டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல்

ambedkar12
டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்! -2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3

தொடர்-4

ந்திய மரபில் வேதம் யாராலும் எதிர்க்கப்படாதது. காரணம் அதன் சாரம் அவ்வளவு தர்க்கம் நிறைந்தது. தத்துவ மயமானதுஎன்று பார்ப்பன அறிவாளிகள் குறிப்பிடுகிகறர்கள்.

ஆனால் இந்திய தத்துவ‌ மரபில் வேத எதிர்ப்பு தீவிரமாக இருந்திருக்கிறது. பவுத்தம் மட்டுமல்ல நியாயம், வைசேஷிகம், பூர்வமீம்சை ஆகியவைகளும் இவர்களைப் போலவே சார்வாகர்கள், பிருகஸ்பதி இவர்களும் வேதங்களை கடுமையான விமர்ச்சிதிருக்கிறார்கள் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

சார்வாகர்களின் வேத எதிர்ப்புக்கு டாக்டர் அம்பேத்கர் ஒரு உதாரணத்தை தருகிறார்:

வேதம் மூன்று குறைபாடுகளால் கறைபட்டுள்ளது. உண்மையல்லாதது, தனக்குதானே முரண்படுதல், கூறியது கூறல் என்பவை இந்தக் குறைபாடுகள். மேலும் வேத பண்டிதர் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் ஏமாற்றுக்காரர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அழிப்பவர்களாயிருக்கிறார்கள். கர்ம காண்டத்தின் அதிகாரத்தை ஏற்பவர்கள் ஞான காண்டத்தின் அதிகாரத்தைத் தூக்கியெறிகிறார்கள். ஞான காண்டத்தை ஏற்பவர்கள் கர்ம காண்டத்தை தூக்கியெறிகிறார்கள்

 சார்வாகர்களை விடவும் வேத எதிர்ப்பில், பிருகஸ்பதி ஒரு படி மேலே இருக்கிறார். மாதவ ஆசார்யர் பிருகஸ்பதி குறிப்பிட்டதை மேற்கோளாக காட்டியதை எடுத்து அம்பேத்கர் தருகிறார், இந்த பிரகஸ்பதியின் வாதம் தந்தை பெரியாரின் வாதத்தை ஞாபகம் படுத்துகிறது.

 அக்னிஹோத்திரம், மூன்று வேதங்கள், சன்னியாசியின் திரிதண்டம், சாம்பலைப் பூசிக்கொள்வது இவையெல்லாம் அறிவும் ஆண்மையும் இல்லாதர்களின் வாழ்க்கைகாக செய்யப்பட்டவை. ஜ்யோதிஷ்டமோ சடங்கில் கொல்லப்படும் விலங்கே கூட சுவர்க்கத்துக்குப் போகும் என்றால், வேள்வி செய்பவர் தமது தந்தையை அதில் பலி கொடுக்காதது ஏன்?

சிரார்த்தத்தில் நாம் கொடுக்கும் நிவேதனங்கள் சுவர்க்கத்தில் உள்ளவர்களை மகிழ்விககுமு என்றால் இங்கே வீட்டின் கூரைமேல் நிற்பவர்களுககு உணவைக் கீழேயே ஏன் கொடுக்கக் கூடாது?

உயிர் உள்ளபோது மனிதன் மகிழ்ச்சியாக வாழட்டும்; கடன் பட்டாலும் கூட அவன் நெய்யுணவு உண்ணட்டும்; உடல் சாம்பாலாகிப் போனபின் அது எப்படி மீண்டும் வர முடியும்?

எனவே, பிராமணர்கள் இங்கே ஏற்படுத்தியிருப்பவை வாழ்க்கை நடத்துவதற்கான வழியே.

…………………………………………….

வேதங்களை இயற்றிய மூன்றுபேரும் கோமளிகள், அயோக்கியர்கள், பிசாசுகள்.” இது பிருகஸ்பதி.

இப்படி வேத எதிர்ப்புக்கு இந்திய உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார் டாக்டர் அம்பேத்கர். பார்ப்பனியத்தை வேதத்தை எதிர்த்த தந்தை பெரியாரையும்டாக்டர் அம்பேத்கரையும்பிராமணர்கள் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டவர்கள்என்ற ஒற்றை வாக்கியத்தில் புறம்தள்ளுகிற பார்ப்பனர்கள், பிருகஸ்பதியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லி இருக்கிறார்கள்?

 சொல்லியிருக்கிறார்கள், இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். யாராவது விவகாரமாக கேள்வி கேட்டால், உடனே அவரைவந்தட்டாய்யா..பிருகஸ்பதி” “போய் தொலைஞ்சானா அந்த பிருகஸ்பதிஎன்று கேலி செய்வதுபோல் ஒரு வழக்கத்தை பேச்சில் பரம்பரை பரம்பரையாக கடைப்பிடிப்பதின் மூலம் பிருகஸ்பதியை பழி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

 

***

 வேத காலத்தில் ஆரியர்களிடம் அல்லது இந்துசமூகத்திடம் குடி, சூது, வரைமுறையற்ற பால் உறவு, விபச்சாரம், விவசாய வேலைகளுக்குக்கூட மிச்சம் வைக்காமல் மாமிசத்திற்காக விலங்குகளை யாகத்தில் பலியிட்டு தின்பது என்கிற பழக்கங்கள் ஓங்கி இருந்தது. அதை எதிர்த்துதான் புத்தர்மது குடிப்பது, விபச்சாரம் செய்வது, பிறன் மனை நோக்குவது, விலங்குகளை பலியிடுவது போன்றவற்றை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சாரம் இந்தியா முழுக்க அலையாக அடித்தது. அதன் தாக்கத்தில்தான் தமிழகத்து திருவள்ளுவரும், பிறன்மனை நோக்காமை, கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை போன்றவற்றை எழுதினார். புத்தரின் தாக்கத்தினால்தான், வேதக் கடவுள்களான தேவர்களை திருடர்களோடு ஒப்பிட்டும் எழுதினர் வள்ளுவர்.

 தேவர் அணையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.”

கயவரும் தேவரைப்போல் தாம் விரும்புகின்றவைகளைச் செய்து மனம்போன போக்கில் நடந்தலால், கயவர் தேவரைப் போன்றவர்என்று எழுதினார்.

டாக்டர் அம்பேத்கர் இதை தன் ஆய்வின் மூலமாக நிரூபிக்கிறார்;

 ஆரியர்கள் சூதாடும் இனத்தினர். ஆரிய நாகரிகத்தின மிக ஆரம்ப காலத்திலேயே சூதாட்டம் ஒரு விஞ்ஞானமாகவே வளர்க்கப்பட்டு, அதற்கெனத் தனியாகத் தொழில்நுட்பச் சொற்களை கூட உருவாக்கபட்டிருந்தன. இந்துக்களின் வரலாற்றுக் காலத்தை நான்கு யுகங்களாகப் பிரித்து அவற்றுக்குக் கிரேதா, திரேத, துவாபர, கலி என்று பெயர் வைத்திருந்தார்கள். உண்மையில் இந்தப் பெயர்கள் ஆரியர்கள் சூதாட்டத்தில் பயன்படுத்திய பகடைகளின் பெயர்களாகும். மிக அதிர்ஷ்டமான பகடை கிரேதா என்றும் மிகவும் துரதிர்ஷ்டமான பகடை கலி என்றும் குறிப்பிடப்பட்டது. திரேதா, துவாபர என்பவை இந்த இரண்டுக்கும் இடைப்பட்டவையாகும்.

ராஜ்யங்களும், மனைவியரும் கூடச் சூதாட்டங்களில் பந்தயமாக வைக்கப்பட்டனர். …………………………..

ஆரியர்களிடம் சூதாட்டம் பணக்காரர்களின் விளையாட்டாக இருக்கவில்லை. அது பலரிடமும் உள்ள கெட்ட பழக்கமாகவே இருந்தது. ஆரியர்களிடம் ஆண்பெண் உறவுகள் தளர்த்தியான முறையில் இருந்தன………………………………………

விபச்சாரம் தாராளமாகவும் மிக மோசமான முறையிலும் நடைபெற்று வந்தது. விலங்குகளிடம் உறவு கொள்ளும் வழக்கமும் அவர்களிடம் காணப்பட்டது. இதைச் செய்தவர்களில் மிகவும் மரியாதைக்குரிய ரிஷிகளும் இருந்தார்கள்.

