மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழே வா?

 

 

கஜுரோஹா சிற்பங்களை இங்கே வைப்பது அநாகரீகமாக இருக்கும் என்பதால்… இந்த படத்தை வைச்சித் தொலைக்கிறோம்.
.
கட்டுடைக்கிறார்கள் கடவுள்கள்

பாலியல் உறவுகள் பற்றி பகிரங்கமாக எழுதி கலகக் குரலை (முக்கல் & முனகலோ) ஏற்படுத்திக் கட்டுடைப்பது; ஆண்&பெண் பிறப்பு உறுப்புகளைப் போற்ற வேண்டும். உடலைக் குறித்து உயர் மதிப்பீடு வேண்டும். அப்போதுதான் சமூக அக்கறை கூடுதல் வலுப்பெறும்.’’

 

ஓரினச் சேர்க்கை என்பது ஆணாதிக்கத்தைத் தகர்ப்பது. அது பெண்ணுரிமை அல்லது ஆணின் உரிமை இப்படி மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேதான் இருக்கிறது என்பது மாதிரியான போக்கு – இன்றைய இலக்கிய, தத்துவ(?) சூழலில் நவீனத்துவத்திற்கும், பிந்தைய நவீனத்துவமாக இன்னும் வெவ்வேறு பெயர்களில் விளக்கப்படுகிறது.

 

இந்த உறுப்புகளின் உறவு குறித்தும், உறுப்புகளின் நலன் விசாரிப்புக் குறித்தும் தீவிரமாக எழுதுகிற இந்த டிகிரி எழுத்தாளர்கள் & சரோஜாதேவியின் பிழைப்பைக் கெடுத்து, ‘பருவ காலம், ‘விருந்து இதழ்களின் விற்பனையை பாதித்திருக்கிறார்கள்.

 

ஆம், சரோஜாதேவி, ‘பருவகாலம், ‘விருந்து & இவைகளின் இலக்கிய வடிவமே இந்த டிகிரி எழுத்தாளர்கள். சரோஜாதேவியும், ‘விருந்தும் தடை செய்யப்பட்ட தலைமறைவு இயக்கப் பத்திரிகைகள்; எழுத்தாளர்கள் (UG Movement)

பிந்தைய நவீனத்துவ டிகிரி எழுத்தாளர்கள்; பத்திரிகைகள், வெகுஜன இயக்கப் பிரச்சார பீரங்கிகள்!

 

சரி, இப்படி கட்டுடைத்துக் கலகம் செய்யும் எழுத்தை, தத்துவத்தை (?) மதங்கள் எப்படிப் பார்க்கின்றன என்பதைக் கொஞ்சம் பார்ப்போம். (தத்துவத்திற்கு முன்னால் கேள்விக்குறி போட்டிருப்பது, ‘தத்துவங்களை எல்லாம் கேள்விக்குட்படுத்த வேண்டும்என்ற பின் நவீனத்துவ பாணியில் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக!)

 

இஸ்லாம்: இந்த பிந்தைய நவீனத்துவத்தை அல்லது வேறு, வேறு பெயர்களில் அழைக்கப்படுகிற இந்த ஆபாசத்ததுவத்தை(?) தனது இடது காலால் எட்டி உதைக்கிறது.

 

கிறித்துவம்: கட்டுடைத்தலிடம் பழைய ஏற்பாடு கொஞ்சம் பாசம் காட்டினாலும், புதிய ஏற்பாடு தூரப்போ சாத்தானே என்று விரட்டி அடிக்கிறது.

 

இந்து மதம்: கை கொட்டி சிரிக்கிறது. அடப்பாவிகளா, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எங்க வேதத்திலேயும், புராணத்திலேயும் நாங்க கட்டுடைச்சதில பாதிகூட நீங்க உடைக்கல, அதுக்குள்ளே ரொம்ப பீத்திக்கிறீங்களே?’

 

எங்க பாஞ்சாலி அய்ந்து கணவன்களோட ஒரே வீட்டில் வாழ்ந்தாள்; எங்க பிரம்மா மானோட உறவு கொண்டார், மகளோடு உறவு கொண்டார்; மாமனும் மச்சானுமான சிவனும் & திருமாலும் செய்யாத ஓரினச் சேர்க்கையா நீங்க செஞ்சிடப் போறீங்க? அவுங்க ஓமோ செக்ஸ்ல ஈடுபட்டு அய்யப்பன்னு ஒரு சக்தி மிக்க புள்ளையையே பெத்தவங்க.

 

சிவனும் & பார்வதியும் ஆண் & பெண் குறிகளாக மாறி இன்னும் சிவலிங்கமாக இருந்து மக்களுக்கு அருள் பாலிக்கிறாங்க. எங்க இயற்பகை நாயனாரை, ஊரே கூடி உதைக்க வந்த போதும் அஞ்சாமல், தன் பொண்டாட்டிய சிவனடியாருக்கு கூட்டிக் கொடுத்தாரு.

 

கொழந்தையிலேயே கொய்யாப் பழமான திருஞான சம்பந்தரு, ‘கடவுள் இல்லைன்னு சொல்றவன் பொண்டாட்டிக் கூட நான் படுக்கனும்னு அற்புதமான தமிழால், ரொம்ப நாகரீகமாக பாட்டெழுதினாறு.

 

இன்னும் கோயில் சிற்பங்களில் உடல் உறவுக் காட்சிகளை தத்ரூபமாக சித்தரிச்சி, எங்க புனிதத்தை நாங்களை உடைச்சிருக்கோம். உலகத்தில வேறு எந்த மதக் கோயிலாவது இதை பார்க்க முடியுமா? நீங்கள் என்ன பெரிய மஞ்சள் கலர் எழுத்தாளர்? எங்க ஆண்டாளு, ‘என் உடல் முழுதும் திருமாலுக்கே என பச்சைக் கலர்ல பாட்டெழுதி இருக்காங்க.

 

இப்படி மிகப் பழமை வாய்ந்த கலை, இலக்கியத்துக்கு வாரிசா இருக்கிற நீங்க, எங்கள இருட்டடிப்புப் பண்ணிட்டு, எங்கோ இருக்கிற வெள்ளை கிறிஸ்தவனுங்களோட பேரை எல்லாம் சொல்லி, ரொம்ப புதுசு மாதிரி பிந்தைய நவீனத்துவம்னு பொய் சொல்லி இந்து மதப் பெருமைகளை இருட்டடிப்பு செய்றீங்களே, நியாயமா இது?’’ என்ற உரிமையோடு கோபப்படுகிறது இந்து மதம்.

 

 

ஆம். வேதத்தின் & பார்ப்பனியத்தின் இந்த ஆபாசக் குவியலையும், ஒழுக்கக் கேட்டையும் கண்டித்து, புத்தர் ஒழுக்கத்தையும், நன்னடத்தையும் உயர்த்திப் பிடித்தார். அவர் வழி வந்த டாக்டர் அம்பேத்கரும் தலித் மக்களுக்கு கட்டளைகளாக ஒழுக்கத்தையும் & தூய்மையையும் வலியுறுத்தினார்.

 

கிராமங்களில் ஜாதி இந்துக்களின் முன்னால் வெள்ளையும் சொள்ளையுமாக தலித் மக்கள் போவதே, ஜாதி இந்துக்களின் ஜாதி திமிர்த்தனத்தை உடைப்பதாக இருக்கிறது. தேநீர்க் கடையில்தான் இரட்டை டம்ளர் முறை இருக்கிறது. சாராயக் கடையில் சகஜ நிலைதான். கல்யாணத்திற்குதான் ஜாதி பார்க்கிறார்கள். கள்ளக் காதலுக்கு ஜாதி பார்ப்பதில்லை.

 

சமூகம் எதையெல்லாம் கவுரவம் என்று கருதுகிறதோ, அங்கெல்லாம் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சமூகம் எதையெல்லாம் அகவுரவம் என்று கருதுகிறதோ அங்கெல்லாம் தலித் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது.

 

சாக்கடையை சுத்தப்படுத்துதல் போன்ற அரச உத்தியோகத்திற்கு தலித் மக்களைத் தவிர வேறு யாரும் விண்ணப்பிப்பது கூட இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

 

இந்த சமூகக் கட்டுகளை உடைத்துக் கொண்டு, தலித் மக்கள் உரிமைகளோடு எழும்போதே & ‘தன் கை மீறிப் போகிறார்கள் என்கிற பொறாமையே, வெறுப்பே, இயலாமையாக மாறி கோபமாக ஜாதி இந்துக்களிடம் வெளிப்படுகிறது.

இவற்றோடு, டாக்டர் அம்பேத்கர் சொன்ன தூய்மை என்கிற சொல்லப் பொருத்திப் பார்த்தால், அது எவ்வளவு அர்த்தமுள்ள வலுவான சொல்லென்று விளங்கும்.

 

தந்தை பெரியாரும், பக்திக்கு எதிரான நிலையில் ஒழுக்கத்தை நிறுத்தி, ‘ஒரு மனிதனுக்கு பக்தி முக்கியமா? ஒழுக்கம் முக்கியமா? என்பதோடு பக்தி, தனிமனித, சமூக ஒழுக்கத்திற்கு எதிரானது என்று நிறுவினார்.

 

முற்போக்கு போர்வையில், சில நேரங்களில் மார்க்சியத்தின் பேரிலும் நடக்கிற இந்த ஆபாசக் கூத்தை, தலைவர் லெனின் கடுமையாகக் கண்டிக்கிறார், கிளாரா ஜெட்கினுடன் நடந்த உரையாடலில்:

 

&தொடரும்

3 thoughts on “மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழே வா?

  1. அற்புதமான அலசலய்யா.

    வாழ்த்துகள்!

  2. இம்மாதிரியான போலி வாழ்க்கை வாழும் மனிதர்கள் திருந்துவது எப்போது என்று தான் தெரியவில்லை..

    கருத்துக்கள் அனைத்தும் ஆழம்….

  3. //இந்த சமூகக் கட்டுகளை உடைத்துக் கொண்டு, தலித் மக்கள் உரிமைகளோடு எழும்போதே & ‘தன் கை மீறிப் போகிறார்கள்’ என்கிற பொறாமையே, வெறுப்பே, இயலாமையாக மாறி கோபமாக ஜாதி இந்துக்களிடம் வெளிப்படுகிறது.//

    இதற்கு ஒரு சான்றாக ஒரு கதை. வாசித்துப்பாருங்களேன் அதையும், அதனோடான ஒரு “கட்டுடைத்தலையும்”!

Leave a Reply

%d bloggers like this: