கம்பராமாயணத்தில் அறிவியல்!

‘மாணவர்களுக்கு கம்பராமாயணத்தில் உள்ள அறிவியல் கருத்துகளை சொல்லிக் கொடுஙகள்’ என்று பெரியார் உடன் இருந்து அரசியலுக்கு வந்த ஆர்.எம். வீரப்பன் சொல்லியிருக்கிறாரே? இதுதான் பெரியார் சீடர்களின் யோக்கியதையா?

-கு. கலாநிதி.

பெரியார் உடன் நாய், பூனை எல்லாம்தான் இருந்தது. அதெல்லாம் பகுத்தறிவோடு இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதுதான் பகுத்தறிவா?

‘அறிவியல் கருத்துகள் வேண்டும் என்றால் அறிவியல் நூலை படியுங்கள். மத நூல்களில் அறிவியலை தேடுவது, மலத்தில் அரிசி பொறுக்குவது போன்றது’ என்று பெரியாரே இதுபோன்ற மோசடி அறிஞர்களின் கருத்துகளை கண்டித்திருக்கிறார்.

ஆர்.எம். வீரப்பன் என்ற ‘விஞ்ஞானியின்’ ஆலோசனையை கேட்டு நீங்கள் மலத்தில் அரிசி பொறுக்குவது என்றால் போய் பொறுக்குங்கள். அதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.

ஓகஸ்ட்19, 2008

8 thoughts on “கம்பராமாயணத்தில் அறிவியல்!

  1. ஆர்.எம். வீரப்பன் மிக பெரிய முட்டாள் தலைவா

  2. தந்தை பெரியாரிடம் இருந்து பிரிந்து தமிழன எழுச்சியை சேட்டு மார்வாடிகளிடம் அடகுவைத்து தேர்தல் அரசியலில் ஈடுபட்டு அனைத்து அயோக்கியத்தனங்களையும் செய்துவிட்டு அல்லது செய்துகொண்டிருக்கும் யாருக்கும் தன்னை பெரியார் தொண்டன் என்று சொல்லிக்கொள்ளும் யோக்கியதை இல்லை.

    அப்படிப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் தமிழினத்துரோகிகளே!

  3. உங்கள் கருத்துகளை எனது வலைபுவில் உல்வவிடமா அனுமதிகாக படிகாட்டான்

  4. ‘அறிவியல் கருத்துகள் வேண்டும் என்றால் அறிவியல் நூலை படியுங்கள். மத நூல்களில் அறிவியலை தேடுவது, மலத்தில் அரிசி பொறுக்குவது போன்றது

  5. சரியான பதில். காலத்திற்கு ஏற்றது. இன்று பெரியாரின் தொண்டன் என்ற சொல்ல எந்த தேர்தல் அரசியல்வாதிக்கும் யோக்கியதை இல்லை. நன்றி.

Leave a Reply

%d bloggers like this: