கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை கண்டித்து காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கம்யூனிஸ்ட்டுகள் வாபஸ் பெற்றது பாராட்டுக்குரியதுதானே?
-கண்மணி

ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தில், கவுண்டமணியை அவர் மனைவி கதவைச் சாத்திவிட்டு கையை முறுக்கி குத்து குத்துன்னு குத்துவார்.

கவுண்டமணி ‘அய்யோ, அம்மா’ என்று கத்துவதற்கு பதில்,

“யார் கிட்ட வைச்சுக்கிற. என் கிட்ட வைச்சிகிட்ட அவ்வளவுதான். உன்ன கொன்னுபுடுவேன் கொன்னு.” என்று ஒரு பில்டப் சவுண்ட கொடுப்பாரு.

பூட்டிய  கதவுக்கு வெளிய நிக்கிற ஜனங்கள் எல்லாம், ‘பொண்டாட்டிய போட்டு எப்படி அடிக்கிறான்?’ என்று பதட்டதுடன் பேசிக் கொள்வார்கள்.

வலி தாங்க முடியாத கவுண்டமணி, கையில ஒரு அருவாள தூக்கிக்கிட்டு    “உன் தலைய வெட்டமா விடமாட்டேன்” என்ற சவடால் சத்ததுடன்  கதவை திறந்துக்கிட்டு ஒரே ஓட்டமா ஓடுவாரு.

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்த பிரச்சினையில், காங்கிரஸ்காரர்கள் கம்யூனிஸ்ட்டுகளை வெளியே போகச் சொல்லி ரொம்ப நாள் ஆகுது. ‘கம்யூனிஸ்ட்டுகள் வாபஸ் வாங்குறதால ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்ல’ என்று காங்கிரஸ் பலமுறை சொல்லியாச்சு.

ஆனால் இவர்கள்தான் இழுத்துக் கொண்டே இருந்தார்கள்.

‘காங்கிரஸ் சொல்லி போன மாதிரி இருக்கக்கூடாது’ என்பதற்காகத்தான் கம்யூனிஸ்ட்டுகள் இப்படி பில்டப் சவுண்ட் கொடுத்துக் கொண்டு வெளியே வருகிறார்கள்.

இந்த பில்டப்பை நிரூபிப்பது போல் வெளியே போவதாக அறிவித்த இரண்டு நாட்களுக்குள், ஜோதிபாசு, சோம்நாத் சட்டர்ஜி போன்றவர்கள் ‘ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவத்ததை திரும்பப் பெறவேண்டும். காங்கிரசுக்கு ஆதரவை அளிக்க வேண்டும்’ என்று கோஷ்டியாக உடைந்திருக்கிறார்கள்.

இந்தியாவை சூழப்போகிற  அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்த இருள், கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவுடன் நிறைவேறினாலும் ஆச்சரியமில்லை.

அதற்கும் கவுண்டமணியிடம் நல்ல வசனம் இருக்கிறது…

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா…

பின்னினைப்பு :

“அது போன மாசம்… ”   – சோம்நாத் சட்டர்ஜி

இது வடிவேலு ஸ்டைல்

புதுடெல்லி, ஏப். 25- தனது எச்சரிக்கையையும் மீறி பகுஜன் சமாஜ் எம்.பி. தொடர்ந்து அமளி செய்ததால் ஆவேசம் அடைந்த மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, எனக்கு இந்த பதவியே வேண்டாம். என்னை விடுவியுங்கள் என்று கூறினார்.
– விடுதலை நாளிதழ்,  ஏப்பரல் 25, 2008

கொல்கத்தா, ஜூலை 14:
சபாநாயகர் பதவி, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதனால், பதவி விலக மாட்டேன், என்று சோம்நாத் சட்டர்ஜி அறிவித்திருந்தார்.
– தினகரன் சூலை 14, 2008

11 thoughts on “கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்”

 1. கவுண்ட மணியின் காமெடிகளை விஞ்சும் இந்த ‘கவுந்த’மணிகளைச் சரியாகத் தோலுறித்துக் காட்டியிருக்கின்றது இப்பதிவு.

  பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு அது கைக்கு எட்டினாலும் வாய்க்கெட்டாது போனதால் Historical Blunder என்று எகிறிக் குதித்து தமது பொலிட்பீரோவை விமர்சித்தார் பதவி வெறியன் ஜோதிபாசு.

  இப்போது “அனுசக்தி ஒப்பந்தத்தைவிட பாஜக அபாயமானது என்று சொல்லி” டபாய்க்கிறார்.

  தன்னுடைய பேரனுக்குப் பூநூல் கல்யாணம் செய்துவைத்த பார்ப்பனீயவாதி சோம்நாத் அய்யருக்கும் இப்போது நெருக்கடி. “நானும் என்னுடைய பதவியும் அரசியலுக்கு அப்பார்ப்பட்டவைகள்” என்று பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உளறுகிறார்.

  அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்னை கம்யூனிஸ்டு என்று சொல்லிக் கொள்பவன் இயங்கமுடியுமா? அப்படியே நெருக்கடி முற்றிவிட்டால், காங்கிரசு கட்சி இவருக்கு பதவி வழங்குவதாக இருந்தால் காங்கிரசுக்கு கட்சிமாறிவிடுவதற்கான எந்த அறிகுறி இல்லை இவரது இத்தகைய பேச்சுக்களில்?

  மற்ற கட்சிகளில் சரியான வாய்ப்புக் கிடைக்காதவர்களின் கூடாரமாகவே இந்த போலிகம்யூனிச கயவர் கூட்டம் இருந்து கொண்டிருப்பது அனைவருக்கும் அம்பலமாகியுள்ளது.

  தோழமையுடன்,
  ஏகலைவன்

 2. இது நாள் வரை வடிவேலும் கவுண்டமணியும் தான் நல்ல நகைச்சுவை நடிகர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் கம்யூனிஸ்டுகள் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள்.

  நித்தில்

Leave a Reply