ஊதாரி ஓஷோவும் – நரமாமிச மோடியும்

கேள்வி வே. மதிமாறன் பதில்கள் நீங்கள்

இதுவரை உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். இனி இப்படியும் வைத்துக் கொள்ளலாம், என்னுடைய கேள்விகளுக்கு நீங்களும் பதில் சொல்லலாம். பொறுப்பற்ற பதில்களை பிரசுரிக்க முடியாது.

*

லகெங்கும் நடைபெற்ற ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டங்களைக் கொச்சைப் படுத்திய – கம்யூனிச எதிர்ப்பை, குறிப்பாக ஸ்டாலினிய எதிர்ப்பை தீவிரமாக கொண்ட ‘ஓஷோ’ என்கிற ரஜினிஷின் அல்லது ரஜினிஷ் என்கிற ‘ஓஷோ’வின் தத்துவங்களில் தன்னை கரைத்துக் கொண்டு காணாமல் போனதாக சொல்லுகிற சிந்தனையாளர்கள்(?)

இன்னொருபுறத்தில், கியூபா முதல் பாலஸ்தீனம் உட்பட ஈழம்வரை நடந்த, நடக்கின்ற யுதம் தாங்கிய போராட்டத்தை தீவிரமாக ஆதரிப்பதாக அறிவிக்கிறார்களே, இது அவர்களின் அறியாமையா? ஆர்வக்கோளாறா?

அமெரிக்கா போன்ற நாடுகளே வெறுக்கும் அளவிற்கு ஊதாரித்தனமான வாழ்க்கை முறையையும், ஒரு அரசு நடத்துகிற அளவிற்கு தன் ஆரசிமத்தில் சொத்துக்களையும் குவித்து வைத்திருந்த ‘ஓஷோ’வை பார்த்து மிரண்ட அமெரிக்க அரசு அவரை அங்கிருந்த அடித்து விரட்டியது.

இந்த நடவடிக்கையை வைத்து ‘ஓஷோ’வை ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக சித்தரித்தன ஆர்வக் கோளாறுகள் அல்லது அறியாமை அறிவுஜீவிகள்.

அப்படியானால், அமெரிக்காவிற்குள் நுழைவதற்கே அனுமதி மறுக்கப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த நரமாமிச ‘மோடி ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத் தலைவரா?

கேள்விகள் தொடரும்