ஜாதி உயர்வானது குடும்பத்தின் பரம்பரையான ஞான விசேஷத்தை…..
‘பாரதி‘ ய ஜனதா பார்ட்டி‘ – 23
ஆறாவது அத்தியாயம்
பெண்கள் பள்ளிக்கு பார்த்தசாரதி அய்யங்கார் என்பவர் நன்கொடை அளித்ததைப் பாராட்டி, புதுமைப் பெண்களை உருவாக்கிய மகாகவி பாரதி, இந்தியாவின் தலைசிறந்த பெண்நிலைவாதிகளான கர்கி, மைத்ரேயி, ராமனின் மனைவி சீதா இவர்களைப் பற்றியும் பாடத்திட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்று பாசத்துடன் பரிந்துரை செய்கிறார்.
“இவர் (பார்த்தசாரதி) இந்தப் பள்ளிக் கூடத்துக்கு வரும் பெண்களுக்கு ஸ்ம்ஸ்கிருதபாஷை அவசியமாகக் கற்பிக்க வேண்டுமென்பது தமது நன்கொடையின் நிபந்தனையாக இவர் வைத்திருக்கிறார். இது மிகவும் மெச்சுதற்குரிய செய்கையாகும். கர்கி, மைத்ரேயி, ஸீதா முதலிய பாரத கண்டத்து ஸ்திரீ ரத்னங்களின் ஸமாச் சாரங்களை நமது மாதர்கள் நேரே கற்றறியும் திறமை படைத்து விடுவார்களானால் இதைக் காட்டிலும் இந்நாட்டிற்கு வேறென்ன அதிர்ஷ்டம் வேண்டும்.”
பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் டி.எஸ். ராமச்சந்திரராவ் என்கிற பார்ப்பனர் இங்கிலாந்துக்குச் சென்று திரும்பி, மாபெரும் ஆராய்ச்சி செய்து ஒரு பொய்யை எழுதியிருக்கிறார். அந்த மாபெரும் ஆராய்ச்சி பொய்யை பாராட்டி நம் ‘அக்கினிக்குஞ்சு‘ கவிஞர் எழுதுகிறார்,
“இங்கிலாந்திலே ஜாதி வேற்றுமையானது பொன்னையும், மண்ணையும் பொறுத்து நிற்கிறது. இந்தியாவில் ஜாதி உயர்வானது குடும்பத்தின் பரம்பரையான ஞான விசேஷத்தையும், ஆசாரங்களையும் பொறுத்திருக்கிறதென்று” அவர் (ராமசந்திரராவ்) எழுதுகிறார். எனவே, நமது தேசத்து ஜாதி வேற்றுமைகள் மிகுந்த தீங்குடையவனவாயிருந்த போதிலும், அவை இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற தேசத்து முறைமைகளைப் போல அத்தனை தீங்குடையன அல்லவென்றும், நம்மவரை அன்னியர்கள் கேலி செய்வது மயில் இறகில் விழுந்திருக்கும் பச்சையைப் பார்த்து காகம் கேலி செய்வதற்கு நிகரானதென்று தோன்றுகிறது. ஜாதி வேற்றுமைகளின் நிலைமைகளைப் பற்றி நமது சொந்த அபிப்பிராயத்தை தெரிவிப்பது இப்போது அவசியமில்லை. எனினும், ஜாதி வேற்றுமையானது ஸனாதன தர்மத்தில் சம்பந்தப்பட்டதில்லை யென்றும் அது சில சவுகரியங்களை உத்தேசித்து மனிதர்களால் செய்து கொள்ளப் பட்ட கட்டுப்பாடேயாகுமென்றும் சுவாமி அபேதனாந்தர் அபிப்பிராயப்படுதல் கவனிக்கத் தக்கது.”
(1906 ஆண்டு, ‘இந்தியா‘ பத்திரிகையில் பாரதி எழுதிய கட்டுரைகளில் இருந்து தொகுக்கப்பட்டது. 1921 வரை இந்த கருத்திலிருந்து அவர் மாறுபடவில்லை. வெளியீடு ‘நியூ செஞ்சுரி புக் அவுஸ்‘)
–தொடரும்.
இதன் முந்தையப் பகுதிகளைப் படிக்க
இங்கே சொடுக்கவும்
தோழர்களுக்கு,
‘பைத்தியக்காரன்’ என்ற பெயரில் எழுதிவரும் ஒரு நபருடைய வலைதளத்தில் நான் கீழ்கண்ட பின்னூட்டத்தை பதிந்திருந்தேன். அதற்கான பதிலை இதுவரை அந்நபர் எழுதாமலிருக்கிறார். அவரை விவாதத்திற்கு அழைக்கும் நோக்கில் அந்த பின்னூட்டத்தை இங்கே மீள்பதிவிடுகிறேன்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
அவருடைய வலைதளத்திற்கான சுட்டி இதோ….https://www.blogger.com
////////////////ஏகலைவன் said…
////அதில் நாகார்ஜுனன் மொழிபெயர்த்திருந்த ஃபூக்கோவின் தன் நேர்காணலும் (வ்வாழ்வைத் தாண்டிய சொல்லாடல் ) மாற்று உரையாடலை நோக்கி என்னை நகர்த்தின. என்றபோதும், இப்போதைய…////
நண்பர் பைத்தியக்காரன் அவர்களுக்கு,
இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லை என்றாலும் நண்பர் நாகார்ஜூனன் குறித்து நீங்கள் மேற்கோள்காட்டி எழுதியதால் இப்பின்னூட்டத்தை இங்கே பதியலாம் என்று கருதுகிறேன்.
‘தசாவதாரம்’ குறித்தும் நடிகர் கமலின் பார்ப்பனத்தன்மை குறித்தும் விமர்சித்திருக்கின்ற நீங்கள் ‘பாரதி’ குறித்து எந்த விதமான கருத்துக்களையும் தெரிவித்திருப்பதாகத் தெரியவில்லை. சென்ற வாரம்கூட நாகார்ஜூனன் அவர்களுடன் நான் பாரதி குறித்து விவாதித்தேன். அவர் தொடர்ந்து விவாதிக்க முடியாமல் பின்வாங்கிக் கொண்டார்.
எனவே, பாரதி குறித்தும், மதிமாறன் அவர்களின் ‘பாரதிய ஜனதா பார்ட்டி’ குறித்தும் உங்களுடைய விமர்சனத்தைத் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஏகலைவன்.