எம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும்


23/07/08 அன்று சென்னை, பெரம்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, கே.பி. சுந்தராம்பாளுக்கும் இதுவே நூற்றாண்டாக இருப்பதனால் அவர்களுக்கும் விழா எடுக்கவிருப்பதாக அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் அறிவித்தார். இவர்களோடு கே.பி. சுந்தராம்பாள்? எங்கோ இடிக்கிறதே.

இவர்கள் காந்தியையும் பகத்சிங்கையும் கொண்டாடுவது போல, பாரதியையும் பெரியாரையும் உயர்த்திப்பிடிப்பதுபோல, எம்.ஆர். ராதாவையும், கே.பி. சுந்தராம்பா ளையும் இணைத்து விழா எடுக்கிறார்களோ என்னவோ?

-கலைவேந்தன்.

கே.பி. சுந்தராம்பாள் தன் காலம் முழுவதும் பார்ப்பன சேவகத்திலேயே முடித்துவிட்டார். அவருடைய ‘பார்ப்பன சேவை’ ஒரு சாதரண இந்து பக்தரை போன்ற அறியாமையால் அமைந்ததல்ல. அது மிக சரியாக திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக நடந்தது. அதிலும் குறிப்பாக நீதிக் கட்சி எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கம் மற்றும் பெரியார் எதிர்ப்பு இவைகளுக்காகத்தான் அவருடைய திறமை பயன்பட்டது.

சத்தியமுர்த்தி அய்யர் என்கிற ஒரு ஜாதி வெறி பார்ப்பனரின் ஊதுகுழலாக செயல்பட்டவர்தான் சுந்தராம்பாள். கிட்டப்பா என்கிற பார்ப்பனருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டு அவருடன் இணைந்து தமிழகம் முழுவதும் தேசப்பக்தி பாடல்கள் என்ற போர்வையில் நீதிக்கட்சி எதிர்ப்புப் பாடல்களை பாடினார்.

தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கிட்டப்பாவின் முதல் குடும்பத்தாரிடம் இழந்தார். வறுமையில் சிக்கினார். மீண்டும் பார்ப்பன சேவையில் ஈடுபட்டு வசதியான நிலைக்கு உயர்ந்தார்.

அவ்வையார் திரைப்படத்தில் நடிப்பதற்கு, ஜெமினி எஸ்.எஸ். வாசன் கே.பி. சுந்தராம்பாளுக்கு அதுவரை தமிழ் சினிமாவில் யாருக்கும் தராத ரூ. 1 லட்சம் தந்தார். அந்த தொகை கே.பி. சுந்தராம்பாள் அவர்களின் திறமைக்குத் தரப்பட்டத் தொகை அல்ல. அவரின் பெரியார் எதிர்ப்புக்கு தரப்பட்டத் தொகை.

ஆனாலும் அதே எஸ்.எஸ். வாசனின் ‘ஆனந்த விகடன்’ ஒருமுறை கே.பி.எஸ் அவர்களை ஜாதி பெயர் சொல்லி கேவலப்படுத்தி திட்டியபோது, பெரியார் ஒருவர்தான் ஆனந்த விகடனை கண்டித்து, சுந்தராம்பாளை ஆதரித்தார்.

நடிகவேள் எம்.ஆர். ராதா பெரியாரின் போர்வாளாக தமிழக மேடைகளில் சுழன்று கொண்டிருந்தபோது, அவருடைய நாடகத்தை எதிர்த்து தனி சட்டம் கொண்டு வந்து, தடை செய்த கும்பல் கே.பி. சுந்தராம்பாளை ஆதரித்த கும்பல்.

ஆனாலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ‘சுந்தராம்பாள் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்’, எந்த அரசியல் காரணங்களும் அற்று ‘பிரபலமான கலைஞர்’ என்கிற முறையில் கொண்டாடக் கூடியதாக இருக்கும் என்று உணர்கிறேன்.

இது போன்ற தேவஷங்களை அல்லது திதிகளை ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் போன்ற `மனமகிழ்` மன்றகங்கள்தான் கொண்டாடும். அது போல் ஒரு மன்றமாகத்தான் இருக்கிறது முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

ஏற்கனவே இந்த மனமகிழ்மன்றத்தார், ஒரு இந்து தீவிரவாதி எடுத்த ‘பம்பாய்’ என்கிற ஒரு தேச விரோத படத்துக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கிறார்கள்.

தலைவர் ஸ்டாலினை மிக கேவலமாக எழுதிய ஆபாச எழுத்தாளன் ‘மதன்’ என்பவருக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கறார்கள்.

ஆக, இவர்கள் கே.பி. சுந்தராம்பாளுக்கு விழா கொண்டாடுவது தவறில்லை.

நடிகவேளுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதுதான் தவறு.

ஆர்.எஸ்.எஸ்.காரன் அம்பேத்கர் விழா கொண்டாடுவது போல.
*
நாம எழுதியதால் என்று சொல்ல முடியாது. அப்படி சொல்லாமலும் இருக்க முடியாது; பிறகு இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடவில்லை தமுஎச.

ஓகஸ்ட்4, 2008

கே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும்

21 thoughts on “எம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும்

 1. முண்டம் மதிமாறன்,

  முற்போக்கு எழுத்தளர்கள் என்றால் அது உன்னை மாதிரி கருப்பு சட்டை வெறி நாய்கள் மட்டும் தானா?என்ன ஆணவம்?

 2. //முற்போக்கு எழுத்தளர்கள் என்றால் அது உன்னை மாதிரி கருப்பு சட்டை வெறி நாய்கள் மட்டும் தானா?//
  அதானே? பார்ப்பன சொறி நாய்களுக்கு கிடையாதா?

  குமார், உங்க ஆதங்கம் புரியுதுங்க. ஆனால் கவலை படாதீங்க. சங்கம் ஏற்கனவே சொறி நாய்களால் கடத்தப்பட்டாச்சு போல இருக்கு. அதான் மதிமாறன் பொலம்புறார் போல.

 3. தோழர் மதிமாறன் அவர்களுக்கு,

  மிகவும் அருமையான பதில். முற்போக்கு என்பதே பார்ப்பன வெறியர்கள் / அடிவருடிகள் தங்கள் உண்மை முகத்தை மறைத்துக்கொள்வதற்கு பயன்படுத்தும் முகமூடிதான் போலும்!

  சிறிதும் கூச்சமோ நாணமோ இன்றி அவ்வமைப்பின் மாநிலச் செயலாளரே இவ்வறிவிப்பை அளிக்கிறாரென்றால் அதைவிடக் கேவலம் எதுவும் இருக்க முடியாது.

  //////////// குமார் (07:19:11) :

  முண்டம் மதிமாறன்,

  முற்போக்கு எழுத்தளர்கள் என்றால் அது உன்னை மாதிரி கருப்பு சட்டை வெறி நாய்கள் மட்டும் தானா?என்ன ஆணவம்?//////////////

  மேலே மேற்கோளிடப்பட்டிருக்கும் விமர்சனத்துக்கான பதில் அதற்குள்ளேயே இருப்பதால் இதற்கென்று நாம் எதுவும் தனிப்பட்ட பதிலையெல்லாம் சொல்லத்தேவையில்லை என்பதே என்னுடைய கருத்து.

  தமுஎச மீதான உங்களது விமர்சனத்தை சரிதான் என்று உறுதிப்படுத்துவதற்காகவே நண்பர் குமார் அரும்பாடுபட்டு இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

  இரணியன்.

 4. கே.பி.சுந்தராம்பாள் சிறந்த கலைஞர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. மு.எ.ச.மேடையில் அவருக்கு விழா எதற்கு என்பதுதான் வினா?

  மு.எ.ச. ஒன்று கலைவாணர், எம்.ஆர்.இராதா போன்றோருக்கு விழா எடுக்க வேண்டும். அல்லது கே.பி.சுவுக்கு விழா எடுக்கவேண்டும். இரண்டும் வெவ்வேறானவை என்பதைக்கூட புரியாதவர்கள் என்ன பெரிய முற்போக்கு எழுத்தாளர்கள்…

  பின்னூட்டத்தில் குமார் என்பவர் கருப்பு சட்டை வெறிநாய்கள் என்று குறிப்பிடுவது மிகவும் அதிகப்படியான வார்த்தை… கண்டிக்கத்தக்கது

 5. Sorry really. I cant type in Tamizh.If you attach the phonetic converter It would be useful to type ignorabts like self.
  Recently, when Vijayabaskaran(SARASWATHI) & his brother mohan came out with a fantastic book on the Forerunners of the united party”s THOZHARGAL( neglected by the party itself), I was one of the speakers on the book Alongside NALLAKKANNU aiyya.When I referred this book to a present day Acive thozhar( office bearer in THA MU YE SA) , He asked me back WHO IS VIJAYA BASKARAN?
  They forget their own history & thozhargal. So, No wonder, They are not aware of the past .

 6. //கருப்பு சட்டை வெறி நாய்கள் மட்டும் தானா? என்ன ஆணவம்?//

  டேய் குமாரு,

  ஆமாம் ஆணவம்தான் இப்போம் என்னகிறா?

  போடா போய் பார்பானொடத…….

  ……………எங்களுக்கு நாகரீகம் தெரியும்.

  நாங்கள் கருப்பு சட்டை சுயமரியாதைகாரர்கள்தான்

 7. நான் இதுவரை கேள்விபடாத செய்திகளாக இருக்கின்றது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மதிமாறன்.

  தொடர்ந்து எழுதிவாருங்கள்.

 8. பாப்பார சொறி நாய்களுக்கு இப்போது பயப்படாமல் குரைக்க கிடைத்திருக்கும் இடம் வலைப்பதிவுகள்தான்.அதில்தான் அந்த நாய்கள் முகமூடி போட்டுக்கொண்டு குரைக்கின்றன.ஆனால் அந்த குரைப்பிலிருந்து அந்த நாய்களை யாருக்குத்தான் அடையாளம் தெரியாது?

 9. Dear mathimaran,
  extremely sorry for not giving my comments in Tamil.
  Basically I have a doubt. Whether your critics is for Tamil nadu writers association or for the ‘brahminism’ in Mani Ratnam & Madan.
  Clear it first.

 10. எல்லருடைய கருத்தும் சரி. அனால், ஏன் தமிழர்கள் நாய்களை இவ்வளவு கேவலமாக ஒப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த அன்பு மிருகத்தை இனியும் கேவலமான மனிதனுடனுடைய செயல்களுக்கு ஒப்பிடாமல் இருந்தால் நல்லது.
  இனி சொறி மனிதன், வெறி மனிதன் என்று சொல்லவும். நாய் அல்லது மிருகம் என்றுமே சக மிருகங்களை விமர்சனம் செய்வது, அழிக்க நினைப்பது கிடையாது. நமது கீழ்தரமான இந்த செயல்களுக்கு இனியாவது அவைகளை இழுப்பதை நிருத்துவோமாக.

 11. காமராஜர், தனது அரசியல் குருவாக சத்தியமூர்த்தியை தாம் கொண்டிருந்தார். அவரின் வழிகாட்டுதல் மற்றும் உதவியுடனேதான் காங்கிரஸ் இயக்கத்தில் வளாந்தார்.
  ச‌த்திய‌மூர்த்தி 1943இல் அகால‌மாக‌ கால‌மான‌தும் அவ‌ரின் நினைவை போற்றி புக‌ழ்ந்தார். அவ‌ரின் குடும்ப‌த்திற்க்கு உத‌வினார்.

  அத‌னால் காம‌ராஜ‌ரும் ‘பார்ப‌ன‌வாதி’ என்று சொல்வீர்க‌ளா ?
  உங்க‌ள் லாஜிக் அப்ப‌டி செல்கிற‌தே ? !!!

 12. கையாளாகாதவர்களின் புலம்பல்தான் மேற்கண்ட கட்டுரை
  பெரியார்கூட ராஜாஜியோடு நட்பும் அவரது நிகழ்ச்சியல் பங்கேற்பும் செய்தார் அதற்காக பெரியாரை சந்தேகப்படமுடியுமா ? அதுபோலத்தான் ஒரு கலைஞர்க்கு விழா எடுப்பதாலே அவரது எல்லா நடவடிக்கையையும் ஆதரிப்பதாகாது.

 13. paarpana yethirpu, kadavuzh maruppu, moodanampickai ozhippu pontavai ippothu maranthupochu thamizharkazhucku.. intha kodumaikazh thalaivirithu aaduthu , ippothu nam thamizh naaddile. Thanthai Periyar pontra oru Thalaivar yem thamizharkazhuku kidaippara?… aam, vezhicham therikirathu…. oru pulliyai..

 14. //ஒரு இந்து தீவிரவாதி எடுத்த ‘பம்பாய்’ என்கிற ஒரு தேச விரோத படத்துக்கு//

  enaku puriyala… nadandha sambavangalai thaane padama eduthar? muslim mattum illaiye Hindu vum anga arajagathil eedu pattadha thaane padam kaati irukar… Hindu muslim otrumaiku thaane andha padam, climax dialogue um… edhunala Hindu theeviravadhi nu solringa?!!!!

  Roja padatha pathi sonnadha purinjika mudiyudhu, but indha padathil enna thavaru? sutti kaatavum…

 15. அட கலைஞா் ஒருவருக்கு விழா எடுப்பதில் தவறு இல்லை.. அனால் முற்போக்கு கலைஞா் விழாவை சுந்தராம்பாள் போன்றவா்களுக்கு எடுக்க கூடாது என்பது தான் கட்டுரையின் கருத்து..

  ஒன்னு அந்த பக்கம் நில்.. இல்லை இந்த பக்கம் நில்..நடுநிலைனு..
  இரண்டையும் போற்றி..இரண்டுக்கும் துரோகியாகதே அவ்வளவு தான்..

  தமுஎகச அப்படி ஒரு நடுநிலை போற்றி தான் செய்வாா்கள்..

 16. ஈ வெ ரா அவர்கள் வருவதற்கு முன்பு ஜாதி இருந்தது, அவர் இறந்து 40 வருடம் ஆகியும் இருக்கிறது, இப்போதும் இருக்கிறது கௌரவ கொலைகள் நடக்கிறது இடையில் அவர் என்ன கிழித்தார். (பிராமணர்கள் எதிர்ப்பை தவிர) இட ஒதுக்கீடு அம்பேத்கார் கொண்டு வந்தார். தலித்துகளை இஸ்லாத்துக்கு போ என்றார். இதை சொல்ல தண்டத்திற்கு அவர் எதெற்கு. அவரால் மற்ற ஜாதியினரை தலித்துக்கு சாதகமாக மாற்ற முடியவில்லை. தண்டமாக அவருக்கு விழா கொண்டாடும்போது மற்றவர்களுக்கும் எடுக்கலாம்

Leave a Reply

%d