புராதான ஆரியர்கள் குடிகார இனமாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மதத்தில் மது ஒரு இன்றியமையாத பகுதியாக இருந்தது.”

தாந்திரக வழிபாட்டில் முக்கிய அம்சங்களாக ஐந்துமகரங்கள்உள்ளன. இவை வருமாறு:

1. மத்யம் (பல வகையான மது பானங்களை குடித்தல்)

2. மாம்சம் (மாமிசம் உண்ணுதல்)

3. மத்ஸம் (மீனை உண்ணுதல்)

4. முத்ரம் (வறுத்த அல்லது பொரித்த தானியத்தை உண்ணுதல்)

5. மைதுனம் (பால் உறவு)

 ஊதாரித்தனமும் ஒழுக்கக் கேடுமே புராதான இந்துக்களின் முறையாக இருந்திருக்கிறது. இது இப்போது இருப்பது போல் தனிபரின் பழக்கமாக இல்லாமல், மதத்தின் பேரில் ஒட்டு மொத்த சமூகத்தின் பழக்கமாகவே இருந்திருக்கிறது, என்பது வெட்கக் கேடானது.

 இப்படி பின்நவீனத்துவ தத்துவவாதிகளைபோல் வாழ்ந்திருக்கிறார்கள் வேதகாலத்து இந்துக்கள். ஆனால் இன்றுகுடிப்படிதும், கூத்தடிப்பதும் ஒருவர் பலரோடு உறவு வைத்துக் கொள்வதும் நமது பாரம்பரிய இந்து பண்பாட்டுக்கு உகந்ததல்ல.” என்று கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், பொய் சொல்கிறார்கள் ஆர்எஸ்எஸ் போன்ற இந்துமதவெறி அமைப்புகள்.

காதலர் தினம்போன்ற சாதாரண மேற்கத்திய கலாச்சாரத்தைக்கூட இந்து மதத்தின் பேரால் எதிர்ப்பது எவ்வளவு கேலிக்குரியது.

ambedkar2 

ஆம், இந்து மதவெறியர்களின் பாரம்பரியம் எவ்வளவு கேவலமானது என்று அம்பலப்படுத்திய மாமேதை டாக்டர் அம்பேத்கரை இந்து மதவெறியர்கள் எதிர்த்தால் அதில் அர்த்தமிருக்கிறது.

ஆனால் அவர் தாழ்த்தப்படட சமூகத்தைச் சேர்ந்தவர், தாழ்த்தப்பட்ட சமூதாய மக்களுக்காகவும் பாடுபட்டவர், ஏறக்குறைய இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மொழி வேறுபாடின்றி, உட்பிரிவுகள் வேறுபாடின்றி அவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காவும்,

 “இந்த தலித் பசங்க எல்லாம் இன்னைக்கு படிச்சு நம்மள தாண்டி போக பாக்குறான். நமக்கு மேலே வர பாக்குறான் என்றால் அதுக்கு இந்த ஆள்தாண்ட காரணம்” என்கிற தொனியில் உயர்ஜாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களும்’

இந்த ஒரு செயலுக்காக மட்டும் ஒன்று சேர்ந்து, அவரை உதாசினப்படுத்துகிற, அவமானப்படுத்துகிற, புறம் தள்ளுகிற மோசடிபேர்வழிகளை உலகத்தின் மிக மோசமான கெட்டவார்த்தைகளால் திட்டினால் கூட அந்த வார்த்தைகள் கெட்டவார்த்தைகள் அல்ல.

தொடரும்

 தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.

