டாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்

ambedkar-2

ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!-2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3
டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4

டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது  – 5

‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’- டாக்டர் அம்பேத்கர்- 6


என்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன் -7

‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை  -8

மார்க்சியத்திற்கு-முஸ்லீம்களுக்கு எதிரானவரா அம்பேத்கர்? -9

உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்? -10

தொடர் -11

முதலாவது வட்டமேசை மாநாடு லண்டனில் 1930 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி 1931ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் தேதி வரை நடந்தது. இந்த மாநாட்டில் இங்கிலாந்தில் இருக்கும் வெள்ளைக்கார தலைவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், இந்தியாவில் வாழும் வெள்ளைக்கார இந்தியத் தலைவர்கள், இந்தியத் தலைவர்கள் என்று 89 பேர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களில் டாக்டர் அம்பேத்கர் ஒருவரே முறையாக பல்கலைக்கழகத்தில் பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர்.

டாக்டர் அம்பேத்கர் மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் கலந்து கொண்டார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில்தான் காந்தி உட்பட்ட அனைத்து இந்திய, இந்து தலைவர்களின் ஜாதி உணர்வை, தாழ்த்தப்பட்டவர்கள் மீதுள்ள காழ்ப்பணர்ச்சியை அவர்களின் முகத்திற்கு நேராக கேள்விகேட்டு அம்பலப்படுத்தினார் அம்பேத்கர்.
“தாழ்த்தப்பட்டவர்களை இந்துமதத்திலிருந்து பிரித்துப் பார்க்கக் கூடாது. அவர்கள் கடவுளின் குழந்தைகள் (அரிஜன்)” என்ற காந்தியிடம், ‘தாழ்த்தப்பட்டமக்கள் இந்துக்களே அல்ல. அவர்களை நீங்கள் இந்துக்களாக அல்ல மனிதர்களாகக்கூட நடத்துவதில்லை’ என்று ஆதாரத்தோடு நிரூபித்தார். இந்து மதத்தை, காந்தியை அம்பலப்படுத்தி பிரிட்டிஷ் அரசிடம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமையைப் பெற்றார்.

டாக்டர் அம்பேத்கரோடு விவாதிக்க முடியாத காந்தி, ‘எங்க ஏரியாவுக்கு வா, கவனிச்சிக்கிறேன்’ என்கிற பாணியில், இந்தியாவிற்கு திரும்பிய உடன், அம்பேத்கர் போராடி பெற்ற இரட்டை வாக்குரிமையை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார். இந்தியா முழுக்க ஊடகங்களும், தலைவர்களும், காந்தியை கொல்ல வந்த வில்லனை போல் அம்பேத்கரை சித்தரித்தனர்.
காந்தியின் மனைவி அம்பேத்கரை நேரில் சந்தித்து கணவனை காப்பாற்றித் தருமாறு தாலிபிச்சைக் கேட்டார். இந்திய தலைவர்களில் ஒருவர் மட்டுமே டாக்டர் அம்பேத்கருக்கு ஆதரவாக இருந்தார். அவர் அம்பேத்கருக்கு இப்படி தந்தி கொடுத்தார்:

கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைவிட, ஒரு தனிநபரின் உயிர் முக்கியமல்ல. காந்தியின் மரணத்தை குறித்து நீங்கள் கவலைப்படவேண்டாம். உங்கள் உறுதியில் இருந்து பின்வாங்காதீர்கள்”
இப்படி தந்திக் கொடுத்தத் தலைவர் தந்தை பெரியார்.

ஆனால், அம்பேத்கர் காந்தியின் உயிரை காப்பாற்றினார். உண்ணாவிரத்தில் காந்தி இறந்திருந்தால், அதைக் காரணமாக கொண்டு கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை செய்யப்படுவார்கள், என்ற கவலையால் அம்பேத்கர், காந்தியின் பிளாக்மெயில் அரசியலிடம் தோற்றார்.

பின்னாட்களில், இந்திராகாந்தி கொலைசெய்யப்பட்டபோது, ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டதும், ராஜிவ் கொலையின்போது தமிழர்கள் மீது கொலைவெறி தாக்ககுதல் நடந்ததும் – அன்றைக்கு அம்பேத்கரின் அந்த முடிவு அல்லது அந்த தீர்க்க தரிசனம் எவ்வளவு சரியானது என்று நிரூபித்தது.

(காந்தி ஆரம்பித்தில் அம்பேத்கரை தாழ்த்தப்பட்டவர் என்று நினைக்கவில்லை. ‘அறிவாளியாக இருந்தால் அவர் அய்யராக இருப்பார்’ என்பது பொது புத்தியில் இருக்கிற ஜாதி இந்துவின் மூட நம்பிக்கை. அதுபோல்தான் காந்தி, ‘தாழ்த்தப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்ட பார்ப்பனர்’ என்றே அம்பேத்கரை கருதியிருந்தார்.)

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் என்று மிரட்டிய காந்தி, பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து ‘வெள்ளைக்காரன் நாட்டை விட்டு வெளியேறும்வரை உண்ணாவிரதம்’ என்று போராடவில்லை. அப்படி போராடியிருந்தால், வெள்ளைக்காரன் முடித்து வைத்திருப்பான். உண்ணாவிரதத்தை அல்ல, காந்தியை.

***

தனக்கு உதவி  செய்கிறவர்கள், தன்னை ஆதரித்துவிட்டு, தான் ஆதரிக்கிற கொள்கைகளுக்கு சமாதி கட்டினாலும் பரவாயில்லை. தன்னை முன்னேற்றிக் கொண்டால் போதும், என்கிற போக்கு இன்றைக்கு ‘முற்போக்காளர்கள்’ மத்தியில் விரவி கிடக்கிறது.

பலர் தன்னுடைய ‘முற்போக்கான’ கொள்கையை உடன் வேலை செய்கிறவர்களுக்குக்கூட தெரியக்கூடாது என்கிற முறையில் ரகசியமாக வைத்துக் கொண்டு, தன்னுடைய சந்தர்ப்பவாதத்தை பகிரங்கப்படுத்திக் கொள்கிறார்கள்.

இன்றைய நெருக்கடியான சூழலிலேயே இப்படிப்பட்ட அறிவாளிகள் நிறைந்திருக்கிறபோது, அன்றைக்கு டாக்டர் அம்பேத்கர் தன்னைப் பாராட்டிய பிற்போக்காளர்களை புகழாமல், அவர்கள் இவருக்கு நடத்தியப் பாராட்டு விழாவிலேயே அவர்களை அம்பலப்படுத்தி பேசியிருக்கிறார்.

1944 ஆம் ஆண்டு தந்தை பெரியாருக்கு எதிர்ப்பாக இருந்த பார்ப்பனரல்லாத உயர்ஜாதி கும்பல், சென்னை கன்னிமரா ஓட்டலில் டாக்டர் அம்பேத்கருக்கு விருந்து கொடுத்து, அவரிடம் ‘நாங்கள்தான் உண்மையான பார்ப்பனரல்லாத இயக்கம்’ (நீதிக்கட்சி) என்று நற்பெயர் வாங்குவதற்காக திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த திட்டம் அண்ணல் அம்பேத்கருக்கும் தெரிந்திருக்கிறது. தன்னைப் பாராட்டி விருந்து கொடுத்தவர்கள் மத்தியில் அண்ணல் இப்படி பேசியிருக்கிறார்:

“பார்ப்பனரல்லாத தோழர்களே, உங்களை நீங்கள் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ளுகிறீர்களே அதில் உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள பேதத்தைக் காட்டுவதற்குள்ள காரியங்கள் என்ன? உங்கள் கொள்கை என்ன? திட்டங்கள் என்ன?
எங்கள் கட்சி பார்ப்பனியத்திற்கும் மாறான கட்சி என்று சொல்லிக் கொண்டு நெற்றியில் நாமம், வீட்டில் பார்ப்பனப் புரோகிதம், நடவடிக்கையில் பார்ப்பனியத்தைப் பின்பற்றுதல், அவன் பூசை பண்ணும் கோவிலில் சென்று வெளியில் இருந்து வணங்குதல் ஆகியவைகளைச் செய்து உங்களையும் இரண்டாவது வகுப்புப் பார்ப்பனர் மாதிரி ஆக்கிக் கொண்டு, முதலாவது வகுப்புப் பார்ப்பானாக ஆவதற்கு ஏற்ற வண்ணம் நடந்து கொண்டு வருவீர்களானல் நீங்கள் எந்தத் தன்மையில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ள அருகர்கள் ஆவீர்கள்?

பார்ப்பனர்லலாதார் கட்சிக்கு முதாலவதும் கடைசியானதுமான கொள்கை ‘உத்தியோம்’ தானா? அல்லது உத்தியோகத்தில் சரிபங்கு மாத்திரம்தானா? இதைத் தவிர வேறு என்ன கொள்கையை இதுவரை பின்பற்றிவந்தீர்கள்?”

“உங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் பேதம் காட்டிப் பார்ப்பனியத்தில் இருந்து நீங்கள் விலகாததாலேயே தோற்றீர்கள். அதனாலேயே உங்களுக்குச் செல்வாக்கில்லை. இப்படியே இருந்தால் இனியும் நீங்கள் என்றென்றும் உருப்படமாட்டிர்கள்”
என்று பேசியிருக்கிறார்.

(குடியரசு 30.9.1944)
2195237_ambedkar_periyar
ஒருவர் அறிவாளியாக இருப்பது ஒன்றும் அதிசயமில்லை. அந்த அறிவு யாருக்காக பயன்படுகிறது? இக்கட்டனா சூழலில்கூட அவர்கள் எவ்வளவு துணிவோடு தங்கள் நிலையை வெளிபடுத்துகிறர்கள், என்பதை பொறுத்துதான் ஒருவரின் மேதமையை மதிக்கமுடியும். அப்படி அறிவாளிகளுக்கான முழு இலக்கணமாகத் திகழ்ந்தவர்தான் நமது அண்ணல் அம்பேத்கர்.

சொல்லுங்கள் இவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர் மட்டும்தானா? இவர் பெயரை பிற்படுத்தப்பட்டவர்கள் புறக்கணிப்பது முறைதானா?

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முன்னேற்றத்தில் அவர் அதிகம் அக்கறை எடுத்துக் கொண்டார் என்பது உண்மைதான். தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் யாரால் தாழ்த்தப்பட்டவர்கள்?
பார்ப்பனர்களாலும், பிற்படுத்தப்பட்டவர்களாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால்தான் அவர்கள் நலனில் அதிகம் கவனம் எடுத்துக் கொண்டார்.

அதன்பிறகு பார்ப்பனர்களால், பிற்படுத்தப்பட்ட நிலைமைக்கு ஆளானார்கள் என்பதால் பிற்படுத்தப்பட்டவர்களின் நலனிலும் அக்கறை எடுத்துக் கொண்டார். ஒட்டு மொத்தமாக பெண்கள் எல்லா சமூகங்களுக்குள்ளும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதால், இந்து சட்டத் தொகுப்பை கொண்டுவந்தார்.

இவை எல்லாமே பார்ப்பனியத்தையும் இந்து மதத்தையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் நடத்திய போராட்டங்கள். இந்திய சூழலில் எந்த ஜாதியில் இருந்து வந்தாலும், பார்ப்பன சமூகத்தில் இருந்து வந்தாலும் கூட ஒரு முற்போக்காளனுக்கு இருக்கவேண்டிய அடிப்படைகள் இவை. அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்ததால் அவரை ஜாதியோடு முடிச்சுப்போட்டு பார்க்கிறார்கள். அதற்கு அவர் பொறுப்பல்ல. வழக்கம்போலான இது இந்து மானோபாவம்தான்.

நேரு தலைமையிலனா இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சட்ட மந்திரியாக இருந்தபோது, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டையும், பெண்களுக்கான இந்து சட்ட மசோதாவையும் அரும்பாடுபட்டு உருவாக்கினார் டாக்டர் அம்பேத்கர். அவைகளை நேருவும் அவர் அமைச்சரவையும் நடமுறைக்கு கொண்டு வரமால் இருந்ததை கண்டித்துதான் தன் சட்ட அமைச்சர் பதவியை 11.10.51அன்று ராஜினமா செய்தார். அவரின் ராஜினமாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கோரிக்கை ஒன்றுமில்லை.

பெண் அடிமைத்தனத்தை வலியுத்திய, பார்ப்பன பாரதியை கொண்டுகிற பெண்விடுதலை பேசுகிற பெண்கள், டாக்டர் அம்பேத்கரை முற்றிலுமாக புறக்கணிக்கிறார்கள்.

பார்ப்பனியத்தை, இந்து மதத்தை, ஜாதி ஆதிக்கத்தை எதிர்க்காத, அம்பேத்கரை புறக்கணிக்கிற இவர்களின் பெண் உரிமை யாருக்கானது? இந்த மனோபாவம் கொண்டவர்கள் ‘விடுதலை’ அடைந்து மட்டும் என்ன செய்யப் போகிறார்கள்?

பிற்படுத்தப்பட்டவர்களின் ஒதுக்கீட்டுக்காக தன் பதவியை துறந்த அம்பேத்கரை, பிற்படுத்தப்பட்டவர்களும் மிக பிற்படுத்தப்பட்டவர்களும் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

டாக்டர் அம்பேத்கரை ஜாதியின் காரணமாகவே கடுமையாக எதிர்க்கிற பிற்படுத்தப்பட்டவர்களை ‘சூத்திரர்கள்’ என்று சொல்வதில் என்ன தவறு இருக்கமுடியும்?

-தொடரும்
————–

அய்ரோப்பிய நாடுகளில் தமிழ்ஒலி; அதில் நான்

mutram1

இங்கே அழுத்தவும்
அய்ரோப்பிய வானொலியில்…
“முற்றம்” நிகழ்ச்சியின் நேரடி ஒலிபரப்பினை உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் இணையத்தளம் ஊடாக கேட்க்கலாம்.
இணையதள முகவரி: http://www.tamilolli.com

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.

உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்?

brambedkar_10

ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!-2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3
டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4

டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது  – 5

‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’- டாக்டர் அம்பேத்கர்- 6


என்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன் -7

‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை  -8

மார்க்சியத்திற்கு-முஸ்லீம்களுக்கு எதிரானவரா அம்பேத்கர்? -9

தொடர் – 10

“அம்பேத்கர் காலத்தில் தீண்டாமை இருந்திருக்காலம் ஆனால் இப்போதெல்லாம், யாரும் ஜாதி பார்ப்பதில்லை. அதெல்லாம் அந்தக் காலம்.” என்று தங்களை பெருந்தன்மையான முற்போக்காளர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள் ஜாதி இந்துக்கள். ஜாதி பார்க்காத பெருந்தன்மையான இந்த முற்போக்காளர்கள் யாரும் அண்ணல் அம்பேத்ரை ஒரு பொதுத் தலைவராக கொண்டாடுவதுமில்லை, குறிப்பிடுவதுமில்லை என்பதே இவர்களின் ஜாதி உணர்வை, தலித் மக்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிற சாட்சியாக இருக்கிறது.

 தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் தலைவராக டாக்டர் அம்பேத்கரை கொண்டாடுவதால், அவர்கள் மீது கடும் வெறுப்புக் கொண்ட ஜாதி இந்துக்கள், பதிலுக்கு ஜாதி வெறி கொண்ட, தன் ஜாதியில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கே எதிராக இருக்கிற ஒரு முட்டாளை ஒரு கிரிமினிலைகூட தங்கள் தலைவராக அறிவித்துக் கொண்டு, அந்த நபரை  உலகம் வியக்கிற அறிவாளியான டாக்டர் அம்பேத்கருக்கு இணையாக அல்லது அதற்கும் மேலும் கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற சதி இந்தியா முழுக்க ஜாதி இந்துக்களிடம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.

 அம்பேத்கர் பெயரை குறிப்பிட வேண்டிய இடங்களில் அதைத் தவிர்த்து தன்ஜாதியைச் சேர்ந்த தலைவரின் பெயரை குறிப்பிடுவதும், பொதுத் தலைவராக டாக்டர் அம்பேத்கரை கொண்டாடும்போது, அதே போல் தன் ஜாதி தலைவரையும் கொண்டாட வேண்டும் இல்லையேல் அம்பேத்கர் பெயரை நீக்கு என்றும் அடம்பிடிப்பதும், அடாவடித்தனம் செய்வதும்தான் ஜாதி இந்துக்களின் குறிப்பாக பிற்படுத்தப்பட்டவர்களின் ‘ஜாதி உணர்வற்ற’ நிலையாக இருக்கிறது.

 நாம் முதல் அத்தியாத்தில் பார்த்த ஒரு வண்டி ஒட்டியான ஜாதி இந்து, பாரிஸ்டரான டாக்டர் அம்பேத்கருக்கு வண்டி ஓட்ட மறுத்தானே, அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம இருக்கிறது.

 ஆனாலும், “அதெல்லாம் அந்தக் காலம்” என்கிற வசனத்தை ஜாதி இந்துக்கள், வெட்கமில்லாமல் கம்பீரமாகத்தான் பேசுகிறார்கள். இருக்கட்டும்.

