என்ன செய்து கிழித்தார் பெரியார்?

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்

“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி
வெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
பிரமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?

இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக
இங்கே டெலிபோன் டிபார்மென்டில
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.

ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?
-வே. மதிமாறன்
***
‘இனி’ மாத இதழ்
1993 அக்டோபர்
தந்தை பெரியாரின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தக் கவிதை மறுபிரசுரம் செய்யப்படுகிறது

8 thoughts on “என்ன செய்து கிழித்தார் பெரியார்?”

  1. பெரியார் செய்து விட்டு பொனவைகள் பற்றி இன்றைய தலைமுறைக்கு ஏன் தெரியவில்லை? வருத்தமான விஷய்ம் தான். மேல்சாதி(பார்பனர்கள் மட்டும் எல்லாவற்றுக்கும் காரணமல்ல) ஆதிக்கம் இருந்த நாட்களில் அவர்களின் கஷ்டங்களை ஒரு சில பேரே அறிந்திருக்கிறார்கள். வருத்தமான விஷயம் தான்.

    //பிரமணனும் மனுசந்தாங்க.//

    உண்மைதானே?

  2. “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”

    என்கின்ற கேள்விகளை அவரை நோக்கியே கேட்கும் அளவிற்கு கல்வியும் வேலைவாய்ப்பின் உரிமையையும் வாங்கி தந்திருக்கிறாரே அது போதும்.

Leave a Reply