15 thoughts on “டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல்

  1. ஒருவர் தன்னை உயர்ஜாதிக்காரன் என்று சொல்லும்போதே அவன் ஒரு முற்போக்காளனாக இருக்க முடியாது. நிச்சயமாக அவன் ஒரு கழிசடை தான்.
    மேலும் இன்றுல்ல அரசியல் தலைவர்களும் இப்படித்தான் இருக்கின்றனர். தேவர் பிறந்த நாளன்று, தேவர் சிலைக்கு மாலையிடும் இவர்கள் அம்பேத்கர் நினைவு தினத்தன்று ஒரு அறிக்கை கூட வெளியிடாதது ஏன்?
    சாதி தலைவரான தேவரை தேசிய தலைவராக மதிக்கும் இவர்கள்
    தேசிய தலைவரான அம்பேத்கரை புறந்தள்ளியதன் காரணம் சுயநலம் மட்டுமே
    ஆகவே சுயநலம் ஒழித்து மனித நேயம் வளர்க்க முயற்ச்சிப்போம்.
    அம்பேத்கர் வழி நடப்போம்.

  2. ஆரியப் பார்ப்பனர்கள் பற்றி அம்பேத்கரின் ஆய்வைப் படிக்கையில் இவ்வளவு கேடு கெட்ட குணநலனைக் கொண்ட பார்ப்பனர்களிடம் இன்னும் ஏமாறுபவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. அதைவிட பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் அதிமேதாவிகளை நினைக்கும்போது வெட்கமாகக் கூட இருக்கிறது.

    நீங்கள் எழுதும் இதொடர் இந்நிலைகளை மாற்றினால் நன்றாக இருக்கும்.

    உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்.

    நன்றி.

  3. //தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்?//

    சாதியின் பெயரால் ஏற்படும் விபரீதங்களுக்கு அண்ணன் மதிமாறன் அவர்களின் அருமையான யோசனை.ஏன் அனைவரும் அம்பேத்கரை ஒரு சாதி கட்சி தலைவராக மட்டும் பார்கிறார்கள்? அந்த அந்நிய தனத்தை ஒழிக்கும் விதமாக குறிப்பாக தலித் அல்லாதவர்கள் அம்பேத்கர் T ஷர்ட் அணிய வேண்டும்.அம்பேத்கரும் ஒரு தேசிய தலைவர் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.
    இதை நடைமுறை படுத்துவதை, இளைஞர்களிடம் முதலில் T ஷர்ட் அணிவதன் மூலம் ஏற்படுத்தலாம்.அணிவதற்கு அழகான டிசைன் இருந்தால் நம் இளைஞரிடம் நல்ல வரவேற்பிருக்கும். அணியும்போது casual டிரஸ் என்று சே T ஷர்ட் அணிவது போல்,casulaaga அணிவதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். தோழருக்கு வேண்டுகோள் என் பெயரையும் முன் பதிவு செய்து கொள்க…

    தோழமையுடன்,
    உங்களின் தோழன்..

  4. நாங்கள் அறியாத பல உண்மைகளை தெரியப்படுத்தும் உங்கள் எழுத்துக்கள் இன்னும் தொடரட்டும். உண்மை ஜெயிக்கட்டும். வாழ்த்துக்கள்

  5. அட அட இந்து மதம் ஒரு சல்சா மதம் போலே இருக்கு
    அபோ அவங்க நல்ல என்ஜாய் பண்ணி இருபாங்க…

    நாங்கள் அறியாத பல உண்மைகளை தெரியப்படுத்தும் உங்கள் எழுத்துக்கள் இன்னும் தொடரட்டும். உண்மை ஜெயிக்கட்டும். வாழ்த்துக்கள்

  6. Let me deviate from the main argument to throw light on some other thing.

    Before Nalandha University, Kanchi was the centre of learning in Indus & Bharatha land. Before Kanchi, Madurai was centre of Knowledge. Even before Buddha, there were schools of thought in Tamil land. One such & one that was obliterated was Aaseevaham! We have plenty of proofs for the same.

    Hence, it is not right to say that Buddha alone was inspiration for Thiruvalluvar.
    Many a religions are taking credit for Valluvar. Yet, he is not fitting in any of them. He had quite a diffferent ideas from those of Saiva, Vainava, Jaina, Bddha & Christian schools of thougt.

    His ideas were the essence of very ancient southern culture, the cradle of human civilization.

