‘குடியரசு’ தொகுப்புகள் தமிழினத்துக்கு எழுதி வைக்கும் உயில்
டாக்டர் அம்பேத்கரின் பேச்சும்-எழுத்தும் பெரும்பாலும் புத்தகங்களாக வந்திருக்கிறது. காந்தியின் பேச்சும்-எழுத்தும் கூட புத்தகங்களாக வந்திருக்கிறது. பாரதியின் கவிதைகள், கட்டுரைகள், பேச்சுகள் கூட பெருமளவில் வந்திருக்கிறது. இன்னும் வந்து கொண்டே இருக்கிறது.
இந்த மூன்று பேரில் டாக்டர் அம்பேத்கரின் தொகுப்புகள்தான் நமக்கான ஆயுதமாக இருக்கிறது.
ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தன் மரணம் வரை, தினந்தோறும் மக்களை சந்தித்து பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்த தந்தை பெரியாரின் சிந்தனைகள் குறைவான அளவே புத்தகங்களாக வந்திருக்கிறது.
இன்னும் இன்னும் அவரின் பேச்சும்-எழுத்தும் பல தொகுதிகளாக வராதா என்று பெரியார் தொண்டர்கள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், இந்தப் பெரும்பணியை செய்ய ‘வசதிபடைத்த’ யாரும் முன்வராததால், தன்மீது போட்டுக் கொண்டு, தன்னுடைய பொருளாதார சக்தியையும் மீறி, தந்தை பெரியார் நடத்திய ‘குடியரசு’ இதழ்களை தொகுத்து, நூல்களாக கொண்டு வருகிறது பெரியார் திராவிடர் கழகம்.
1925 முதல் 1938 முடிய பெரியாரின் சுயமரியாதை இயக்கக் காலம் முழுவதும் தொகுக்கப்பட்டு 27 தொகுதிகளாக பெரியார் பிறந்த நாளானா செப்டம்பர் 17 அன்று வெளிவரவிருக்கிறது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க பணியை செய்யும் ‘பெரியார் திராவிடர் கழத்திற்கு’ நம்முடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறாம்.
ரூ. 5400 விலையுள்ள இத் தொகுதிகள் முன் பதிவு திட்டத்தின் கீழ் ரூ. 3500க்கு கிடைக்கும்.
டிராப்ட், மணியார்டர் மூலம் மட்டும் பணத்தை அனுப்பவும். (T.S. MANI என்ற பெயருக்கு டிராப்ட் எடுக்க வேண்டும்)
அனுப்ப வேண்டிய முகவரி:
தா.செ. மணி, பெரியார் படிப்பகம், மேட்டூர் அணை – 1, சேலம் மாவட்டம்&636 401.
இந்தத்தொகுப்பு த பெ தி க வின் அர்பணிப்புக்கு சாட்சியாக இருக்கப்போகிறது
தகவலுக்கு மிக்க நன்றி மதி
THANK YOU FOR ur kind information
valthukkal
Mani-yin tholai pesi yen kidaikkuma ?