டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’

al175

ரு தாழ்த்தப்பட்டவர் மாவட்ட ஆட்சியாளராக இருக்கிறார். அவரின் கட்டுப்பாட்டில் அந்த மாவட்டமே இருக்கிறது. காவல் துறை அதிகாரிகளில் இருந்து, தாசில்தார்கள் வரை அவர் உத்தரவுக்காக காத்திருக்கிறர்கள்.

ஆனால், அவர் தன் சொந்த கிராமத்திற்கு சென்றால், சேரியில்தான் புழங்கவேண்டும். ஊரில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு முட்டாள் அல்லது கிரிமனல் ஜாதி இந்துகூட அவரை தன்னை விட தாழ்ந்தவராக, தான் அவரை விட உயர்ந்தவராக நினைப்பான். இதுதான் ஜாதிய மனோபாவம்.

இந்த மனோபாவம், முட்டாள் ஜாதி இந்துவிடம் மட்டுமல்ல, நன்கு படித்த ஜாதி இந்துவிடமும் இருக்கிறது. இந்த எண்ணமும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறையும் இந்தியா முழுக்க பரவி இருக்கிறது. இந்திய தேசியத்தின் ஒரே அடையாளமாக இந்த தலித் விரோதம், இந்துக்கள் இருக்கும் இடமெல்லாம் நீக்கமற, பரம்பொருளைப்போல் பரவி இருக்கிறது.

இந்தச் சமூக அவலம், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியாளருக்கு மட்டுமல்ல, டாக்டர் அம்பேத்கருக்கே இது நேர்ந்திருக்கிறது.

1929 ஆம் ஆண்டில் பாம்பாய் அரசாங்கம், (பிரிட்டிஷ்) தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குறைகளை கேட்டறிந்து விசாரணை செய்ய, அமைத்தக் கமிட்டியில் டாக்டர் அம்பேத்கரும் ஒருவர். அந்த கமிட்டியின் சார்பாக பயணம் செய்தபோது சாலிஸ்கான் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மஹர்வாடா என்ற ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள், டாக்டர் அம்பேத்கரை தங்கள் ஊருக்கு வந்து தங்களோடு ஒர் இரவு தங்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறார்கள்.

சாலிஸ்கான் ரயில் நிலையத்தில் இருந்து கிராமத்திற்கு குதிரை வண்டியில்தான் போக வேண்டும். வண்டிக்காரன் ஒரு ஜாதி இந்து. டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர் என்பதால், பெரும் பணம் கொடுக்க முன்வந்தபோதும் கூட, ஜாதி இந்து வண்டி ஓட்ட மறுக்கிறான். வண்டியை மட்டும் வாடகைக்கு எடுத்து, வண்டி ஓட்டிப் பழக்கமில்லாத ஒரு தாழ்த்தப்பட்டவர் வண்டியை ஓட்டியதால் விபத்துக்குள்ளாகி டாக்டர் அம்பேத்கரின் கால் எலும்பு முறிந்து விடுகிறது.

இந்த அவலம் நிறைந்த அனுபவத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கர், அந்தக் கட்டுரையை இப்படி முடிக்கிறார்;

“அனைத்து தீண்டப்படாதவர்களைவிட, அவர் பார்-அட்-லாவாக இருந்தாலும் சரி, தானே உயர்ந்தவன் என்று ஒரு வண்டிக்காரனான இந்து நினைத்திருந்தான்.”

al233டாக்டர் அம்பேத்கரைப் பற்றியான இந்த எண்ணம், 1929 ஆம் ஆண்டில் பம்பாயை ஒட்டி இருந்த கிராமத்தின் எழுத படிக்க தெரியாத வயதான வண்டி ஓட்டியான ஜாதி இந்துவின் மனோபாவம் மட்டும் அல்ல. 2008 ஆண்டில் சில ஜாதி இந்து மாணவர்களின் மனோபாவமும் இப்படியேத்தான் இருக்கிறது. அதனால்தான் டாக்டர் அம்பேத்கர் பெயரை பயன்படுத்த மறுக்கிறார்கள். அதனால்தான் அவரின் சிலை சேதப்படுத்தப்படுகிறது. அதனால்தான் ஒரு நடிகனின் சிலைக்குத் தருகிற மரியாதையை கூட உலக அறிஞர்களில் குறிப்பிடத்தக்க அறிஞராக அறியப்பட்டிருக்கிற டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு தர மறுக்கிறார்கள். அதனால்தான் அவரின் சிலை மட்டும் கூண்டுக்குள் சிறை வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறது.

***

“தீண்டாமையைக் கடைப் பிடிப்பதில் எத்தகைய தவறும் இருப்பதாக பழைய பழுத்த வைதிக இந்து கருதுவதில்லை, அவனுக்கு இது இயல்பான, இயற்கையான, பொதுமுறையான ஒரு விஷயம். இதனால் அவன் இதற்குக் கழுவாய் தேடுவதற்கோ அல்லது சமாதானம் கூறுவதற்கோ முயல்வதில்லை.

ஆனால் புதிய நவீனகால இந்துவின் விஷயம் அப்படியல்ல; அவன் தவறை உணர்கிறான். எனினும் பகிரங்கமாக இது குறித்து விவாதிப்பதற்கு வெட்கப்படுகிறான்; தீண்டாமை போன்ற கயமைத்தனமான, கொடிய, அருவருக்கத்தக்க, இகழார்ந்த சமூக திட்டங்களை இந்து நாகரிகம் தன்னுள் கொண்டிருக்கும் அவலட்சணம் எங்கே அயல்நாட்டவர்க்கு தெரிந்துவிடுமோ என்று அவன் அச்சம் கொள்கிறான்.”

1948 ல் டாக்டர் அம்பேத்கர் நவீன இந்துவைப் பற்றி, ‘மானம் அவமானத்திற்கு பயந்தவனாக’ குறிப்பிட்டிருக்கிறார். சரியாக 60 ஆண்டுகள் கழித்து 2008ல் இருக்கிற நவீன இந்து, அவரின் சிலையை இடிப்பதின் மூலமாகவும், அவர் பெயரை பயன்படுத்த மறுப்பதின் மூலமாகவும் அம்பேத்கரின் கூற்றை பொய்யாக்கி இருக்கிறான்.

இதற்குக் காரணம், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியே அவர்களின் ஒப்பற்றத் தலைவரான டாக்டர் அம்பேத்கரின் மீதும் பிரதிபலிக்கிறது.

உண்மையில் டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் மட்டும்தானா? அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் இடஓதுக்கிடுக்கு மட்டும்தான் பாடுபட்டாரா?

குற்றப் பரம்பரையினர் என்ற ஒரு சமூகம் தலித் அல்லாத சமூகங்களில் மிகவும் பின்தங்கிய சமூகமா இருக்கிறது. பலநேரங்களில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை இந்த சமூக மக்களை ‘ஏத்திவிட்டே’ உயர்ஜாதி இந்துக்கள் நடத்துகிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நேர் மேல் இருக்கிற இந்த சமூகம், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளில் அடிக்கடி ஈடுபடுகிற சமூகமாகவும் இந்து ஜாதி அமைப்பு முறை உருவாக்கி வைத்திருக்கிறது.

1948 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் எழுதிய ‘தீண்டப்படாதார் என்பவர் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படதார் ஆயினர்?’ என்ற நூலுக்கான முன்னுரையை இப்படி துவக்குகிறர்:

“சூத்திரர்களைத் தவிர இதர மூன்று சமூகப் பிரிவினரை இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ளது. இத்தகைய இந்து மக்கள் இருந்து வருவது குறித்து எந்த அளவுக்கு அக்கறை காட்ட வேண்டுமோ அந்த அளவுக்கு அக்கறை காட்டப்படவில்லை. மேலே குறிப்பிட்ட மூன்று சமூகப் பிரிவினர் வருமாறு:

1) குற்றப் பரம்பரையினர், இவர்களது எண்ணிக்கை சுமார் 2 கோடி சொச்சம்;

11) ஆதிவாசிகள், இவர்களது எண்ணிக்கை ஏறத்தாழ 1.5 கோடி;

111) தீண்டப்படாதவர்கள், இவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 கோடி.

இப்படிப்பட்ட வகுப்பினர் இருந்துவருவது ஒரு மாபெரும் மானக்கேடாகும், அவக்கேடாகும். இந்த சமூக சீர்கேடுகளின், விபரீத விளைவுகளின் வெளிச்சத்தில், பகைபுலனில் பார்க்கும்போது, இந்து நாகரிகம் என்பது ஒரு நாகரிகம் என்று அழைப்பதற்கே அருகதையற்றதாகிவிடுகிறது! மனித குலத்தின் ஒரு பகுதியை இவ்வாறு அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது என்பது கொடிதினும் கொடிதான, பேய்த்தனமான அவமானகரமான ஒரு சூழ்ச்சியாகும்: அப்பட்டமான வஞ்சகமாகும். பெரும்பழி, குரூர அவமதிப்பு என்பதுதான் இதற்குச் சரியான பெயராக இருக்கமுடியும்.”

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பேச வந்த டாக்டர் அம்பேத்கர், சமூகரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிற குற்றப் பரம்பரையினருக்காகவும் சேர்த்தேதான் குரல் கொடுக்கிறார்.

இந்த மனிதநேயரை எதிர்ப்பதற்குத்தானா இவ்வளவு ஆவேசம்.

al343
தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகளை கண்டிக்கும் போது பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை கண்டிக்கிற டாக்டர் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு முழுக்காரணம் என்று இந்து மதத்தையும் பார்ப்பனர்களையுமேதான் குற்றம் சுமத்துகிறார்:

“இன்று அனைத்துப் புலமையும் பிராமணர்களிடமே கட்டுண்டு கிடக்கிறது. ஆனால் அப்படியிருந்தும் துரதிருஷ்டவசமாக எந்தப் பிராமண அறிஞரும் ஒரு வால்டேராகச் செயல்படுவதற்கு இதுவரை முன்வரவில்லை. எதிர்காலத்திலும் இத்தகைய ஒரு பிராமண அறிஞர் அரங்கில் தோன்றுவார் என்றும் தோன்றவில்லை.

இந்த வால்டேர் யார்? கத்தோலிக்க திருச்சபையின் சித்தாந்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வளர்ந்தவர்; எனினும் விரைவிலேயே அந்த சித்தாந்தங்களுக்கு எதிராகவே கிளர்ந்தெழுந்து, குரல் எழுப்பும் அறிவாற்றல், நேர்மை அவரிடமிருந்தது.

பிராமணர்களால் ஒரு வால்டேரை உருவாக்க முடியவில்லையே என்பது அவர்களது புலமைக்கு இகழ் சேர்க்கிறது; அவர்களது அறிவாற்றலுக்கு அவப்பெயர் தேடித்தருகிறது. பிராமண அறிஞர் என்பவர் ஒரு கற்றறிந்த மனிதரே தவிர அவர் ஓர் ஆய்வறிவாளர் அல்ல என்பதை மனதிற்கு கொண்டால் இதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை.

கற்றறிந்தவருக்கும் ஆய்வறிவாளருக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இருக்கிறது. முந்தியவர் வர்க்க உணர்வு கொண்டவர்; தமது வர்க்க நலன்களில் கண்ணும் கருத்தும் கொண்டவர்.

பிந்தியவரோ கட்டறுந்தவர்; வர்க்க நோக்கங்களுக்கு அடிமையாகாமல், ஊசலாடாமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவர்.

பிராமணர்கள் படித்தவர்களாக மட்டுமே இருப்பதால் அவர்களால் ஒரு வால்டேரை தங்கள் மத்தியில் தோற்றுவிக்க முடியவில்லை.

பிராமணர்களால் ஏன் ஒரு வால்டேரை உருவாக்க முடியவில்லை? இந்தக் கேள்விக்கு மற்றொரு கேள்வியைக் கொண்டுதான் பதிலளிக்க முடியும். துருக்கி சுல்தான் முகமதிய உலகின் சமயத்தை ஏன் ஒழித்துக்கட்டவில்லை? போப்பாண்டவர் கத்தோலிக்க மதத்தை ஏன் பழிந்துரைக்கவில்லை?……………………………………….

……………………………………………………………………………

பிராமணர்கள் பெற்றுள்ள அதிகாரமும் அந்தஸ்தும் இந்து நாகரிகம் அவர்களுக்கு அருள்கொடையாக அளித்தவையே ஆகும். அது அவர்களைத் தெய்வீக மனிதர்களாகப் பாவிக்கிறது; கீழ்த்தட்டுகளிலுள்ள வகுப்பினரை எல்லாவிதமான இன்னல் இடுக்கண்களுக்கும் உள்ளாக்குகிறது; அவர்கள் வீறு கொண்டெழுந்து தங்கள்மீது பிராமணர்களுக்குள்ள ஆதிக்கத்துக்குச் சவால் விடாதபடி, அதற்கு ஆபத்தை உண்டுபண்ணாதபடிப் பார்த்துக் கொள்கிறது.

ஒவ்வொரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும் படித்த அறிவாளியாக இருந்தாலும் அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான். அப்படியிருக்கும்போது பிராமணர்கள் எவ்வாறு வால்டேர்களாக இருக்க முடியும்?”

உண்மை எது என்று தெளிவாக ஆய்ந்து தனது சொந்த விருப்பங்களுக்கு இடம் கொடுக்காமல், இயங்கிய இந்த மாமேதையின் சிலையை இடிப்பதற்காகவா ஜாதிவெறியர்களுக்கு இவ்வளவு ‘வீரம்’?

-தொடரும்

al371

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்?

குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்…..

32 thoughts on “டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’

 1. /நவீனகால இந்துவின் விஷயம் அப்படியல்ல; அவன் தவறை உணர்கிறான். எனினும் பகிரங்கமாக இது குறித்து விவாதிப்பதற்கு வெட்கப்படுகிறான்; தீண்டாமை போன்ற கயமைத்தனமான, கொடிய, அருவருக்கத்தக்க, இகழார்ந்த சமூக திட்டங்களை இந்து நாகரிகம் தன்னுள் கொண்டிருக்கும் அவலட்சணம் எங்கே அயல்நாட்டவர்க்கு தெரிந்துவிடுமோ என்று அவன் அச்சம் கொள்கிறான்.”/ –

  Good one… but don’t ask people to wear “Dr.A” T-shirt, it will lead to another problem..again & again…then they wear other “t-Shirt”… Please kindly don’t mistake me… even I’m advicing people to remove “ALL” statues.

  Try to edit the mistakes….

 2. /. எனினும் பகிரங்கமாக இது குறித்து விவாதிப்பதற்கு வெட்கப்படுகிறான்; தீண்டாமை போன்ற கயமைத்தனமான, கொடிய, அருவருக்கத்தக்க, இகழார்ந்த சமூக திட்டங்களை இந்து நாகரிகம் தன்னுள் கொண்டிருக்கும் அவலட்சணம் எங்கே அயல்நாட்டவர்க்கு தெரிந்துவிடுமோ என்று அவன் அச்சம் கொள்கிறான்.”/

  good one

 3. நல்முயற்சி , நல்ல விசயம், டி‍‍ ‍ சர்ட்க்காக காத்திருக்கிறோம்.

 4. there are many idiots and fascists, fools and pseudo intellectuals weraing ‘che’ Tshirts. wearing a shirt is not the issue, removing the veil is the real thing to do.

 5. முட்டாள்கள், பாசிஸ்டுகள், போலி அறிவாளிகள் கூட்டத்தில் ஒருவன் நான்…
  முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுக்க,
  தலைவர்களின் கருத்துகளை அவர்களின் படங்களை நினைவூட்டுவதன் மூலம் அறிமுகப்படுத்த…
  எவ்விடத்திலும், எங்களுக்கு சிக்கல் ஆயினும், எங்களை அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் இழப்புகள் ஏற்படினும் அவற்றைக் கடந்து t-shirt-களை நாங்கள் தயங்குவதில்லை.

  வெளியில் தன் கருத்தை வெளிப்படுத்தத் தயங்குகிறவர்களை, கண்ட கண்ட எழுத்துகளை சுமந்து நிற்போர் மத்தியில், தலைவர்களையும் புரட்சியாளர்களையும் எங்கள் உடையாக சுமப்பதால் நாங்கள் மேற்காணும் கூட்டத்தில் ஒருவர் என்றால் இருந்துவிட்டுப் போகிறோம்…
  t-shirt அணியக்கூடத் தயங்குகிறவர்களை என்ன சொல்வது?

  காத்திருக்கிறோம் அண்ணல் படம் தாங்க!

 6. I am pasting Mr. princenrsama’s comments here as it is the most apt comment.

  முட்டாள்கள், பாசிஸ்டுகள், போலி அறிவாளிகள் கூட்டத்தில் ஒருவன் நான்…
  முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுக்க,
  தலைவர்களின் கருத்துகளை அவர்களின் படங்களை நினைவூட்டுவதன் மூலம் அறிமுகப்படுத்த…
  எவ்விடத்திலும், எங்களுக்கு சிக்கல் ஆயினும், எங்களை அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் இழப்புகள் ஏற்படினும் அவற்றைக் கடந்து t-shirt-களை நாங்கள் தயங்குவதில்லை.

  வெளியில் தன் கருத்தை வெளிப்படுத்தத் தயங்குகிறவர்களை, கண்ட கண்ட எழுத்துகளை சுமந்து நிற்போர் மத்தியில், தலைவர்களையும் புரட்சியாளர்களையும் எங்கள் உடையாக சுமப்பதால் நாங்கள் மேற்காணும் கூட்டத்தில் ஒருவர் என்றால் இருந்துவிட்டுப் போகிறோம்…
  t-shirt அணியக்கூடத் தயங்குகிறவர்களை என்ன சொல்வது?

  காத்திருக்கிறோம் அண்ணல் படம் தாங்க!

  One other gentleman commented about removing the statues!

  It is a shear NONSENSE!

  Today they might dislike a daliths’s statue. Tomorrow even the existance a dalith himself!
  Soul searching is the need today. 21st Century!

 7. சுதந்திரம் இந்தியாவிற்கு கிடைத்திருக்கலாம் ஆனால் இந்தியர்களுக்கல்ல.

 8. சே பற்றி ஒன்றும் தெரியாத அவர்கருத்துக்கு நேர் எதிராக இருப்பர்வர்கள் கூட அவர் படம் போட்ட டி சர்ட் அணிகிறார்கள்.
  டாக்டர் ருத்ரன், சே டி சர்ட் அணிபவர்களை முட்டாள்கள், போலி அறிவாளிகள், பாசிஸ்டுகள் என்று திட்டவில்லை. அதுபோன்றவர்கள் கூட அணிகிறார்கள். சபரி மலைக்கு எல்லோரும் மாலைபோடுவதுபோல் என்கிற கருத்தில் அவர் சொல்லியிருக்கிறார்.

 9. கல்வியறிவில் காலம் காலமாய் முன்னிலையில் நிற்கும் பிராமணர்களிடமிருந்து ஒரு வால்டேர் ஏன் உருவாகவில்லை?
  திராவிட இயக்கங்கள் பிராமணர்களுக்கு எதிராக குரல் கொடுத்தவை.
  ஆனால் மார்க்சியம்?
  நிறைய யோசிக்க வைத்த கட்டுரை.

  வாழ்த்துகளுடன்,

  தோழமை,

  புதியமாதவி

 10. Dear Comrade,
  The article was timely one, as far as statue , T-shirt culture is concerned, it is needed at this point in time, because reading habit is vanishing, the whole media is hegemonised by brahminical culture. Thus, atleast to remind people , ambedkar and periyar statues are needed.. comrade, brahmincal structure wont ,cant produce a voltair in any community, because the whole ideology swallows mind and everything. NO COMPROMISE WITH HINDUTVA, UPROOTING IS THE ONLY SOLUTION. Cast atrocities cannot be controlled by simple propoganda by any democartic means but by resisting, encountering straight with force. There is a militant movement is required.. let me know if there is or lets start..
  kalai

 11. அம்பேத்கர் அவர்கள் உலகத்துக்காண புரட்சியாளர்களில் ஒருவராகவும் முதன்மையாகவும் இருக்கிறார்… இந்தனை கோடி மக்களுக்கு தன்னுடைய அறிவு ஆயுதத்தால் போராடிய ஒரு மாவீரனுடைய புகைப்படம் அணிந்த உடையை அணிய பெருமையாக இருக்கிறது விரைவில் தொடங்குங்கள் உங்கள் முயற்ச்சிக்கு எனது பாராட்டுகள்

 12. இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது, மிகவும் அவமானமாக இருக்கிறது. சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜாதியின் பெயரால் வன்முறை நடக்கிறது என்றால் ஒவ்வொரு மனிதனும் வெட்கித்தலைக்குனிய வேண்டும்.

  ”யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொன்ன தமிழ் நாட்டிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறை நடக்கிறது என்றால் , நாம் வெட்கித்தலைக்குனிய வேண்டும்.

 13. It’s a good idea, better than nothing. I suggest to print other leaders like Periyar, with Ambedhkar. So, more people will accept. You can also make other souvenirs, not only t-shirts. Once you market it, there will be less protest. Will you produce more and export?

 14. நண்பர்களே நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

  http://www.thamizhstudio.com/

 15. நல்முயற்சி , நல்ல விசயம், டி‍‍ ‍ சர்ட்க்காக காத்திருக்கிறோம்.
  மிக விரைவில் வெளி வரவேண்டும் …..

 16. தலித் இன மக்கள் அனைவரும் கல்வி பெற வேண்டும். அடிமைத்தனத்திலிருந்து விடுபட முதல் வழி இது தான். இன்றும் கூட எங்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் தலித் இனத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவரை விரட்ட மேல் சாதியினரின் மறைமுக முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தலித் இன மக்களை கீழ் சாதி என நினைக்கும் மேல் சாதியினர் பிராமணர்களுக்கு எதிரான பஞ்சமன் என்ற இழி நிலை மாற எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை.

 17. காத்திருக்கிறோம் அண்ணல் படம் தாங்க!

 18. நல்ல முயற்ச்சி ,சாதி தீண்டாமை இன்னும் இருப்பது அவமானமாக இருக்கு, அம்பேத்கர் அவர்களையும் சாதியதுக்குள் அடைத்துவிட்டார்கள் அவர் உலகத் தலைவர் என்பதையும் இளைஞர்களிடம் எடுத்துறைக்கவேண்டும்…

  நல்ல முயற்ச்சி வாழ்த்துகள்

 19. காத்திருக்கிறோம் அண்ணல் படம் தாங்க!

 20. ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’

  அதென்னங்க பிராமணன்? அது எதுக்கு அவங்களை அப்படி தூக்கிப் பிடிக்கிறீங்க?
  பிராமணன் என்றால் ‘உயர்ந்தவன்’ என்று அர்த்தம். ‘அரிசனம்’ என்றால் கடவுளின் குழந்தைகள் என்று அர்த்தம் என உணர்ந்த பின் அந்த சொல்லை பயன்படுத்தாமல் தலித் என்று சொல்ல ஆரம்பித்தது இந்த சமூகம். அப்படியே நாம் “பிராமணர்” என்ற சொல்லை விடுத்து “பார்ப்பனர்” என்றே சொல்ல வேண்டும்.

  வாசகம் இப்படித்தான் இருக்க வேண்டும்.

  “ஒவ்வொரு பார்ப்பனனும் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டுகிறான்”

  இதுவே சரி!

 21. ///////kavin (14:32:45) :
  ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’

  அதென்னங்க பிராமணன்? அது எதுக்கு அவங்களை அப்படி தூக்கிப் பிடிக்கிறீங்க?/////////

  நண்பரே!

  தோழர் மதிமாறன் மற்றெதையும் விட பார்ப்பன ஆதிக்கத்தையும் அதன் சாதி வருண கட்டமைப்புகளையும் உடைத்து சுக்கு நூறாக்கி எழுதுவதையே வழக்கமாகக் கொண்டவர். அதற்கு வேரெங்கும் செல்லத் தேவையில்லை அவருடைய இந்த வலைதளத்தில் உள்ள முந்தைய பதிவுகள் அனைத்துமே ஆதாராங்கள்.

  நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள ‘ஒவ்வொரு பிராமனனும்……’ என்கிற அந்த வாக்கியம் அண்ணல் அம்பேத்கரால் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு தமிழில் மொழி பெயர்க்கப் பட்ட பிரபலமான வாக்கியம். எனவே அதனை நாம் ‘ஒவ்வொரு பார்ப்பனன்……’ என்று திருத்தி எழுதுவதைவிட அதன் வடிவத்திலேயே சுட்டிக்காட்டுவது முறையாக இருக்கும்.

  போகட்டும், அவரது பிற பதிவுகள் குறித்த கருத்துக்களை நீங்கள் ஏதேனும் பதிந்திருக்கிறீர்களா? அல்லது குறைந்த பட்சம் அவற்றை படித்தாவது இருக்கிறீர்களா? பாரதியின் பார்ப்பனப் பூநூலில் அவனுடைய போலி முற்போக்கைக் கட்டித் தொங்கவிட்டிருக்கிறாரே அதைப் பற்றி ஏதாவது கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்களேன் பார்ப்போம்.

  கலைவேந்தன்.

 22. With all due respects to what u wrote.
  There were and are thousands of other ethnic groups in the World who physically and mentally tortured, oppressed, controlled other ethnic groups more horrific than our Dalits had suffered, even in the recent past, like the Aborgins of Australia or the Blacks of all of Africa. Do u think they got any so-called social justice against their oppresers like Indian Dalits have.

 23. T shirt தயாராகிறதா? நிலவரம் என்ன?
  அம்பேத்கரின் பிறந்த நாளுக்கு அணிந்த்திருனதொமேயானால், சிறப்பாக இருந்திருக்கும்!
  தயாரான உடன் தெரிவிக்கவும்!

 24. நல்ல தொடர். நிறைய சிந்தனைகளையும் கேள்விகளையும் ஏற்படுத்துகின்றது.

  //ஆனால் புதிய நவீனகால இந்துவின் விஷயம் அப்படியல்ல; அவன் தவறை உணர்கிறான். எனினும் பகிரங்கமாக இது குறித்து விவாதிப்பதற்கு வெட்கப்படுகிறான்; தீண்டாமை போன்ற கயமைத்தனமான, கொடிய, அருவருக்கத்தக்க, இகழார்ந்த சமூக திட்டங்களை இந்து நாகரிகம் தன்னுள் கொண்டிருக்கும் அவலட்சணம் எங்கே அயல்நாட்டவர்க்கு தெரிந்துவிடுமோ என்று அவன் அச்சம் கொள்கிறான்.”//

  இது உண்மையான ஒரு விசயம். புலம் பெயர் நாட்டில் இருந்து இவற்றை நான் பல தடவை உணர்ந்துள்ளேன். இங்கு கல்வி கற்க வருபவர்களில் பலர் இந்திய உயர் குடியினர் மற்றும் பிராமண வகுபப்பினர் சங்கடமுறுவதை கண்டிருக்கின்றேன். கர்நாடக மாநிலத்தின் தேவதாசிகள் பற்றிய ஒரு விவாதத்தின் போதும், தலித்துக்கள் பற்றிய விவாதத்தின் போதும் வேறு காரணங்கள் சொல்லி வகுப்புகளை தவிர்த்திருக்கின்றனர்.

  இருந்த போதும் இந்த பிரச்சனைகளை முகம் கொடுத்து தமது தவறுகளை திருத்துவததற்கு பதிலாக நழுவும் போக்கையே இந்த தலைமுறை கையாள முயல்வது அடக்குமுறையை தொடரச் செய்வதிலான விருப்பத்தையே எடுத்துக்காட்டுகின்றது. இவ்வாறு வளர்ந்த நாடுகளுக்கு வருபவர்கள் வெள்ளை இனத்தவருக்கு தாம் சமமானவர்கள் என்ற மனப்போக்கை கொண்டுள்ளவராகவும் அதை நிறுவ முற்படுபவராகவும் அதற்காக தமது கல்வித்தகமைகள் பரத நாட்டியம் மற்றும் யோகாசனம் போன்ற கவர்ச்சிகர அம்சங்களை முன்நிறுத்துபவர்களாகவும் காணப்படுகின்றனர். எது எப்படி இருப்பினும் உலகத்தின் பார்வை தீண்டாமை மீதும் சாதிய அமைப்பு மீதும், தேவதாசி அமைப்புகள் போன்ற பல விடயங்கள் மீதும் அழுத்தமாக பதிந்தே உள்ளது. இந்த பதிவுகள் மனித உரிமை , மனுசத்தனம், போன்ற விடயங்களில் இருந்து அடக்குமுறையாளர்களை விலத்தியே வைக்கும்.

