ஊதாரி ஓஷோவும் – நரமாமிச மோடியும்

கேள்வி வே. மதிமாறன் பதில்கள் நீங்கள்

இதுவரை உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். இனி இப்படியும் வைத்துக் கொள்ளலாம், என்னுடைய கேள்விகளுக்கு நீங்களும் பதில் சொல்லலாம். பொறுப்பற்ற பதில்களை பிரசுரிக்க முடியாது.

*

லகெங்கும் நடைபெற்ற ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டங்களைக் கொச்சைப் படுத்திய – கம்யூனிச எதிர்ப்பை, குறிப்பாக ஸ்டாலினிய எதிர்ப்பை தீவிரமாக கொண்ட ‘ஓஷோ’ என்கிற ரஜினிஷின் அல்லது ரஜினிஷ் என்கிற ‘ஓஷோ’வின் தத்துவங்களில் தன்னை கரைத்துக் கொண்டு காணாமல் போனதாக சொல்லுகிற சிந்தனையாளர்கள்(?)

இன்னொருபுறத்தில், கியூபா முதல் பாலஸ்தீனம் உட்பட ஈழம்வரை நடந்த, நடக்கின்ற யுதம் தாங்கிய போராட்டத்தை தீவிரமாக ஆதரிப்பதாக அறிவிக்கிறார்களே, இது அவர்களின் அறியாமையா? ஆர்வக்கோளாறா?

அமெரிக்கா போன்ற நாடுகளே வெறுக்கும் அளவிற்கு ஊதாரித்தனமான வாழ்க்கை முறையையும், ஒரு அரசு நடத்துகிற அளவிற்கு தன் ஆரசிமத்தில் சொத்துக்களையும் குவித்து வைத்திருந்த ‘ஓஷோ’வை பார்த்து மிரண்ட அமெரிக்க அரசு அவரை அங்கிருந்த அடித்து விரட்டியது.

இந்த நடவடிக்கையை வைத்து ‘ஓஷோ’வை ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக சித்தரித்தன ஆர்வக் கோளாறுகள் அல்லது அறியாமை அறிவுஜீவிகள்.

அப்படியானால், அமெரிக்காவிற்குள் நுழைவதற்கே அனுமதி மறுக்கப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த நரமாமிச ‘மோடி ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத் தலைவரா?

கேள்விகள் தொடரும்

14 thoughts on “ஊதாரி ஓஷோவும் – நரமாமிச மோடியும்

 1. Mr.Manimaran
  I am not a follower or supporter of Ohso. But I used to read him, Periyar, Ambedkar and all the greatest people who looked at the society with different dimension. I have read the book “Communisim, Zen Fire and Zen Wind ” of Osho.
  The whole book written for communism by Osho.

  Osho describes ” Communism is the greatest experiment ever happend in human history. ” He appreciates Stalin and Lenin for the experiment.

  I am not agree with your points on Osho. Since he never teaches any Dogma and never told anybody to follow him.

  He makes you to think in different direction. that’s all.

  If you have any speeches or thoughts of Osho about communisim as you described, Please publish the same in your site. I am very much interested to read that.

  With lots of Thanks

 2. ஓஸோவை பறிய தங்கள் கருத்து பொறுப்பில்லாதது… சுயமரியாதை உள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்துக்களை கூறிய அவர் உலகின் பல்வேறு மதங்கள் மற்றும் அதன் கொள்ககைகளை நேர்மையுடன் விமர்சித்தவர் ஓஸோ!

  ஆவருடைய கருதுக்களை கூறி ..பின் அதில் ஏதாவது ஒன்றை விமர்சனம் செய்வதே நேர்மை !

  மேற்கண்ட பதில் முட்டாள்தனமானது..

  சரவணன்.

 3. ஓஷோவைப் பற்றி தாங்கள் விமர்சித்ததில் ஆழ்ந்த சிந்தனையையோ, ஆதாரங்களயையோ காண முடியவில்லை. சும்மா ஒரு பரபரப்புக்காக அவரை விமர்சித்து எழுதியுள்ளீர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது !

 4. osho பத்தி நீங்கள் குறிப்பட்டது முற்றிலும் தவறு. நீங்கள் இங்கே இருந்துதான் சறுக்கியிருக்கிறீகள் என்பதும் புரிகிறது

 5. //அமெரிக்கா போன்ற நாடுகளே வெறுக்கும் அளவிற்கு

  lol 🙂 The above line shows the quality of your post.

  Read Osho Books and Comment not by reading about him on Wikipedia.

 6. //அமெரிக்கா போன்ற நாடுகளே வெறுக்கும் அளவிற்கு

  I used to read your post. I dont like this word in your post. What means “America”. IT is not god place or heaven to the world. Already lot of trash is everywhere not in India or America

 7. makkalai kuzhappathan ivergal ithuponru nadakkirargal.

 8. You have completely mistaken Osho. He is not a philosopher he didn’t teach any dogma he is the man who can make you to think on your own. Don’t right anything just for the sake of writing.

 9. anyone can have publicity by opposing and abusing osho. you are one amongst them sir. he is the real revolutionist unlike periyar who is a half baked moron. he was a the worst psychopath in dravidian culture. i appreciate his work against ‘parpan’ psychos however.

 10. Osho has spoken against the religions which he thinks that suppresses individual’s freedom and taught many things useful for the spritual progress of man. It is known that the Bhagavatgita was written in part to defend varnasramadharma and militarism. Osho glories the Bhagavatgita and Krishna. It seems that osho justifies varnasramadharma which is the basis for the divisions in the Indian society. I welcome the views of the readers on this subject.

 11. Thank you. Also I want to read the 4 th line in my earlier comment as “Osho glorifies” sorry for the wrong spelling.
  Thanks

 12. OSHO described once as :IF I GOT THE PERSON WHO WROTE VARNASHIRMA DHARMA I WILL SHOOT HIM ” SO ASUSALY YOU GOWITH YOUE IDEOLOGY AND VALUE OSHO SUCH AS GANDHI,BHARATHIYAR.

 13. ஓஷோவின் சீடர்களிடம் அவரது கொள்கைகள் என்னெவென்று கேட்டாலே மவ்னம் சாதிப்பார்கள்.ஆனால் ஓஷோவை ஸ்டாலினிச எதிர்ர்ப்பு என்று ஒரு குடுவைக்குள் அடைத்து அவரை முழுவதும் புரிந்துகொண்டவரைப்போல் காட்டி இருக்கிறீர்களே?நீங்கள் பெரிய ஞானிதான். ஒரு வார்த்தை அல்லது ஒருவரின் குடி பிறப்பை வைத்து சில சமயம் பக்கத்தை நிரப்புவீர்களே அதில் ஒரு பக்கம் குடுதலாய் சேர்ந்துள்ளது.அவ்வளவே.
  மற்றபடி நீங்கள் ஓஷோவை விமர்சித்ததைப்பற்றி எனக்கு ஆச்சரியமேதும் ஏற்ப்படவில்லை. தாங்கள் பெரும்பாலும் செய்வதைப்போல் தங்களிடம் ஒரு விசயம் பார்வைக்குவந்தால் அதில் கூரப்பட்டிருக்கும் விசயத்தை விட அதை சொன்னது யார்,திராவிடனா,தமிழனா,பெரியாரை ஆதரிப்பவனா,எதிர்ப்பவனா என்றெலாம் பின்புலம் விசாரித்துவிட்டுதான் அந்தகருத்திற்கு ஆதரிப்பது,எதிர்ப்பது இதில் எந்த வர்ணம் பூசுவது என்று முடிவெடுப்பீர்கள்.உங்களைபோன்று சில நியதிகளுக்கு கட்டுப்பட்டவரல்ல ஓஷோ.உங்கள் பெரியார் சொன்ன சுதந்திரமான மனிதன் ஓஷோ.பாவம் அவரை விட்டுவிடுங்கள்.உண்மையை உணராமல் கணபதி என்றால் வணங்க கைஎடுப்பவனையும் கணபதி என்றால் அடிக்க செருப்பேடுப்பவனையும் ஒரேவிதமான முட்டாள்கள் என்பார் ஓஷோ.நம் அளவிற்கு நாம் தமிழர்களை விமர்சிப்பதோடு காலத்தை கழிப்போம். மற்றவர்களைப்பற்றி பேசினால் நம் அறிவின் அளவு மற்றவர்களுக்கு தெரிந்துவிடும்.அப்புறம் அசிங்கம் தான்.ஏனென்றால் தமிழைப்பற்றியும் தமிழின தலைவர்களையும் தவிர மற்றவர்களைப்பற்றி நம்மவர்களுக்கு சிறிதேனும் தெரிந்து வைத்திருப்பார்கள்.
  கண்ணிருக்கும் ஒருவனின் பார்வையும் பார்வைகுறைபாடுடையவனின் பார்வையும் நிச்சயம் வித்தியாசப்படுமன்றோ?உங்களுக்கு இருக்கும் அறிவின் அளவிற்கு நீங்கள் அவரை புரிந்துகொண்டிருகிரீர்கள்.அவ்வளவுதான்.நான் குறைபாடுகளை குற்றமென்று கருதுபவனல்ல.தாங்கள் தெளிவான கண்ணோட்டம்பெற வாழ்த்துகிறேன்.

 14. நீங்கள் ஓஸோவைப் பற்றி தவறாக கூறியிருந்தாலும் அதை ஏற்கும் பகுத்தறிவுடன் இருப்பதற்கு கற்றுக்கொடுத்திருக்கிறார் அல்லது அவரே சொல்லி இருக்கிறார் என்று குறிப்பிடாலாம்… ஒரு இடத்திலே… சில வேளை அப்படி நான் கூறுவது உண்மையற்றதாகவும் மாறும்… என்கிறார் அவர் யதார்த் வார்த்தைகளுக்கு யாரும் இலகுவில் தனிஅடிமைதான்…

Leave a Reply

%d bloggers like this: