poet Bharathi. many times iam not agree with Mr.mathimaaran.
But I always respect his third eye view.
அது என்ன அரைவேக்காட்டுத்தனமான கமெண்ட்.. தலித் முரசு போன்ற
ஒன்றரையனா பத்திரிகைனு…
ஒன்றரையனா தேடிப்பிடித்து அனுப்பி வைக்கிறேன். ஒரு தலித் முரசு அனுப்பி
வைக்க முடியுமா?
…
புதியமாதவி,
மும்பை
பெங்களூர் அருண் என்ற ஆபாச போலி உருவாகி இருக்கிறான். எல்லா பதிவுகளிலும் ஆபாச பின்னூட்டம் பொடுவது அந்த கேடுகெட்ட பார்ப்பான் தான். மூர்த்தி ஒழிஞ்சான் அருண் வந்துட்டான்.
விஜய் கோபால்சாமி அவர்களின்
நாகரீகமான பின்னூட்டம்…
தொடரட்டும்…
தோழர் மதிமாறன் அவர்களுக்கு,
நண்பர் விஜய் அவர்களின் இந்த விவாதத்தை ஒரு பதிவாக வாசகர்களின் கவனத்துக்கு கொண்டுவந்தமைக்கு பாராட்டுக்கள். Mr. Critic என்ற பார்ப்பன முரளி அவர்களின் வசவுகள் அவர் சார்ந்த சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பையே அனைவருக்கும் வழங்கியிருக்கிறது.
வாசகர்கள் படித்து சிரிப்பதற்காக அவரது தளத்தில் பதியப்பட்ட அவரது பின்னூட்டங்களை இங்கே பதிவிடுகிறேன்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
////ஏகலைவன் சொன்னார்,
மேல் ஜூன் 19, 2008 மேல் 12:43 நான்
கிருட்டிக் மாமா!
நன்னா ஒரைக்கிரா மாதிரி சொன்னேள்! போங்கோ. யாருக்கு?! ஒங்க பதிவ வாசிக்க வருகிற அக்கம் பக்கத்து அம்பிகளுக்குத்தான், எங்களுக்கில்லை.
இதப் படிக்கிறவன் நிச்சயமா பாரதியப் பத்தியும், ஒங்க பார்ப்பனீயத்தைப் பற்றியும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துடுவான். மதிமாறன் எழுத்துக்களுக்குக் கூட மசியாதவர்கள், ஒன்னோட இந்த வசைபாட்டைப் படிக்க நேர்ந்தால், பார்ப்பனியத்த காறித்துப்பாம விடமாட்டாங்கடா அம்பிகளா!
நாங்கூட “என்னாடா இந்த மதிமாறன் பாரதிய விட்டுட்டு வேறு பல உருப்படியான சமூக விசயங்களப் பத்தி எழுதுனா நல்லாயிருக்குமே”ன்னெல்லாம் யோசிச்சிக்கிட்டு இருந்தேன். இப்ப உன்னோட இந்த வசைமொழிகளைக் கேட்டபிறகுதான் தெரியுது,அவரு எழுதிவருவது மிகவும் அவசியமானது என்று. ஏனெனில், மதிமாறனால் அறுபடுவது பாரதியின் பூநூல் மட்டுமல்ல, அவன் சார்ந்த ஒட்டுமொத்த பார்ப்பன பூநூல்களும்தான். உண்மையிலேயே இதுதான் பெரியாரின் பாணி.
மதிமாறனுக்கு வசைபாடி இவ்வளவு பெரிய பதிவ எழுத முடிந்த உன்னால, பாரதியின் புகழ் பாடி அல்லது பாரதி களங்கமற்றவன் என்பதனை நிரூபிக்கும் வகையில் எதையும் எழுத முடியாமல் போனது ஏண்டா அம்பி?
அதவிட்டுப்புட்டு, இங்கவந்து இப்படி ‘அது’ அறுந்த பன்றி மாதிரி கத்துறத விட்டுப் புட்டு எதையாவது உருப்படியா எழுதி விவாதிக்க வாங்கடா அம்பிகளா?
ஏகலைவன்.
bmurali80 சொன்னார்,
மேல் ஜூன் 19, 2008 மேல் 8:32 நான்
வாடா டேய், உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருந்தேன். நீ என்ன அவனோட கொவனமா? என் பூனூல் அவருத்துக்கு முன்னாடி உன் கொவனத்தகட்டிப்புடி. அவன பத்தி சொன்னா உனக்கு அவிருது.
சாதி வெறியர்கள் தானடா நீங்கள். இவ்வளவு நஞ்ச மனசுல வெச்சுக்கிட்டு எப்படி ஒரு பிரமனனோட கண்ண பார்த்து பேச முடியும்?
பிராமனன் ஆகட்டும் யாராகட்டும் கேவளப்படுத்தனும்கறது தானே உங்க நோக்கம். அவனோட பதிவுகள செரியா படி. அவன் கிணற்று தவளை, அறைவெக்காடு. மற்றவற்களுக்காக பேசரோமுனு நினைச்சுகிட்டு அந்த பன்னிக்காக வாதாடாதே.
நேரடியா பேச தையிரமில்லை… பாரதி கீரதினு பேசிக்கிட்டு. ஞாபகம் இருக்கட்டும் டீ சோனியா பத்தி ”orkut” எழுதினவனுக்கு ஜெயில். உங்க ஆளு கருத்து ஒன்னுமில்லனாலும் தலைப்பெல்லாம் டக்கரா வெக்கராரு, பாத்துக்கோ. எல்லாத்துக்கும் சாதி சாயம் பூசரான்…
“நேர்மை போல” தையிரியமா இன்று நடக்கும் விஷயங்களை பேசுடா யார் வேண்டாம் என்றார்கள்.
ஆனா ஒருவருனுடைய வாழ்வில் மற்றவன் மீது சேற்றை மட்டும் வாரி இறைக்கிற நீயும் அந்த பன்னியும் வெர்ட்பிரஸ் பக்கம் தலைய வெக்காதீங்க!
அடுத்து என்ன சர். சீ.வி. ராமன், ராமானுஜன் தானே?
நாகார்ஜுனன் – பாரதி- ஏகலைவன் « வே.மதிமாறன் சொன்னார்,
மேல் ஜூன் 19, 2008 மேல் 11:31 பிற்பகல்
[…] http://mrcritic.wordpress.com/2008/06/16/%e0%ae%b5%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%… […]
ஏகலைவன் சொன்னார்,
மேல் ஜூன் 20, 2008 மேல் 3:50 நான்
அம்பி bmurali80,
நன்னா சவுக்கியமா இருக்கேளா!
நீ இதுபோலவே தொடர்ந்து எழுது அதுதான் எனக்கும் ரொம்ப சவுரியமா இருக்கும். பாரதியப்பத்தி நீ எழுதுவதை விட, பாரதிக்காக நீ இதுபோல நாராச வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுவதுதான் பாரதியின் புகழுக்கு!!!!! மிகவும் உகந்ததாக இருக்கும்.
அடுத்து சோனியாவைப்பற்றி எழுதினவனுக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் நடக்கும்.
அது எப்படியடா பாப்பானைப்பற்றி எழுதினா சாதி வெறியன்னு எங்கள வசைபாடுற. இங்க இருக்கின்ற அத்துனை சாதிகளையும் உருவாக்கி அடுத்தவன் உழைப்புல தொந்திவளத்த உலகமகா சாதீவெறியர்களே பார்ப்பனர்கள்தான். இதுதான் ‘சாத்தான் வேதம் ஓதுற’ கதையோ?
அதுசரி, நீ பாப்பானுக்கு ஆதரவாக எழுதுறீயே நீ மட்டும் சாதி வெறியன் இல்லையாடா அம்பி!
ஒஞ்சாதிய அடையாளப்படுத்துற பூநூல மொதல்ல கழட்டி கூவத்துல வீசிட்டு வா, தொடர்ந்து அனைத்தையும் பற்றி விரிவா விவாதிக்கல்லாம்.
இப்படியெல்லாம் கோவப்பட்டு ஒடம்பக் கெடுத்துக்கப் பிடாதுடா அம்பி! நன்னா பேஷ அறிவப் பயன்படுத்தி எதையாவது எழுது.
bmurali80 சொன்னார்,
மேல் ஜூன் 20, 2008 மேல் 9:41 நான்
பன்னியின் கைக்கூலியே வருக!
உன் பேர முதல்ல மாத்து – பன்னிதாசன் ஒரு நல்ல பேரு, உடனே என் பூநூல கழட்டறேன். அந்த பன்னிய பத்தி பேசினதுல கொவனத்த மறந்து விட்டுட்டு போய்ட்டடா அதோ கூவத்துல இருக்குப்பார்.
கற்காலத்துல வாழறக்குருட்டு கபோதியே நான் எங்கயாவது பிராமணக்கு ஆதராவா எழுதியிருக்கேனா? அப்படி எழுதியிருந்தா “நேர்மை”யின் பதிவ பின்குறிப்புல குடுத்திருப்பேனா? படிக்காமா குருட்டுத்தனமா எழுதுற உன்னோட விவாதமா? போட போ… உன்னால் மற்றும் அந்த பன்னியால் எற்படும் கசப்பைவிட நான் பேசும் வசைமொழி சுவைதான்.
கடுகு.காம் சொன்னார்,
மேல் ஜூன் 21, 2008 மேல் 11:10 நான்
சரிதான் கிரிட்டிக். உங்களுக்கு வேலை வெட்டி இல்லையா?… இவங்களுக்கு எல்லாம் பதிவு போட்டு ஏன் நேரத்தை வீணடிக்கிறீங்க…. நான் தொட்டுக்கிட்டும் திம்பேன்னு சொல்றவங்க இவங்க…….. இதான் முற்போக்காம் இவங்க மொழியில….
bmurali80 சொன்னார்,
மேல் ஜூன் 22, 2008 மேல் 8:13 நான்
வணக்கம் கடுகு.காம்,
உங்கள் மறுமொழி ஸ்பாமிலிருந்து இங்கு அனுப்ப சற்று நேர தாமதம். ஏன் இந்த பதிவு என்பதற்கு பதிவில் தெளிவா எழுதியிருக்கேன். வெர்ட்பெரஸ் சமுதாயம் தன் ரோஜா தோட்டத்த்தில் கூவத்தை அனுமதிக்காதீர்கள் சென்னை நாரியது போதும் என்பதே!
தினகரனில் முன்னாள் பத்திரிக்கையாளன் என்பது தெரியவந்து. பன்னி பதிவர் பொர்வையில் மறஞ்சுக்கிட்டுருப்பதை அறிந்தேன். இந்த ஒருவரியில் என் வழக்கின் வாதம் முற்று பெறுகிறது. பத்திரிக்கை துரையில் வேலை பார்த்த (பார்க்கும்?) ஒரு வருவரின் கருத்து பதிவுலகில் காலனாக்கு பொருட்டல்ல. இவர்களை விட விஷமக்கார்கள் உலகில் உண்டா?
bmurali80 சொன்னார்,
மேல் ஜூன் 23, 2008 மேல் 10:49 நான்
ஏகலைவன் – இனி உனக்கு இந்த இடத்தில் வேலைக் கிடையாது. உன் பின்னூட்டங்களை பல இடங்களில் படித்துவிட்டேன்.
என் மனத்தில் படுவது இதுவே. மிகவும் காழ்ப்புணர்ச்சியிருக்கு உன் மனசுல. பாத்துகோ!
கண்டிப்பா உன்ன பல இடங்களில் பின்னூட்டம் போடவிடாம தடுத்திருப்பாங்க. அதையே நானும் செய்ய வேண்டிய நிலை.
நீயும் ஒரு பத்திரிக்கையாளன இருந்துகிட்டு பதிவர் என்ற போர்வையில் வலம் வரியா என்பது தெரியவில்லை!
Fredrick சொன்னார்,
மேல் ஜூன் 24, 2008 மேல் 2:27 நான்
பூணூல் வீரர்களே எல்லாம் வாய் தான் ஜாஸ்தியே தவிர எவனுக்கும் மதிமாறன் கேள்விகளுக்கு உருப்படியா பதில் சொல்லலே …. இதுல இருந்த தெரியுது உங்க வாய் சாம்பம் …பன்னி , லூசு … இது போன்ற பல வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்களே தவிர உருப்படியா எதுவுமே உங்கள் வாயில இருந்து வரதுன்னு தெரியுது .. நல்ல நிருபிசிடீங்க நீங்க பன்னிங்க என்று …
bmurali80 சொன்னார்,
மேல் ஜூன் 24, 2008 மேல் 5:10 நான்
Fredrick வந்தமைக்கு நன்றி.
//கேள்விகளுக்கு உருப்படியா பதில் சொல்லலே …. //
(கேள்வி கேட்பது) எல்லாம் கண் துடைப்பே. பின்னூட்டங்களில் நான் சில கேள்விகள் கேட்டுள்ளேன். அதையும் படிச்சு பாருங்க.
“பதில்கள்” பலர் எழுதியுள்ளனர். நான் எந்த சமுதாயத்தையும் உயர்த்த்தி பேசலை. ஏற்கனவே பல வகையில் பிரிக்க பட்டுள்ளோம் – மொழி, நிறம் என்று. வேண்டாமே இந்த காழ்ப்பு!/////
பாரதியை யாரும் விமரீசிக்கலாம்! யாரும் உயர்த்தியும் பேசலாம்! பாரதியை விமரீசிக்கலாமே தவிர, பாரதியை அசிங்கப் படுத்துவது சரியா? பாரதியை , பி.சே.பி. , ஆர். எஸ்.எஸ்.மற்றூம்
ஜெயந்திரருடன் தொடர்பு படுத்தி புகைப்படம், கருத்து வெளியிடுவது நியாயமா?
பாரதியார் மதத்தை, அரசியலை, தன் இலக்கியத்தைப் பயன்படுத்தி சொத்து குவிப்பில் யீடு பட்டாரா? பிற பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டதாக அவர் மீது குற்றச் சாட்டு உண்டா? எல்லோரும் தங்கள்
மனசாட்சியை வைத்து எழுத வேண்டும். பாரதியார், பெரியார் போலவோ, மதி மாறன் போலவோ, ஏகலைவன் போலவோ, புறம்போக்கு போலவோ எழுதியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. பாரதியார் முழுவதும் புரட்சி கரமான கருத்துக்களை எழுதினார். அதே நேரத்தில் அவர் இந்து மதத்தில் பல முக்கியமான, நன்மை தரக் கூடிய கருத்துக்கள் உள்ளன என்றும் கூறியுள்ளார்! விவேகானந்தர், காந்தி, தாகூர், பட்டினத்தார், அப்பர் உட்பட பலரும் இந்து மதத்தின் உண்மைகளை அடித் தளமாகக் கொண்டு தான் தங்கள் கருத்துக்களை
வெளியிட்டு உள்ளனர். பெரியாரின் கருத்துக்கள் பலவும், இந்து மதம் பின்பற்றப் படும் முறையைக் கண்டிக்கும் விதமாகவே உள்ளன- இந்த கருத்துக்களை தெளிவாக புரிந்து கொண்டு, இந்து மதத்தை ஸீர் திருத்தினால், இந்து மாதம் யெற்றம் பெரும் என்பது என் கருத்து. தெளிவாகச் சொன்னால்- இந்து மதத்தை பயன் படுத்தி, கோடிப் பணம் குவித்தும், கேடித்தனம் செய்பவரால், இந்து மதத்தீர்க்கு ஏற்பட்ட நஷ்டத்தை , சரி செய்ய பெரியாரின் எதிர் மறு விளைவு (Negative feedback) உபயோகப்படும். எனவே மதி மாறன் போன்றாவர்கள்,பாரதியை விமரீசிக்கலாமே தவிர, பாரதியை அசிங்கப் படுத்துவது சரியா?- என்று எண்ணிப் பார்க்க வேண்டும். பாரதியை மட்டும் ‘கட்டம் கட்டி’ அடிப்பது- ஒன்று அவர் மேல் சாதி காழ்ப்புணர்ச்சி மற்றூம் அவரது ஆளுமை, புகழ் மேல் உள்ள பொறாமை- அல்லது அவரை சரியாகப் புரிந்து கொள்ளாமை என்ற காரணத்தால் இருக்க வேண்டும். நண்பர் மதி மாறனின் பொறாமை குணம் உடையவர் அல்ல என்று உறுதியாக நம்புகிறேன். அவர் பாரதியை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன்! நண்பர் மதி மாறனின் சிந்தனை இன்னும் விரிவடையும், அப்போது அவர் பாரதியை சரியாகப் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்! மிஸ்டர். கீரிடிக் அல்லது bmurali80 , என்பவர் பாரதியையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, பெரியாரையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்! அதோடு, அவர் நாகரீகம் இல்லாத வார்த்தைகளை உபயோகம் செய்து இருப்பது, வருத்தப்பட வேண்டிய விஷயம். மிஸ்டர். கீரிடிக் அல்லது bmurali80 , நீங்கள் பாரதியார், விவேகானந்தர், காந்தி, தாகூர், பட்டினத்தார், அப்பர், பெரியார் பற்றி இன்னும் அதிகம் படித்து விட்டு, சிறிது சிந்தனையும் செய்து விட்டு பிறகு எழுத வாருங்கள். மதி மாறனை யாரும் விரட்டவும் வேண்டாம். விரட்டவும் முடியாது. மதி மாறன் பாரதியை விமரீசிக்கலாம். ஆனால் சாரம் இல்லாத கருத்துக்களை வைத்துக் கொண்டு, மதி மாறன் காழ்ப்புணர்ச்சியோடு பாரதியை அசிங்கம் செய்ய முயன்றால், இன்றைக்கு மிஸ்டர். கீரிடிக் அல்லது bmurali80க்கு, என்ன மரியாதை கிடைக்கிறதோ, அதே மரியாதையை தான் எதிர்கால தமிழ் சமுதாயம் மதி மாறனுக்கும் அளிக்கும்!
இந்த மாதிரி கோபத்தை சில நூற்றாண்டுகளுக்கு முன் எப்படி கொட்டித்தீர்த்திருப்பார்கள் ?
கழு மரத்தில் எற்றி, தீயிட்டு கொளுத்தி சுற்றி நின்று “ஹர ஹர மகா தேவா” என்றும் “ஆன்பே சிவம்” என்றும் தானே ??
மதிமாறனின் புத்தகத்தின் வழு இப்பொழுது புரிகிறது…
mrcritic க்கு உங்களின் பதில் செருப்படி. இனியாவது இந்த பாப்பார பண்ணாடைகள் திருந்தினால் சரி.
Keep it up Mr. Mathimaran. Your work is needed for the Tamil Community. We will support you. Don’t worry.
கிரிடிக் மாம,
ஓங்க ப்லொக்கையும் மதி ப்லொக்கையும் நல்ல படிச்சு பாருங்கோ,
யாரு கீழ்த்தரமான பதிவ போடரதுனு தெரியும்…..
இல்ல நல்ல படிக்கிரவா கிட்ட கேட்டு பாருங்கோனா…..
பேஷ் பேஷ் நன்ன டென்ஷன் ஆரேள் போங்கொ…
உங்களுக்கு “பன்னின” ரொம்பா இஷ்டமா மாமா……
swarna@jeyendran,
Dear Ar__ho…….
Here after dont write in the name of legendary leaders……
if you want eat shit go do it …. dont come here and shout….
We are not individuals ….. mind it … and mind your words….. if you do the same thing.
YOU HAVE FACE THE CONSEQUENCES
BE CAREFULL AND HAVE NICE DAY …..
s
சத்துக்குறைவான உணவை உண்டு வருகிற பல லட்சம் ஏழைக் குழந்தைகள் தமிழ்நாட்டில் இருக்கும்போது ஒரு நடிகனின் கட்டவுட்டுக்கு ஒரு லாரி பாலால் அபிஷேகம் செய்வது அவசியமா?
இல்லை.அதே போல் சத்துக்குறைவான உணவை உண்டு வருகிற பல லட்சம் ஏழைக் குழந்தைகள் தமிழ்நாட்டில் இருக்கும்போது
இத்தனை சிலைகள், ஆட்சியாளர்களின் ஆடம்பரங்கள் தேவைதானா என்று கேட்பீர்களா?
mathi good work keep going
dont care about others
super adi
தோழி புதிய மாதவி அவர்களே!,
மதிமாறனுக்கு ஆதரவாக பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி, நம் தோழர்களுக்கு நாம் ஆதரவுக்கரம் நீட்டாமல் வேறு யார் நீட்டுவார்.
ஆனால், அது என்ன பின்னூட்டத்தின் நடுவே
>>I too respect poet Bharathi. many times iam not agree with Mr.mathimaaran.
ஏன் பாரதியை ஆதரிக்கிறீர்கள் அதையும் குறிப்பிட்டிருக்க வேண்டாமா?
மதிமாறன் கருத்தோடு பலமுறை ஒத்து போவதில்லை என்று தெரிவித்திருக்கிறீர்கள்,எந்த கருத்தோடு என்று தெளிவு படுத்தி இருக்க வேண்டாமா?
இந்த பின்னூட்டம் மூலம் நீங்கள் தெரிவிப்பது ஆதரவா? எதிர்ப்பா?
ஏன் இந்த இரட்டை நிலை. தெளிவு படுத்தவும்.
நேற்று மனுஸ்மிருதி படித்து கொண்டிருந்தேன், அதில் கூறப்பட்டிருக்கிறது, சூத்திரன் என்பவன் தாசன் என்று தன் பெயரோடு சேர்த்து வைத்து கொள்ள வேண்டுமாம். இதனூடே பாரதிதாசனின் பெயர் நினைவுக்கு வந்தது, ஆமாம் நான் சூத்திரன்தான் என்று பாரதிதாசன் ஒத்துகொள்வது போல் இருந்தது. (அவர் புரட்சி கண்ணோட்டம் பெயரில் மட்டும் இடிக்கிறதே பாரதி இருப்பதாலோ என்னவோ?)
இதில் பெரியார்தாசனும் விதிவிலக்கல்ல. பெரியார் யாரும் தாசனாக, சூத்திரனாக இருக்க வேண்டும் என்று விரும்பியதில்லை. இதில் தனக்கே ஒரு தாசன் என்றால் மிகவும் வருத்தப்பட்டிருப்பார். சூத்திரன் என்ற இழிவே கூடாது என்றுதானே தன் இறுதி மூச்சுவரை உழைத்தார்……..
தோழர்கள் யாரும் தயவு கூர்ந்து யாருக்கு தாசனாக இருக்க வேண்டாம்(பெயரளவில்கூட) என்று கேட்டுக்கொள்கிறேன்.
i stand by you mathimaran. we shall not be bullied by these cheap people
hello AR Rahman, sutha tamilan. DRAVIDAN
Dear Mathimaran , wish you to talk and write more for Periyar dravidam , you are true on your speech and writing for humanity,