 25. அம்பேத்கரின் T SHIRT அணிய வேண்டும் என்பது மிக சரியான கருத்து.கம்யுனிஸ்ட்கள்,பெரியாரிஸ்டுகள் என்று சொல்பவர்கள்,சாதி ஒழிய வேண்டும் என்று சொல்பவர்கள் அம்பேத்கரை வாயளவில் பேசுவதெல்லாம் சரிதான்.மார்க்ஸ் சே பெரியார் போன்றவர்கள் ஷர்ட் போடுவது முற்போக்கானது என்று காட்டிகொல்பவர்கள் இதையும் செய்ய வேண்டும்………..

 26. நல்ல முயற்சி

  அம்பேத்காரின் டீசர்ட் ஏற்கனவே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தால் தாயரிக்கப்பட்டு இதர சாதியை சேர்ந்த தோழர்களையும் அணிய வைத்ததோடு அம்பேத்கார் பிறந்ததினம் நினைவுதினத்தில் சாதி ஆதிக்கம் நிறைந்த ஊர்களில் கூட அந்த சமூகத்தில் உள்ள இளைஞர்களையும் கொண்டாட வைத்ததையும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

 27. அடிமை நாட்டில் அம்பேத்கர் தோன்றியும், சுதந்திர, சட்ட பாதுகாப்புகள் அளிக்கப்பட்ட இந்தியாவில் அம்பேத்கருக்கு இணையான, உண்மையிலேயே தலித்களுக்கு போராடக்கூடிய ஒரு உண்மையான தலித் தலைவர் தோன்ற முடியாதது வருந்தத் தக்கதே. அரசாங்கத்தால் பல சலுகைகள் வழங்கப்பட்டும் தலித்கள் முன்னேற்றம் அடையாமல் பின்தங்கி இருப்பது வேதனைக்குரியது. அம்பேத்கரின் பெயரை கூறிக்கொண்டு அரசியல் (மாயாவதி) செய்பவர்களின் முகத்திரைகளை பத்திரிகைகள் கிழித்து வருகின்றன. தலித்களின் வாழ்க்கை அவர்களது கையிலேயே தவிர மற்றவர்களின் கையில் இல்லை. மற்ற பிற்படுத்த ஜாதியினர் தொழில் துறையினரில் இறங்கி முன்னேற்றம் அடைவதைப் போல தலித் மக்களும் தங்களது அடையாளத்தை பின்னே வைத்து விட்டு கோதாவில் இறங்கும்போதுதான் அவர்களது வாழ்வில் வெளிச்சம் பிறக்கும்.
  எந்தவொரு விஷயத்திலும் குறுக்கு வழிகள், தவறான பரிமாணங்கள் இருப்பதைப் போலவே மதங்களிலும் குறுக்கு வழிகள், தவறான பரிமாணங்கள் உள்ளன. அந்த பரிமாணங்கள் இந்து மதத்திலும் உள்ளன. பிராமணர்கள் அதன் முன்னோடிகளாக உள்ளனர் (பாரதியும், வள்ளலாரும் பிராமணரே). எல்லா மதங்களிலும் இந்த குறைபாடு உள்ளது. மதங்களின் நல்ல பரிமாணங்களை ஒப்பிட்டால் இந்து மதத்தின் சிறப்புக்கள் புரியும்.
  உதாரணமாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு நான்தான் வேதத்தில் கூறப்பட்ட கடைசி தேவ தூதர் என்று கூறிய ஒரே காரணத்தால் ஏசு கிறிஸ்து சூலியில் ஏற்றப்பட்டார். ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கடவுளே கிடையாது என்று கூறிய புத்தரை இந்துக்கள் ஒன்றும் செய்யவில்லை.

 28. //2000 ஆண்டுகளுக்கு முன்பு நான்தான் வேதத்தில் கூறப்பட்ட கடைசி தேவ தூதர் என்று கூறிய ஒரே காரணத்தால் ஏசு கிறிஸ்து சூலியில் ஏற்றப்பட்டார். ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கடவுளே கிடையாது என்று கூறிய புத்தரை இந்துக்கள் ஒன்றும் செய்யவில்லை.//

  Sinthikka vaikkum pathivu.

Leave a Reply

%d bloggers like this: