இந்து என்றால் ஜாதி வெறியனா?

எனக்கு தயை கூர்ந்து ஒரே ஒரு விளக்கம் மட்டும் கூறுங்கள். ஒருவன் இந்து மதத்தில்(அல்லது ஏதோ ஒரு மதத்தில்) பிறந்ததால் மட்டுமே ஜாதி வெறியன் என்று சொல்லிவிட முடியுமா? நான் பிறந்தது ஒரு இந்து குடும்பத்தில் (அதுவும் ஒரு பார்பன குடும்பத்தில்) பிறந்திருந்தாலும் எனக்கு மத நம்பிக்கை கிடையாது. ஆனால் இறை நம்பிக்கை உண்டு. நான் பண்டிகைகளும் கொண்டாடுவதில்லை. அதே சமயத்தில் என் மனம் விரும்பியபோதெல்லாம் தேவாலயங்களுக்கு அல்லது மசுதிகளுக்கு செல்வேன்.(பிராத்தனை செய்யும் வழக்கமும் கிடையாது. அப்படியே செய்தாலும் அது என் நண்பர்களுக்காக மட்டுமே).என் கேள்வியின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். ஒரு மத்தில் பிறந்ததால் மட்டுமே ஒருவரை மத வெறியர் என்று கூற முடியுமா? -பெயர் குறிப்பிட விரும்பவில்லை.

ஒருவன் இந்து மதத்தில் பிறப்பதினால் ஜாதி வெறியனாக இருக்க முடியாது. ஆனால் ‘இந்துக் குடும்பத்தில் பிறக்கிற ஒருவனுக்கு பிறக்கும்போதே ஜாதி இருக்கிறது’ எனறு தான் இந்து மதம் சொல்கிறது. ‘பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தால், அவன் உயர்ந்த ஜாதி. தாழ்த்தப்பட்டவர் குடும்பத்தில் பிறந்தால் அவர் தாழ்ந்த ஜாதி’ என்று இந்து மதம் பிறப்பில் ஜாதி பார்க்கிறது.

அதுபோல் ஒருவர் விருப்பப்பட்ட ஜாதிக்கு மாறிக் கொள்ள முடியாது என்றும் அது சொல்கிறது. ஆக ஒருவர் பிறக்கும் போது ஜாதி வெறியராக பிறக்க முடியாது. இந்த அமைப்பை ஒத்துக் கொண்டு வளர்வதினால்தான் ஒருவர் ஜாதி வெறியராக உருவாகிறார்.

யார் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களோ, கடைப்பிடிக்கிறார்களோ அவர்களை எதிர்த்து இயங்குவதும், கண்டிப்பதும்தான் நாம் ஜாதி வெறியர்களாக இல்லை என்பதை நீருபிக்க முடியும். அது நம் குடும்பம் சார்ந்திருக்கிற ஜாதியாக இருந்தாலும் தயங்காமல் அம்பலப்படுத்தவேண்டும்.

மற்றபடி, பிறப்பால் நான் சங்கராச்சரியார்களுக்குக் கூட ஜாதி பார்ப்பதில்லை. ஆனால், சங்கராச்சாரியார் ஆக வேண்டும் என்றால் பிறப்பால் பார்ப்பானாக இருக்க வேண்டும் என்று ஜாதி வெறியர்கள் சொல்கிறார்கள். அப்படி பார்ப்பதுதான் பார்ப்பனியம், இந்து மதம்.

உங்கள் உணர்வை நான் மதிக்கிறேன். உங்களுக்கு என் வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன். நன்றி.

நட்புடன், வே. மதிமாறன்

2008 செப்டம்பர்  21 அன்று எழுதியது.

இந்து மதத்திற்கு காந்தி முகமூடி; காந்திக்கு தேசப்பிதா முகமூடி

8 thoughts on “இந்து என்றால் ஜாதி வெறியனா?”

 1. அதுபோல் ஒருவர் விருப்பப்பட்ட ஜாதிக்கு மாறிக் கொள்ள முடியாது என்றும் அது சொல்கிறது.
  ஆக ஒருவர் பிறக்கும் போது ஜாதி வெறியராக பிறக்க முடியாது

  100% சதவீதம் உண்மை ஐயா.

  ஒரு மதத்தின் சாரத்தை மட்டுமே ஊட்டி வளர்க்கப்படுகிறவர்கள் மத வெறியர்களாக மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 2. “ஒரு மதத்தின் சாரத்தை மட்டுமே ஊட்டி வளர்க்கப்படுகிறவர்கள் மத வெறியர்களாக மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.”

  ஒத்துக்கொள்ளத் தயார். ஆனால் தான் அந்தமதத்தில் இருப்பது மட்டுமல்லாமல் அடுத்தவரையும் அவர் ஏழ்மையைக் காரணம் காட்டி அந்தமதத்துக்கு மாற்ற நினைப்பவன் ஜாதி மத வெறியனுக்கும் மேல் ஏதாவது பெயர் வையுங்கள் நானும் ஒத்துக்கொள்கிறேன்.

 3. மனம் மாற்றம், மதம் மாற்றம், அம்பேத்கர் சொன்னாரம் அடிமை இல்லாமல் இருக்க விரும்பினால் உன் மதத்தை மாற்றிக்கொள் என்று.. எத்தனை சகோதரர்கள் இதனை ஏற்று பின்பற்றுகின்றனர்? அடிமை இல்லாத மதம் எது என்று தேடுங்கள் ..விடை கிடைக்கும்..

Leave a Reply