 

***

டாக்டர் அம்பேத்கர் ஆங்கிலம், பெரிசியன் மொழிகளை இந்தியாவில் பட்டப்படிப்பாகப் படிந்திருந்தார். அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தில் அரசியல், விஞ்ஞானம், நீதியியல், தத்துவம், மானிடவியல், சமூகவியல், பொருளாதாரம் போன்றவற்றில் பட்டம் பெற்றார். 1915 ஆம் ஆண்டு, Ancient Indian commerce’ (பண்டைய இந்தியாவில் வாணிபம்) என்ற தன்னுடைய ஆய்வு கட்டுரையின் மூலம் எம்.ஏ பட்டம் பெற்றார். 1916 ஆம் ஆண்டு ‘மனித இன வரலாறு’ என்ற கருத்தரங்கத்தை டாக்டர் கோல்டன் வெய்சர் என்பவர் நடத்தினார். அதில் ‘இந்தியாவில் சாதிகள்; அவற்றின் இயக்கம் தோற்றம் வளர்ச்சி’ என்ற ஆய்வுக் கட்டுரையை வாசித்தார். இந்தக் கட்டுரை ஜாதிகள் குறித்து, மனுவின் சதிகள் குறித்து உலகளவில் அம்பலப்படுத்தியது. உலகப் புகழ்பெற்ற இந்தக் கட்டுரையை எழுதியபோது அம்பேத்கருக்கு வயது 23தான் முடிந்திருந்தது.

 ‘National dividend of India: A Historic and Analytical Study’ (இந்தியாவின் ஆதாயப்பங்கு ஒரு வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டம்) என்கிற அம்பேத்கரின் ஆய்வுக் கட்டுரையை கொலம்பியா பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டது.  பிறகு எட்டாண்டுகள் கழித்து, இங்கிலாந்து பதிப்பகம் ஒன்று இதைநூலாக இங்கிலாந்தில் வெளியிட்டது. இந்த நூலுக்காக கொலம்பிய பல்கலைக்கழகம் டாக்டர் அம்பேத்கருக்கு Doctor of Philosophy’ பட்டத்தை அளித்தது. பல்கலைக்கழகமே அம்பேத்கரை கொண்டாடியது. இந்த நூலில், பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தையும், இந்தியப் பிற்போக்கு கும்பலையும் அம்பலப்படுத்திருந்தார் அம்பேத்கர்.

 அம்பேத்கருக்கு பொருளாதார பாடம் கற்பித்தப் பேராசியரிர் எட்வின் ஆர்.ஏ. செலிக்மன், “நான் அறிந்தவரையில் அடிப்படை ஆதாரமாக இருக்கின்ற கோட்பாடுகள் இந்த அள்விற்கு விரிவாக ஆராயப்பட்டதேயில்லை’ என்று எழுதினார். அம்பேத்கர் இந்த நூலை தன்னைப் படிக்க வைத்த, பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாடு அவர்களுக்கு காணிக்கையாக்கினார்.

நியூயார்க்கில் படிக்கும் போது பல நாட்கள் பாதிபட்டினியில் இருந்தபோதும், 2000 நூல்களை வாங்கினார்.

 இந்தியாவிற்கு திரும்பிய பிறகு Small-holdings in india and thier Remrdies’ (இந்தியாவில் சிறு நிலங்களும், அவற்றிற்கான தீர்வுகளும்) என்ற நூலை எழுதினார்.

 1918 ஆம் ஆண்டு முதல் 1920 வரை மும்பை சைடன்ஹாம் கல்லூரியில் அரசியல் பொருளாதாரத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆரம்பத்தில் தாழ்த்தப்பட்டவர் என்று அலட்சியமாக பார்த்த மாணவர்கள், அவர் பாடம் நடத்துகிற விதம், மாணவர்களிடம் காட்டுகிற அக்கறை போனறவைகள்  மாணவர்களை பெருமளவில் கவர்ந்தது. மற்ற வகுப்பில் உள்ள மாணவர்கள் தனி அனுமதி பெற்று, இவர் வகுப்பில் கலந்து கொண்டனர். ஆனால் சில பேராசிரியர்கள் (குஜராத்திய) தீண்டாமையின் காரணமாக ஆசிரியர்களுக்கான பொது இடத்தில் அம்பேத்கர் தண்ணீர் குடிப்பதை அனுமதிக்கவில்லை.

 1920 சனவரி 31ஆம் நாள் ‘ஊமைகளின் தலைவன்’ (மூக் நாயக்) என்ற பத்திரிகையை தொடங்கினார்.

 லண்டனில் 1921 ஆம் ஆண்டு சூன் மாதம் Provincal Decentralization of Imperil Finace in British India’ (பிரிட்டிஷ் இந்தியாவில் பேரரசின் நிதியை மாகாணங்களுக்குப் பிரித்தளித்தல்) என்ற ஆய்வு நூலுக்காக எம்.எஸ். (Master of scirnce) பட்டம் பெற்றார்.

1923 ஆம் ஆண்டு The Problem of the Rupee’ (ரூபாயின் சிக்கல்) என்ற தனது ஆய்வு நூலுக்கு டி.எஸ். .(Docotor of Science)பட்டம் பெற்றார்.

லண்டனில் மாணவர் சங்கத்தில், Resposipilities of Responsible Goverment in India’ (இந்தியாவில் பொறுப்பு வாய்ந்த அரசின் பொறுப்புகள்) என்ற தலைப்பில் கட்டுரைப் படித்தார். ஹெரால்டு.ஜெ. லஸ்கி என்கிற இங்கிலாந்து பேராசிரியர் ‘அம்பேத்கரின் கருத்துக்கள் புரட்சிகரமானவை’ என்று குறிப்பிட்டார். அதன்பிறகு பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.

 குதூகலமாக கொண்டாடடி பொழுதைக்கழிக்கிற இளைஞர்கள் மத்தியில் அம்பேத்கரின் இளமை இப்படி அர்த்தப்படும்படி இருந்தது. இது அம்பேத்கர் வாழ்க்கையின் ஒரு முன்னோட்டம்தான். இதன் பிற்பகுதியில் தான் இருக்கிறது அவரின் விஸ்வரூபம்.

ambedkarcu2

டஒதுக்கீட்டை எதிர்க்கிற பார்ப்பனர்கள் அதற்கான காரணமாக சொல்வது “தகுதி, திறமையைப் பார்த்துதான் ஒருவரிடம்  பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். ஜாதியை பார்க்கக்கூடது. பிராமணர்களாக இருந்தாலும் தகுதியானவரா என்று பார்த்துதான் பொறுப்புகளை கொடுக்க வேண்டும். படித்தவர்களை, அறிவாளிகளை மதிக்க வேண்டும்” என்று சொல்கிறார்கள்.

மேம்போக்காக பார்க்கும்போது இந்த வாதம் ‘நியாயமாக’ தெரிந்தாலும் இது மிகுந்த தந்திரமானது. ஆப்பத்தானது.

சரி, அவர்கள் சொல்லுகிற இந்த ‘நியாயப்படி’ முதலில் அவர்களே நடந்து கொள்கிறார்களா?

 உலகம் முழுக்க அறிவாளிகளால் மதிக்கப்படுகிற அறிவாளியாகவும், நிறையப் படித்த படிப்பாளியாகவும்,  அவர்கள் சொல்லுகிற ‘தகுதி-திறமை’ என்பது இவரோடு ஒப்பிடுவதற்குக்கூட பார்ப்பன சமூகத்தில் ஒருவரும் இல்லை என்றபோதும், எத்தனை பார்ப்பனர்கள் டாக்டர் அம்பேத்கரை, ‘மாபெரும் மேதை, இவரால் இந்தியர்களுக்குப் பெருமை, தகுதி திறமை நிரம்பி வழிகிற பிராமணர்கள் உட்பட்ட அனைவருக்கும் இவர்தான் தலைவர் அல்லது முன்மாதிரி’ என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 மாறாக, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், சில்வர்டங் சீனவாசசாஸ்திரி, ராஜகோபாலஆச்சாரியார் (ராஜாஜி), அனந்தசயனம் அய்யங்கார் போன்ற ஆங்கிலம் மட்டும் தெரிந்த, அதே பார்ப்பனியம் என்கிற குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய இந்த நபர்களைத்தான் பார்ப்பனர்கள், ‘அறிவாளிகள்’ என்று இன்னும் பொய்சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 அதைவிட வெட்கக்கேடு, ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் மொழி பெயர்த்து, அதில் ஆபாசம் கலந்து (அதான் அவரு சொந்தமா எழுதுறது) தன் பெயரில் போட்டுக் கொள்கிற ‘சுஜாதா’ என்கிற முட்டாளை, கழிசடையை ‘அறிவிஜீவி’ என்று கொஞ்சமும் கூச்சமில்லாம்கொண்டுகிறவர்கள், டாக்டர் அம்பேத்கரை அறிவாளியாக அல்ல, அவரை அவமானமாகத்தான் பார்க்கிறார்கள்.

 இதைவிடப் பெரிய வெட்கக்கேடு, ‘தகுதி, திறமை, சுத்தம், ஒழுக்கம், நேர்மை இவைகள்தான் மனிதர்களுக்கு அழகு. அவர்கள்தான் மதிக்கப்படவேண்டியவர்கள்’ என்று நமக்கு போதிக்கிற இவர்கள்,  இவைகள் அனைத்தும் நிரம்பியிருக்கிற அண்ணல் அம்பேத்கரை அலட்சிப்படுத்திவிட்டு, ஒழுங்காக பல்லைக்கூட விளக்காத படிப்பறிவற்ற, கிரிமனல் ஜெயேந்திரன் முன், இடுப்பில் துண்டுகட்டி, வாய்பொத்தி, மண்டியிட்டு கிடக்ககிறார்கள் அதிகம் படித்த தகுதி, திறமையானவர்கள்.

 இதுதான் பார்ப்பன உளவியல்.

 -தொடரும்.

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர்  படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt  அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.

மார்க்சியத்திற்கு-முஸ்லீம்களுக்கு எதிரானவரா அம்பேத்கர்?

ambedkar-budhaa

டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!-2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3
டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4

டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது  – 5

‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’-டாக்டர் அம்பேத்கர்- 6


என்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன் -7

‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை  -8

தொடர் – 9

‘இந்தியாவிற்கு என்று அரசியல் வரலாறோ, முறையான வரலாறோ இல்லை’ என்று வரலாற்று ஆசிரியர்கள்  சொல்கிறார்கள். ஆனால் டாக்டர் அம்பேத்கர் இதை முற்றிலுமாக மறுக்கிறார். இந்திய வரலாறு என்பது ‘புத்த மதத்துக்கும் பார்ப்பனியத்திற்கும் இடையிலான போராட்டம்தான்’ என்கிறார்.

‘மதராஸ் பகுத்தறிவு சங்கம்’ 1944 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் நாள் சென்னையில் ‘இந்தியாவில் பகுத்தறிவு வாதம்’ என்ற தலைப்பில் பேச டாக்டர் அம்பேத்கரை அழைத்திருக்கிறார்கள். சென்னை பிராட்வேயில் உள்ள ‘பிரபாத்’ திரையரங்கில் நடந்த அந்தக் கூட்டத்தில்:

“இந்திய வரலாற்றைப் பயில்கிறவர்கள் ஒரு உண்மையைக் கணக்கில் கொள்ள வேண்டும். …………………………………………..

அந்த அடிப்படை உண்மை என்னவென்றால் பண்டைக்கால இந்தியாவில் புத்த மதத்துக்கும் பிராமணியத்துக்கும் இடையில் ஒரு பெரும் போராட்டம் நடந்து வந்தது. இப்போராட்டம்தான் இந்திய வரலாற்றை நிர்ணயம் செய்தது. ………………………..

தத்துவவியல் பேராசிரியர்கள திரும்பத் திரும்பச் சொல்வது பற்றிய சச்சரவு இது. கோட்பாடு பற்றிய புரட்சியாக மட்டுமன்றி அரசியல், சமூகத் தத்துவயியல் புரட்சியாகவும் இது விளங்கியது. ………………………………………….

வேதங்கள் பிரகடனப்படுத்தியதே உண்மை என்று பிராமணக் கோட்பாடு கூறுகிறது. இதுதான் பிராமணியத்தின் மிக முக்கியமான கோட்பாடு. புத்த மதத்தினர் புரட்சி வீரர்கள், பிராமணர்களோ எதிர்ப் புரட்சிக்காரர்கள். இதுதான் புத்த மத்தினருக்கும் பிராமணியத்துக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.” என்று பேசியிருக்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

இந்து மதத்தை அல்லது பார்ப்பனிய மதத்தை புள்ளி அளவுக்குக்கூட டாக்டர் அம்பேத்கர் ஒத்துக் கொள்ளவில்லை. எந்த வகையிலும் இந்து மத்தோடு சமரசம் இல்லாமல், அதை முற்றிலும் அம்பலப்படுத்தினார். ஜாதி, தீண்டாமை போன்றவற்றிற்கு இந்துமதம்தான் காரணம் என்பதே இந்து மதத்திற்கெதிரான அவருடைய கோபம்.

தீண்டாமையில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை என்பது, இந்து மதத்தைவிட்டு வெளியேறி மதம் மாறுவதினால்தான் நடக்கும் என்று உறுதியாக நம்பினார் அம்பேத்கர். அதற்காக அவர் தாழ்த்தப்பட்ட மக்களை கிறிஸ்தவ மதத்திற்கோ அல்லது இஸ்லாம் மதத்திற்கோ மாற சொல்லவில்லை.

காரணம் இந்த இரண்டு மதங்களும், இந்து மதத்தை, பார்ப்பனியத்தை, சாதிய அமைப்பை எதிர்த்து உருவானதில்லை. (இதில் கிறித்துவத்தில் புத்தமதத்தின் தாக்கம் அல்லது தழுவல் நிறைய இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்) அது வேறு சூழலில் வேறு ஒரு தேவைகளுக்காக உருவானவை. புத்த மதம் ஒன்றுதான் இந்து மதத்தை, பார்ப்பனியத்தை, சாதியை எதிர்த்து உருவானது. புத்தர் ஒருவர்தான் பார்ப்பனியத்தை சமரசம் இல்லாமல் எதிர்த்தவர். பவுத்தம்தான் தீண்டாமைக்கு எதிரானது, மோசடிகளுக்கு இடம் தராதது என்று அம்பேத்கர் உறுதியாக நம்பினார். புத்தரை தனது சிறுவயது முதலே அதாவது ஆரம்பப்பள்ளிக் காலங்களிலிருந்தே தீவிரமாக கற்றுவந்திருக்கிறார் அம்பேத்கர்.

பவுத்தத்தை ஒரு மதம் என்கிற அடிப்படையிலும் அதை விரும்பினார். மனிதர்களுக்கு மதம் வேண்டும் என்றும் அந்த மதம் மூடநம்பிக்கைகள் இல்லாத, ஏற்றத் தாழ்வுகள் இல்லாத மதமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்:

மதத்தை அலட்சியமாக நினைக்கும் இளைஞர்கள் எனக்கு மிக மிக வருத்தத்தைத தருகிறார்கள். யாரோ சொன்னது போல் மதம் ஓர் அபினியல்ல. என்னிடமிருக்கும் நல்ல பண்புகளுக்கும் என் கல்வியால் சமுதாயத்திற்குக் கிடைத்த நல்ல பயன்களுக்கும் என் மத உணர்வுகளே காரணம். மதம் எனக்குத் தேவை. அதே சமயம், மதம் என்னும் பெயரில் கபட வேடம் போடுவதும் எனக்குப் பிடிக்காது”

1938 ஆம் ஆண்டு பிப்பரவரி 12 நாள் பம்பாய் மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர் மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் தன் தலைமை உரையில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்.

அதனால்தான் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள்  புத்த மதத்திற்கு மாறினார். புத்தரின் மேல் கொண்ட மிகுந்த ஈடுபாட்டினால் பவுத்தத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டார். பவுத்தம் வலியுறுத்திய மறுபிறப்பைக் கூட விமர்சனம் அன்றி ஏற்றுக் கொண்டார் டாக்டர் அம்பேத்கர். புதுடில்லி மாகபோதி கழகத்தின் சார்பில் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் நாள் புத்த விஹாரில் பேசும்போது:

“மறுபிறப்பில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. மறுபிறப்பு என்பது தடுக்கமுடியாது என்பதை விஞ்ஞானிகளுக்கு என்னால் நிரூபித்துக் காட்டமுடியும். என்னுடைய கருத்தில் இயற்கை சக்திகள் மாறியிருக்கின்றனவே தவிர மனிதன் மாறவில்லை.” என்று பேசியிருக்கிறார்.

அண்ணல் அம்பேத்கர் ஒருவரையே தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள், அம்பேத்கர் வலியுறுத்திய ‘தீண்டாமைக்கு எதிராக பவுத்ததிற்கு மாறுவது’ என்பதை பின்பற்றவில்லை. இத்தனைக்கும் பவுத்ததிற்கு மாறுவதல் ‘இடஓதுக்கீடு பாதிக்கப்படாது’ என்கிற பாதுகாப்பு இருந்தும் கூட அம்பேத்கர் இறுதியாகவும் உறுதியாகவும் சொன்ன கருத்துக்கு அவர் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் அக்கறைகாட்டவில்லை. தான் மதம் மாறும்போது கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் தன்னோடு வருவார்கள் என்று எதிர்பார்த்தார் அண்ணல். ஆனால் 50, 000 பேரே அதில் கலந்து கொண்டனர். பவுத்ததிற்கு மாறுவதற்கு ஆர்வம் காட்டாதது, தனிப்பட்டமுறையில் தலித்மக்களின் நிலையாக மட்டுமில்லை. தலித் இயக்கங்களின் நிலையே  இன்றைக்கும் இப்படித்தான் இருக்கிறது.

பார்ப்பனியத்தை, வேத மதத்தை எதிர்த்து வீறுகொண்டு எழுந்து அதை வெற்றிக் கொண்ட பவுத்தம், அதன் பிறகு பார்ப்பனியத்தின் நேர்மையற்றதன்மை, சதி போன்றவற்றால் நேர்மையான புத்தமதம் பார்ப்பனியத்திடம் தோல்வியுற்றது. பார்ப்பனியத்தால் இந்திய அளவில் முற்றிலும் அழிக்கப்பட்டது பவுத்தம். அப்படி அழிக்கப்பட்ட அந்த மதத்தை உயிர்பிக்கிற அம்பேத்கரின் முயற்சியும் பெருமளவில் வெற்றிபெறாமல் போனது.

ambedkar222

புத்தரை அம்பேத்கர் எந்த அளவிற்கு நேசித்தார், என்பதற்கு எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் என்றால், ‘காரல் மார்க்சோடு புத்தரை ஒப்பிட்டு, மார்க்ஸ் சொன்னதை 2500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் சொல்லியிருக்கிறார். மார்க்கியத்தைவிடவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பவுத்தம்தான் பொருத்தமானது. தேவையானது’ என்று வலியுறுத்தினார்.

மார்க்சியம் குறித்தான டாக்டர் அம்பேத்கரின் பார்வை ‘அது வன்முறையை வலியுறுத்துகிறது. எந்த ஒரு விஷயத்திற்கும் வன்முறை தீர்வாகாது. பவுத்தம், வன்முறைக்கு பதில் அகிம்சையை போதிக்கிறது. மன்னன் அசோகன் அப்படித்தான் போரை கைவிட்டு புத்தரின் வழிக்கு மாறினான். மார்க்சிஸ்டுகள் கிறிஸ்துவ மதத்தை வெறுப்போடு பார்ப்பது போல் புத்த மதத்தை பார்க்கக் கூடாது, என்றார்.

“ரஷ்யர்கள் தங்களுடைய பொது உடைமை பற்றிப் பெருமைப் படுகிறார்கள். ஆனால் புத்தர், சர்வாதிகாரம் இல்லாமலே பிக்கு சங்கத்தில் பொது உடைமையை நிறுவினார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.” என்று எழுதினார்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு மாற்றாக புத்தரின் அகிம்சைகோட்பாட்டை கம்யூனிஸ்டுகள் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தினார். ‘மார்க்சியம் என்பது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்தான்’ என்று தெளிவாக வரையறுத்தார் டாக்டர் அம்பேத்கர். ஆனால் அதை ஒத்துக் கொள்ளமுடியாது என்பதுதான் அவரின் வாதம்.

தங்களை மார்க்சிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்கிற பலர் மார்க்சியத்தை திரித்து மார்க்சியம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அல்ல’ என்று தங்களின் ‘வசதிக்கேற்ப’ வளைத்துக் கொள்கிற ‘அறிஞர்’களோடு ஒப்பிடும்போது, டாக்டர் அம்பேத்கரின் நேர்மை மரியாதைக்குரியது.

“ரஷ்யாவில் பொது உடைமை சர்வாதிகாரம் மிகச் சிறப்பான சாதனைகள் புரிந்திருப்பதாகப் பெருமையாகப் கூறப்படுகிறது. இதை மறுக்க முடியாது. அதனால்தான் ரஷ்ய சர்வாதிகாரம் எல்லா பிற்பட்ட நாடுகளுக்கும் நல்லது என்று கூறுகிறேன். ஆனால் இது சர்வாதிகாரம் நிரந்தரமாக இருக்க வேண்டும் எனறு கூறுவதாகாது. …………………………………

நாம் ரஷ்யப் புரட்சியை வரவேற்கிறோம்; ஏனென்றால் சமத்துவத்தை  ஏற்படுத்துவது அதன் நோக்கமாக உள்ளது. ஆனால் சமத்துவத்தை ஏற்படுத்தும்போது சமூகம், சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் தியாகம் செய்து விட முடியாது என்பதை எவ்வளவு வலியுறுத்தினாலும் தகும். புத்தரின் வழியைப் பின்பற்றினால்தான் இந்த மூன்றும் சேர்ந்து இருக்க முடியும் என்று தோன்றுகிறது.”

என்று புத்தரா காரல்மார்க்சா? என்ற நூலை இப்படித்தான் முடித்திருக்கிறார் அம்பேத்கர்.

ஆனாலும், பவுத்த நாடுகள் கம்யூனிசப் பாதைக்கு மாறுவதை ‘சரியில்லாத அறிகுறியாகவே’ அச்சம் தெரிவிக்கிறார். 1956 மே மாதம் 12 நாள் டாக்டர் அம்பேத்கர் எழுதிய கட்டுரையில்:

“உலகை அழிக்கும், குறிப்பாக அதன் தென்கிழக்கு ஆசியப் பகுதியைப் பாதிக்கும் மூன்றாவது அம்சம் ஒன்றும் உள்ளது. காரல் மார்க்சும் அவர் ஈன்றெடுத்த கம்யூனிசமும்தான் அந்த மூன்றாவது அம்சம். இதன் தாக்கம் கடுமையாக உள்ளது.”

“தென்கிழக்கு ஆசியாவிலுள்ள பவுத்தமத நாடுகளின் மனப் போக்கு கம்யூனிசத்தின் பக்கம் சாய்ந்திருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. பவுத்தம் மதம் என்பது என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதே இதன் பொருள். என்னைப் பொறுத்த வரையில் பவுத்தம் மார்க்சுக்கும் அவரது கம்யூனிசத்துக்கும் ஒரு மாபெரும் சவால் என்று கூறுவேன்.

ரஷ்ய பாணி கம்யூனிசம் ரத்தக் களறியான ஒரு புரட்சியின் மூலம் அதனைச் சாதிக்க முயல்கிறது. பவுத்த கம்யூனிசமோ, ரத்தம் சிந்தாத மனப்புரட்சியின் வாயிலாக அதனைக் கொண்டு வருகிறது.”

மார்க்சியத்தைப் பற்றி டாக்டர் அம்பேத்கரின் எண்ணம் இதுவாக இருப்பதால், மார்க்சிஸ்டுகள் டாக்டர் அம்பேத்கரை எதிர்ப்பதோ அல்லது புறக்கணிப்பதோ கூடாது. அப்படிச் செய்வது தவறான ஒன்று.

மார்க்சியம் குறித்த அம்பேத்கரின் பார்வை மார்க்சிஸ்டுகளுக்கு முரண்பாடானதாக இருந்தாலும் அது ஆபத்தானதல்ல. மார்க்சியத்திற்கு மாற்றாக முதலாளித்துவத்தையோ, பார்ப்பன பாரதியைப்போன்றவர்கள் பரிந்துரைக்கிற வேதத்தையோ  அல்லது அதை போன்ற மார்க்சியத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு தத்துவத்தையோ, டாக்டர் அம்பேத்கர் பரிந்துரைக்கவில்லை.

கம்யூனிஸ்ட்டுகள் ஏற்றுக் கொள்கிற, ஆதரிக்கிற அல்லது மார்க்சியத்திற்கு எதிராக இல்லாத பவுத்தத்தைதான் பரிந்துரைக்கிறார்.

மார்க்கியத்தைக் குறித்த டாக்டர் அம்பேத்கரின் கருத்து நேரடியாக எதிராக இருந்தாலும், அவருடைய செயல்  மார்க்சியத்திற்கு எதிரானதல்ல. இன்னும் நெருக்கிச் சொன்னால், மார்க்சிஸ்ட்டுகள் செய்திருக்க வேண்டிய அல்லது செய்ய தவறிய பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு போன்றவற்றை டாக்டர் அம்பேத்கர் ஒரு மார்க்சிஸ்ட்டை போல் செய்திருக்கிறார். இதை பெரியாரின் கோபத்தோடு பொருத்திப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்:

“ரஷ்யாவிலே கம்யூனிஸ்ட் இருக்கிறார்கள் என்றால் கோயில்களை எல்லாம் இடித்தான். பாதிரிகளை வெட்டினான். இங்கே இருக்கும் கம்யூனிஸ்ட் என்ன செய்கிறான்? பொறுக்கித் தின்கிறான்.”

“நாளைக்கே காங்கிரசுக்காரன் வந்து விட்டால், நாளை மறுதினம் பார்ப்பான் வந்து விட்டால், இல்லை இந்த கம்யூனிஸ்ட்டே வந்துவிட்டான் என்றால், அவன் காசுக்கென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வானே! அவனல்ல சத்த போடணும், எனக்கு பதிலா”

நெருப்பாய் சுடுகிற பெரியாரின் இந்த நியாயமான கோபம் அவரின் இறுதிசொற்பொழிவில்.

ஆக, கம்யூனிஸ்டுகள் பார்ப்பனியத்திற்கு, இந்து மத்திற்கு, சாதியத்திற்கு எதிராக டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் இயங்குவது, மார்க்சியத்திற்கு எதிரானதல்ல. அதுதான் சரியானதும் கூட.

மற்றப்படி கம்யூனிசத்திற்கு எதிராக, பவுத்தத்தை ஆதரித்து கருத்து சொல்லியிருக்கிறர் என்பதற்காக, டாக்டர் அம்பேத்கரை முற்றிலுமாக புறக்கணிப்பது கம்யூனிஸ்டுகளுக்கு அழகல்ல. அது பார்ப்பனர்களுக்குத்தான் அழகு.

***

டாக்டர் அம்பேத்கர் மீது சொல்லப்படுகிற பெரிய அவதூறு ‘அவர் முஸ்லீம்களுக்கு எதிராக இருந்தார்’ என்பது. இது அவதூறுதான்.

இந்து அமைப்புகள், பார்ப்பன ‘அறிவாளிகள்’ பரப்பிய பரப்புகிற பச்சை பொய் அது. பார்ப்பனியம் குறித்து அம்பேத்கர் கேட்டக் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற பார்ப்பனர்கள், அவரை பற்றி இப்படி அவதூறு பரப்புவதின மூலம் ஆறுதல் அடைந்தார்கள்.

பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் கொஞ்சமும் வெட்கமில்லாமல்,  இந்து மதத்தை பெரும் அளவு சேதப்படுத்திய அண்ணல் அம்பேத்கர் படத்தை தங்களின் பிரச்சாரங்களுக்குத் பயன்படுத்துகிறார்கள். அதன் நோக்கம், தாழ்த்தப்பட்ட மக்கள் டாக்டர் அம்பேத்கரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பதால், அவர் படத்தை பயன்படுத்துவதின் மூலம், தங்கள் கட்சிகளுக்கு அந்த மக்களை அடியாட்களாக பெருளவில் பயன்படுத்திக் கொள்ளலாம், என்கிற தந்திரம்தான் காரணம்.

அதன் தொடர்ச்சியாகத்தான் டாக்டர் அம்பேத்கர் முஸ்லீம்களுக்கு எதிராக இருந்தார் என்று சொல்வதும். அப்படி பொய் பிரச்சாரம் செய்வதின் மூலம், தாழ்த்தப்பட்ட மக்களை முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களில் கொண்டு போய இறக்கலாம் என்கிற ஒரு பரந்த எண்ணம்தான்.

2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாரதிய ஜனதா கட்சியின் உத்திரபிரதேச மாநிலத் தலைவராக இருந்த வினய் கட்டியார் 14 நாட்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள 30 மாவட்டங்களுக்கு பிரச்சார யாத்திரை சென்றார். அப்போது  அவருடைய பொய்பிரச்சாரத்தில் பெரும்பங்கு வகித்தது, டாக்டர் அம்பேத்கர் முஸ்லீம்களுக்கு எதிரானவர் என்பதே.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அறிஞர் டாக்டர் ஆனந்த் தெல்தும்ப்டே, ‘முஸ்லீம்களுக்கு எதிராக அண்ணல் அம்பேத்கர் இருந்தார் என்பது பொய்’ என்று அம்பேத்கரின் எழுத்துக்களில் இருந்து வரிக்குவரி எடுத்துக்காட்டி அவதூறுகளை தகர்தெறிந்தார். அந்த நூலின் பெயர் ‘முஸ்லீம்கள் குறித்து அம்பேத்கர்-கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்’. தமிழில் புதிய ஜனநாயகம் வெளியீடாக வந்திருக்கிறது. (புதிய ஜனநாயகம், 110, இரண்டாம் தளம், 63, என்.எஸ்.கே. சாலை, கோடம்பாக்கம், சென்னை- 600 024.) இது அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

ஆக, டாக்டர் அம்பேத்கர், முஸ்லீம்களுக்கு எதிராக ஒரு போதும் இருந்ததில்லை. அவர் ஜாதி வெறி கொண்ட இந்துக்களுக்குத்தான் எதிராக இருந்திருக்கிறார்.

இந்து மதவெறி அமைப்புகள் அண்ணல் அம்பேத்கரைப் பற்றி அவதூறுகள் செய்வதின் மூலம் அவமானப்படுத்துவதைவிட  அண்ணலின் படங்களை, அவர் பெயரை பயன்டுபடுத்துவதுதான் அவருக்கு அவர்கள் செய்கிற மாபெரும் அவமானம்.

இதற்கு நேர் எதிராக அம்பேத்கரின் படங்களை பெயரை பயன்படுத்த வேண்டிய பிற்படுத்தப்பட்டவர்கள், அவர் பெயரை புறக்கணித்து, அவர் சிலையை சேதப்படுத்தி அவமானப்படுத்துகிறார்கள்.

இதுதான் இந்து உளவியல்.

தொடரும்
தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர்  படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt  அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.

‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை

ambedkar_man1
லக்னோவில் உள்ள அம்பேத்கர் மண்டபம்

டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!-2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3
டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4

டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது  – 5

‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’-டாக்டர் அம்பேத்கர்- 6


என்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன் -7

தொடர் -8

“ராமன் கடவுளா? மனிதனா?

கடவுளுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. ராமன் கடவுளாக இருந்தால் பிறந்திருக்க முடியாது. பிறந்திருந்தால் அவன் கடவுள் கிடையாது. அயோத்தியில் அவன் பிறந்திருந்தால், அவன் மனிதன். மனிதனுக்கு எதற்கு கோயில்? இல்லை அவன் கடவுள் என்றால், அப்புறம் அவன் எப்படி அயோத்தியில் பிறந்திருக்க முடியும்? ஆக, ராமனுக்கு அயோத்தியில் கோயில் தேவையில்லை.”

என்று கவிஞர் வைரமுத்து பாபர் மசூதி இடிப்பதற்கு முன் சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவனில் பார்ப்பனர்கள் நிறைந்த சபையில் இப்படி பேசினார். அதில் உள்ள தர்க்கம் ரசிக்கும்படி இருந்தது. உடனே வைரமுத்துவோட ஆபாச பாடல்களை நீங்கள் ஆதரிக்கிறீங்களா?’ என்று கேட்டு விடாதீகள். அதை எவனாவது ஆதரிப்பானா?

ராமன் கடவுளா? மனிதனா? என்கிற இந்த சந்தேகம் வைரமுத்துவிற்கு மட்டுமல்ல. ராமனுக்கே இருந்திருக்கிறது.

டாக்டர் அம்பேத்கர் எழுதுகிறார்:

“ராமன் கடவுளானது கிருஷ்ணனின் விஷயத்தைவிட அதிகச் செயற்கையானது. தான் கடவுள் என்பதை ராமனே அறிந்திருக்கவில்லை.”

இயேசுவை கடவுளாக பலர் வழிபட்டாலும், அவரே ஒரு கடவுளை வழிபட்டிருக்கிறார். அதுபோல் ராமனை பலர் கடவுளாக வழிபட்டாலும், அவன் பல கடவுள்களை வழிபட்டிருக்கிறான்.

ராமாயணத்தை எடுத்துக்காட்டி டாக்டர் அம்பேத்கர் குறிபிடுகிறார்:

“நான் என்னை ஒரு மனிதனாக, தசரதரின் மகன் ராமனாகக் கருதுகிறேன். தெய்வங்களாகிய நீங்கள் நான் யார் என்றும் எங்கிருந்து வந்தேன் என்றும் கூறுங்கள்”

ஒரு விபத்தில், தன்னைப் பற்றிய விஷயங்களையே மறந்துபோன பழைய தமிழ் சினிமா கதாநாயகன் டாக்டர்களை பார்த்து, ‘நான் யார்?’ என்று கேட்பதுபோல், கடவுள்களைப் பார்த்து கேட்கிற ராமன்தான் இந்துக்களின் தனிபெரும் கடவுள்.

“கிருஷ்ணனைப் போல ராமனும் ஒரு மனிதனாக இருந்து கடவுள் ஆக்கப்பட்டார். ………………………………………………..

அருடைய கடவுள் தன்மையை முழுமையாக்குவதற்காகத் தான் அவர் விஷ்ணுவின் அவதாரம் என்றும், அவரது மனைவி சீதை, விஷ்ணுவின் மனைவியான லட்சுமியின் அவதாரம் என்றும் கூறும் கொள்கை கண்டு பிடிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது” என்று குறிப்பிடுகிறார் டாக்டர் அம்பேத்கர்.

சீதையை ராமன் நடத்திய விதமும், வாலியை கொன்ற முறையும், ராமன் கடவுளாக அல்ல ஒரு மனிதனாக இருக்கக் கூட லாயக்கற்றவன் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

‘எனக்கு இலங்கைக்கு செல்வதற்கு உதவி செய்தால், உன்னை ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவி செய்கிறேன்’, என்று சுக்ரீவனோடு ஒப்பந்தம் செய்துகொண்டுதான் வாலியை கொன்று இருக்கிறான் ராமன்.