  7. A Neglected Message From Dr. Ambedkar TO OBCs

    Dr. K. Jamanadas,

    An article was published recently in Marathi local magazine by Suhas Sonwane based on daily Loksatta. The following is a gist of it, translated from Marathi.

    Mr. Babasaheb Gawande, the founder president of an Organization of Marathas from Bombay called “Maratha Mandir” was a close friend of Dr. Ambedkar. Mr. Gawande asked Dr. Ambedkar, who was then a Law Minister in Nehru Cabinet in 1947, for a message for the Maratha people to be published in the Souvenir of “Maratha Mandir”. Ambedkar declined saying that he had no relation with the Organization or the Marathas, but on persistent insistence, a message was given and published in the souvenir on 23rd March 1947. But unfortunately that special issue is not available in the office of the Organization today. But it was made available by Shri Vijay Survade recently and was undocumented till now.

    Dr. Ambedkar said:

    “This principle will apply not only to Marathas but all Backward Castes. If they do not wish to be under the thumb of others they should concentrate on two things, one is politics and the other is education.”

    “One thing I like to impress on you is that the community can live in peace only when it has enough moral but indirect pressure over the rulers. Even if a community is numerically weak, it can keep its pressure over the rulers and create its dominance as is seen by the example of status of present day Brahmins in India. It is essential that such a pressure is maintained, as without it, the aims and policies of the state can not have proper direction, on which depends the development and progress of the state.”

    “At the same time, it must not be forgotten that education is also important. Not only elementary education but higher education is most essential to keep ahead in competition of communities in their progress.”

    “Higher education, in my opinion, means that education, which can enable you to occupy the strategically important places in State administration. Brahmins had to face a lot of opposition and obstacles, but they are overcoming these and progressing ahead.”

    “I can not forget, rather I am sad, that many people do not realize that the Caste system is existing in India for centuries because of inequality and a wide gulf of difference in education, and they have forgotten that it is likely to continue for some centuries to come. This gulf between the education of Brahmins and non-Brahmins will not end just by primary and secondary education. The difference in status between these can only be reduced by higher education. Some non-Brahmins must get highly educated and occupy the strategically important places, which has remained the monopoly of Brahmins since long. I think this is the duty of the State. If the Govt. can not do it, institutions like “Maratha Mandir” must undertake this task.”

    “I must emphasize one point here that middle class tries to compare itself with the highly educated and well placed and well to do community, whereas lower class all over the world has same fault. The middle class is not as liberal as upper one, and has no ideology as lower one, which makes it enemy of both the classes. The middle class Marathas of Maharashtra also have this fault. They have only two ways out, either to join hands with upper classes and prevent the lower classes from progress, and the other is to join hands with lower classes and both together destroy the upper class power coming against the progress of both. There was a time, they used to be with lower classes, now they seem to be with the upper class. It is for them to decide which way to go. The future of not only Indian masses but also their own future depends upon what decision the Maratha leaders take. As a matter of fact it all should be left to the skill and wisdom of the leaders of Marathas. But there seems to be a lack of such wise leadership among the Marathas.”

    What he said about Marathas, equally applies to all OBCs, and still holds true after half a century. Dr. Ambedkar wrote much to educate the OBCs. It is only now that OBCs are awakening gradually. It must not be forgotten that the future of this country depends on them.

  8. First of again you are doing to the same mistake by saying Aryans have come from another country. It is completely thrown out by the world today (except to in India as still they want to maintain the vote bank based on this)

    During Ambedkar time it was believe that Aryans have come from Europe (but there is no evidence to it) and Ambedkar or other leaders never questioned it because it is said by British and even the great leaders thought what ever british said is right.

    So most of the theories mentioned above are evolved only based on these false thoughts so now the entire thing needs to be rethought. There is not a point in still writing based on the old obselete theories.

    Rather I encourage you to read through the recent developments on the historical facts and re-think the theory and come up with something new instead of sticking to the old obselete theory.

    Secondly you are projecting Amedkar had written the country law and he is not with any mistakes. Yes he i a great leader and good lawer but he did not give a fool proof law and every body is aware that how many loop holes are there in the IPC and Constitution. His law should have been used as a starting point of development and the laws should have been updated regularly but which is not done. But unfortunately he had been projected as ever perfect man (which is not possible for any living being including humans) and the same law is retained.

  9. Fact அவர்களே!

    ஆரியர்கள் இந்த இந்திய மன்னைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு நீங்கள் எந்த ஆதாரமும் வைக்கவில்லையே!

    நான் சொல்லட்டுமா?

    பார்பனனின் தோல், கிள்ளினால் ரத்தம் வரக்கூடிய வெண் தோல். இது குளிர் பிரதேசத்திற்கான தோல். கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட வெப்ப பகுதியில் தான் இந்தியா உள்ளது. ஆக, இந்திய நிலப்பரப்புக்கும் உங்களின் தோலின் நிறத்திற்கும் எந்த ‘சம்பந்தமும்’ இல்லை. மற்ற ஆதாரங்களும் உண்டு தான். ஆனால், அவை கூட இரண்டாம் பட்சம் தான். நீங்கள் வந்தேறிகள் தான். சந்தேகமில்லை! எண்ணிப்பாருங்கள்! கறுப்பு பார்ப்பனர்கள் கலப்பினமாகும். கறுப்பு பார்ப்பனர்களில் சிலர், தொழில் போட்டிக்காக, தங்களைத் தரம் உயர்த்திக் கொண்ட தமிழர்கள் தாம்.

    உங்களின் தோல் எப்படி? உங்களையே அடையாளம் கண்டு கொள்ளுங்கள். வெண் தோலா? அமெரிக்காவிலேயே குடியுரிமை வாங்கிக் கொள்ளுங்கள். அது தான், மொத்தமும், வந்தேறிகளின் நாடு. நீங்கள் சங்கட மில்லாமல் வாழலாம்.

    தமிழகத்தில் உள்ள கறுத்த பார்ப்பனர்கள் தங்களின் பூணூலைக் கழட்டிவிட்டு, தங்களை வேறு மேல் சாதியாக அடையாளப் படுத்திக் கொள்வது தான் சரி.

    உண்மைகளைத் தெரிந்து கொண்டு பேசவேண்டும். நீங்கள் அம்பேத்கரைப் பற்றி எழுதியதெல்லாம் கூட உங்களின் அரை வேக்காட்டுத்தனம் தான்.

  10. Ellam therindha factukku onnu theriyalai…

    even amdedkar has said that the constitution what is in place is not the one he wrote and wanted but cooked up by the so called, not to be found anywhere paapaans…and he will be the first to burn it…periyar said to ambedkar that by accepting the responsibility of framing hte constitution he will be made to prick his owns eyes with his own hands…

    Aryan invasion o migration o enna kanraviyoe…pagans aga iruntha thamizhargalai kudi azhithathu inda invasion o / migration o …edhoe onnu.

    yaen pandarangal senchuttu iruntha poojaiai niruthi,gangai le irunthu kondu varapatta thanniyal muruganai theetu kalithu , pandarangalai viratti adichaan rama pattan ?

    Aryan inda mannin maindan e vachukkuvome…appoe edhukkuyya hitler kuda thoduppu vachukiteengae?

    Loosu k**** advani edukkuyaa palestine prachanaile israel kaalai nakkanum ?

    http://safarmer.com/frontline/horseplay.pdf
    http://safarmer.com/frontline/taleoftwohorses.pdf

    if any of you happen to read the so called modern historian rajarams interview…i dont want to put it in words and spoil the decorum of this place…
    inda kanraavigalai ellam edukku pannanum ?

  11. Dr. Pandian,

    I don’t know in which subject you got your doctorate in, but I am sure it can’t be geography. Tropic of cancer cuts across India – through Gujarat, M.P. etc. What do you think? All north Indians are fair skinned? South of say, Nagpur, everybody is dark skinned?

    By the way, the Chinese aren’t “fair skinned” – their skin is kinda yellow – what do you think, they must have migrated from another planet?

    Venkat,
    What is the connection between the Indian “Aryans” and Hitler? Please enlighten us. I hope you aren’t planning to rewrite history by saying that Hitler had a connection with Indian brahmins.

  12. கிளிநொச்சி ஈழப்போரின் திருப்புமுனை என்று கூறியது சரி என்று நேற்று தான் உணர்ந்தேன்

    நேற்று நிலவரப்படி

    போராளிகள் யாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கவில்லை,

    போராளிகள் யாரும் இறந்ததாகத் தெரிவிக்கவில்லை,

    போராளிகளிடம் இருந்து ஆயதங்கள் எதுவும் கைப்பற்றப் பட்டதாகத் தெரிவிக்கவில்லை,

    போராளிகளின் முக்கிய ஆவணங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கவில்லை,

    ஒரு நகரைக் கைப்பற்றிய ராணுவத்தினர் இதுவரை போராளிகளின் ஆயுதங்களையோ, ஆவணங்களையோ, தகவல் தொடர்பு சாதனங்களையோ கைப்பற்றவில்லை என்றால் அதன் அர்த்தம் என்ன?

    புலிகள் அந்த நகரை காலி செய்து பல நாட்களாகிவிட்டது.

    கிளிநொச்சியை நான்கு புறமிருந்தும் ரானுவம் சுற்றி வளைத்த நிலையில் எப்படி காலி செய்திருக்க முடியும்

    1. மந்திரம் மூலம் கூடு விட்டு கூடு பாய்ந்திருப்பார்கள்

    2. விமானம் மூலம் சென்றிருப்பார்கள்

    3. 6 மாதங்களுக்க முன்னரே காலி (குறைந்த பட்சம் செப்டம்பர் 2008 முன்னர்) செய்திருக்கிறார்கள்

    இவ்வளவு நாட்களாக (4 மாதங்களாக ரானுவம் ஒரு பலனற்ற இடத்தை கைப்பற்ற போராடி உள்ளது.

    அதை விட சுவாரசியம்

    பூநகரியிலிருந்து புலிகள் காலி செய்தது அனைவருக்கும் தெரிந்த வண்ணம் நடந்தது.

    கிளிநொச்சியில் இருந்து காலி செய்தது பரம ரகசியமாக நடந்துள்ளதுசில வருடங்கள் கழித்து சனவரி 2, 2009 என்பது அனைத்துலகையும் புலிகள் ஏமாற்றிய தினம் என்று வரலாற்றில் எழுதப்பட்டிருக்கும்

    இந்த இடத்தை நம்மால் தக்க வைக்க முடியாது என்று 6 மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்ய கூடிய அளவு வியூகங்களுடன் புலிகள் இருக்கின்றனர் என்பதை பாவம் இப்பொழுது தான் ராஜபக்சே உணர்ந்திருப்பார்.

    வருங்காலத்தில் military manoeuvring குறித்த ஆராய்ச்சிகளில் கிளிநொச்சிக்கும் ரானுவம் புகுந்தது முக்கிய விடயமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

    6 மாதங்களாக பிரபாகரனின் இசைக்கு தாங்கள் ஆடியுள்ளோம் என்பதை அறிந்து கொண்ட ராஜபக்சே, பொன்சேகா, ராம், நாராயணன் ஆகியோர் தற்சமயம் பயங்கர கடுப்பில் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை

  13. Hello friends

    Aaseevaham releigion was followed by Tamils before Jains and Brahmins migrated to south india. These Jains & Brahmins cunningly looted our philosophy,beliefs and our methods and included their religion.

    See this below link

  14. Dear friends,
    As per Dr.ambedkar Aryans mother land is India as per their Vedas,and dravidians are from nagas,nagas are the people stock spreads all over the world at ancient times,and nagas mother land is not India,but he accepted that nagas settled in India before long ago Aryans came.so ambedkar did not hesitate to accept the truth.And about our Thiruvalluvar, he mostly accepted the dhammas of the great Buddha.In his first Adigaram,he mentioned about Eight way life,surely it shows the Eight fold paths way of life,which is the basic of Buddha teachings alone,and more over the word “Aram” is equivalent to the word ,”Dhamma” of Buddha and I can say Arathubal full version is the same as the dhamma of Buddha both are very similar in meaning,interested can read and compare them,In my view valluvar is the great follower of great Buddha.

Leave a Reply

%d bloggers like this: