‘புதிய ஆண் – பெண் வாழ்க்கை’

மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழே வா? தொடர்ச்சி – 2

முற்போக்கு போர்வையில், சில நேரங்களில் மார்க்சியத்தின் பேரிலும் நடக்கிற இந்த ஆபாசக் கூத்தை, தலைவர் லெனின் கடுமையாகக் கண்டிக்கிறார், கிளாரா ஜெட்கினுடன் நடந்த உரையாடலில்:

‘‘ஆண் & பெண் உறவுகள் பற்றி வியன்னாவிலுள்ள ஒரு கம்யூனிஸ்ட் நூலாசிரியை எழுதியுள்ள புத்தகம், இங்கு மிகவும் பிரபலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் புத்தகம் எத்தகைய குப்பைக் கூளம்!

இந்த நூலில், ப்ராய்டின் சித்தாந்தம் பற்றிக் குறிப்பிட்டிருப்பது அறிவியல் மணம் இருப்பதைக் காட்டி ஏமாற்றவேயாகும், இந்த நூல் ஒரு கேவலமான குப்பையாகவே இருக்கிறது. ப்ராய்டின் சித்தாந்தம், இப்பொழுது ஒரு புது மோகம் போல இருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் சாணிக்குவியலிலிருந்து இத்தனை செழிப்பாக முளைத்தெழுந்துள்ள – இங்கே குறிப்பிட்ட நூலிலும், இதைப் போன்ற நூல்கள், கட்டுரைகள், அறிவியல் பத்திரிகைகள் இவற்றில் வெளியிடப்பட்டுள்ள ஆண் – பெண் உறவு பற்றிய கொள்கைகள் பற்றியும் எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்தியப் பக்கிரி ஒருவன் தனது தொப்புளைப் பற்றியே தன் சுயநலத்தை நினைத்து கொண்டிருப்பது போல, எப்பொழுது பார்த்தாலும் ஆண் – பெண் உறவு பற்றிய பிரச்சினைகளில் இடைவிடாமல் மூழ்கிக் கிடப்பவர்களையும் நான் நம்பவில்லை. இவ்வாறு ஆண் – பெண் உறவிலேயே அளவுக்கு மீறி அபரிதமாகக் காணும் சித்தாந்தங்கள், பெரும்பாலும் உத்தேசங்கள் மட்டுமே. பெரும்பாலும் எதேச்சதிகாரமான போக்குகளே. இவை எல்லாம் சொந்தத் தேவையிலிருந்து எழுபவையேயாகும். முதலாளித்துவ ஒழுக்க முறையின் முன்னால், தனது அசாதாரணமான அளவு மீறிய ஆண் – பெண் உறவு வாழ்க்கையை நியாயப்படுத்துவதற்கும், தன்னோடு பிறர் சகிப்புத் தன்மை காட்ட வேண்டும் என்று கோரியுமே இவற்றை எழுப்புகின்றனர்.

ஆண் – பெண் உறவுகள் பற்றிய பிரச்சனைகளில் ஆழ முழுகிக்கிடப்பது எத்தனை வெறுக்கத்தக்கதாக இருக்கிறதோ, அதே போல முதலாளித்துவ ஒழுக்க முறைக்குத் திரைகட்டி மதிப்புக் கொடுக்க முயல்வதும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது.

‘இந்த முயற்சி கலகமயமானது; புரட்சிகரமானது’ என்று வெளித்தோற்றத்தில் மிகையாகக் காணப்பட்டாலும், இறுதியாக இது முற்றிலும் முதலாளித்துவப் போக்கில் செல்வதாகவே அமையும். இந்தப் பொழுது போக்கு வேலையை சிறப்பாக அறிவு ஜீவிகளும் அவர்களது வர்க்கத்தோடு ஒட்டிய உறவுகள் வட்டத்தில் உள்ளவர்களுமே மிகவும் விரும்புகிறார்கள்.

பிரதானமான சமூகப் பிரச்சினையில் ஒரு பகுதியான ஆண் – பெண் உறவு, விவாகம் முதலிய பிரச்சினைகள் என்று மீண்டும் எடுத்துக் கொள்ள முடியாத ஒரு நிலைமையில்தான் இது கொண்டு போய்விடும். இதற்கு மாறாக, மிகப் பெரிய சமூகப் பிரச்சினை ஆண் – பெண் உறவுப் பிரச்சினையின் ஒரு பகுதியாகி அதன் அனுபந்தமாகக் கருதப்படும் நிலை ஏற்பட ஏதுவாகும். பிரதானமான பிரச்சனை பின்னணிக்குத் தள்ளப்பட்டு, இரண்டாந்தரப் பிரச்சினையாகிறது. இதனால் இந்தப் பிரச்சினையில் தெளிவு ஏற்படாமல் தவிப்பது மட்டுமல்ல, பொதுவாக சிந்தனையையே மூட்டமிட்டு மறைப்பதுடன் தொழிலாளி மற்றும் பெண்களின் வர்க்க பேதத்தையும் ஒளித்து மறைக்கும் நிலை நேருகிறது.

மேலும், ஒரு கருத்தை இங்கே குறிப்பிடுவது மிகையாக இருக்காது. ஒவ்வொன்றுக்கும் உரிய காலமுண்டு என்று அறிவாளியான சாலமன் நமக்குக் கூறியிருக்கிறார். தொழிலாளி மாதக் கணக்கில் ஒரேடியாக காதல் செய்வது எப்படி? காதலிக்கப்படுவது எப்படி? மணக்கக் கேட்பது எப்படி? என்ற விஷயங்களில் மும்முரமாக இறங்கச் செய்வதற்கு இதுதான் நேரமா?

முதலாளித்துவ சாயம் பூசிய முட்டைகளிலிருந்து வெளிவரும் மஞ்சள் மூக்கு குஞ்சுகள் மெத்தக் கெட்டிக்காரர்கள்தான். நமது வழிகளைத் திருத்திக் கொள்ளாமல் இந்த நிலைமையை ஏற்க வேண்டியது அவசியமே. ஆண் – பெண் உறவு பற்றிய நவீன விளக்கத்தின் விளைவாகவும், அதில் அளவு மீறிய அக்கறை காட்டியதாலும் இளைஞரியக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களிடம் துறவியின் புலனடக்கம் பற்றியும், குப்பைத் தனமான முதலாளித்துவ ஒழுக்க முறையின் புனிதத் தன்மையைப் பற்றியும் போதனை செய்வதை விடப் பொய்யான வேலை வேறு எதுவும் இல்லை. என்றாலும், இந்த நாட்கலில் ஆண் – பெண் உறவுப் பிரச்சினைகள் இயற்கையான காரணங்களால் வலுக்கட்டாயமாக முன்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது இளைஞர் மனநிலையின் நடு அம்சமாக ஆகி வருகின்றன. இது நல்லதுதான் என்று ஒருவர் கூறுவது அரிது. இதன் விளைவுகள் சில நேரங்களில் படுநாசகரமானவையாக முடியும்.