அதை நிகழ்கால சம்பவங்களோடு பொறுத்திச் சொல்லவேண்டும் என்றால், ‘எனக்காக நீ பாகிஸ்தானோடு போர் இடு. உனக்கு நான் என்ன உதவிகள் வேண்டுமானலும் செய்கிறேன்’ என்று அமெரிக்கா இந்தியாவை நிர்பந்திப்பதுபோல.

நற்பெயரோடே மோசடிகளை செய்வதில், அமெரிக்காவின் தந்திரங்கள், அந்தக் காலத்து ராமனை நினைவுப்டுத்துகிறது. தனது சுயலாபத்துக்காக தனக்கு எதிரியாக இல்லாதவர்களைக் கூட கொலைசெய்கிற ராமனின் ‘நடத்தை’, இந்தக் காலத்து அமெரிக்கவை நினைவுப்படுத்துகிறது.

தனது சுயலாபத்துக்காக வாலியை கொல்வதற்கு என்ன தந்திரத்தை சுக்ரீவன் மூலம் கையாண்டானோ, அதே போன்ற தந்திரத்தைதான் பேரரசன் ராவணனை கொல்வதற்கும் அவனுடைய சகோதரன் விபிஷணன் மூலமாக கையாண்டு இருக்கிறான் ராமன், என்று ராமனின் யோக்கியதையை இரண்டாக பிளக்கிறார் டாக்டர் அம்பேத்கர். வாலியின் படுகொலைக்காக நிரம்ப கோபமுற்று ராமனை கட்டி வைத்து சவுக்கால் அடிப்பதுபோல் கேள்வி கேட்கிறார் டாக்டர் அம்பேத்கர்:

“வாலியின் படுகொலை ராமனின் நடத்தையில் படிந்த மாபெரும் களங்கமாகும். ராமனின் கோபத்திற்கு ஆளாகக் கூடிய எந்தக் குற்றத்தையும் செய்யாத வாலியை மறைந்திருந்து ராமன் கொன்றது மிகக் கடுமையான குற்றமாகும். …………………….

நிராயுதபாணியாக இருந்த வாலியை அம்பு ஏவிக் கொன்ற ராமனின் செயல் கோழைத்தனமாதும் பேடித்தனமானதும்மாகும். வாலியின் கொலை திட்டமிட்டுச் சதி செய்து நிகழ்த்தப்பட்ட படுகொலையாகும்”

வாலியையும், ராவணனையும் ராமன் கொன்றதற்கு, தன் மனைவி சீதையின் மேல் கொண்ட அன்பினால் அல்ல, அதிலும் தனிப்பட்ட சுயநலமே ராமனிடம் இருந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார் டாக்டர் அம்பேத்கர்:

” மனித மனம் படைத்த பாமர மனிதன்கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம், ராமன் சீதையிடம் நடந்துகொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது. …………

ராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான்: உன்னைச் சிறைப்பிடித்தானே அந்த எதிரியைக் கடும்போரில் தோற்கடித்துப் பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ராவணனைக் கொன்றிடவும் அவனால ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெரும் தொல்லையை மேற்கொள்ளவில்லை.”

ராமன் சீதையிடம் இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்து இருக்க முடியும்? ராமன் அதோடு நிற்கவில்லை; சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்: உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். ராவணன் உன்னை களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப்பார்க்க எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது.

ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. போரிட்டு உன்னை மீட்டுவந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை ராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை”

இப்படிப்பட்ட ராமனைச் சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே.”

சீதை கருவுற்றிருந்த காலத்தில் அவளை கொண்டுபோய் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடுகிறான் ராமன். பிறகு பல ஆண்டுகள் கழித்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு அவளை சந்திக்கிற ராமன் அப்போதும், அவளை சந்தேகித்து, தீயில் இறங்கி அவள் நேர்மையை நிரூபிக்கச் சொல்கிறான். அப்படி நிரூபித்தப் பிறகு, பூமியை இரண்டாகப் பிளந்து அதனுள் இறங்கி விடுகிறாள் சீதை.

இதை டாக்டர் அம்பேத்கர் மிகுந்த கோபத்தோடு இப்படி குறிப்பிடுகிறார்:

“காட்டுமிராண்டித்தனமானவனைவிட கேவலமாய் நடந்துகொண்ட ராமனோடு மனைவியாய் திரும்பப் போவதைக் காட்டிலும் சீதை மரணத்தையே விரும்பி ஏற்றுக்கொண்டாள். கடவுளான ராமனின் கயமையும் சீதையின் துயரமும் இவ்வாறு காணப்படுகிறது.”

ambedkar_title1‘ராவணன் பெண் பித்தன், ராமன்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்று உயிராக வாழ்ந்தவன்’ என்று மூணு பொண்டாட்டிகாரன் கதாகாலட்சபம் செய்வதுபோல், பல பெண்பித்தர்களும், பக்தர்களும் ராமனுடைய சிறப்பு ‘ஏக பத்தினி விரதன்’ என்று சொல்கிறார்கள். ஆனால் டாக்டர் அம்பேத்கர் வால்மீகி ராமாயணத்தில் இருந்து ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகளோடு, ‘ராமன் ஒரு ஸ்திரிலோலன்’ என்று நிரூபித்திருக்கிறார்:

“ராமன் ‘ஏக பத்தினி விரதன்’ என்பது ஒரு சிறப்பாகக் கூறப்படுகின்றது. இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது. வால்மீகியே கூட தன் ராமாயணத்தில் ராமன் அனேக மனைவியரை மணந்து கொண்டதைக் குறிப்பிடுகிறார். மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் ராமன் வைத்திருந்தான்.”

“ராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி எனறும், நண்பகலுக்குப் பின் வேறொரு பகுதி எனறும் வரையறுக்கப்பட்டது. …………………………………….

காலை முதல் நண்பகல் வரை ராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறை வேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தை கழித்தான்.

அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் களிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான். ராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். ……………………………….

ராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாடடத்தில் சீதையையும் கலந்துகொள்ளச் செய்தான், என வால்மீகி குறிப்பிடுகிறார். …………………………………………………..

அழகிகளின் மத்தியில் ராமன் குடித்து, கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் ராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர்.”

‘ராமன் ஏக பத்தினி விரதன் அல்ல, ஏகப்பட்ட பத்தினிகள் விரகன்’ என்று அம்பலப்படுத்துகிறார் டாக்டர் அம்பேத்கர். இந்த ராமனின் ராஜ்ஜியம் வரவேண்டும் என்பதுதான் காந்தியின் கனவாக இருந்தது. காந்தியின் கனவு நினைவாகி இருந்தால்….. நினைக்கவே கூசுகிறது. உண்மையில் ராம ராஜ்ஜியம் என்பது, காம ராஜ்ஜியம்தான்.

***

‘ராமனை, இப்படி எல்லாம் கொச்சைப் படுத்தலாம். ஆனால் அவன் மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினான். நீதி, நேர்மை தவறாமல் ஆண்டான். அவன் ஆட்சியில் எல்லா உயிர்களும் நிறைவாக மகிழ்ச்சியாக வாழந்தன. நீதி தவறாத ராமனின் ஆட்சியைத்தான் ராமராஜ்ஜியம் என்றார், மகாத்மா. அந்த ராமனின் ஆட்சியைத்தான் வலியுறுத்தினார் காந்தி மகான்.’ என்று காந்திய ஆதரவாளர்களான இந்து மிதவாதிகள் விவாதிக்கக் கூடும். இந்த வாதத்தை ஊதிதள்ளுகிறார் டாக்டர் அம்பேத்கர். காந்தியத்தின் அரைஆடையும் அம்பேத்கரின் அறிவுக்கு முன் பறந்துபோய் நிர்வாணமாகிறது.

“நாட்டு மக்ளின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக்கூட ராமன் ஒருபோதும் கடைபிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை ஏதோ ஒருதடவை ராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகிறார். அதுவும் துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் ராமன். அப்படி செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் ராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.”

“பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைய நேர்ந்தது. …………………………………….

அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு ராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்றான். மனம் போனபடி, பழித்தான், சபித்தான். குற்றவாளியைப் பிடித்துத் தணடித்துச் செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினப் போர் நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தினான். …………………

நாட்டு மக்களுள் அதாவது ராம ராஜ்ஜியத்தல் யரோ ஒரு சூத்திரன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். தரும (புனித) சட்டங்களின்படி பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை என்று மேலும் நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று ராமன் திடமாய் நம்பினான். …………………..

உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றிவந்தான். அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்திலாழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனைநோக்கிப் போனான். அந்தத் தவம் செய்து கொண்டிருந்தவன் தான் சம்பூகன் என்னும் சூத்திரனா-? மனித உருவிலேயே மோட்சத்திற்குச் செல்லத்தவம் செய்பவனா? என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவிவிட்டான் ராமன். அதே நொடியில் எங்கே தொலை தூரத்து அயோத்தியில் அகாலமரணமைடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம்.”

ஒரு மனிதன் எந்த நேரமும் குடி, பல பெண்களுடனான உறவு என்று ஊதாரியாக வாழ்வது மோசமானது. அதுவும் ஒரு மன்னன் அப்படி இருந்தால், அது எவ்வளவுக் கேவலமானது.

ஆனால், சம்பூகனை கொலை செய்த ராமனின் செயலை அவனுடைய ஊதாரித்தனமான பாலியில் லீலைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ராமனின் காம லீலைகள் எவ்வளவோ முற்போக்கானவை. படுகொலை செய்து முறையற்ற தீர்ப்பு வழங்கி அநீதிக்கு வழிவகுத்த ராமனை மேலும் ஆட்சி அதிகாரத்தில் தலையிடவிடாமல் பார்த்துக் கொண்டு, அந்தப்புரத்திலேயே வளைத்து வைத்திருந்த அந்த ‘அழகி‘களுக்குத்தான் நாம் நன்றி சொல்வேண்டும்.

சம்பூகன் என்னும் ‘சூத்திரனை’ பார்ப்பானுக்காக, பார்ப்பனியத்தை பாதுகாப்பதற்காக கொலை செய்த ராமனின் தோலுரித்த, டாக்டர் அம்பேத்கர் சிலையின் கழுத்தை உடைக்கிறார்கள், நன்றிகெட்ட சூத்திரர்கள்.

-தொடரும்

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர்படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.

என்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன்

ambedkar-new

டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!-2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3
டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4

டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது  – 5


‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’-டாக்டர் அம்பேத்கர்- 6

 

தொடர் – 7

 

பெரியாரும் பெரியர் இயக்கத்தவர்களும், “கடவுள் பயல்களிலேயே களவானிப்பய கண்ணன்தான்” என்று பலமுறை அவனது லீலைகளை அம்பலப்படுத்தியப் பிறகும் கூட பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாத பக்தக் கோடிகளும் தங்களின் மூடநம்பிக்கைகளின் மீது மிகுந்த ‘நம்பிக்கை’யாக இருக்கிறார்கள்.

 

சில தமிழ்தேசியவாதிகளும், பார்ப்பனரல்லாத கடவுள்களின் நம்பிக்கையாளர்களுமான சில ‘நாத்திகர்களும்’ ஈவ்டீசிங் பேர்வழியான கண்ணனை ‘யாதவர்’ என்றும் அவன் ‘பார்ப்பனர் கிடையாது அதனால்தான் அவன் கருப்பாக இருக்கிறான். மாகாகவி பாரதிகூட அதன் காரணத்தால்தான் கண்ணனை சிலாகித்தான்’, என்றும் ‘கோனார்’ உரை எழுதுகிறார்கள்.

 

கண்ணன் அல்லது கிருஷ்ணன் பார்ப்பானோ இல்லை பார்ப்பனரல்லாதவனோ, அவன் தூக்கி நிறுத்தியது பார்ப்பனியத்தை. அதனால்தான் அவனை பார்ப்பனர்களும் கொண்டாடுகிறார்கள். ‘நானே நாலு வர்ணத்தை உண்டாக்கியவன்’ என்று ஒரு அசிங்கத்தை அதிகாரத்தோடு சொன்ன காரணத்திற்காகத்தான், அய்யங்கார் அல்லது வைணவ கடவுள் கண்ணனை, அய்யர் பாரதியும் கொஞ்சி குலாவுகிறார். பெருமாளை வணங்காத அயயர்கள்கூட கண்ணணை வணங்கும் ரகசியமும் அதுவே.

 

ஒருவேளை பார்ப்பனரல்லாத அறிஞர் பெருமக்கள், தங்களின் கூர்மையான அறிவினால் துப்பறிந்து, ‘கண்ணன் பிறப்பால் பார்ப்பனரல்லாதவன்தான், அதுவும் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்’ என்று நிரூபித்தாலும்கூட, இல்லை அதுவே உண்மையாக இருந்தாலும்கூட அதனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சமூகத்திற்கும் என்ன பயன்? அவமானம்தான்.

அவன் பிறப்பால் என்னவாகப் பிறந்தானோ? ஆனால் தன் செயலால் அவன் பார்ப்பானராகவே உயர்ந்து நிற்பதால், நிச்சயம் அவன் பார்ப்பனர்தான்.

 

அன்றைக்கு சத்ரியனாக அவதரித்த ராமன், பார்ப்பன நலனுக்காக பாடுபட்டதினால்தான் இன்றைக்கும் பார்ப்பனர்கள் ராமனை கடவுளாக போற்றுகிறர்கள்.

 

இன்றைக்கு பார்ப்பனர்களின் இந்திய கதாநாயர்கள் யார் தெரியுமா?

பார்ப்பனரல்லாத மோடியும், அத்வானியும்தான்.

 

***

 

ளவானித்தனம் மற்றும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டாலும், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கொ யாத தொல்லை’ என்று கடவுள் கண்ணனின் பொறுக்கித் தனத்தை பாடல் எழுதி பெருமைபட்டுக் கொண்ட பாரதி போன்ற பக்தர்களுக்கு பச்சைக் குழந்தையாகவே காட்சியளிக்கிற,  பார்ப்பனர் பார்ப்பனரல்லாதவர்களின் கவர்ச்சிகக் கடவுளான கிருஷ்ணனை பற்றி டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார்:

 

கிருஷ்ணன் என்ற பெயரில் நான்கு பேர் இருக்கிறர்கள். ஒரு கிருஷ்ணன், சத்யவதியின் மகன். திரிதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோரின் தந்தை. இரண்டாவது கிருஷ்ணன், சுபத்ராவின் சகோதரன், அர்ஜுனனின் நண்பன். மூன்றாவது கிருஷ்ணன், வசுதேவர், தேவகி ஆகியோரின் மகன், மதுராவில் வசித்தவர். நான்காவது கிருஷ்ணன் கோகுலத்தில் நந்தனாலும் யசோதாவாலும் வளர்க்கப்படடவர்;  இவர்தான் சிசுபாலனை கொன்றவர்.”

“பிரமா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் வழிபாட்டுடன் ஒப்பிடும்போது கிருஷ்ணன் வழிபாட்டில் ஒரு செயற்கைத் தன்மை காணப்படுகிறது. பிரமா, விஷ்ணு, மகேஸ்வரன் கடவுள்களாகவே பிறந்தவர்கள். கிருஷ்ணன் மனிதனாகப் பிறந்து கடவுளாக உயர்த்தப்பட்டவர்.”

“கிருஷ்ணனின் தொடக்க நிலை இப்படி அடக்கமானதாயிருந்தாலும், அவர் எல்லோருக்கும் மேலாக உயர்ந்த கடவுள் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டவர் ஆனார்.”

“எனவே பகவத் கீதையைப் பொறுத்த மட்டில் கிருஷ்ணனைவிடப் பெரிய கடவுள் யாரும் இல்லை என்பது தெளிவாகிறது. அவர் அல்லா ஹு அக்பர். அவர் மற்ற எல்லாக் கடவுள்களையும் விடப் பெரியவர்”

இப்படி  ஹாலிவுட் மேக்கப் மேனின் உதவியே இல்லாமல் பல வேடங்களில் வந்து கமல்ஹசனையே தூக்கிச் சாப்பிடுகிற கிருஷ்ணனின் யோக்யதை எப்படிப்பட்டது? என்பதை டாக்டர் அம்பேத்கர் விவரிக்கிறார்:

“கிருஷ்ணனுடைய அநாகரிகமான அநேக காரியங்களுள் மிகக் கேவலமானது என்னவெனில் அவன் இராதா என்ற கோபியருடன் கொண்ட முறைகெட்ட வாழ்க்கையாகும். கிருஷ்ணன் இராதாவுடன் கொண்டிருந்த தொடர்பினைப் பற்றிப் பிரம்ம வர்த்த புராணத்தில் வருணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.”

“இராதாவோ ஏற்கனவே மணமானவள். முறைப்படி மணந்த ருக்மணியை கைவிட்டுவிட்டு  வேறொருத்தன் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.”

 

“கிருஷ்ணன் மாவீரன் மாத்திரமல்ல; இளம்வயது முதலே மிகச் சிறந்த அரசியல் வித்தகன் எனவும் சொல்லப்படுகிறது. போர் வீரனாகவோ அல்ல அரசியல் வாதியாகவோ அவன் செய்த ஒவ்வொரு காரியமும் அறத்திற்கு மாறானவை. அந்த வகையில் அவன் செய்த முதற்காரியம் தன் சொந்த தாய்மாமனான கம்சனைக் கொன்றதாகும். அப்போது கிருஷ்ணனுக்கு வயது பன்னிரெண்டுதானாம்”

“கிருஷ்ணன் கம்சனைப் போர்க்களத்திலோ அல்லது தனிப்பட்ட முறையில் சண்டையிட்டோ கொன்றிடவில்லை.”

“மதுராபுரியை வந்தடைந்தவுடன் (கம்சனை கொல்வதற்கு) தாம் அணிந்திருந்த சாதாரண ஆயர் உடையை மாற்றிச் சற்று நாகரிகமான உயைணிந்து கொள்ள கிருஷ்ணனும் அவனுடைய சகோதரர்களும் விரும்பினர். அவ்வழியே வீதியில் வந்த கம்சனனின் சலவைக்காரரிடம் மிரட்டித் துணி கேட்டனர். அவன் திமிரா நடந்து கொண்டதால் அவனைக் கொலை செய்துவிட்டு, அவன் சுமந்துவந்த துணி மூட்டையிலிருந்து தாம் விரும்பிய துணிகளை எடுத்துக் கொண்டனர்.

பிறகு கம்சனுக்கு வாசனைத் திரவியங்களைப் பூசும் குப்ஜா என்ற பெண்ணைச் சந்திக்கின்றனர். குப்ஜா ஒரு கூனி. அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவள் மணங்கமழும் சந்தனக் குழம்பைப் பூசி விட்டாள். பதிலுக்கு கிருஷ்ணன் கூன் விழுந்த குப்ஜாவின் முதுகை குணப்படுத்தினானாம்.

வேறோர் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணன் குப்ஜாவைச் சந்திக்க நேர்ந்தபோது வழக்கம் போல தகாத முறையில் குப்ஜாவுடன் உடலுறவு கொண்டதாகப் பாகவதம் சொல்கிறது. (பன்னிரெண்டு வயசு பையன் பண்ணற வேலைய பாத்திங்களா?-வே. மதிமாறன்) இருப்பினும் இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் குப்ஜா வாசனைத் திரவியங்களைப் பூசினாள்.”

“ருக்மணியைத் தொடர்ந்து பெரும் மந்தையே கிருஷணனின் மனைவிக் கூட்டமானது. கிருஷ்ணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை பதினாறாயிரத்து ஒரு நூற்றெட்டு பேர்கள். அவனுடைய குழந்தைகளின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து எண்பாதாயிரம் பேர்கள்.”

 

நிர்வாணமாக்கி ஊர் பெண்கள் மானத்தை எல்லாம் வாங்கிய கிருஷ்ணன், மகாபாரதத்தில் பாஞ்சாலியின் மானம் காக்க உடைகொடுத்ததானம்! பாஞ்சாலியின் மானம் காத்தது இருக்கட்டும், இங்கே டாக்டர் அம்பேத்கரின்  வாதத்திறமையின் முன்னால் அவன் மானம் போகிறேதே என்ன அவதாரம் எடுத்து ‘தன் மானத்தை’ காப்பற்ற முயற்சிப்பான், கிருஷ்ணன். என்ன பதில் சொல்லி கிருஷ்ணனின் ‘மானம்’ காப்பார்கள் பக்தர்கள்.

 

ambedkar-new-2

 

விசித்திரமானது இந்து மதம். வேடிக்கையாக இருக்கிறது இந்துக்களின் இறைநம்பிக்கை.

‘ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுக்கமாக வாழ்ந்தான் ராமன் அதற்காகத்தான் அவனை வணங்குகிறோம்’ என்கிறார்கள் இந்துக்கள். அவர்களேதான்,  பாலியல் நோய் வந்து பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய அளவிற்கு சகமேட்டுமேனிக்கு பல பெண்களோடு உறவு கொண்ட, கொலைபோன்ற கிரிமனல் குற்றங்களுக்காக சிறுவர் சீர்திருத்த்தப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டிய கிருஷ்ணனையும் தெய்வமாக தொழுகிறார்கள்.

 

ஒழுக்கம் குறித்து தனிவாழ்க்கையில் அதிகம் பேசுகிற இந்துக்கள், தங்களின் கடவுள் பொறுக்கியாக இருந்தாலும் அதனை பூரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

 

இந்துக்களின் இறைவழிபாட்டில் இருக்கிற இந்த முரண்பாடை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. டாக்டர் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் புரியவைத்தால் அதை புரிந்து கொண்ட பின் அதற்காக அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. இந்து மதம் இந்துக்களை சுயமரியாதையும், சுயஅறிவும் அற்றவர்களாகவே உருவாக்கிற வைத்திருக்கிறது.

 

இந்துக்களாக அடையாளப்படுத்தப்பட்டு, முட்டாள்களாக, சூத்திரர்களாக நடத்தப்படுகிற, அவமரியாதைக்குள்ளாகிற பிற்படுத்தப்பட்டவர்களின்  சுயமரியாதைக்காக பார்ப்பனிய தந்துங்களோடு நேருக்கு நேர் மோதிய டாக்டர் அம்பேகத்ரை, அவமதிக்கிறார்கள், சுயமரியாதையற்ற சூத்திரர்கள்.

 

-தொடரும்

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர்  படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt  அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.

‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’-டாக்டர் அம்பேத்கர்

03
டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!-2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3

டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4

டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது  – 5

தொடர் – 6

ருணாசிரம தர்மம் என்பது ஒன்றல்ல வருண தர்மமும் ஆசிரம தர்மமும் இணைந்ததுதான் வருணாசிரமதர்மம் என்று டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டதையும் அதில் வருண ‘தர்ம’த்தை பற்றியும் பார்த்தோம்.

ஆசிரமதர்மம் என்றால் என்ன?

ஆசிரமம் என்றால் உலகத்துக்கே தெரிஞ்சது, துறவிகளின் இடம்.

துறவிகள் என்றால் என்ன?

மானம், சூடு, சொரணை, வெட்கம், மனிதாபிமானம் இவைகளை முற்றிலுமாக துறந்தவர்கள்.

அப்படியானல் ஆசிரமம் எப்படி இருக்கும்?

கிளுகிளுப்பாக, கவர்ச்சிகரமாக பாலுமகேந்திரா படத்தில் வருகிற ‘பலான’ வீடு மாதிரி இருக்கும்.

பார்ப்பன பார்ப்பனரல்லாத எல்லா ஆசிரமங்களுக்கும் ஒரே `தீம் பாட்டு` இதுதான், ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ?’

கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் பிரேமானந்த கைதானபோதும், ஜெயேந்திரன் கைதானபோதும் ஆசிரமம் பற்றியும், துறவிகள் பற்றியும் இப்படித்தான் புரிந்து கொள்ளப்பட்டது.

பிரேமானந்த என்கிற கொடியவனை அம்பலப்படுத்தி அவனுக்குத் தண்டைனை வாங்கித்தந்ததில், சிபிஎம் கட்சியைச் சேர்ந்த முன்னணி தோழர்களால் நடத்தப்படுகிற ஜனநாயக மாதர் சங்கத்துக்கே அந்தப் பெருமை சேரும். ஆனால் அவர்கள் ஜெயேந்திரன், சங்கரராமனை கொலை செய்தபோதும், பல பெண்களோடு பாலியல் விவகாரங்களில் தொடர்புபடுத்தி செய்திகள் வந்தபோதும், பிரேமானந்தாவை எதிர்த்து தீவிரமாக இயங்கியதை போல் ஜெயேந்திரனை எதிர்த்து இயங்கவில்லை. ஒரு சிறிய எதிர்போடே நின்றுபோனது.

இத்தனைக்கும் ஜெயேந்திரன் கொலை செய்வதற்கு முன், ‘முறையான’ துறவியாக இருந்தபோது, வேலைக்குப் போகிற பெண்களை விபச்சாரிகள் என்று சொன்னதாக ஞாபகம். சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்களோ, ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களோ ஏன் ஜெயேந்திரனுக்கு எதிராக தீவிரமாக இயங்கவில்லை என்று தெரியவில்லை. பார்ப்பனியத்தை அம்பலப்படுத்த கிடைத்த நல்ல வாய்ப்பை அவர்கள் நழுவவிடடார்கள். ஏதாவது ‘முக்கிய’மான காரணங்கள் இருக்கலாம். சரி பரவாயில்லை. நாம் எடுத்துக் கொண்ட விஷயத்தைவிட்டு அதிகம் வெளியில் போகவேண்டாம்.

வருண தர்மம் எப்படி சூத்திரர்களை கேவலப்படுத்தியதோ அதைதான் ஆசிரம தர்மமும் செய்தது. அதை டாக்டர் அம்பேத்கர் மனுவின் மோசடிகளில் இருந்து விளக்குகிறார்:

“ஆசிரம தருமத்தில் மூவகைத் தன்மைகளை மனு கருதியிருப்பது தெளிவாகிறது. முதலாவது இந்த தருமத்தைச் சூத்திரர்களும் பெண்களும் மேற்கொள்ள முடியாது.”

“இந்த ஆசிரம தர்மத்தைப் பற்றி சில புதிர்களும் உள்ளன. முதலாவதான புதிர், பிரம்மசாரிகளிடையே மனு ஏற்படுத்தியுள்ள வேற்றுமைகளாகும்.”

“இந்தப் பிரமசாரிகள் அனைவரும் ஒரே பிரிவை சார்ந்தவர்களாக அதாவது துவிஜர்களாகவே இருப்பார்கள். அவ்வாறாயின், அவர்கள் அணியும் மேலாடைகளில் ஏன் வேறுபாடு இருக்க வேண்டும்? அவர்கள் அணியும் பூணூல் இழைகளும் வெவ்வேறாக இருக்க வேண்டிய அவசியம் என்ன? ஏந்தும் கொம்புகள் வெவ்வேறு மரத்தினதாக இருப்பானேன்? அவர்கள் யாசிக்கும் சொற்களில் வேறுபாடு இருக்க வேண்டியதேன்?

பிராமணப் பிரம்மசாரியொருவன் ‘பகவதி பிஷாம் தேகி’ என்று சொல்வானேன்? சத்திரிய பிரம்மசாரியொருவன் ‘பிஷாம் பவதி தேகி’ என்று சொல்வானேன்? வைசிப் பிரம்மசாரியொருவன் ‘பிஷாம் தேகி பவதி’ என்று சொல்வானேன்?

ஆஸ்ரம தர்மம் என்பது இந்துக்களின் விநோதமானாதொரு அமைப்பு; இதற்காக அவர்கள் பெரிதும் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். அதற்கு இணையானதொரு அமைப்பு எங்கும் இல்லை என்பது உண்மையே. அதே வேளையில் அதற்கென்று தனியொறு சிறப்பு ஏதும் இல்லை என்பதும் உண்மையே. கட்டாய பிரமச்சரியம் என்பது பிள்ளைக்ளுக்குக் கட்டாயாமாகக் கல்விப்பயிற்சிக்கு வழி வகுக்கின்றது என்ற வகையில் கவர்ச்சியாகத் தோன்றுகின்றது. ஆனால் அது அனைவருக்கும் உரியதன்று என்பதை நோக்க வேண்டும்.

சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் இது விலக்கப்படடிருக்கிறது. இந்து சமூதயாத்தின் பத்தில் ஒன்பது அளவுக்குரிய தொகையினரான சூத்திரர், பெண்கள் ஆகியோரைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது அறிவார்ந்த முறை என்பதைவிட வஞ்சகத் தன்மையுடைது என்பது புலப்படும்.”

என்று ஆசிரம ‘தர்மத்தை’ அம்பலப்படுத்திய டாக்டர் அம்பேத்கர், இதில் வானப்பிரஸ்த நிலை என்ற ஒன்றை விளக்குகிறார்:

“ஒருவன் எப்போது வானப்பிரஸ்தனாக வேண்டும் என்பதில் மனு மிக உறுதியாக இருக்கிறார். வானப்பிரஸ்தனாவதற்குரிய காலம் வயதால் மூத்து முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருக்கக் கூடிய பருவமாகும். சந்நியாசியோ இதைவிட மேலும முதிர்ந்த வயதுடையவனாக இருக்கவேண்டும்.

வாழ்க்கையின் சுகத்தையெல்லாம் ஆண்டு அனுபவித்து முடித்துவிட்டு மேலும் இன்பவாழ்க்கையை மேற்கொள்ள இயலாத நிலையில் தம்மைத் தியாகிகளைப் போல வெளிப்படுத்திக் கொள்வது நகைப்பிற்குரியதாகும். இவ்வாறு குடும்பத்தாரையும் வீட்டையும் துறந்து செல்வது என்பது துயருறும் மனித சமுதாயத்திற்குத் தொண்டு செய்வதற்காக இல்லை. துறவு வாழ்க்கையை மேற் கொண்டு அமைதியான மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதற்கே இது உதவுகின்றது.

வயது முதிர்ந்தவர்களைக் குடும்பத்திலிருந்து தொடர்பு அறச் செய்து, பொருளற்ற அற்பக் காரியத்திற்காக ஆற்றுவாரும் தேற்றுவாரும் இல்லாமல் காட்டில் சாகவைப்பதானது மூடத்தனத்தின் கொடுமையாகவே தோன்றுகிறது. ஆசிரம முறைமை, பிராமணர்கள் உருவாக்கிய பண்டைய திட்டமிட்ட சிக்கன வாழ்க்கை முறையேயாகும்.”

டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிற இந்த வானப்பிரஸ்த முறைதான், பின்னாட்களில் பார்ப்பனர்களிடம் வயது முதிர்ந்த பெற்றோர்களை தங்கள் பிள்ளைகளே, காசிக்கு அனுப்பி வைத்து சாகடிக்கிற முறையாக மாறியது. இது இன்றைய நவீன வடிவமாக முதியோர் இல்லத்தில் விட்டுவிடுவதாக மாறியிருக்கிறது. இன்று முதியோர் இல்லங்கள் பார்ப்பன முதியோர்களால் நிரம்பி வழிவதற்கு இந்த வானப்பிரஸ்த முறைதான் காரணம். அதுபோல் பெரும்பான்மையான முதியோர் இல்லங்கள் பார்ப்பனர்களால்தான் நடத்தப்படுகிறது.

ambedkar-stamp1பார்ப்பன உயர்வை பேசிய மனுவின் மோசடிகளை அம்பலப்படுத்திய டாக்டர் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களையும் பார்ப்பனப் பெண்களையும் இழிவுப் படுத்திய மனுவின் கீழ்தரமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறார்.

மனு அளிக்க வந்த விளக்கம் எத்தகைய பயங்கரமானது என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவருடைய விளக்கம் எந்த அளவுக்கு போய் முடிகிறது?

மக்களின் குறிப்பாக பெண்களின் நடத்தையை எவ்வளவுக்குக் கேவலப்படுத்திக் காட்டுகிறது.”

“மனு குறிப்பிடும் சண்டாளர் அல்லது தீண்டாதாரின தோற்றத்தை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்! சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் கூடாவொழுக்கத்தால் பிறந்த சந்ததியார், சண்டாளச் சாதியினர் என்ற கூறியுள்ளார். இது உண்மையாக இருக்கமுடியுமா? அப்படி உண்மையாக இருக்குமானால் பிராணமப் பெண்கள் தமது ஒழுக்கத்தல் உறுதியற்றவர்களாக இருந்தார்கள். சூத்திர ஆடவர்களோடு கூடுவதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள் என்றாகிவிடக்கூடும். இது நம்பமுடியாததாகும்.

சண்டாளர்களின் மக்கள் தொகை பெரிதாக இருப்பதை வைத்துப் பார்த்தால், ஒவ்வொரு பிராமணப் பெண்ணும் ஒரு சூத்திர ஆடவனுக்கு காமக்கிழத்தியாக இருந்திருந்தாலும் கூட நாட்டிலுள்ள சண்டாளர்களின் எண்ணிக்கைக் கணக்கைச் சரிகட்ட முடியாமல் போய்விடும்.”

பார்ப்பனியத்தை இப்படி அம்பலப்படுத்தி எழுதிய டாக்டர் அம்பேத்கரை பார்ப்பனர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதனால்தான் அவர்கள் செய்ய வேண்டிய வேலையை சூத்திரர்கள் செய்கிறார்கள், அண்ணலின் சிலையை இடிப்பதும், அவர் பெயரை புறக்கணிப்பதுமாக.

பிற்படுத்தப்பட்டவர்களை ‘சூத்திரர்கள்’ என்று இழிவுப் படுத்திய பார்ப்பனியத்தை அம்பலப்படுத்திய டாக்டர் அம்பேத்கருக்கு சூத்திரர்கள் காட்டும் நன்றி இது.

-தொடரும்

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.

டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது

ambed
டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்! -2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3

டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4

தொடர் – 5

“ஈ.வெ.ராமசாமியின் ஆட்கள் இந்துக் கடவுள்களை மிக கேவலமாக பேசுகிறார்கள். இந்த ஈவெராவிற்கும், அவனோட ஆட்களுக்கும் கொஞ்சம் கூட நாகரிகமே கிடையாது. இந்து கடவுள்களை இவ்வளவு ஆபாசமாக பேசுகிறார்களே. இஸ்லாமிய, கிருஸ்துவ கடவுள்களை இப்படி பேச முடியுமா?” என்று தங்களின் `சர்வவல்லமை` பொருந்திய பேசும் சக்தியற்ற கடவுள்களுக்காக அடியாள் வேலை பார்க்கிறார்கள், பக்தர்கள். பார்ப்பனர்கள்.

தந்தை பெரியாரும் அவர் இயக்கத்தை சேர்ந்தவர்களும், கடவுள்களை பற்றி அவர்களாக கற்பனை செய்து பேசவில்லை. இவர்கள் எழுதிய வைத்திருக்கிற ஆபாச கதைகளில் இருந்துதான் பேசியிருக்கிறார்கள். தந்தை பெரியார் ஆதாரம் இல்லாமல் எதையும் விமர்சித்ததில்லை.

பெரியார் கடவுள்களை செருப்பால் அடித்தது இருக்கட்டும், பார்ப்பனர்கள் தங்கள் கடவுள்களை என்ன பாடுபடித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

தாங்கள் வழிபடுகிற கடவுள்களால் தங்களுக்கு லாபம் இல்லாமல் போனால், அதுவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடிய கடவுள்களைப் பற்றி மோசமான கதைகளைப் பரப்பி அந்தக் கடவுள்களை எப்படி ஒழித்துக் கட்டியிருக்கிறார்கள் என்று டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்துக்கிறார்:

“ஒரு காலத்தில் பிரமாவே சிவனையும் விஷ்ணுவையும் விட மிக உயர்ந்த கடவுளாக இருந்ததாகத் தோன்றுகிறது.
………………………………….. பிரமா மிக உயர்ந்த கடவுளாகயிருந்ததால் அவர்தான் ருத்ரனுக்குக்கும் நாராயணனுக்கும் இடையேயும், கிருஷ்ணனுக்கும் சிவனுக்கும் இடையிலும் தாவக்களில் நடுவராயிருந்தார்.”

“பின்பு ஒரு கட்டத்தில் பிரமாவுக்குச் சிவனுடனும் விஷ்ணுவுடனும் மோதல் ஏற்பட்டு, மிக உயர்ந்த கடவுள் என்ற நிலையை அவர்களிடம் இழந்து விடடார் என்பது நிச்சயமாகத் தெரிகிறது.
…………………………………………………..
பிரமா முக்தியளிக்கும் சக்தியையும் இழந்தார். சிவன்தான் முக்தியளிக்கும் கடவுள் என்று ஆனார். …………………………………. அவர் சிவனுக்குச் சேவகனாகி, சிவனின் தேர்ப்பாகனின் வேலையைச் செய்பவர் ஆகிவிட்டார்.
இறுதியாக பிரமா தமது மகளுடன் சோரம் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, வழிபாட்டுக்கே தகுதி இல்லாதவர் ஆக்கப்பட்டார்.”

“பிரமா வெளியேற்றப்பட்டபின் சிவனும் விஷ்ணுவும் மட்டும் களத்தில் இருந்தார்கள். இந்த இருவரும் ஒருபோதும் சமாதானமாயிருக்கவில்லை. இருவருக்குமிடையே தொடர்ந்து போட்டி இருந்து வந்தது. சிவனையும் விஷ்ணுவையும் வணங்கும் பிராமணர்களின் பிரசாரங்களும் எதிர்ப் பிரசாங்களும் புராணங்களில் நிறைந்துள்ளன.”

“இந்துக் கடவுள்கள் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுப் போராடிக் கொண்டிருப்பதும், சாதாரண மனிதர்கள் வெட்கக் கேடானதாகவும் அவமானகரமானதாகவும் கருதக்கூடிய விஷயங்களை ஒரு கடவுள் மேற் மற்றோரு கடவுள் சுமத்துவது ஆகும்”
என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

தங்கள் கடவுள்களை இப்படி பந்தாடியப் பார்ப்பனர்கள், தங்கள் இஷ்டம்போல் மாற்றிக் கொண்ட பார்ப்பனர்கள். வர்ணாசிரம தர்மத்தில் மட்டும் எந்த மாற்றமும் வராமல் பார்த்துக் கொண்டார்கள். அதாவது `தலையில் பிறந்தவன் பிராமணன், காலில் பிறந்தவன் சூத்திரன்` என்பதை, `தலையில் பிறந்தவன் சூத்திரன், காலில் பிறந்தவன் பிராமணன்` என்று எங்குமே மாற்றவில்லை.

மனு காலத்தில்தான் வர்ணவேறுபாடுகள் இருந்தது. வேத காலத்தில் இல்லை என்று பாரதி போன்ற பார்ப்பனர்கள் சொல்வது, பொய் என்று ஆதாரத்தோடு நிரூபிக்கிறார் டாக்டர் அம்பேத்கர்.
வர்ண வேறுபாடுகள் உண்டான கதைகள் வேதத்தில் வேறு மாதிரியும், அதற்கு பின் வந்த தத்துவங்களில் ஒரு மாதிரியும் மாறி மாறி இருக்கிறது. ஆனால் அதில் மாறதது அதன் படி நிலைதான். பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள், சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள் என்பது, கதைகள் மாறினாலும் காட்சி மாறவில்லை என்று இந்து தத்துவங்களின் தோலை உரிக்கிறார் டாக்டர் அம்பேத்கர்:

“வருண தர்மம், ஆசிரம தர்மம் இவ்விரண்டும் இணைந்து வருணாசிரம தர்மம் எனப்படுகிறது.
……………………………………
முதலில் வருண தர்மத்தை நோக்குவோம். முதலாவதாக, வேதங்களில் கூறப்பட்டுள்ளவற்றைத் தொகுத்துரைத்தல் நல்லது. ருக் வேதத்தின் 10 வது மண்டலம் 90 வது பாடலில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

புருடன் ஆயிரம் தலைகளும், ஆயிரங் கண்களும், ஆயிரங்கால்களும் உள்ளவன். அவன் புவியின் எல்லாப் பக்கங்களிலும் பரவி அதைவிடப் பத்து விரல்கள் அளவுக்கு மிஞ்சி நிற்கிறான்.
(ஆயிரம் தலைகள் இருந்தால் இரண்டாயிரம் கண்கள், இரண்டாயிரும் கால்கள் அல்லவா இருக்க வேண்டும். ஆரம்பமே பொய். -மதிமாறன்)
…………………………………………….

பிராமணன் அவனது வாயானான். இராஜன்யன் அவனுடைய கைகளானன். அவனுடைய தொடை பாகம் வைசியனாயிற்று. அவனுடைய பாதங்களிலிருந்து சூத்திரர் பிறந்தனர்.”

“தைத்திரிய பிராமணம் சொல்கிறது, ‘பிராமணசாதியார் தேவர்களிலிருந்து தோன்றியவர்கள்; சூத்திரர்கள் அசுரர்களிடமிருந்து பிறந்தவர்கள்”

மகாபாரத்தில் புரூரவசுக்கும், மத்ரீஸ்வனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை தருகிறார் அம்பேத்கர்:

“புரூரவசு சொன்னான்: பிராமணனும், மற்ற மூவகை வருணத்தாரும் எப்போது படைக்கப்பட்டனர் என்பதை எனக்கு விளக்கியுரைக்க வேண்டும். ………………..
இதற்கு மத்ரீஸ்வன் பதிலுரைத்ததாவது, பிரமாவின் வாயிலிருந்து பிராமணன் படைக்கப்பட்டான்; அவனுடைய கைகளிலிருந்து சத்திரியனும், தொடையிலிருந்து வைசியனும், இந்த மூவகை வருணத்தாருக்கும் தொண்டு புரிவதற்காக பிரமாவின் கால்களிலிருந்து சூத்திரனும் படைக்கப்பட்டனர். பிராமணன் பிறந்தபோதே உலக உயிர்கள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவனாகவும், தர்ம நீதியைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்பவனாகவும் ஆனான்.”
விஷ்ணு புராணம், ஹரிவம்சம், பகவத் புராணம், வாயு புராணம், மனுஸ்மிருதி இவைகளிலும் வருண தர்மத்தை நியாயப்படுத்தும் கதைகளில் உள்ள முரண்பாடுகளை பக்கம் பக்கமாக பட்டியிலிட்டு, இப்படி முடிக்கிறார் டாக்டர் அம்பேத்கர்:

“இந்த விளக்கங்கள் பிறவி மூளைக் கோளாறு உடையவர்களின் உளறல்கள் போலுள்ளன. வருண முறைக்கு ஆதரவான கொள்கை, கோட்பாடுகளை உருவாக்குவதில் பிராமணர்கள் எவ்வளவு சிரமப்பட்டுள்ளனர் என்பதையே இவை காட்டுக்கின்றன.”

amb11

இதுபோக கடவுள்களிலேயே அதி புத்திசாலியான கிருஷணன் பகவத்கீதையில் சதுர் வருணத்தைப் பற்றி எவ்வளவு முட்டாள்த்தனமாக உளறியிருக்கிறான் என்று அம்பலப்பத்துகிறார் அம்பேத்கர். கோபியர் பெண்களை நிர்வாணமாக்கி ரசித்த கிருஷ்ணன், இங்கே டாக்டர் அம்பேத்கரின் வாதத் திறமையின்முன் அம்மணமாக நிற்கிறான்.

“இந்துக்களின் கடவுளான கிருஷ்ணன் தனது கீதையில் தானே சதுர் வருண முறைய ஏற்படுதியதாகவும், மனிதருடைய குண வேறுபாடிற்கேற்ப வருண வேறுபாடு அமைவதாகவும் ஒரு கோட்பாட்டை விளக்கியுரைக்கின்றார். இந்தக் குண வேறுபாட்டுக் கோட்பாடு கபிலரின் சாங்கியத் தத்துவத்திலிருந்து பெறப்பட்டதாகும். ……………………………………………
சாங்கிய தத்துதவம் ஒவ்வொரு சடப்பொருளும் தனக்கென உரிய வகையில் ராஜச, தாமச, சாத்வீகம் என்ற மூவகை குணங்களை பெற்றிருப்பதாக கூறுகிறது என்பதில் ஐயமில்லை. பொருள் எதுவும் சடமாக இருப்பதில்லை. மூன்று குணங்களும் ஒரே அளவான ஆற்றலோடு விளங்கும் போது நிலையற்ற சமநிலையில் இயங்குகிறது.

 ஒரு குணம் மேலோங்கி நிற்கும்போது சமநிலை பாதிக்கப்பட்டு சடப்பொருள் இயக்கம் பெறுகின்றது. குணதர்மம் பற்றிய சாங்கிய கோட்பாட்டைப் பொருத்திக் காட்டி வருண முறைக்கு அறிவியல் பூர்வமானதொரு விளக்கம் தருவதில் கிருஷ்ணன் மிகத் தேர்ந்தவராக தோன்றுகிறார்.

ஆனால் அவ்வாறு கூறுவதில் அவர் தன்னையே முட்டாளாக்கிக் கொண்டுள்ளார். குணங்கள் மூன்றாகவும், வருணங்கள் நான்காகவும் இருப்பதை உணராதவராக உள்ள கிருஷணன், தான் என்னதான் சிறந்த கூர்ந்த மதியுடையவர் என்று கூறிக் கொண்ட போதிலும் மூன்று குணங்களை மட்டுமே வைத்துக் கொண்டு நான்கு வருணங்களுக்கான ஒரு கோட்பாட்டை நிறுவ முடியாது என்பதை உணராதவராகவே இருப்பதைக் காணலாம்.

அறிவார்ந்த விளக்கம் போலத் தோன்றுவதான ஒரு விளக்கம் இங்கு அர்த்தமற்ற, நகைப்பிற்கிடமான விளக்கமாகி விடுவதைக் காணலாம். புதிதொரு புதிரையே உருவாக்கின்றது. சதுர்வருணக் கோட்பாட்டை நியாயப் படுத்துவதற்குப் பிராமணர்கள் இவ்வளவு கடுமையான போரிடுவதேன்?”

தனது பேராற்றலால் தலித் அல்லாத, பார்ப்பனரல்லாத ‘உயர்’ஜாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்களை ‘சூத்திரர்கள்’ என்று கேவலப்படுத்திய தந்திரமிகுந்த பார்ப்பன இந்து தத்துவங்களோடு சண்டையிட்டு,

அவைகளை அம்பலப்படுத்தி, அவர்களின் மானத்தை காப்பற்றிய டாக்டர் அம்பேத்கரைத்தான் அவமானப்படுத்துகிறார்கள், சூத்திரர்கள்.

-தொடரும்

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்………

டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல்

ambedkar12
டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்! -2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3

தொடர்-4

ந்திய மரபில் வேதம் யாராலும் எதிர்க்கப்படாதது. காரணம் அதன் சாரம் அவ்வளவு தர்க்கம் நிறைந்தது. தத்துவ மயமானதுஎன்று பார்ப்பன அறிவாளிகள் குறிப்பிடுகிகறர்கள்.

ஆனால் இந்திய தத்துவ‌ மரபில் வேத எதிர்ப்பு தீவிரமாக இருந்திருக்கிறது. பவுத்தம் மட்டுமல்ல நியாயம், வைசேஷிகம், பூர்வமீம்சை ஆகியவைகளும் இவர்களைப் போலவே சார்வாகர்கள், பிருகஸ்பதி இவர்களும் வேதங்களை கடுமையான விமர்ச்சிதிருக்கிறார்கள் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

சார்வாகர்களின் வேத எதிர்ப்புக்கு டாக்டர் அம்பேத்கர் ஒரு உதாரணத்தை தருகிறார்:

வேதம் மூன்று குறைபாடுகளால் கறைபட்டுள்ளது. உண்மையல்லாதது, தனக்குதானே முரண்படுதல், கூறியது கூறல் என்பவை இந்தக் குறைபாடுகள். மேலும் வேத பண்டிதர் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் ஏமாற்றுக்காரர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அழிப்பவர்களாயிருக்கிறார்கள். கர்ம காண்டத்தின் அதிகாரத்தை ஏற்பவர்கள் ஞான காண்டத்தின் அதிகாரத்தைத் தூக்கியெறிகிறார்கள். ஞான காண்டத்தை ஏற்பவர்கள் கர்ம காண்டத்தை தூக்கியெறிகிறார்கள்

 சார்வாகர்களை விடவும் வேத எதிர்ப்பில், பிருகஸ்பதி ஒரு படி மேலே இருக்கிறார். மாதவ ஆசார்யர் பிருகஸ்பதி குறிப்பிட்டதை மேற்கோளாக காட்டியதை எடுத்து அம்பேத்கர் தருகிறார், இந்த பிரகஸ்பதியின் வாதம் தந்தை பெரியாரின் வாதத்தை ஞாபகம் படுத்துகிறது.

 அக்னிஹோத்திரம், மூன்று வேதங்கள், சன்னியாசியின் திரிதண்டம், சாம்பலைப் பூசிக்கொள்வது இவையெல்லாம் அறிவும் ஆண்மையும் இல்லாதர்களின் வாழ்க்கைகாக செய்யப்பட்டவை. ஜ்யோதிஷ்டமோ சடங்கில் கொல்லப்படும் விலங்கே கூட சுவர்க்கத்துக்குப் போகும் என்றால், வேள்வி செய்பவர் தமது தந்தையை அதில் பலி கொடுக்காதது ஏன்?

சிரார்த்தத்தில் நாம் கொடுக்கும் நிவேதனங்கள் சுவர்க்கத்தில் உள்ளவர்களை மகிழ்விககுமு என்றால் இங்கே வீட்டின் கூரைமேல் நிற்பவர்களுககு உணவைக் கீழேயே ஏன் கொடுக்கக் கூடாது?

உயிர் உள்ளபோது மனிதன் மகிழ்ச்சியாக வாழட்டும்; கடன் பட்டாலும் கூட அவன் நெய்யுணவு உண்ணட்டும்; உடல் சாம்பாலாகிப் போனபின் அது எப்படி மீண்டும் வர முடியும்?

எனவே, பிராமணர்கள் இங்கே ஏற்படுத்தியிருப்பவை வாழ்க்கை நடத்துவதற்கான வழியே.

…………………………………………….

வேதங்களை இயற்றிய மூன்றுபேரும் கோமளிகள், அயோக்கியர்கள், பிசாசுகள்.” இது பிருகஸ்பதி.

இப்படி வேத எதிர்ப்புக்கு இந்திய உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார் டாக்டர் அம்பேத்கர். பார்ப்பனியத்தை வேதத்தை எதிர்த்த தந்தை பெரியாரையும்டாக்டர் அம்பேத்கரையும்பிராமணர்கள் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டவர்கள்என்ற ஒற்றை வாக்கியத்தில் புறம்தள்ளுகிற பார்ப்பனர்கள், பிருகஸ்பதியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லி இருக்கிறார்கள்?

 சொல்லியிருக்கிறார்கள், இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். யாராவது விவகாரமாக கேள்வி கேட்டால், உடனே அவரைவந்தட்டாய்யா..பிருகஸ்பதி” “போய் தொலைஞ்சானா அந்த பிருகஸ்பதிஎன்று கேலி செய்வதுபோல் ஒரு வழக்கத்தை பேச்சில் பரம்பரை பரம்பரையாக கடைப்பிடிப்பதின் மூலம் பிருகஸ்பதியை பழி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

 

***

 வேத காலத்தில் ஆரியர்களிடம் அல்லது இந்துசமூகத்திடம் குடி, சூது, வரைமுறையற்ற பால் உறவு, விபச்சாரம், விவசாய வேலைகளுக்குக்கூட மிச்சம் வைக்காமல் மாமிசத்திற்காக விலங்குகளை யாகத்தில் பலியிட்டு தின்பது என்கிற பழக்கங்கள் ஓங்கி இருந்தது. அதை எதிர்த்துதான் புத்தர்மது குடிப்பது, விபச்சாரம் செய்வது, பிறன் மனை நோக்குவது, விலங்குகளை பலியிடுவது போன்றவற்றை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சாரம் இந்தியா முழுக்க அலையாக அடித்தது. அதன் தாக்கத்தில்தான் தமிழகத்து திருவள்ளுவரும், பிறன்மனை நோக்காமை, கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை போன்றவற்றை எழுதினார். புத்தரின் தாக்கத்தினால்தான், வேதக் கடவுள்களான தேவர்களை திருடர்களோடு ஒப்பிட்டும் எழுதினர் வள்ளுவர்.

 தேவர் அணையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.”

கயவரும் தேவரைப்போல் தாம் விரும்புகின்றவைகளைச் செய்து மனம்போன போக்கில் நடந்தலால், கயவர் தேவரைப் போன்றவர்என்று எழுதினார்.

டாக்டர் அம்பேத்கர் இதை தன் ஆய்வின் மூலமாக நிரூபிக்கிறார்;

 ஆரியர்கள் சூதாடும் இனத்தினர். ஆரிய நாகரிகத்தின மிக ஆரம்ப காலத்திலேயே சூதாட்டம் ஒரு விஞ்ஞானமாகவே வளர்க்கப்பட்டு, அதற்கெனத் தனியாகத் தொழில்நுட்பச் சொற்களை கூட உருவாக்கபட்டிருந்தன. இந்துக்களின் வரலாற்றுக் காலத்தை நான்கு யுகங்களாகப் பிரித்து அவற்றுக்குக் கிரேதா, திரேத, துவாபர, கலி என்று பெயர் வைத்திருந்தார்கள். உண்மையில் இந்தப் பெயர்கள் ஆரியர்கள் சூதாட்டத்தில் பயன்படுத்திய பகடைகளின் பெயர்களாகும். மிக அதிர்ஷ்டமான பகடை கிரேதா என்றும் மிகவும் துரதிர்ஷ்டமான பகடை கலி என்றும் குறிப்பிடப்பட்டது. திரேதா, துவாபர என்பவை இந்த இரண்டுக்கும் இடைப்பட்டவையாகும்.

ராஜ்யங்களும், மனைவியரும் கூடச் சூதாட்டங்களில் பந்தயமாக வைக்கப்பட்டனர். …………………………..

ஆரியர்களிடம் சூதாட்டம் பணக்காரர்களின் விளையாட்டாக இருக்கவில்லை. அது பலரிடமும் உள்ள கெட்ட பழக்கமாகவே இருந்தது. ஆரியர்களிடம் ஆண்பெண் உறவுகள் தளர்த்தியான முறையில் இருந்தன………………………………………

விபச்சாரம் தாராளமாகவும் மிக மோசமான முறையிலும் நடைபெற்று வந்தது. விலங்குகளிடம் உறவு கொள்ளும் வழக்கமும் அவர்களிடம் காணப்பட்டது. இதைச் செய்தவர்களில் மிகவும் மரியாதைக்குரிய ரிஷிகளும் இருந்தார்கள்.

புராதான ஆரியர்கள் குடிகார இனமாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மதத்தில் மது ஒரு இன்றியமையாத பகுதியாக இருந்தது.”

தாந்திரக வழிபாட்டில் முக்கிய அம்சங்களாக ஐந்துமகரங்கள்உள்ளன. இவை வருமாறு:

1. மத்யம் (பல வகையான மது பானங்களை குடித்தல்)

2. மாம்சம் (மாமிசம் உண்ணுதல்)

3. மத்ஸம் (மீனை உண்ணுதல்)

4. முத்ரம் (வறுத்த அல்லது பொரித்த தானியத்தை உண்ணுதல்)

5. மைதுனம் (பால் உறவு)

 ஊதாரித்தனமும் ஒழுக்கக் கேடுமே புராதான இந்துக்களின் முறையாக இருந்திருக்கிறது. இது இப்போது இருப்பது போல் தனிபரின் பழக்கமாக இல்லாமல், மதத்தின் பேரில் ஒட்டு மொத்த சமூகத்தின் பழக்கமாகவே இருந்திருக்கிறது, என்பது வெட்கக் கேடானது.

 இப்படி பின்நவீனத்துவ தத்துவவாதிகளைபோல் வாழ்ந்திருக்கிறார்கள் வேதகாலத்து இந்துக்கள். ஆனால் இன்றுகுடிப்படிதும், கூத்தடிப்பதும் ஒருவர் பலரோடு உறவு வைத்துக் கொள்வதும் நமது பாரம்பரிய இந்து பண்பாட்டுக்கு உகந்ததல்ல.” என்று கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், பொய் சொல்கிறார்கள் ஆர்எஸ்எஸ் போன்ற இந்துமதவெறி அமைப்புகள்.

காதலர் தினம்போன்ற சாதாரண மேற்கத்திய கலாச்சாரத்தைக்கூட இந்து மதத்தின் பேரால் எதிர்ப்பது எவ்வளவு கேலிக்குரியது.

ambedkar2 

ஆம், இந்து மதவெறியர்களின் பாரம்பரியம் எவ்வளவு கேவலமானது என்று அம்பலப்படுத்திய மாமேதை டாக்டர் அம்பேத்கரை இந்து மதவெறியர்கள் எதிர்த்தால் அதில் அர்த்தமிருக்கிறது.

ஆனால் அவர் தாழ்த்தப்படட சமூகத்தைச் சேர்ந்தவர், தாழ்த்தப்பட்ட சமூதாய மக்களுக்காகவும் பாடுபட்டவர், ஏறக்குறைய இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மொழி வேறுபாடின்றி, உட்பிரிவுகள் வேறுபாடின்றி அவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காவும்,

 “இந்த தலித் பசங்க எல்லாம் இன்னைக்கு படிச்சு நம்மள தாண்டி போக பாக்குறான். நமக்கு மேலே வர பாக்குறான் என்றால் அதுக்கு இந்த ஆள்தாண்ட காரணம்” என்கிற தொனியில் உயர்ஜாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களும்’

இந்த ஒரு செயலுக்காக மட்டும் ஒன்று சேர்ந்து, அவரை உதாசினப்படுத்துகிற, அவமானப்படுத்துகிற, புறம் தள்ளுகிற மோசடிபேர்வழிகளை உலகத்தின் மிக மோசமான கெட்டவார்த்தைகளால் திட்டினால் கூட அந்த வார்த்தைகள் கெட்டவார்த்தைகள் அல்ல.

தொடரும்

 தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.

டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம்

al327

டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்! -2

தொடர்-3

‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கலாம், பெண்களையும் அர்ச்சகராக்கலாம், தமிழில் அர்ச்சனை செய்’ என்று தீவிரமாகஉரிமைகள் எழும்போது, ‘அதுக்கூடாது’ என்பதற்கு பார்ப்பனர்கள் சொல்லுகிற காரணம், “இந்து மதம் பழைமையானது. ஆகமங்களும் அப்படியே. அதை மாற்றினால் தெய்வக் குத்தம் ஆகும். கடவுள் செயல்கள் மாறுதலுக்கு உரியவை அல்ல” என்கிறார்கள்.

 டாக்டர் அம்பேத்கர் பார்ப்பனர்களின் இந்த விளக்கத்தை ‘பச்சைப் பொய்’ என்கிறார். ‘இந்து மதத்தில் புதிர்கள்’ என்ற நூலின் முன்னுரையை இப்படி துவங்குகிறர்;

 பிராமணர்கள் ஒரு கருத்தைப் பரப்பி வந்திருக்கிறார்கள். இந்து மதம் சனாதனமானது, அதவாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து. பல அய்ரோப்பிய அறிஞர்களும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இந்து நாகரிகம் மாற்றத்துக்கு உள்ளாகாமல் ஒரே நிலையில் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

இந்தக் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இந்து சமூகம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது மட்டுமின்றி, பல சமயங்களில் இந்த மாற்றம் அடிப்படைக் கூறுகளையே மாற்றுவதாக இருந்தது என்பதையும் இந்தப் புத்தகத்தில் எடுத்துக்காட்ட முயன்றிருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தின் இரண்டாவது நோக்கம், பிராமணர்களின் தந்திரங்களைச் சாதாரண இந்து மக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்து, பிராமணர்கள் எப்படியெல்லாம் தங்களை ஏமாற்றியும் திசை திருப்பியும் வந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்களைச் சுயமாகச் சிந்திக்க தூண்டுவதாகும்.” என்று குறிப்பிடுகிறார்.

 பார்ப்பனர்கள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் நட்டம் என்றால் இந்து மதத்துக்குள் சின்ன மாற்றத்தைக்கூட அனுமதிக்க மாட்டார்கள். லாபம் என்று தெரிந்தால் அவர்கள் எந்த மாற்றத்தையும் செய்து கொள்ள தயங்க மாட்டார்கள், என்பது இன்று மட்டுமல்ல அவர்களின் வேத, புராண, இதிகாச காலங்களில் இருந்தே தெளிவான ஒன்று.

 பார்ப்பனரல்லாதவர்களின் கடவுளாக இருந்த முருகன், லாபம் தருகிற வருமானம் வருகிற கடவுளாக மாறியபின் அதுவரை முருகனை வழிபடாத பார்ப்பனர்கள், ‘சுப்பிரமணிய சுவாமி, கந்தசாமி’ என்று முருகனை பெயர் மாற்றி ‘முருகன் கோயில்களை’ கைப்பற்றினார்கள். (இன்று கூட பார்ப்பனர்கள் ‘முருகன்’ ‘ஆறுமுகம்’ போன்ற பெயர்களை வைத்துக் கொள்ள மாட்டர்கள். ‘சுப்பிரமணிய சுவாமி’, ‘கந்தசாமி’ என்றுதான் வைத்துக் கொள்வார்கள்.)

 சமீப காலத்தில்கூட தாழ்த்தப்பட்ட மக்களின் (அருந்ததியர்கள் மற்றும் பறையர்கள்) பெண்தெய்வங்களான சமயபுரம் மாரியம்மன், திருவேற்காடு கருமாரியம்மன் போன்ற கோயில்களை பார்ப்பனர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள். நாடார்களுக்கு சொந்தமான சில கோயில்களையும் பார்ப்பனர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள் பணக்கார நாடார்கள்.

 60 ஆண்டுகளுக்கு முன் திருச்செந்தூர் முருகன் கோயில் நுழைவு வாயிலில் ‘பள்ளன், பறையன், சாணான், சக்கிலி நுழையத் தடை’ என்று எழுதி வைத்திருந்தார்கள். பெரியார் இயக்கத்தின் போராட்டத்திற்கு பின்னே அது மறைந்தது. (சாணன் என்பது நாடார்களைக் குறிக்கும்.) நாடார்களுக்கு திருமணம் செய்து வைக்கிற புரோகித வேலைக்குப் பார்ப்பனர்கள் வரமாட்டார்கள். ‘அவர்களை கண்டாலே தீட்டு’ என்று ஒருகாலத்தில் பார்ப்பனியம் அவர்களை ஒதுக்கி வைத்தது. ஆனால் இன்று பணக்கார நாடார்களின் திருமணங்கள் பெரும்பாலும் பார்ப்பனப் புரோகிதரைக் கொண்டுதான் நடக்கிறது.

 வருமானம் வரும்போது “லோகம் மாறுதோ இல்லியோ நாமும் மாறிக்க வேண்டியதுதான்” என்று முற்போக்காளர்கள் போல் பேசுகிற பார்ப்பனர்கள், பார்ப்பனியத்திற்கு எதிராக பார்ப்பனரல்லாதவர்களின் உரிமைக்காக கோயில் நுழைவு போராட்டம், தேவராம், திருவாசகம் பாடுவது என்று முயற்சித்தால், ஒரு ரவுடியைப்போல் மிக மோசமாக நடந்துக்கொள்வார்கள்.

 இதுபோன்ற பார்ப்பனர்களின் செயல்களை டாக்டர் அம்பேத்கர் தனக்கே உரிய வீச்சோடு அம்பலப்படுத்துகிறார்;

“எங்கே இந்திரன், எங்கே வருணன், எங்கே பிரமா, எங்கே மித்ரன், வேதங்களில் கூறப்படும் இந்தக் கடவுளர்கள் எல்லோரும் எங்கே என்று அவர்களை (பிராமணர்களை) ஒருவர் கேட்கலாம். அவர்களெல்லாம் மறைந்து போனார்கள். அது ஏன்? இந்திரனையும் வருணைனையும் பிரமாவையும் வழிபடுவது லாபம் தருவதாக இல்லாமல் போனதே இதற்குக் காரணம். பிராமணர்கள் வேதக் கடவுளர்களைக் கைவிட்டது மட்டுமின்றி, சில இடங்களில் முஸ்லீம் பீர்களை வணங்குவோராகக் கூட மாறியிருக்கிறார்கள்.

 இது தொடர்பாக, மிக வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்ற ஒரு உதாரணத்தை குறிப்பிடலாம்.

பம்பாய்க்கு அருகே கல்யாண் என்ற இடத்தில் ஒரு குன்றின் உச்சியில் பாவா மலங்க்ஷா என்ற பீரின் பிரபலமான தர்க்க உள்ளது. அது மிகவும் புகழ்பெற்ற தர்க்கா. அங்கே ஆண்டு தோறும் உர்ஸ விழா நடப்பதும், அப்போது காணிக்கைகள் செலுத்தப்படுவதும் வழக்கம். அந்த தர்க்காவில் புரோகிதராக இருப்பவர் ஒரு பிராமணர்.

 அவர் முஸ்லீம் உடை அணிந்து, தர்க்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்துக்காகச் செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ, பிராமணருக்கு வேண்டியது தட்சணைதான். உண்மையில் பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக்கி விட்டார்கள்.”

டாக்டர் அம்பேத்கர் சொன்னது இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மசூதியிடத்தில் ராமர் பேரில் கோயில் கட்ட முயற்சிப்பதும், இல்லாத பாலத்தை ராமர் பேரில் இருப்பதாக சொல்வதும் மதத்தை வியாபாரமாக மட்டுமில்லாமல், அரசியலாகவும் மாற்றுவதில் வேத காலத்தில் இருந்தே பார்ப்பனியத்தின் சதி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 ***

 இந்து மத்தின் மூடத்தனங்களை, அதன் ஜாதி வெறியை, பெண்ணடிமைத்தனத்தை முற்போக்காளர்கள் நெருக்கிப் பிடித்து கேள்வி கேட்டால், “இந்த சீர்கேடுகள், இடையில் யாராலோ புகுந்தப்பட்டது. வேதகாலத்தில் ஜாதிய வேறுபாடோ, பெண்ணடிமைத்தனமோ கிடையாது” என்று சுப்பிரமணிய பாரதியைப் போல் கதையளப்பார்கள், இந்து மதவெறியர்கள்.

 “வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை

மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே”

 “வேத வுப நிடத மெய்நூல்க ளெல்லாம் போய்

பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே”

 “வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பாளோ பாரததேவி!”

 

என்று வேதத்தை உயர்வாக போற்றி பூரிக்கிற சுப்பிரமணிய பாரதியை போன்ற சுயஜாதி பிரியர்களுக்கு உரைப்பது போல், டாக்டர் அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்;

“பிராமணர்கள் மிகவும் விஷமனத்தனமான ஒரு கருத்தை மக்களிடையே பரப்பியிருக்கிறார்கள். வேதங்கள் பொய்யாதவை. தவறுக்கிடமற்றவை என்பதே இந்தக் கருத்து. இந்துக்களின் அறிவு வளர்ச்சி நின்று விட்டதென்றால், இந்து நாகரிகமும் பண்பாடும் தேக்கமடைந்து முடை நாற்றக் குட்டை ஆகிவிட்டது என்றால் இதுதான் காரணம். இந்தியா முன்னேற வேண்டுமானல் இந்தக் கருத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்க வேண்டும்.

வேதங்கள் உதவாக்கரையான படைப்புகள். அவற்றைப் புனிதமானவை என்றோ பொய்யாதவை என்றோ கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. பிராமணர்கள்தான் அவற்றைப் புனிதம் எனறும் பொய்யாதவை என்றும் போற்றும்படிச் செய்து வைத்திருக்கிறார்கள்.

ஏனென்றால் பிற்காலத்திய இடைச்செருகளான புருஷ சூக்தத்தின் மூலம் வேதங்கள் பிராமணர்களைப் பூமியின் அதிபதிகளாக ஆக்கியுள்ளன. இனக்குழுவின் கடவுளர்களைத் துதித்து, அவர்கள் எதிரிகளை அழித்து, அவர்களின் உடைமைகளைக் கொள்ளைடியத்து, தங்களை வழிபடுவோருக்குக் கொடுக்கும்படிக் கேட்டுக்கொள்ளும் வேண்டுகோள்களைத் தவிர வேறெதும் இல்லாத இந்த உதவாக்கரை நூல்களைப் புனிதமானவை என்றும் பொய்யாதவை என்றும் ஆக்கப்பட்டது ஏன் என்று கேட்பதற்கு யாருக்கும் தைரியம் இல்லாமல் போயிற்று. ஆனால் பிராமணர்கள் பரப்பியுள்ள இந்த விவேகமற்ற கருத்தின் பிடியில் இருந்து இந்து மனத்தை விடுவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

இந்த விடுதலை ஏற்படாமல் இந்தியாவிற்கு வருங்காலம் இல்லை. இதில் உள்ள அபாயத்தை நன்றாக அறிந்தே இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். விளைவுகளுக்கு நான் அஞ்சவில்லை. மக்களைத் தட்டி எழுப்பி விடுவதில் நான் வெற்றி பெற்றால் பெரிதும் மகிழ்வேன்”

 என்று குறிப்பிடுகிறார்.

 

ambedkar1

 

 மாக்ஸ் முல்லர் போன்ற ஜெர்மானியர்களும் இன்னும் சில வெள்ளைக்காரர்களும், (திருவண்ணாமலையில் சுத்திக்கிட்டிருக்காங்களே அது மாதிரி ஆளுஙக) வேதங்களை உயர்வாக மதிப்பிட்டு உலகம் முழுக்க பரப்பியபோது அதை உடைத்து இந்து மதத்தை, பார்ப்பனியத்தை, வேதங்களை, உபநிடதங்களை, புராணங்களை, இதிகாசங்களை மிகத் துல்லியமாக, வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி கேள்வி கேட்டு அதை அம்பலப்படுத்தியிருக்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

 இவைகளைப் பற்றியான டாக்டர் அம்பேத்கரின் ஆய்வு உலகத் தரம் வாய்ந்தது. அதனால்தான் யாரையும் தனக்கு தலைவர் என்று அறிவிக்காத சுயம்பு சிந்தனையாளரான தந்தை பெரியார், ‘என் தலைவர்’ என்று டாக்டர் அம்பேத்கரை மட்டும் குறிப்பிட்டார்.

 இவ்வளவு பெரிய தலைவரை, உலகம் வியக்கும் அறிஞரை பார்ப்பனர்கள் மட்டும் அவமதித்தால் அதில் அர்த்தம் இருக்கறது! ஆனால், தலித் மக்கள் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்ட தலித் அல்லாத எல்லா ஜாதியை சேர்ந்தவர்களும் சில நேரங்களல் இஸ்லாமியர்களும், ‘முற்போக்காளர்களும்’ கூட ஏதோ ஒருவகையில் அவமதிக்கிறார்கள்.

 டாக்டர் அம்பேத்கரை தலித் தலைவராக மட்டும் சித்தரிப்பவர்களை, அவர் சிலையை சேதப்படுத்துபவர்களை, அவர் சிலைக்கு மாலையிடுவதை கேலி செய்பவர்களை, அவர் பெயரை புறக்கணிப்பவர்களை & முட்டாள்கள், அயோக்கியர்கள், ஜாதி வெறியர்கள், சமூக விரோதிகள், மத வெறியர்கள், மனித தன்மையற்றவர்கள், தலித் விரோதிகள், காழ்ப்புணர்ச்சிக் கொண்டவர்கள் என்று நீங்கள் இந்த வார்த்தைகளில் எந்த வார்த்தைக் கொண்டு முடிவு செய்தாலும், அல்லது இதை விட கடுமையான வார்த்தைகளால் திட்டினாலும் அது தவறான முடிவல்ல. செயலல்ல.

 -தொடரும்

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.

பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!

al198

டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’

தொடர் – 2

பிற்படுத்தப்பட்ட ஜாதிகள், `உயர்`ஜாதிகள் அல்லது தலித் அல்லாத ஜாதிகளுக்குள் எந்த ஒற்றுமையும் இல்லை. அவர்களுக்குள் எந்த வகையான கொடுக்கல் வாங்கல் கிடையாது. வழிபாட்டு முறையில் கூட ஜாதிக்கொரு தெய்வம். ஜாதிக்கொரு பழக்கம்தான் இருக்கிறது.

பார்ப்பனரல்லாத `உயர்`ஜாதிகள்  மத்தியில் ‘வன்னியர், கள்ளர்’ ஜாதி மக்களை இழிவானவர்களாக, தங்களை விட மட்டமானவர்களாக நினைக்கிற மனோபாவம் இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கிற ‘பறையன்’ என்ற சொல்லை தங்கள் ஜாதிக்குள் ஒருவரை மட்டுப்படுத்தி பேசிக் கொள்ளும்போதுது ஜாதி இந்துக்கள் “போடா பறையா” “பறைச்சி மாதிரி” என்று பேசிக் கொள்வதுதைப்போல், இந்த `உயர்`ஜாதிக்காரர்கள், ‘கள்ளர்-வன்னியர்’ ஜாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களை ‘தொடுகிற பறையர்’ என்று தங்களுக்குள் பேசிக் கொள்வது வழக்கம்.

தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிற, ஜாதிரீதியாக மட்டமாக நினைக்கிற `உயர்`ஜாதிகளை எதிர்த்து நிற்காத இவ்விரு சமூகத்தாரும், தங்கள் வாழ்க்கையில் எந்த வகையிலும் குறுக்கீடு செய்யாத, தன்னைவிட மட்டமானவர்களாக நினைக்காத தாழ்த்தப்பட்ட மக்களின் மீதுதான் வன்முறையை நிகழ்த்தியிருக்கிறார்கள், என்று கடந்த கால கணக்கு சொல்கிறது.

தமிழகத்து வட மாவட்டங்களில், பெரும்பாலும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும், தென்மாவட்டங்களில் பெரும்பாலும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பெருமளவில் வன்முறையை நிகழ்த்துகிறார்கள். இதற்காக மற்ற ஜாதிகள் தலித் ஆதரவு நிலையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல. இந்த ஒரு விசயத்தில் மட்டும் இவர்களுக்கு பல வகையிலும் `உயர்`ஜாதிக்காரர்கள் உதவியாக இருக்கிறார்கள்.

தலித் அல்லாத ஜாதிகளுக்குள்ளான ஒரே ஒற்றுமை, தலித் விரோதத்தில் மட்டும்தான் இருக்கிறது. இதில் எந்த ஒரு தலித் அல்லாத ஜாதியும் விதிவிலக்கல்ல.

இதுபோலவே தலித் உட்பிரிவு ஜாதிகளுக்குள் தலித் மக்களாலேயும், ஜாதி இந்துக்களாலும் ஒருசேர அதிக ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறவர்கள் அருந்ததிய மக்களே. இந்து அல்லது இந்திய சமூக அமைப்பில் அடித்தாலும் கேட்பதற்கு ஆளில்லாத அளவிற்கு (எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால், இவர்களை ஒரு வாக்கு வங்கியாகக்கூட அரசியல் கட்சிகள் நினைப்பதில்லை) மிக பரிதாபகரமான நிலையில் இருப்பது அருந்ததிய மக்களே.

பார்ப்பானுக்கு மேல் ஜாதி இல்லை. அருந்ததியர்களுக்குக் கீழ் வேறு ஜாதியில்லை. இதுதான் இந்து ஜாதிய அடுக்குமுறை.

ஜாதிரீதியாக எல்லோரையும்விட தன்னை உயர்வானவர்களாகவும், மற்றவர்களை தாழ்ந்தவர்களாகவும் நினைக்கிற பார்ப்பனர் போன்ற உயர்ஜாதிக்கார்களுக்கு எப்போதும் பிறஜாதிக்கார்களால் எந்தப் பிரச்சினையும் நேர்ந்ததில்லை. சமூக மரியாதையும் குறைந்ததில்லை. பார்ப்பன எதிர்ப்பை தீவிரமாக கடைப்பிடித்த பெரியார் இயக்கத்தவர்கள் கூட தனிப்பட்ட முறையில் பார்ப்பனர்களிடம் மிகுந்த கண்ணியமாகத்தான் நடந்திருக்கிறார்கள்.

(ஜெயேந்திரன், சந்திரசேகரன் போன்ற சங்கராச்சாரியார்கள்தான் பார்ப்பன பெண்களிடமே கண்ணியக் குறைவாக நடந்திருக்கிறார்கள்.)

ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஜாதிரீதியாக சமூக இழிவு மட்டும் அல்லாது, பிற்படுத்தப்பட்ட ஜாதி வெறியர்களால் மிகக் கொடுமையான ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.

‘உலகில் எந்த நாட்டிலும் இல்லாத, பாராம்பரியமிக்க புனிதமான கலாச்சாரம் நம் நாட்டுக்கு மட்டுமே உரியது’ என்று பீற்றிக் கொள்கிறார்களே, அந்த பாரம்பரியமிக்க புனிதம் மேற்சொன்ன இந்த மானக்கெட்டத்தனம்தான்.

மேற்கண்ட இந்த மானக்கெட்டத்தனத்தை இந்திய வரலாற்றில் அவ்வப்போது, பலர் விமர்சித்திருக்கிறார்கள். அந்த விமர்சனங்கள் ‘பார்ப்பன எதிர்ப்பு இந்து மதஆதரவு அல்லது இந்து மத எதிர்ப்பு பார்ப்பன ஆதரவு’ என்று தெளிவற்ற நிலையில் ஏதோ ஓரு வகையில் இந்து அல்லது பார்ப்பன அமைப்புகளோடு சமரசமாகி சுழன்று கொண்டிருந்தது.

ஆனால் இதை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று யாரும் முயற்சித்ததில்லை. இதை முற்றிலுமாக மாற்றுவதற்கு முயற்சித்து அதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றி பெற்றவர்கள் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் மட்டும்தான்.

அதனால்தான் டாக்டர் அம்பேத்கர் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக பரிந்து 1946ஆம் ஆண்டு ”சூத்திரர்கள் -யார்? அவர்கள் எவ்வாறு இந்தோ -ஆரிய சமுதாயத்தில் நான்காவது வருணத்தினராக ஆயினர்?” என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஓதுக்கீட்டை, அரசியல் சட்டத்தில் உறுதியாக்கி சட்டம் இயற்றினார்.

அவர் இயற்றிய சடத்தின் மூலம் வேலை வாய்ப்பைப் பெற்ற பிற்படுத்தப்பட்டவர்கள், அம்பேத்கர் பெயரை கூட குறிப்பிடாமல் ‘பிற்படுத்தப்பட்டோர் அரசு ஊழியர் சங்கம்’ என்று போஸ்டர் அடிக்கிறார்கள். அவர் சிலை ஊருக்குள் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சட்டக் கல்லூரிக்கு அவர் பெயர் வைக்கப்பட்டிருப்பதை மாற்றச் சொல்லி வலியுறுத்துகிறார்கள்.

அம்பேத்கரை புறக்கணிக்கிற, பார்ப்பனரில் இருந்து தலித் அல்லாத ஜாதிகள் வரை, அவர் எழுதிய இந்திய அரசியல் சட்டத்தைதான் கரைத்துக்குடித்து, பட்டம் பெற்று, கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் தங்களை சட்ட மேதைகளாக காட்டிக் கொண்டு லட்ச லட்சமாய் சம்பாதிக்கிறார்கள்.

அம்பேத்கர் எழுதிய சட்டம் வேண்டும். ஆனால் அவர் வேண்டாம் என்றால் இது என்ன யோக்கியதை?

சரியாகவோ-தவறாகவோ கூட, இந்தியாவிற்கு என்று ஒரு அரசியல் சட்டத்தை எழுத வக்கற்ற இவர்கள் உயர்ஜாதிக்கார்கள்.

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் தாழ்ந்த ஜாதிக்காரரா?

ஆக, சென்னை சட்டக் கல்லூரி மட்டுமல்ல இந்தியாவில் இருக்கிற அனைத்து சட்டக் கல்லூரிகளும் டாக்டர் அம்பேத்கர் பெயரில் இருப்பதுதான் முறையானது. சரியானது.

b15

‘இந்தியா முழுக்க உள்ள கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை விட பிறப்பால் நான் உயர்ந்தவன்’ என்று ஒவ்வொரு ஜாதி இந்துவும் நினைக்கிறான்.

அரசியல் சட்டத்தை எழுதியதன் மூலம், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஜாதி இந்துக்களைவிட, இன்னும் நெருக்கி சொன்னால் ‘அனைத்து ஜாதி இந்துக்களைவிட ஒரு தாழ்த்தப்பட்டவர் உயர்ந்தவர்’ என்று டாக்டர் அம்பேத்கர் நிரூபித்திருக்கிறார்.

‘ஒரு ஜாதி இந்து பிறப்பால் தாழ்த்தப்பட்டவர்களைவிட உயர்ந்தவன் என்பது’ மூடத்தனம் நிறைந்த இந்துமதத்தின் சதி. இது ஜாதி இந்துவிற்கு சிறுமை, அவமானம்.

‘ஒரு தாழ்த்தப்பட்டவர் ஒட்டு மொத்த ஜாதி இந்துவைவிட உயர்ந்தவன்’ என்று டாக்டர் அம்பேத்கர் நிரூபித்திருப்பது பெருமை, அறிவாயுதம்.

****

ருதார மணம், விவாகரத்து உரிமை, ஜீவனாம்சம், மறுமணம், விதவை மறுமணம், சொத்தில் உரிமை, வன்கொடுமைகளுக்கு எதிரான, பால்ய விவாகத்திற்கு எதிரான, வரதட்சணை கொடுமைகளுக்கு எதிரான தண்டனை போன்றவைகள் டாக்டர் அம்பேத்கரால் சட்டம் ஆக்கப் பட்டிருக்கிறது. இவைகளை சட்டமாக்குவதற்கு டாக்டர் அம்பேத்கர் பட்ட அவமானங்கள் அதிகம்.

பார்ப்பனர்களும், பண்ணையாளர்களும், அதிகார வர்க்கதில் உள்ளவர்களின் எதிர்ப்பும், இந்து மசோதா பொறுக்குக் குழுவில் இடம் பெற்ற அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எல். அனந்தசயனம் அய்யங்கார் போன்ற உறுப்பினர்களின் துரோகமும், டாக்டர் அம்பேத்கரை குத்திக் கிழித்தன. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்குக் கூட அவர் இவ்வளவு சிரமமப் படவில்லை.

இதைக் குறித்து டாக்டர் அம்பேத்ரே சொல்கிறார்:

“இந்து சட்டத் தொகுப்பு ஈடுஇணையற்றது; கடந்த காலத்தில் இந்திய சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட எந்த சட்டமும் அல்லது இனி நிறைவேற்றப்படவிருக்கும் எந்த சட்டமும் முக்கியத்துவத்தில் இதற்கு (இந்து சட்டத் தொகுப்பு) இணையாக முடியாது.

இந்து சமூதாயத்தைப் பீடித்துள்ள வர்க்கத்துக்கும் வர்க்கத்துக்கும் இடையேயும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயும் நிலவிவரும் ஏற்றத்தாழவைப் பற்றிக் கவலைப்படாமல் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து மேலும் மேலும் சட்டங்களை இயற்றிக் கொண்டு செல்லுவது நமது அரசியில் சாசனத்தையே கேலிக்கூத்தாக்குவதாகும்; சாணக் குவியல் மீது மாடமாளிகையைக் கட்டியெழுப்புவது போன்றதாகும்”

இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு மட்டும் என்று இதை சட்டமாக்கவில்லை. ஒட்டு மொத்த இந்து பெண்களுக்காவும் சட்டமாக்கியிருக்கிறார். இன்னும் சரியாக சொன்னால், இன்று இந்த சட்டத்தின் மூலம் பெரும் பயன்அடைபவர்களும், பாதுக்காப்பாக இருப்பவர்களும் பார்ப்பனப் பெண்கள்தான். பார்ப்பன ஆண்களிடம் இருந்தும், பார்ப்பனரல்லாத ஆண்களிடம் இருந்தும் (திருமண வன்முறைகள்) பார்ப்பனப் பெண்களை பாதுகாப்பது டாக்டர் அம்பேத்கரே.

al116

ஆனால், இதை எத்தனை பார்ப்பனப் பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள். பெண் உரிமை பேசுகிற பார்ப்பனப் பெண்கள் கூட சங்கராச்சாரியர்களின் இன்டலக்சுவல் வடிவமான சுப்பிரமணிய பாரதியைத்தான் சிலாகிக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் பெயரை வாய் தவறிகூட குறிப்பிடுவதில்லை. ஆணாதிக்கத்தை எதிர்க்க தெரிந்திருக்கிற பார்ப்பனப் பெண்கள், பெண்களை கேவலப்படுத்துகிற பார்ப்பன ஆதிக்கத்தை, இந்து மதத்தை எதிர்ப்பதில்லை. அப்படி ஒன்றை அவர்கள் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.

இந்திய சூழலில் பார்ப்பன ஆதிக்கத்தையும், இந்து மத சகதியையும் புரிந்து கொண்டால்தான் அவர்கள் ஆணாதிக்கத்தையும் புரிந்து கொள்ளமுடியும். இந்தமூன்றுமுடிச்சு`க்குள்தான் இருக்கிறது இந்து பெண்களின் அடிமைத்தனம். இந்த புரிதல் வந்தால்தான், அவர்கள் பெண்களுக்காக சட்டம் இயற்றிய டாக்டர் அம்பேக்கரையும், பெண் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்த தந்தை பெரியாரையும் புரிந்து கொள்ளமுடியும்.

ஆனால் இன்றைய நடைமுறையில் பார்ப்பனப் பெண்கள், பெண்களுக்கு எதிரான கருத்துக் கொண்ட, பெண்களை கேவலமாக கருதுகிற ஜாதிவெறியன் சந்திரசேகரன், காமுகன் ஜெயேந்திரன் படங்களைதான் தங்கள் பூஜை அறையில் வைத்து பூஜிக்கிறார்கள்.

அம்பேத்கரையும் பெரியாரையும் அறிவாளிகளாக அல்ல, மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை.

அதனால் பார்ப்பனப் பெண்கள் தங்கள் வீடுகளில் விரும்பி மாட்டி வைக்க வேண்டிய படம் அண்ணல் அம்பேத்கர் படமும், தந்தை பெரியார் படமும்தான். இவர்கள் இருவரால்தான் அவர்கள் இன்று சமூகத்தில் மரியாதையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

-தொடரும்

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்?

குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்…..