ஆண் – பெண் வாழ்க்கை உறவு பற்றிய பிரச்சினைகளில் இளைஞர்களின் மாறுபட்ட போக்குகள், கொள்கையின் பேரிலுள்ள கோட்பாடு விஷயத்தை அடிப்படையாக்கியே எழுந்துள்ளன. பலர் தாம் எடுத்துக் கொண்டுள்ள நிலைமை ‘புரட்சிகரமானவை’ கம்யூனிஸ் நிலைமை’ என்று கூறுகிறார்கள். இது அப்படித்தான் என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள்.

நான் ஒரு கிழவன். இதை என் மனது ஏற்கவில்லை. நான் எக்காரணம் கொண்டும் ஒரு துக்கம் நிறைந்த துறவியாக இல்லை. என்றாலும், இளைஞர்களின் இந்தப் ‘புதிய ஆண் – பெண் வாழ்க்கை’ என்று அடிக்கடி அழைக்கப்படும் இந்த விஷயத்தை, வயது வந்தோரும் அடிக்கடி சுட்டிக்காட்டுவது முற்றிலுமாக முதலாளித்துவப் போக்குள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது.

கம்யூனிஸ்டுகளாகிய நாம் புரிந்து கொண்டுள்ள வகையில் சுதந்திரமான காதலின் சிறு சுவடு கூட இதில் இல்லை. கம்யூனிஸ்ட் சமூகத்தில் ஒருவர் தமது ஆண் – பெண் உறவு இன்பத்தை அனுபவிப்பதும், காதலுக்காக ஏங்குவதும், எல்லாம் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிப்பது போல சாதாரணமானது. சில்லறை வேலை என்று பெயர் போன கொள்கை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். நமது இளைஞர்கள் இந்த ‘ஒரு கிளாஸ் தண்ணீர்’ கொள்கை பற்றியப் பித்தேறி – முழு பித்தேறி அலைகிறார்கள்.

இது, பல இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அழிவைத் தந்திருக்கிறது. இதனை வலியுறுத்துகிறவர்கள், இதுவும் மார்க்சிய சித்தாந்தம் என்று கூறுகின்றனர். சமூகத்திலுள்ள சித்தாந்த ரீதியான சகல போக்குகளையும் மாறுதல்களையும் நேரடியாக தவறவிடாமல், ஒரே ஒரு அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் இருப்பதாகக் கூறும் அத்தகைய மார்க்சியத்திற்கு நல்லது நடக்கட்டும். இது அத்தனை எளிதான விஷயமல்ல. இந்த உண்மையை, வரலாற்று இயல் பொருள் முதல் வாதம் தொடர்பான உண்மையை, நீண்ட நாட்களுக்கு முன்னால் பிரடரிக் ஏங்கெல்ஸ் நிரூபித்திருக்கிறார்.

பெயர்போனதான ‘ஒரு கிளாஸ் தண்ணீர்’ கொள்கையை நான் மார்க்சிஸ்ட் கொள்கை என்று கருதவில்லை. மாறாக, அது சமூக விரோதமானது என்று நினைக்கிறேன்.

ஆண் – பெண் வாழ்க்கையில் முக்கியமானது, இயற்கை உதவியுள்ள விஷயங்கள் மட்டுமல்ல, மேல் மட்டத்திலாயினும் சரி கீழ் மட்டத்திலாயினும் சரி, கலாச்சாரத்திலிருந்து வந்த கலவைப் பண்புகளும் முக்கியமானதாகின்றன. ஏங்கெல்ஸ் தனது ‘குடும்பத்தின் தொடக்கம்’ என்ற நூலில், சாதாரணமான ஆண் & பெண் காதலாக வளர்ச்சியடைந்து, உயர்ந்த தரத்தை எய்தியுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆண் – பெண் இரு சாராரிடையே உள்ள உறவுகள், வெறும் சமூகப் பொருளாதாரத்திற்கும் உடலின் தேவைக்கும் இடையே உள்ள விளையாட்டு மட்டுமல்ல. இந்த உறவுகளில் ஏற்படும் மாறுதல்களை, தத்துவத்துடன் உள்ள தொடர்பிலிருந்து தனிமைப்படுத்தி சமூகத்தின் பொருளாதார அடிப்படையுடன் மட்டும் பொருத்துவது மார்க்சியமாகாது. அது பகுத்தறிவு வாதமாகும். தாகத்தை தணிக்க வேண்டியதுதான். ஆனால், எளிய மனிதன் சாதாரணமாக உள்ள நிலையில் சாக்கடைக்குள் படுத்து – ஒரு சேற்றுமடைத் தண்ணீரைக் குடிப்பானா? பல எச்சிற்படுத்திக் குடித்த கிளாசிலிருந்து குடிக்க விரும்புவானா?

சமூக அம்சம்தான் இதில் மிக மிக முக்கியமானது. தண்ணீர் குடிப்பது என்பது தனி ஒருவரின் விஷயம். ஆனால், காதல் செய்வதில் இரண்டு பேர் பங்கு கொள்கின்றனர். மூன்றாவது புது உயிர் பிறக்கிறது. இங்குதான் சமூக நல உரிமை கூட்டான அமைப்போடு உள்ள கடமை இவை எல்லாம் எழுகின்றன.

‘விடுதலை பெற்ற காதல்’ என்ற ஆழமான முத்திரையுடன் காணப்பட்ட பொழுதும் ‘ஒரு கிளாஸ் தண்ணீர்’ கொள்கையை ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் நான் விரும்பவில்லை. மேலும் இது புதிதுமல்ல, கம்யூனிசம் அடிப்படையானதுமல்ல.’’

கிளாராஜெட்கினின் ‘லெனின் நினைவுக்குறிப்புகள்’ என்ற நூலிலிருந்து. வே.மதிமாறன்

தலித் முரசு பிப்ரவரி 2003 ல் எழுதியது

மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழே வா?

 

 

கஜுரோஹா சிற்பங்களை இங்கே வைப்பது அநாகரீகமாக இருக்கும் என்பதால்… இந்த படத்தை வைச்சித் தொலைக்கிறோம்.
.
கட்டுடைக்கிறார்கள் கடவுள்கள்

பாலியல் உறவுகள் பற்றி பகிரங்கமாக எழுதி கலகக் குரலை (முக்கல் & முனகலோ) ஏற்படுத்திக் கட்டுடைப்பது; ஆண்&பெண் பிறப்பு உறுப்புகளைப் போற்ற வேண்டும். உடலைக் குறித்து உயர் மதிப்பீடு வேண்டும். அப்போதுதான் சமூக அக்கறை கூடுதல் வலுப்பெறும்.’’

 

ஓரினச் சேர்க்கை என்பது ஆணாதிக்கத்தைத் தகர்ப்பது. அது பெண்ணுரிமை அல்லது ஆணின் உரிமை இப்படி மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேதான் இருக்கிறது என்பது மாதிரியான போக்கு – இன்றைய இலக்கிய, தத்துவ(?) சூழலில் நவீனத்துவத்திற்கும், பிந்தைய நவீனத்துவமாக இன்னும் வெவ்வேறு பெயர்களில் விளக்கப்படுகிறது.

 

இந்த உறுப்புகளின் உறவு குறித்தும், உறுப்புகளின் நலன் விசாரிப்புக் குறித்தும் தீவிரமாக எழுதுகிற இந்த டிகிரி எழுத்தாளர்கள் & சரோஜாதேவியின் பிழைப்பைக் கெடுத்து, ‘பருவ காலம், ‘விருந்து இதழ்களின் விற்பனையை பாதித்திருக்கிறார்கள்.

 

ஆம், சரோஜாதேவி, ‘பருவகாலம், ‘விருந்து & இவைகளின் இலக்கிய வடிவமே இந்த டிகிரி எழுத்தாளர்கள். சரோஜாதேவியும், ‘விருந்தும் தடை செய்யப்பட்ட தலைமறைவு இயக்கப் பத்திரிகைகள்; எழுத்தாளர்கள் (UG Movement)

பிந்தைய நவீனத்துவ டிகிரி எழுத்தாளர்கள்; பத்திரிகைகள், வெகுஜன இயக்கப் பிரச்சார பீரங்கிகள்!

 

சரி, இப்படி கட்டுடைத்துக் கலகம் செய்யும் எழுத்தை, தத்துவத்தை (?) மதங்கள் எப்படிப் பார்க்கின்றன என்பதைக் கொஞ்சம் பார்ப்போம். (தத்துவத்திற்கு முன்னால் கேள்விக்குறி போட்டிருப்பது, ‘தத்துவங்களை எல்லாம் கேள்விக்குட்படுத்த வேண்டும்என்ற பின் நவீனத்துவ பாணியில் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக!)

 

இஸ்லாம்: இந்த பிந்தைய நவீனத்துவத்தை அல்லது வேறு, வேறு பெயர்களில் அழைக்கப்படுகிற இந்த ஆபாசத்ததுவத்தை(?) தனது இடது காலால் எட்டி உதைக்கிறது.

 

கிறித்துவம்: கட்டுடைத்தலிடம் பழைய ஏற்பாடு கொஞ்சம் பாசம் காட்டினாலும், புதிய ஏற்பாடு தூரப்போ சாத்தானே என்று விரட்டி அடிக்கிறது.

 

இந்து மதம்: கை கொட்டி சிரிக்கிறது. அடப்பாவிகளா, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எங்க வேதத்திலேயும், புராணத்திலேயும் நாங்க கட்டுடைச்சதில பாதிகூட நீங்க உடைக்கல, அதுக்குள்ளே ரொம்ப பீத்திக்கிறீங்களே?’

 

எங்க பாஞ்சாலி அய்ந்து கணவன்களோட ஒரே வீட்டில் வாழ்ந்தாள்; எங்க பிரம்மா மானோட உறவு கொண்டார், மகளோடு உறவு கொண்டார்; மாமனும் மச்சானுமான சிவனும் & திருமாலும் செய்யாத ஓரினச் சேர்க்கையா நீங்க செஞ்சிடப் போறீங்க? அவுங்க ஓமோ செக்ஸ்ல ஈடுபட்டு அய்யப்பன்னு ஒரு சக்தி மிக்க புள்ளையையே பெத்தவங்க.

 

சிவனும் & பார்வதியும் ஆண் & பெண் குறிகளாக மாறி இன்னும் சிவலிங்கமாக இருந்து மக்களுக்கு அருள் பாலிக்கிறாங்க. எங்க இயற்பகை நாயனாரை, ஊரே கூடி உதைக்க வந்த போதும் அஞ்சாமல், தன் பொண்டாட்டிய சிவனடியாருக்கு கூட்டிக் கொடுத்தாரு.

 

கொழந்தையிலேயே கொய்யாப் பழமான திருஞான சம்பந்தரு, ‘கடவுள் இல்லைன்னு சொல்றவன் பொண்டாட்டிக் கூட நான் படுக்கனும்னு அற்புதமான தமிழால், ரொம்ப நாகரீகமாக பாட்டெழுதினாறு.

 

இன்னும் கோயில் சிற்பங்களில் உடல் உறவுக் காட்சிகளை தத்ரூபமாக சித்தரிச்சி, எங்க புனிதத்தை நாங்களை உடைச்சிருக்கோம். உலகத்தில வேறு எந்த மதக் கோயிலாவது இதை பார்க்க முடியுமா? நீங்கள் என்ன பெரிய மஞ்சள் கலர் எழுத்தாளர்? எங்க ஆண்டாளு, ‘என் உடல் முழுதும் திருமாலுக்கே என பச்சைக் கலர்ல பாட்டெழுதி இருக்காங்க.

 

இப்படி மிகப் பழமை வாய்ந்த கலை, இலக்கியத்துக்கு வாரிசா இருக்கிற நீங்க, எங்கள இருட்டடிப்புப் பண்ணிட்டு, எங்கோ இருக்கிற வெள்ளை கிறிஸ்தவனுங்களோட பேரை எல்லாம் சொல்லி, ரொம்ப புதுசு மாதிரி பிந்தைய நவீனத்துவம்னு பொய் சொல்லி இந்து மதப் பெருமைகளை இருட்டடிப்பு செய்றீங்களே, நியாயமா இது?’’ என்ற உரிமையோடு கோபப்படுகிறது இந்து மதம்.

 

 

ஆம். வேதத்தின் & பார்ப்பனியத்தின் இந்த ஆபாசக் குவியலையும், ஒழுக்கக் கேட்டையும் கண்டித்து, புத்தர் ஒழுக்கத்தையும், நன்னடத்தையும் உயர்த்திப் பிடித்தார். அவர் வழி வந்த டாக்டர் அம்பேத்கரும் தலித் மக்களுக்கு கட்டளைகளாக ஒழுக்கத்தையும் & தூய்மையையும் வலியுறுத்தினார்.

 

கிராமங்களில் ஜாதி இந்துக்களின் முன்னால் வெள்ளையும் சொள்ளையுமாக தலித் மக்கள் போவதே, ஜாதி இந்துக்களின் ஜாதி திமிர்த்தனத்தை உடைப்பதாக இருக்கிறது. தேநீர்க் கடையில்தான் இரட்டை டம்ளர் முறை இருக்கிறது. சாராயக் கடையில் சகஜ நிலைதான். கல்யாணத்திற்குதான் ஜாதி பார்க்கிறார்கள். கள்ளக் காதலுக்கு ஜாதி பார்ப்பதில்லை.

 

சமூகம் எதையெல்லாம் கவுரவம் என்று கருதுகிறதோ, அங்கெல்லாம் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சமூகம் எதையெல்லாம் அகவுரவம் என்று கருதுகிறதோ அங்கெல்லாம் தலித் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது.

 

சாக்கடையை சுத்தப்படுத்துதல் போன்ற அரச உத்தியோகத்திற்கு தலித் மக்களைத் தவிர வேறு யாரும் விண்ணப்பிப்பது கூட இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

 

இந்த சமூகக் கட்டுகளை உடைத்துக் கொண்டு, தலித் மக்கள் உரிமைகளோடு எழும்போதே & ‘தன் கை மீறிப் போகிறார்கள் என்கிற பொறாமையே, வெறுப்பே, இயலாமையாக மாறி கோபமாக ஜாதி இந்துக்களிடம் வெளிப்படுகிறது.

இவற்றோடு, டாக்டர் அம்பேத்கர் சொன்ன தூய்மை என்கிற சொல்லப் பொருத்திப் பார்த்தால், அது எவ்வளவு அர்த்தமுள்ள வலுவான சொல்லென்று விளங்கும்.

 

தந்தை பெரியாரும், பக்திக்கு எதிரான நிலையில் ஒழுக்கத்தை நிறுத்தி, ‘ஒரு மனிதனுக்கு பக்தி முக்கியமா? ஒழுக்கம் முக்கியமா? என்பதோடு பக்தி, தனிமனித, சமூக ஒழுக்கத்திற்கு எதிரானது என்று நிறுவினார்.

 

முற்போக்கு போர்வையில், சில நேரங்களில் மார்க்சியத்தின் பேரிலும் நடக்கிற இந்த ஆபாசக் கூத்தை, தலைவர் லெனின் கடுமையாகக் கண்டிக்கிறார், கிளாரா ஜெட்கினுடன் நடந்த உரையாடலில்:

 

&தொடரும்

ஊதாரி ஓஷோவும் – நரமாமிச மோடியும்

கேள்வி வே. மதிமாறன் பதில்கள் நீங்கள்

இதுவரை உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். இனி இப்படியும் வைத்துக் கொள்ளலாம், என்னுடைய கேள்விகளுக்கு நீங்களும் பதில் சொல்லலாம். பொறுப்பற்ற பதில்களை பிரசுரிக்க முடியாது.

*

லகெங்கும் நடைபெற்ற ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டங்களைக் கொச்சைப் படுத்திய – கம்யூனிச எதிர்ப்பை, குறிப்பாக ஸ்டாலினிய எதிர்ப்பை தீவிரமாக கொண்ட ‘ஓஷோ’ என்கிற ரஜினிஷின் அல்லது ரஜினிஷ் என்கிற ‘ஓஷோ’வின் தத்துவங்களில் தன்னை கரைத்துக் கொண்டு காணாமல் போனதாக சொல்லுகிற சிந்தனையாளர்கள்(?)

இன்னொருபுறத்தில், கியூபா முதல் பாலஸ்தீனம் உட்பட ஈழம்வரை நடந்த, நடக்கின்ற யுதம் தாங்கிய போராட்டத்தை தீவிரமாக ஆதரிப்பதாக அறிவிக்கிறார்களே, இது அவர்களின் அறியாமையா? ஆர்வக்கோளாறா?

அமெரிக்கா போன்ற நாடுகளே வெறுக்கும் அளவிற்கு ஊதாரித்தனமான வாழ்க்கை முறையையும், ஒரு அரசு நடத்துகிற அளவிற்கு தன் ஆரசிமத்தில் சொத்துக்களையும் குவித்து வைத்திருந்த ‘ஓஷோ’வை பார்த்து மிரண்ட அமெரிக்க அரசு அவரை அங்கிருந்த அடித்து விரட்டியது.

இந்த நடவடிக்கையை வைத்து ‘ஓஷோ’வை ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக சித்தரித்தன ஆர்வக் கோளாறுகள் அல்லது அறியாமை அறிவுஜீவிகள்.

அப்படியானால், அமெரிக்காவிற்குள் நுழைவதற்கே அனுமதி மறுக்கப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த நரமாமிச ‘மோடி ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத் தலைவரா?

கேள்விகள் தொடரும்

பெரியாரின் ஊழல்

பெரியார் .வெ.ரா காங்கிரசில் இருந்தபோது பெரிய அளவில் ஊழல் செய்து பெரும் பணத்துடன் கட்சியில் இருந்து கம்பி நீட்டி விட்டார் என்று சொல்கிறார்களே உண்மையா?

முகமது இலியாஸ்

இதே கேள்வியை பெரியாரிடம் கேட்டபோது,

“காங்கரசில் சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்ற பெரியவர்கள் எல்லாம் இருக்கும்போது அவர்களை மீறி நான் பணத்தைத் திருடி கொண்டு வருவது நடக்கிற காரியமா?” என்று பதில் சொல்லியிருக்கிறார்.

காந்தியை கொன்ற கோட்சே என்கிற பார்ப்பான், கொலை பழி இஸ்லாமியர்கள் மீது வரவேண்டும் என்பதற்காக கொலை செய்வதற்கு முன் சுன்னத் செய்துகொண்டு இஸ்லாமிய அடையாளத்தோடு காந்தியை கொன்றானே, அதேமுறையை பின்பற்றி ‘முகமதுஇலியாஸ்’ என்கிற பெயருக்குப் பின்னால் ஒளிந்திருக்கிற அம்பி, ஆதரமற்று தன் மீது அவதூறாக கேட்கப்பட்ட கேள்விக்கு தன் பாணியில் பெரியார் சொன்ன பதில் அது.

உங்கள் கேள்விக்கு என் பாணியில் ஒரு எதிர்கேள்வி கேட்கவா?

நீங்கள் 10 பெண்களை வைத்துக் கொண்டு வீட்டிலேயே விபச்சாரம் செய்வதாக சொல்கிறார்களே உண்மையா?

தொடர்புடையது:

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

நூல் அறிமுக விழா உரைகள்

வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா உரைகள்

 

 

கவிஞர் தமிழேந்தி

தோழர் விடுதலை ராசேந்திரன்

பேராசிரியர் பெரியார்தாசன்

தோழர் கொளத்தூர் மணி

தோழர் மருதையன்

 

இவர்கள் நூல் அறிமுக விழாவில் பேசிய உரைகள் இரண்டு மணி நேர குறுந் தகடாக ( M.P.3 ) விற்பனைக்கு வந்துள்ளது.

 

வெளியீடு:

 

அங்குசம்

எண்: 15, எழுத்துக்காரன் தெரு

திருவொற்றியூர்

சென்னை – 600 019.

 

‘அங்குசம்’ ஞா. டார்வின் தாசன்

தொலைபேசி : 9444 33 7384

angusam.darwin@gmail.com

 

விலை ரூ. 35

 

வெளிநாட்டு தொகையும் & தபால் செலவும் தனி

 

ஐந்து சி.டிகளுக்கு மேல் வாங்குபர்களுக்கு 25 சதவீதம் கழிவுண்டு

 

கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை கண்டித்து காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கம்யூனிஸ்ட்டுகள் வாபஸ் பெற்றது பாராட்டுக்குரியதுதானே?
-கண்மணி

ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தில், கவுண்டமணியை அவர் மனைவி கதவைச் சாத்திவிட்டு கையை முறுக்கி குத்து குத்துன்னு குத்துவார்.

கவுண்டமணி ‘அய்யோ, அம்மா’ என்று கத்துவதற்கு பதில்,

“யார் கிட்ட வைச்சுக்கிற. என் கிட்ட வைச்சிகிட்ட அவ்வளவுதான். உன்ன கொன்னுபுடுவேன் கொன்னு.” என்று ஒரு பில்டப் சவுண்ட கொடுப்பாரு.

பூட்டிய  கதவுக்கு வெளிய நிக்கிற ஜனங்கள் எல்லாம், ‘பொண்டாட்டிய போட்டு எப்படி அடிக்கிறான்?’ என்று பதட்டதுடன் பேசிக் கொள்வார்கள்.

வலி தாங்க முடியாத கவுண்டமணி, கையில ஒரு அருவாள தூக்கிக்கிட்டு    “உன் தலைய வெட்டமா விடமாட்டேன்” என்ற சவடால் சத்ததுடன்  கதவை திறந்துக்கிட்டு ஒரே ஓட்டமா ஓடுவாரு.

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்த பிரச்சினையில், காங்கிரஸ்காரர்கள் கம்யூனிஸ்ட்டுகளை வெளியே போகச் சொல்லி ரொம்ப நாள் ஆகுது. ‘கம்யூனிஸ்ட்டுகள் வாபஸ் வாங்குறதால ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்ல’ என்று காங்கிரஸ் பலமுறை சொல்லியாச்சு.

ஆனால் இவர்கள்தான் இழுத்துக் கொண்டே இருந்தார்கள்.

‘காங்கிரஸ் சொல்லி போன மாதிரி இருக்கக்கூடாது’ என்பதற்காகத்தான் கம்யூனிஸ்ட்டுகள் இப்படி பில்டப் சவுண்ட் கொடுத்துக் கொண்டு வெளியே வருகிறார்கள்.

இந்த பில்டப்பை நிரூபிப்பது போல் வெளியே போவதாக அறிவித்த இரண்டு நாட்களுக்குள், ஜோதிபாசு, சோம்நாத் சட்டர்ஜி போன்றவர்கள் ‘ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவத்ததை திரும்பப் பெறவேண்டும். காங்கிரசுக்கு ஆதரவை அளிக்க வேண்டும்’ என்று கோஷ்டியாக உடைந்திருக்கிறார்கள்.

இந்தியாவை சூழப்போகிற  அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்த இருள், கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவுடன் நிறைவேறினாலும் ஆச்சரியமில்லை.

அதற்கும் கவுண்டமணியிடம் நல்ல வசனம் இருக்கிறது…

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா…

பின்னினைப்பு :

“அது போன மாசம்… ”   – சோம்நாத் சட்டர்ஜி

இது வடிவேலு ஸ்டைல்

புதுடெல்லி, ஏப். 25- தனது எச்சரிக்கையையும் மீறி பகுஜன் சமாஜ் எம்.பி. தொடர்ந்து அமளி செய்ததால் ஆவேசம் அடைந்த மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, எனக்கு இந்த பதவியே வேண்டாம். என்னை விடுவியுங்கள் என்று கூறினார்.
– விடுதலை நாளிதழ்,  ஏப்பரல் 25, 2008

கொல்கத்தா, ஜூலை 14:
சபாநாயகர் பதவி, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதனால், பதவி விலக மாட்டேன், என்று சோம்நாத் சட்டர்ஜி அறிவித்திருந்தார்.
– தினகரன் சூலை 14, 2008

வ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம் – ராஜாஜியின் பச்சைத் துரோகம்

ுதேசிப் ோர் கப்பல்தளபதி-3

ன்றைய சென்னை மாகாண காங்கிரசில் ..சிக்கு இணையான தியாகியோ, போர்க்குணமுள்ள தலைவரோ கிடையாது. எனினும் ..சி க்கு உரிய மரியாதையை காங்கிரஸ் தரவில்லை. அது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து வெளியேறிய பின், கேரளத்தின் மாப்ளா எழுச்சியை ஆதரித்து கோவையில் பேசியதற்காக ..சி மீது அரசதுரோக வழக்கு தொடுத்தது பிரிட்டிஷ் அரசு.

ந்த வழக்கை எதிர்கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை. ..சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த இந்த வெறுப்பிற்கு வேறொரு வலுவான காரணம் உண்டு.

1925 ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழக அரசியலை இரண்டாகப் பிளக்கிறது.

19.6.27 அன்று கோவில்பட்டியில் நடந்த ஒரு கூட்டத் தில் பெரியாருடன் வ..சியும் கலந்து கொள்கிறார். எனது தலைவர்என்று பெரியாரை பெருமையுடன் குறிப்பிட்டுப் பேசுகிறார். பின்னர் பேசிய பெரியார், தனக்கேயுரிய பண்போடு அதை மறுக்கிறார். (குடி அரசு, 26.6.27)

பின்னர் காங்கிரசில் மீண்டும் இணைந்த ..சி, 1927 சேலம் காங்கிரஸ் மாநாட்டில்இம்மகாநாட்டில் குழுமியுள்ளோரில் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர். நானும் பிராமணரல்லாதார்தான்என்று பேசுகிறார்.

1928 இல் காரைக்குடியில் சைவ சமயத்தோர் மத்தியில் பேசும்போது அவருடைய பேச்சில் பெரியாரின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது.

பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் மனுஸ்மிருதியையும் கண்டிக்கிறார். சிரார்த்தம் செய்வதைக் கேலி செய்கிறார். பார்ப்பான் என்ற சொல்லை எதிர்ப்பாகவே பயன்படுத்துகிறார். பெண்களின் உரிமை பற்றிப் பேசுகிறார். “தவறு என்று தெரிந்தால் வள்ளுவரென்ன, சிவபெருமானே ஆனாலும் தள்ளி வைக்க வேண்டியதுதான்என்று பேசுகிறார்.

சிறையில் இருந்த போது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரது குறிப்புகளே கூறுகின்றன. “”பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்என்று ஜெயிலரிடம் போராடிய ..சி, பெரியாரின் தாக்கத்தால் பெருமளவு உருமாறியிருக்கிறார் என்பதை மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

..சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த வெறுப்புக்கான காரணத்தை இனிமேலும் விளக்கத் தேவையில்லை. 1936இல் ..சி இறந்த பிறகும் அவர் மீதான வெறுப்பை காங்கிரஸ் கைவிடவில்லை.

திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் கட்டுக்கடங்காத காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தவரான .பொ.சி தன் அனுபவத்தை எழுதுகிறார்.

1939 இல் ..சிக்கு ஒரு சிலை வைக்க ம.பொ.சி முயன்றபோது காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுக்கிறார் சத்தியமூர்த்தி. “வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் ஜஸ்டிஸ் கட்சிக்காரரான வ..சிக்கு காங்கிரஸ் மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று (என் மீது) பழி சுமத்தினார் சத்தியமூர்த்திஎன்று எழுதுகிறார் .பொ.சி.

பிறகு, வேறு வழியில்லாமல் ..சியை காங்கிரஸ் கவுரவிக்கமுயன்றபோது அது அவரை மிகக் கேவலமாக இழிவுபடுத்துவதாக அமைந்தது.

1949இல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே ..சி யின் பெயரில் கப்பல் விடப்படுகிறது. துவக்க விழாவில் பேசினார் அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி:

கோரல் மில்ஸ், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி இவற்றின் ஒத்துழைப்புடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும்இந்தக் கப்பல் போக்குவரத்தை இன்று நான் ஆரம்பித்து வைக்கிறேன்…. நம் நாடு முழு விடுதலை பெற்று விட்டது. ஹார்வி கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இன்று நான் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன்சிதம்பரம் பிள்ளை ஆனந்தக் கண்ணீர் ததும்பத் தம் பெரிய கண்களை அகல விரித்து இந்த விழாவையும் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறதுஎன்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் இந்த பச்சைத் துரோகத்தை பெருமை பொங்க விவரித்தார்.

இறந்தவர் மீண்டும் வரக் கூடுமென்றால், ..சி தனது பெரிய கண்கள் சிவக்க இந்தப் பச்சைத் துரோகத்துக்காக ராஜாஜியின் குரல் வளையைக் கடித்துக் குதறியிருப்பார்.

அவர் உயிருடன் இருந்த போதே அவர் துவங்கிய கப்பல் கம்பெனி நலிவுற்றது. “”நான் தோற்றுவித்த கப்பல் கம்பெனி நசித்தபின் எங்கள் கம்பெனியைச் சேர்ந்த ஒரு கப்பலை எங்கள் எதிரியான பி..எஸ்.என் கம்பெனியாரிடமே அப்போதிருந்த சுதேசிக் கப்பல் அதிகாரிகள் விற்று விட்டது எனது உடைந்த மனதில் உதிரம் பெருகச் செய்தது என்று குமுறினார் ..சி.

எந்த எதிரிகளை எதிர்த்து ..சி கப்பல் விட்டாரோ, அந்த எதிரியின் தயவிலேயே கப்பல் விட்டு அதற்கு அவரது பெயரையும் சூட்டிக் களங்கப் படுத்தியது சுதந்திரஇந்தியா. தன்னுடைய சித்திரவதைகள் மூலம் ..சியின் உடலிலிருந்துதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ரத்தம் குடிக்க முடிந்தது. காங்கிரஸ் துரோகிகளோ, தேச விடுதலைக்காகத் துடித்து அடங்கிய அந்த உள்ளத்தையும் உடைத்து ரத்தம் குடித்துவிட்டார்கள்.

வே. மதிமாறன்

புதிய கலாச்சாரம் 2006

திருநெல்வேலியே திகு திகுவெனத் தீப்பற்றி எரிகிறது

சுதேசிப் போர் கப்பல் தளபதி-2 

  

ன்றைய காங்கிரஸ் கட்சியின் திலகர் அணியைச் சேர்ந்த விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலை அடைந்த நாளை சுயராச்சிய நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்படுகிறது. தடை விதிக்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 மார்ச் 10ம் நாள் ..சி, சிவா, பத்மநாபன் ஆகியோர் தலைமையில் தடை உத்தரவை மீறுகிறார்கள் மக்கள். வெறி கொண்ட விஞ்ச் மூவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறான்.

உடனே திருநெல்வேலியின் கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. ..சி யின் தீவிர விசுவாசியான ஏட்டு குருநாத அய்யர், திறந்திருக்கும் கடைகளையெல்லாம் மூடுமாறு மிரட்டுகிறார். இதனால் தன் வேலையையும் இழந்து சிறைக்கும் செல்கிறார்.

சுமார் 4000 பேர் கொண்ட மக்கள் கூட்டம் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு கல்லூரியை இழுத்து மூடுகிறது. கல்லூரி முதல்வர் எர்ஃபர்டு தப்பி ஓடி அருகில் இருந்த பாரி கம்பெனிக்குள் ஒளிந்து கொள்கிறார்.

பிறகு அந்த மக்கள் கூட்டம் நகரமன்ற அலுவலகம், அஞ்சலகம், காவல் நிலையம், மண்ணெண்ணெய்க் கிடங்கு ஆகிய அனைத்துக்கும் தீ வைத்துக் கொளுத்துகிறது. திருநெல்வேலியே திகு திகுவெனத் தீப்பற்றி எரிகிறது.

எழுச்சி கொண்ட கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போலீசு ஆயத்தமானபோது “”எங்களோடு சேர்ந்து கொண்டு வெள்ளையரைச் சுடுங்கள்என்று போலீசைக் கோருகிறார்கள் மக்கள். தூத்துக்குடியிலும் கடையடைப்பு. வீடுகளின் மாடிகளிலிருந்து போலீசார் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்படுகின்றன. தமது முக்கிய வாடிக்கையாளர்களான வெள்ளையர்களை எதிர்த்தும் கசாப்புக் கடைக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

வேலைநிறுத்தம் முடிந்து 3 நாட்கள் முன்புதான் பணிக்குத் திரும்பியிருந்த கோரல் ஆலைத் தொழிலாளர்கள் கைதுக்கு எதிராக மீண்டும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

..சி, சிவா இருவர் மீதும் அரசு நிந்தனை வழக்கு தொடர்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 சூன் 7ஆம் நாளன்று “”..சிக்கு ஆயுள் மற்றும் நாடு கடத்தல் தண்டனைவிதிக்கிறான் நீதிபதி பின்ஹே. அந்தமான் சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக நாடு கடத்தல் தவிர்க்கப்படுகிறது. ஆனாலும் கடும் குற்றவாளிகளுக்கு அணிவிக்கின்ற இரும்பு வளையத்தை ..சி யின் காலில் அணிவிக்கிறது பாளை சிறை நிர்வாகம். கோவை, கண்ணனூர் என அவருடைய சிறைவாசம் தொடர்கிறது. அங்கே கைதிகளின் மீதான சிறைக் கொடுமைகளுக்கு எதிராக ..சி.யின் போராட்டமும் தொடர்கிறது.  

மேல் முறையீட்டில் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, 1912 டிசம்பர் 24 அன்று கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலையான ..சி.க்குக் கிடைத்த வரவேற்பு, காங்கிரஸ் இயக்கத்தின் கையாலாகாத்தனத்தைக் காட்டியது. சுப்பிரமணிய சிவா, கணபதிப் பிள்ளை என்ற இருவரைத் தவிர ..சியை வரவேற்கக்கூட யாரும் வரவில்லை.

சிறைத்தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடரும் உரிமை ..சி.யிடமிருந்து பறிக்கப் பட்டு விட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற அவர் மளிகைக் கடை நடத்தினார், மண்ணெண்ணெய் விற்றார், அரிசி, நெய் வியாபாரங்கள் செய்து பார்த்தார். வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் கம்பெனியே நடத்திய ..சி.க்கு கடை நடத்தத் தெரியவில்லை. அரசியல் தெரிந்த அளவுக்கு அவருக்கு வியாபாரம் தெரியவில்லை. எனினும் வறுமை அவருடைய அரசியல் ஈடுபாட்டைக் குறைத்துவிடவுமில்லை.

சென்னை, பெரம்பூரில் மளிகைக் கடை வைத்திருந்தபோதுதான் தபால் ஊழியர் சங்கத்தை உருவாக்கினார்.

அந்தக் காலத்தில் தொழிற்சங்கங்களிலும் காங்கிரஸ் தலைவர்களிடமும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அன்னிபெசன்டை எதிர்த்தார். “”மக்கள் எழுச்சி வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழுவதைத் தடுக்கவே அன்னிபெசன்ட் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்என்று தொழிலாளர்களிடம் பேசினார். அன்னிபெசன்டோடு சேர்ந்து செயல்படுவதற்காக, தான் தலைவராகக் கருதிய திலகரையும் கண்டித்தார் ..சி.

காந்தியின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதபோதிலும் வேறு வழியின்றி அவர் காந்தியின் தலைமையை ஆதரித்தே பேசியிருக்கிறார். காந்தியுடன் கசப்பான தனிப்பட்ட அனுபவமும் அவருக்கு இருந்தது. சிறையிலிருந்து திரும்பிய ..சியின் குடும்ப வறுமை போக்க, 5000 ரூபாய் நிதி திரட்டி ..சியிடம் ஒப்படைக்கு மாறு காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த தமிழர்கள்.

 கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் காந்தி அந்தப் பணத்தை ..சியிடம் தரவேயில்லை. எனினும் ..சி. அதைப் பொருட்படுத்தவில்லை. காந்தியின் அகிம்சைக் கொள்கைதான் அவரைப் பெரிதும் இம்சை செய்திருக்கிறது.

 

சிறுவயல் என்ற கிராமத்தில் .ஜீவா நடத்திவந்த ஆசிரமத்துக்குச் சென்றிருக் கிறார் ..சி. அங்கிருந்த ராட்டை களைப் பார்த்துவிட்டு, “”இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?” என்று ஜீவாவைக் கேட்கிறார். “”ஆம்என்று அவர் சொன்னவுடன், “”முட்டாள் தனமான நிறுவனம். வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே என்று கோபப்பட்டிருக் கிறார். இந்த உணர்வோடுதான் காங்கிரசில் இருந்திருக்கிறார் ..சி.

 

வே. மதிமாறன்

புதிய கலாச்சாரம் 2006

தொடரும்

சுதேசிப் போர் கப்பல்தளபதி

 

பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஜம்ஷெட்ஜி டாடா 1877இல் தனது நூற்பாலையை நிறுவி அதற்குப்பேரரசி ஆலைஎன்று பெயரிட்டார். கிழக்கிந்தியக் கம்பெனிக்காகச் சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகுப் பணத்தையும், 1857இல் ஈரான் மீதும், 1868இல் எத்தியோப்பியா மீதும் பிரிட்டிஷ் இராணுவம் போர் தொடுத்தபோது அவர்களுக்கு உணவு சப்ளை செய்து அந்தகாண்டீன் கான்டிராக்ட்மூலம் கிடைத்த பணத்தையும் வைத்து இந்த நூற்பாலை துவங்கப்பட்டதால், அந்த நன்றிபேரரசி ஆலைஎன்று வாலை ஆட்டியது.

இப்படிப் போதைப் பொருள் கடத்திய டாடாவைத்தான் தொழில் தந்தை என்று பெருமையுடன் குறிப்பிடுகிறதுசுதந்திரஇந்தியா. அதேபோல, தமிழ்நாட்டின் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், ஆங்கில அரசின் ஆசியோடு பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தங்கள் வட்டித் தொழிலை விரிவுபடுத்தியிருந்தனர்.

 

இந்தியாவின் சுதேசி வணிகர்கள் இப்படியாகத் திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டிருந்தபோது வெள்ளையனை விரட்ட வேண்டும் என்றால் அவனை எதிர்த்துப் போட்டி வர்த்தகம் நடத்த வேண்டும் என்று ஒரு குரல் தூத்துக்குடியிலிருந்து உரத்துக் கூவியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வணிகரல்ல. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான ..சிதம்பரம்.

 

“”ஒரு பரிதாபத்துக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி. ஏதோ ஒரு உந்துதலில் வெள்ளையனுக்கு எதிராகப் போராடிச் சிறை சென்றவர்என்பது போன்ற தோற்றம் வ..சி.யைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு விடுதலை வீரர். பிரிட்டிஷாருக்கு எதிரான நெருப்பாகவே வாழ்ந்தவர்.

 

“”வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீண்டும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்என்று சுதேசிக் கப்பலுக்கானவிதைபற்றிக் குறிப்பிடுகிறார் வ..சி.

சுதேசிக் கப்பல் என்பது வியாபாரம் அல்ல, அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் வீரியமிக்க வடிவம் என்ற புரிதல் வ..சி.க்கு இருந்தது. எனவே தன்னுடைய கம்பெனிக்கு மிகச் சாதாரண மக்களிடமெல்லாம் பங்கு வசூல் செய்தார் வ..சி.

1906 அக்டோபர் 16ஆம் நாள்சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி‘    என்ற ெயரில் சுதேசிக் கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1907 மே மாதம்காலியோ, லாவோஎன்ற இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.

 

கிலி பிடித்த வெள்ளையர்களின் பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியும் (பி..எஸ்.என்) பிரிட்டிஷ் அரசும் இணைந்த கைகளோடு சுதேசிக் கப்பலுக்கு எதிராகச் சதிகள் செய்ய ஆரம்பத்தன.

தூத்துக்குடிக்கும் கொழும் புக்கும் இடையில் 5 ரூபாயாக இருந்த மூன்றாம் வகுப்புக் கட்டணத்தை 75 பைசாவாகக் குறைத்தது பி..எஸ்.என் நிறுவனம். அடுத்த சதியாக, இந்திய இலங்கை ரயில்வே நிர்வாகம், பி..எஸ்.என் நிறுவனக் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கும் பயணிகளுக்கும் ரயிலில் கட்டணச் சலுகை என்று அறிவித்தது.

 

ஆனாலும் தேசப்பற்று மிக்க மக்கள் இந்த சதி நிறைந்த சலுகைகளைப் புறம் தள்ளி, ..சி.யின் சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர். அதனால் வெள்ளையன் கப்பல் நிறுவனத்திற்கு மாதம் 40,000 வரை நட்டம் ஏற்பட்டது. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல் படுத்தியது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்ட உணர்வை மக்கள் மனதில் விதைத்தது.

 

சுதேசிக் கப்பல் பதிவு செய்து சரியாக மூன்று மாதம் கழித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் “”வெள்ளையர் எதிர்ப்புணர்வு இங்கு நிலவுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் அதிகம் நிலவுகிறதுஎன்று அரசுக்கு அறிக்கை அனுப்பினான். ஆம். நெஞ்சில் நெருப்போடு வெள்ளையர் களுக்கு எதிரான கலவரத்தை நடத்தக் காத்திருந்தது திருநெல்வேலிச் சீமை.

 

கப்பலோட்டியது மட்டும்தான் வ..சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்ற சித்திரம் தவறானது. பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோன்மையையும் எதிர்த்த மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வை ..சி.க்கு இருந்திருக்கிறது.

 

வெள்ளை முதலாளிகளால் நடத்தப் பட்ட தூத்துக்குடி கோரல் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் இதற்குச் சான்றாக இருக்கிறது.

 

கோரல் ஆலையில் 10 வயதுச் சிறுவர்களும் தொழிலாளர்களாக வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறை என்பதே கிடையாது. கூலி மிகக் குறைவு. வேலையில் தவறு நேர்ந்தால் பிரம்படி. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக வ..சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் கைகோர்த்தனர்.

 “”முதலாளிகளை முடமாக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று இயந்திரங்களுக்கு ஊறு விளைவிப்பது, இன்னொன்று வேலை நிறுத்தம். இரண்டாவது வழியே சிறந்ததுஎன்று தொழிலாளர்களிடம் உரையாற்றினார் சிவா. பின்னர் பேசிய..சி, இரண்டு வழிகளையும் கையாளுமாறு தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

 

தொழிலாளர்கள்..சியின்கோரிக்கையைஉடனே நிறைவேற்றினர். மறுநாளே ஆலையின் மீது கற்களை வீசினார்கள். ஆலையின் தண்ணீர்க் குழாயை உடைத்தெறிந்தார்கள். தொழிலாளர் பிரச்சினையை மக்களிடம் பேசி அதனை வெள்ளையருக்கு எதிரான போராட்டமாக மாற்றினார் ..சி.

மக்கள் வீதியில் சென்ற வெள்ளையர்களைக் கல்லால் அடித்த னர். வியாபாரிகள் வெள்ளையருக்கு உணவுப் பொருட்களை விற்க மறுத்தனர். தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் உயிருக்குப் பயந்து தங்கள் இரவுகளைக் கப்பல் கம்பெனி அலுவலகத்தில் கழித்தனர். ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் வெள்ளையனின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாவிதர்களோ வெள்ளையரை ஆதரித்தவர்களுக்குச் சவரம் செய்யவும் மறுத்தனர்.

 

நிலைமை எல்லை மீறியது. நிர்வாகம் பணிந்தது. வார விடுமுறை, ஊதிய உயர்வு, வேலை நேரக்குறைப்பு ஆகியவற்றுக்கு உடன்பட்டது. தொழிலாளர் பிரச்சினையை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக மாற்றியமைத்த வ..சி.யின் இந்த வியூகம் பிரமிக்க வைக்கிறது. இந்தப் போராட்ட முறை இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டிருந்தால் பிரிட்டிஷ் அரசு அப்போதே கப்பல் ஏறியிருக்கும்.

 

வெறுமனே கூலி உயர்வுக்குக் குரல் கொடுக்கிற அமைப்பாகத் தொழிற் சங்கத்தை வ..சி பார்க்கவில்லை. ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டே விரட்டுகிற மாபெரும் சக்தியாகவே அவர் தொழிலாளி வர்க்கத்தைப் பார்த்தார். கோரல் ஆலைப் போராட்டம் முடிந்தவுடனேயே அடுத்த அரசியல் போராட்டத்தைத் துவக்குகிறார் வ..சி.

வே. மதிமாறன்

ுதிய கலாச்சாரம் 2006

–&தொடரும்

ஜாதி உயர்வானது குடும்பத்தின் பரம்பரையான ஞான விசேஷத்தை…..

 

பாரதிய ஜனதா பார்ட்டி‘ – 23

 

ஆறாவது அத்தியாயம்

 

 

பெண்கள் பள்ளிக்கு பார்த்தசாரதி அய்யங்கார் என்பவர் நன்கொடை அளித்ததைப் பாராட்டி, புதுமைப் பெண்களை உருவாக்கிய மகாகவி பாரதி, இந்தியாவின் தலைசிறந்த பெண்நிலைவாதிகளான கர்கி, மைத்ரேயி, ராமனின் மனைவி சீதா இவர்களைப் பற்றியும் பாடத்திட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்று பாசத்துடன் பரிந்துரை செய்கிறார்.

 

இவர் (பார்த்தசாரதி) இந்தப் பள்ளிக் கூடத்துக்கு வரும் பெண்களுக்கு ஸ்ம்ஸ்கிருதபாஷை அவசியமாகக் கற்பிக்க வேண்டுமென்பது தமது நன்கொடையின் நிபந்தனையாக இவர் வைத்திருக்கிறார். இது மிகவும் மெச்சுதற்குரிய செய்கையாகும். கர்கி, மைத்ரேயி, ஸீதா முதலிய பாரத கண்டத்து ஸ்திரீ ரத்னங்களின் ஸமாச் சாரங்களை நமது மாதர்கள் நேரே கற்றறியும் திறமை படைத்து விடுவார்களானால் இதைக் காட்டிலும் இந்நாட்டிற்கு வேறென்ன அதிர்ஷ்டம் வேண்டும்.”

 

பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் டி.எஸ். ராமச்சந்திரராவ் என்கிற பார்ப்பனர் இங்கிலாந்துக்குச் சென்று திரும்பி, மாபெரும் ஆராய்ச்சி செய்து ஒரு பொய்யை எழுதியிருக்கிறார். அந்த மாபெரும் ஆராய்ச்சி பொய்யை பாராட்டி நம் அக்கினிக்குஞ்சு‘   கவிஞர் எழுதுகிறார்,

 

இங்கிலாந்திலே ஜாதி வேற்றுமையானது பொன்னையும், மண்ணையும் பொறுத்து நிற்கிறது. இந்தியாவில் ஜாதி உயர்வானது குடும்பத்தின் பரம்பரையான ஞான விசேஷத்தையும், ஆசாரங்களையும் பொறுத்திருக்கிறதென்று” அவர் (ராமசந்திரராவ்) எழுதுகிறார். எனவே, நமது தேசத்து ஜாதி வேற்றுமைகள் மிகுந்த தீங்குடையவனவாயிருந்த போதிலும், அவை இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற தேசத்து முறைமைகளைப் போல அத்தனை தீங்குடையன அல்லவென்றும், நம்மவரை அன்னியர்கள் கேலி செய்வது மயில் இறகில் விழுந்திருக்கும் பச்சையைப் பார்த்து காகம் கேலி செய்வதற்கு நிகரானதென்று தோன்றுகிறது. ஜாதி வேற்றுமைகளின் நிலைமைகளைப் பற்றி நமது சொந்த அபிப்பிராயத்தை தெரிவிப்பது இப்போது அவசியமில்லை. எனினும், ஜாதி வேற்றுமையானது ஸனாதன தர்மத்தில் சம்பந்தப்பட்டதில்லை யென்றும் அது சில சவுகரியங்களை உத்தேசித்து மனிதர்களால் செய்து கொள்ளப் பட்ட கட்டுப்பாடேயாகுமென்றும் சுவாமி அபேதனாந்தர் அபிப்பிராயப்படுதல் கவனிக்கத் தக்கது.”

 

(1906  ஆண்டு, ‘இந்தியாபத்திரிகையில் பாரதி எழுதிய கட்டுரைகளில் இருந்து தொகுக்கப்பட்டது. 1921 வரை இந்த கருத்திலிருந்து அவர் மாறுபடவில்லை. வெளியீடு நியூ செஞ்சுரி புக் அவுஸ்)

 

தொடரும்.

இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க

இங்கே சொடுக்கவும்

book21.jpg

 பாரதி` ய ஜனதா பார்ட்டி